Followers

Sunday, December 11, 2022

II MA 4th sem translation litt

 

 

அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),

சேலம் - 636 007.

 II எம்... தமிழ்பாடத்திட்ட விளக்கம்

எம்.. தமிழ் - (2020– 2021 கல்வியாண்டு முதல்)

முதன்மைப்பாடம் : தாள்  நான்காம் பருவம்

மொழிபெயர்ப்பு இலக்கியம்

 

பொது மேம்பாட்டு நோக்கங்கள்: கல்லூரி சூழலுக்கு மாணவர் அறிமுகப்படுத்தப்படுகிறார், (பள்ளி கற்பித்தலுக்கும் கல்லூரி விரிவுரைக்கும் இடையேயான வேறுபாடுகள் - கற்பித்தல் முறை). குறிப்புகள் எழுதுதல் மற்றும் குறிப்பு தயாரித்தல் ஆகியவற்றின் வகுப்பு அறை செயல்முறைகளுக்கு கற்பவர் அறிமுகப்படுத்தப்படுகிறார். அவர் உரை மற்றும் குறிப்பு கற்றல் கருத்துக்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார். பருவ தேர்வு முறை, மதிப்பீடு, குறித்தல் மற்றும் தர நிர்ணய முறை தொடர்ச்சியான உள் மதிப்பீட்டு முறை மற்றும் தேர்வு மதிப்பீட்டு முறை ஆகியவற்றிற்கு அவர் அறிமுகப்படுத்தப்படுகிறார். கல்லூரியில்  கிடைக்கும் மாணவர் ஆதரவு சேவைகளுக்கு (என்.எஸ்.எஸ்., என்.சி.சி,, விளையாட்டு) அவர் அறிமுகப்படுத்தப்படுகிறார்.
 
பாடநெறி தேவைகள்: கற்பவர், அவர் இரண்டாம் நிலை அளவில் கற்றுக்கொண்ட தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கணவியல் அடிப்படைக் கருத்துகளைப் பற்றிய புரிதல் வேண்டும். மாணவருக்கு இலக்கியம் அடிப்படை இலக்கணம் பற்றிய எளிய புரிதல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

பாடநெறி குறிக்கோள்கள் :   மொழிபெயர்ப்பு இல்லாவிட்டால் இன்றைய உலகமய உலகம் ஒரு கணமாவது இயங்க முடியாது என்பதும் இன்றைய அறிவியல் - தொழிலியல் - தகவல் பரவல் - ஊடகங்கள் - பாடநூல்கள் அரசியல் - கலை இலக்கியம் என எதுவுமே மொழிபெயர்ப்பு இன்றி நடைபெறாது என்பதும் நடப்புண்மை என மாணவர் கற்றுக் கொள்கிறார்.

 பாடநெறி - கற்றல் வெளிப்பாடுகள்:

பொதுவானது மொழிபெயர்ப்பால் மொழி வளர்ச்சி மேம்படும் என்பது யாராலும் மறுக்க இயலாத உண்மையாகும். மொழிபெயர்ப்பால் ஒரு மொழியில் உள்ள செய்தி உள்ளீடுகளும் கருத்தாக்கங்களும் மாற்றப்படும் மொழிக்குச் செல்லுகின்றன. அவ்வாறு செல்லுவதால் சமுதாயப் பயன்பாடும், மொழிப் பயன்பாடும் பெருகுகின்றன. இப்பெருக்கம் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் உலகுதழுவிய அறிவுப் பெருக்கத்திற்கும் வழிகோலும். இந்த மொழிபெயர்ப்பு, மொழியின் பயன்பாட்டில் ஒரு கூறாக அமைந்து அதை வளர்க்கிறது. இந்த மொழிபெயர்ப்பு வாழ்வியலில் ஏற்படுத்தி வரும் தாக்கத்தையும் கற்றுக் கொள்கிறார்.

 

தகவமைப்பு:  கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம் போன்ற இலக்கிய மொழிபெயர்ப்புகளை அறிந்து கொள்கிறான்.

பொதுத் திறன் மேம்பாடு : மொழிபெயர்ப்பு விதிகளை அறிந்து கொள்ளலாம். மொழிபெயர்ப்பின் தன்மையை மதிப்பிடலாம். பொருளும் நடையும் பற்றி அறியலாம். மேனாட்டுக் கொள்கையாளர்களின் பெயர்களை அறியலாம்.

பாடநெறி ஈடுபாட்டு முறை: வகுப்பு அறை விரிவுரைகள், கரும்பலகை பயன்பாடு மற்றும் பேச்சு, வரைபடங்கள், பல ஊடக வளங்கள், ஊடாடும் அமர்வுகள், நடைமுறை மற்றும் மாணவர் பங்களிப்பு - மாணவர் ஈடுபாட்டு அமர்வுகள்.

 

அலகு – 1 மணி /வாரம் 7

கவிதை- உமர்கய்யாம் பாடல்கள் பாரசீகக் கவிஞர்

தமிழாக்கம் த. கோவேந்தன் சகுராம் கிராபிக்ஸ், சென்னை

http://www.tamilvu.org/library/nationalized/pdf/18-koventhan.tha/omarkayamvaazhvumilakkiyamum.pdf

 

அலகு -2 மணி /வாரம் 7

சிறுகதை – மீட்சி –தெலுங்கு ஓல்கா -  தமிழில் கௌரிகிருபானந்தன்

பாரதி புத்தகாலயம்,421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை

தொலைபேசி – 044 24332424

 

அலகு -3 மணி /வாரம் 6

நாவல் `செம்மீன்– மலையாளம்  தகழி

 

அலகு -4 மணி /வாரம் 6

நாடகம்

பலிபீடம்  கன்னடம் – கிரிஷ்கர்னாட்,   தமிழில் பாவண்ணன்

நாடகம், நாடகவெளி, காவ்யா பதிப்பகம் சென்னை

 

அலகு -5 மணி /வாரம் 7

கட்டுரைகள் - உங்களால் வெல்ல முடியும் ஆங்கிலம் - ஷிவ் கெரோ

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

 

பாடநூல்கள்

1.உமர்கய்யாம் பாடல்கள்பாரசீகக் கவிஞர் தமிழாக்கம் த. கோவேந்தன்

சகுராம் கிராபிக்ஸ், சென்னை

2.மீட்சி –தெலுங்கு ஓல்கா -  தமிழில் கௌரிகிருபானந்தன்

பாரதி புத்தகாலயம்,421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை

3. `நிலம் பூத்து மலர்ந்த நாள் – மலையாளம் மனோஜ் குரூர் - தமிழில் ஜெயஸ்ரீ

வம்சி புக்ஸ், 19. டி.எம். சாரோன் , திருவண்ணாமலை -606 601.

4. பலிபீடம்  கன்னடம் – கிரிஷ்கர்னாட்,   தமிழில் பாவண்ணன்

(1992 நாடகம், நாடகவெளி, காவ்யா பதிப்பகம்) சென்னை

5.உங்களால் வெல்ல முடியும் ஆங்கிலம் - ஷிவ் கெரோ

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

 

பார்வை நூல்கள்:

1.    .பூரணச்சந்திரன்    - நவீன மொழிபெயர்ப்புக் கொள்கைகள்,அகரம் பதிப்பகம்,   தஞ்சாவூர்.

2.    பெ.செல்வக்குமார்    - மொழிபெயர்ப்பியல்,பார்க்கர் பதிப்பகம்,     இராயப்பேட்டை, சென்னை.

3.    கா.பட்டாபிராமன்        - மொழிபெயர்ப்புக்கலைகள் வசந்த செல்வி பதிப்பகம்,    தருமபுரி – 636 702

4.     ஜான் டி.மர்பி        - நீயும் ஏன் சாதிக்கக்கூடாதுநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,                 சென்னை.

5.     சேது மணியன்        - மொழிபெயர்ப்பியல் கோட்பாடுகளும் உத்திகளும்,

     பாரி நிலையம், சென்னை.

    6..    கா. பட்டாபிராமன்        - மொழிப்பயன்பாடு, பாரிநிலையம், சென்னை.

    7.     கா. பட்டாபிராமன்    - மொழிபெயர்ப்புக்கலை, பாரி நிலையம், சென்னை.

    8.     இரா.மருதநாயகம்    - மொழிபெயர்ப்பு நெறிமுறைகள்,

        அபிநயா பதிப்பகம், திருவழுந்தூர், மயிலாடுதுறை – 609 001

10.     ஸ்ரீ சந்திரன்        - ஆட்சித்தமிழும் மொழி பெயர்ப்பும்,

   பாரி நிலையம், பிராட்வே,    சென்னை – 108

11.தமிழ் மொழிபெயர்ப்பு- ரா.கிருஷ்ணய்யா

பதிப்பகம் - நியூ செஞ்சூரி புக் ஹவுஸ். 

12.ஈஸ்வரன் - மொழிபெயர்ப்பியல். பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை

13.மொழிபெயர்ப்பியல் ஆசிரியர்: சு.சண்முகவேலாயுதம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

திட்டக்கட்டுரைகள்:


1.உமர்கய்யாம் பாடல்கள்

2.மீட்சி

3.`நிலம் பூத்து மலர்ந்த நாள்

4.நாடகம் பலிபீடம்  

5. உங்களால் வெல்ல முடியும்


தனி நபர் செயல்பாடு

திராவிட மொழி பெயர்ப்பு இலக்கியங்களை மொழிவாரியாக அறிதல்.

குழுச் செயல்பாடு :

1.இந்திய மொழி பெயர்ப்பு இலக்கியங்களை மொழிவாரியாக அறிதல்.

2.தமிழ் மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட மொழிபெயர்ப்பு நூல்களையும், பிற மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியம், அறிவியல் போன்ற மொழிபெயர்ப்பு நூல்களையும் மதிப்பீடு செய்து புதிய மொழிபெயர்ப்பு நுணுக்கங்களை ஆய்தல்.

3.    மாணவர்கள் குழுவாகப்பிரிந்து பிறமொழி இலக்கியச் சிக்கல்களைப் பரிமாறிக்கொள்ளுதல் 

4. பிறமொழிப் படைப்பாளர் குறித்த செய்திகளைத் திரட்டுதல் 

 இணைய முகவரிகள்:

http://www.tamilvu.org/library/nationalized/pdf/18-koventhan.tha/omarkayamvaazhvumilakkiyamum.pdf

 

http://www.tamilvu.org/courses/degree/p201/p2011.pdf

பாடத்திட்ட செயல்பாட்டுத் திட்டம்

வாரம் -1

மாணவர்க்குக் கல்லூரிச் சூழல் அறிமுகம் -    கல்லூரி சூழலில் மாணவர்க்குக் கிடைக்கும் சலுகைகள் -  பள்ளி கறபித்தல் - கல்லூரி கற்பித்தல் வேறுபாடு -   கல்லூரி பருவத் தேர்வு முறை அறிமுகம் –பாடங்களை குறிப்பெடுத்தல்     - பார்வை நூல்களை படிக்கக் கற்றல் –சுயமாகச் சிந்தித்து எழுதப் பயிற்சி.  

வாரம் -2 மொழிபெயர்ப்புக் கோட்பாடு பற்றி கற்பித்தல் – மொழிபெயர்ப்புக் கலைக்கு நீண்ட நெடிய மரபுடைய வரலாறு உண்டு - ஒவ்வொரு துறையின் இயல்புக்கேற்பவும் மொழிபெயர்ப்புச் செய்தல் என்பது மிக மேன்மையான ஒன்றாக ஆகிவிடுகிறது என்பது பற்றி அறிதலின் அவசியம்.

வாரம் -3 தமிழில் உள்ள மொழிபெயர்ப்பு நூல்களை அறிமுகம் செய்தல் -மூலநூலின் கருத்துகளை மற்றொரு மொழிக்கு மாற்றுதல் என்ற நிலையில், மூலநூலின் கருத்துகளில் சிறிதும் மாறுபாடு ஏற்படாது இருத்தல் மிக அவசியமாகும். அவற்றுள் முரண்பாடு தோன்றின் மொழிபெயர்ப்பின் நோக்கத்தில் தடை ஏற்படும் முதலான செய்திகள் பொது  நிலையில் அறிமுகம்

வாரம் -4 கவிதை மொழிபெயர்ப்பு குறித்து- மொழி பெயர்ப்பாளர்க்கோ இருமொழிகளிலும் தேர்ந்த கல்வி அறிவு இருக்க வேண்டுவது இன்றியமையாதது. -கருத்துமுரண் தோன்றா வகையில் நூலை மொழிபெயர்ப்பதற்கென மொழிபெயர்ப்பாளருக்கு இருக்க வேண்டிய திறன் புலப்படும்.- இணைத்து விளக்குதல்.

வாரம் -5 உமர்கய்யாம் பாடல்களின் சிறப்பு – உமர்கய்யாம் பாடல்கள் குறித்தும் பாடலுடன் தமிழில் வெளிவந்துள்ள பிற மொழி கவிதை மொழிபெயர்ப்புகள் –கவிமணி உள்ளிட்டோர் பற்றி தெரிவித்தல்.

வாரம் -6 சிறுகதை – மீட்சி – கௌரிகிருபானந்தன் - ஒரு மொழிக் கருத்தினை மற்றொரு மொழியினருக்கு அறிமுகப் படுத்துதல் என்ற நிலையில் எளிமை மிகுதியாக வேண்டப்படுகிறது என்பதை இணைத்து விளக்குதல்.

வாரம் -7 பிறமொழியினரின் பெயர்ச்சொற்கள் அதாவது பாத்திரத்தின் பெயர், இடப்பெயர் போன்றனவும், நம்மிடையே இல்லாத பொருட்களின் பெயர்களும் மூலத்தில் வருமாயின் அவற்றைத் தன்வயமாக்கி ஏற்றுக் கொள்ளுதல் சிறப்புடையதாகும் என்பதை சிறுகதைகளுடன் இணைத்து விளக்குதல்.

வாரம் -8 நாவல் - `நிலம் பூத்து மலர்ந்த நாள்   ஜெயஸ்ரீ - நல்ல மொழிபெயர்ப்புகள் நம் காலத்தின் முக்கிய தேவைகளில் ஒன்றாகும் - என்ற கருத்தை இணைத்து விளக்குதல்.

வாரம் -9 மொழிபெயர்ப்பினைச் செய்யும் பொழுது அது மிகத் தெளிவாக அமைந்திருந்தால்தான் எடுத்ததன் நோக்கம் நிறைவேறும் என்ற கருத்தை நாவல் வழி இணைத்து விளக்குதல்.

வாரம் -10 நாடகம் -பலிபீடம்  கிரிஷ்கர்னாட்   தமிழில் பாவண்ணன் - மொழிபெயர்ப்பு என்பது மொழி, இலக்கியம், பண்பாடு கடந்த செயல்பாடு என்பதை இணைத்து விளக்குதல்.

வாரம் -11 மொழிபெயர்ப்பு இலக்கிய வாசிப்பு என்பது ஒரு சமூகத்தின் சிந்தனை முறையையே மாற்றியமைக்கக்கூடியது என்பதை நாடகம்  வழி இணைத்து விளக்குதல்.

வாரம் -12 உங்களால் வெல்ல முடியும் ஷிவ் கெரோ – தன்னம்பிக்கை செய்திகளை இணைத்து விளக்குதல்.

வாரம் -13 மனிதகுல மேம்பாட்டுக்காக நீங்கள் அரசியலின் உதவியையும், மதத்தின் உதவியையும், எவ்வித சித்தாந்த உதவியையும் மொழிபெயர்ப்புகளின் வழி நாடலாம் என்பதை இணைத்து விளக்குதல்.

வாரம் -14 உலக மொழிகளில் இலக்கிய மொழிபெயர்ப்பு, ஆங்கிலத்திற்கு அடுத்து தமிழில்தான் அதிகமாக நிகழ்வதாக எண்ணங்கொள்கிற அளவிற்கு தமிழ் இலக்கியச் சூழலில் மிகப் பரவலாக மொழிபெயர்ப்பு  நிகழ்கிறது என்பதை இணைத்து விளக்குதல்.

அடிப்படைச்சொற்கள்

 இலக்கிய மொழிபெயர்ப்பு கவிதை -உமர்கய்யாம் பாடல்கள்-தமிழாக்கம் த. கோவேந்தன்-சிறுகதை – மீட்சி – கௌரிகிருபானந்தன்-நாவல் `நிலம் பூத்து மலர்ந்தநாள்  – ஜெயஸ்ரீ- நாடகம் பலிபீடம்  கிரிஷ்கர்னாட்  - பாவண்ணன்-கட்டுரைகள்- உங்களால் வெல்ல முடியும் ஷிவ் கெரோ

 

தன் மதிப்பீட்டு வினாக்கள்

1.கவிதை மொழிபெயர்ப்பு குறித்து விளக்கு.

2.உமர்கய்யாம் பாடல்களின் இலக்கியச் சிறப்பு யாது?

3.நம்மிடையே இல்லாத பொருட்களின் பெயர்களும் மூலத்தில் வருமாயின் அவற்றைத் தன்வயமாக்கி ஏற்றுக் கொள்ளுதல் சிறப்புடையதாகும் என்பதை சிறுகதைகளுடன் இணைத்து ஒப்பிடு.

4.மொழிபெயர்ப்பு இலக்கிய வாசிப்பு என்பது ஒரு சமூகத்தின் சிந்தனை முறையையே மாற்றியமைக்கக்கூடியது என்பதை வரையறு.

 

Sl.No

மாணவர் பெறும் கற்றல் திறன்

அடிப்படை பொதுத்திறன்

தகவமைப்பு திறன்

செயல்திறன் மற்றும் வேலைவாய்ப்பு

1

மொழிபெயர்ப்புப்பாடத்தின் அடிப்படை புரிதல்

 

ü

ü

ü

2

மொழிபெயர்ப்பு கொள்கைகளை அறிதல் 

ü

ü

ü

3

இப்பாடத்தோடு தொடர்புடைய அடிப்படை நூல்கள் மற்றும் இலக்கிய ஆய்வுகளைப் பற்றிய அறிவு  

 

ü

ü

ü

4

Procedural knowledge for professional development/application படித்தவற்றை ஒப்பிட்டு பார்ப்பதற்கான நடைமுறை அறிவு 

ü

ü

ü

5

Skills in related field of specialization சிறப்புடைய ஒப்பீடு சார்ந்த திறன்கள்

 

ü

 

 

6

கற்றதை இலக்கியம் மற்றும் நடைமுறை சார்ந்த வாழ்வியல் சிக்கல்களில் ஒப்பிட்டுப் பயன்படுத்தக்கூடிய திறன்

 

ü

ü

ü

7

மொழிபெயர்ப்பு துறை சார்ந்த மொழிபெயர்ப்பு திறன்

 

ü

x

x

8

இலக்கிய வாழ்வியலை  தற்கால வாழ்க்கையோடு ஒப்பிட்டு பகுப்பாய்வு செய்து பெறும் திறன்கள்

ü

x

x

9

உலகநாடுகளில் வாழும் பல்வேறுதரப்பட்ட மக்களின் வாழ்வியலைப் பற்றிச் சிந்தித்தல்

 

ü

 

ü

 

ü

10

அக்கால மக்களின் சிக்கல் தீர்க்கும் திறன்களையும் இன்றைய மக்களின் சிக்கல் தீர்க்கும் திறன்களையும் ஒப்பிடுதல்
 

 

 

ü

 

ü

 

11

ஒப்பிடுதலின் மூலம் சமூக மாற்றத்தின் வளர்ச்சி நிலையறிதல் 

 

 

ü

 

 

ü

12

தமிழில் மொழிபெயர்ப்பு வளர்ச்சி

 

ü

ü

13

மொழிபெயர்ப்பும் தொடர்பான இணையவழி பதிவுகள் பற்றி அறிதல்

 

 

 

ü

ü

14

வாழ்க்கை பற்றிய ஒப்பீட்டு மதிப்பீடுகள், மனித மாண்புகள் குறிக்கோள் சுய வாசிப்பு மற்றும் போன்ற நடைமுறை அறிவு இவற்றோடு குறிப்பெடுத்தல், இணையவழி தேடல் 
 

 

 

ü

 

ü

 

ü

 

 

 

 

 

No comments:

Post a Comment

II BA 4th sem major papers

  இளங்கலை இரண்டாமாண்டு - நான்காம் பருவம்             முதன்மைப் பாடம் - தாள் ;.7 -- இலக்கணம் - 4                      தண்டியலங்காரம்...