Followers

Wednesday, July 13, 2022

II MA 4th sem - சங்க - புறம் 2020-2021 SYLL AND MATE

 


 

முதுகலை பாடத்திட்டம்  புறம்  2021 -2022

புதிய பாடத்திட்டம்

 இரண்டாம் ஆண்டு - நான்காம் பருவம் 

முதன்மைப்பாடம் - தாள் 13 - 

சங்க இலக்கியம்  -புறம்  --  21PTL13 

அலகு - 1பெண்பாற் புலவர;கள் -10 பாடல்கள்

1.தாயங்கண்ணியார;  250 (குய் குரல் மலிந்த )

2.வெண்ணிக் குயத்தியார; 66 (நளியிரு முந்நீர் களிப்பு நடை போடும் )

3.பெருங்கோழி நாயகன் மகள் நக்கண்ணையார; 83 (அடிபுனை தொடு கழல் )

4.ஔவையார;   101 (ஒரு நாள் அன்று இருநாள் அன்று )

5.பு+தப் பாண்டியன் தேவி பெருங் கோப்பெண்டு  247 (யானை தந்த முளி மர)

6.பாரி மகளிர; 112 (அற்றைத் திங்கள்)

7.நெட்டிமையார; 12 (பாணர; தாமரை மலையவும்)

8.பொன் முடியார;  299 (பருத்தி வேலிச் சீறூர;)

9. பேய் மகள் இளவெயினி;  11 (அரிமயிர;த் திரள்) 

10. மாறோக்கத்து நப்பசலையார; 37  (நஞ்சுடை வால் எயிற்று)

 

அலகு - 2 அரசப் புலவர;கள் - 10 பாடல்கள்

 புறநானூறு சேர மன்னர;கள்

1.சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ  11 (அரிமயிர;த் திரண்முன்கை)

2.சேரமான் கணைக்கால் இரும்பொறை   74 (குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்)

3.சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை 245 (யாங்குப் பெரிது ஆயினும்)

பாண்டிய  மன்னர;கள்

4.பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்  72 (நகுதக் கனரே நாடு மீக்கூறுநர;)

5.பாண்டியன் அறிவுடை நம்பி  188 (படைப்புப் பல படைத்துப் பலரொடு உண்ணும்)

6.ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் 183  (உற்றுழி உதவியும் உறு பொருள்)

சோழ  மன்னர;கள்     

7.சோழன் நலங்கிள்ளி -  73 ( மெல்ல வந்து என் நல்லடி)

8.சோழன் கோப்பெருஞ்சோழன் - 214 ( செய்குவம் கொல்லோ)

9.சோழன் நல்லுருத்திரன் -  190  (விளைபதச் சீறிடம்)

குறுநில மன்னன்

10.தொண்டைமான் இளந்திரையன் - 185 (கால்பார; கோத்து )

அலகு - 3

மக்கள் புலவர;கள் -10 பாடல்கள்

1.கபிலர; 202 (வெட்சிக் கானத்து வேட்டுவர;);

2.பரணர; 369 (இருப்பு முகம் செறித்த)

3.மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார; 329 (இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர;)

4.உறையு+; மருத்துவன் தாமோதரனார; 170 (மரை பிரித்து உண்ட நெல்லிவேலி)

5.உறையு+; இளம்பொன் வாணிகனார; 264 (பரலுடை மருங்கிற் பதுக்கை) 6.தொடித்தலை விழுத்தண்டினார; 243

(இனி நினைந்து இரக்கம் ஆகின்று)

7.மதுரைக் கணக்காயனார; 330 (வேந்துடைத் தானை)

8.மதுரைக் வாணிகன் சீத்தலைச் சாத்தனார; 59 (ஆரம் தாழ்ந்த அணி கிளர; )

9.மதுரை வேளாசான் 305 (வயலைக் கொடியின் வாடிய)

10.அடைநெடுங் கல்வியார; 283 (ஒண்செங் குரலித் தண்கயம்)

அலகு - 4 பதிற்றுப்பத்து 10 பாடல்கள்

காக்கைப் பாடினி நச்சௌ;ளையார; பாடிய ஆறாம் பத்து

அலகு -5 பெரும்பாணாற்றுப்படை முழுவதும்

பாடநூல்கள்1. கு.வெ.பாலசுப்ரமணியன,; சங்க இலக்கியம் நியு செஞ்சுரி புக் ஹவுஸ்.

 

MATERIAL முதுகலை புறம்

அலகு – 1

பெண்பாற் புலவர;கள் -10 பாடல்கள்

1.தாயங்கண்ணியார;  250 (குய் குரல் மலிந்த )

2.வெண்ணிக் குயத்தியார; 66 (நளியிரு முந்நீர் களிப்பு நடை போடும் )

3.பெருங்கோழி நாயகன் மகள் நக்கண்ணையார; 83 (அடிபுனை தொடு கழல் )

4.ஔவையார;   101 (ஒரு நாள் அன்று இருநாள் அன்று )

5.பு+தப் பாண்டியன் தேவி பெருங் கோப்பெண்டு  247 (யானை தந்த முளி மர)

6.பாரி மகளிர; 112 (அற்றைத் திங்கள்)

7.நெட்டிமையார; 12 (பாணர; தாமரை மலையவும்)

8.பொன் முடியார;  299 (பருத்தி வேலிச் சீறூர;)

9. பேய் மகள் இளவெயினி;  11 (அரிமயிர;த் திரள்) 

10. மாறோக்கத்து நப்பசலையார; 37  (நஞ்சுடை வால் எயிற்று)

பாடல் -1

புறநானூறு 250 கைம்மை

 

கைம்மை நோன்பு பற்றிக் கூறும் பாடல் இது அந்த வளங்கெழு திருநகர் அன்றுகண்ணீரோடு வந்தவர்கெல்லாம் தாளித்த துவையலோடு உணவு படைத்து அவர்களின் கண்ணீரைத் துடைத்த புரவலன் ஒருவன் இருந்துகொண்டிருந்த பந்தலைக் கொண்டிருந்தது.

அந்தப் புரவலனின் தலை, தனித்தலை, சிறப்பால் தனிமை பெற்று விளங்கிய தலை, இன்று பெருங்காடு சென்றுவிட்டது. அதனால்,அந்த வளங்கெழு திருநகர் இன்றுஅந்தப் பந்தலில்அவனது புதல்வன்முனித்தலைப் புதல்வன், (தந்தை இல்லாமையால் தந்தை வரவேண்டும் என்று) அடம் பிடிக்கும் புதல்வன், முனிவு கொண்டிருக்கும் புதல்வன்வான்சோறாகிய தண்ணீரைப் பருகிவிட்டு, தாயிடம் தீம்பால் வேண்டுமென்று அழுகிறான்.

தாயோ தன் கூந்தல் கொய்யப்பட்ட நிலையில் அல்லி இலையில் போட்டு சிறதளவு உணவை உண்டுகொண்டிருக்கிறாள்.

(அந்த முனித்தலைப் புதல்வனுக்குத் தாய்ப்பால் ஊறுமா?)

 

பாடல் (சொற்பிரிப்புப் பதிவு)

குய் குரல் மலிந்த கொழுந் துவை அடிசில்

இரவலர்த் தடுத்த வாயில்புரவலர்

கண்ணீர்த் தடுத்த தண் நறும் பந்தர்,

கூந்தல் கொய்துகுறுந் தொடி நீக்கி,

அல்லி உணவின் மனைவியொடுஇனியே      5

புல்லென்றனையால் வளம் கெழு திரு நகர்!

வான் சோறு கொண்டு தீம் பால் வேண்டும்

முனித்தலைப் புதல்வர் தந்தை

தனித் தலைப் பெருங் காடு முன்னிய பின்னே.

பாடல் -2

திணை பொதுவியல்

துறை தாபத நிலை.

...................தாயங்கண்ணியார் பாடியது.

2. 66. நின்னினும் நல்லன் அல்லனோ!

பாடியவர்வெண்ணிக் குயத்தியார்(66). வெண்ணி என்பது திருவாரூர் மாவட்டத்தில், நீடாமங்கலம் என்னும் ஊருக்கு அருகே உள்ள ஓரூர். இவ்வூர் வெண்ணில் என்று இக்காலத்தில் வழங்கப்படுகிறது. சங்க காலத்தில் மண்பாண்டங்கள் செய்தவர்கள் வேட்கோவர் என்று அழைக்கப்பட்டனர். அவர்களில் சிறந்தவர்களுக்குகுயம்என்ற பட்டம் அரசர்களால் வழங்கப்பட்டது என்றும் இப்பழக்கம் பத்தாம் நூற்றண்டு வரை இருந்ததாகவும் அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை  அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார். ஆகவே, இப்புலவர் குயக்குலத்தைச் சார்ந்த பெண் என்பது இவருடைய பெயரிலிருந்து தெரியவருகிறது.
பாடப்பட்டோன்சோழன் கரிகாற் பெருவளத்தான். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 7- இல் காண்க.
பாடலின் பின்னணிகரிகால் வளவன், வெண்ணி என்ற ஊரில் நடைபெற்ற போரில் சேரமான் பெருஞ்சேரலாதனையும், பாண்டிய மன்னன் ஒருவனையும், வேளிர்குலத்தைச் சார்ந்த பதினொரு சிற்றரசர்களையும் வென்றான். அப்போரில் சேரமான் பெருஞ்சேரலாதனின் மார்பில் பாய்ந்த வேல் அவன் மார்பைத் துளைத்து முதுகையும் புண்ணாக்கியது. தன் முதுகில் புண்பட்டதால் அவன் நாணமுற்று வடக்கிருந்து உயிர் துறந்தான். அதைக் கேள்வியுற்ற வெண்ணிக் குயத்தியார், இப்பாடலில், சேரமான் பெருஞ்சேரலாதனின் செயலை வியந்து, கரிகாலனை நோக்கி, “வேந்தே, போரில் வெற்றி பெற்றதால் நீ வெற்றிக்குரிய புகழ் மட்டுமே அடைந்தாய். ஆனால், சேரமான் பெருஞ்சேரலாதன் உனக்கு வெற்றியை அளித்தது மட்டுமல்லாமல், உன்னால் உண்டாகிய புண்ணுக்கு நாணி, அவன் வடக்கிருந்து பெரும்புகழ் பெற்றான். ஆகவே, அவன் உன்னைவிட நல்லவன் அல்லனா?” என்று கேட்கிறார்.


திணைவாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறைஅரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!
சென்றுஅமர்க் கடந்தநின் ஆற்றல் தோன்ற
5 வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப் புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே.

அருஞ்சொற்பொருள்:
1. நளி = செறிதல், குளிர்ச்சி; இரு = பெரிய; முந்நீர் = கடல்; நாவாய் = கப்பல். 2. வளி = காற்று; உரவோன் = வலியவன்; மருகன் = வழித்தோன்றல். 3. களி = செருக்குறுதல். 4. அமர் = போர்; கடந்த = அழித்த. 5. அன்றே = அல்லவா; 6. கலி = தழைத்தல்; பறந்தலை = போர்க்களம்.

கொண்டு கூட்டுஉரவோன் மருக, கரிகால் வளவ,வென்றோய்,வெண்ணிப் பறந்தலைப்பட்ட புறப்புண் நாணி, உலகத்துப் புகழ் மிக எய்தி வடக் கிருந்தோன், நின்னினும் நல்லன் அன்றே எனக் கூட்டுக.

உரைகாற்றின் இயல்பை அறிந்து, நீர் நிறைந்த பெரிய கடலில் மரக்கலத்தை ஓட்டிய வலியவர்களின் வழித்தோன்றலே! செருக்குடைய யானைகளையுடைய கரிகால் வளவனே! போருக்குச் சென்று உனது வலிமை தோன்றுமாறு வெற்றி கொண்டவனே! மிகுந்த அளவில் புதிய வருவாய் உள்ள வெண்ணி என்னும் ஊரில் நடைபெற்ற போரில், முதுகில் புண்பட்டதற்கு நாணி, வடக்கிருந்து மிக்க புகழுடன் விண்ணுலகம் எய்திய சேரமான் பெருஞ்சேரலாதன் உன்னைவிட நல்லவன் அல்லனோ?

சிறப்புக் குறிப்புகாற்றைப் பயன்படுத்திக் கப்பலைச் செலுத்தும் முறையைச் சங்க காலத்திலேயே தமிழர்கள் அறிந்திருந்தார்கள் என்பது இப்பாடலிலிருந்து தெரிய வருகிறது.

பாடல் -3

83. இருபாற்பட்ட ஊர்!

பாடியவர்பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார். நக்கண்ணன் என்னும் ஆண்பாற் பெயரைப் போல் நக்கண்ணை என்பது பெண்பாற் பெயராகும். கோழி என்பது உறையூருக்கு மற்றொரு பெயர். நாய்கன் என்ற சொல்லுக்கு வணிகன் என்று பொருள். ஆகவே, இப்பாடலை இயற்றிய நக்கண்ணையார் என்பவர் உறையூரைச் சார்ந்த வணிக குலத்தில் இருந்த ஒருவரின் மகள். இவர் புறநானூற்றில் மூன்று பாடல்களையும் (பாடல்கள் 83, 84 மற்றும் 85), அகநானூற்றில் 252-ஆம் பாடலையும் நற்றிணையில் 19, 87 ஆம் பாடல்களையும் இயற்றியவர்.


பாடப்பட்டோன்சோழன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளி. இவனைப்பற்றிய செய்திகளை 80 ஆம் பாடலில் காணவும்.


பாடலின் பின்னணிஇப்பாடலின் பின்னனியைப் புரிந்து கொள்வதற்கு, இப்பாடலோடு அடுத்து வரும் இரண்டு பாடல்களையும் (பாடல்கள் 84, 85) ஒருங்கிணைத்துப் பார்க்க வேண்டும். சோழன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளிக்கும் ஓரு மல்லனுக்கும் இடையே ஆமூர் என்னும் ஊரில் மற்போர் நடைபெற்றது. நற்கிள்ளி ஆமூரைச் சார்ந்தவன் அல்லன். ஆனால் மல்லனோ ஆமூரைச் சார்ந்தவன். இருவருக்கும் இடையே நிகழ்ந்த மற்போரைப் பார்த்த மக்களில் ஒரு சாரார் நற்கிள்ளிக்கும் மற்றொரு சாரார் மல்லனுக்கும் ஆதரவு அளித்தனர். நற்கிள்ளி மல்லனை எதிர்த்து மற்போர் புரிந்த ஆற்றலையும், அவன் வலிமையும், அழகையும் கண்டு அவன் மீது நக்கண்ணையார் காதல் கொண்டார். இப்பாடலில், அவர் தன் காதலை மறைக்கவும் முடியாமல் வெளியில் காட்டிக்கொள்ளவும் முடியாமல் கலக்கமுற்று இருக்கும் நிலையைக் குறிப்பிடுகிறார். தான் என்ன செய்வது என்று தெரியாமல் இருவகையான எண்ணங்களோடு போராடுவதைப் போலவே ஆமுர் மக்களும் யாரை ஆதரிப்பது என்று முடிவு செய்ய முடியாமல் கலங்கட்டும் என்ற கருத்தை இப்பாடலில் நக்கண்ணையார் கூறுகிறார்.

திணைகைக்கிளை. ஒருதலைக் காதலைப்பற்றிய பாடல்கள் கைக்கிளை என்ற திணையில் அடங்கும்.துறைபழிச்சுதல். தலைவனைப் போற்றும் பாடல்கள் பழிச்சுதல் என்னும் துறையைச் சாரும்.

அடிபுனை தொடுகழல், மையணல் காளைக்குஎன்
தொடிகழித் திடுதல்யான் யாய்அஞ் சுவலே;
அடுதோள் முயங்கல் அவைநா ணுவலே;
என்போற் பெருவிதுப் புறுக; என்றும்
5 ஒருபால் படாஅது ஆகி
இருபாற் பட்ட இம் மையல் ஊரே!

அருஞ்சொற்பொருள்:


1. புனைதல் = அணிதல்; தொடுதல் = அணிதல்; மை = கருநிறம்; அணல் = தாடி. 2. தொடி = கைவளை; கழித்தல் = விலக்கல், நேக்கல்; யாய் = தாய். 3. அடுதல் = வெல்லுதல், வருத்துதல், போரிடுதல்; முயங்கல் = தழுவல். 4. விதுப்பு = நடுக்கம். 6. மையல் = மயக்கம்

கொண்டு கூட்டுயான் யாய் அஞ்சுவல்; அவை நாணுவல்; இம்மயையலூர் என்போல் பெருவிதுப் புறுக எனக் கூட்டுக.

உரைகழல் அணிந்த கால்களையும் கருநிறத் தாடியையும் உடைய காளைபோன்ற நற்கிள்ளிமேல் நான் கொண்ட காதலால் என் கைவளைகள் கழல்கின்றன. ஆகவே, நான் காதல்கொண்ட செய்தி என் தாய்க்குத் தெரிந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். அவன் வலிய தோள்களைத் தழுவவேண்டுமென்று என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆனால், அவையில் பலரும் இருப்பதால் அவனைத் தழுவுவதற்கு நாணுகிறேன். நான் என் காதலை வெளிப்படுத்தாமலேயே என் தாய்க்கு என் காதல் தெரிந்துவிடுமோ என்ற அச்சம் ஒரு பக்கம்; மற்றொரு பக்கம், நான் காதலை வெளிப்படுத்தினால் ஊர் மக்களுக்குத் தெரிந்துவிடுமோ என்ற நாணம். அச்சத்திற்கும் நாணத்திற்குமிடையே சிக்கிக்கொண்டு நான் நடுக்கமடைவதுபோல், நற்கிள்ளியை ஆதரிப்பதா அல்லது மல்லனை ஆதரிப்பதா என்று புரியாமல் மயங்கும் இவ்வூர் ஒரு கட்சியாக இல்லாமல் இரு கட்சியாய் இருந்து என்றும் என்போல் பெரிய நடுக்கம் உறுக.

 

பாடல் -4 ஔவையார;   101 (ஒரு நாள் அன்று இருநாள் அன்று )

 

101. பலநாளும் தலைநாளும்!

பாடியவர்அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமானைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காணலாம்.

பாடலின் பின்னணிஒரு சமயம், அவ்வையார் அதியமானிடம் பரிசு பெற விரும்பிச் சென்றார். அதியமான் அவ்வையார்க்குப் பரிசளிப்பதற்குச் சிறிது காலம் தாழ்த்தினான். அது கண்ட அவ்வையார் வருத்தப்பட்டார். ஆயினும், அவர் அதியமானின் கொடைத் தன்மையை நன்கு அறிந்திருந்ததால், பரிசு பெறுவதற்குச் சற்று கால தாமதமாயினும், யானை தன் கொம்புகளிடையே வைத்திருக்கும் உணவுக் கவளத்தை உண்ணத் தவறாதது போல், அதியமான் கால தாமதமயினும் நிச்சயம் பரிசளிப்பான் என்று தனக்குத் தானே கூறிக்கொள்வது போல் இப்பாடல் அமைந்துள்ளது.

திணைபாடாண். ஓருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகியவற்றைச் சிறப்பித்துக் கூறுவது.
துறைபரிசில் கடா நிலை. “உன்னைப் பாடிய யாவரும் பரிசில் பெற்றனர்என்று கூறித் தனக்கும் பரிசில் வேண்டும் என்று புரவலரிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்துவது.


ஒருநாள் செல்லலம்; இருநாட் செல்லலம்;
பன்னாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ.
அணிபூண் அணிந்த யானை இயல்தேர்
5 அதியமான் பரிசில் பெறூஉங் காலம்
நீட்டினும் நீட்டா தாயினும் யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் ததுஅது பொய்ஆ காதே;
அருந்தஏ மாந்த நெஞ்சம்!
10 வருந்த வேண்டா வாழ்கவன் தாளே!

அருஞ்சொற்பொருள்:
1.செல்லலம் = செல்லேம் (செல்லவில்லை). 2. பயின்று = தொடர்ந்து. 3. தலைநாள் = முதல் நாள். 7, கோடு = கொம்பு. 9. ஏமாத்தல் = அவாவுதல் (ஆசைப் படுதல்). 10. தாள் = கால்.
உரைநாம் ஒரு நாள் அல்லது இருநாட்கள் செல்லவில்லை; பல நாட்கள் தொடர்ந்து பலரோடு நாம் (அதியமானிடம் பரிசில் பெறுவதற்குச்) சென்றாலும், அதியமான் முதல் நாள் போலவே நம்மிடம் விருப்பமுடையவனாக இருக்கிறான். அழகிய அணிகலன்கள் அணிந்த யானைகளையும் நன்கு செய்யப்பட்ட தேர்களையும் உடைய அதியமான் பரிசளிப்பதற்குக் காலம் தாழ்த்தினாலும் தாழ்த்தாவிட்டாலும், யானை தன் கொம்புகளிடையே கொண்ட உணவுக் கவளத்தை உண்ணத் தவறாதது போல், அதியமானிடமிருந்து நாம் பெறப்போகும் பரிசில் நம் கையில் இருப்பதாகவே நாம் நம்பலாம். பரிசு பெறுவதற்கு ஆசைப்பட்ட நெஞ்சே! வருந்த வேண்டாம்! வாழ்க அவன் திருவடிகள்!

 

பாடல் -5.பு+தப் பாண்டியன் தேவி பெருங் கோப்பெண்டு  247 (யானை தந்த முளி மர)

247. பேரஞர்க் கண்ணள்!

பாடியவர்மதுரைப் பேராலவாயர் (247, 262). ஆலம் என்ற சொல்லுக்கு நஞ்சு என்று பொருள். ஆலவாய் என்பது சிவனுடைய வாயைக்குறிக்கும். மற்றும், மதுரையில் உள்ள சொக்கநாதப் பெருமானின் கோயிலுக்கும் பெயர் ஆலவாய். மதுரையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்கு ஆலவாயர் என்று பெயர். இப்புலவர், மதுரையைச் சார்ந்தவராகையால், இவர் பெற்றோர் இவருக்கு ஆலவாயர் என்று பெயரிட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. இவர் புறநானூற்றில் இயற்றியுள்ள இரண்டு பாடல்கள் மட்டுமல்லாமல், அகநானூற்றில் இரண்டு செய்யுட்களும் (87, 296), நற்றிணையில் இரண்டு செய்யுட்களும் (51, 361) இயற்றியுள்ளார்.
பாடலின் பின்னணிபெருங்கோப்பெண்டு தன் கணவனுடைய ஈமத்தீயில் வீழ்ந்து உயிர் துறந்ததைக் கண்ட பேராலவாயர், தம் வருத்தத்தை இப்பாடலில் தெரிவிக்கிறார்.

திணைபொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறைஆனந்தப்பையுள். கணவன் இறந்த போது மனைவி துன்புறுதலைக் கூறுதல்.

யானை தந்த முளிமர விறகின்
கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து
மடமான் பெருநிரை வைகுதுயில் எடுப்பி
மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில்
5 நீர்வார் கூந்தல் இரும்புறம் தாழப்
பேரஞர்க் கண்ணள் பெருங்காடு நோக்கித்
தெருமரும் அம்ம தானேதன் கொழுநன்
முழவுகண் துயிலாக் கடியுடை வியனகர்ச்
சிறுநனி தமியள் ஆயினும்
10 இன்னுயிர் நடுங்குந்தன் இளமைபுறங் கொடுத்தே.

அருஞ்சொற்பொருள்:
1. முளித்தல் = காய்தல்; முளிமரம் = காய்ந்த மரம். 2. கானவர் = வேடர்; பொத்துதல் = தீ மூட்டுதல்; ஞெலிதல் = கடைதல்; ஞெலி தீ = கடைந்த தீ; விளக்கம் = ஒளி. 3. வைகல் = தங்கல்; எடுப்பி = எழுப்பி. 4. முன்றில் = முற்றம்; சீக்கல் = கீறிக் கிளறுதல். 6. அஞர் = வருத்தம்; பேரஞர் = பெரும் வருத்தம். 7. தெருமரல் = மனச் சுழற்சி; அம்மஅசைச் சொல். 8. கடி = காவல்; வியன் = அகலம். 9. சிறுநனி = சிறிது நேரம்; தமியள் = தனித்திருப்பவள்; 10. புறங்கொடுத்தல் = போகவிடுதல்.

கொண்டு கூட்டுஅணங்குடை முன்றிலின் இளமை புறங் கொடுத்துப் பெருங்காடு நொக்கித் தான் தெருமரும் எனக் கூட்டுக.

உரைபெண் தெய்வத்தின் கோயில் முற்றத்தில், யானைகொண்டுவந்து தந்த, காய்ந்த விறகால் வேடர்கள் மூட்டிய தீயின் ஒளியில் மடப்பம் பொருந்திய மான்களின் கூட்டம் தங்கி உறங்கிக்கொண்டிருந்தது. அங்கு குரங்குகள் தீயைக் கிளறி ஆர்ப்பரித்து அந்த மான்களை உறக்கத்திலிருந்து எழுப்பின. ஓயாது முரசு ஒலிக்கும், காவலுடைய பெரிய அரண்மனையிலிருந்து சிறுபொழுது தன் கணவனைவிட்டுப் பிரிந்து தனித்திருந்தாலும் உயிர் நடுங்கும் பெருங்கோப்பெண்டு, இப்பொழுது நீர் வடியும் தழைத்த கூந்தல் முதுகில் தாழ, தனியளாக, துயரம் மிகுந்த கண்களோடு, பெண் தெய்வத்தின் கோயிலின் முற்றத்திலிருந்து, சுடுகாட்டில் மூட்டப்பட்ட தீயை நோக்கி மனத் துயரத்தோடு, தன் இளமையைத் துறந்து பெருங்கோப்பெண்டு சென்றாள்.

சிறப்புக் குறிப்பு: “முழவுகண் துயிலாஎன்பதுஓயாது ஒலிக்கும் முரசுஎன்ற பொருளில் கூறப்பட்டுள்ளது.

பாடல் -6

112. உடையேம் இலமே!

பாடியவர்பாரி மகளிர். இப்பாடலை இயற்றியவர் வேள் பாரியின் மகளிர் இருவர். சங்க இலக்கியத்தில் அவர்கள் இயற்றிய பாடல் இது ஒன்றே.

பாடலின் பின்னணிபாரி இறந்த பின்னர், பாரியின் மகளிரைக் கபிலர் பாதுகாவலான இடத்தில் சேர்த்து அவர்களைக் காப்பாற்றி வந்தார். பாரி இறந்து ஒரு மாதம் ஆகிய பிறகு, ஒரு நாள் முழு நிலவில் அவர்களுக்குத் தங்கள் தந்தையின் நினைவும் நாட்டின் நினைவும் வந்து அவர்களை வாட்டியது. அவர்களின் மனவருத்தத்தை இப்பாடலில் வெளிப்படுத்துகிறார்கள்.திணைபொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான கருத்துகளைத் தொகுத்துக் கூறுவது.
துறைகையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல். கழிந்து போன பொருளைக் குறித்து வருந்துதல்.

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்
எந்தையும் உடையேம்எம் குன்றும் பிறர்கொளார்;
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்
வென்றுஎறி முரசின் வேந்தர்எம்
5 குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே!

அருஞ்சொற்பொருள்:
1.அற்றை = அன்று; திங்கள் = மாதம். 4. எறிதல் = அடித்தல். 5. இலம் = இல்லாதவர்கள் ஆனோம்.உரைஒரு மாதத்திற்கு முன் வெண்நிலவு ஓளிவீசிக் கொண்டிருந்த பொழுது நாங்கள் எங்கள் தந்தையை உடையவர்களாக இருந்தோம்; எங்கள் (பறம்பு) மலையையும் பிறர் கொள்ளவில்லை. அதேபோல், இன்று வெண்நிலவு வீசுகிறது. ஆனால், வெற்றி முரசு கொட்டும் வேந்தர்கள் எங்கள் மலையைக் கொண்டனர்; நாங்கள் எங்கள் தந்தையை இழந்தோம்.சிறப்புக் குறிப்புமூவேந்தர்களும் பாரியைப் போரில் வெல்ல முடியவில்லை. ஆனால், அவர்கள் அவனை சூழ்ச்சியால் வென்றனர். “வென்றெறி முரசின் வேந்தர்என்பது மூவேந்தர்களும் தங்கள் வீரத்தால் பாரியை வெல்லவில்லை என்பதைச் சுட்டிக் காட்டும் இகழ்ச்சிக் குறிப்பு.

பாடல் -7.நெட்டிமையார; 12 (பாணர; தாமரை மலையவும்)

12. அறம் இதுதானோ?

பாடியவர்நெட்டிமையார். இவரைப் பற்றிய குறிப்புகளை பாடல் 9-இல் காண்க.
பாடப்பட்டோன்பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி. இவனைப் பற்றிய குறிப்புகளை பாடல் 6-இல் காண்க.
பாடலின் பின்னணி: இப்பாடலில், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி தன் பகைவர்க்குக் கொடியவனாக இருந்து, அவர்களின் நாட்டை வென்று, அவர்களின் பொருள்களைக் கொண்டுவந்து தன்னிடம் அன்போடு இரக்கும் இரவலர்க்கு யானையும் தேரும் அளிக்கும் இனியவனாக இருக்கிறான் என்று கூறி, அவனுடைய இச்செயல் எவ்வாறு அறமாகும் என்ற ஒருவினாவையும் நெட்டிமையார் முன்வைக்கிறார்.

திணைபாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறைஇயன்மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

பாணர் தாமரை மலையவும், புலவர்
பூநுதல் யானையோடு புனைதேர் பண்ணவும்
அறனோ மற்றிது விறல்மாண் குடுமி?
இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு
5 இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே.

அருஞ்சொற்பொருள்:
1. மலைதல் = அணிதல். 2. பூ = பட்டம். புனை = அலங்காரம்; பண்ணல் = செய்தல், அலங்கரித்தல். 3. விறல் = வெற்றி; மாண் = மாட்சி. 4. இன்னா = துயருண்டாகுமாறு. 5. ஆர்வலர் = பரிசிலர்; முகம் = இடம்.

கொண்டு கூட்டுகுடுமி! பிறர் மண் கொண்டு, மலையவும் பண்ணவும், நின் ஆர்வலர் முகத்து இனிய செய்வை; இது நினக்கு அறமோ எனக் கூட்டுக.
உரைவெற்றியில் சிறந்த குடுமி! பகைவர்களுக்குக் கொடியவனாக இருந்து, அவர் நாட்டை வென்று, உன்னை விரும்புபர்களுக்கு இன்முகத்தோடு இனியன செய்கிறாயே! பாணர்களுக்குப் பொன்னாலான தாமரை மலர்களையும் புலவர்களுக்குப் பட்டம் சூட்டிய யானைகளையும் அலங்கரிக்கப்பட்ட தேர்களையும் வழங்குகிறாயே! இது அறமாகுமோ?
சிறப்புக் குறிப்புஇப்பாடலில், நெட்டிமையார் பாண்டியனைப் பழிப்பதுபோல் புகழ்கிறார்.

பாடல் -8புறநானூறு 299

குதிரை மறம் பொன்முடியார் பாடியது.

இரண்டு சிற்றூர் மன்னர்களுக்கு இடையே போர்

இருவரும் குதிரைமீது வந்து போரிட்டனர்

 

ஒருவன் பருத்திச்செடி வேலியாக விளங்கும் சீறூர் மன்னன்

அவன் குதிரை உழுந்துச் சக்கையை உண்டு வளர்ந்தது.

 

மற்றொருவன் தண்ணடை (நன்செய்நிலம்) அரசன்

இவன் குதிரை நெய் ஊற்றி மிதித்த சோற்றினைத் தின்று வளர்ந்தது

இது பிடரி மயிர் கத்திரிக்கப்பட்டு அழகிய தோற்றம் கொண்டது. மாலையிட்டு அழகு செய்யப்பட்டது. உழுந்து-அதர் தின்ற குதிரை போரிடுவோரை விலக்கிக்கொண்டு பாய்ந்ததுநெய்ச்சோறு தின்ற குதிரை அந்தக் குதிரைப் பக்கம் செல்லாமல் ஒதுங்கி நின்றதுகுதிரைமீது வந்த மன்னர்கள் இவ்வாறு போரிட்டனர்.

குதிரை எப்படி ஒதுங்கி நின்றது?மாதவிடாய்க் காலத்தில் சமையல் செய்யாமல் ஓய்ந்திருக்கும் மகளிர் முருகன் கோயிலுக்குள் நுழையாமல் அதன் வெளிப்புறம் நின்று வழிபடுவது போல நெய்ச்சோறு தின்ற குதிரை ஒதுங்கி நின்றது.

 

பாடல் (சொற்பிரிப்புப் பதிவு)

 

பருத்தி வேலிச் சீறூர் மன்னன்

உழுத்து அதர் உண்ட ஓய் நடைப் புரவி,

கடல் மண்டு தோணியின்படை முகம் போழ

நெய்மிதி அருந்தியகொய் சுவல் எருத்தின்,

தண்ணடை மன்னர்தாருடைப் புரவி,               5

அணங்குடை முருகன் கோட்டத்துக்

கலம் தொடா மகளிரின்இகந்து நின்றவ்வே.

 

திணை நொச்சிதுறை குதிரை மறம். காலம் : கி.மு. இரண்டாம் நூற்றாண்டு

 பாடல் 9

புறம் 11. பெற்றனர்! பெற்றிலேன்!

பாடியவர்பேய்மகள் இளவெயினியார் (11). இவர் பேயுருவத்தோடு நின்று பாலை பாடிய சேரமான் பெருங்கடுங்கோவைப் பாடினார் என்றும், இளமையிலே இறந்து பின்னர் பேய் உருவம் பெற்றார் என்றும், போர்க்களத்துப் பிணந்தின்னும் பேய்மகளிரை வியந்து பாடியதால் பேய்மகள் என்ற பெயர் பெற்றார் என்றும் பலரும் பலவாறாகக் கூறுவர். இவர் இயர்பெயர் இளவெயினி. குறமகள் இளவெயினி என்று ஒருபுலவர் இருந்ததால், அவரிடமிருந்து இவரை வேறுபடுத்துவதற்காக பேய்மகள் இளவெயினி என்று அழைக்கப்பட்டார் என்றும் கூறுவர். புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றுதான்.
பாடப்பட்டோன்சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ (11). இவன் முடிசூடிய மூவேந்தருள் ஒருவனாக சிறந்து விளங்கியது மட்டுமல்லாமல், சிறந்த தமிழ்ப் புலமை உடையவனாகவும் விளங்கினான். இவன் புறநானூற்றில் 282 - ஆம் பாடலையும், அகநானூற்றில் 11 செய்யுட்களையும் (5, 99, 111, 155, 185, 223, 261, 267, 291, 313, 379), குறுந்தொகையில் 10 பாடல்களையும் (16, 37, 124, 135, 137, 209, 231, 263, 283, 398), நற்றிணையில் 10 செய்யுட்களையும் (9, 48, 118, 202, 224, 256, 318, 337, 384, 391), கலித்தொகையில் பாலைக்கலி முழுவதையும் (1-35) இயற்றிய பெரும் புலவன். இவன் பாலைத் திணைப் பாடல்களை இயற்றுவதில் மிகுந்த புலமையுடையவனாக இருந்தான். இவன் பாடல்கள் அனைத்தும் இலக்கிய நயமும், கருத்துச் செறிவும் உடையவை.
பாடலின் பின்னணிசேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோவைப் புகழ்ந்து பாடிய பாடினியும் பாணனும் பரிசு பெற்றதை இப்பாடலில் பேய்மகள் இளவெயினி புகழ்ந்து பாடுகிறார்.

திணைபாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறைபரிசில் கடாநிலை. பரிசில் விரும்பிப் புரவலரிடம் சென்று தன் விருப்பத்தைக் கூறுதல்.

அரிமயிர்த் திரள்முன்கை
வால்இழை மடமங்கையர்
வரிமணற் புனைபாவைக்குக்
குலவுச்சினைப் பூக்கொய்து
5 தண்பொருநைப் புனல்பாயும்
விண்பொருபுகழ் விறல்வஞ்சிப்
பாடல்சான்ற விறல்வேந்தனும்மே
வெப்புடைய அரண்கடந்து
துப்புறுவர் புறம்பெற்றிசினே;
10 புறம்பெற்ற வயவேந்தன்
மறம்பாடிய பாடினியும்மே
ஏருஉடைய விழுக்கழஞ்சின்
சீருடைய இழைபெற்றிசினே;
இழைபெற்ற பாடினிக்குக்
15 குரல்புணர்சீர்க் கொளைவல் பாண்மகனும்மே
எனவாங்கு
ஒள்அழல் புரிந்த தாமரை
வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே.


அருஞ்சொற்பொருள்:
1.அரி = மென்மை; திரள் = திரண்ட. 2. வால் = தூய; இழை = அணிகலன்கள். 3. புனை = அலங்காரம். 4. குலவு = வளைவு; சினை = மரக்கிளை. 6. பொருதல் = முட்டுதல்; விறல் = வெற்றி; வஞ்சி = கரூர், சேர நாடு. 7. சான்ற = அமைந்த; விறல் = வெற்றி. 8. வெப்பு = வெம்மை; கடந்து = அழித்து. 9. துப்பு = பகை, உறுதல் = பொருந்துதல். 10. வயம் = வலிமை. 12. ஏர் = தோற்றப் பொலிவு; விழு = சிறந்த; கழஞ்சு = பன்னிரண்டு பணவெடை அளவு. 13. சீர் = அழகு; இழை = அணிகலன்கள். 15. குரல் = ஒலி, முதல் இடம்; சீர் = ஓழுங்கு; கொளை = இசை, தாளம் போடுதல்; வல் = திறமை. 17. ஒள் = ஒளி; அழல் = நெருப்பு, வெப்பம்.

உரைமென்மையான மயிர்களுடைய திரண்ட முன்கையையும் தூய அணிகலன்களையும் உடைய இளம்பெண்கள் ஆற்றங்கரையில் இருந்த மணலால் செய்த பாவைக்கு வளைந்த கிளைகளிலிருந்து கொய்த மலர்களைச் சூடுகிறார்கள். குளிர்ந்த ஆன் பொருநை ஆற்றில் பாய்ந்து விளையாடுகிறார்கள். அத்தகைய, வானளாவிய புகழும் வெற்றியும் பொருந்திய வஞ்சி நகரத்தில், புலவர்களால் புகழ்ந்து பாடும், வெற்றியுடைய வேந்தன் சேரமான் பெருங்கடுங்கோ. அவன், பகைவர்களின் வலிய அரண்களை அழித்து அவர்களைப் புறங்காட்டி ஒடவைத்த வலிமை பொருந்திய வேந்தன். அவன் வீரத்தைப் புகழ்ந்து பாடிய பெண், தோற்றப் பொலிவமைந்த சிறந்த பொன் அணிகலன்களைப் பரிசாகப் பெற்றாள். அவ்வணிகலன்களைப் பெற்ற பெண்ணின் பாடலுக்கு ஏற்ப இசையோடும் தாளத்தோடும் இணைந்து பாடிய பாணன் வெள்ளி நாரால் தொடுத்த ஒளி மிகுந்த பொன்னாலான தாமரை மலர்களைப் பரிசாகப் பெற்றான்.

சிறப்புக் குறிப்புபாடினியும் பாணனும் பரிசு பெற்றார்கள்; ஆனால் தனக்குப் பரிசுகள் ஏதும் கிடைக்கவில்லையே என்று இளவெயினியார் கூறாமல் கூறுவதுபோல் இப்பாடல் அமைந்துள்ளது.

பாடல் -10
37. புறவும் போரும்!

பாடல் ஆசிரியர்மாறோக்கத்து நப்பசலையார் (37, 39, 126, 174, 226, 280, 383). இவர் ஒருபெண்பாற் புலவர். இவர் பாண்டிய நாட்டைச் சார்ந்த கொற்கையின் அருகாமையில் உள்ள மாறோக்கம் என்ற ஊரைச் சார்ந்தவர். பெண்கள் அடையும் பசலை நோயைப்பற்றி நயமுறப் பாடியதால் இவர் நப்பசலையார் என்று அழைக்கப்பட்டார் என்று கருதப்படுகிறது. நப்பசலையார் என்பது இவர் இயற்பெயர் என்றும் சிலர் கூறுவர்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 34-இல் காண்க.
பாட்டின் காரணம்இப்பாடலில், சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவன், நல்ல அரண்களுள்ள ஊரில் பகைமன்னன் இருப்பதை அறிந்தும் அந்நகரை அஞ்சாது அழிக்கும் ஆற்றல் உடையவன் என்று அவனுடைய வலிமையையும், வீரத்தையும் மாறோக்கத்து நப்பசலையார் பாராட்டுகிறார்.

திணைவாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறைஅரச வாகை; முதல் வஞ்சியும் ஆகும்.
அரச வாகைஅரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.
முதல் வஞ்சிபழம்புகழ் வாய்ந்த முன்னோர் சிறப்புக் கூறுதல்.

நஞ்சுடை வால்எயிற்று ஐந்தலை சுமந்த
வேக வெந்திறல் நாகம் புக்கென
விசும்புதீப் பிறப்பத் திருகிப் பசுங்கொடிப்
பெருமலை விடரகத்து உரும்எறிந் தாங்குப்
5 புள்ளுறு புன்கண் தீர்த்த வெள்வேல்
சினங்கெழு தானைச் செம்பியன் மருக!
கராஅம் கலித்த குண்டுகண் அகழி
இடம்கருங் குட்டத்து உடந்தொக்கு ஓடி
யாமம் கொள்பவர் சுடர்நிழல் கதூஉம்
10 கடுமுரண் முதலைய நெடுநீர் இலஞ்சிச்
செம்புஉறழ் புரிசைச் செம்மல் மூதூர்
வம்புஅணி யானை வேந்துஅகத் துண்மையின்
நல்ல என்னாது சிதைத்தல்
வல்லையால் நெடுந்தகை! செருவத் தானே!

அருஞ்சொற்பொருள்:


1. வால் = வெண்மை; எயிறு = பல்; = அழகு. 2. வெம்பல் = சினத்தல்; திறல் = வெற்றி, வலி; புக்கல் = புகுதல்; என = என்று. 3. விசும்பு = ஆகாயம்; திருகி = முறுகி; முறுகல் = வேகங் கொள்ளுதல். 4. விடர் = மலைப்பிளப்பு, குகை; உரும் = இடி. 5.புள் = பறவை; புன்கண் = துன்பம். 6. செம்பியன் = சோழன்; மருகன் = வழித்தோன்றல். 7. கராம் = ஆண் முதலை, முதலையுள் ஒரு வகை; கலித்த = தழைத்த (நிறைந்த); குண்டு = ஆழம். 8. குட்டம் = ஆழம், மடு. 9. யாமம் = நள்ளிரவு; கதூஉம் = கவ்வும், பற்றும். 10. கடு = விரைவு; முரண் = வலிமை; நெடு = மிகுதி; இலஞ்சி = நீர்நிலை, மடு. 11. உறழ்வு = செறிவு; புரிசை = மதில்; செம்மல் = தலைமை; மூதூர் = பழைமையான ஊர். 12. வம்பு = கச்சு (முகபடாம்). 13. சிதைத்தல் = அழித்தல். 14. நெடுந்தகை = பெரியோன்; செரு = போர்.

கொண்டு கூட்டுசெம்பியன் மருக! நெடுந்தகை! விடரகத்து நாகம் புக்கென உரும்எறிந் தாங்கு, மூதூரகத்து வேந்துண்மையின் செருவத்துச் சிதைத்தல் வல்லை எனக் கூட்டுக.

பாடல் விளக்கம்புறாவிற்கு வந்த துன்பத்தைத் தீர்த்த, ஓளி பொருந்திய வேலையுடைய, சினங்கொண்ட படையையுடைய செம்பியன் வழித்தோன்றலே! நஞ்சுடைய வெண்ணிறமான பற்களும், அழகிய தலையும், வலிமையும், சினமுமுடைய பாம்பு ஒன்று மலையிலிருந்த குகையில் புகுந்தது. அச்சமயம், வானமே தீப்பிடித்ததுபோல், வேகத்துடன், பசுமையான கொடிகள் நிறைந்த அந்த மலைக்குகையின் மேல் இடிவிழுந்து அந்த நாகத்தை அழித்தது. அதுபோல், முதலைகள் நிரம்பிய ஆழமான அகழியின் இருண்ட இடங்களில், அங்கிருந்த முதலைகள் ஒன்றாகக் கூடி, நள்ளிரவில் காவல் புரிவோரின் நிழலைக் கவ்வும் அந்த அகழிக்கு அருகே உள்ள செம்பால் புனையப்பட்ட மதிலையுடைய, தலைமை பொருந்திய பழைய ஊரில் கச்சு அணிந்த யானைகளுடைய இடத்தில் அரசன் உள்ளான் என்ற காரணத்தால், அவ்விடத்தில் உள்ளவை எல்லாம் நல்லவை என்றுகூடக் கருதாது, நீ அவற்றைப் போரில் அழிக்கும் ஆற்றல் உடையவன்.

சிறப்புக் குறிப்புஅரசனது இயல்பை எடுத்துரைப்பதால் இப்பாடல்அரச வாகைஎன்ற துறையைச் சார்ந்தது. மற்றும், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் முன்னோர்களில் ஒருவனாகிய செம்பியனின் சிறப்பைக் கூறுவதால், இப்பாடல்முதல் வஞ்சிஎன்ற துறையையும் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.

இப்பாடலில், பாம்பு குகைக்குள் இருப்பது பகை மன்னன் அரண்மனைக்குள் இருப்பதற்கும், இடியினால் பாம்பு அழிக்கப்படுவது கிள்ளிவளவனால் பகைமன்னன் அழிக்கப்படுவதற்கும் உவமையாகும்.

ஒரு பருந்தால் துரத்தப்பட்ட புறா ஒன்று செம்பியன் என்று அழைக்கப்பட்ட சிபி என்ற சோழ மன்னனிடம் தஞ்சம் புகுந்தது. அப்புறாவுக்குப் பதிலாக, அதன் எடைக்கு எடை ஈடாகத் தன் தசையை அளிப்பதாகவும் அந்தப் புறாவை இன்னலுக்குள்ளாக்க வேண்டாம் என்றும் அந்தப் பருந்தை சிபி வேண்டிக்கொண்டான். அந்தப் பருந்து அதற்கு சம்மதித்தது. புறாவைத் தராசின் ஒரு தட்டில் வைத்து அதற்கு எதிராக சிபி தன் உடலிலிருந்து தன் தசையை வெட்டிவைத்தான். சிபி, தன் தசைகளை எவ்வளவு வெட்டிவைத்தாலும் புறாவின் எடைக்கு சமனாகவில்லை. கடைசியாக, சிபி, தானே அந்தத் தராசில் புகுந்தான். பின்னர், அந்தப் புறாவும் அதைத் துரத்தி வந்த பருந்தும் தாங்கள் தேவர்கள் என்பதையும் அவர்கள் சிபியைச் சோதிப்பதற்காக அவ்வறு வந்ததாகவும் கூறினர். இது ஒரு கதை. இந்தக் கதை தமிழ் நாட்டில் நெடுங்காலமாக நிலவி வந்திருக்கிறது. மாறோக்கத்து நப்பசலையார் புறநானூற்றுப் பாடல் 39-இல், “ புறவின் அல்லல் சொல்லியஎன்று மீண்டும் இந்தக் கதையை நினைவு கூர்கிறார். புலவர் தாமப்பல் கண்ணனார், பாடல் 43-இல், “தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி அஞ்சிச் சீரை புக்க வரையா ஈகை உரவோன் மருகஎன்று சோழன் நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தானுக்கு அவனுடைய முன்னோர்களின் ஒருவனான சிபி, புறாவைக் காப்பாற்றியதை நினைவுபடுத்துகிறார். புறநானூற்றுப் பாடல் 46 –இல் கோவூர் கிழார்புறாவின் அல்லல் அன்றியும், பிறவும் இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை!” என்று சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடம் கூறுவதையும் காண்க. மற்றும், சிலப்பதிகாரத்தில் கண்ணகி, பாண்டியன் நெடுஞ்செழியனிடம் சென்று வழக்குரைத்த போது, இப்பாடலில் உள்ளபுள்ளுறு புன்கண் தீர்த்தோன்என்ற சொற்றடரை இளங்கோவடிகள் பயன்படுத்தியிருப்பதையும் காண்க

 

அலகு - 2

அரசப் புலவர;கள் - 10 பாடல்கள்

 புறநானூறு சேர மன்னர;கள்

1.சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ  11 (அரிமயிர;த் திரண்முன்கை)

2.சேரமான் கணைக்கால் இரும்பொறை   74 (குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்)

3.சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை 245 (யாங்குப் பெரிது ஆயினும்)

பாண்டிய  மன்னர;கள்

4.பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்  72 (நகுதக் கனரே நாடு மீக்கூறுநர;)

5.பாண்டியன் அறிவுடை நம்பி  188 (படைப்புப் பல படைத்துப் பலரொடு உண்ணும்)

6.ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் 183  (உற்றுழி உதவியும் உறு பொருள்)

சோழ  மன்னர;கள்             

7.சோழன் நலங்கிள்ளி -  73 ( மெல்ல வந்து என் நல்லடி)

8.சோழன் கோப்பெருஞ்சோழன் - 214 ( செய்குவம் கொல்லோ)

9.சோழன் நல்லுருத்திரன் -  190  (விளைபதச் சீறிடம்)

குறுநில மன்னன்

10.தொண்டைமான் இளந்திரையன் - 185 (கால்பார; கோத்து )

 

பாடல் -1

 1.புறநானூறு பாடல் 11 - சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ

முடிவேந்தர் மூவருள் ஒருவனான இச்சேரமான் நல்லிசைச் செய்யுள் பாடும் சான்றோன் ஆவான். இவன் பாடிய பாட்டுக்கள் பலவும் பாலைத் திணைக்கு உரியனவாகும். நற்றிணை, குறுந்தொகை, அகம் முதலிய தொகை நூல்களில் காணப்படும் பாலைப் பாட்டுக்கள் பல இவனால் பாடப்பட்டவை. இப்பாட்டுக்கள் அனைத்தும் இலக்கிய வளமும், அறவுணர்வும், நல்லிசை மாண்பும் உடையன.

இச்சேரமானைப் பேய்மகள் இளவெயினி என்பவர் பாடியுள்ளார். பேய்மகள் கண்ணுக்குத் தெரியாத வடிவுடையளாதலால், கண்ணுக்குத் தெரியுமாறு பெண்வடிவு கொண்டு இளவெயினி என்ற பெயருடன் இதனைப் பாடினாளென்று கூறப்படுகிறது. போர்க்களத்துப் பிணந்தின்னும் பேய்மகளிரை வியந்து விரிய இவர் பாடிய சிறப்பால், இளவெயினி என்னும் இயற்பெயருடைய இவருக்கு பேய்மகளென்பது சிறப்புப் பெயராய் அமைந்திருக்க வேண்டும்.

குறமகள் இளவெயினி என்ற ஒருவர் சான்றோர் குழுவில் காணப்படுதலின், அவரிடமிருந்து வேறுபடுத்த இவரை பேய்மகள் என்று சிறப்பித்தனர். குறிஞ்சிநிலத்து நன்மகள் என்று கொள்ளாது, குறக்குடியில் பிறந்த மகளென்று பிழைபடக் கொண்டது போல தெரிகிறது.

இனி பாடலைப் பார்ப்போம்.

அரிமயிர்த் திரண்முன்கை
வாலிழை மடமங்கையர்
வரிமணற் புனைபாவைக்குக்
குலவுச்சினைப் பூக்கொய்து
தண்பொருநைப் புனல்பாயும் 5

விண்பொருபுகழ் விறல்வஞ்சிப்
பாடல்சான்ற விறல்வேந்தனும்மே
வெப்புடைய வரண்கடந்து
துப்புறுவர் புறம்பெற்றிசினே
புறம்பெற்ற வயவேந்தன் 10

மறம்பாடிய பாடினியும்மே
ஏருடைய விழக்கழஞ்சிற்
சீருடைய விழைபெற்றிசினே
இழைபெற்ற பாடினிக்குக்
குரல்புணர்சீர்க் கொளைவல்பாண் மகனும்மே 15

எனவாங் கொள்ளழல் புரிந்த தாமரை
வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே.

பதவுரை:

அரிமயிர்த் திரள் முன் கைமென்மையான முடிகளையுடைய திரட்சியான முன் கைகளில்

வாலிழை மடமங்கையர்தூய ஆபரணங்களை அணிந்த விளையாடும் பருவத்து இளமகளிர்

வரி மணல் புனை பாவைக்குவண்டலிழைத்த சிறுமணலில் செய்த பாவைக்கு

குலவுச் சினைப் பூக்கொய்துவளைந்த மரக்கிளைகளிலிருந்து கோட்டுப் பூக்களைப் பறித்து

தண் பொருநைப் புனல் பாயும்பொருநை ஆற்றின் குளிர்ந்த நீரில் பாய்ந்து விளையாடும்

விண்பொரு புகழ் விறல்வஞ்சிவானளாவிய புகழினையும், வெற்றியினையும் உடைய கருவூரில்

பாடல் சான்ற விறல் வேந்தனும்மேபாடல் பெறுவதற்குத் தகுதியான வெற்றியையுடைய அரசன்

வெப்புடைய அரண் கடந்துபகைவரின் கடும் பாதுகாப்புடைய காவற்கோட்டையை அழித்து

துப்புறுவர் புறம் பெற்றிசினேவலிமையோடு எதிர்த்த பகைவரை வென்று, அவரிடமிருந்து திறையை கொடையாகப் பெற்றவனே

புறம் பெற்ற வயவேந்தன் மறம்பாடிய பாடினியும்மே - திறையை கொடையாகப் பெற்ற வலிமையான அரசனது வீரத்தைப் பாடிய பாடினியும்

ஏர் உடைய விழுக்கழஞ்சின்தோற்றப் பொலிவுடைய சிறந்த கழஞ்சுகளை உருக்கிச் செய்யப்பட்ட

சீருடைய இழை பெற்றிசினேஅருமையான பொன்னரிமாலை, முத்துமாலை போன்ற அணிகலன்களைப் பெற்றாள்!

இழைபெற்ற பாடினிக்கு - அணிகலன்களைப் பெற்ற பாடினியின்

குரல் புணர் சீர்க் கொளைவல் பாண் மகனும்மேகுரலுக்கு இணக்கமாகவும், சிறப்பாகவும் கைகளால் தாளமிட்டு இனிமையாகப் பாடவும் செய்த பாணனும்

ஒள்ளழல் புரிந்த தாமரைபிரகாசமான உலை நெருப்பிலிட்டு உருவாக்கப்பட்ட பொற்றாமரை

வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே ஆங்குவெள்ளி நாரினால் தொடுத்த பூக்களை அங்கே பெற்றான்.

பொருளுரை:

மென்மையான முடிகளையுடைய திரட்சியான முன் கைகளில் தூய ஆபரணங்களை அணிந்த விளையாடும் பருவத்து இளமகளிர் (மங்கை - 12 முதல் 13 வயது வரை உள்ள பெண்) வண்டலில் இழைத்த சிறுமணலில் செய்த பாவைக்கு வளைந்த மரக்கிளைகளிலிருந்து கோட்டுப் பூக்களைப் பறித்து பொருநை ஆற்றின் குளிர்ந்த நீரில் பாய்ந்து விளையாடும் வானளாவிய புகழினையும், வெற்றியினையும் உடைய கருவூரில் பாடல் பெறுவதற்குத் தகுதியான வெற்றியையுடைய அரசனே!

பகைவரின் கடும் பாதுகாப்புடைய காவற் கோட்டையை அழித்து, வலிமையோடு எதிர்த்த பகைவரை வென்று, அவரிடமிருந்து திறையை கொடையாகப் பெற்றவனே!

திறையை கொடையாகப் பெற்ற வலிமையான அரசனது வீரத்தைப் பாடிய பாடினியும், தோற்றப் பொலிவுடைய சிறந்த கழஞ்சுகளை உருக்கி செய்யப்பட்ட அருமையான பொன்னரிமாலை, முத்துமாலை போன்ற அணிகலன்களைப் பெற்றாள்!

அணிகலன்களைப் பெற்ற பாடினியின் குரலுக்கு இணக்கமாகவும், சிறப்பாகவும் கைகளால் தாளமிட்டு இனிமையாகப் பாடவும் செய்த பாணனும் பிரகாசமான உலை நெருப்பிலிட்டு உருவாக்கப்பட்ட வெள்ளி நாரினால் தொடுத்த பொற்றாமரைப் பூக்களைப் பெற்றான். யான் அது பெற்றிலேன்! என்று அரண்மனை வாயிலில் நின்று தன் நிலைமையை அரசனுக்குச் சொல்லுமாறு வாயிற்காவலனிடம் சொல்வது போல இப்பாடல் அமைந்திருக்கிறது.

அருஞ்சொற்கள்:

மங்கை - 12 முதல் 13 வயது வரை உள்ள பெண்

வெப்பு: Severity – கொடுமை

கழஞ்சு - பன்னிரண்டு பணவெடை

கொளை: Melody – இசை, பாட்டு, Beating time with hands or cymbals, கைகளால் தாளமிட்டு ஒற்றுக் கை

ஒள் – 1. Bright, பிரகாசமான 2. good, excellent , நல்ல; 3. beautiful, அழகுள்ள; 4.knowing , அறிவுள்ள

அழல் - fire, நெருப்பு; 2. heat, உஷ்ணம், தணல் கொழுந்து, சுடர், அனல் பொறி, அடுப்புக் கனல், உலை நெருப்பு

இப்பாடல் பாடாண்திணை ஆகும்.

துறை பரிசில்கடாநிலை ஆகும். பரிசில் கடாநிலை என்பது பரிசில் தரும்படி வேண்டிக்கொண்டு வாயிலில் நிற்பதைக் குறிக்கும். புறநானூற்றைத் தொகுத்துத் துறை குறிப்பிட்டவர் 17 பாடல்கள் இத்துறையைச் சேர்ந்தவை எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடாநிலை என்பது கடைநிலை என்பதன் திரிபு. கடை என்பது அரண்மனை வாயில். கடாவும் = வேண்டும் நிலை அன்று. பரிசில் வேண்டுவோர் வாயிலில் நின்றுகொண்டு தன் நிலைமையை அரசனுக்குச் சொல்லுமாறு வாயிற்காவலனிடம் சொல்வது கடைநிலை என்று தொல்காப்பியம் கூறுகிறது. புறப்பொருள் வெண்பாமாலை இதனைப் பரிசில் நிலை என்றும் குறிப்பிடுகிறது.

பாடினி இழைபெற்றாள், பாணன் பூப்பெற்றான், யான் அது பெறுகின்றிலேன் என்பது பரிசில் கடாநிலை ஆயிற்று. இங்கு நின்னோடு எதிர் வந்து பட்டோரெல்லாம் பரிசில் பெற்றார்கள்; ஆனால் நான் பேய்மகளானதால் உன் கண் முன் தோன்றிப் பரிசில் பெற்றிலேன் என்பதாலும் பரிசில் கடாநிலை ஆயிற்று.

பாடல் -2

2. புறநானூறு - 74 - (வேந்தனின் உள்ளம்)

பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை.
திணை: பொதுவியல்.
துறை : முதுமொழிக் காஞ்சி .
====================================

குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
'ஆள் அன்று' என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோஇவ் வுலகத் தானே?

அருஞ்சொற்பொருள்:-

குழவி = குழந்தை
தடி = தசை
தொடர்ப்பாடு = பற்று
தொடர் = சங்கிலி
ஞமலி = நாய்
இடர்ப்பாடு = இடையூறு
இரீஇய = இருக்க
கேளல் கேளிர் = பகைவர், அயலார்
வேளாண் = கொடை (உபகாரம்)
சிறுபதம் = தண்ணீர் உணவு
மதுகை = வலிமை (மனவலிமை)
அளவை = அளவு
ஈனுதல் = பெறுதல்

இதன் பொருள்:-

எங்கள் குடியில் குழந்தை இறந்து பிறந்தாலும் (அல்லது பிறந்து இறந்தாலும்), உருவமற்ற தசைப் பிண்டமாகப் பிறந்தாலும் அது ஒரு ஆள் அல்ல என்று (புதைப்பதற்கு முன் மார்பில்) வாளால் வெட்டுவதிலிருந்து தவற மாட்டார்கள். ஆனால், யானோ அக்குடியில் பிறந்தவனாகவிருந்தாலும், (போரில் மார்பில் புண்பட்டு வீரனைப்போல் மரணமடையாமல்) சங்கிலியால் நாய்போலக் கட்டப்பட்டு, என் பசியைப் போக்குவதற்கு, என்னைத் துன்புறுத்திய பகைவர்களிடம் மன வலிமையின்றி உணவு வேண்டுமென்றுக் கேட்டதால் அவர்கள் எனக்கு அளித்த நீர்போன்ற உணவை உண்ணும் நிலையில் உள்ளேனே! இப்படி வாழ்வதற்காகவா இவ்வுலகில் என்னை என் பெற்றோர்கள் பெற்றனர்?

பாடலின் பின்னணி:-

சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் சோழன் செங்கணானுக்கும் பகை மூண்டது. அப்பகையின் காரணத்தால் அவர்களுக்கிடையே போர் தொடங்கியது. இருவரும் பெரும்படையுடன் கழுமலம் என்னுமிடத்தே போர் செய்யத் தொடங்கினர். போர் நிகழ்ந்தவிடம் குணவாயிற் கோட்டமெனத் தமிழ் நாவலர் சரிதையும், வெண்ணிப் பறந்தலை என்று நற்றிணை முன்னுரையும், திருப்போர்ப்புறம் என்று புறநானூற்றுக் குறிப்பும் கூறுவதாக ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் தம் உரை நூலில் குறிப்பிடுகிறார்3. போரில் சேரன் கணைக்கால் இரும்பொறை தோல்வியுற்றுச் சோழனால் சிறைப்படுத்தப்பட்டான். ஒரு நாள், சேரமான் பசியின் கொடுமை தாங்காமல், சிறைக் காவலர்களிடம் உணவு அளிக்குமாறு கேட்டதாகவும், அவர்கள் காலம் தாழ்த்திச் சிற்றுணவை கொண்டு வந்ததாகவும். அதனால் வெட்கமும் வேதனையுமும் அடைந்த சேரமான் தன்னிரக்கத்தோடு இப்பாடலை எழுதிவைத்துவிட்டு உயிர் துறந்ததாகவும், புறநானூற்றில் இப்பாடலின் அடிக்குறிப்பு கூறுகிறது. ஆனால், வேறு சிலர், சேரமான் கணைக்கால் இரும்பொறை இப்பாடலை பொய்கையார் என்ற புலவருக்கு அனுப்பியதாகவும், அதைப் பெற்ற பொய்கையார் சோழனிடம் சென்று சேரமானைச் சிறையிலிருந்து விடுவிக்கச் செய்ததாகவும் கருதுகின்றனர். இப்பாடலின் பின்னணியைப் பற்றிய பல செய்திகள் ஆய்வுக்குரியன.

குழந்தை இறந்து பிறந்தாலும் (அல்லது பிறந்து இறந்தாலும்), உருவமற்ற தசைப் பிண்டமாகப் பிறந்தாலும், அதை மார்பில் வாளால் வெட்டிப் புதைப்பது மறக்குல மரபாகப் பழந்தமிழ் நாட்டில் இருந்ததாக இப்பாடலில் நாம் காண்கிறோம். குறிப்பாக, அரசர்களிடத்தில் இந்த வழக்கம் இருந்ததாகப் புறநானூற்றுப் பாடல் 93-இல் ஒளவையார் பாடியிருப்பதும் இப்பாடலுடன் ஒப்பு நோக்கத் தக்கது.

சிறப்புக் குறிப்பு:-

இப்பாடலில், மானத்தோடு வாழ்வதே ஒருவற்குப் பெருமை தரக் கூடியது என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது. திருவள்ளுவர், மானத்தோடு வாழ்வதே சிறந்தது என்ற கருத்தை பல குறட்பாக்களில் கூறுகிறார். மானம் என்பதின் பெருமையை உணர்த்துவதற்குத் திருக்குறளில் ஒரு அதிகாரமே (மானம் - அதிகாரம் 97) உள்ளது.

பாடல் -3

கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை

சங்ககாலத்தைச் சேர்ந்த மற்றும் ஒரு சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை. “மாக்கோதைஎன்பது இவன் ஒரு இளவரசன் என்பதைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. இவனைப் பற்றி சங்க இலக்கிய நூலான புறநானூற்றில் ஒரு பாடல் உள்ளது. இந்தப் பாடலைத் தவிர சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை பற்றிய குறிப்புக்கள் வேறு எங்கும் காணோம். சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதையின் மனைவி இறந்தபோது இவன் பாடியதாகக் கூறப்படும் பாடல் ஒன்று புறநானூற்றில் 245 ஆம் பாடலாக இடம்பெற்றுள்ளது.

புறநானூறு

யாங்குப் பெரிது ஆயினும், நோய் அளவு எனைத்தே,
உயிர் செகுக்கல்லா மதுகைத்து அன்மையின்?
கள்ளி போகிய களரி மருங்கின்
வெள்ளிடைப் பொத்திய விளை விறகு ஈமத்து,
ஒள் அழல் பள்ளிப் பாயல் சேர்த்தி,
ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை;
இன்னும் வாழ்வல்; என் இதன் பண்பே!
(புறம் – 245)

விளக்கம்

தன் மனைவி இறந்தாள் என்று அழும் அரசன். அவள் இழப்பு எந்த அளவுப் பெரியதோ தெரியவில்லை. எனினும் அவளை இழந்ததால் நான் அடையும் துன்பம் மிகப் பெரிதாக உள்ளது. என் உயிரையும் உடன் மாய்த்துக்கொண்டிருக்க வேண்டும். அதற்கான வலிமை என்னிடத்தில் இல்லை. அதனால் என் துன்பம் மிகப் பெரிதாக உள்ளது. கள்ளி மண்டிய களரி நிலப் பரந்த வெளி. அங்கு விளைந்த விறகடுக்கின்மேல் கிடத்தி தீ வைத்திருக்கிறேன். இப்படித்தான் என் மனைவியை கொள்ளி வைத்திருக்கிறேன். இன்னும் நான் உயிரோடு வாழ்ந்துகொண்டிருக்கிறேன். சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை சிலகாலம் உயிர் வாழ்ந்து இறுதியில் கோட்டம்பலம் என்னுமிடத்தில் மனநோயாளியாய் உயிர் துறந்தான்.

அரசப் புலவர;கள் - 10 பாடல்கள்

பாடல் 4

72. இனியோனின் வஞ்சினம்!

பாடியவர்பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்1
பாண்டிய நாட்டை மிகச் சிறப்பாக ஆட்சி புரிந்த மன்னர்களில் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் ஓருவன். நிலந்தரு திருவீர் பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் கடைச் சங்க காலத்துப் பாண்டிய மன்னர்களுள் முதன்மையானவன். அவனுக்குப் பிறகு முடத்திருமாறன் என்பவன் பாண்டிய நாட்டை ஆண்டதாக வரலாறு கூறுகிறது. பாண்டியன் முடத்திருமாறனுக்குப் பிறகு பாண்டிய நாட்டை ஆண்டவன் பாண்டியன் பல்யாகசாலை முடுகுடுமிப் பெருவழுதி. இவன் பல யாகங்களைச் செய்ததால் அவ்வாறு அழைக்கப் பட்டான். இவனுக்குப் பிறகு இவன் மகன் நெடுஞ்செழியன் என்பவன் பாண்டிய நாட்டின் பெரும் பகுதியை மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்தான். இவன் வட நாட்டுக்குச் சென்று போரிட்டு அங்குள்ள மன்னர்களை வென்றதால் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்று அழைக்கப்பட்டான். இவன் கண்ணகியின் கணவன் கோவலனைக் கள்வன் என்று பழி சுமத்திக் கொலை செய்தான். தன் தவற்றை உணர்ந்த பின், “யானோ அரசன்?, யானே கள்வன் மன்பதை காக்கும் தென்புலம் காவல் என்முதல் பிழைத்ததுஎன்று கூறி உயிர் துறந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. நெடுஞ்செழியன் இறந்த பிறகு, அவன் தம்பி வெற்றிவேற் செழியன் என்பவன் பாண்டிய நாட்டை ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்தான். வெற்றிவேற் செழியன் இறந்தவுடன் அவன் மகன் நெடுஞ்செழியன் என்பவன் பாண்டிய நாட்டுக்கு மன்னனாக சிறுவதிலேயே முடிசூட்டப்பட்டான். இவன் ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை, திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள் மற்றும் பொருநன் ஆகிய எழுவரும் தலையாலங்கானம் என்னும் இடத்தில் இவனை எதிர்த்துப் போர் செய்தனர். தலையாலங்கானத்தில் நடைபெற்ற போரில் வெற்றி பெற்றதால் இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்று சிறப்பிக்கப்பட்டான். இவனைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் சின்னமனூர், வேள்விக்குடி ஆகிய இடங்களில் கிடைக்கப்பெற்ற செப்பேடுகளில் காணப்படுவதாக வரலாறு கூறுகிறது. இவனைப் புகழ்ந்து பாடியவர்கள் பலர். புறநானூற்றில் 12 பாடல்களில் இவன் புகழ் கூறப்படுகிறது. பத்துப்பாட்டில் மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக் காஞ்சி என்ற பாடலுக்கும் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் இயற்றிய நெடுநல்வாடை என்ற பாடலுக்கும் பாட்டுடைத் தலைவன் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்பது குறிப்பிடத் தக்கது.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஒர் சிறந்த அரசன் மட்டுமல்லாமல் ஒரு சிறந்த புலவனாகவும் திகழ்ந்தான் என்பது புறநானூற்றில் அவன் இயற்றிய இந்தப் பாடல் மூலம் தெரிய வருகிறது.

பாடலின் பின்னணிதலையாலங்கானத்தில் பகைவர் எழுவரும் ஒன்று கூடிப் போரிட வந்தனர் என்பதை அறிந்த நெடுஞ்செழியன், “ நான் இளையவன் என்று நினைத்து என் வலிமையை அறியாமல் இவர்கள் என்னிடம் போரிட வந்திருக்கிறார்கள். நான் அவர்களைப் போரில் அழிப்பேன்; அங்ஙனம் நான் அவர்களை அழிக்காவிட்டால், என் குடிமக்கள் என்னைக் கொடுங்கோலன் என்று தூற்றட்டும்; புலவர்கள் என்னைப் பாடது என் நாட்டைவிட்டு நீங்கட்டும்; இரவலர்க்கு ஈயவொண்ணாத கொடிய வறுமையும் என்னை வந்து சேரட்டும்என்று வஞ்சினம் கூறுகிறான்.


திணை: காஞ்சி; துறை: வஞ்சினக் காஞ்சி

நகுதக் கனரே, நாடு மீக் கூறுநர்;
இளையன் இவன் என உளையக் கூறிப்
படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்
நெடுநல் யானையும், தேரும், மாவும்,
5 படைஅமை மறவரும், உடையம் யாம் என்று
உறுதுப்பு அஞ்சாது, உடல்சினம் செருக்கிச்
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமஞ் சிதையத் தாக்கி, முரசமொடு
ஒருங்கு அகப் படேஎன் ஆயின்; பொருந்திய
10 என் நிழல் வாழ்நர் சென்னிழல் காணாது,
கொடியன்எம் இறை எனக் கண்ணீர் பரப்பிக்,
குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக!
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக,
15 உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக, என் நிலவரை;
புரப்போர் புன்கண் கூர,
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே.

அருஞ்சொற்பொருள்:
1. மீக்கூறல் = புகழ்தல். 2. உளைதல் = மிக வருந்துதல். 3. படு = பெரிய; இரட்டுதல் = மாறி மாறி ஒலித்தல்; பா = பரவுதல். பணை = பருமை. 6. உறு = மிக்க; துப்பு = வலிமை; செருக்குதல் = அகங்கரித்தல். 7. சமம் = போர். 8. அகப்படுத்தல் = சிக்கிக்கொள்ளுதல், பிடிக்கப்படுதல். 10. செல்நழல் = சென்றடையும் நிழல். 16. வரைதல் = நீக்கல். 17 புன்கண் = துயரம்; கூர்தல் = மிகுதல்

உரை: “இந்த நாட்டைப் புகழ்ந்து கூறுபவர்கள் ஏளனத்துக்குரியவர்கள்; இவன் இளையவன்என்று என் மனம் வருந்துமாறு கூறி, தங்களிடத்து மாறி மாறி ஒலிக்கும் மணிகளணிந்த பரந்த பெரிய பாதங்களையுடைய நெடிய நல்ல யானைகளும், தேர்களும், குதிரைகளும் படை வீரர்களும் இருப்பதை எண்ணி, எனது வலிமையைக் கண்டு அஞ்சாது, என்னைப்பற்றி இழிவாகப் பேசும் சினத்தொடு கூடிய வேந்தரைப் பொறுத்தற்கரிய போரில் அழியுமாறு தாக்கி அவர்களையும் அவர்களது முரசுகளையும் கைக்கொள்வேன். நான் அவ்வாறு செய்யேனாயின், என் குடை நிழலில் வாழும் மக்கள் சென்றடைய வேறு இடமில்லாமல், “ எம் வேந்தன் கொடியவன்என்று கண்ணீர் வடித்து அவர்களால் கொடுங்கோலன் என்று தூற்றப்படுவேனாக. மற்றும், மிகுந்த சிறப்பும் உயர்ந்த கேள்வியுமுடைய மாங்குடி மருதன் முதல்வனாக உலகத்தோடு நிலைபெற்ற பலரும் புகழும் புலவர்கள் என்னைப் பாடாது என் நாட்டைவிட்டு நீங்குக. என்னால் காப்பாற்றப்படுபவர் துயரம் மிகுந்து என்னிடம் இரக்கும் பொழுது அவர்கட்கு ஈகை செய்ய இயலாத வறுமையை நான் அடைவேனாக.

சிறப்புக் குறிப்புமுந்திய பாடலில் பூதப்பாண்டியன் கூறியதைப்போல், இப்பாடலில் பாண்டியன் தலயாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் மக்களால் கொடுங்கோலன் என்று கருதப்படுவது ஒரு பெரும்பழி என்று எண்ணுவதைக் காண்கிறோம். மற்றும் புலவர்களால் புகழ்ந்து பாடப்படுவது ஒரு தனிச் சிறப்பு என்பதும் அதை மன்னர்கள் பெரிதும் விரும்பினார்கள் என்பதும் இப்பாடலில் காண்கிறோம். தன்னிடம் இரப்பவர்க்கு ஈகை செய்யவியலாத அளவுக்கு வறுமையை அடைவது இறப்பதைவிடக் கொடுமையானது என்ற கருத்தைசாதலின் இன்னாதது இல்லை; இனிது அதூஉம் ஈதல் இயையாக் கடைஎன்ற குறளில் (குறள் - 230) திருவள்ளுவர் கூறுகிறார். இக்குறளுக்கும் இப்பாடலில் இம்மன்னன் கூறும் கருத்துக்கும் உள்ள ஒற்றுமை சிந்திக்கத் தக்கது.

பாடல் -5

188. மக்களை இல்லோர்!

பாடியவர்பாண்டியன் அறிவுடை நம்பி(188). இவன் பாண்டிய மன்னர்களுள் ஒருவன். புறநானூற்றில் இவன் இய்றிய பாடல் இது ஒன்றுதான். இவனைப் பிசிராந்தையார் பாடியுள்ளார் (184).
பாடலின் பின்னணிமக்கட்பேற்றால் வரும் இன்பத்தை இப்பாடலில் பாண்டியன் அறிவுடை நம்பி சிறப்பித்துப் பாடுகிறான்.
திணைபொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறைபொருண்மொழிக் காஞ்சி . உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.

படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
5 நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம்வாழும் நாளே.

அருஞ்சொற்பொருள்:
1. படைப்பு = செல்வம்; படைத்தல் = பெற்றிருத்தல். 4. துழத்தல் = கலத்தல் (துழாவல்). 5. அடிசில் = சோறு; விதிர்த்தல் = சிதறல். பயக்குறை = பயக்கு+உறை = பயன் அமைதல்

உரைபலவகையான செல்வங்களையும் பெற்றுப் பலரோடு உண்ணும் பெருஞ்செல்வந்தராயினும், மெள்ள மெள்ள, குறுகிய அடிகளைவைத்து நடந்து, தன் சிறிய கையை நீட்டி, அதை உணவில் இட்டு, தொட்டு, வாயால் கவ்வி, கையால் துழாவி, நெய்யுடன் கலந்த சோற்றைத் தன் உடலில் பூசிப் பெற்றோரை இன்பத்தில் மயக்கும் குழந்தைகள் இல்லாதவர்களின் வாழ்நாள்கள் பயனற்றவையாகும்.

சிறப்புக் குறிப்புசிறுகுழந்தை நடக்கும் பொழுது, அது ஒருஅடி வைப்பதற்கும் அடுத்த அடி எடுத்து வைப்பதற்கும் சற்று கால தாமதாவதால், “இடைப்படஎன்று நயம்படக் கூறுகிறார் பாண்டியன் அறிவுடை நம்பி.

மக்கட்பேற்றால் வரும் இன்பத்தை பல குறட்பாக்களில் வள்ளுவர் கூறியிருப்பது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ். (குறள் - 64)

மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. (குறள் - 65)

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். (குறள் - 66)

பாடல் 6.

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் 183  (உற்றுழி உதவியும் உறு பொருள்)

183. கற்றல் நன்றே!

பாடியவர்ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் (183). பாண்டிய மன்னர் பரம்பரையில் நெடுஞ்செழியன் என்ற பெயருடைவர் பலர் இருந்தனர். அவற்றுள் இவனும் ஒருவன். நெடுஞ்செழியன் என்ற பெயருடைய மற்றவர்களிடத்திலிருந்து இவனை வேறுபடுத்துவதற்காக இவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்று அழைக்கப்பட்டான். சிலப்பதிகாரத்தில், கோவலனுக்கு கொலைத் தண்டனை விதித்த நெடுஞ்செழியன் வேறு, இப்பாடலை இயற்றியவன் வேறு என்பது அறிஞர் கருத்து.
பாடலின் பின்னணிஇப்பாடலில், பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் கல்வியின் சிறப்பை மிக அழகாக வலியுறுத்துகிறான்.

திணைபொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறைபொருண்மொழிக் காஞ்சி . உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே;
பிறப்போ ரன்ன உடன்வயிற்று உள்ளும்
சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும்
5 ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
10 மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே.

அருஞ்சொற்பொருள்:
1. உழி = இடம்; உற்றுழி = உற்ற இடத்து; உறு = மிக்க. 2. பிற்றை = பிறகு; பிற்றை நிலை = வழிபாட்டு நிலை; முனியாது = வெறுப்பில்லாமல்

கொண்டு கூட்டுகற்றல் நன்றே; சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும்; அரசும் செல்லும்; மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே எனக் கூட்டுக.

உரைதமக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்க்குத் தேவைப்படும் பொழுது உதவி செய்தும், மிகுந்த அளவு பொருள் கொடுத்தும், ஆசிரியரிடம் பணிவோடு, வெறுப்பின்றி கல்வி கற்றல் நன்று. ஒரே தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுள், அவர்களின் கல்விச் சிறப்புக்கேற்ப தாயின் மனநிலையும் மாறுபடும். ஒரே குடும்பத்தில் பிறந்த பலருள்ளும்மூத்தவன் வருகஎன்று கூறாமல் அறிவுடையவனையே அரசனும் தேடிச் செல்வான். வேறுபட்ட நான்கு குலத்தாருள்ளும் (பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று வருணாசிரமம் கூறும் நான்கு குலத்தினருள்ளும்) கீழ்க்குலத்தில் உள்ள ஒருவன் கல்வி கற்றவனாக இருந்தால், மேற்குலத்தில் உள்ள ஒருவன் அவனிடம் (கல்வி கற்கச்) செல்வான்.

சிறப்புக் குறிப்புவருணாசிரம தருமம் சங்ககாலத்திலேயே வேரூன்றத் தொடங்கிவிட்டது என்பதற்கு இப்பாடல் ஒருசான்று.

இப்பாடலில், ஆசிரியரிடம் பணிவோடு கல்வி கற்க வேண்டும் என்று பாண்டியன் நெடுஞ்செழியன் கூறுவதைப் போல் திருவள்ளுவர், ”செல்வந்தரிடம் உதவி கோரும் எளியவர் பணிந்து நிற்பது போல் ஆசிரியரிடம் பணிந்து நின்று கல்வி கற்பவரே சிறந்தவர்; அவ்வாறு கல்லாதவர் இழிந்தவர்என்ற கருத்தை கல்வி என்ற அதிகாரத்தில் குறிப்பிடுகிறார்.

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர். (குறள் - 395)

 

பாடல் -7

PuRanaanuuRu - Poem 73

73. உயிரும் தருகுவன்!


பாடியவர்சோழன் நலங்கிள்ளி; 'நல்லுருத்திரன் பாட்டு' எனவும் பாடம். சோழன் நலங்கிள்ளிக்கும் அவன் உறவினன் சோழன் நெடுங்கிள்ளிக்குமிடையே பகை இருந்தது. ஒரு சமயம் அவர்களுக்கிடையே போர் மூண்டது. புலவர் கோவூர் கிழார் அவர்களைச் சமாதானப்படுத்திப் போரை நிறுத்தியதைப் புறநானூற்றுப் பாடல் 45-ல் காணலாம். மற்றொரு சமயம் சோழன் நலங்கிள்ளி ஆவூரை முற்றுகையிட்ட பொழுது சோழன் நெடுங்கிள்ளி போரிடாமல் அரண்மனையில் அடைபட்டுக் கிடந்தான். அவனுக்குப் புலவர் கோவூர் கிழார் அறிவுரை கூறியதாகப் புறனானூற்றுப் பாடல் 44 கூறுகிறது. சோழன் நலங்கிள்ளி படை வலிமையும் சிறந்த ஆட்சித் திறமையும் தமிழ்ப் பலமையும் கொண்டவன். புறநானூற்றில் 15 பாடல்களில் இவன் புகழப்படுகிறான். புறநானூற்றில் இவன் இயற்றிய பாடல்கள் இரண்டு (73 மற்றும் 75).

பாடலின் பின்னணிசோழன் நெடுங்கிள்ளி சோழன் நலங்கிள்ளியை எதிர்த்துப் போரிட வருகிறான். “நெடுங்கிள்ளி ஏன் போருக்கு வருகிறான்? என்னுடைய நாடு வேண்டுமென்று என்னடி பணிந்து என்னைக் கேட்டால் என் நாட்டையும் தருவேன்; என் உயிரையும் தருவேன். ஆனால் என்னையும் என் ஆற்றலையும் மதிக்காமல் போரிட நினைத்தால் அவனுக்குப் பெருமளவில் துன்பந்தரும் வகையில் போரிடுவேன்என்று சோழன் நலங்கிள்ளி வஞ்சினம் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணைகாஞ்சி

துறைவஞ்சினக் காஞ்சி

மெல்ல வந்து, என் நல்லடி பொருந்தி

ஈயென இரக்குவர் ஆயின், சீருடை

முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்;

இன்னுயிர்ஆயினும்கொடுக்குவென், இந்நிலத்து

5 ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாதுஎன்

உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதின்

துஞ்சு புலி இடறிய சிதடன் போல

உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; மைந்துடைக்

கழைதின் யானைக் கால்அகப் பட்ட

10 வன்றிணி நீண்முளை போலச், சென்றுஅவண்

வருந்தப் பொரேஎன் ஆயின், பொருந்திய

தீதுஇல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்

பல்லிருங் கூந்தல் மகளிர்

ஒல்லா முயக்கிடைக் குழைக, என்தாரே!

அருஞ்சொற்பொருள்:

2. சீர் = புகழ், பெருமை. 3 தாயம் = உரிமைச் சொத்து; தஞ்சம் = எளிமை. 7. சிதடன் = குருடன். 8. மைந்து = வலிமை. 10. வன்திணி = வலிய திண்ணிய. 13. இரு = கரிய 14. ஒல்லா = பொருந்தாத; முயக்கு = தழுவல், புணர்தல்; குழைக = துவள்க, வாடுக

உரைமெல்ல வந்து என் காலில் விழுந்துகொடுஎன்று என்னைக் கெஞ்சிக் கேட்டால் புகழுடைய முரசோடு கூடிய என்னுடைய உரிமைச் சொத்தாகிய இந்நாட்டை அடைவது எளிது. அது மட்டுமல்லாமல், என் இனிய உயிரைக்கூடக் கொடுப்பேன். ஆனால், வெட்ட வெளியில் படுத்துறங்கும் புலிமேல் தடுக்கி விழுந்த குருடன் போல் இந்நாட்டு மக்களின் ஆற்றலைப் போற்றாது போருக்கு வந்து என்னை ஏளனப்படுத்தும் அறிவிலி நெடுங்கிள்ளி இங்கிருந்து தப்பிப்போவது அரிது. மூங்கில் தின்பதற்கு வந்த வலிய யானையின் காலில் குத்திய வலிய பெரிய நீண்ட முள்போல் அவனைத் துன்புறுத்திப் போரிடேனாயின், தீதில்லாத நெஞ்சத்தோடு காதல் கொள்ளாத மிகுந்த கரிய கூந்தலையுடைய மகளிர் (விலை மகளிர்) என்னைத் தழுவுவதால் என் மாலை வாடட்டும்.

சிறப்புக் குறிப்புவிலைமகளிரோடு தொடர்பு கொள்வது நல்லொழுக்கமில்லை என்பதை திருவள்ளுவர்,

அன்பின் விழையார்; பொருள் விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும். (குறள் - 911)

என்ற குறளில் கூறுவதை இமன்னனின் கூற்றோடு ஒப்பு நோக்குக.

பாடல் -8

214. நல்வினையே செய்வோம்!

பாடியவர்கோப்பெருஞ் சோழன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 213-இல் காண்க.
பாடலின் பின்னணிபகையின் காரணத்தால் கோப்பெருஞ் சோழன் தன் மகன்களுடன் போர் செய்யத் தொடங்கினான். ஆனால், புல்லாற்றூர் எயிற்றியனார் போன்ற புலவர் பெருமக்களின் அறிவுரைக்கு இணங்கிப் போரை நிறுத்தினான். போரை நிறுத்தினாலும் அவன் மனவருத்தத்துடன் இருந்தான். அவ்வருத்ததால் அவன் வடக்கிருந்து உயிர் நீக்கத் துணிந்தான். அவ்வாறு செய்வதை ஒரு உயர்ந்த நற்செயல் என்று கருதினான். அவன் வடக்கிருந்த பொழுது, அவனுடன் இருந்த சான்றோர் சிலர் அவனுடைய செயலால் என்ன நன்மை அடையப் போகிறான் என்று பேசத் தொடங்கினர். அவர்கள் சொல்வதைக் கேள்வியுற்ற கோப்பெருஞ்சோழன், “ நல்வினைகள் செய்வதால் விண்ணுலகம் செல்லலாம்; விண்ணுலகத்தில் இன்பம் நுகர்வது மட்டுமல்லாமல், வீடு பேறும் பெறலாம்; அத்தகைய வீடு பேறு பெற்றால் மீண்டும் பிறவாமல் இருக்கும் நிலையை அடையலாம். பிறவாமை என்னும் நிலை ஒன்று இல்லாவிட்டாலும், நல்வினைகளைச் செய்பவர்கள் குறையற்ற உடலோடு வாழ்ந்து தம் புகழை நிறுவி இறக்கும் பெருமையை அடைவார்கள்என்ற கருத்துகளை இப்பாடலில் கூறுகிறான்.

திணைபொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறைபொருண்மொழிக் காஞ்சி . உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.

செய்குவம் கொல்லோ நல்வினை எனவே
ஐயம் அறாஅர் கசடுஈண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவுஇல் லோரே;
யானை வேட்டுவன் யானையும் பெறுமே;
5 குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே;
அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசி னோர்க்குச்
செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனில்,
தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்;
தொய்யா உலகத்து நுகர்ச்சி இல்லெனில்,
10 மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்;
மாறிப் பிறவார் ஆயினும் இமையத்துக்
கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்
தீதில் யாக்கையொடு மாய்தல்தவத் தலையே

அருஞ்சொற்பொருள்:
1. கொல்ஐயப்பொருளில் வரும் இடைச்சொல். 2. கசடு = ஐயம்; மாசு, குற்றம். ஈண்டுதல் = நிறைதல், செறிதல்; காட்சி = அறிவு. 5. பூழ் = சிறு பறவை, காடை (ஒருவகைப் பறவை). 7. மருங்கு = கூறு. 8. தொய்தல் = வினை செய்தல்; தொய்யா உலகம் = விண்ணுலகம். 12. கோடு = மலையின் உச்சி; இசை = புகழ். 13. யாக்கை = உடல்; மாய்தல் = இறத்தல்; தவ = மிக; தலை = பெருமை.

கொண்டு கூட்டுஉயர்ந்திசினோர்க்கு, நுகர்ச்சியும் கூடும்; பிறப்பின் இன்மையும் கூடும்; இசை நட்டு மாய்தல் தவத்தலையே எனக் கூட்டுக.

உரைமனத்தில் மாசுடன், தெளிந்த அறிவு இல்லாதவர்கள்தான் நல்ல செயல்களைச் செய்யலாமா வேண்டாமா என்ற ஐயம் நீங்காதவர்களாக இருப்பார்கள். யானையை வேட்டையாடச் சென்றவன் யானையைப் பெறலாம்; சிறுபறவையை வேட்டையாடச் சென்றவன் வெறுங்கையோடு திரும்பி வரலாம். அதனால், உயுர்ந்தவற்றுள் விருப்பமுடையவர்களுக்கு அவர் செய்த நல்வினைக்குத் தகுந்த பயன் கிடைக்குமானால், விண்ணுலக இன்பம் கிடைக்கலாம். விண்ணுலக மட்டுமல்லாமல், மீண்டும் பிறவாமல் இருக்கும் நிலையையும் (வீடு பேறு) பெறலாம். பிறவாமை என்ற நிலை இல்லை என்றாலும், இவ்வுலகிலே இமயத்தின் சிகரம்போல் உயர்ந்த புகழை நிலைநாட்டிக், குறையற்ற உடலோடு இறப்பது மிகப் பெருமை வாய்ந்தது.

சிறப்புக் குறிப்பு: ”தொய்தல்என்றால் வினை செய்தல் என்று பொருள். இவ்வுலகில் வாழும்பொழுது, மனிதன் செய்யும் செயல்களில் சில நற்செயல்களாகவும் சில தீய செயல்களாகவும் அமைகின்றன. வாழ்நாளில் செய்த நற்செயல்களுக்கேற்ப, இறந்த பிறகு விண்ணுலகத்தில் மனிதன் இன்பத்தை நுகர்வான் என்பது மதவாதிகளின் நம்பிக்கை. மற்றும், விண்ணுலகத்தில் உள்ளவர்கள் இன்பம் நுகர்வதைத் தவிர வேறு எந்தத் தொழிலையும் செய்யாததால், விண்ணுலகத்தைத்தொய்யா உலகம்என்று இப்பாடலில் கோப்பெருஞ்சோழன் குறிப்பிடுகிறான்.

விண்ணுலகில் இன்பம் நுகர்ந்த பிறகு, மண்ணுலகில் மீண்டும் பிறக்கும் நிலை உண்டு என்பது சில மதங்களின் அடிப்படை நம்பிக்கை. அவரவர்களின் நல்வினை தீவினைகளுக்கேற்ப மனிதர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கிறார்கள். நல்வினையும் திவினையும் அற்ற நிலையில் பிறவாமை என்ற நிலையை அடையலாம். பிறவாமை என்ற நிலையை அடைந்தவர்கள் வீடுபேறு அடைந்ததாகக் கருதப்படுகிறார்கள். வீடுபேறு என்பதைவானோர்க்கு உயர்ந்த உலகம்என்று

யான்என தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும். (குறள் – 346)

என்ற குறளில் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.

 

பாடல் 9

190. எலியும் புலியும்

பாடியவர்சோழன் நல்லுருத்திரன் (190). இவன் சங்க காலத்துச் சோழர்களுள் காலத்தாற் பிற்பட்டவன் என்பது இவன் பெயரிலிருந்து தெரிய வருகிறது. புறநானூற்றில் இவன் இயற்றிய பாடல் இது ஒன்றே.
பாடலின் பின்னணிபிறருடைய முயற்சியால் வாழ்பவர்களின் நட்பைத் தவிர்த்து, நல்ல கொள்கை உடையவர்களின் நட்பைக்கொள்ள வேண்டும் என்று இப்பாடலில் சோழன் நல்லுருத்திரன் கூறுகிறான்.

திணைபொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறைபொருண்மொழிக் காஞ்சி . உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.

விளைபதச் சீறிடம் நோக்கி, வளைகதிர்
வல்சி கொண்டு, அளை மல்க வைக்கும்
எலிமுயன் றனைய ராகி, உள்ளதம்
வளன்வலி உறுக்கும் உளம் இலாளரோடு
5 இயைந்த கேண்மை இல்லா கியரோ;
கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென,
அன்று அவண் உண்ணா தாகி, வழிநாள்
பெருமலை விடரகம் புலம்ப, வேட்டெழுந்து
இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும்
10 புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து
உரனுடை யாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உளவா கியரோ.

அருஞ்சொற்பொருள்:
1. பதம் = பருவம்; சீறிடம் = சிறிய இடம். 2. வல்சி = உணவு; அளை = வளை; மல்கல் = நிறைதல். 4. உறுத்தல் = இருத்தல். 5. கேண்மை = நட்பு. 6. கேழல் = பன்றி. 7. அவண் = அவ்விடம், அவ்விதம்; வழிநாள் = மறுநாள். 8. விடர் = குகை; புலம்பு = தனிமை; வேட்டு = விரும்பி. 9. இரு = பெரிய; ஒருத்தல் =ஆண் விலங்குக்குப் பொதுப்பெயர். 10. மெலிவு = தளர்ச்சி. 11. உரன் = வலிமை, அறிவு, ஊக்கம். 12. வைகல் = நாள்.

உரைநெல் விளைந்த சமயத்தில், சிறிய இடத்தில், கதிர்களைக் கொண்டுவந்து உணவுப்பொருட்களை சேகரித்துவைக்கும் எலி போன்ற முயற்சி உடையவராகி, நல்ல உள்ளம் இல்லாமல், தம்முடைய செல்வத்தை இறுகப் பிடித்துக் கொள்பவர்களுடன் நட்பு கொள்வதைத் தவிர்க. கொடிய பார்வையையுடைய பன்றி, தன்னால் தாக்கப்பட்டவுடன் இடது பக்கமாக விழுந்தது என்பதால் அதை உண்ணாது, பெரிய குகையில் தனித்திருந்து, பின்னர் வேட்டையாட விரும்பி, எழுந்து, பெரிய யானையைத் தாக்கி வலப்பக்கம் வீழ்த்தி அதை உண்ணும் பசியுடைய புலிபோல் தளராத கொள்கையையுடைய வலியவர்களோடு நட்பு கொள்க.

சிறப்புக் குறிப்புதன்னால் தாக்கப்பட்ட விலங்கு இடப்பக்கமாக வீழ்ந்தால் அதைப் புலி உண்ணாது என்ற கருத்து சங்க காலத்தில் நிலவியது என்பதற்குச் சான்றாக அகநானூற்றிலும் ஒருபாடல் காணப்படுகிறது.

தொடங்குவினை தவிரா அசைவுஇல் நோன்தாள்
கிடந்துஉயிர் மறுகுவது ஆயினும் இடம்படின்
வீழ்களிறு மிசையாப் புலி…… (அகநானூறு, 29, 1-3)

பாடல் -10

185. ஆறு இனிது படுமே!

பாடியவர்தொண்டைமான் இளந்திரையன் (185). இவன் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த தொண்டைமான் மரபினன். இவன் கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய பெரும்பாணாற்றுப்படைக்குப் பாட்டுடைத் தலைவன். இவன் சிறந்த அரசனாகவும், கொடை வள்ளலாகவும் இருந்தது மட்டுமல்லாமல் நல்ல தமிழ்ப்புலமை உடையனாகவும் விளங்கினான். இவன் நற்றிணையிலும் மூன்று பாடல்களை (94, 99, 106) இயற்றியுள்ளான்.

பாடலின் பின்னணிஇப்பாடலில், “அரசன் ஆட்சி புரியும் ஆற்றல் உடையவனாக இருந்தால் நாடு நலம் பெறும்; அவன் ஆற்றல் அற்றவனாக இருந்தால் பலவகையான துன்பங்கள் வந்து சேரும்என்று தன் கருத்தைத் தொண்டைமான் இளந்திரையன் கூறுகிறான்.

திணைபொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறைபொருண்மொழிக் காஞ்சி . உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.

கால்பார் கோத்து ஞாலத்து இயக்கும்
காவற் சாகாடு உகைப்போன் மாணின்
ஊறுஇன்றாகி ஆறுஇனிது படுமே;
உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும்
5 பகைக்கூழ் அள்ளற் பட்டு
மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே.

அருஞ்சொற்பொருள்:
1. கால் = வண்டிச் சக்கரம்; பார் = வண்டியின் அடிமரம் (அச்சு); ஞாலம் = உலகம். 2. சாகாடு = வண்டி; உகைத்தல் = செலுத்துதல்; மாண் = மாட்சிமை. 4. உய்த்தல் = செலுத்தல்; தேற்றான் = தெளியான்; வைகலும் = நாளும். 5. அள்ளல் = சேறு; கூழ் அள்ளல் = கலங்கிய சேறு. 6. தலைத்தலை = மேன்மேல்.
உரைசக்கரத்தோடு அடிமரமும் சேர்ந்து இயங்கும் வண்டியைப் போன்றது இவ்வுலகம். வண்டியைச் செலுத்துபவன் திறமை உடையவனாக இருந்தால் வண்டி இடையூறு இல்லாமல் செல்லும். அவன் திறமை இல்லாதவனாக இருந்தால் வண்டி சேற்றில் சிக்கிக் கொள்ளும். அது போல், மன்னன் மாட்சிமை பொருந்தியவனாக இருந்தால் நாடு நலம் பெறும். மன்னன் தெளிவில்லாதவனாக இருந்தால், பகை என்னும் சேற்றில் நாடு மூழ்கி ஒவ்வொரு நாளும் பலவிதமான கொடிய துன்பங்கள் மேலும் மேலும் வந்து சேரும்.

 

அலகு -3

மக்கள் புலவர;கள் -10 பாடல்கள்

1.கபிலர; 202 (வெட்சிக் கானத்து வேட்டுவர;);

2.பரணர; 369 (இருப்பு முகம் செறித்த)

3.மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார; 329 (இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர;)

4.உறையு+; மருத்துவன் தாமோதரனார; 170 (மரை பிரித்து உண்ட நெல்லிவேலி)

5.உறையு+; இளம்பொன் வாணிகனார; 264 (பரலுடை மருங்கிற் பதுக்கை) 6.தொடித்தலை விழுத்தண்டினார; 243

(இனி நினைந்து இரக்கம் ஆகின்று)

7.மதுரைக் கணக்காயனார; 330 (வேந்துடைத் தானை)

8.மதுரைக் வாணிகன் சீத்தலைச் சாத்தனார; 59 (ஆரம் தாழ்ந்த அணி கிளர; )

9.மதுரை வேளாசான் 305 (வயலைக் கொடியின் வாடிய)

10.அடைநெடுங் கல்வியார; 283 (ஒண்செங் குரலித் தண்கயம்)

பாடல் 1

202. கைவண் பாரி மகளிர்

பாடியவர்கபிலர். இவரைப் பற்றிய குறிப்புகளை பாடல் 105-இல் காண்க.
பாடப்பட்டோன்இருங்கோவேள். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 201-இல் காண்க.
பாடலின் பின்னணிபாரி மகளிரை மணந்துகொள்ளுமாறு கூறிய கபிலரின் வேண்டுகோளுக்கு இருங்கோவேள் இணங்க மறுத்தான். அதனால் கோபமடைந்த கபிலர், “வேளே! உன் நாட்டில் சிற்றரையம், பேரரையம் என்று இரண்டு சிறப்பான ஊர்கள் இருந்தன. இன்று அவ்வூர்கள் அழிந்துவிட்டன. உன் முன்னோர்களில் ஒருவன் கழாத்தலையார் என்னும் புலவரை இகழந்தான். அதனால்தான் அவ்வூர்கள் அழிந்தன. நான் இவர்களின் சிறப்பைக் கூறி இவர்களை மணந்துகொள்ளுமாறு உன்னை வேண்டினேன். நீ என் சொல்லை இகழ்ந்தாய்; நான் செல்கிறேன்; உன் வேல் வெற்றி பெறட்டும்என்று இப்பாடலில் கூறுகிறார்.

திணைபாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறைபரிசில் துறை. புரவலன் முன் இரவலர் தாம் பெற விரும்பியது இது எனக் கூறுதல்.

வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக்
கட்சி காணாக் கடமா நல்லேறு
கடறுமணி கிளரச் சிதறுபொன் மிளிரக்
கடிய கதழும் நெடுவரைப் படப்பை
5 வென்றி நிலை இய விழுப்புகழ் ஒன்றி
இருபால் பெயரிய உருகெழு மூதூர்க்
கோடிபல அடுக்கிய பொருள்நுமக்கு உதவிய
நீடுநிலை அரையத்துக் கேடும் கேளினி
நுந்தை தாயம் நிறைவுற எய்திய
10 ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்
நும்போல் அறிவின் நுமருள் ஒருவன்
புகழ்ந்த செய்யுள் கழாஅத் தலையை
இகழ்ந்ததன் பயனே; இயல்தேர் அண்ணல்!
எவ்வி தொல்குடிப் படீஇயர், மற்றுஇவர்
15 கைவண் பாரி மகளிர் என்றஎன்
தேற்றாப் புன்சொல் நோற்றிசிற் பெரும!
விடுத்தனென்; வெலீஇயர்நின் வேலே; அடுக்கத்து
அரும்புஅற மலர்ந்த கருங்கால் வேங்கை
மாத்தகட்டு ஒள்வீ தாய துறுகல்
20 இரும்புலி வரிப்புறம் கடுக்கும்
பெருங்கல் வைப்பின் நாடுகிழ வோயே!

அருஞ்சொற்பொருள்:
1.வெட்சி = ஒருசெடி; கானம் = காடு. 2. கட்சி = புகலிடம்; கடமா = காட்டுப் பசு, மத யானை. 3. கடறு = காடு; கிளர்தல் = எழுதல். 4. கடி = மிகுதி; கதழ்தல் = விரைதல்; படப்பை = தோட்டம், பயிர் நிலம், நாடு. உரு = அச்சம். 9. தாயம் = உரிமை. 10. ஒலியல் = தழைக்கை. 14. மா = கறுப்பு. 17 . அடுக்கம் = மலைச்சாரல். 19. மா = கரிய; தகடு = பூவின் புறவிதழ்; வீ = மலர்; துறுகல் = பாறை. 20. கடுக்கும் = போலும். 21 கல் = மலை.

கொண்டு கூட்டுபுலிகடிமாஅல், அண்ணல், நாடு கிழவோயே, அரையத்துக் கேடும் கேள் இனி; அது கழாஅத்தலையை இகழ்ந்ததன் பயன்; இப்பொழுது, எவ்வி தொல்குடிப் படீஇயர்; இவர் பாரி மகளிர் என்றஎன் புன்சொல்லைப் பொறுப்பாயாக; பெருமானே, நின்னை விடுத்தனென்; வெலீஇயர் நின் வேலே எனக் கூட்டுக.

உரைவெட்சிச் செடிகள் நிறைந்த காட்டில் வேடர்களால் விரட்டப்பட்ட மதங்கொண்ட யானை புகலிடம் இல்லாமல், காட்டில் மணியோசையை எழுப்பி, பொன்னின் தூள்கள் சிதறி மிளிருமாறு, வெகு விரைவாக ஓடும் நெடிய மலைப் பக்கத்தில் உள்ள நாட்டில் வெற்றி நிலைபெற்ற, சிறந்த புகழ் பொருந்திய சிற்றரையம், பேரரையம் என்று அஞ்சத்தக்க இரண்டு பழைய ஊர்கள் இருந்தன. கோடிக்கணக்கில் பொருள் கொடுத்து உன் முன்னோர்களுக்கு உதவி, உயர்ந்த நிலையில் இருந்த அந்த அரையம் ஏன் அழிந்தது என்று கூறுகிறேன்; கேட்பாயாக. உன் தந்தையாரிடமிருந்து உரிமையாகப் பெருமளவில் செல்வங்களைப் பெற்று, தழைத்த மாலையுடன் உள்ள புலிகடிமால்! உன்னைப்போன்ற அறிவுடைய உன் முன்னோருள் ஒருவன், புகழ் மிக்க செய்யுள் இயற்றும் கழாத்தலையாரை இகழ்ந்ததின் விளைவுதான் அரையத்தின் அழிவு. நன்கு செய்யப்பட்ட தேர்களை உடையவனே! ”இவர்கள் எவ்வி என்னும் பழங்குடியைச் சார்ந்தவர்கள்; வள்ளன்மை மிகுந்த பாரியின் மகளிர்என்ற என் தெளிவில்லாத சொற்களைப் பொறுத்துக்கொள்வாயாக!

மலைச்சாரலில், அரும்புகள் அனைத்தும் மலர்ந்த, கரிய அடிமரத்தையுடைய வேங்கையின் கரிய புறவிதழ்களையுடைய ஒளிபொருந்திய பூக்கள் பரவிக் கிடக்கும் பாறை கரிய வரிகளையுடைய புலியின் முதுகைப்போல் உள்ளது. அத்தகைய பெரிய மலைகளுள்ள இடங்களில் ஊர்களையுடைய நாட்டுக்கு உரியவனே! நான் செல்கிறேன். உன் வேல் வெற்றி பெறட்டும்!

சிறப்புக் குறிப்புஇப்பாடலில், கபிலர் பல கருத்துகளை மறைமுகமாகக் குறிப்பிடுகிறார். இருங்கோவேளின் முன்னோர்களில் ஒருவன் கழாத்தலையாரை இகழ்ந்ததால் அரையம் அழிந்தது என்பதைச் சுட்டிக்காட்டி, தன் சொல்லைக் கேளாமல் தன்னை இகழ்ந்ததால் இருங்கோவேளின் நாட்டுக்குக் கேடு வரும் என்று கூறாமல் கூறுகிறார். அடுத்து, அரையத்தின் அழிவைப் பற்றிக் கூறும்பொழுது, “நும்போல் அறிவின் நுமருள் ஒருவன்என்று இருங்கோவேளின் முன்னோர்களின் ஒருவன் இருங்கோவேளைப்போல் அறிவில்லாதவன் என்று மறைமுகமாகக் குறிப்பிடுகிறார். ”நுந்தை தாயம் நிறைவுற எய்தியஎன்று அவனுடைய நாடு மற்றும் செல்வம் அனைத்தும் அவன் தந்தையால் அவனுக்கு அளிக்கப்பட்டதே ஒழிய அவன் தன் சொந்த முயற்சியால் எதையும் பெறவில்லை என்று மறைமுகமாகக் கூறுகிறார். தன்னுடன் வந்த பெண்கள் பாரியின் மகளிர் என்பதால் அவர்களை மணந்தால் மூவேந்தருடன் பகை வரக்கூடும் என்ற அச்சத்தால் இருங்கோவேள் அவர்களை மணக்க மறுக்கிறான் என்று கபிலர் கருதுகிறார். அஞ்ச வேண்டாதவற்றை எண்ணி அவன் அஞ்சுகிறான் என்பதை, வேங்கைப் பூக்கள் பரவிக் கிடக்கும் பாறை, புலியின் முதுகுபோல் இருக்கிறது என்று மறைமுகமாக அவன் அச்சத்தைச் சுட்டிக் காட்டுகிறார். கடைசியாக, “வெலீயர் நின் வேல்என்று கபிலர் கூறுவது, வாழ்த்துவதுபோல் இருந்தாலும், அதுகெடுக உன் வேல்என்ற எதிர்மறைப் பொருளில்குறிப்பு மொழியாகக் கூறியதுபோல் (பாடல் 196-இல் குறிப்பு மொழி என்பதற்கு விளக்கம் இருப்பதைக் காண்க.) தோன்றுகிறது.

பாடல் 2

369. போர்க்களமும் ஏர்க்களமும்!


பாடியவர்பரணர். இவரை பற்றிய குறிப்புக்களைப் பாடல் 4-இல் காண்க.

பாடப்பட்டோன்சேரமான் கடலோட்டிய வெல்கெழு குட்டுவன். சேர நாட்டைச் சிறப்பாக ஆட்சி புரிந்த சேர மன்னர்களுள் சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவனும் ஒருவன். இவனுடைய கடற்படை  பல வெற்றிகளைப் பெற்றதால் இவன் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் என்று அழைக்கப்பட்டான். இவன் சேரமான் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்றும் அழைக்கப்பட்டான். இவனும் பதிற்றுப் பத்தின் ஐந்தாம் பத்தில் பரணரால் பாடப்பட்ட, இமயவரம்பன் மகனாகிய, சேரன் செங்குட்டுவனும் ஒருவனே என்பது அறிஞர்களின் கருத்து.

 

பாடலின் பின்னணிஅரசனின் போர்ச்செயலை உழவனின் செயலோடு ஒப்பிட்டுக் கூறும் பாடல்கள்மறக்கள வழிஎன்னும் துறையைச் சார்ந்தவைபுறநானூற்றுப் பாடல்கள் 368, 369, 370, 371, 373 ஆகியவை மறக்கள வழித்துறையைச் சார்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இப்பாடல்களில், புலவர்கள், போரில் பயன்படுத்தப்படும் விலங்குகள் (யானை, குதிரை), பொருள்கள் (தேர், வில், அம்பு, வேல்) மற்றும் போரில் நடைபெறும் நிகழ்ச்சிகள் (யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை ஆகியவற்றை  அழித்தல், போர்க்களம் குருதி தோய்ந்து காட்சி அளித்தல்) ஆகியவற்றை முறையே உழவுத் தொழிலில் பயன்படுத்தப்படும் எருது, ஏர் ஆகியவற்றோடும், உழவுத் தொழிலில் நடைபெறும்  நிகழ்ச்சிகளோடும் ஒப்பிடுகிறார்கள். இப்பாடல்கள் உவமையணிக்கு எடுத்துக்காட்டாக விளங்கின்றன.

 

புலவர் பரணர், ஏர்க்களத்தை உவமையாகக் காட்டும் போர்க்களத்தில், பூதம், பேய், நரி

முதலியன பிணங்களை உண்ணுகின்றன. அங்கே, பாடி வருவோர்க்குப் பரிசில்

வழங்குவதற்காக சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் வீற்றிருக்கிறான். அங்கு வந்த பொருநன் ஒருவன்அரசே, நான் என் தடாரியை அறைந்து, நின் புகழ் பாடிவந்தேன். என் வறுமையைக் களைவதற்குக் கன்றுகளோடும், பெண்யானைகளோடும் கூடிய களிறுகளைப் பரிசாகத் தருவாயாக.’ என்று கேட்பதாகப் புலவர் பரணர் இப்பாடலில் கூறுகிறார்.


திணைவாகைவாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.

துறைமறக்கள வழிஅரசனை உழவுத் தொழில் புரியும் வேளாளனோடு ஒப்பிட்டுக் கூறுதல்.


இருப்புமுகம் செறித்த ஏந்தெழில் மருப்பின்
கருங்கை யானை கொண்மூ ஆக,
நீண்மொழி மறவர் எறிவனர் உயர்த்த
வாள்மின் ஆக வயங்குகடிப்பு அமைந்த
குருதிப் பலிய முரசுமுழக்கு ஆக,                            5


அரசராப் பனிக்கும் அணங்குறு பொழுதின்
வெவ்விசைப் புரவி வீசுவளி யாக,
விசைப்புறு வல்வில் வீங்குநாண் உகைத்த
கணைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை
ஈரச் செறுவயின் தேர்ஏர் ஆக,                      10


விடியல் புக்கு நெடிய நீட்டிநின்
செருப்படை மிளிர்ந்த திருத்துறு பைஞ்சால்
பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி,
விழுத்தலை சாய்த்த வெருவரு பைங்கூழ்ப்
பேய்மகள் பற்றிய பிணம்பிறங்கு பல்போர்பு         15


கணநரி யோடு கழுதுகளம் படுப்பப்
பூதங் காப்பப் பொலிகளம் தழீஇப்,
பாடுநர்க்கு இருந்த பீடுடை  யாள!
தேய்வை வெண்காழ் புரையும் விசிபிணி
வேய்வை காணா விருந்தின் போர்வை                   20


அரிக்குரல் தடாரி உருப்ப ஒற்றிப்
பாடி வந்திசின் பெரும பாடுஆன்று
எழிலி தோயும் இமிழிசை அருவிப்
பொன்னுடை நெடுங்கோட்டு இமயத் தன்ன
ஓடை  நுதல ஒல்குதல் அறியாத்                             25


துடியடிக் குழவிய பிடியிடை மிடைந்த
வேழ முகவை நல்குமதி
தாழா ஈகைத் தகைவெய் யோயே!


அருஞ்சொற்பொருள்: 1. இருப்பு = இரும்பு; முகம் = கொம்பின் நுனி; செறித்தல் = திணித்த; ஏந்தல் = உயர்ச்சி; எழில் = அழகு; ஏந்தெழில் = மிகுந்த அழகு; மருப்பு = கொம்பு (தந்தம்). 2. கருமை = பெருமை, வலிமை; கொண்மூ = மேகம். 3. நீள்மொழி = வஞ்சினம். 4. வயங்குதல் = விளங்குதல்; கடிப்பு = குறுந்தடி. 6. அரா = பாம்பு; பனிக்கும் = நடுங்கும்; அணங்கு = வருத்தம். 7. வெவ்விது = வெய்து = விரைவு, கொடியது; விசை = விரைவு (செலவு); புரவி = குதிரை; வளி = காற்று. 8. விசை = விரைவு; வீங்குதல் = பருத்தல்; உகைத்தல் = செலுத்துதல். 9. கணை = அம்பு; கிடக்கை = இடம் (போர்க்களம்); கண்ணகன் கிடக்கை = பெரிய போர்க்களம். 10. செறு = வயல். 12. செரு = போர்; மிளிர்தல் = புரளுதல்; திருத்துதல் = மேல்கீழாக்க்குதல். பை = பசுமை; சால் = படைச்சால்; உழவு சால்.13. கணையம் = தடி (தண்டாயுதம்); வித்தி = விதையாகத் தெளித்து.14. விழு = பெரிய; வெரு = அச்சம்; பைங்கூழ் = இளம்பயிர். 15. பிறங்குதல் = உயர்தல்; போர்பு = நெற்போர். 16. கணம் = கூட்டம்; கழுது = பேய்; படுதல் = தங்குதல். 17. தழீஇ = தழுவி. 19. தேய்வை = சந்தனம்; காழ் = குத்துக்கல். 20. வேய்வை = குற்றம்; விருந்து = புதுமை. 21. அரிக்குரல் தடாரி = நுண்ணிய ஓசையையுடைய தடாரிப்பறை; உருப்பம் = வெப்பம்; ஒற்றி = இசைத்து (அறைந்து). 22. பாடு = ஓசை; ஆன்று = நிறைந்து. 23. எழிலி = மேகம்; இமிழ்தல் = ஒலித்தல். 25. ஓடை = நெற்றிப் பட்டம்; ஒல்குதல் = சுருங்குதல். 26. துடி = குறிஞ்சிப் பறை; குழவி = கன்று; பிடி = பெண் யானை. 27. மிடைதல் = நிறைதல்; இடைமிடைந்த = இடைஇடையே நிறைந்த. 28. வேழம் = யானை; முகவை = கொடுக்கும் பொருள் (பரிசு); மதி = மின்ஞிலை அசைச்சொல். 29. தாழா = குறையாத; வெய்யோய் = விரும்புபவன்.

 

கொண்டு கூட்டுபீடுடையாள, பெரும, தடாரி ஒற்றிப் பாடி வந்திசின், வெய்யோய், குழவிய பிடியிடை மிடைந்த வேழ முகவை நல்குமதி எனக் கூட்டுக.

 

உரைஇரும்பால் செய்யப்பட்ட பூண் அணிவிக்கப்பட்ட, உயர்ந்த, அழகிய கொம்புகளையும், பெரிய துதிக்கையையும் உடைய யானைகள் மேகங்கள் போல் உள்ளன.வஞ்சினம் கூறும் மறவர்கள் பகைவரைத் தாக்குவதற்காக உயர்த்திய வாள்கள் மின்னலைப் போல் உள்ளன. விளங்குகின்ற குறுந்தடியால் அடிக்கப்பட்டு, பலியூட்டப்பட்ட முரசின் முழக்கம் மழையின் இடி முழக்கம் போல் உள்ளது. அந்த இடி முழக்கத்தால் பகையரசராகிய பாம்புகள் நடுங்கி வருந்தும் பொழுதில், மிகுந்த வேகத்துடன் செல்லும் குதிரைகள் காற்றுப் போலவும், விரைவாக அம்புகளைச் செலுத்தும் வலிய வில்லின் பெரிய நாண் செலுத்திய அம்புகளாகிய மழை பொழிந்து, குருதி தோய்ந்து ஈரமாகிய பெரிய போர்க்களத்தில் உள்ள தேர்கள் ஏர்களைப் போல் உள்ளன. விடியற்காலைப் பொழுதில் புகுந்து, நீண்ட படைக்கலங்களைப் பயன்படுத்திப் பகைவர்களின் படைக்கருவிகள் கீழ்மேலாகப் புரட்டப்பட்ட, குருதியில் உண்டாகிய படைச்சாலில், கையில் பிடித்துப் பகைவர் எறியும் ஒளிமிகுந்த வேலும், கணையமரங்களும் விதைகள்போல் நிலத்தில் விதைக்கப்பட்டன. அங்கே, வெட்டி வீழ்த்தப்பட்ட பெரிய தலைகளும், பிணங்களும் காண்போர்க்கு அச்சததை விளைவிக்கின்றன. பிணங்களாகிய இளம்பயிரைப் பேய்மகளிர் பற்றி இழுக்கின்றனர். பிணங்கள் நிரம்பிய பல பிணக்குவில்களில், நரிகளின் கூட்டத்தோடு பேய்களும் மொய்க்கப், பூதம் காவல் புரியும் களத்தைப் பாடுவோரின் பாடல்களைக் கேட்டற் பொருட்டு வீற்றிருந்த பெருமைக்குரியவனே!  கல்லில் தேய்த்து அரைக்கப்படும் வெண்மையான சந்தனக் கட்டை போன்ற, இழுத்துக் கட்டப்பட்ட, குற்றமில்லாத, புதிதாகப் போர்க்கப்பட்ட, நுண்ணிய ஓசையையுடைய பெரிய தடாரிப் பறையைச் சூடுபடுத்தி அடித்துப் பாடிவந்தேன். பெருமானே! மேகங்கள் தவழும், ஒலிமிகுந்த அருவிகள் நிறைந்த, பொன்னிறமான நெடிய உச்சியையுடைய இமயம் போன்ற, பட்டமணிந்த நெற்றியையும், துடி போன்ற அடிகளையுமுடைய, கன்றுகளைக்கொண்ட பெண்யானைகளின் இடையிடையே நிறைந்துள்ள ஆண்யானைகளைப் பரிசாக அளிப்பாயாககுறையாத ஈகைத் தன்மையை விரும்புபவனே

பாடல் 3

 

329. அரவுறை புற்றத்து அற்றே!

 

பாடியவர்மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் (329). அறுவை என்ற சொல்சீலை, ஆடை, உடைபோன்ற பொருள்களைக் குறிக்கும் ஒருசொல். இவரது இயற்பெயர் இளவேட்டன்இவர் மதுரையில் அறுவை வாணிகத்தில் ஈடுபட்டிருந்ததால் மதுரை அறுவை இளவேட்டனார் என்று அழைக்கப்பட்டார். இவர் அகநானூற்றில் ஆறு செய்யுட்களும் (56, 124, 230, 254, 272, 302) குறுந்தொகையில் ஒரு (215) செய்யுளும், நற்றிணையில் நான்கு (33, 157, 221, 344) செய்யுட்களும் , புறநானூற்றில் ஒரு (329) செய்யுளும் இயற்றியுள்ளார்.


பாடலின் பின்னணிஒருகால், மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் ஒருசிற்றூரில் வாழும் தலைவன் ஒருவனைக் காணச் சென்றார். அவன் அவ்வூர் மக்களின் நலத்தில் மிகவும் அக்கறையோடு அவர்களைப் பாதுகாத்துவந்ததைக் கண்டு மகிழ்ந்தார். இப்பாடலில் அவர் அத்தலைவனைப் புகழ்கிறார்.

 

 

திணைவாகைவாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.

துறைமூதின் முல்லை. வீரர்க்கல்லாமல் அம்மறக்குடியிற் பிறந்த மகளிர்க்கும் சினமுண்டாதலை மிகுத்துச் சொல்லுதல்.


இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்
புடைநடு கல்லின் நாட்பலி யூட்டி
நன்னீர் ஆட்டி நெய்ந்நறைக் கொளீஇய
மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்
அருமுனை இருக்கைத்து ஆயினும் வரிமிடற்று                          5


அரவுறை புற்றத்து அற்றே; நாளும்
புரவலர் புன்கண் நோக்காது இரவலர்க்கு
அருகாது ஈயும் வண்மை
உரைசால் நெடுந்தகை ஓம்பும் ஊரே.

 

அருஞ்சொற்பொருள்: 1. அடுதல் = சமைத்தல். 2. புடை = பக்கம்; நாள் = விடியற்காலை; பலி = யாகம் முதலியவற்றில் தேவர், மறுகு = தெரு . 5. முனை = முதன்மை; இருக்கை = இருப்பிடம், குடியிருப்பு, ஊர்; வரி = கோடு; மிடறு = கழுத்து. 6. அரவு = பாம்பு. 7. புன்கண் = இடுக்கண், துன்பம். 8. அருகாது = குறையாது. 9. உரை = புகழ்.

 

கொண்டு கூட்டுஊர் அரவுறை புற்றத்தற்று எனக் கூட்டுக.

 

உரைஅது ஒரு சிற்றூர். அங்குச் சில குடிகளே உள்ளனஅங்குள்ள மக்கள், தங்கள் வீடுகளில் கள்ளைக் காய்ச்சுவார்கள்.  அச்சிற்றூரின் பக்கத்தில், நடப்பட்ட நடுகல்லுக்கு, அவ்வூர் மக்கள் விடியற் காலையில் படையல் செய்து, நல்ல நீரால் நீராட்டி, நெய்விளக்கேற்றியதால் உண்டாகிய புகை தெருவெல்லாம் மணக்கும். பகைவர்கள் வந்து தாக்குவதற்கு முதன்மையான இடமாக அவ்வூர் இருந்தாலும், அது பகைவர்களால் கொள்ளற்கரிய இடமாகும்வரிகள் பொருந்திய கழுத்தையுடைய பாம்பு வாழும் புற்று போன்றது அவ்வூர்நாள்தோறும், செல்வந்தர்களுக்கு உண்டாகும் துன்பத்தைப் பாராமல் (ஒரு பொருளாகக் கருதாமல்), இரவலர்களுக்குக் குறையாது கொடுக்கும் வள்ளல் தன்மை உடைய புகழ் மிகுந்த பெருந்தகையால் அவ்வூர் பாதுகாக்கப்படுகிறது

 

சிறப்புக் குறிப்புஊர் அருகில் உள்ள நடுகல்லை வழிபடுவதைப் பற்றி பாடலில் குறிப்பிடப்பட்டிருப்பதால், அவ்வூரில், மறக்குடியைச் சார்ந்த மக்கள் வாழ்ந்தார்கள் என்பது தெரிகிறது. ஆகவே, அது பகைவர்களால் தாக்குதற்கு அரிய இடம் என்பதைக் உணர்த்த, புலவர்அருமுனை இருக்கைஎன்று அவ்வூரைக் குறிப்பிடுகிறார்தலைவன் வெகு சிறப்பாக அவ்வூரைப் பாதுகாப்பதால், அவ்வூர்அரவுறை புற்றுக்கு ஒப்பிடப்பட்டுள்ளது.

 

பாடல் 4

 

170. உலைக்கல்லன்ன வல்லாளன்!

பாடியவர்உறையூர் மருத்துவன் தாமோதரனார்(60, 170, 321). உறையூரில் மருத்துவராகவும் புலவராகவும் வாழ்ந்தவர் தாமோதரனார். இவர் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனையும் பிட்டங்கொற்றனையும் பாடியவர்.
பாடப்பட்டோன்பிட்டங்கொற்றன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 168-இல் காணாலாம்.
பாடலின் பின்னணிஒருகால், மருத்துவர் தாமோதரனார் பிட்டங்கொற்றனைக் காணச் சென்றார். அவ்வமயம், பிட்டங்கொற்றனின் பகைவர்கள் அவனோடு போர் புரிவதற்குத் திட்டமிட்டுக் கொண்டிருப்பதாக, பகைவர்களின் ஒற்றர்கள் மூலம் அறிந்தார். அவ்வொற்றர்கள் அறியுமாறு, அவர் பிட்டங்கொற்றனின் வலிமையைப் புகழ்ந்து பாடுவதாக, இச்செய்யுள் அமைந்துள்ளது.

திணைவாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறைவல்லாண் முல்லை; தானை மறமும் ஆம்.
வல்லாண் முல்லை: ஒரு வீரனுடைய வீட்டையும் ஊரையும் இயல்பினையும் சொல்லி அவன் ஆண்மைத் தன்மையை நன்மை பெருகச் சொல்லுதல்.
தானை மறம்: இரு படைகளும் தங்களுள் போரிட்டுச் சாகாதவாறு வீரன் ஒருவன் பாதுகாத்ததைக் கூறுவது.

மரைபிரித்து உண்ட நெல்லி வேலிப்
பரலுடை முன்றில் அங்குடிச் சீறூர்
எல்அடிப் படுத்த கல்லாக் காட்சி
வில்லுழுது உண்மார் நாப்பண் ஒல்லென
5 இழிபிறப் பாளன் கருங்கை சிவப்ப
வலிதுரந்து சிலைக்கும் வன்கண் கடுந்துடி
புலிதுஞ்சு நெடுவரைக் குடிஞையோடு இரட்டும்
மலைகெழு நாடன் கூர்வேல் பிட்டன்
குறுகல் ஓம்புமின் தெவ்விர்; அவனே
10 சிறுகண் யானை வெண்கோடு பயந்த
ஒளிதிகழ் முத்தம் விறலியர்க்கு ஈந்து
நார்பிழிக் கொண்ட வெம்கள் தேறல்
பண்அமை நல்யாழ்ப் பாண்கடும்பு அருத்தி
நசைவர்க்கு மென்மை அல்லது பகைவர்க்கு
15 இரும்புபயன் படுக்குங் கருங்கைக் கொல்லன்
விசைத்துஎறி கூடமொடு பொருஉம்
உலைக்கல் அன்ன வல்லா ளன்னே.

அருஞ்சொற்பொருள்:
1.மரை = காட்டுப்பசு. 2. பரல் = விதை; முன்றில் = முற்றம். 3. எல் = பகல்; அடிப்படுதல் = அடிச்சுவடு படுதல்; காட்சி = அறிவு. 4. நாப்பண் = நடுவே. கருமை = வலிமை. 6.துரந்து = முயன்று; சிலைத்தல் = ஒலித்த. துடி = குறிஞ்சிப் பறை. 7. குடிஞை = ஆந்தை; இரட்டல் = மாறி மாறி ஒலித்தல். 9. குறுகல் = அணுகல். 12. வெம்மை = விருப்பம்; தேறல் = கள்ளின் தெளிவு. 16. கூடம் = சம்மட்டி. 17. உலைக்கல் = பட்டடைக் கல் (பட்டறை).

கொண்டு கூட்டுபிட்டன் நசைவர்க்கு மென்மையல்லது பகைவர்க்கு கல்லன்ன வல்லாளனாதலால், தெவ்வீர், அவனைக் குறுகல் ஓம்புமின் எனக் கூட்டுக.

உரைகாட்டுப் பசுக்கள் வீட்டு வேலியில் உள்ள நெல்லிமரத்தின் கனிகளின் விதைகளை நீக்கித் தின்றதால் அவ்விதைகள் வீடுகளின் முற்றங்களில் சிதறிக் கிடக்கும் அழகிய வீடுகளுடைய சிற்றூரில், பகற் பொழுதெல்லாம் வேட்டையாடித் திரிகின்ற, கல்வியில்லாத, வேற்பயிற்சியுள்ள வேட்டையாடி உண்ணும் வேடர்களின் நடுவே, “ஒல்என்னும் ஓசையுடன் இழிந்த பிறப்பாளன் என்று கருதப்படும் பறை கொட்டுபவன் தன் வலிய கை சிவக்குமாறு விரைந்து அடிக்கும் வலிய கண்ணையுடைய, அச்சம் தரும் பறையின் ஒலி, புலி படுத்திருக்கும் மலையில் ஆந்தையின் அலரலோடு மாறி மாறி ஒலிக்கும். இத்தகைய மலையுள்ள நாட்டுக்குத் தலைவன் கூரிய வேலையுடைய பிட்டங்கொற்றன். பகைவர்களே! அவனை அணுகுவதைத் தவிர்க. அவன் சிறிய கண்களையுடைய யானைகளின் வெண்மையான தந்தங்களில் விளையும் ஒளி பொருந்திய முத்துகளை விறலியர்க்குக் கொடுப்பவன். நாரைப் பிழிந்து எடுத்த விரும்பத்தக்க கள்ளின் தெளிவை, யாழோடும் பண்ணோடும் பாடும் பாணர்களுக்குக் கொடுத்து அவர்களையும் அவர்களின் சுற்றத்தாரையும் உண்ண வைப்பவன். ஆனால், பகைவர்க்கு அவன் இரும்பைப் பயன்படுத்தும் வலிய கொல்லனின் உலைக்களத்தில் விரைந்து சம்மட்டியால் அடிக்கப்படும் பட்டடைக்கல் போன்ற வலிமையுடையவன்.

பாடல் 5

264. இன்றும் வருங்கொல்!

பாடியவர்உறையூர் இளம்பொன் வாணிகனார். “இளம்பொன்என்பது மாற்றுக் குறைந்த பொன்னைக் குறிக்கும் சொல்இப்புலவர், மாற்றுக் குறைந்த பொன் வாணிகத்தில் ஈடுபட்டிருந்ததால் இவர் இவ்வாறு அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவர் இயற்பெயர் தெரியவில்லை.

பாடலின் பின்னணிஒரு தலைவன், அவன் ஊரிலிருந்த பசுக்களைக் கவர்ந்து சென்ற பகைவர்களிடமிருந்து அவற்றை மீட்டு வரும்போது போரில் இறந்தான்அவன் பெயரையும் பெருமையையும் பொறித்த நடுகல்லை, மயில் தோகையையும் பூமாலையையும் சூட்டி அலங்கரித்தனர். அவன் உயிரோடிருந்த பொழுது, பாணர்களுக்குப் பெருமளவில் உதவி செய்தவன். “அவன் நடுகல்லாகியது பாணர்களுக்குத் தெரியுமோ? தெரியாதோ? அவன் இறந்த செய்தி தெரியாமல் பாணர் கூட்டம் இன்றும் அவனைக் காண வருமோ?” என்று இரங்கிப், புலவர் உறையூர் இளம்பொன் வாணிகனார் இப்பாடலை இயற்றியுள்ளார்.

திணைகரந்தைபகைவரால் கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை மீட்டு வருதல்.

துறைகையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்; கழிந்து போன பொருளைக் குறித்து வருந்துதல்.

பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி
மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு
அணிமயிற் பீலி சூட்டிப், பெயர்பொறித்து
இனிநட் டனரே! கல்லும்; கன்றொடு
கறவை தந்து பகைவர் ஓட்டிய
நெடுந்தகை கழிந்தமை அறியாது
இன்றும் வருங்கொல், பாணரது கடும்பே.

அருஞ்சொற்பொருள்:

1. பரல் = கல்; மருங்கு = பக்கம்; பதுக்கை = மேடு. 2. மரல் = ஒருவகை நார் உள்ள மரம்; கண்ணி = மாலை. 3. அணி = அழகு; பீலி = மயில் தோகை.4. இனி = இப்பொழுது. 5. கறவை = பால் கொடுக்கும் பசு. 6. நெடுந்தகை = பெரியோன் (தலைவன்); கழிந்தமை = இறந்தது. 7. கடும்பு சுற்றம்.

உரைகற்களுள்ள மேட்டுப்பக்கத்தின் அருகில், மரத்திலிருந்து பிரித்து எடுத்த நாரால் தொடுத்த சிவந்த பூக்களுடன் கூடிய மாலையையும் அழகிய மயில் தோகையையும் சூட்டி, அவன் பெயர் பொறித்துத் தலைவனுக்கு இப்பொழுது நடுகல் நட்டுவிட்டார்களேகன்றுகளோடு பசுக்களையும் மீட்டு வந்த தலைவன் இறந்ததை அறியாது பாணர்கள் கூட்டம் இன்றும் அவனைக் காண வருமோ?

 

பாடல் 6

243. யாண்டு உண்டுகொல்?

பாடியவர்தொடித்தலை விழுத்தண்டினார் (243). இவருடைய இயற்பெயர் தெரியவில்லை. இப்பாடலில், இவர்தொடித்தலை விழுத்தண்டுஎன்ற சொற்றொடரைப் பயன்படுத்தியிருப்பதால், இவர் இவ்வாறு அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றே.
பாடப்பட்டோன்இப்பாடலில், தொடித்தலை விழுத்தண்டினார் ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனைப் பாடியதாக அவ்வை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் தம் நூலில் கூறுகிறார். ஆனால், டாக்டர். . வே. சாமிநாத ஐயர் அவர்கள் இப்பாடலுக்கு பாடப்பட்டோன் என்று யாரையும் குறிப்பிடவில்லை. ஆகவே, இப்பாடலில் பாடப்பட்டவன் யார் என்பது ஆய்வுக்குரியது.
பாடலின் பின்னணிதம் இளமையில் தாம் விளையாடிய விளையாட்டுகளையும், இன்பமான நிகழ்ச்சிகளையும் எண்ணிப் பார்த்து, அவையெல்லாம் கழிந்தனவே என்று தாம் வருந்துவதை, புலவர் தொடித்தலை விழுத்தண்டினார் இப்பாடலில் வெளிப்படுத்துகிறார்

திணைபொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறைகையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல். கழிந்து போன பொருளைக் குறித்து வருந்துதல்.

இனிநினைந்து இரக்கம் ஆகின்று; திணிமணல்
செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து
தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி
5 மறைஎனல் அறியா மாயமில் ஆயமொடு
உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
நீர்நணிப் படிகோடு ஏறிச், சீர்மிகக்
கரையவர் மருளத், திரையகம் பிதிர
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
10 குளித்துமணற் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே, யாண்டுண்டு கொல்லோ?
தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று
இருமிடை மிடைந்த சிலசொல்
பெருமூ தாளரோம் ஆகிய எமக்கே.

அருஞ்சொற்பொருள்:
1. இனி = இப்பொழுது; திணிதல் = செறிதல். 2. பாவை = பொம்மை; தைஇ = சூடி. 3. கயம் = குளம்; பிணைந்து= கோத்து. 4. தழீஇ = தழுவி; தூங்கல் = ஆடல். 5. ஆயம் = கூட்டம். 6. சினை = கிளை. 8. பிதிர் = திவலை (சிதறும் நீர்த்துளி). 9. குட்டம் = ஆழம். 12. விழு = சிறந்த; தண்டு = தடி, ஊன்றுகோல். 13. இரும் = இருமல்; மிடைதல் = கலத்தல்.

உரைஇப்பொழுது நினைத்தால் வருந்தத்தக்கதாக உள்ளது. மணலைத் திரட்டிச் செய்த பொம்மைக்கு, பறித்த பூவைச் சூடி, குளிர்ந்த குளத்தில் விளையாடும் பெண்களோடு கை கோத்து, அவர்கள் தழுவும் பொழுது தழுவி, அவர்கள் ஆடும் பொழுது ஆடி, ஒளிவு மறைவு இல்லாமல் வஞ்சனை இல்லாத இளையோர் கூட்டத்தோடு விளையாடினோம். உயர்ந்த கிளைகளையுடைய மருதமரத்தின் நீர்த்துறையில் படிந்த கிளையைப் பற்றி ஏறி, அழகு மிகுந்த, கரைகளில் உள்ளோர் வியக்க, நீரலைகளிலிருந்து நீர்த்துளிகள் மேலே எழவும், நெடிய நீரையுடைய ஆழமான இடத்தில், “துடும்எனக் குதித்து, மூழ்கி, மணலை வெளியில் கொண்டுவந்து காட்டிய அறியாமை மிகுந்த இளமை இப்பொழுது எங்குள்ளதோ? பூண் சூட்டிய நுனியையுடைய வளைந்த ஊன்றுகோலை ஊன்றித் தளர்ந்து, இருமல்களுக்கு இடைஇடையே வந்த சில சொற்களைக் கூறும் பெரிய முதியவர்களாகிய எம்முடைய இந்த நிலை இரங்கத் தக்கது.

சிறப்புக் குறிப்புதன் இளமை கழிந்துபோனதை நினைத்துப் புலவர் தம் வருத்தத்தை வெளிப்படுத்துவதால், இப்பாடல் கையறுநிலையைச் சார்ந்ததாயிற்று.

பாடல் 7

330. பெருங்கடற்கு ஆழி அனையன்!

பாடியவர்மதுரை கணக்காயனார்(330). இவர் சங்க இலக்கியத்தில் பல பாடல்களை இயற்றிய பெரும்புலவர் நக்கீரனாரின் தந்தை. இவர் மூவேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் பாடியுள்ளார்இவர் அகநானூற்றில் மூன்று (27, 338, 342) செய்யுட்களும், நற்றிணையில் ஒரு (23)செய்யுளும், புறநானூற்றில் ஒரு (330) செய்யுளும் இயற்றியுள்ளார்.  

பாடலின் பின்னணிஇப்பாடலில், ஒரு சிற்றூர்த் தலைவனின் வண்மையையும் வீரத்தையும் மதுரை கணக்காயனார் புகழ்ந்து பாடுகிறார்.

 

திணைவாகைவாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.

துறைமூதின் முல்லை. வீரர்க்கல்லாமல் அம்மறக்குடியிற் பிறந்த மகளிர்க்கும் சினமுண்டாதலை மிகுத்துச் சொல்லுதல்.



வேந்துடைத் தானை முனைகெட நெரிதர
ஏந்துவாள் வலத்தன் ஒருவன் ஆகித்
தன்இறந்து வாராமை விலக்கலின், பெருங்கடற்கு
ஆழி அனையன் மாதோ; என்றும்,
பாடிச் சென்றோர்க்கு அன்றியும் வாரிப்                                    5


புரவிற்கு ஆற்றாச் சீறூர்த்
தொன்மை சுட்டிய வண்மை யோனே.


அருஞ்சொற்பொருள்: 1, முனை = போர்முனை (முன்னணிப் படை); நெரிதரல் = உடைதல், நொறுங்குதல். 2. வலத்தன் = வலிமையுடையவன். 4. ஆழி = கடற்கரை; மாதோ - அசை. 5. வாரி = வருவாய். 6. புரவு = ஒருவகை நிலவரி.

 

கொண்டு கூட்டுஒருவனாகி விலக்கலில் பெருங்கடற்கு ஆழி அனையன்; வண்மையோன்.

 

உரைதன் வேந்தனுடைய முன்னணிப் படை சிதைந்து அழியுமாறு, பகைவர்களின் படை முன்னேறியபொழுது, இவன் தனியனாக வாளை ஏந்தி வலிமையுடன் போர்புரிந்து பகைவரின் படை, தன்னைக் கடந்து வராமல் தடுத்தான்.  ஆகவே, இவன் பெருங்கடலுக்குக் கரை போன்றவன்வள்ளல் தன்மையுடைய பரம்பரையைச் சார்ந்த இவ்வூர்த் தலைவன், எந்நாளும், தன்னைப் பாடிச் சென்ற பரிசிலர்களுக்கு  வரையாது கொடுப்பது மட்டுமல்லாமால், வரி செலுத்துவதற்குக்கூட வருவாய் இல்லாத இவ்வூரையும் தன் வள்ளன்மையால் காப்பாற்றி வருகிறான்.

 

சிறப்புக் குறிப்பு: ’பெருங்கடற்கு ஆழியனையன்’  என்றது பகைவர்களின் படையைத் தடுத்து நிறுத்துவதைக் குறிப்பதுபோல்,  பரிசிலர்களையும், வருவாய் இல்லாத  அவ்வூர் மக்களையும் தலைவன் பாதுகாப்பதையும் குறிப்பதாகத் தோன்றுகிறது.


பாடல் 8

 

புறநானூறு 59 Purananuru 59

பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்

 

நன்மாறன் சித்திரமாடம் என்னுமிடத்தில் துஞ்சியவன்

புலவர் அவனை வாழ்த்துகிறார்.

 

மார்பில் முத்தாரம் அணிந்தவன்

அவன் கை அவனது முழந்தாள் வரை நீண்டிருக்கும்

தகைமைப் பண்பு மிக்கவன்

 

விருப்பத்துடன் கொடை வழங்குபவன்

தெளிவில்லாமல் யாராயிருந்தாலும் வழங்குபவன்

யாருக்கும் வழங்காமல் இருந்ததில்லை. (பொய் தேற்றாதவன்). 

 

அவனது பகைவர்க்குச் சுட்டெரிக்கும் சினத்துடன் 

கடலில் தோன்றும் ஞாயிறு போன்றவன்

மற்றவர்களுக்கு குளுமையான ஒளி தரும் நிலா போன்றவன்.

 

பாடல்

 

ஆரம் தாழ்ந்த அணி கிளர் மார்பின்,

தாள் தோய் தடக் கைதகை மாண் வழுதி!

வல்லை மன்றநீ நயந்து அளித்தல்;

தேற்றாய்பெருமபொய்யேஎன்றும்

காய் சினம் தவிராது கடல் ஊர்பு எழுதரும்

ஞாயிறு அனையைநின் பகைவர்க்கு;

திங்கள் அனையைஎம்மனோர்க்கே.

 

திணை பாடாண்

துறை பூவை நிலை.

பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனை 

மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் 

பாடியது.

 

காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு

WEDNESDAY, JANUARY 18, 2012

பாடல் 9

305. சொல்லோ சிலவே!

பாடியவர்மதுரை வேளாசான்மதுரையில் பார்ப்பனர்களிடையே வேள்வித் தொழிலுக்கு ஆசானாக இருந்ததால் இவர் வேளாசான் என்ற பெயர் பெற்றிருக்கலாம் என்று ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் கூறுகிறார்இவர் இயற்பெயர் தெரியவில்லை.
பாடலின் பின்னணிஇளம் பார்ப்பனன் ஒருவன் ஒருவேந்தனிடம் சென்று ஒரு சில சொற்களே சொல்லி, நடக்கவிருக்கும் போரை நிறுத்தியதை இப்பாடலில் புலவர் மதுரை வேளாசான் கூறுகிறார்.

திணைவாகைவாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.

துறைபார்ப்பன வாகைகேட்கத் தக்கவை கேட்டுத் தலைமை பெற்ற பார்ப்பானின் வெற்றியைப் புகழ்ந்து பாடுதல்.


வயலைக் கொடியின் வாடிய மருங்குல்
உயவல் ஊர்திப் பயலைப் பார்ப்பான்
எல்லி வந்து நில்லாது புக்குச்
சொல்லிய சொல்லோ சிலவே; அதற்கே
ஏணியும் சீப்பும் மாற்றி
மாண்வினை யானையும் மணிகளைந் தனவே.

அருஞ்சொற்பொருள்: 1. வயலை = பசலை; மருங்குல் = இடை. 2. உயவல் = வருத்தம், தளர்வு; பயலை = இளமை. 3. எல்லி = இரவு. 5. சீப்பு = மதில் கதவுக்கு வலியாக உள்வாயிற்படியில் நிலத்தே வீழ விடும் மரம். 6. மாண் = மாட்சிமையுடைய.

உரைபசலைக் கொடி போன்ற இடையையும் தளர்ந்த நடையையும் உடை இளம் பார்ப்பனன் ஒருவன் தடையின்றி, இரவில் வந்து அரசனிடம் சொல்லிய சொற்கள் சிலவே. அதன் விளைவாக, மதில்மேல் சாத்திய ஏணியும், கதவுக்கு வலிமை சேர்ப்பதற்காக வைத்திருந்த சீப்பும், சிறப்பாகப் போர்புரியும் யானைகள் அணிந்திருந்த மணிகளும் களையைப்பட்டன. அதாவது, பார்ப்பனன் கூறிய சொற்களைக் கேட்டுப் போர் கைவிடப்பட்டது.

சிறப்புக் குறிப்பு: “சொல்லிய சொல்லோ சிலவேஎன்பது போருக்கான ஏற்பாடுகள் அதிகமாகச் செய்யப்பட்டிருந்தன என்பதையும், அவன் சொல்லிய சொற்கள் சிலவாக இருந்தாலும் அதனால் பெற்ற பயன் அதிகம் என்ற பொருளிலும் கூறப்பட்டுள்ளது. மதில் மீது ஏறுவதற்கு ஏணியும், மதிற் கதவுகளை வலிமைப் படுத்துவதற்கு சீப்பும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. மணியணிந்த யானை என்பது அரசன் ஏறிச் செல்லும் யானையைக் குறிக்கிறது.

 

பாடல் 10

283. அழும்பிலன் அடங்கான்!

283. அழும்பிலன் அடங்கான்!

பாடியவர்அண்டர் நடுங்கல்லினார் (283, 344, 345). அண்டர் என்ற சொல்லுக்கு ஆயர் (இடையர்) என்று பொருள். ஒருகால், ஓரூரில் ஆநிரைகளை மீட்பதற்காகப் போரிட்ட வீரன் ஒருவன் இறந்தான்அவனை ஆயர்கள் நடுகல் நாட்டிச் சிறப்பித்தனர்அதைப் புகழ்ந்து பாடியதால் இப்புலவர் அண்டர் நடுங்கல்லினார் என்று அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறதுஇவர் பெயர் அடைநெடுங்கல்லியார் என்றும் அடைநெடுங்கல்வியார் என்றும் காணப்படுகிறது.
பாடலின் பின்னணிபகைவர்கள் எய்த அம்புகள் ஒரு வீரனின் உடலில், வண்டியின் குடத்தில் ஆரக்கால்கள் செருகி இருப்பதைப் போல் செருகி இருந்தன. அவனைச் சில சிறுமிகள் பாதுகாத்துவந்தனர். அவ்வீரனைக் காணவந்த நண்பன் ஒருவன், வீரனின் நிலையைக் கண்டு, சினத்துடன் போருக்குப் புறப்பட்டான். இப்பாடலின் சில பகுதிகள் கிடைக்கவில்லை. பாடல் சிதைந்துள்ளதால், தெளிவான பொருள் காண்பது அரிதாக உள்ளது.

திணைதும்பை. தும்பைப் பூவைச் சூடிப் பகைவரோடு போர் செய்தல்.

துறைபாண்பாட்டுபாடாண் பாட்டும் ஆம்

பாண்பாட்டுபெரும்போர் செய்து இறந்த வீரனுக்கு சாப்பண்னைப் பாடிப் பாணர் தம் கடன் கழித்தலைக் கூறுதல்.

பாடாண் பாட்டுஒருவனது ஆற்றல், ஓளி, ஈகை, அருள் ஆகியவற்றை ஆராய்ந்து சொல்லுதல்.


ஒண்செங் குரலித் தண்கயம் கலங்கி
வாளை நீர்நாய் நாள்இரை பெறூஉப்
பெறாஅ உறையரா வராஅலின் மயங்கி
மாறுகொள் முதலையொடு ஊழ்மாறு பெயரும்
அழும்பிலன் அடங்கான் தகையும் என்னும்
வலம்புரி கோசர் அவைக்களத் தானும்
மன்றுள் என்பது கெட …...தானே பாங்கற்கு
ஆர்சூழ் குறட்டின் வேல்நிறத்து இங்க
உயிர்புறப் படாஅ அளவைத் தெறுவரத்
10 தெற்றிப் பாவை திணிமணல் அயரும்
மென்தோள் மகளிர் நன்று புரப்ப
இமிழ்ப்புறம் நீண்ட பாசிலைக்
கமழ்பூந் தும்பை நுதலசைத் தோனே.

அருஞ்சொற்பொருள்:

1. குரலி = நீரில் உள்ள ஒருவகைச் செடி; தண்கயம் = குளிர்ந்த நீர்நிலை. 2. வாளை = வாளைமீன். 3. அரா = பாம்பு; வராஅல் = வரால்மீன். 4. ஊழ் = முறை; மாறு = பகை. 5. அழும்பிலன் = அழும்பில் என்னும் ஊரின் தலைவன்; தகைத்தல் = தடுத்தல். 6. வலம் = வெற்றி; புரிதல் = விரும்புதல். 7. பாங்கன் = தோழன். 8. ஆர் = ஆரக்கால்; குறடு = மரத்துண்டு. அச்சுக் கோகும் இடம் ( வண்டிச் சக்கரத்தின் குடம்); நிறம் = மார்பு; இங்கல் = ஊடுருவுதல், நுழைதல். 9. அளவை = அளவு; தெறு = சினம். 10. தெற்றி = திண்ணை; பாவை = பதுமை (பொம்மை); அயர்தல் = விளையாடுதல். 11. புரப்ப = பாதுகாக்க (காக்க). 12. இமிழ்தல் = தழைத்தல், மிகுதல்; பாசிலை = பசிய இலை. 13. நுதல் = நெற்றி; அசைத்தல் = கட்டுதல்.

கொண்டு கூட்டுநீர்நாய் நாள் இரை பெற்று மயங்கி முதலையொடு ஊழ்மாறு பெயரும்; வேல் நிறத்து இங்க பாங்கற்கு உயிர் புறப்படாஅ அளவைத் தும்பையை நுதலசைத்தான் எனக் கூட்டுக.

உரைஒளிபொருந்திய செங்குரலிக்கொடி நிறைந்த குளிர்ந்த நீர்நிலை கலங்க, வாளைமீனை நீர்நாய் தனக்கு அன்றைய உணவாகப் பெற்றுக்கொண்டு, உணவு இல்லாமல் அங்கே வாழும் பாம்புகளை வரால்மீன் எனக்கருதி மயங்கி முதலைகளோடு மாறிமாறி முறையாக நீர்நாய்களும் முதலைகளும் போரிடும் அழும்பில் என்னும் ஊருக்குத் தலைவன், அடங்காதவனாக எதிர்நின்று போரிடக்கருதி எழுந்தான்வெற்றியை விரும்பும் கோசருடைய அவைக்களமும் போர்க்களத்தின் நடுவிடமும் இல்லையாகஅவன் தோழனின் மார்பில் பகைவரின் அம்புகள் செருகி இருந்தனஅவை வண்டியின் குடத்தில் ஆரக்கால்கள் அமைந்திருப்பதுபோல் இருந்தனதோழனின் உயிர் உடலிலிருந்து நீங்காமல் ஊசலாடிக்கொண்டிருந்ததுதிண்ணையில் வைத்து விளையாட வேண்டிய மண்பாவைகளைத் திணிந்த மணலில் வைத்து விளையாடும் சிறுமிகள் அவன் புண்களை ஆற்றி அவனை நன்கு காத்துவந்தனர்இந்தக் காட்சியைக் கண்ட தலைவன், சினந்து, ஒளியுடன் விளங்கும் நீண்ட பசிய இலைகளையுடைய மணங்கமழும் தும்பைப் பூவால் தொடுக்கப்பட்ட மாலையை நெற்றியில் கட்டிக்கொண்டு போருக்குப் புறப்பட்டான்.

சிறப்புக் குறிப்புஒரு நீர்நாய் ஒரு முதலையுடன் போரிட்டுத் தோற்றால், மற்றொரு நீர்நாய் வென்ற முதலையோடு போரிடும்; போரில் ஒரு முதலை தோற்றால் மற்றொரு முதலை வென்ற நீர்நாயோடு போர்புரியும். இவ்வாறு மாறிமாறி முறையாகப் போரிடுவதைத்தான்ஊழ்மாறு பெயரும்என்று புலவர் குறிப்பிடுவதாக ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் கூறுகிறார்.

பெரும்போர் செய்து இறந்த வீரனுக்கு சாப்பண்னைப் பாடிப் பாணர் தம் கடன் கழித்தலைக் கூறும் பாடல்கள் பாண்பட்டு என்னும் துறையைச் சார்ந்தவையாகும்.

இப்பாடலில் பாணர்கள் சாப்பண்ணைப் பாடி வீரன் ஒருவனின் சாவைக் குறித்து வருத்தம் தெரிவிப்பதாகக் குறிப்பிடப்படவில்லைஆகவே, இப்பாடல் பாண்பாட்டு என்ற துறையைச் சார்ந்ததாகத் தெரியவில்லை. இப்பாடலில், வீரன் ஒருவனின் செயலைப் புலவர் புகழ்ந்து கூறியிருப்பதால், இப்பாடல் பாடாண் பாட்டு என்னும் துறையைச் சார்ந்தது என்று முடிவு செய்வதுதான் பொருத்தமாகத் தோன்றுகிறது.

 

அலகு 4

பதிற்றுப்பத்து எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு. இந்த நூலில் முதற்பத்தும், இறுதிப்பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. இந்த எண்பது பாடல்கள் இரண்டு சேரர் மரபைச் சேர்ந்த எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன. உதியஞ்சேரல் வழித்தோன்றல்களான ஐந்து சேர மன்னர்களும் அந்துவஞ்சேரல் இரும்பொறை வழித்தோன்றல்கள் மூவரும் அந்த 8 பேர்.

வகை

இந்நூற்பாக்கள் அகவாழ்வோடு இணைந்த புறவாழ்க்கையோடு தொடர்புடைய புறப்பொருள் பற்றிவை ஆகின்றன. சேர மன்னர்களின் காதற்சிறப்பு, கல்வித் திறம், மனத் திண்மை, புகழ் நோக்கு, ஈகைத் திறம், கலைஞர் காக்கும் பெற்றி ஆகிய பண்புகளையும் படை வன்மை, போர்த்திறம், குடியோம்பல் முறை, பகையரசர் பால் பரிவு, கவிஞரை காக்கும் பண்பு பெண்களை மதிக்கும் மாண்பு ஆகிய ஆட்சி மற்றும் பல்வகை திறன்களையும் சித்தரிக்கின்றன.

காலம்

இந்நூலின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகின்றது.அனைவராலும் இது கடைச்சங்ககால நூல் என்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கபிலர், பரணர் ஆகிய கடைச்சங்க புலவர்களால் இந்நூல் பாடப்பட்டுள்ளதால் இந்நூல் கடைச்சங்க கால நூல் என்று கூறுவதில் எந்த மாறுபாடும் இருக்கவாய்ப்பில்லை.

பதிற்றுப்பத்துப் பதிகங்கள்

பதிற்றுப்பத்தின் பதிகங்கள் காலத்தால் பிற்பட்டன. இவை ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் நூலின் காலத்துக்குப் பிற்பட்டனவாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றன. இந்நூலின் 10 பதிகங்களில் எட்டு பதிகங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இப்பதிகங்களுக்கு கட்டமைப்புச் சிறப்பு உண்டு. பதிகத்தின் முதற்பகுதி கவிதையாகவும் இரண்டாம் பகுதி உரைநடையாகவும் (colophon) உள்ளன. கவிதைப் பகுதி நூலின் பாக்களைப் போன்று ஆசிரிய நடையில் உள்ளது. இந்த பதிகங்களின் முதற்பகுதி சீர்மை மிக்க கவிதைகளாக உள்ளதால் இவற்றை எழுதி நூலைப் பதிப்பித்தவர் கவிஞராக இருந்திருக்கிறார் என்பது புலனாகிறது.

இப்பதிகங்கள் சோழமன்னர்களின் கல்வெட்டுகளிலும் செப்புப்பட்டையங்களிலும் முதலில் காணப்படும் மெய்கீர்த்திகளை ஒத்துள்ளன.முதன் முதலாக கி.பி.989ல் கல்வெட்டு அமைத்த சோழ மன்னன் முதலாம் இராசராசசோழன் என்று டி.வி சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகிறார். பதிற்றுப்பத்துப் பதிகங்கள் இதற்கு முன்னரே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவைகள் கல்வெட்டு மெய்கீர்த்திகளுக்கு முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டும் என்பதையும் அடிக்குறிப்பில் கண்ட கட்டுரையில் பண்டாரத்தார் அவர்கள் குறிப்பிடுகிறார்.

பதிற்றுப்பத்துப் பதிகங்களை கூர்ந்து நோக்கினால் சேர நாட்டை கடைச்சங்க காலத்தில் உதியஞ்சேரலாதன், அந்துவன் சேரலிரும்பொறை ஆகிய இரு சேர மரபினர் இரு இடங்களில் இருந்து ஆட்சி செய்தனர் என்பது தெளிவாகிறது. இரண்டாம் பத்தின் பாட்டுடைத்தலைவன் உதியன் சேரலின் மகன் நெடுஞ்சேரலாதன் என்பதும், மூன்றாம் பத்தின் பாட்டுடைத்தலைவன் உதியஞ்சேரலின் இரண்டாவது மகன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்பதும், நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது பத்துக்களின் பாட்டுடைத்தலைவர்களான களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச்சேரலாதன் ஆகிய மூவரும் உதியஞ்சேரலின் பெயரர்கள் என்பதுவும் தெளிவாகின்றன. காணாமல் போன முதல் பத்தின் பாட்டுடைத்தலைவன் உதியஞ் சேரலாக இருக்கலாம் என்று ஊகிக்கவும் முடிகிறது. ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் அந்துவன் சேரலிரும்பொறையின் மகன் செல்வக்கடுங்கோ வாழியாதன், எட்டாம் பத்தின் தலைவன் செல்வக்கடுங்கோவின் மகன் தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை, ஒன்பதாம் பத்தின் தலைவன் பெருஞ்சேரலிரும்பொறையின் மகனான இளஞ்சேரல் இரும்பொறை என்பன புலனாகின்றன. காணாமல் போன பத்தாம் பத்தின் தலைவன் யானைகட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை மீது பாடப்பட்டிருக்கலாம் என்றும் சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.

பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர் பதிகம் என்னும் பெயரால் தொகுப்புச் செய்திகளைத் தருகிறார். 10 பாடல்களில் சொல்லப்பட்டுள்ளனவும், அவர் அறிந்தனவும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. 10, 10 பாடல்களாகத் தொகுக்கப்பட்ட முறைமை இந்த நூலிலும், ஐங்குறுநூறு நூலிலும் காணப்படுகிறது. கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், [[முதுமொழிக்காஞ்சி, முதுமொழிக்காஞ்சி, ஐந்திணை ஐம்பது போன்றவற்றிலும் காணப்படுகின்றன. அவை தொகுப்பில் வேறுபடும் பாங்கினை அந்தந்த நூல்களில் காணலாம். பதிற்றுப்பத்து நூலில் ஒவ்வொரு பாடலுக்கும் தலைப்பு, ஐங்குறுநூறு நூலிலும், திருக்குறள் நூலிலும் 10 பாடல்களுக்கு ஒரு தலைப்பு என்று அமைக்கப்பட்டுள்ளது.

நான்காம் பத்தின் பாடல்கள் அந்தாதிப்பாடல்களாய் அமைந்துள்ளன.ஒரு பாட்டின் கடைசி வரி அடுத்த பாட்டின் முதல் வரியாக வருவதே அந்தாதியாகும். ஏடுத்துக்காட்டாக நான்காம் பத்தின் முதற்பாடல் கடைசி வரி போர்மிகு குருசில் நீ மாண்டனை பலவே. இப்பத்தின் அடுத்த பாடல் அதாவது 32 வது பாடல் முதல் வரி மாண்டனை பலவே போர்மிகு குருசில் நீ. மேற்கண்டவாறு விளக்கப்பட்டுள்ள அந்தாதித்தொடை இப்பத்தில் மட்டுமே காணப்படுகிறது.

ஆறாம் பத்து

ஆடு கோட்பாட்டுச் சேரலாதனை காககை பாடினியார் நச்செள்ளையார் பாடியது

தண்டாரணித்தில் பிடிபட்ட வருடை ஆடுகளைக் கொண்டுவந்து தன் தொண்டி நகர மக்களுக்கு வழங்கினான்.

பார்ப்பார்க்குக் குட்ட நாட்டிலிருந்த ஓர் ஊரை அதிலிருந்த கபிலைப் பசுக்களோடு வழங்கினான்.

வானவரம்பன் என்னும் பெயர் தனக்கு விளங்கும்படி செய்தான்

மழவர் பகையை எண்ணிக்கையில் சுருங்கும்படி செய்தான்

கைக்குழந்தையைப் போல் தன் நாட்டைப் பேணிவந்தான்.

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன் ஆவான். சங்கத் தமிழ் நூலான பதிற்றுப்பத்தின் ஆறாவது பத்து இவன் மீது பாடப்பட்டதுகாக்கை பாடினியார் நச்செள்ளையார் என்னும் புலவர் இப் பதிகத்தைப் பாடியுள்ளார்குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கும், வேளாவிக்கோமான் மகளுக்கும் இவன் மகனாகப் பிறந்தான். இவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற பெயரில் அரியணை ஏறினான். . இவன், அன்பு, அறம், அருள் ஆகிய நற்பண்புகள் உடையவனாக 35 ஆண்டுகள் நல்லாட்சி நடத்தி வந்தான்.

சேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனக் குறிப்பிடப்படும் எய்யும் வில்

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பற்றிப் பதிற்றுப்பத்து தரும் செய்திகள்

தந்தை குடக்கோ நெடுஞ்சேரலாதன். தாய் வேள் ஆவிக்கோமான் தேவி (மகள்). 

தண்டாரணியம் பகுதியில் பிடிபட்ட வருடை ஆடுகளைத் தன் தொண்டி நகருக்குக் கொண்டுவந்து பார்ப்பார்க்கு வழங்கச் செய்தான். (இதனால் இந்தச் சேரலாதனை, ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என வழங்கினர்.) அவற்றுடன் கபிலை எனப்படும் பசுமாடுகளையும் சேர்த்து வழங்கினான். தன் தந்தை ஆண்ட குடநாட்டில் ஓர் ஊரையும் சேர்த்து அவர்களுக்கு வழங்கினான். இவ்வாறு பார்ப்பார்க்கு வழங்கியதால் வானவரம்பன் எனத் தன் பெயர் விளங்கும்படிச் செய்தான்.  சான்றோர் எனப்படும் போர் வீரர்களுக்குக் கவசம் போல் விளங்கியதாலும் இவனைவானவரம்பன்என்றனர்

இவனது தலைநகர் நறவு என்னும் ஊர்

வில்லோர் மெய்ம்மறை,  சான்றோர் மெய்ம்மறை  என்றெல்லாம் இவன் போற்றப்படுவது இவனது போராற்றலை வெளிப்படுத்துகிறது..

போரிட்டு மழவர் வலிமையைக் குன்றும்படி செய்தான்

குழந்தையைப் பேணுவது போல நாட்டுமக்களைப் பாதுகாத்தான்

இவனது நாட்டுப் பரப்பு கீழைக்கடலையும் மேலைக்கடலையும் தொட்டது

மனைவியைப் பிரிந்து நெடுங்காலம் போரில் ஊடுபட்டிருந்தான்

வள்ளல் என இவனைப் பலரும் புகழ்ந்தனர்

இவனது செல்வம் பந்தர் என்னும் ஊரில் பாதுகாக்கப்பட்டிருந்தது

பாணர் விழாவில் முழவுக்கு ஏற்ப ஆடாத இவன் போர்க்கள முழவிசைக்கு ஆடுவான்.  போர்க்களத்தில் துணங்கை ஆடுவான்

இவனைப் பாடிய புலவர் காக்கை பாடினியார் என்னும் பெண்புலவர். எனவே பாடலுக்குப் பரிசாக, அவர் தனக்கு வேண்டிய அணிகலன்கள் செய்துகொள்வதற்காக ஒன்பதுகாநிறையுள்ள பொன்னை வழங்கினான். மற்றும் நூறு ஆயிரம் காணம் பணமும் கொடுத்தான். மேலும் அவரைத் தன் அவைக்களப் புலவராகவும் அமர்த்திக்கொண்டான்

 

 

பாட்டு - 51

துளங்குநீர் வியலகம் கலங்கக் கால்பொர

விளங்(கு)இரும் புணரி உருமென முழங்கும்

கடல்சேர் கானல் குடபுலம் முன்னிக்

கூவல் துழந்த தடந்தாள் நாரை

குவிஇணர் ஞாழல் மாச்சினைச் சேக்கும்

வண்(டு)இறை கொண்ட தண்கடல் பரப்பின்

அடும்(பு)அமல் அடைகரை அலவன் ஆடிய

வடுஅடு நுண்அயிர் ஊதை உஞற்றும்

தூஇரும் போந்தைப் பொழில்அணிப் பொலிதந்(து)

10 இயலினள் ஒல்கினள் ஆடும் மடமகள்

வெறிஉறு நுடக்கம் போலத் தோன்றிப்

பெருமலை வயின்வயின் விலங்கும் அருமணி

அரவழங்கும் பெரும்தெய்வத்து

வளைஞரலும் பனிப்பெளவத்துக்

15 குணகுட கடலோ(டு) ஆயிடை மணந்த

பந்தர் அந்தரம் வேய்ந்து

வண்பிணி அவிழ்ந்த கண்போல் நெய்தல்

நனைஉறு நறவின் நா(டு)உடன் கமழச்

சுடர் நுதல் மடநோக்கின்

20 வாள்நகை இலங்(கு)எயிற்(று)

அமிழ்துபொதி துவர்வாய் அசைநடை விறலியர்

பாடல் சான்று நீடினை உறைதலின்

வெள்வேல் அண்ணல் மெல்லியன் போன்மென

உள்ளுவர் கொல்லோநின் உணரா தோரே

25 மழைதவழும் பெருங்குன்றத்துச்

செயிர்உடைய அர(வு)எறிந்து

கடும்சினத்த மிடல்தபுக்கும்

பெரும்சினப்புயல் (று)அனையை

தாங்குநர், தடக்கை யானைத் தொடிக்கோடு துமிக்கும்

30 எஃ(கு)உடை வலத்தர்நின் படைவழி வாழ்நர்

மறம்கெழு போந்தை வெண்தோடு புனைந்து

நிறம்பெயர் கண்ணிப் பருந்(து) (று)அளப்பத்

தூக்கணை கிழித்த மாக்கண் தண்ணுமை

கைவல் இளையர் கையலை அழுங்க

35 மாற்(று)அரும் சீற்றத்து மாஇரும் கூற்றம்

வலைவிரித் தன்ன நோக்கலை

கடியையால் நெடுந்தகை செருவித் தானே. (51)

 

பெயர்: வடுவடு நுண்ணயிர்

துறை: வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு

வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்

தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்

 

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் மகிழ்ந்தாடித் திளைப்பதில் மென்மையானவன். என்றாலும் போரில் கடுமையானவன்.

1

குவி இணர் ஞாழல் மாச் சினைச் சேக்கும்,    5

விரிந்த கடல் பரப்பில் காற்று போரிடுவதால் அலை இடி போல முழங்கும். இப்படிப்பட்ட கடல் சேர்ந்த கானல்-நிலம் கொண்டது குடபுலம். இந்தக் குடபுலம் நோக்கித் தன் வலிமையெல்லாம் பயன்படுத்திப் பறந்துவந்த அகன்ற காலடிகளைக் கொண்ட நாரை அங்குள்ள ஞாழல் மரத்தில் தங்கும்.

2

அந்தக் கானல் நீரில் அடும்பு பூத்திருக்கும். அதில் வண்டுகள் தங்கியிருக்கும். நண்டு விளையாடும். அது விளையாடிய நுண்மணல் வடுப்பட்ட கோடுகளை ஊதைக் காற்று கலைக்கும்.

3

அங்குள்ள தூய்மையான பனைமரக் காட்டுச்சோலைக்கு அழகு சேர்க்கும்வண்ணம் தளர்நடை போட்டு மகளிர் விளையாடுவர். அந்த விளையாட்டு வெறியாட்டு விழாவில் ஒசிந்து ஆடுவது போல இருக்கும்.

4

பெரிய பெரிய மலைகளும் அங்கு உண்டு. அதில் ஆங்காங்கே மணிக்கற்கள் மின்னும். பாம்புகள் மேயும். கடல்-பெருந்-தெய்வக் கோயில்கள் உண்டு. அலைகள் வளைக்-கிளிஞ்சல்களைக் கொட்டி ஒலித்து அந்தத் தெய்வத்தை வழிபடும். மகளிர் கண்ணைப் போல் மலர்ந்திருக்கும் நெய்தல் அந்தரத்தில் பந்தல் போட்டது போல் பூத்திருக்கும். அதில் உள்ள தேன் நாடெல்லாம் மணக்கும்.

5

விறலியர்சுடரும் நெற்றி, மானைப்போன்று மருண்ட மடநோக்குப் பார்வை. வெண்மை விரியும் பற்களில் ஒளிரும் புன்னகை. அமிழ்தம் பொதிந்திருக்கும் சிவந்த வாய். அசைந்தாடும் நடைஆகியவற்றைக் கொண்டவர்கள் விறலியர். இவர்கள் இப்படிப்பட்ட பரப்பில் பாடிக்கொண்டு ஆடுவர். இந்த ஆட்டத்தைக் கண்டு களிப்பவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்ஆடலைக் கண்டு களிப்பவன் ஆதலின் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் எனப்பட்டான் என்பது ஒரு கருத்து.

6

இப்படி இவன் விறலியரோடு ஆட்டம் போடுவதால் மென்மையானவன் போலும் எனக் கருதி இவனை உணராதவர்கள் நினைக்கவும் கூடும். ஆனால் உண்மை வேறு.

7

மழைமேகம் தவழும் கெரிய குன்றத்தில் சினங்கொண்ட நாகப்பாம்பைக் கொன்று முழங்கும் இடியைப் போல பகைவரைத் தாக்குபவன் நீ.

இது பனம்பூ | சேர மன்னரும் படையினரும்
பனம்பூ மாலையைத் தலையில் சூடிக்கொள்வர்

8

உன் படையில் வாழ்பவர்கள் பகைவரின் பூணணிந்த யானைத் தந்தத்தை வாளால் வெட்டித் துண்டாடும் ஆற்றல் மிக்கவர்கள். அவர்கள் பனைம்பூ அணிந்துகொண்டு போரிடுவர். பகைவரின் உடலுறுப்புகளை மார்பகத்தில் மாலையாக அணிந்த பின்னர் பருந்துகளுக்கு இரையாக்குவர். அம்பு விட்டுப் பகைவரின் தண்ணுமைப் பறையைக் கிழிப்பர். சீற்றத்துடன் எமன் வலை விரித்தது போலப் படைவீரர்கள் புடைசூழப் பகைவரை நோக்குபவன் நீ. போர்க்களத்தில் மிகவும் கடுமையானவன்

 

 

பாட்டு - 52[

கொடிநுடங்கு நிலைய கொல்களிறு மிடைந்து

வடிமணி நெடுந்தேர் வேறுபுலம் பரப்பி

அருங்கலந் தாணஇயர் நீர்மிசை நிவக்கும்

பெருங்கலி வங்கம் திசைதிரிந் தாங்கு

மைஅணிந்(து) எழுதரும் ஆயிரம் பஃறோல்

மெய்புதை அரணம் எண்ணா(து) எஃகுசுமந்து

முன்சமத்(து) எழுதரும் வன்கண் ஆடவர்

தொலையாத் தும்பை தெவ்வழி விளங்க

உயர்நிலை உலகம் எய்தினர் பலர்பட

10 நல்அமர்க் கடந்தநின் செல்உறழ் தடக்கை

இரப்போர்க்குக் கவிதல் அல்லதை இரைஇய

மலர்(பு)அறி யாஎனக் கேட்டிகும் இனியே

சுடரும் பாண்டில் திருநாறு விளக்கத்து

முழாஇமிழ் துணங்கைக்குத் தழூஉப்புணை ஆகச்

15 சிலைப்புவல் ஏற்றின் தலைக்கை தந்துநீ

நளிந்தனை வருதல் உடன்றனள் ஆகி

உயவும் கோதை ஊரல்அம் தித்தி

ஈர்இதழ் மழைக்கண் பேர்இயல் அரிவை

ஒள்இதழ் அவிழ்அகம் கடுக்கும் சீறடிப்

20 பல்சில கிண்கிணி சிறுபர(டு) அலைப்பக்

கொல்புனல் தளிரின் நடுங்குவனள் நின்றுநின்

எறியர் ஓக்கிய சிறுசெங் குவளை

ஈஎன இரப்பவும் ஒல்லாள் நீஎமக்(கு)

யாரை யோஎனப் பெயர்வோள் கைஅதை

25 கதும்என உருத்த நோக்கமோ(டு) அதுநீ

பாஅல் வல்லாய் ஆயினை பாஅல்

யாங்குவல் லுநையோ வாழ்கநின் கண்ணி

அகல்இரு விசும்பில் பகல்இடம் தாணஇயர்

தெறுகதிர் திகழ்தரும் உழுகெழு ஞாயிற்(று)

30 உருபுகிளர் வண்ணம் கொண்ட

வான்தோய் வெண்குடை வேந்தர்தம் எயிலே. (52)

 

பெயர்: சிறுசெங்குவளை

துறை: குரவைநிலை

வண்ணம்: ஒழுகு வண்ணம்

தூக்கு: செந்தூக்கு

சேரலாதனின் கொடை, வெற்றி, இன்ப-நுகர்வு பற்றிக் கூறுதல் | மன்னவன் கைவண்மையோடும் வென்றியோடும் படுத்து அவன் காம  இன்பச் சிறப்புக் கூறுதல்   

 

பாடல் சொல்-பிரிப்புப் பதிவு

பதிற்றுப்பத்து ஆறாம் பத்து பாடல் 52

1

கொடி நுடங்கு நிலைய கொல் களிறு மிடைந்து,

வடி மணி நெடுந் தேர் வேறு புலம் பரப்பி,

அருங் கலம் தரீஇயர்நீர் மிசை நிவக்கும்

பெருங் கலி வங்கம் திசை திரிந்தாங்கு,

1

கொடி பறக்கும் யானைப்படை சென்றது. சேரலாதன் மணி கட்டிய தேரில் சென்றான். பொருள்களைக் கொண்டுவருவதற்காக வங்கக் கப்பல் கடலில் மிதப்பது போல இவன் தேரில் சென்றான்.

2

மை அணிந்து எழுதரு மா இரும் பல் தோல்                 5

மெய் புதை அரணம் எண்ணாதுஎஃகு சுமந்து,

முன் சமத்து எழுதரும் வன்கண் ஆடவர்

தொலையாத் தும்பை தெவ்வழி விளங்க,

உயர்நிலை உலகம் எய்தினர்பலர் பட,

நல் அமர்க் கடந்த நின் செல் உறழ் தடக் கை                10

2

கருநிற மை பூசிய மார்புக் கவசத் தோல் உடம்புக்குப் பாதுகாப்பாக இருக்கட்டும் என்று எண்ணாத போர் வீரர்கள் வேலைச் சுமந்துகொண்டு சேரலாதனுக்கு முன்னே சென்றனர். நாட்டை விரிவாக்கும் தும்பைப் போர் புரிய வந்த பகைவர் வீர-மரணம் எய்தி உயர்நிலை உலகத்துக்குச் செல்லும்படி சேரலாதன் போரிட்டான். பலர் போரில் மாண்டனர். சேரலாதன் வெற்றி பெற்றான்.

3

இரப்போர்க்குக் கவிதல் அல்லதைஇரைஇய

மலர்பு அறியா எனக் கேட்டிகும்இனியே,

3

சேரலாதன் மழை போல் கொடை வழங்கும் கையை உடையவன். இவன் கை வழங்குவதற்குக் கவியுமே அல்லாமல் வாங்குவதற்காக விரிந்து மலராது. மேலும் இவனைப் பற்றிச் சொல்கிறேன் கேளுங்கள்.

4

சுடரும் பாண்டில் திரு நாறு விளக்கத்து,

முழா இமிழ் துணங்கைக்குத் தழூஉப் புணை ஆக,

சிலைப்பு வல் ஏற்றின் தலைக் கை தந்துநீ                  15

நளிந்தனை வருதல்உடன்றனள் ஆகி;

4

தெருவில் பாண்டில்-விளக்கு எரியும் எண்ணெய்-மணத்தைப் பரப்பி வெளிச்சம் தந்துகொண்டிருக்கும். முழவு முழங்கும். மகளிரும் மைந்தரும் கைகளைக் கட்டுமரம் (புணை) போல் தழுவிக்கொண்டு துணங்கை ஆடுவர். ஆண்யானை பெண்யானையைத் தன் கையால் தழுவிக்கொண்டு செல்வது போலத் கைகளால் தழுவிக்கொண்டு ஆடுவர். சேரலாதன் இப்படித் தழூஉத்-துணங்கை ஆடினான். அதனைக் கண்ட அவன் மனைவி சினந்தாள்.     

5

உயலும் கோதைஊரல்அம் தித்தி,

ஈர் இதழ் மழைக்கண்பேர் இயல் அரிவை

ஒள் இதழ் அவிழகம் கடுக்கும் சீறடி,

பல் சில கிண்கிணி சிறு பரடு அலைப்ப,            20

கொல் புனல் தளிரின் நடுங்குவனள் நின்றுநின்

எறியர் ஓக்கிய சிறு செங் குவளை,

குவளைப் பூவை எறிந்து அடித்தாள்

5

அவள் தலைமயிரை விரித்துத் தொங்கவிட்டுக்கொண்டிருந்தாள். அவள் உடம்பில் சினத்தால் தோன்றிய வியர்வை (ஊரல்) முத்துக்கள் இருந்தன. மழை போன்று ஈரமான கண்கள். அரிவை பருவம். தாமரை இதழ் போன்ற காலடிகள். கணுக்காலில் ஒலி எழுப்பும் கிண்கிணி. கொட்டும் அருவி நீரால் தளர்ந்தாடும் தளிர் போன்று ஊடல் கொண்டு ஆடினாள். செங்குவளைப் பூவைப் பறித்து அவனை அடிப்பதற்காக ஓங்கினாள்.

6

'என இரப்பவும்ஒல்லாள்நீ எமக்கு

யாரையோ?' எனப் பெயர்வோள் கையதை:

கதுமென உருத்த நோக்கமொடுஅது நீ            25

பாஅல் வல்லாய் ஆயினை பாஅல்

யாங்கு வல்லுநையோவாழ்கநின் கண்ணி!-

6

சேரலாதன்அருள் புரிகஎன்று கெஞ்சினான். அவள் ஏற்கவில்லை. ‘நீ  எனக்கு யார்என்று சொல்லிக்கொண்டு அகன்றாள். அது அவளது ஒழுக்கலாறு (கை). இப்படிப் பிரிவால் துன்புறுபவன் சேரலாதன். இதனை எவ்வாறு தாங்கிக்கொள்வாயோ தெரியவில்லை. உன் தலைமாலை போந்தை வாழ்க.

7

அகல் இரு விசும்பில் பகல் இடம் தரீஇயர்;

தெறு கதிர் திகழ்தரும் உரு கெழு ஞாயிற்று

உருபு கிளர் வண்ணம் கொண்ட                30

வான் தோய் வெண்குடை வேந்தர்தம் எயிலே?      

7

பகலைத் தருவதற்காக வானத்தில் சுட்டெரிக்கும் ஞாயிறு உலாவுவது போல உன் வெண்கொற்றக் குடை பகைவேந்தர் கோட்டைகளில் ஒளி வீசும் பாங்குடையவன் நீ. வாழ்க நின் கண்ணி.  

 

துறை:குரவை நிலை

வண்ணம்:ஒழுகு வண்ணம்

தூக்கு:செந்தூக்கு

பெயர்:சிறு செங் குவளை              

காக்கைப் பாடினியார் நச்செள்ளையார்

ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் என்னும் சேர வேந்தனைப் பாடிய 10 பாடல்களில் ஒன்று. ஆறாம் பத்துகி.மு. காலத்துப் பாடல்

 

 

 

பாட்டு - 53[

வென்றுகலம் தாணஇயர் வேண்டுபுலத்(து) இறுத்தவர்

வாடா யாணர் நாடுதிறை கொடுப்ப

நல்கினை ஆகுமதி எம்என்(று) அருளிக்

கல்பிறங்கு வைப்பின் கட(று)அரை யாத்தநின்

தொல்புகழ் மூதூர்ச் செல்குவை யாயின்

செம்பொறிச் சிலம்பொ(டு) அணித்தழை தூங்கும்

எந்திரத் தகைப்பின் அம்(பு)உடை வாயில்

கோள்வல் முதலைய குண்டுகண் அகழி

வான்உற ஓங்கிய வளைந்துசெய் புரிசை

10 ஒன்னாத் தெவ்வர் முனைகெட விலங்கி

நின்னின் தந்த மன்எயில் அல்லது

முன்னும் பின்னும்நின் முன்னோர் ஓம்பிய

எயில்முகப் படுத்தல் யாவது வளையினும்

பிறி(து)ஆறு செல்மதி சினம்கெழு குருசில்

15 எழூஉப்புறம் தாணஇப் பொன்பிணிப் பலகைக்

குழூஉநிலைப் புதவின் கதவுமெய் காணின்

தேம்பாய் கடாத்தொடு காழ்கை நீவி

வேங்கை வென்ற பொறிகிளர் புகர்நுதல்

ஏந்துகை சுருட்டித் தோட்டி நீவி

20 மேம்படு வெல்கொடி நுடங்கத்

தாங்கல் ஆகா ஆங்குநின் களிறே. (53)

 

பெயர்: குண்டுகண் அகழி

துறை: செந்துறைப் பாடாண்பாட்டு

வண்ணம்: ஒழுகு வண்ணம்

தூக்கு: செந்தூக்கு

போரைத் தவிர்க்க வேறு வழியில் செல்லும்படிப் புலவர் சேரலாதனுக்குப் புலவர் அறிவுறுத்துகின்றார்.

1

அரிய பொருள்களை (கலம்உன் நாட்டுக்குக் கொண்டுவருவதற்காக நீ உன் படையுடன் நீ விரும்பிய நாட்டில் தங்கினாய். வாடாத புதுப்புது வருவாய் கொண்ட அந்த நாட்டு மக்கள் உனக்குத் திறை கொடுத்தனர். “எங்களுக்கு அருள் தந்து காப்பாயாகஎன்று வேண்டிக்கொண்டனர். நீ அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றினாய்.

2

கடல் சார்ந்த நிலத்தில் உள்ள கடற்று-வழியில் பழம்புகழ் பெற்ற உன் ஊருக்குத் (வஞ்சி மாநகர்) திரும்புவாய் ஆயின்,

3

வழியில் நீ எதிர்கொண்ட கோட்டை ஒன்று உண்டு. அது வானளாவ, வளைவாகக் கட்டப்பட்டது. செம்மைப்படுத்திப் பொறிக்கப்பட்ட காவல்-காட்டைக் (சிலம்புகொண்டது. எந்திரம் போல் உள்ளிருந்து அம்பு எய்யும் வாயில் கொண்டது. அதனைச் சுற்றி கொன்று தின்னும் முதலைகள் வாழும் ஆழமான அகழிகளைக் கொண்டது.

புதவம்
பெருங்கதவில் இருக்கும்
சிறுகதவு 

4

அங்கிருந்த பகைவர் படையை அழித்து நீ அதனை உனதாக்கிக்கொண்டாய். உனக்கு முன்னும் பின்னும் உன் முன்னோர் பாதுகாத்த கோட்டை முகப்பு இது போல் உண்டா? உன் ஊருக்குச் செல்லும்போது, சங்கு போல் வளைந்து வளைந்து சென்றாலும், வேறு வழியில் நீ உன் ஊருக்குத் திரும்பு. வெற்றியோடு சினம் கொண்ட குருசில் (செம்மல்) நீ.

5

வழியில் வேறு சில கோட்டைகளும் உண்டு. அவற்றின் கதவுகளுக்கு எழூஉ-மரத் தாழ்ப்பாள் இருக்கும். கதவுப் பலகை இரும்புப் பொன்னால் பொருத்தப்பட்டிருக்கும். அதில் புதவக் கதவும் உண்டு. உன் யானைப்படை மதம் கொண்டது போல் அந்த வழியே செல்லின், அங்குசக் கட்டுப்பாட்டை மீறி, வேங்கைப்புலியை வென்று சுருண்ட தன் கைகளை நீட்டி, வெற்றிக்கொடி பறக்கவேண்டும் என்னும் ஆசையால், தாங்கமுடியாத சினத்துடன் அவற்றையும் தாக்கும். இப்படிப் போர் மூளும் வழியை விட்டுவிட்டு வளைந்து வேறு வழியில் செல்வாயாக.  

 பாட்டு - 54

வள்ளியை என்றலின் காண்குவந் திசினே

உள்ளியது முடித்தி வாழ்கநின் கண்ணி

வீங்(கு)இறைத் தடைஅய அமைமருள் பணைத்தோள்

ஏந்(து)எழில் மழைக்கண் வனைந்துவரல் இளமுலைப்

பூந்துகில் அல்குல் தேம்பாய் கூந்தல்

மின்இழை விறலியர் நின்மறம் பாட

இரவலர் புன்கண் தீர நாள்தொறும்

உரைசால் நன்கலம் வரை(வு)இல வீசி

அனையை ஆகல் மாறே எனையதூஉம்

10 உயர்நிலை உலகத்துச் செல்லா(து) இவண்நின்(று)

இருநிலம் மருங்கின் நெடிதுமன் னியரோ

நிலந்தப விடூஉம் ஏணிப் புலம்படர்ந்து

படுகண் முரசம் நடுவண் சிலைப்பத்

தோமர வலத்தர் நாமம் செய்ம்மார்

15 ஏவல் வியம்கொண்(டு) இளையரொ(டு) எழுதரும்

ஒல்லார் யானை காணின்

நில்லாத் தானை இறைகிழ வோயே. (54)

 

பெயர்: நில்லாத்தானை

துறை: காட்சிவாழ்த்து

வண்ணம்: ஒழுகு வண்ணம்

தூக்கு: செந்தூக்கு

 

மன்னவன் கொடைச் சிறப்பும் தன் குறையும் கூறிவாழ்த்துதல்

1

நீ வள்ளல் ஆதலால் உன்னைக் காண வந்துள்ளேன். நீ நினைத்ததை முடிக்கும் ஆற்றல் மிக்கவன் நீ. நான் நினைத்துவந்ததை முடித்துவைக்க வேண்டும். நீயும் உன் குடிப்பூவும் (பனைநெடிது வாழவேண்டும்.

2

மூங்கில் போன்று பருத்த தோள், மழை போன்ற கண்முகத்துடன் அண்ணாந்து எழுந்து ஒப்பனையுடன் நிற்கும் இளமையான முலை, பூ வேலைப்பாடு கொண்ட மெல்லிய ஆடை உடுத்தியிருக்கும் மறை-உறுப்புக் கொண்ட இடை, தேன் பாய்ந்து மணக்கும் கூந்தல், மின்னும் அணிகலன்கள்ஆகியவற்றைக் கொண்ட விறலியர் உன் போர்த்திற மறத்தைப் பாராட்டிப் பாடுவர்.

3

இரவலரின் வறுமைத் துன்பம் தீர நீ நாள்தோறும் நல்ல நல்ல பொருள்களை அளவில்லாமல் வழங்கும் தன்மை உடையவன் ஆக வேண்டும்.

4

உயர்நிலை உலகத்துக்கு (மோட்சம்நீ செல்லாமல் இவ்வுலகத்திலேயே நீண்ட நாள் வழங்கிக்கொண்டே நிலைத்திருந்து வாழ வேண்டும்.

5

உனக்காகப் போரிடும் இளையர் போர்க்கள நடுவில் முரசு முழக்கத்துடன் நிலம் அழியும்படிப் பகைவர் கோட்டையில் ஏணி சாத்தி வெல்வர். தோமரம் எறிந்து அச்சம் உண்டாக்குவர். எதிரிகளைத் தமக்கு ஏவல் செய்யும்படி வணக்குவர். இப்படிப்பட்டவர்கள் பகைவர்களின் யானையைக் கண்டால் சும்மா இருப்பார்களா? அவர்கள் நில்லாத் தானை ஆயிற்றேவல்லான் எழு மழு தோமரம் மணி தண்டு இருப்பு உலக்கை – கம்பராமாயணம் யுத்த காண்டம் 4:37 54/2

 

பாடல் சொல்-பிரிப்புப் பதிவு

பதிற்றுப்பத்து ஆறாம் பத்து பாடல் 54

1

வள்ளியை என்றலின்காண்கு வந்திசினே,

உள்ளியது முடித்திவாழ்க நின் கண்ணி!

2

வீங்கு இறைத் தடைஇய அமை மருள் பணைத் தோள்,

ஏந்து எழில் மழைக்கண்வனைந்து வரல் இள முலை,

பூந் துகில் அல்குல்தேம் பாய் கூந்தல்,            5

மின் இழைவிறலியர் நின் மறம் பாட;

3

இரவலர் புன்கண் தீரநாள் தொறும்,

உரை சால் நன் கலம் வரைவு இல வீசி,

அனையை ஆகன்மாறேஎனையதூஉம்

4

உயர் நிலை உலகத்துச் செல்லாதுஇவண் நின்று,                10

இரு நில மருங்கின் நெடிது மன்னியரோ!-

5

நிலம் தப இடூஉம் ஏணிப் புலம் படர்ந்து,

படு கண் முரசம் நடுவண் சிலைப்ப,

தோமர வலத்தர் நாமம் செய்ம்மார்,

ஏவல் வியங்கொண்டுஇளையரொடு எழுதரும்     15

ஒல்லார் யானை காணின்,

நில்லாத் தானை இறை கிழவோயே!

 

துறை:காட்சி வாழ்த்து

வண்ணம்:ஒழுகு வண்ணம்

தூக்கு:செந்தூக்கு

பெயர்:நில்லாத் தானை  

 

காக்கைப் பாடினியார் நச்செள்ளையார்

ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் என்னும் சேர வேந்தனைப் பாடிய 10 பாடல்களில் ஒன்று. ஆறாம் பத்து

கி.மு. காலத்துப் பாடல்

 

பாட்டு - 55

ஆன்றோள் கணவ சான்றோர் புரவல

நின்நயந்து வந்தனென் அடுபோர்க் கொற்றவ

இன்இசைப் புணரி இரங்கும் பெளவத்து

நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்க்

கமழும் தாழைக் கானல்அம் பெருந்துறைத்

தண்கடல் படப்பை நல்நாட்டுப் பொருந

செவ்வூன் தோன்றா வெண்துவை முதிரை

வால்ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை

குடவர் கோவே கொடித்தேர் அண்ணல்

10 வாரார் ஆயினும் இரவலர் வேணடித்

தேரின் தந்(து)அவர்க்(கு) ஆர்பதம் நல்கும்

நகைசால் வாய்மொழி இசைசால் தோன்றல்

வேண்டுவ அளவையுள் யாண்டுபல கழியப்

பெய்துபுறம் தந்து பொங்கல் ஆடி

15 விண்டுச் சேர்ந்த வெண்மழை போலச்

சென்றா லியரோ பெரும அல்கலும்

நனம்தலை வேந்தர் தார்அழிந்(து) அலற

நீடுவரை அடுக்கத்த நாடுகைக் கொண்டு

பொருதுசினம் தணிந்த செருப்புகல் ஆண்மைத்

20 தாங்குநர்த் தகைத்த வொள்வாள்

ஓங்கல் உள்ளத்துக் குருசில்நின் நாளே. (55)

 

பெயர்: துஞ்சும் பந்தர்

துறை: செந்துறைப்பாடாண்பாட்டு

வண்ணம்: ஒழுகு வண்ணம்

தூக்கு: செந்தூக்கு

கடல் வணிகத்தால் பந்தர் துறைமுகம் பல வளங்களும் மிக்கதாக விளங்கியது. சேரலாதன் பந்தர் நாட்டைத் தனதாக்கிக்கொண்டான். மழவர் மக்களுக்குப் பாதுகாவலனாக விளங்கினான். பரிசில் பெறும் மக்களைத் தேடிச்சென்று அழைத்துவந்து பரிசில் வழங்கினான்.

1

பொறுமையே உருவானவளின் கணவ! போர்-மறவர்களைப் பாதுகாப்பவனே! உன்னை நாடி வந்திருக்கிறேன். அழிக்கும் போரில் வெற்றி கண்ட மன்னவனே!

2

பந்தர் துறைமுகம் கடலலை மோதும் ஊர். நல்ல கப்பல் வணிகத்தால் பெற்ற செல்வம் பயன்படுத்த முடியாமல் தூங்கும் ஊர் பந்தர். தாழம்பூ கமழும் கானல் பகுதியில் அமைந்திருக்கும் துறைமுக ஊர் இது. இந்தப் பந்தர் நகரைத் தலைநகராகக் கொண்ட நாட்டைப் போரிட்டு வென்று தனதாக்கிக்கொண்டவனே!

3

செவ்வூன்சிவந்த புலால் உணவு | வாலூன்வெண்ணிறப் புலவு உணவு. | முதிரைதுவரைமழவர் குடிமக்கள் புலால் உண்ணாமல் துவரம்பருப்புத் துவையலும், அரிசியாகிய வெள்ளைக் கறியும் உண்ணும் மக்கள். இந்த மழவர்-குடி மக்களுக்கு இந்தச் சேரலாதன் பாதுகாவலனாக விளங்கினான். இவன் குடநாட்டு அரசன். கொடி கட்டிய தேரில் செல்லும் பெருமகன்.

4

இரவலர் யாரும் இவனை நாடி வராத காலத்தில் இவனே இரவலரைத் தேடிச் சென்று தோரில் ஏற்றிக் கொண்டுவந்து நிறைந்த செல்வத்தைப் பரிசாக வழங்கி அனுப்பிவைக்கும் பண்பாளன். பரிசில் வழங்குவான் என்று நம்பி இரவலர் செல்லும், புகழ் பெற்ற பெருமகன்.  

5

வேண்டிய அளவு மழையை பொழிந்துகொண்டு எங்கும் திரிந்து கழிந்த பின்னர், வெண்ணிறம் பெற்று, மலையில் (விண்டுதவழும் வெண்ணிறப் பனிமழை போல விளங்கும் பெருமகனே!

6

நாலாப் பக்கமும், நாள்தோறும், வேந்தர்கள் தம் குடிப்பூ மாலை அழிந்து ஓலமிடும்படி, மலைநாட்டைக் கைப்பற்றினாய். பின் சினம் தணிந்தாய். இப்படிப் போரிடுவதை விரும்பும் ஆண்டகை இவன். தாங்கும் மக்களைப் பாதுகாக்கும் வாள் ஏந்தி, ஓங்கி உயர்ந்த உள்ளத்தோடு வாழும் குருசில் இவன். இவனது வாழ்நாள் பெருகட்டும்.  

 

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு

வண்ணம்:ஒழுகு வண்ணம்

தூக்கு:செந்தூக்கு

பெயர்:துஞ்சும் பந்தர்          

 

காக்கைப் பாடினியார் நச்செள்ளையார்

ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் என்னும் சேர வேந்தனைப் பாடிய 10 பாடல்களில் ஒன்று. ஆறாம் பத்து

கி.மு. காலத்துப் பாடல்

 பாட்டு - 56

விழவுவீற்(று) இருந்த வியலுள் ஆங்கண்

கோடியர் முழவின் முன்னர் ஆடல்

வல்லான் அல்லன் வாழ்கஅவன் கண்ணி

வலம்படு முரசம் துவைப்ப வாள்உயர்த்(து)

இலங்கும் பூணன் பொலங்கொடி உழிஞையன்

மடம்பெரு மையின் உடன்றுமேல் வந்த

வேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சி

வீந்(து)உகு போர்க்களத்(து) ஆடும் கோவே. (56)

 

பெயர்: வேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சி

துறை: ஒள்வாள் அமலை

வண்ணம்: ஒழுகு வண்ணம்

தூக்கு: செந்தூக்கு

 

பாட்டு - 57

ஓடாப் பூட்கை மறவர் மிடல்தப

இரும்பனம் புடையலொடு வான்கழல் சிவப்பக்

குருதி பனிற்றும் புலவுக்களத் தோனே

துணங்கை ஆடிய வலம்படு கோமான்

மெல்லிய வகுந்தில் சீறடி ஒதுங்கிச்

செல்லா மோதில் சில்வளை விறலி

பாணர் கையது பணிதொடை நரம்பின்

விரல்கவர் பேரியாழ் பாலை பண்ணிக்

குரல்புணர் இன்னிசைத் தழிஞ்சி பாடி

10 இளம்துணைப் புதல்வர் நல்வளம் பயந்த

வளங்கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கை

ஆன்ற அறிவின் தோன்றிய நல்லிசை

ஒண்நுதல் மகளிர் துனித்த கண்ணினும்

இரவலர் புன்க ணஞ்சும்

15 புர(வு)எதிர் கொள்வனைக் கண்டனம் வரற்கே. (57)

 

பெயர்: சில்வளை விறலி

துறை: விறலியாற்றுப்படை

வண்ணம்: ஒழுகு வண்ணம்

தூக்கு: செந்தூக்குதெருவிலும் போர்க்களத்திலும் ஆடும் கோட்பாடு கொண்டவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்.

 

 

1

தெருவில் யாழிசைக் கோடியர் முழவு முழக்கும் தாள ஒலியுடன் ஆடும் விழா நிகழும். அவர்களோடு சேர்ந்து ஆடுபவன் மட்டும் அல்லன், சேரலாதன். அவன் தலைமாலை (பனம்பூவாழ்க.

2

போர்க்களத்திலும் ஆடுபவன் சேரலாதன். | போர்க்களத்தில் வெற்றி முரசம் முழங்க ஆடுபவன். வெற்றி வாளை உயர்த்திக்கொண்டு ஆடுபவன். கோட்டைகளைத் தாக்கி வென்ற உழிஞைப் பூவையும், மின்னும் போர்-அணிகலன்களையும் சூடிக்கொண்டு ஆடுபவன்வாழ்ச்சி என்பது உடம்பில் வாழும் பழக்கம்அது மெய்ம்மறந்து தானே இயங்கும் வாழ்ச்சி. வேந்தர்கள் போர்களத்தில் சாய்ந்து கொட்டிக்கிடக்கும்படிச் செய்யும் வாழ்ச்சி உடையவன் சேரலாதன். இப்படிப்பட்ட வாழ்ச்சியுடன் போர்க்களத்தில் ஆடும் கோமகன் ஆதலால், இவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆயினான் என்க. மனைவி ஊடும் கண்ணின் சினத்துக்கு அஞ்சுவதை விட, சேரலாதன் இரவலர் படும் துன்பத்துக்கே பெரிதும் அஞ்சுவான். மனைவியின் சினத்தைத் தணிப்பதை விட நாடி வந்தவர் துன்பத்தைப் போக்குவதில் சேரலாதன் பெரிதும் ஈடுபாடு கொண்டவன்.

1

சேரலாதன் போர்க்களத்தில் இருக்கிறான். காயம் பட்டோர் குருதி நடுங்கவைக்கும் போர்க்களம் அது. தலையில் பனம்பூ மாலை அணிந்திருக்கிறான். காலில் உயர்ந்த வீரக்கழல் அணிந்திருக்கிறான். புறமுதுகிடாத கோட்பாட்டினை உடைய பகைவீரர்களின் வலிமையைத் தகர்த்துப் போரிட்டுக்கொண்டிருக்கிறான்

 

2

நம்முடன் சேர்ந்து துணங்கை ஆடிய கோமகன் அவன். மென்மையான தளிர் (வகுந்தில்போன்ற சிறிய காலடிகளை மெல்ல மெல்ல வைத்து போர்க்களத்தில் அவனைக் காணச் செல்லலாமா, விறலி. நம் கையிலுள்ள வளையல்கள் சில ஒலிக்கும்படிச் செல்லலாமா, விறலி.

3

பாணர் கையிலுள்ள பேரியாழில் நம் வறுமை தோன்றப் பாலைப்பண் பாடிக்கொண்டு செல்லலாமா, விறலி. தோற்றவர் மேல் வாள் வீசாத இவனது தழிஞ்சிப் போரைப் பாராட்டிப் பாடிக்கொண்டு செல்லலாமா, விறலி.

4

சேரலாதனுக்கு இரண்டு ஆண்பிள்ளைகள் (இளந்துணைப் புதல்வர்). அவன் மனைவி மீண்டும் கருவுற்றிருக்கிறாள். அவள் அடக்கமே உருவானவள். பரந்த அறிவால் புகழ் பெற்றவள். அவள் ஊடல் கொள்ளும் பார்வையைப் பொருட்படுத்தாமல், தன்னை நாடி வந்தவரின் துன்பத்தைப் போக்குவதிலேயே கண்ணும் கருத்துமாய் இருப்பவன். அவனைக் கண்டுவருவதற்குச் செல்லலாமா, விறலி.  

 

 

8

ஆடுக விறலியர் பாடுக பரிசிலர்

வெண்தோட்(டு) அசைத்த ஒண்பூங் குவளையர்

வாள்முகம் பொறித்த மாண்வரி யாக்கையர்

செல்உறழ் மறவர்தம் கொல்படைத் தாணஇயர்

இன்(று)இனிது நுகர்ந்தனம் ஆயின் நாளை

மண்புனை இஞ்சி மதில்கடந்(து) அல்ல(து)

உண்குவம் அல்லேம் புகாஎனக் கூறிக்

கண்ணி கண்ணிய வயவர் பெருமகன்

பொய்படு(பு) அறியா வயங்குசெந் நாவின்

10 எயில்எறி வல்வில் ஏவிளங்கு தடக்கை

ஏந்(து)எழில் ஆகத்துச் சான்றோர் மெய்ம்மறை

வான வரம்பன் என்ப கானத்துக்

கறங்(கு)இசைச் சிதடி பொரிஅரைப் பொருந்திய

சிறிஇலை வேலம் பெரிய தோன்றும்

15 புன்புலம் வித்தும் வன்கை வினைஞர்

சீர்உடைப் பல்பக(டு) ஒலிப்பப் பூட்டி

நாஞ்சில் அடிய கொழுவழி மருங்கின்

அலங்குகதிர்த் திருமணி பெறூஉம்

அகன்கண் வைப்பின் நாடுகிழ வோனே. (58)

 

பெயர்: ஏவிளங்கு தடக்கை

துறை: செந்துறைப்பாடாண்பாட்டு

வண்ணம்: ஒழுகு வண்ணம்

தூக்கு: செந்தூக்கு

 

இன்று மறவர்களை வென்றபின்னர் உண்டோம். நாளை கோட்டையைக் கைப்பற்றிய பின்னர் அல்லாமல் உண்ணமாட்டோம்என்று வஞ்சினம் கூறும் மறவர்படையைக் கொண்டவன் இந்தச் சேரலாதன்.

1

விறலியரே, ஆடுங்கள். பரிசில் வேண்டுவோரே, சேரலாதனைப் போற்றிப் பாடுங்கள்.

2

வெண்ணிறப் பனை-ஓலையுடன் குவளைப் பூவையும் சேர்த்துக் கட்டிய மாலையை அணிந்துகொண்டு, உடம்பில் வாள்-காயம் பட்ட மறவர் படையைக் கொன்று அதன் பயனை இன்று இன்பமாக நுகர்ந்தோம் (அனுபவித்தோம்). நாளை, மண்ணாலேயே கட்டிய கோட்டையை வென்ற பின்னர் அல்லாமல் உண்ணமாட்டோம் என்று எண்ணி உறுதிமொழி எடுத்துக்கொண்டு அவன் மறவர் படை போருக்கு எழும். இத்தகைய வலிமையாளர் படையைக் கொண்டவன் சேரலாதன்.   

3

போர்மறவராகிய சான்றோர்களுக்கு முன்னே சென்று அவர்களுக்குக் கவசமாகப் போரிடுபவன் இவன். வேல் வீசியும், வில்லால் அம்பு எய்தும், சொன்ன சொல் பொய் படாமல் போரிட்டு வெல்பவன். இவனை வானவரம்பன் என்று கூறுவர்.

 

 

4

சிறிய இலைகளுடன் கூடிய, கரையான் தின்று பொறிந்தபோன வேலமரங்கள் கொண்ட புன்புலம் இவன் நாடு. வலிமையான கைகளைக் கொண்ட உழவுத் தொழிலாளிகள் எருதுகளைப் பூட்டி அந்த நிலத்தை உழுவர். அப்போது கலப்பையிலுள்ள கொழு கிண்டிய மண்ணில் விரிந்த கதிர்களுடன் மணிக்கற்கள் கிடைக்கும். அப்படிக் கிடைக்கும் அகன்ற நிப்பரப்பினைக் கொண்டது இவன் நாடு.   

 

1

மாசி படர்ந்து, பெரிதும் குளிரும் மாதம் மாசி மாதம். இந்த மாதத்தில் பகல்நேரம் நெடிது நில்லாது இரவுப்பொழுது நீண்டிருக்கும். இந்தக் காலத்தில் பனி படர்ந்த காட்டு வழியில் செல்லும் யாழிசைப் பாணன் மகிழும்வண்ணம் இருளைச் சீய்த்து ஒளியைப் பரப்பிக்கொண்டு கதிரவன் கிழக்குத்திசையில் தோன்றுவது போல இந்தச் சேரலாதன் தோன்றினான்

2

இரந்து உண்டு வாழ்க்கை நடத்தும் சிறுகுடி மக்களை பெருகிய வளத்துடன் வாழச்செய்வதற்கென்றே தோன்றினான். உலக மக்களைக் காப்பாற்றும் கற்புக் கடன் பூண்டோர் வில்லாளிகள். அந்த வில்லாளிகளுக்குப் பாதுகாவலனாக இந்தச் சேரலாதன் விளங்கினான். வெற்றிச்செல்வம் படைத்தவர்களுக்கெல்லாம் வெற்றிச்செல்வம் படைத்தவனாக விளங்கினான். இவனை வந்தடைந்த நண்பர்களுக்கெல்லாம் அரணாக விளங்கினான்.

3

இவனுக்குப் புலவர் அறிவுரை கூறுகிறார். “அறியாமல் உன்னை எதிர்த்து, வலிமைக் குறைவினால் உன்னைப் பணிந்து, பகைவர் உனக்குத் திறை தருவார்களேயாயின், நீ சினம் தணிந்து அவர்களுக்கு வாழ்வு தரவேண்டும்”.

4

அத்துடன், “மலை, கடல் முதலான நாலாத் திசைப்பக்கங்களிலிருந்தும் உனக்குக் கிடைக்கும் பலவகையான பண்டங்கள் அனைத்தையும் பகுத்து அனைவருக்கும் வழங்கும் அறவழியில் குறுக்கீடு ஏதும் நேராவண்ணம் பாதுகாத்து வரவேண்டும். உன் தோள்-வலிமை பெருமை மிக்க நல்ல பண்டங்களை பிறருக்கு வழங்குவதாக இருக்க வேண்டும். இப்படி நாட்டைக் காப்பாற்றுதல் உன் கடமையாக உள்ளது”.

 

பாடல் சொல்-பிரிப்புப் பதிவு

பதிற்றுப்பத்து ஆறாம் பத்து பாடல் 59

1

பகல் நீடு ஆகாதுஇரவுப்பொழுது பெருகி,

மாசி நின்ற மா கூர் திங்கள்,

பனிச் சுரம் படரும் பாண்மகன் உவப்ப,

புல் இருள் விடியபுலம்பு சேண் அகல,

பாய் இருள் நீங்கபல் கதிர் பரப்பி,          5

ஞாயிறு குணமுதல் தோன்றியாஅங்கு,

2

இரவல் மாக்கள் சிறுகுடி பெருக,

உலகம் தாங்கிய மேம்படு கற்பின்

வில்லோர் மெய்ம்மறைவீற்று இருங் கொற்றத்துச்

செல்வர் செல்வசேர்ந்தோர்க்கு அரணம்!-    10

3

அறியாது எதிர்ந்துதுப்பில் குறையுற்று,

பணிந்து திறை தருபநின் பகைவர்ஆயின்;

சினம் செலத் தணியுமோவாழ்கநின் கண்ணி!-

4

பல் வேறு வகைய நனந் தலை ஈண்டிய

மலையவும் கடலவும் பண்ணியம் பகுக்கும்              15

ஆறு முட்டுறாஅதுஅறம் புரிந்து ஒழுகும்

நாடல் சான்ற துப்பின் பணைத் தோள்,

பாடு சால் நன் கலம் தரூஉம்

நாடு புறந்தருதல் நினக்குமார் கடனே.             

 

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு

வண்ணம்:ஒழுகு வண்ணம்

தூக்கு:செந்தூக்கு

பெயர்:மா கூர் திங்கள்      

 

காக்கைப் பாடினியார் நச்செள்ளையார்

ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் என்னும் சேர வேந்தனைப் பாடிய 10 பாடல்களில் ஒன்று. ஆறாம் பத்து

கி.மு. காலத்துப் பாடல்

 

முண்டகம் என்னும் நேந்திரவாழை வளம் ஆண்டு முழுவதும் விளைந்து புது வருவாய் தந்து வழிப்போக்கர்கள் எல்லாம் உண்ணும்படிச் செய்வது அவன் நாட்டிலுள்ளநறவுத் துறைமுக நகரம். பாண்மகளே! அங்குத் தங்கியிருக்கும் சேரலாதனிடம் நாம் செல்லலாமேஎன்று கூறிப் புலவர் மன்னனின் கொடைத்திறத்தைப் போற்றுகிறார்.

1

சேரலாதன் படை பகைவரைக் கொல்லும் தொழிலை மேற்கொண்டிருக்கும். இவனோ பகைவரை இடறித் தள்ளும் இகல் வினை செய்துகொண்டிருப்பான். என்றாலும் நாம் அவனிடம் சென்றால் தடையில்லாமல் கொடுத்துக்கொண்டே இருப்பான். பாண்மகளே! அவனைக் காண நாம் செல்லலாமே.  

2

மொய்க்கும் இனிய சுவையுள்ள சதைப்பற்றுச் சேறு உடையதாய், வாளால் அறுக்கமுடியாத அடுமரம் கொண்டதாய், விளங்கும் பழம் முண்டைப்பழம் (முண்டம்-பழம், நேந்திரம்பழம், நேந்திரவாழைப் பழம்). வழிநடை மேற்கொள்பவர்களுக்கு உணவாகி அவர்களைத் தடுத்து நிறுத்துவது அந்தப் பழம். இந்தப் பழம் காலமெல்லாம் விளைந்து பலன்தரும் நாடு இவன் நாடு. பலன் தரும் ஊர் நறவு.

3

சேரலாதன் இப்போது நறவு என்னும் துறைமுகத்தில் இருக்கிறான். நறவு என்பது உண்டு துய்க்கும் கள் வகை. துவ்வா நறவு என்பது நறவு என்னும் ஊர். வில்லாளிகளாகிய அவனது படை மறவர்கள் அம்பு தொடுப்பதை விட்டுவிட்டு அந்த நகரில் உள்ளனர். கடலிலிருந்து வரும் ஊதைக் காற்றில் நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள். பாண்மகளே, நாம் அங்குச் செல்லலாமே.

 

பாடல் சொல்-பிரிப்புப் பதிவு

பதிற்றுப்பத்து ஆறாம் பத்து பாடல் 60

1

கொலை வினை மேவற்றுத் தானைதானே

இகல் வினை மேவலன்தண்டாது வீசும்:

செல்லாமோதில்பாண்மகள்காணியர்-

2

மிஞிறு புறம் மூசவும் தீம் சுவை திரியாது,

அரம் போழ்கல்லா மரம் படு தீம் கனி                 5

அம் சேறு அமைந்த முண்டை விளை பழம்

ஆறு செல் மாக்கட்கு ஓய் தகை தடுக்கும்,

மறாஅ விளையுள் அறாஅ யாணர்,

3

தொடை மடி களைந்த சிலையுடை மறவர்

பொங்கு பிசிர்ப் புணரி மங்குலொடு மயங்கி,               10

வரும் கடல் ஊதையின் பனிக்கும்,

துவ்வா நறவின் சாய் இனத்தானே.     

 

துறை:விறலி ஆற்றுப்படை

வண்ணம்:ஒழுகு வண்ணம்

தூக்கு:செந்தூக்கு

பெயர்:மரம் படு தீம் கனி                

 

காக்கைப் பாடினியார் நச்செள்ளையார்

ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் என்னும் சேர வேந்தனைப் பாடிய 10 பாடல்களில் ஒன்று. ஆறாம் பத்து

கி.மு. காலத்துப் பாடல்

 

அலகு -5

பெரும்பாணாற்றுப்படை - பத்துப்பாட்டு

 

பாடியவர் :– கடியலூர் உருத்திரங் கண்ணனார்
பாடப்பட்டவன் :– தொண்டைமான் இளந்திரையன்
திணை :– பாடாண் திணை
துறை :– ஆற்றுப்படை
பாவகை :– அகவல்பா (ஆசிரியப்பா)
மொத்த அடிகள் :– 500
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
இசைவாணனை அக்காலத்தில் பாணன் என்றனர். பாணனது குடும்பத்திலுள்ள அனைவரும் இசைத்தமிழை வளர்ப்பதில் இன்பம் கண்டனர். வறுமைக் காலத்தில் அவர்களது பிழைப்பே இசையால்தான் நடந்துவந்தது. பேரியாழ் மீட்டுபவன் பெரும்பாண். பொரும்பாணன் தொண்டைமானிடம் ஆற்றுப்படுத்தப்படுகிறான். அவன் தன் யாழை இடப்பக்கத் தோளில் மாட்டிக்கொண்டு செல்கிறான். அவனது யாழின் உறுப்புக்கேஃ எப்படி இருந்தன என்பதை இந்தப் பகுதி காட்டுகிறது.

பாணனது யாழின் வருணனை (1-16)

அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி
பகல் கான்று எழுதரு பல் கதிர் பருதி
காய் சினம் திருகிய கடும் திறல் வேனில்
பாசிலை ஒழித்த பராஅரை பாதிரி
வள் இதழ் மா மலர் வயிற்று இடை வகுத்ததன் . . . .[5]

உள்ளகம் புரையும் ஊட்டுறு பச்சை
பரி அரை கமுகின் பாளை அம் பசும் பூ
கரு இருந்து அன்ன கண்கூடு செறி துளை
உருக்கி அன்ன பொருத்துறு போர்வை
சுனை வறந்து அன்ன இருள் தூங்கு வறு வாய் . . . .[10]

பிறை பிறந்து அன்ன பின் ஏந்து கவை கடை
நெடும் பணை திரள் தோள் மடந்தை முன்கை
குறும் தொடி ஏய்க்கும் மெலிந்து வீங்கு திவவின்
மணி வார்ந்து அன்ன மா இரு மருப்பின்
பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின் . . . .[15]

தொடை அமை கேள்வி இட வயின் தழீஇ . . . .[1 - 16]

×

அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப்
பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பருதி
காய்சினந் திருகிய கடுந்திறல் வேனிற்
பாசிலை யழித்த பராஅரைப் பாதிரி
வள்ளிதழ் மாமலர் வயிற்றிடை வகுத்தத . . . .[5]

னுள்ளகம் புரையு மூட்டுறு பச்சைப்
பரியரைக் கமுகின் பாளையம் பசும்பூக்
கருவிருந் தன்ன கண்கூடு செறிதுளை
யுருக்கி யன்ன பொருத்துறு போர்வைச்
சுனைவறந் தன்ன விருடூங்கு வறுவாய்ப் . . . .[10]

பிறைபிறந் தன்ன பின்னேந்து கவைக்கடை
நெடும்பணைத் திரடோண் மடந்தை முன்கைக்
குறுந்தொடி யேய்க்கும் மெலிந்துவீங்கு திவவின்
மணிவார்ந் தன்ன மாயிரு மருப்பிற்
பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின் . . . .[15]

றொடையமை கேள்வி யிடவயிற் றழீஇ

பொருளுரை:

கேள்வி (யாழ்) - நாம் எடுத்துக்கொண்ட பாடலில் கூறப்படும் பாணன் தனது யாழை இடப்பக்கம் தொங்கவிட்டுக் கொண்டிருந்தான். பாடல்களைப் பாடும்போது இசையைத் தொடுத்தமைத்துக் கேட்கச் செய்வதால் யாழைத் தொடையமை கேள்வி என்றனர். வயிறு - பாதிரிமரம் வேனில் காலத்தில் தன் பசுமையான இலைகள் உதிர்ந்து போய் பூத்துக் குலுங்கும் காட்சி யாழின் வயிற்றுப் பகுதியில் வரையப்பட்டிருந்தது. வேனில் காலத்தின் மலர்ச்சியைக் காட்டிக் கொண்டு தொடங்கும் இந்தப் பாடல் பாணன் வாழ்வும் மலரப் போவதைக் குறிப்பால் உணர்த்துகின்றது. அகன்ற பெரிய விசும்பு. அதில் பாய்ந்து கொண்டிருந்த இருளை யெல்லாம் குடித்துவிட்டுப் பகலை வீசிக்கொண்டு பல்கதிர் பருதி எழுந்து கொண்டிருந்த வேனில் காலம் அது. கதிரவனின் வாயில் சினம். அது பாதிரியின் இலைகளை உதிர்த்தது. ஆனால் அதில் மலர்ந்த பூக்கள் வெயிலின் சின வலிமையைத் திருகி வீசி எறிந்து கொண்டிருந்தன. பாதிரிப்பூ பெரியது. வளமான இதழ்களைக் கொண்டது. கண்கூடு செறிதுளை - பாக்குப் பாளையின் இளம்பூக்கள் கருவிலிருந்து வெளிவருவதுபோல் யாழின் நரம்புக்கண் கூடும் துளைகள் நரம்புகளால் முடுக்கப்பட்டிருந்தன. அடி - பருத்திருக்கும் பச்சைப் பாக்குமரம் போல மீட்டும்போது யாழ் குந்தும் அடிப்பகுதி இருக்கும் போலும். போர்வை - உருகிய நீர்மம் பொருளோடு பொருந்தி வழிவது போல் யாழின்மீது போர்த்தப்பட்டிருந்த போர்வை யாழின் உருவத்தைப் புலப்படுத்துவது போல் அதன்மீது படிந்து கிடந்தது. வறுவாய் - அதன் திறந்த வாயானது நீர் இல்லாமல் வறண்டுபோன சுனைபோல இருண்டு காணப்பட்டது. சவைக்கடை - காய்ந்து போயிருந்த அதன் வளைவுத் தண்டு பிறந்த நாளில் தெரியும் பிறை நிலாவைப் போல வளைந்திருந்தது. திவவு - நீண்ட மூங்கில்போல் திரண்டிருக்கும் தோளையுடைய பருவப் பெண்ணின் முன்கையில் இருக்கும் வளையல்களைப் போல யாழின் திவவுப் பூண்கள் அமைந்திருந்தன. நரம்பு - மணியை நீட்டி வைத்தாற் போல நரம்பைக் கட்டும் அதன் சிற்றாணிக் குச்சிகள் யாழில் செருகப்பட்டிருந்தன. முறுக்கு இல்லாமல் பொன்னில் நீட்டிய கம்பி போன்ற நரம்புகள் யாழில் தொய்வு இல்லாமல் இறுக்கிக் கட்டப்பட்டிருந்தன. விளக்கம் விபுலானந்த அடிகள் எழுதியுள்ள யாழ்நூலில் காணலாம்.

பாணனது வறுமை (17-22)

வெம் தெறல் கனலியொடு மதி வலம் திரிதரும்
தண் கடல் வரைப்பில் தாங்குநர் பெறாது
பொழி மழை துறந்த புகை வேய் குன்றத்து
பழு மரம் தேரும் பறவை போல . . . .[20]

கல்லென் சுற்றமொடு கால் கிளர்ந்து திரிதரும்
புல்லென் யாக்கை புலவு வாய் பாண . . . .[17 - 22]

×

வெந்தெறற் கனலியடு மதிவலந் திரிதருந்
தண்கடல் வரைப்பிற் றாங்குநர்ப் பெறாது
பொழிமழை துறந்த புகைவேய் குன்றத்துப்
பழுமரந் தேரும் பறவை போலக் . . . .[20]

கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்து திரிதரும்
புல்லென் யாக்கைப் புலவுவாய்ப் பாண!

பொருளுரை:

ஆற்றுப்படுத்தும் புலவர் பாணனே கேள் என்று கூறத்தொடங்குகிறார். உன் உடம்பு புல்லின் துரும்பு போல இளைத்துள்ளது. இந்த நிலையில் உன் சுற்றத்தாரோடு கால்போன பக்கமெல்லாம் திரிகிறாய். உன் வாயிலிருந்து புலவு வாடை வருகிறது. உண்ண உணவு இல்லையே என்று பல்லைக்கூடத் துளக்க மறந்துவிட்டாய் போலும். ஞாயிறும் திங்களும் வலம் வந்து கொண்டிருக்கும் கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் உன்னையும். உன் குடும்பத்தையும் தாங்கிப் பாதுகாக்கக்கூடியவர் யார் என்று தெரியாமல் திரிந்து கொண்டிருக்கிறாய். பழுத்திருக்கும் மரத்தைத் தேடும் பறவைகள் போல் அலைகிறாய். மழை பெய்யாமல் மழையைப் போலப் புகைமூட்டம் போட்டிருக்கும் மலைகளில் உள்ள மரங்கள் பழம் தருமா? திரிய வேண்டா. இதோ நான் சொல்வதைக் கேள்.

பரிசு பெற்றோன் தன் செல்வ நிலையை எடுத்து உரைத்தல் (23-28)

பெரு வறம் கூர்ந்த கானம் கல்லென
கருவி வானம் துளி சொரிந்து ஆங்கு
பழம் பசி கூர்ந்த எம் இரும் பேர் ஒக்கலொடு . . . .[25]

வழங்க தவாஅ பெரு வளன் எய்தி
வால் உளை புரவியொடு வய களிறு முகந்துகொண்டு
யாம் அவணின்றும் வருதும் நீயிரும் . . . .[23 - 28]

பெருவறங் கூர்ந்த கானங் கல்லெனக்
கருவி வானந் துளிசொரிந் தாங்குப்
பழம்பசி கூர்ந்தவெம் மிரும்பே ரொக்கலொடு . . . .[25]
வழங்கத் தவாஅப் பெருவள னேய்தி
வாலுளைப் புரவியடு வயக்களிறு முகந்துகொண்
டியாமவ ணின்றும் வருதும் நீயிரு

பொருளுரை:

ஆற்றுப்படுத்தும் புலவர் தான் பெற்றுவந்த செல்வ வளம் பற்றிக் கூறுகிறார். நான் காஞ்சி நகரிலிருந்து வருகிறேன். அந்நகர்த் தலைவன் (தொண்டைமான் இளந்திரையன் ) நல்கிய பெருஞ்செல்வத்தோடு வருகிறேன். நிலம் வறண்டு கிடக்கும் காலத்தில் கருமேகத் தொகுதி இடியுடன் கூடிய பெருமழை பொழிந்தது போல அவன் எங்களுக்குப் பல செல்வ வளங்களை நல்கியுள்ளான். அவற்றைக் குதிரைகள்மீதும், யானைகள்மீதும் ஏற்றிக்கொண்டு வருகிறேன். நான் மட்டும் அன்று. எனது சுற்றத்தாரின் பெருங்கூட்டமும் யானைமீதும், குதிரைமீதும் வந்துகொண்டிருப்பதைப் பார்.

இளந்திரையனது சிறப்பை அறிவித்தல் (29-37)

இரு நிலம் கடந்த திரு மறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கடை நீர் . . . .[30]

திரை தரு மரபின் உரவோன் உம்பல்
மலர் தலை உலகத்து மன் உயிர் காக்கும்
முரசு முழங்கு தானை மூவருள்ளும்
இலங்கு நீர் பரப்பின் வளை மீக்கூறும்
வலம்புரி அன்ன வசை நீங்கு சிறப்பின் . . . .[35]

அல்லது கடிந்த அறம் புரி செங்கோல்
பல் வேல் திரையன் படர்குவிர் ஆயின் . . . .[29 - 37]

மிருநிலங் கடந்த திருமறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கடை யந்நீர்த் . . . .[30]

திரைதரு மரபி னுரவோ னும்பல்
மலர்தலை யுலகத்து மன்னுயிர் காக்கும்
முரசுமுழங்கு தானை மூவ ருள்ளு
மிலங்குநீர்ப் பரப்பின் வளைமீக் கூறும்
வலம்புரி யன்ன வசைநீங்கு சிறப்பி . . . .[35]

னல்லது கடிந்த வறம்புரி செங்கோற்
பல்வேற் றிரையற் படர்குவி ராயிற்

பொருளுரை:

திரையன் திருமாலின் வலம்புரிச் சங்கம் போன்றவன். அவன் திரையர் குடியில் தோன்றிய திரையன். பலவகையான வேல்களைப் பல்வேறு விசைப் பாங்குகளில் வீசக்கூடியவன். அவன் திருமாலின் பிறங்கடை (வாரிசு). திருமால் நிலத்தைக் கடந்தவர். செல்வத் திருமகள் அமர்ந்து மணம் வீசும் மார்பினை உடையவர். கடல் நிறத்தில் காட்சி தருபவர். கடலின் திரையில் (அலையில்) மிதந்து வந்து அரசுக்கட்டில் ஏறிய அரச மரபினரின் கால்வழியினர் திரையர் எனப்பட்டனர். அம்மரபில் வந்தவர்களில் உயர்ந்தோங்கிய யானை போன்றவன், இந்தத் தொண்டைமான் இளந்திரையன். (தொண்டைமான் இளந்திரையன் கடலில் தொண்டைக் கொடியுடன் மிதந்து வந்தான் என்னும் கதைக்குத் தளப்பகுதி இது) உலகிலுள்ள உயிரினங்களைக் காக்கும் மூவேந்தர்களைச் சங்கு என்றால் இந்த இளந்திரையன் அச் சங்குகளிலே சிறந்து விளங்கும் வலம்புரிச் சங்கு போன்றவன். மறப்போரை விலக்கிவிட்டு அறத்தை மட்டுமே செய்யும் செங்கோல்தான் அவன் ஆட்சி. நீங்களும் அவனை நினைத்துக்கொண்டு செல்லுங்கள். (வறுமை தீரும் வளங்களைப் பெறலாம்).

இளந்திரையனது ஆணை (38-45)

கேள் அவன் நிலையே கெடுக நின் அவலம்
அத்தம் செல்வோர் அலற தாக்கி
கைப்பொருள் வௌவும் களவு ஏர் வாழ்க்கை . . . .[40]

கொடியோர் இன்று அவன் கடி உடை வியன் புலம்
உருமும் உரறாது அரவும் தப்பா
காட்டு மாவும் உறுகண் செய்யா வேட்டாங்கு
அசைவுழி அசைஇ நசைவுழி தங்கி
சென்மோ இரவல சிறக்க நின் உள்ளம் . . . .[38 - 45]

மூலப் பாடலுக்கு இங்கு சொடுக்கவும்

ஓசை ஒழுங்குடன் மூலப்படல்

×

கேளவ னிலையே கெடுகநின் னவல
மத்தஞ் செல்வோ ரலறத் தாக்கிக்
கைப்பொருள் வௌவுங் களவேர் வாழ்க்கைக் . . . .[40]

கொடியோ ரின்றவன் கடியுடை வியன்புல
முருமும் உரறா தரவுந் தப்பா
காட்டுமாவு முறுகண் செய்யா வேட்டாங்
கசைவுழி யசைஇ நசைவுழித் தங்கிச்
சென்மோ விரவல சிறக்கநின் னுள்ளங் . . . .[45]

பொருளுரை:

அவனது நல்லாட்சியைப் பற்றிச் சொல்கிறேன் கேள். உன் உள்ளம் (ஊக்கம்) சிறக்கட்டும். அவல நிலை அழிந்து ஒழியட்டும். அவனது காவல் நிலத்தில் வழிப்போக்கர்களை அலரும்படி தாக்கி அவர்களிடமுள்ள பொருள்களை வழிப்பறி செய்யும் திருட்டு-உழவு இல்லை. காரணம் அவனது காவலர்கள் வழிப்போக்கர்களுக்குத் துணைவருவர். இடி தாக்காது. பாம்புப் பயம் இல்லை. காட்டு விலங்குகளாலும் துன்பம் இல்லை. எங்கும் தங்கலாம். எங்கும் பாதுகாப்பு. களைப்புத் தோன்றும்போதெல்லாம் விரும்பிய இடங்களில் தங்கலாம். பின்னர்த் தொடரலாம்.

உப்பு வாணிகர் செல்லும் நெடிய வழி (46-65)

கொழும் சூட்டு அருந்திய திருந்து நிலை ஆரத்து
முழவின் அன்ன முழு மர உருளி
எழூஉ புணர்ந்து அன்ன பரூஉ கை நோன் பார்
மாரி குன்றம் மழை சுமந்து அன்ன
ஆரை வேய்ந்த அறை வாய் சகடம் . . . .[50]

வேழம் காவலர் குரம்பை ஏய்ப்ப
கோழி சேக்கும் கூடு உடை புதவின்
முளை எயிற்று இரும் பிடி முழந்தாள் ஏய்க்கும்
துளை அரை சீறுரல் தூங்க தூக்கி
நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்த . . . .[55]

விசி வீங்கு இன் இயம் கடுப்ப கயிறு பிணித்து
காடி வைத்த கலன் உடை மூக்கின்
மகவு உடை மகடூஉ பகடு புறம் துரப்ப
கோட்டு இணர் வேம்பின் ஏட்டு இலை மிடைந்த
படலை கண்ணி பரேர் எறுழ் திணி தோள் . . . .[60]

முடலை யாக்கை முழு வலி மாக்கள்
சிறு துளை கொடு நுகம் நெறிபட நிரைத்த
பெரும் கயிற்று ஒழுகை மருங்கில் காப்ப
சில்பதஉணவின் கொள்ளை சாற்றி
பல் எருத்து உமணர் பதி போகு நெடு நெறி . . . .[46 - 65]

கொழுஞ்சூட் டருந்திய திருந்துநிலை யாரத்து
முழவி னன்ன முழுமர வுருளி
யெழூஉப்புணர்ந் தன்ன பரூஉக்கை நோன்பார்
மாரிக் குன்றம் மழைசுமந் தன்ன
வாரை வேய்ந்த வறைவாய்ச் சகடம் . . . .[50]

வேழங் காவலர் குரம்பை யேய்ப்பக்
கோழி சேக்குங் கூடுடைப் புதவின்
முளையெயிற் றிரும்பிடி முழந்தா ளேய்க்குந்
துளையரைச் சீறுர றூங்கத் தூக்கி
நாடக மகளி ராடுகளத் தெடுத்த . . . .[55]

விசிவீங் கின்னியங் கடுப்பல் கயிறுபிணித்துக்
காடி வைத்த கலனுடை மூக்கின்
மகவுடை மகடூஉப் பகடுபுறந் துரப்பக்
கோட்டிணர் வேம்பி னேட்டிலை மிடைந்த
படலைக் கண்ணிப் பரேரெறுழ்த் திணிதோண் . . . .[60]

முடலை யாக்கை முழுவலி மாக்கள்
சிறுதுளைக் கொடுநுக நெறிபட நிரைத்த
பெருங்கயிற் றொழுகை மருங்கிற் காப்பச்
சில்பத வுணவின் கொள்ளை சாற்றிப்
பல்லெருத் துமணர் பதிபோகு நெடுநெறி . . . .[65]

பொருளுரை:

உமணர்களின் உப்பு வண்டியை வழித்துணையாகக் கொண்டு அவர்களுடன் சேர்ந்து செல்லலாம். வண்டியின் ஆரைக்கால்கள் (ஆரம்) வரால்மீனின் வற்றல் போல் இருக்கும். ஆரைக்கால் பொருந்தியிருக்கும் குடம் முழவு (= மத்தளம்) போல் இருக்கும். மாட்டு வண்டிக்கு மேல் அமைக்கப்படும் வண்டிக் கூட்டை அக்காலத்தில் ஆரை என்றனர். (ஆரை = அரைவட்டம்) வண்டியின் பார்மரம் கோட்டைக்கதவை மூடும் குறுக்குத் தாழ்ப்பாள் [எழூஉ மரம்] போல் இருந்தது. கூடு குன்றின்மேல் படிந்திருக்கும் மழைமேகம் போலக் காணப்பட்டது. அந்த வண்டி மண்ணை அறுத்துக்கொண்டு சென்றது. வண்டிக்கூட்டின் புதவு (=உட்காரும் நிழலிடம்) யானைக்கு அதன் காவலர் வேய்ந்திருந்த கூரைபோல் இருந்தது. வண்டிக் கூட்டின்மேல் கோழிக்குடும்பம் அமர்ந்திருந்தது (சேவல் அதிகாலையில் கூவி எழுப்புவதற்காகப் பயன்பட்டது போலும்.) வண்டியின் பின்புறம் சிறிய மர உரல் கட்டித் தொங்க விடப்பட்டிருந்தது. (வண்டி பின்புறம் கவியாமல் இருக்க இது உதவும்.) அந்த உரல் பெண்யானையின் முழங்கால் போன்று உருவமும் உயரமும் கொண்டதாக இருந்தது. பல வண்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக (=ஒழுகையாக)ப் பிணிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு வண்டியையும் இரண்டிரண்டு எருதுகள் இழுத்துச் சென்றன. எல்லா வண்டிகளும் ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருந்த வண்டி ஒழுகையைப் பல யானைகள் இழுத்துச் சென்றன. உமணப் பெண்கள் வண்டியின்மேல் உட்கார்ந்துகொண்டு காளைகளை முடுக்கி வண்டியை ஓட்டினர். அவர்கள் தம் குழந்தைகளைக் காடித்துணித் தூக்குக் கயிற்று ஏணையில் தாங்கிக் கொண்டிருந்தனர். வண்டியின் நுக மையம் கயிற்றால் கட்டப்பட்டுப் பல ஆண்யானை ஒழுகையுடன் பிணிக்கப்பட்டிருந்தது. அவற்றின் மீது ஏறி அமர்ந்துகொண்டும் பக்கத்தில் நடந்துகொண்டும் உமணர்கள் யானைகளை ஓட்டினர். உமணர்கள் வேப்பந் தழைகளைக் கோத்துக் கட்டிய மாலைகளைத் தோள்களில் அணிந்திருந்தனர். அவர்களது தோள்கள் பருமனும் அழகும் கொண்ட விட்டம் (=எறுழ்) போன்றவை. உணவைப் பதமாக்குவதால் உப்பு சில்பத உணவு என்று சிறப்பித்துப் பேசப்படுகிறது. இப்படிப்பட்ட உமணர் ஒழுக்கையொடு நீங்களும் செல்லலாம்.

வம்பலர் கழுதைச் சாத்தொடு செல்லும் காட்டு வழி (66-82)

எல் இடை கழியுநர்க்கு ஏமம் ஆக
மலையவும் கடலவும் மாண் பயம் தரூஉம்
அரும் பொருள் அருத்தும் திருந்து தொடை நோன் தாள்
அடி புதை அரணம் எய்தி படம் புக்கு
பொரு கணை தொலைச்சிய புண் தீர் மார்பின் . . . .[70]

விரவு வரி கச்சின் வெண் கை ஒள் வாள்
வரை ஊர் பாம்பின் பூண்டு புடை தூங்க
சுரிகை நுழைந்த சுற்று வீங்கு செறிவு உடை
கரு வில் ஓச்சிய கண் அகன் எறுழ் தோள்
கடம்பு அமர் நெடு வேள் அன்ன மீளி . . . .[75]

உடம்பிடி தட கை ஓடா வம்பலர்
தடவு நிலை பலவின் முழு முதல் கொண்ட
சிறு சுளை பெரும் பழம் கடுப்ப மிரியல்
புணர் பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து
அணர் செவி கழுதை சாத்தொடு வழங்கும் . . . .[80]

உல்கு உடை பெரு வழி கவலை காக்கும்
வில் உடை வைப்பின் வியன் காட்டு இயவின் . . . .[66 - 82]

யெல்லிடைக் கழியுநர்க் கேம மாக
மலையவுங் கடலவு மாண்பயந் தரூஉ
மரும்பொரு ளருத்துந் திருந்துதொடை நோன்றா
ளடிபுதை யரண மெய்திப் படம்புக்குப்
பொருகணை தொலைச்சிய புண்டீர் மார்பின் . . . .[70]

விரவுவரிக் கச்சின் வெண்கை யள்வாள்
வரையூர் பாம்பிற் பூண்டுபுடை தூங்கச்
சுரிகை நுழைந்த சுற்றுவீங்கு செறிவுடைக்
கருவி லோச்சிய கண்ணக னெறுழ்த்தோட்
கடம்பமர் நெடுவே ளன்ன மீளி . . . .[75]

யுடம்பிடித் தடக்கை யோடா வம்பலர்
தடவுநிலைப் பலவின் முழுமுதற் கொண்ட
சிறுசுளைப் பெரும்பழங் கடுப்ப மிரியற்
புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத்
தணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கு . . . .[80]

முல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்
வில்லுடை வைப்பின் வியன்காட் டியவி

பொருளுரை:

மீளி, சாத்து, உல்குவரி வாங்குவோர் முதலானோர் உங்களுக்கு உதவுவர். மீளி - மீளி என்பவன் அரசனின் ஆணைப்படி வழிப்போக்கர்களுக்கு உதவி செய்யும் காவல்காரன் (= போலீஸ்காரன் ). கடப்பம்பூவைச் சூடிய முருகனைப் போல உதவுபவன். அவன் காலில் செருப்பு (அடிபுதை அரணம்) ஆணிந்திருப்பான். கால்சட்டை அணிந்திருப்பான். அவனது மார்பிலே அம்புகள் துளைத்து ஆறிப்போன புண்கள் இருக்கும். அதில் பெருக்கல் குறிபோல வரிந்து கட்டிய கச்சு. அவனுக்கு அகன்ற கணையமரம் போன்ற தோள். அதன் ஒருபக்கம் கருமைநிற வில். மற்றொரு பக்கம் பளபளக்கும் வெண்மை ஒளியுடன் கூடிய வாள். (திருடர்களைப் பயமுறுத்தும் கருவி). வில்லும் வாளும் அவனது மார்புப்பாறை மேல் கறுப்பும் வெள்ளையுமாக ஊர்ந்து செல்லும் இரண்டு பாம்புகள் போலக் காணப்படும். முதுகுப்பக்கம் அம்பு வைத்திருக்கும் சுரிகை. பகைவரைக் கையால் குத்தித் தாக்கும் உடம்பு இடித் தடக்கை. இப்படிப்பட்ட மீளி இரவுக் காலத்தில் புதிதாகச் செல்லும் வழிப் போக்கர்களுக்கு (வம்பலர்களுக்கு)ப் பாதுகாவலாக வந்து உதவி செய்வான். சாத்து - நிலவழி வாணிகம் செய்பவர்களின் கூட்டம் சாத்து எனப்படும். சாத்து வாணிகர் தம் பண்டங்களைக் கழுதைமேல் ஏற்றிச் செல்வர். வளைந்து தாழ்ந்த பலாக்கிளையின் இரண்டு பக்கங்களிலும் பலாப்பழங்கள் பழுத்திருப்பது போல் கழுதையின் மேல் பண்டப் பொதிகள் இருக்கும். பண்டப்பொதி இரு பக்கமும் இருப்பதால் அது புணர்பொதி எனப்பட்டது. பொதியைச் சுமந்து சுமந்து கழுதையின் முதுகு காப்புக் காய்த்திருந்தது. தாங்கிப் பழக்கப்பட்டதால் அதன் முதுகு நோன்புறம் ஆயிற்று. கவலை - பிரிந்து செல்லும் வழி கவலை எனப்படும். (அந்தப் பெண்ணா, இந்தப் பெண்ணா? திருமணம் நடக்குமா, நடக்காதா? என்பது போன்றெல்லாம் மனம் இரண்டு வழிகளில் பிரிந்து ஊசலாடுவதும் கவலைதான்.) உல்கு - வழிகள் கூடும் இடங்களில் வணிகரிடம் சுங்கவரி வாங்கப்பட்டது. வில் - அகன்ற காட்டுப்பாதை (இயவு) வழியின் குறுக்கே வில்மரத்தால் தடுத்து உல்கு வாங்கினர். இவர்களும் புதிய வழிப் போக்கர்களுக்கு உதவுவர்.

எயிற்றியர் குடிசை (83-88)

நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த
பூளை அம் பசும் காய் புடை விரிந்து அன்ன
வரி புற அணிலொடு கருப்பை ஆடாது . . . .[85]

யாற்று அறல் புரையும் வெரிந் உடை கொழு மடல்
வேல் தலை அன்ன வை நுதி நெடும் தகர்
ஈத்து இலை வேய்ந்த எய் புற குரம்பை

 

னீளரை யிலவத் தலங்குசினை பயந்த
பூளையம் பசுங்காய் புடைவிரிந் தன்ன
வரிப்புற வணிலொடு கருப்பை யாடா . . . .[85]

தியாற்றறல் புரையும் வெரிநுடைக் கொழுமடல்
வேற்றலை யன்ன வைந்நுதி நெடுந்தக
ரீத்திலை வேய்ந்த வெய்ப்புறக் குரம்பை

புல்லரிசி எடுத்தல் (89-94)

மான் தோல் பள்ளி மகவொடு முடங்கி
ஈன் பிணவு ஒழிய போகி நோன் காழ் . . . .[90]

இரும்பு தலை யாத்த திருந்து கணை விழு கோல்
உளி வாய் சுரையின் மிளிர மிண்டி
இரு நில கரம்பை படு நீறு ஆடி
நுண் புல் அடக்கிய வெண் பல் எயிற்றியர் . . . .[89 - 94]

மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி
யீன்பிண வொழியப் போகி நோன்கா . . . .[90]

ழிரும்புதலை யாத்த திருந்துகணை விழுக்கோ
லுளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி
யிருநிலக் கரம்பைப் படுநீ றாடி
நுண்பு லடக்கிய வெண்ப லெயிற்றியர்

எயிற்றியர் அளிக்கும் உணவு (95-105)

பார்வை யாத்த பறை தாள் விளவின் . . . .[95]
நீழல் முன்றில் நில உரல் பெய்து
குறும் காழ் உலக்கை ஓச்சி நெடும் கிணற்று
வல் ஊற்று உவரி தோண்டி தொல்லை
முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி
வாராது அட்ட வாடூன் புழுக்கல் . . . .[100]

வாடா தும்பை வயவர் பெருமகன்
ஓடா தானை ஒண் தொழில் கழல் கால்
செ வரை நாடன் சென்னியம் எனினே
தெய்வ மடையின் தேக்கு இலை குவைஇ நும்
பை தீர் கடும்பொடு பதம் மிக பெறுகுவிர் . . . .[95 - 105]

பார்வை யாத்த பறைதாள் விளவி . . . .[95]
னீழன் முன்றி னிலவுரற் பெய்து
குறுங்கா ழுலக்கை யோச்சி நெடுங்கிணற்று
வல்லூற் றுவரி தோண்டித் தொல்லை
முரவுவாய்க் குழிசி முரியடுப் பேற்றி
வாரா தட்ட வாடூன் புழுக்கல் . . . .[100]

வாடாத் தும்பை வயவர் பெருமக
னோடாத் தானை யண்டொழிற் கழற்காற்
செவ்வரை நாடன் சென்னிய மெனினே
தெய்வ மடையிற் றேக்கிலைக் குவைஇநும்
பைதீர் கடும்பொடு பதமிகப் பெறுகுவிர் . . . .[105]

பொருளுரை:

நீண்ட அடிமரத்தையுடைய இலவ மரத்தின் கிளைகளில் பூளாப்பூ நிறத்தில் பஞ்சு வெடித்திருக்கும் பச்சைக் காயினைப் போல் முதுகினை உடையது அணில். கருப்பை எனப்படும் வெள்ளெலியும் அப்படித்தான் இருக்கும். அணிலும் வெள்ளெலியும் அங்கே விளையாடுவதும் உண்டு. விளையாடாமல் போய் விடுவதும் உண்டு. பாலை நிலத்துப் பெண்கள் எயிற்றியர் எனப்படுவர். எயிற்றியர் குரம்பை அவர்கள் குரம்பை எனப்படும் கூரைக்குடிசை வீடுகளில் வாழ்ந்தனர். குடிசை ஈச்சமர இலைமடல்களால் வேயப்பட்டிருந்தது. எயிற்றி மான்தோலை விரித்துப் படுத்திருப்பாள். தகர் எயிற்றிக்குப் பக்கத்தில் குட்டி போட்டிருக்கும் செம்மறி ஆடு முடங்கிக் கிடக்கும். அந்தப் பெண்ணாட்டை விட்டுவிட்டு ஆண்ஆடு [தகர்] மேயச் செல்வது உண்டு. அந்தத் தகர் ஆட்டுக்கு ஆற்றின் மணல்படிவு போல் அலையலையாய்ப் படிந்த மயிர். கொழுத்த மடல்போல் காது. வேலின் தலைப்பகுதியைப் போலக் கூர்மையான கொம்புகள்இருந்தன. எயிற்றி பணி எயிற்றியும் தன் பணியை மேற்கொள்ள வெளியே சென்றாள். இரும்பினால் செய்யப்பட்ட அம்பை நுனியில் செருகிய கோல் ஒன்றை எயிற்றி கையில் வைத்திருந்தாள். கரம்பை நிலத்தை (கரட்டு நிலத்தை) அக்கோலின் உளிவாயிலிலுள்ள கூரால் புழுதி பறக்கக் கிண்டினாள். பல் வெளுக்கும் புல் அந்தக் கரம்பை நிலத்துப் புழுதியில் முளைத்திருந்த ஒருவகைப் புல்லை எயிற்றியர் தம் வாயில் அடக்கியிருந்தனர். அது அவர்களது பல்லை வெண்மை பெறச்செய்து பாதுகாத்தது. (சுரை = சூரி, கூர்மை) எயிற்றி சமையல் பின்னர் தன் குடிசைக்கு வந்து சமைக்கத் தொடங்கினாள். முற்றத்தில் விளாமரத்து நிழல். அங்கே நிலப்பாறையில் அமைந்திருந்த உரல். அதில் நெல்லைப் போட்டு உலக்கையால் குற்றி அரிசி யாக்கினாள். அந்த மர நிழலின் ஒரு பக்கத்தில் பார்வை வலை விரிக்கப்பட்டிருந்தது. அந்த வலையில் விழுந்த பறவையையும் பக்குவம் செய்து சமைத்தாள். நீண்ட வானிக்கிணறு. அதனைத் தோண்டி முகந்த ஊற்றுநீரில் உலை வைத்தாள். முரமுரப்பான வாயையுடைய பழைய பானை. அதனை விறகடுப்பில் ஏற்றினாள். (அரிசி ஒன்று வெந்தும் ஒன்று வேகாமலும் இருந்தால் அது வாரம் பட்ட புழுக்கல். புலவு, அரிசி ஆகிய இரண்டில் ஒன்று வெந்தும் மற்றொன்று வேகாமலும் இருந்தால் அதுவும் வாரம்பட்ட புழுக்கல். எல்லாம் பக்குவமாக வெந்திருந்தால் அது வாராது அட்ட வாடூன் புழுக்கல்.) இப்படி வாராது அட்ட வாடூன் புழுக்கலை (= பிரியாணியை) எயிற்றி தேக்கு இலையில் படைத்து விருந்தூட்டினாள். அது தெய்வ மடை (அமிழ்தம்) போன்றது. அன்று அவள் எங்களுக்கு அதனை வழங்கினாள். இன்று உங்களுக்கும் அதனை வழங்குவாள். நீங்கள் செய்யவேண்டியது அரசனை வாழ்த்தல் நீங்கள் அரசனைப் போற்றிப் புகழ வேண்டியதில்லை. அரசன் பெயரைச் சொன்னால் போதும். அவன் தும்பைப்பூ வாடாமல் போரில் முன்னேறும் வயவர் படையின் தலைவன். மற்றும் புறமுதுகிட்டு ஓடாத பெரும் படையையும் உடையவன். இத்தகைய போர்த்தொழிலில் சிறந்த கழலை அவன் காலிலே அணிந்தவன். அவன் செவ்வரை நாடன் (செந்நிழல் தந்து நாட்டைக் காக்கும் தலைவன்.) நாங்கள் அவன் சென்னியம் (நாங்கள் அவனை எண்ணித் தலைமேற் கொண்டு வந்துள்ளோம்.) என்று சொன்னாலே போதுமானது. மேலே சொன்னவாறு விருந்தினைப் பெறுவீர்கள்.

பாலை நிலக் கானவர்களின் வேட்டை (106-117)

மான் அடி பொறித்த மயங்கு அதர் மருங்கின்
வான் மடி பொழுதில் நீர் நசைஇ குழித்த
அகழ் சூழ் பயம்பின் அகத்து ஒளித்து ஒடுங்கி
புகழா வாகை பூவின் அன்ன
வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும் . . . .[110]
அரைநாள் வேட்டம் அழுங்கின் பகல் நாள்

மானடி பொறித்த மயங்கதர் மருங்கின்
வான்மடி பொழுதி னீர்நசைஇக் குழித்த
வகழ்சூழ் பயம்பி னகத்தொளித் தொடுங்கிப்
புகழா வாகைப் பூவி னன்ன
வளைமருப் பேனம் வரவுபார்த் திருக்கு . . . .[110]
மரைநாள் வேட்ட மழுங்கிற் பகனாட்

பொருளுரை:

கானவன் மதியப் பொழுது வரையில் காட்டுப் பன்றியை வேட்டையாடுவான். மான்கள் விளையாடி அடி பதிந்திருக்கும் நிலப்பகுதியில் காட்டுப்பன்றியின் அடியைப் பார்த்துக்கொண்டே செல்வான். பயம்பு நிலத்தில் இருக்கும் நீரில் புரண்டுவிட்டு பயம்புச் சேற்றுக்குள்ளே அது ஒளிந்திருக்கும். போற்றிப் புகலும் வாகைப்பூ என்பது போரின்போது நூடிக்கொள்ளும் வாகைப்பூ. புகலா வாகைப் பூ என்பது போரில் வெற்றி தந்த வாள். வாள் போல் வளைந்த வாய்பல் கொம்பினை உடையது அந்த ஏனம் என்னும் காட்டுப்பன்றி. காட்டுப்பன்றி வேட்டை கிடைக்காவிட்டால் அவன் வேறு வேட்டைக்குச் சென்றுவிடுவான்.

பகு வாய் ஞமலியொடு பைம் புதல் எருக்கி
தொகு வாய் வேலி தொடர் வலை மாட்டி
முள் அரை தாமரை புல் இதழ் புரையும்
நெடும் செவி குறு முயல் போக்கு அற வளைஇ . . . .[115]

கடுங்கண் கானவர் கடறு கூட்டுண்ணும்
அரும் சுரம் இறந்த அம்பர்............... . . . .[106 - 117]

பகுவாய் ஞமலியடு பைம்புத லெருக்கித்
தொகுவாய் வேலித் தொடர்வலை மாட்டி
முள்ளரைத் தாமரைப் புல்லிதழ் புரையு
நெடுஞ்செவிக் குறுமுயல் போக்கற வளைஇக் . . . .[115]

கடுங்கட் கானவர் கடறுகூட் டுண்ணு
மருஞ்சுர மிறந்த வம்பர்ப் ..............

எயினரது அரணில் பெறும் பொருள்கள் (117-133)

.............................. பருந்து பட
ஒன்னா தெவ்வர் நடுங்க ஓச்சி
வை நுதி மழுங்கிய புலவு வாய் எஃகம்
வடி மணி பலகையொடு நிரைஇ முடி நாண் . . . .[120]

சாபம் சார்த்திய கணை துஞ்சு வியல் நகர்
ஊகம் வேய்ந்த உயர் நிலை வரைப்பின்
வரை தேன் புரையும் கவை கடை புதையொடு
கடும் துடி தூங்கும் கணை கால் பந்தர்
தொடர் நாய் யாத்த துன் அரும் கடி நகர் . . . .[125]

வாழ் முள் வேலி சூழ் மிளை படப்பை
கொடு நுகம் தழீஇய புதவின் செம் நிலை
நெடு நுதி வய கழு நிரைத்த வாயில்
கொடு வில் எயின குறும்பில் சேப்பின்
களர் வளர் ஈந்தின் காழ் கண்டு அன்ன . . . .[130]

சுவல் விளை நெல்லின் செ அவிழ் சொன்றி
ஞமலி தந்த மனவு சூல் உடும்பின்
வறை கால்யாத்தது வயின்தொறும் பெறுகுவிர்

................................ பருந்துபட
வொன்னாத் தெவ்வர் நடுங்க வோச்சி
வைந்நுதி மழுங்கிய புலவுவா யெ·கம்
வடிமணிப் பலகையடு நிரைஇ முடிநாட் . . . .[120]

சாபஞ் சார்த்திய கணைதுஞ்சு வியனக
ரூகம் வேய்ந்த வுயர்நிலை வரைப்பின்
வரைத்தேன் புரையுங் கவைக்கடைப் புதையடு
கடுந்துடி தூங்குங் கணைக்காற் பந்தர்த்
தொடர்நா யாத்த துன்னருங் கடிநகர் . . . .[125]

வாழ்முள் வேலிச் சூழ்மிளைப் படப்பைக்
கொடுநுகந் தழீஇய புதவிற் செந்நிலை
நெடுநுதி வயக்கழு நிரைத்த வாயிற்
கொடுவி லெயினக் குறும்பிற் சேப்பிற்
களர்வள ரீந்தின் காழ்கண் டன்ன . . . .[130]

சுவல்விளை நெல்லின் செவ்வவிழ்ச் சொன்றி
ஞமலி தந்த மனவுச்சூ லுடும்பின்
வறைகால் யாத்தது வயின்றொறும் பெருகுவிர்

பொருளுரை:

முன்னிரவு வேட்டை வாய்க்காமல் போனால் பின்னிரவில் கானவன் முயல் வேட்டையில் ஈடுபடுவது வழக்கம். முயலின் காது தாமரை இதழ் போல இருக்கும். கானவர் வேட்டைநாயோடு முயல் வேட்டைக்குச் செல்வார்கள். இரண்டு வேலிகளுக்கு இடையே வலையைத் தொடுத்துக் கட்டுவார்கள். கருங்கண் என்பது கானவரின் கூர்மையான கண்ணைக் குறிக்கும். கடறு கூட்டுண்ணல் என்பது பலராகக் கூடி வழிமறித்துக் கொள்ளுதலைக் குறிக்கும்.முயல் தப்பிப் போக முடியாதவாறு கானவர் பலராகக் கூடி வேட்டையாடுவர். (இப்பகுதியில் கவனமுடன் கடந்து செல்ல வேண்டும்.) கானவரின் குடிசைப் பகுதிகளைக் கொடுவில் எயினக் குறும்பு என்று பாடல் குறிப்பிடுகின்றது. வேட்டையாடும் காட்டுப் பகுதியைத் தாண்டிச் சென்றால் வீட்டுப்பகுதி வரும். உயர்நிலை வரைப்பு அங்கே ஈட்டி, கேடயம், வில், அம்பு ஆகியவை கூரையில் சார்த்தப்பட்டுத் தூங்கிக் கொண்டிருக்கும். எஃகம் என்பது ஈட்டி. ஒவ்வாத பகைவர்கள் நடுங்கும்படியாக வீசியதால் கூர் மழுங்கிப்போய் புலவு வாயுடன் அந்த ஈட்டிகள் சார்த்தப்பட்டிருக்கும். இது நிகழ்ந்த போரிலும் ஈட்டிகள் சார்த்தப்பட்ட பகுதிகளிலும் பருந்துகள் வட்டமிடும். போரிடும்போது மார்புக் கவசமாக அணியப்படுவது பலகை. இதில் மணிகள் கோக்கப்பட்டிருக்கும். போர் முடிந்த பின்னர் அதுவும் வீட்டுக் கூரையில் ஈட்டியோடு சேர்த்துச் சார்த்தப்பட்டிருக்கும். உயரமாக ஊகம் புல்லால் வேயப்பட்ட குடிசைகள் அவை. அந்த வரைப்புக் குடிசைகளின் முன்புறம் பந்தல். பருத்த கால்களை நட்டுப் போடப்பட்ட பந்தல் அது. பந்தலில் பண்டங்களை வைத்துப் பாதுகாக்கும் புதைப்பகுதிகள் உண்டு. அப் புதைப்பகுதிக்கு முன்புறம் உடுக்கு தொங்கும். பந்தர்க்காலில் சங்கிலித் தொடரால் பாதுகாப்புக்காகக் கட்டப்பட்ட நாய் இருக்கும். வீட்டுப் பகுதிக்கு வெளியே தழைத்திருக்கும் முள்வேலியும், அதனைச் சுற்றி மிளைக் காடும் (புதர்முள் காடு), அதனை அடுத்து படப்பையும் (தோட்டம்) இருக்கும். தோட்டத்துக்கு வேலி. வேலியில் வாயில். வாயிலில் புதவு. (கதவு). புதவானது வேல்கள் பலவற்றை நிறுத்திச் செய்யப்பட்டது. குறுக்குமர நுகப் புதவுகளில் (துளைகளில்) வேல்களைச் செருகி அதனைச் செய்திருப்பர். எயினக் குறும்பில் விருந்து செந்நெல் அரிசி கொண்டு சமைத்த சோறு. முள்ளம்பன்றிக் கறிக்குழம்பு. உடும்புக்கறி வறுவல். இந்த விருந்தினை ஆங்காங்கே போகுமிடமெல்லாம் நீங்கள் பெறுவீர்கள். செந்நெல் (சிவப்பரிசி நெல்) ஒரு புன்செய்ப் பயிர். மேட்டு நிலத்தில் மழைநீரைக் கொண்டு விளையும். களர் நிலத்தில் வளர்ந்து காய்த்துப் பழுக்கும் ஈச்சம்பழம் போல இருக்கும். மனவு என்னும் முள்ளம் பன்றியும், உடும்பும் ஞமலி என்னும் வேட்டைநாய் பிடித்துத் தந்தவை.

குறிஞ்சி நில மக்களின் இயல்பும் தொழிலும் (134-147)

யானை தாக்கினும் அரவு மேல் செலினும்
நீல் நிற விசும்பின் வல் ஏறு சிலைப்பினும் . . . .[135]

சூல் மகள் மாறா மறம் பூண் வாழ்க்கை
வலி கூட்டுணவின் வாள் குடி பிறந்த
புலி போத்து அன்ன புல் அணல் காளை
செல்நாய் அன்ன கரு வில் சுற்றமொடு
கேளா மன்னர் கடி புலம் புக்கு . . . .[140]

நாள் தந்து நறவு நொடை தொலைச்சி
இல் அடு கள் இன் தோப்பி பருகி
மல்லல் மன்றத்து மத விடை கெண்டி
மடி வாய் தண்ணுமை நடுவண் சிலைப்ப
சிலை நவில் எறுழ் தோள் ஓச்சி வலன் வளையூஉ . . . .[145]

பகல் மகிழ் தூங்கும் தூங்கா இருக்கை
முரண் தலை கழிந்த பின்றை மறிய . . . .[134 - 147]

யானை தாக்கினு மரவுமேற் செலினு
நீனிற விசும்பின் வல்லேறு சிலைப்பினுஞ் . . . .[135]

சூன்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை
வலிக்கூட் டுணவின் வாட்குடிப் பிறந்த
புலிப்போத் தன்ன புல்லணற் காளை
சென்னா யன்ன கருவிற் சுற்றமொடு
கேளா மன்னர் கடிபுலம் புக்கு . . . .[140]

நாள்ஆ தந்து நறவுநொடை தொலைச்சி
யில்லடு கள்ளின் றோப்பி பருகி
மல்லல் மன்றத்து மதவிடை கெண்டி
மடிவாய்த் தண்ணுமை நடுவட் சிலைப்பச்
சிலைநவி லெறுழ்த்தோ ளோச்சி வலன்வளையூஉப் . . . .[145]

பகல்மகிழ் தூங்குந் தூங்கா விருக்கை
முரண்டலை கழிந்த பின்றை மறிய

பொருளுரை:

அடுத்து மறவர் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டே செல்லலாம். மறவர்கள் தம் தாய் வயிற்றில் இருக்கும்போதே அஞ்சா நெஞ்ச மறம் படைத்தவர்கள். யானை தாக்க வந்தாலும், பாம்பு தன்மீது ஏறிச் சென்றாலும், மேக மூட்டம் இல்லாத வானில் இடி முழக்கம் கேட்டாலும் நிறை மாதத் தாய்மார்கூடக் கலங்குவதில்லை. (இடி இடிக்கும்போது கருப்பிணிகள் வெளியே வரக்கூடாது என்று இக்காலத்தில்கூடச் சொல்லப்படுகிறது.) (மேகமூட்டம் இல்லாத வானில் இடிமுழக்கம் கேட்டது பிக்பாங் தியரி ஒலியின் எச்ச மிச்சம் கேட்டிருக்குமோ என்று எண்ணிப் பார்க்கத் தூண்டுகிறது.) மறவர் வாட்குடியில் பிறந்தவர்கள். அது வலிகூட்டுண்ணும் வாட்குடி. உடல் வலிமையைக் கொண்டு உணவைப் பெறுவது வலிகூட்டுண்ணல். அவர்கள் இளந்தாடிக் காளையர். புலிக்குட்டியைப் போல வலிய போருக்குச் செல்வார்கள். செந்நாய் போலச் சுற்றத்தாரோடு கூட்டமாகச் செல்வார்கள். வலிமை மிக்க வில்லோடு செல்வார்கள். தன்னுடைய நாட்டு மன்னன் சொன்னதைக் கேளாத பகை மன்னன் காப்பாற்றிக் கொண்டிருக்கும் நாட்டுக்குச் செல்வார்கள். பட்டப் பகலில் அந்நாட்டுப் பசுக்கூட்டங்களைக் கவர்ந்து ஓட்டிக் கொண்டு வருவார்கள். தன் ஊருக்கு வந்ததும் நறவுக்கள் குடிப்பதற்காக அவற்றை விலையாகத் தருவார்கள். வீட்டுக்கு வந்து வீட்டிலே காய்ச்சிய தோப்பி என்னும் கள்ளைப் பருகுவார்கள். (நறவு = பழச்சாற்றிலிருந்து செய்யப்பட்ட கள். தோப்பி = சோற்றுக் கஞ்சியைப் புளிக்க வைத்துச் செய்த கள்.) பின்னர் மற்போர் புரியும் பொதுமன்றத்துக்கு வருவார்கள். தன் உடல் வலிமையைக் காட்டி மற்போர் புரிந்து விளையாடுவார்கள். அதில் சலிப்பு தோன்றும்போது கொழுத்த காளைகளைத் தூண்டி விட்டுத் தம் தோள் வலிமையைக் காட்டி அடக்கி விளையாடுவார்கள். காளையோடு விளையாடும்போது வாயை மடித்து வீளை (விசில்) அடிப்பார்கள். தண்ணுமை மேளத்தையும் அப்போது முழக்குவர். காளைகளை வளைத்து வென்றவண்ணம் நாள் முழுவதும் விளையாடுவார்கள். அங்குச் சோம்பிக் கிடந்து தூங்கி வழிபவர்கள் யாருமே இல்லாத்தால் அவர்களது இருப்பிடம் தூங்கா இருக்கையாகக் காணப்பட்டது. இப்படிப்பட்ட போர்பயிற்சிக் கூடத்தைப் (முரண் தலையைப்) பார்த்துக் கொண்டே செல்லலாம்.

கோவலர் குடியிருப்பு (148-168)

குளகு அரை யாத்த குறும் கால் குரம்பை
செற்றை வாயில் செறி கழி கதவின்
கற்றை வேய்ந்த கழி தலை சாம்பின் . . . .[150]

அதளோன் துஞ்சும் காப்பின் உதள
நெடும் தாம்பு தொடுத்த குறும் தறி முன்றில்
கொடு முக துருவையொடு வெள்ளை சேக்கும்
இடு முள் வேலி எரு படு வரைப்பின்
நள் இருள் விடியல் புள் எழ போகி . . . .[155]

குளகுஅரை யாத்த குறுங்காற் குரம்பைச்
செற்றை வாயிற் செறிகழிக் கதவிற்
கற்றை வேய்ந்த கழித்தலைச் சாம்பி . . . .[150]

னதளோன் றுஞ்சுங் காப்பி னுதள
நெடுந்தாம்பு தொடுத்த குறுந்தறி முன்றிற்
கொடுமுகத் துருவையடு வெள்ளை சேக்கு
மிடுமுள் வேலி யெருப்படு வரைப்பி
னள்ளிருள் விடியற் புள்ளெழப் போகிப் . . . .[155]

பொருளுரை:

முல்லைநிலத்தில் செல்லும்போது வழியில் இரவில் எங்கும் பாதுகாப்பாக உறங்கலாம். அதளோன், தோலை விரித்து அதன்மேல் உறங்குவான். அவன் துஞ்சும் காப்புதான் அந்தப் பாதுகாப்பான இடம். காப்பு என்பது கதவு உள்ள வீடு. அன்று, வீட்டுக்குத் தூணாக நடப்பட்ட உயரமில்லாத பந்தர்க்காலில் பசுந்தழைகள் கட்டப்பட்டிருந்தன. அது குரம்பை (கூரைவீடு) அதன் வாயில் கதவு தட்டைக்குச்சி போன்ற செத்தைகளையும் , மூங்கில் கழிகளையும் சேர்த்துக் கட்டிச் செய்யப்பட்டது. இந்தக் கதவை மூடிக்கொண்டு சாம்பின்மேல் (கட்டிலைப் போன்ற பரண்) தோலை விரித்து அதன்மேல் வீட்டுக்காரன் உறங்கினான். (அன்று அவன், நானும் அவ்வாறு உறங்க இடம் தந்தான். நீங்கள் சென்றால் உங்களுக்கும் தருவான்.) இந்த வீட்டுக்கு அப்பால் தொலைவிலுள்ள முற்றத்தில் ஆட்டுக்கிடை இருக்கும். மூங்கில் தட்டிகளைத் (தறிகள்) தாம்புக் கயிற்றால் கட்டிக் கிடையை அமைத்திருப்பார்கள். அதில் துருவை என்னும் செம்மறி ஆடுகளும், வெள்ளாடுகளும் அடைக்கப் பட்டிருக்கும். அதற்கும் அப்பால் வேலிப்பக்கத்தில் ஆட்டு எருக்களைக் கொட்டி வைத்திருப்பார்கள். பறவைகள் எழும்பிப் பறக்கும் விடியற் காலத்திலேயே இருள் இருக்கும் கருக்கல் நேரத்திலேயே எழுந்து இவற்றைத் தாண்டிச் செல்லவேண்டும்.

புலி குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி
ஆம்பி வான் முகை அன்ன கூம்பு முகிழ்
உறை அமை தீம் தயிர் கலக்கி நுரை தெரிந்து
புகர் வாய் குழிசி பூ சுமட்டு இரீஇ
நாள் மோர் மாறும் நன் மா மேனி . . . .[160]

சிறு குழை துயல்வரும் காதின் பணை தோள்
குறு நெறி கொண்ட கூந்தல் ஆய்மகள்
அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி
நெய் விலை கட்டி பசும்பொன் கொள்ளாள்
எருமை நல் ஆன் கரு நாகு பெறூஉம் . . . .[165]

மடி வாய் கோவலர் குடி வயின் சேப்பின்
இரும் கிளை ஞெண்டின் சிறு பார்ப்பு அன்ன
பசும் தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்

புலிக்குரன் மத்த மொலிப்ப வாங்கி
யாம்பி வான்முகை யன்ன கூம்புமுகி
ழுறையமை தீந்தயிர் கலக்கி நுரைதெரிந்து
புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட் டிரீஇ
நாண்மோர் மாறு நன்மா மேனிச் . . . .[160]

சிறுகுழை துயல்வருங் காதிற் பணைத்தோட்
குறுநெறிக் கொண்ட கூந்த லாய்மக
ளளைவிலை யுணவிற் கிளையுட னருத்தி
நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளா
ளெருமை நல்லான் கருநாகு பெறூஉ . . . .[165]

மடிவாய்க் கோவலர் குடிவயிற் சேப்பி
னிருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப் பன்ன
பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்

பொருளுரை:

ஆயர் மகள் பால், மோரைக் குடும்பம் அருந்தி எஞ்சியதைக் காய்ச்சி வெண்ணெய், நெய் எடுத்து விற்று வரும் பணத்தைப் பொன்னாக வாங்காமல் கறவைக் கன்றுகள் வாங்கப் பயன்படுத்திக்கொள்வாள். ஆய்மகள் தரும் விருந்து - ஆய்மகள் காலையில் எழுந்ததும் மத்தால் தயிர் கடைவாள். தயிர் கடையும் ஓசை புலி உருமுவது போல் கேட்கும். நன்றாக உறைந்திருக்கும் தயிரைக் கடையும்போது காளான் வெள்ளை மொட்டை விரித்துக்கொண்டு பூப்பது போல நுரையிலிருந்து வெண்ணெய் திரண்டு வருகிறது. அன்று அந்த ஆய்மகள் நல்ல மாநிற மேனியுடன் காணப்பட்டாள். காதில் ஊசலாடும் குழை. பருத்த தோள். நெளிவுடன் படிந்திருக்கும் கூந்தல். தலையில் பூஞ்சுமட்டின் மேல் மோர்ப்பானை. வெண்ணெய் மிதக்கும் மோர்ப்பானை. அளை என்பது தயிர். தயிரில் விளைந்தது மோர். மோர் விற்று வந்த வருவாயைக் கொண்டு அவள் குடும்பம் நடத்துகிறாள். சேமிப்பு - வெண்ணெய் நெய் விற்றுவரும் பணத்தை அவள் அவ்வப்போது வாங்கிக் கொள்ளாமல் அவற்றை வாங்குவோரிடமே சேமித்து வைக்கிறாள். சேமித்த பணத்தை அவள் வாங்கிய போதும் அந்தப் பணத்தைக் கொண்டு பொன் அணிகளை அவள் வாங்குவது இல்லை. எருமைக் கன்றுகளும், பசுக் கன்றுகளும் வாங்குவாள். இவள் மடிவாய்க் கோவலர் குடியைச் சேர்ந்தவள். (பசு, எருமை போன்றவற்றின் பால்மடியைக் கொண்டு பிழைப்பவர் மடிவாய்க் கோவலர்) விருந்து - இவர்களது குடும்பத்தில் தங்கினால் நண்டுக்கண் போன்ற தினையரிசிச் சோற்றில் பால் ஊற்றித்தருவார்கள். விருந்துண்டு மேலும் செல்லலாம்.

முல்லை நிலக் கோவலரின் குழலிசை (169-184)

தொடுதோல் மரீஇய வடு ஆழ் நோன் அடி
விழு தண்டு ஊன்றிய மழு தின் வன் கை . . . .[170]

உறி கா ஊர்ந்த மறு படு மயிர் சுவல்
மேம் பால் உரைத்த ஓரி ஓங்கு மிசை
கோட்டவும் கொடியவும் விரைஇ காட்ட
பல் பூ மிடைந்த படலை கண்ணி
ஒன்று அமர் உடுக்கை கூழ் ஆர் இடையன் . . . .[175]

தொடுதோன் மரீஇய வடுவாழ் நோனடி
விழுத்தண் டூன்றிய மழுத்தின் வன்கை . . . .[170]

யுறிக்கா வூர்ந்த மறுப்படு மயிர்ச்சுவன்
மேம்பா லுரைத்த வோரி யோங்குமிசைக்
கோட்டவுங் கொடியவும் விரைஇக் காட்ட
பல்பூ மிடைந்த படலைக் கண்ணி
யன்றம ருடுக்கைக் கூழா ரிடையன் . . . .[175]

பொருளுரை:

இடையன் தன் காலில் செருப்பு அணிந்திருந்தான். தோளில் கனக்கும் பால் கறந்த பானை இருபுறமும் தொங்கும் காவடித் தண்டைத் தாங்கிப் பிடித்தும், வாக்க வரும் விலங்கை வீழ்த்த வைத்திலுந்த மழுவை ஊன்றிப் பிடித்தும் அவனது வலிமை மிக்க கைகள் காப்புக் காய்த்துப் போயிருந்தன. இரண்டு பக்கமும் பால்குட உறி தொங்கும் காவடித் தண்டைச் சுமந்து சுமந்து அவன் தோளிலும் காப்புக் காய்த்திருந்தது. தலைமயிர் அவனது தோளில் சுருண்டு விழுந்தது. கறந்த பாலின் ஈரத்தை அவன் தன் ஓரி மயிரில் தடவிக் கொண்டான். மரக் கிளைகளிலும் கொடிகளிலும் பூக்கும் பலவகைப் பூக்களை ஒன்றை அடுத்து ஒன்றாக மாற்றி மாற்றித் தொடுத்த படலைக் கண்ணியை அவன் தலையில் அணிந்திருந்தான். மாற்று ஆடை இல்லாமையால் ஒரே ஆடையை விரும்பி உடுத்திக் கொள்ளும் பழக்கம் உள்ளவன். என்றாலும் வயிறாரக் கூழ் குடிப்பான்.

கன்று அமர் நிரையொடு கானத்து அல்கி
அம் நுண் அவிர் புகை கமழ கை முயன்று
ஞெலிகோல் கொண்ட பெரு விறல் ஞெகிழி
செம் தீ தோட்ட கரும் துளை குழலின்
இன் தீம் பாலை முனையின் குமிழின் . . . .[180]

புழல் கோட்டு தொடுத்த மரல் புரி நரம்பின்
வில் யாழ் இசைக்கும் விரல் எறி குறிஞ்சி
பல்கால்பறவை கிளை செத்து ஓர்க்கும்
புல் ஆர் வியன் புலம் போகி முள் உடுத்து . . . .[169 - 184]

 

கன்றமர் நிரையடு கானத் தல்கி
யந்நு ணவிர்புகை கமழக் கைம்முயன்று
ஞெலிகோற் கொண்ட பெருவிறல் ஞெகிழிச்
செந்தீத் தோட்ட கருந்துளைக் குழலி
னின்றீம் பாலை முனையிற் குமிழின் . . . .180

புழற்கோட்டுத் தொடுத்த மரற்புரி நரம்பின்
வில்யா ழிசைக்கும் விரலெறி குறிஞ்சிப்
பல்காற் பறவை கிளைசெத் தோர்க்கும்
புல்லார் வியன்புலம் போகி முள்ளுடுத்

பொருளுரை:

இடையனின் தானே குழல் செய்துகொண்டு இசைப்பான். அது சலித்துவட்டால் பொந்துள்ள குமிழ மரத்தில் யாழ் செய்துகொண்டு இசைப்பான். கன்றுக் குட்டிகள் விரும்பி உடன்மேயும் ஆனிரைகளோடு அவன் கானத்து மேய்ச்சல் காட்டில் ஓய்வாகத் தங்குவான். அப்போது தனக்கு வேண்டிய புல்லாங்குழலைத் தானே செய்து கொள்வான். ஞெலிகோலின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு தீயில் காய்ந்து கனப்புடன் இருக்கும் ஞெகிழியால் மிகுந்த வலிமையோடு மூங்கிலில் அழுத்தித் துளையிட்டது அந்தக் குழல். துளை போடுவதற்காக அவன் கையால் முயன்று அழுத்தும் போது அம்நுண் அவிர்புகை கமழும். புல்லாங்குழலில் அவன் பாலைப் பண்ணை இனிமையாகப் பாடுவான். அதில் சலிப்பு தோன்றினால் [முனையின்] யாழிசை மீட்டுவான். யாழும் அவனே செய்து கொண்டதுதான். குமிழ மரத்தின் கொம்பை வளைத்து மரல் என்று சொல்லப்படும் பெருங்குரும்பையின் நாரை முறுக்கி நரம்பாக்கிக் கட்டி வில்யாழ் செய்துகொள்வான். அதில் விரல்களால் தெறித்துக் குறிஞ்சிப்பண் பாடுவான். அதன் ஓசை பல்கால் பறவை என்று சொல்லப்படும் வண்டின் குரல் போல இனிமையாக இருக்கும். இந்தப் புல்வெளியைக் கடந்து சென்றால் சிற்றூர் வரும்.

முல்லை நிலத்து உழுது உண்பாரது ஊர்களில் கிடைப்பன (185-196)

எழு காடு ஓங்கிய தொழு உடை வரைப்பில் . . . .[185]

பிடி கணத்து அன்ன குதிர் உடை முன்றில்
களிற்று தாள் புரையும் திரி மர பந்தர்
குறும் சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி
நெடும் சுவர் பறைந்த புகை சூழ் கொட்டில்
பருவ வானத்து பா மழை கடுப்ப . . . .[190]

கரு வை வேய்ந்த கவின் குடி சீறூர்

தெழுகா டோங்கிய தொழுவுடை வரைப்பிற் . . . .[185]

பிடிக்கணத் தன்ன குதிருடை முன்றிற்
களிற்றுத்தாள் புரையுந் திரிமரப் பந்தர்க்
குறுஞ்சாட் டுருளையடு கலப்பை சார்த்தி
நெடுஞ்சுவர் பறைந்த புகைசூழ் கொட்டிற்
பருவ வானத்துப் பாமழை கடுப்பக் . . . .[190]

கருவை வேய்ந்த கவின்குடிச் சீறூர்

பொருளுரை:

இந்தச் சிற்றூர் எழுந்தோங்கிய முள்மரக் காடுகளை ஆடையாக உடுத்திக் கொண்டிருக்கும். வரைப்பு எனப்படும் ஊரின் எல்லைப் பகுதிகளில் மாட்டுத் தொழுவங்கள் இருக்கும். அடுத்து தானியங்களைச் சேமித்து வைக்கும் குதிர்கள் பெண் யானைக் கூட்டம் போல் காணப்படும் அது குதிர்முற்றம் முற்றத்தின் உட்பகுதியில் பந்தல். அதற்கு யானையின் கால்களைப் போலப் பந்தர்க்கால்கள். இவை முடிச்சுமரக் கால்கள். (திரிமரம்) பந்தலில் சாட்டு உருளைகள் மாட்டப்பட்டிருக்கும். (கதிர் சுமக்க உதவும் இந்தக் கூடைகளை இக்கால உழவர் சாட்டுக்கூடை என்று வழங்குகின்றனர்) அங்குக் கலப்பையும் சார்த்தப்பட்டிருக்கும். அங்கே கொட்டில் (சமையல்கூடம்) பகுதியில் சமைக்கும் புகை வரும். அதனால் அதன் சுவர் பறைந்து போயிருக்கும். (அழுக்குப் படிந்து காணப்படும்) வீடுகள் வானில் பரவிக் கிடக்கும் மழை மேகங்கள் போல் காணப்படும். வீடுகள் கருவை என்னும் மருக்கட்டான் புல்லால் வேயப்பட்டிருக்கும். அது அழகிய குடில்கள் கொண்ட சிற்றூர்.

நெடும் குரல் பூளை பூவின் அன்ன
குறும் தாள் வரகின் குறள் அவிழ் சொன்றி
புகர் இணர் வேங்கை வீ கண்டு அன்ன
அவரை வான் புழுக்கு அட்டி பயில்வுற்று . . . .[195]

இன் சுவை மூரல் பெறுகுவிர் ஞாங்கர்

நெடுங்குரற் பூளைப் பூவி னன்ன
குறுந்தாள் வரகின் குறளவிழ்ச் சொன்றிப்
புகரிணர் வேங்கை வீகண் டன்ன
வவரை வான்புழுக் கட்டிப் பயில்வுற் . . . .[195]
றின்சுவை மூரற் பெறுவிர் ஞாங்கர்க்

பொருளுரை:

சமாத்து வடித்த தினைச்சோற்றில் அவரைக்காயைச் சேர்த்துச் செய்த வான்புழுக்கு (வெஜிடபிள் பிரியாணி) அச் சிற்றூரில் விருந்தாகக் கிடைக்கும். பயின்று பயின்று, சுவைத்துச் சுவைத்து இனிமையாக உண்ணும் அளவுக்குப் பெறலாம். சமைத்து வடித்த வரகஞ் சோற்றின் குறள்கள் (குறுநைகள்) அவிழ்ந்து மலர்ந்திருப்பதானது பூளாப் பூக்கள் போலத் தூய வெண்மையுடன் காணப்படும்.

மருத நிலத்தைச் சேர்ந்த முல்லைநிலம் (197-206)

குடி நிறை வல்சி செம் சால் உழவர்
நடை நவில் பெரும் பகடு புதவில் பூட்டி
பிடி வாய் அன்ன மடி வாய் நாஞ்சில்
உடுப்பு முக முழு கொழு மூழ்க ஊன்றி . . . .[200]

தொடுப்பு எறிந்து உழுத துளர் படு துடவை
அரி புகு பொழுதின் இரியல் போகி
வண்ண கடம்பின் நறு மலர் அன்ன
வளர் இளம் பிள்ளை தழீஇ குறும் கால்
கறை அணல் குறும்பூழ் கட்சி சேக்கும் . . . .[205]

வன்புலம் இறந்த பின்றை மென் தோல் . . . .[197 - 206]

குடிநிறை வல்சிச் செஞ்சா லுழவர்
நடைநவில் பெரும்பகடு புதவிற் பூட்டிப்
பிடிவா யன்ன மடிவாய் நாஞ்சி
லுடுப்புமுக முழுக்கொழு மூழ்க வூன்றித் . . . .200

தொடுப்பெறிந் துழுத துளர்படு துடவை
யரிபுகு பொழுதி னிரியல் போகி
வண்ணக் கடம்பி னறுமல ரன்ன
வளரிளம் பிள்ளை தழீஇக் குறுங்காற்
கறையணற் குறும்பூழ் கட்சிச் சேக்கும் . . . .[205]
வன்புல மிறந்த பின்றை மென்றோன்

பொருளுரை:

விருந்து உண்டபின் உழுத துடவை நிலங்களையும், உழாத வன் புலங்களையும் கடந்து செல்ல வேண்டும். ( கலப்பை உழுது செல்லும் பள்ளத்தை இக்காலத்தில் படைச்சால் என்பர். நன்செய் நிலத்தில் அவை உழும்போதே மறைந்துவிடும். புன்செய் நிலத்தில் அவை கரை கரையாகத் தெரியும். இது புன்செய் நிலத்தில் செஞ்சால் என்று குறிப்பிடப்படுகிறது. ) செஞ்சால் உழவர்களின் வீட்டில் சேமிப்பாகக் குடும்பத்தை நிறைவு செய்யும் வகையில் செந்நெல் போன்ற தானியங்கள் நிறைந்திருந்தன. என்றாலும் அவன் துடவையைத் துகள் ( துளர் ) படும்படி உழுகிறான். பழக்கப்பட்ட காளைகளை நுகத்தில் பூட்டி உழுகிறான். அவனது நாஞ்சில் கலப்பையானது துதிக்கையோடு கூடிய பெண்யானையின் தலை போன்றது. உடுப்புமுகம் என்பது உடும்பு போன்ற முகம். அது கலப்பையின் நாவுப் பகுதி. அதில் இரும்பாலான கொழுவும் சேர்ந்திருக்கும். நாவும் கொழுவும் மண்ணுக்குள் மூழ்கிப்போகும் அளவுக்கு உழவன் ஆழமாக உழுதான். புன்செய் உழவு - படைசாலில் விதைகள் போடப்பட்டன. ( அடுத்து வரும் உழவுக்காலின் போது விதை தானே ஊன்றப்பட்டு விடும். ) இப்படி உழப்பட்ட நிலங்களைத் தாண்டிச் செல்ல வேண்டும். அடுத்து வன்புலத்தைக் கடக்க வேண்டும். அங்கே குறும்பூழ்ப் பறவைகள் (காடை) மேயும். அவற்றின் குஞ்சுகள் நல்ல வண்ணமுள்ள கடப்பம்பூ போன்ற மயிர்களைக் கொண்டவை. வழிப்போக்கர்களைக் கண்டதும் அவை தம் குஞ்சுகளை அழைத்துக்கொண்டு சென்று தம் கட்சியில் (கூட்டில்) பதுங்கிக் கொள்ளும்.

மருத நிலக் கழனிகளில் காணும் காட்சிகள் - நாற்று நடுதல் (207-212)

மிதி உலை கொல்லன் முறி கொடிற்று அன்ன
கவை தாள் அலவன் அளற்று அளை சிதைய
பைம் சாய் கொன்ற மண் படு மருப்பின்
கார் ஏறு பொருத கண் அகன் செறுவின் . . . .[210]

உழாஅ நுண் தொளி நிரவிய வினைஞர்
முடி நாறு அழுத்திய நெடு நீர் செறுவில்

மிதியுலைக் கொல்லன் முறிகொடிற் றன்ன
கவைத்தா ளலவ னளற்றளை சிதையப்
பைஞ்சாய் கொன்ற மண்படு மருப்பிற்
காரேறு பொருத கண்ணகன் செறுவி . . . .210

னுழாஅ நுண்டொளி நிரவிய வினைஞர்
முடிநா றழுத்திய நெடுநீர்ச் செறுவிற்

நெல் விளைதற் சிறப்பு (213-227)

களைஞர் தந்த கணை கால் நெய்தல்
கள் கமழ் புது பூ முனையின் முள் சினை
முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளி . . . .[215]

கொடும் கால் மா மலர் கொய்துகொண்டு அவண
பஞ்சாய் கோரை பல்லின் சவட்டி
புணர் நார் பெய்த புனைவு இன் கண்ணி
ஈர் உடை இரும் தலை ஆர சூடி
பொன் காண் கட்டளை கடுப்ப கண்பின் . . . .[220]

புன் காய் சுண்ணம் புடைத்த மார்பின்
இரும்பு வடித்து அன்ன மடியா மென் தோல்
கரும் கை வினைஞர் காதல் அம் சிறாஅர்
பழம் சோற்று அமலை முனைஇ வரம்பில்

களைஞர் தந்த கணை கால் நெய்தல்
கள் கமழ் புது பூ முனையின் முள் சினை
முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளி . . . .[215]

கொடும் கால் மா மலர் கொய்துகொண்டு அவண
பஞ்சாய் கோரை பல்லின் சவட்டி
புணர் நார் பெய்த புனைவு இன் கண்ணி
ஈர் உடை இரும் தலை ஆர சூடி
பொன் காண் கட்டளை கடுப்ப கண்பின் . . . .[220]

புன் காய் சுண்ணம் புடைத்த மார்பின்
இரும்பு வடித்து அன்ன மடியா மென் தோல்
கரும் கை வினைஞர் காதல் அம் சிறாஅர்
பழம் சோற்று அமலை முனைஇ வரம்பில்

பொருளுரை:

அடுத்து கொல்லர் குடியிருப்புகளுடன் கூடிய நன்செய் உழவர் வாழும் இடங்களைக் கடந்து செல்ல வேண்டும். அந்த உழவர் வீட்டில் பழைய சோறு அருந்தலாம். நீர்நிலம் சண்டையிட்டுக்கொள்ளும் எருமை மிதித்துச் சேறாகும். அங்கு உழவு செய்யாமல் உழவர் பயிரிடுவர். காலால் மிதிக்கும் துருத்தியால் ஊதும் உலைக்களம் கொண்டவன் கொல்லன். அவன் கொடிறு (கொரடு) போல் கைகளை உடைய நண்டு. அதன் வளை சிதையும்படி காரேறு என்று சொல்லக்கூடிய எருமை சேற்று நிலத்தில் சண்டையிட்டுக்கொள்ளும். அப்போது அங்கு வளர்ந்துள்ள பைஞ்சாய் (பாய் நெய்ய உதவும் கோரை) என்னும் கோரைகளும் மிதிபட்டு மடியும். எருமை கொம்பாலும் சேற்றைக் கிண்டும். உழாமலேயே இப்படிச் சேறுபட்ட வயலை நிரவி உழவுத் தொழிலாளர்கள் நாற்று முடியைப் பிரித்துப் பயிர் நடுவார்கள். உழவர் பின்னர் களை பறிப்பார்கள். அப்போது பூத்திருக்கும் நெய்தல் கொடிகளைக் களைந்து எறிவார்கள். அதிலுள்ள பூக்களைப் பறித்து உழவர்களின் சிறுவர்களும் சிறுமியர்களும் தலையில் சூடிக் கொள்வார்கள். இந்தப் பூக்கள் வேண்டாமென்றால் முள்ளிப் பூக்களைப் பறித்துச் சூடிக் கொள்வர். (முள்ளி என்பது ரோஜா போன்றதொரு செடி) முள்ளிச் செடியின் சிறு கிளையில் முள் இருக்கும். அதன் இதழ்கள் தகடுபோல் சூழ்ந்திருக்கும். இதழானது பிறண்டு முறுக்கிக் கொண்டிருக்கும். காம்பு வளைந்திருக்கும். பூ சற்றே பெரிதாக இருக்கும். இவற்றைக் கொய்துகொண்டு விளையாடுவர். விரும்பினால் நாரில் பூக்களைக் கண்ணியாகக் கட்டித் தலையில் சூடிக்கொள்வர். நீரில் விளையாடி ஈரம் பட்டிருக்கும் தலையில் சூடிக்கொள்வர். முள்ளிப் பூக்களைப் பறிக்கும்போது அங்கே இருக்கும் பைஞ்சாய் என்னும் ஒருவகைக் கோரைப் புல்லைப் பிடுங்கி வாய் மணக்க மென்றுகொண்டிருப்பர். (இக்காலத்தில் சுவிங்கம் செல்லுவது போல் மெல்லுவர்) வண்ணப் பொடிகள் தூவப்பட்டிருக்கும் அவர்களின் மார்பானது தங்கம் உரசிய கட்டளைக் கல்லைப் போலக் காணப்படும். அவர்களின் மேனியிலுள்ள தோல் மென்மையாக இருக்கும். இவர்களின் பெற்றோர் வினைஞர். (உழவுத் தொழிலாளிகள்) இவர்களது கைகள் இரும்பால் வடித்தது போல் வலிமையாக இருக்கும். இவர்களின் அன்புச் செல்வர்கள் தாம் இப்படி விளையாடுவர். தண்ணீர் ஊற்றி வைத்த பழைய சோற்றை உண்பதில் இவர்கள் முனைந்து நிற்பர். அவர்கள் பழஞ்சோற்றை உங்களுக்கு வழங்குவர்.

புது வை வேய்ந்த கவி குடில் முன்றில் . . . .[225]
அவல் எறி உலக்கை பாடு விறந்து அயல
கொடு வாய் கிள்ளை படு பகை வெரூஉம் . . . .[213 - 227]

×புதுவை வேய்ந்த கவிகுடின் முன்றி
லவலெறி யுலக்கைப் பாடுவிறந் தயல
கொடுவாய்க் கிள்ளை படுபகை வெரூஉம்

பொருளுரை:

கவிந்திருக்கும் குடைபோன்ற உழவரின் குடில்கள் புதிய வைக்கோலால் வேயப்பட்டிருக்கும். அக் குடில் முற்றத்தில் உழத்தியர் அவல் இடிப்பர். அந்த ஒலியைக் கேட்டுப் பக்கத்தில் மேயும் கிளிகள் பறந்தோடும்.

நெல் அரிந்து கடா விடுதல் (228-242)

நீங்கா யாணர் வாங்கு கதிர் கழனி
கடுப்பு உடை பறவை சாதி அன்ன
பைது அற விளைந்த பெரும் செந்நெல்லின் . . . .[230]

தூம்பு உடை திரள் தாள் துமித்த வினைஞர்
பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல்
பலி பெறு வியன் களம் மலிய ஏற்றி

×

நீங்கா யாணர் வாங்குகதிர்க் கழனிக்
கடுப்புடைப் பறவைச் சாதியன்ன
பைதற விளைந்த பெருஞ்செந் நெல்லின் . . . .[230]

தூம்புடைத் திரடா டுமித்த வினைஞர்
பாம்புறை மருதி னோங்குசினை நீழற்
பலிபெறு வியன்கள மலிய வேற்றிக்

பொருளுரை:

வளம் குன்றாத வயல்களில் நெல் விளைந்திருக்கும். பறவைச் சாதி தன் சுற்றத்துடன் நீண்டு வளைந்த வரிசையில் வானில் பறப்பது போல் நெல்லின் கதிர்மணிகள் விளைந்திருக்கும். நெல்லந்தாள் உள்ளே துளையை உடையது. நெல்லைத் தாளோடு உழவர்கள் அறுப்பார்கள். (கட்டுகளாகக் கட்டி) அவற்றைக் களத்திற்குக் கொண்டு செல்வர். களத்தின் ஓரத்தில் மருதமரம் இருக்கும். அதன் நிழலில் பாம்பு இருக்கும். (நாகச்சிலை போலும்) அதற்குப் பலியூட்டிய பின்னர்தான் நெற்கட்டுக்களைக் களத்தில் அடுக்குவர்.

கணம் கொள் சுற்றமொடு கை புணர்ந்து ஆடும்
துணங்கை அம் பூதம் துகில் உடுத்தவை போல் . . . .[235]

சிலம்பி வால் நூல் வலந்த மருங்கின்
குழுமு நிலை போரின் முழு முதல் தொலைச்சி
பகடு ஊர்பு இழிந்த பின்றை துகள் தப
வையும் துரும்பும் நீக்கி பைது அற
குட காற்று எறிந்த குப்பை வட பால் . . . .[240]

செம்பொன்மலையின் சிறப்ப தோன்றும்
தண் பணை தழீஇய தளரா இருக்கை . . . .[228 - 242]

கணங்கொள் சுற்றமொடு கைபுணர்ந் தாடுந்
துணங்கையம் பூதந் துகிலுடுத் தவைபோற் . . . .[235]

சிலம்பி வானூல் வலந்த மருங்கிற்
குழுமுநிலைப் போரின் முழுமுத றொலைச்சிப்
பகடூர் பிழிந்த பின்றைத் துகடப
வையுந் துரும்பு நீக்கிப் பைதறக்
குடகாற் றெறிந்த குப்பை வடபாற் . . . .[240]

செம்பொன் மலையிற் சிறப்பத் தோன்றுந்
தண்பணை தழீஇய தளரா விருக்கைப்

பொருளுரை:

களத்தில் சேர்த்துள்ள நெற்கட்டுகளில் சிலந்திப் பூச்சிகள் கூடு கட்டியிருக்கும். (அந்த அளவுக்கு நெல்மணிகளை அரிந்த தாளிலேயே முதிர விடுவார்கள்.) அரிகளைப் பிரித்து நெல் அடிப்பார்கள். மாடுகளைப் பூட்டி அடித்த தாள்மீது போரடிப்பார்கள். அது பூதம் தன் உறவுக் கூட்டத்தோடு கை கோத்துக்கொண்டு துணங்கை நடனம் ஆடுவது போல இருக்கும். பின் வைக்கோல் , துரும்பு ஆகியவற்றை நீக்கி நெல்லைத் தனியே பிரித்து எடுப்பார்கள். அந்த நெல்லிலும் முதிராத பச்சை நெல் (கருக்காய்) போகும் வண்ணம் மேலைக் காற்றிலே தூற்றுவார்கள். நல்ல நெல்லை களத்தின் வடக்குப் பக்கத்தில் குவித்து வைப்பார்கள். அது செம்பொன் குவித்த மலைபோல் தோன்றும். இதுதான் தண்பணை தழீஇய தளரா இருக்கை. அதாவது ஈர வயல்கள் நிரம்பிய, செல்வ வளத்தில் தளர்ச்சியே காணாத குடியிருப்புப் பகுதிகள்.

மருத நிலத்து ஊர்களில் பெறும் உணவுகள் (243-256)

பகட்டு ஈன்ற கொடு நடை குழவி
கவை தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல்
ஏணி எய்தா நீள் நெடு மார்பின் . . . .[245]

முகடு துமித்து அடுக்கிய பழம் பல் உணவின்
குமரிமூத்த கூடு ஓங்கு நல் இல்
தச்ச சிறாஅர் நச்ச புனைந்த
ஊரா நல் தேர் உருட்டிய புதல்வர்

பகட்டுஆ ஈன்ற கொடுநடைக் குழவிக்
கவைத்தாம்பு தொடுத்த காழூன் றல்கு
லேணி யெய்தா நீணெடு மார்பின் . . . .[245]

முகடுதுமித் தடுக்கிய பழம்பல் லுணவிற்
குமரி மூத்த கூடோங்கு நல்லிற்
றச்சச் சிறாஅர் நச்சப் புனைந்த
வூரா நற்றே ருருட்டிய புதல்வர்

பொருளுரை:

வீடுகளில் நெல்லை சேமிக்கும் ஓங்கி உயர்ந்த கூடுகள் இருக்கும். அவை குமரி மூத்த கூடுகள். அதாவது அழியாத் தன்மை வாய்ந்த பழமையான கூடுகள். அவற்றில் பழங்கால நெல்லின் சேமிப்பு உண்டு. ( புது நெல்லை விடப் பழைய நெல்லேசிறந்தது. விலையும் அதிகம். ) ஓங்கி உயர்ந்த அந்தக் கூடுகளின் மார்புப் பகுதியில் ஏணியைச் சார்த்தி நெல் எடுக்கும் பழக்கம் இல்லை. அதன் மேல் முகட்டை உடைத்துவிட்டு நெல்லை எடுப்பது வழக்கம். இந்தக் கூடுகளின் அல்குல் பகுதியில் ( குருகிய இடைவெளிப் பகுதியில் ) பசு ஈன்றெடுத்த கன்றுக் குட்டி நீண்ட கயிற்றில் தும்பு மாட்டிக் கட்டப் பட்டிருக்கும். ( கவைத்தாம்பு = தும்பு ) உழவரின் புதல்வர்கள் - தச்சர்களின் சிறுவர்கள் நடை வண்டிகளைச் செய்து தருவார்கள். அவை ஊர்ந்து செல்ல முடியாத வண்டிகள். உழவர்களின் புதல்வர்கள் அதனை உருட்டிச் செல்வர்.

தளர் நடை வருத்தம் வீட அலர் முலை . . . .[250]
செவிலி அம் பெண்டிர் தழீஇ பால் ஆர்ந்து
அமளி துஞ்சும் அழகு உடை நல் இல்

மூலப் பாடலுக்கு இங்கு சொடுக்கவும்

ஓசை ஒழுங்குடன் மூலப்படல்

×

தளர்நடை வருத்தம் வீட வலர்முலைச் . . . .[250]
செவிவிஅம் பெண்டிர்த் தழீஇப் பாலார்ந்
தமளித் துஞ்சு மழகுடை நல்லிற்

பொருளுரை:

தக்கா புக்கா என்று தளர்நடை போட்டு வண்டி உருட்டிச் சென்ற குழந்தைகளின் வருத்தம் தீரும்படிச் செவிலியர் பாலூட்டுவர். செவிலியர் அலர்முலைப் பெண்டிர். மலர்ந்தமுலை உடையவர் எனக் கூறப்படுவதால் இவர்கள் வயது முதிர்ந்த பெண்டிர் எனத் தெரியவருகிறது. இவர்கள் தம் மார்போடு தழுவிக்கொண்டு பாலூட்டுவர். பாடூட்டித் தூங்கவைப்பர். வீட்டுக் கட்டில் மெத்தையில் தூங்கவைப்பர்.

தொல் பசி அறியா துளங்கா இருக்கை
மல்லல் பேரூர் மடியின் மடியா
வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி . . . .[255]

மனை வாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர்

றொல்பசி யறியாத் துளங்கா விருக்கை
மல்லற் பேரூர் மடியின் மடியா
வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி . . . .[255]
மனைவா ழளகின் வாட்டொடும் பெறுகுவிர் . . . .[243 - 256]

பொருளுரை:

அங்குள்ள மக்களுக்கு வேளை தவறி உண்ணும் பழம்பசி இல்லை. வளம் மிக்க அப் பேரூரில் செல்வ வளம் தளர்வதுகூட இல்லை. ஊரே தூங்கி விட்டாலும் வினைஞர் என்னும் தொழிலாளர் இல்லங்களில் விருந்து உண்டு. சோம்பலின்றித் தூங்காமல் பாடுபடும் உழவுத் தொழிலாளர்கள் விளைவித்துத் தந்த வெண்ணெல் (சம்பா) அரிசிச் சோறு பெறலாம். கோழிக்கறி வறுவலுடன் பெறலாம்.

ஆலைகளில் கருப்பஞ் சாறும் கட்டியும் அருந்துதல் (257-262)

மழை விளையாடும் கழை வளர் அடுக்கத்து
அணங்கு உடை யாளி தாக்கலின் பல உடன்
கணம் சால் வேழம் கதழ்வுற்று ஆஅங்கு
எந்திரம் சிலைக்கும் துஞ்சா கம்பலை . . . .[260]

விசயம் அடூஉம் புகை சூழ் ஆலைதொறும்
கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசைமின் . . . .[257 - 262]

மழைவிளை யாடுங் கழைவள ரடுக்கத்
தணங்குடை யாளி தாக்கலிற் பலவுடன்
கணஞ்சால் வேழங் கதழ்வுற் றாஅங்
கெந்திரஞ் சிலைக்குந் துங்சாக் கம்பலை . . . .[260]

விசய மடூஉம் புகைசூ ழாலைதொறுங்
கரும்பின் றீஞ்சாறு விரும்பினிர் மிசைமின்

பொருளுரை:

நெல்மணி விளையும் கழனிகளை அடுத்து கரும்புத் தோட்டங்கள் வழியே செல்ல நேரும். கரும்பாலையின் ஓசையைக் கேட்டுக் கரும்பின் அறுவடைக் காலம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். மழை மேகங்கள் விளையாடும் மூங்கில் காடுகள் நிறைந்த மலையடுக்கப் பகுதியில் அச்சம் தரும் யாளிகள் யானையைத் தாக்கும். அப்போது யானை பிளிறுவது போல் கரும்பை நெரிக்கும் எந்திரத்தின் கம்பலை (ஓசை) கேட்கும். அங்கே விசயம் அடுவார்கள். (கரும்புப் பால் காய்ச்சுவார்கள்) அவ்விடம் சென்று கரும்புப்சாறு பருகுங்கள்.

வலைஞர் குடியிருப்பு (263-274)

வேழம் நிரைத்து வெண் கோடு விரைஇ
தாழை முடித்து தருப்பை வேய்ந்த
குறி இறை குரம்பை பறி உடை முன்றில் . . . .[265]

கொடும் கால் புன்னை கோடு துமித்து இயற்றிய
பைம் காய் தூங்கும் பாய் மணல் பந்தர்
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி
புலவு நுனை பகழியும் சிலையும் மான
செ வரி கயலொடு பச்சிறா பிறழும் . . . .[270]

மை இரும் குட்டத்து மகவொடு வழங்கி
கோடை நீடினும் குறைபடல் அறியா
தோள் தாழ் குளத்த கோடு காத்திருக்கும்
கொடு முடி வலைஞர் குடி வயின் சேப்பின் . . . .[263 - 274]

வேழ நிரைத்து வெண்கோடு விரைஇத்
தாழை முடித்துத் தருப்பை வேய்ந்த
குறியிறைக் குரம்பைப் பறியுடை முன்றிற் . . . .[265]

கொடுங்காற் புன்னைக் கோடுதுமித் தியற்றிய
பைங்காய் தூங்கும் பாய்மணற் பந்த
ரிளையரு முதியருங் கிளையுடன் துவன்றிப்
புலவுநுனைப் பகழியுஞ் சிலையு மானச்
செவ்வரிக் கயலொடு பச்சிறாப் பிறழும் . . . .[270]

மையிருங் குட்டத்து மகவொடு வழங்கிக்
கோடை நீடினுங் குறைபட லறியாத்
தோடாழ் குளத்த கோடுகாத் திருக்குங்
கொடுமுடி வலைஞர் குடிவயிற் சேப்பி

பொருளுரை:

குளத்தில் மீன்பிடித்து வாழ்பவர்களைக் கொடுமுடி வலைஞர் என்பர். இவர்களது குரம்பை வீடுகள் தருப்பைப் புல்லால் தாழைநார் முடித்து வேயப்பட்டிருக்கும். வேழம் என்பது கொறுக்கை அல்லது பேய்க்கரும்பு. இதனை நாணாத்தட்டை (நாணல்தட்டை) என்றும் கூறுவர். இந்த வேயம் குறுக்குக் கழிகளாகவும் வெண்கரும்பு என்னும் மூங்கில் நெடுக்குக் கழிகளாகவும் வீட்டுக் கூரைக்குப் பயன்படுத்தப் பட்டிருக்கும். இரண்டையும் தாழைமட்டை நாரால் முடிந்து கட்டியிருப்பார்கள். தருப்பைப் புல் போட்டுக் கூரை வேய்ந்திருப்பர். குறுகிய தாழ்வாரமும் [இறை] அந்த வீட்டுக்கு உண்டு. முற்றங்கள் செப்பனிடப்படாமல் பறிந்து போயிருக்கும். மணல் பரப்பப்பட்ட அந்த முற்றத்தில் புன்னை மரத்தைப் பச்சையாக வெட்டி அதன் காய்கள் தொங்கும்படிப் பந்தல் போட்டிருப்பார்கள். இளையவர்களும் முதியவர்களும் சுற்றத்தாருடன் ஒன்றுகூடிக் குளத்துக்கு மீன் பிடிக்கச் செல்வர். வில்லும் அம்பும் கொண்டு வேட்டையாடி அவர்கள் மீன் பிடிப்பார்கள். அம்பின் நுனி புலவு நாற்றம் அடிக்கும். அந்த வில்லம்புகளைப் போலவே குளத்தில் சிவந்த கோடுகளையுடைய கயல் மீன்களும், இளைய இறால் மீன்களும் குளத்தில் பிறழும். குளங்கள் ஆழமானதால் கருமை நிறத்துடன் காணப்படும். கோடைக்காலம் நீண்டுகொண்டே போனாலும் மீன்கள் தம் குஞ்சு குட்டிகளுடன் எப்போதும் வலைஞர்களுக்கு குறைவின்றித் தம்மை வழங்கிக் கொண்டேயிருக்கும். தோடுகள் நிறைந்த தாமரைப் பூக்கள் வேரோடிக் கிடக்கும் அந்தக் குளத்தின் கரையில் கொடுமுடி வலைஞர்கள் தனித்தனியாக மீன் பிடிக்காமல் ஒன்றாகக் கூடிமீன் பிடிப்பதற்காக காத்திருப்பார்கள். அங்குச் சென்றால் விருந்துணவு பெறலாம்.

வலைஞர் குடியில் பெறும் உணவு (275-282)

அவையா அரிசி அம் களி துழவை . . . .[275]

மலர் வாய் பிழாவில் புலர ஆற்றி
பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும்
பூம் புற நல் அடை அளைஇ தேம் பட
எல்லையும் இரவும் இரு முறை கழிப்பி
வல் வாய் சாடியின் வழைச்சு அற விளைந்த . . . .[280]

வெம் நீர் அரியல் விரல் அலை நறும் பிழி
தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர் . . . .[275 - 282]

னவையா வரிசி யங்களித் துழவை . . . .[275]

மலர்வாய்ப் பிழாவிற் புலர வாற்றிப்
பாம்புறை புற்றிற் குரும்பி யேய்க்கும்
பூம்புற நல்லடை யளைஇத் தேம்பட
வெல்லையு மிரவு மிருமறை கழிப்பி
வல்வாய்ச் சாடியின் வழைச்சற விளைந்த . . . .[280]

வெந்நீர ரரியல் விரலலை நறும்பிழி
தண்மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர்

பொருளுரை:

பொங்கல், அடை, அரியல்கள், மீன்சூட்டு வறுவல் போன்றவை குளக்கரை மீனவர் தரும் விருந்து. அரிசியை சுவைத்து மெல்ல வேண்டிய நிலை இல்லாமல் களி போல் கிண்டப்பட்ட பொங்கல் சோறு கிடைக்கும். மலர்ந்த வாயினைக் கொண்ட பிழா என்னும் வட்டிலில் புலரும்படி ஆற்றிப் படைப்பார்கள். அத்துடன் அடை என்னும் பலகார வகைகளையும் படைப்பார்கள். அந்த அடை பாம்பு வாழும் புற்றில் மலர்ந்திருக்கும் கறையான் அடை போல் மொது மொதுவென உப்பியிருக்கும். அடையில் தேன் போன்ற இனிப்புப் பொருள்களை ஊற்றித் தருவார்கள். காலை வேளையிலும் இரவு வரும் வேளையிலும் இரண்டு முறை அந்த விருந்து படைக்கப்படும். அதன்பின் அரியல் பிழியைச் சுடச்சுடத் தருவார்கள். விரல் விட்டு நன்றாகக் கலக்கி நாவில் சுடாத பதம் பார்த்துத் தருவார்கள். அரியலானது வலிமையான சாடியில் வழவழப்பு இல்லாமல் நன்றாக விளையும் வரையில் காய்ச்சப்பட்டது. (இதனை இக்காலத்தில் தரப்படும் சூப் போன்றது எனலாம்.) இதனைப் பருகும்போது துணை உணவாகக் கொள்வதற்காக வறுவல் மீனை ஆற வைத்துத் தருவார்கள்.

காலையில் நீர்ப்பூக்களைச் சூடிப் போதல் (283-296)

பச்சூன் பெய்த சுவல் பிணி பைம் தோல்
கோள் வல் பாண்மகன் தலை வலித்து யாத்த
நெடும் கழை தூண்டில் நடுங்க நாண் கொளீஇ . . . .[285]

கொடு வாய் இரும்பின் மடி தலை புலம்ப
பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை
நீர் நணி பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம்

 

பச்சூன் பெய்த கவல்பிணி பைந்தோற்
கோள்வல் பாண்மகன் றலைவலித் தியாத்த
நெடுங்கழைத் தூண்டி னடுங்கநாண் கொளீஇக் . . . .[285]

கொடுவா யிரும்பின் மடிதலை புலம்பப்
பொதியிரை கதுவிய போழ்வாய் வாளை
நீர்நணிப் பிரம்பி னடுங்குநிழல் வெரூஉம்

பொருளுரை:

பாண்மகன் தூண்டில் போட்டு மீன் பிடிப்பான். மீன்தூண்டிலில் மாட்டுவதற்காகத் தரப்படும் இறைச்சி இரையைத் தோல் பையில் போட்டு அதனைத் தோளில் மாட்டிக் கொண்டிருப்பான். நீண்ட மூங்கில் கோலின் நுனித்தலையில் மெல்லிய நரம்பு நூலைக் கட்டி அதன் மற்றொரு நுனியில் இரும்பினாலான தூண்டிலைக் கட்டியிருப்பான் தூண்டிலின் இரும்பு தெரியாதபடி பச்சைக் கறி செருகப் பட்டிருக்கும். வாளைமீன் அந்த இறையைக் கவ்வும்.. எனினும் எப்படியோ தப்பிவிடும். தப்பிய வாளைமீன் பிரம்புப் புதருக்குப் பக்கத்தில் செல்லும்போது வளர்ந்திருக்கும் பிரம்பின் நிழலைப் பார்த்து அதனைத் தூண்டிலின் கோல் என்று எண்ணி நடுங்கும்.

நீத்து உடை நெடும் கயம் தீ பட மலர்ந்த
கடவுள் ஒண் பூ அடைதல் ஓம்பி . . . .[290]

உறை கால் மாறிய ஓங்கு உயர் நனம் தலை
அகல் இரு வானத்து குறைவில் ஏய்ப்ப
அரக்கு இதழ் குவளையொடு நீலம் நீடி
முரண் பூ மலிந்த முது நீர் பொய்கை
குறுநர் இட்ட கூம்பு விடு பன் மலர் . . . .[295]

பெருநாள் அமையத்து பிணையினிர் கழிமின் . . . .[283 - 296]

×

நீத்துடை நெருங்கயந் தீப்பட மலர்ந்த
கடவு ளண்பூ வடைத லோம்பி . . . .[290]

யுறைகான் மாறிய வோங்குயர் நனந்தலை
யகலிரு வானத்துக் குறைவி லேய்ப்ப
வரக்கிதழ்க் குவளையடு நீல நீடி
முரட்பூ மலிந்த முதுநீர்ப் பொய்கைக்
குறுந ரிட்ட கூம்புவிடு பன்மலர் . . . .[295]

பெருநாள ளமையத்துப் பிணையினிர் கழிமின்

பொருளுரை:

இத்தகைய தன்மையினைக்கொண்டு அகன்று விரிந்த குளம் ஆழமானது. அக் குளத்தில் தீ எரிவது போலக் கடவுள் ஒண்பூ (செந்தாமரை) மலர்ந்திருக்கும். பிரம்பு நிழலைக் கண்டு நடுங்கிய வாளைமீன் கடவுள் ஒண்பூவின் பக்கம் செல்லாமல் பாதுகாப்பாக விலகிச் செல்லும். தன் உறைவிடத்தைத் தாமரையின் பக்கம் அமைத்துக் கொள்ளாமல் செங்குவளை பூத்திருக்கும் பகுதியில் அமைத்துக் கொள்ளும். அரக்கு நிறம் கொண்ட செங்குவளைப் பூவும் நீலம் என்று சொல்லப்படும் நீலப்பூவும் நீர் மட்டம் வரையில் ஓங்கி உயர்ந்து சிவப்பு, பச்சை (இலை), நீலம் என்றெல்லாம் முரண்பட்ட நிறங்களில் அந்த முதுநீர்ப் பொய்கையில் தழைத்திருக்கும். நாண் இல்லாத குறைவில் (குறைந்திருக்கும் வில்) தான் வானவில். பொய்கையில் பூத்திருக்கும் அந்தப் பூக்கள் முழுமையாகத் தோன்றாமல் அறைகுறையாகத் துண்டுபட்டிருக்கும் வானவில் போலத் தோன்றும். பொய்கையைத் தூய்மை செய்வோர் அப் பூக்களைக் களைந்து கரையில் எறிவர். கரையில் கிடக்கும்போதும் அவை மொட்டு விட்டுப் பூக்கும். அவற்றில் கடவுள் பூவாகிய தாமரையை விடுத்து ஏனையவற்றை நல்லநாள் பெரியநாள் வரும்போது கண்ணியாகவோ, மாலையாகவோ கட்டி அணிந்து கொண்டு செல்லுங்கள்.

அந்தணரது உறைவிடங்களில் பெறுவன (297-310)

செழும் கன்று யாத்த சிறு தாள் பந்தர்
பைஞ்சேறு மெழுகிய படிவ நல் நகர்
மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது
வளை வாய் கிள்ளை மறை விளி பயிற்றும் . . . .[300]

மறை காப்பாளர் உறை பதி சேப்பின்

செழுங்கன் றியாத்த சிறுதாட் பந்தர்ப்
பைஞ்சேறு மெழுகிய படிவ நன்னகர்
மனையுறை கோழியடு ஞமலி துன்னாது
வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும் . . . .[300]

மறைகாப் பாள ருறைபதிச் சேப்பிற்

பொருளுரை:

மறைகாப்பாளர் வாழும் இடங்கள் நோன்பு நோற்கும் படிவ நிலையில் கொணப்படும். பருமன் இல்லாத கால் நட்டுப் பந்தல் போடப்பட்டிருக்கும். அந்தப் பந்தர்க்காலில் பசுவின் கொழுகொழு கன்று கட்டப்பட்டிருக்கும். பந்தலின் கீழே உள்ள தரை பைஞ்சேற்றால் (பசுவின் சாணத்தால்) மெழுகப்பட்டிருக்கும். கோழியோ, நாயோ அங்கு இருக்காது. பந்தலில் உள்ள கூட்டில் வளர்க்கப்படும் வளைந்த வாயினையுடைய கிளிக்கு அவர்கள் தம் மறை மொழிகளைச் சொல்லிப் பயில வைத்துக்கொண்டிருப்பார்கள்.

பெரு நல் வானத்து வட வயின் விளங்கும்
சிறுமீன் புரையும் கற்பின் நறு நுதல்
வளை கை மகடூஉ வயின் அறிந்து அட்ட
சுடர் கடை பறவை பெயர் படு வத்தம் . . . .[305]

சேதா நறு மோர் வெண்ணெயின் மாதுளத்து
உருப்புறு பசும் காய் போழொடு கறி கலந்து
கஞ்சக நறு முறி அளைஇ பைம் துணர்
நெடு மர கொக்கின் நறு வடி விதிர்த்த
தகை மாண் காடியின் வகைபட பெறுகுவிர் . . . .[310]

பெருநல் வானத்து வடவயின் விளங்குஞ்
சிறுமீன் புரையுங் கற்பி னறுநுதல்
வளைக்கை மகடூஉ வயினறிந் தட்ட
சுடர்க்கடைப் பறவைப் பெயர்ப்படு வத்தஞ் . . . .[305]

சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்
துருப்புறு பசுங்காய்ப் போழொடு கறிகலந்து
கஞ்சக நறுமுறி யளை இப் பைந்துணர்
நெடுமரக் கொக்கின் னறுவடி விதிர்த்த
தகைமாண் காடியின் வகைபடப் பெறுகுவிர் . . . .[310]

பொருளுரை:

மறைகாப்பாளர் வாழும் இடங்களுக்குச் சென்றால் அவர்களின் மனைவியர் நல்கும் உணவைப் பெறலாம். அகன்ற வானத்தின் வடபால் விளங்கும் சாலிமீன் (அருந்ததி விண்மீன் Polaris) அந்த விண்மீன் போன்று நிலைமாறாத இருப்புத் தன்மையைக் கற்பு எனல் தமிழர் கோட்பாடு. இப்படிக் கற்புக்கடம் பூண்ட அந்தணர் சலைக்கும்போது தம் வளையலணிந்த புறங்கைகளால் நெற்றியில் வடியும் வியர்வையைத் துடைத்துக் கொண்டு சமைப்பார்கள். சோற்றுக்கு வத்தல் போட்ட மோர்க்குழம்பு உண்டு. அந்த வத்தல் (வத்தம்) சுடர்க்கடைப் பறவையின் பெயரைக் கொண்டது. (கோழியவரை வத்தல் போலும்) மாதுளையின் பச்சைக் காயைப் பிளந்து வெண்ணெயில் வதக்கிய கறியும் உண்டு. மோரும் வெண்ணெயும் உண்ணத் தருவார்கள்.அவை செவ்விய பசு தந்த பாலைக் காய்ச்சிப் பெறப்பட்டவை. வத்தல் குழம்பிலும், கறிகாயிலும் கஞ்சுகத்தை (கறி வேப்பிலையைக்) கிள்ளிப் போட்டிருப்பார்கள். மாவடு ஊறுகாயும் உண்டு. (மாமரத்துக்குக் கொக்கு என்னும் பெயரும் உண்டு. வடி என்பது வடுவைக் குறிக்கும். நெடுமரக் கொக்கின் நறுவடி என்பது பாடலில் மாவடுவைக் குறிக்கும்.) (காடி என்பது உப்பிட்டுப் புளித்த ஊறுகாய்.) மறைகாப்பாளர் இல்லங்களுக்குச் சென்றால் வகைபடச் (வக்கணையாகச்) சமைக்கப்பட்ட இவற்றை வகையோடு பெறுவீர்கள்.

நீர்ப்பெயற்று என்னும் ஊரின் சிறப்பு (311-319)

வண்டல் ஆயமொடு உண்துறை தலைஇ
புனல் ஆடு மகளிர் இட்ட பொலம் குழை
இரை தேர் மணி சிரல் இரை செத்து எறிந்தென
புள் ஆர் பெண்ணை புலம்பு மடல் செல்லாது
கேள்வி அந்தணர் அரும் கடன் இறுத்த . . . .[315]

வேள்வி தூணத்து அசைஇ யவனர்
ஓதிம விளக்கின் உயர் மிசை கொண்ட
வைகுறு மீனின் பைபய தோன்றும்
நீர்பெயற்று எல்லை போகி பால் கேழ் . . . .[311 - 319]

 

வண்ட லாயமொ டுண்டுறைத் தலைஇப்
புனலாடு மகளி ரிட்ட பொலங்குழை
யிரைதேர் மணிச்சிர லிரைசெத் தெறிந்தெனப்
புள்ளார் பெண்ணைப் புலம்புமடற் செல்லாது
கேள்வி யந்தண ரருங்கட னிறுத்த . . . .[315]

வேள்வித் தூணத் தசைஇ யவன
ரோதிம விளக்கி னுயர்மிசைக் கொண்ட
வைகுறு மீனிற் பைபயத் தோன்றும்
நீர்ப்பெயற் றெல்லைப் போகிப் பாற்கேழ்

பொருளுரை:

நீர்ப்பெயற்று என்பது ஓர் ஊர். அவ்வூரிலுள்ள துறையின் புனலில் விளையாடும் மகளிர் விளையாட்டுத் தோழிமாரோடு சேர்ந்து தழுவிக் கொண்டு நீர்த்துறைக்குள்ளே வண்டல் விளையாடி மகிழ்வர். தண்ணீருக்குள் விளையாடும்போது அவர்கள் தங்களது தங்க நகைகளைக் கழற்றிக் கரைகளிலேயே வைத்து விட்டு விளையாடுவர். மணிச்சிரல் என்பது சிச்சிலி என்றும் சொல்லப்படும் அழகிய மீன்கொத்திக் குருவி. கரையில் தங்க நகைகளைப் பார்த்த மீன்கொத்திக் குருவி தனக்கு நல்ல தங்கமீன் இரை கிட்டியது என்று எண்ணி அதன்மீது பாயும். அவை இரை அன்மையால் மருண்டு போய் பக்கத்தில் பல பறவைகள் இருக்கும் புன்னைமர மடலில்கூட உட்காராமல் நெடுந்தூரம் பறந்து செல்லும். அங்கே ஊர்ப் பகுதியில் அந்தணர்கள் வேள்வித் தூண் நட்டு வேதம் ஓதித் தம் கடமைகளைச் செய்துகொண்டிருப்பர். அவர்களின் வேதம் எழுதப் படாதது. வழிவழியாகக் காதால் கேட்டு ஓதப்படுவது. பறந்து சென்ற மீன்கொத்திப் பறவை அவர்கள் நட்ட வேள்வித் தூணின்மேல் சிறிது நேரம் உட்காரும். அது உட்கார்திருப்பதிருப்பதானது அன்ன-விளக்கு போல் தோன்றும். அன்னப் பறவை பொம்மையை உச்சியில் வைத்துச் செய்த குத்து விளக்கை அக்காலத்தில் யவனர் கொண்டுவந்து தமிழ்நாட்டில் வாணிகம் செய்தனர். வேள்வித் தூணின்மேல் மீன்கொத்திப் பறவை அமர்ந்திருப்பது யவனர் தந்த ஓதிம (அன்ன) விளக்கைப் போலத் தோன்றும். அந்தணர் மிகுதியாக வாழ்ந்த அந்த நீர்ப்பெயற்று ஊரைத் தாண்டிச் செல்ல வேண்டும். கடல்மல்லை என்று போற்றப்படும் மாமல்லபுரம் நீர்ப்பெயற்று என்னும் பெயருடன் விளங்கியது. நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி என்னும் போது முந்நீர் என்னும் தொடரிலுள்ளநீர்என்பது கடலை உணர்த்துகிறது. நீர் = கடல். நீர்ப்பெயற்று = கடல்மல்லை நீரின் பெயரைக் கொண்ட பட்டினத்தைப் புலவர் நீர்ப்பெயற்று என்று குறிப்பிடுகிறார். இது எயிற் பட்டினத்தைச் சிறுபாணாற்றுப்படை மதிலொடு பெயரியபட்டினம் என்று குறிப்பிடுவது போன்றது.

திமிலர் முதலியோர் உறையும் பட்டினம் (320-336)

வால் உளை புரவியொடு வட வளம் தரூஉ . . . .[320]

நாவாய் சூழ்ந்த நளி நீர் படப்பை
மாடம் ஓங்கிய மணல் மலி மறுகின்
பரதர் மலிந்த பல் வேறு தெருவின்
சிலதர் காக்கும் சேண் உயர் வரைப்பின்
நெல் உழு பகட்டொடு கறவை துன்னா . . . .[325]

மேழக தகரோடு எகினம் கொட்கும்

மூலப் பாடலுக்கு இங்கு சொடுக்கவும்

ஓசை ஒழுங்குடன் மூலப்படல்

×

வாலுளைப் புரவியடு வடவளந் தரூஉம் . . . .[320]

நாவாய் சூழ்ந்த நளிநீர்ப் படப்பை
மாட மோங்கிய மணன்மலி மறுகிற்
பரதர் மலிந்த பல்வேறு தெருவிற்
சிலதர் காக்குஞ் சேணுயர் வரைப்பி
னெல்லுழு பகட்டொடு கறவை துன்னா . . . .[325]

ஏழகத் தகரோ டெகினங் கொட்குங்

பொருளுரை:

நீர்ப்பெயற்று என்னும் துறைமுகத்தில் நாவாய்க் கப்பல்கள் சூழ்ந்திருந்தன. வெள்ளைக் குதிரைகள் அதில் வந்து இறங்கின. அத்துடன் வடநாட்டுச் செல்வ வளங்களும் வந்திறங்கின. அது நீர் வளம் மிக்க ஊர். அங்கே மாட மாளிகைகள் ஓங்கிய மணல் பரந்த குறுந்தெருக்கள். (பரதர் எனப்படுவோர் கப்பல் வாணிகர்) அவர்கள் வாழ்ந்த பெருந்தெருக்களில் வானளாவிய பெரும்பெரும் மாளிகைகள். அப்பகுதியில் சிலதர் என்னும் வில்லேந்திய அரசுக் காவலர்கள் காவல்பணியை மேற்கொண்டிருந்தனர். அங்கே வயலை உழுத கறவை காடுகளோ பால்மாடுகளோ இல்லை. மாறாக, சண்டையிடும் செம்மறியாட்டுக் கடாக்களும், சேவல்களும் ஏவிவிடப்பட்டுச் சுழன்று விளையாடிக் கொண்டிருந்தன. அவற்றைப் பரதர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்

கூழ் உடை நல் இல் கொடும் பூண் மகளிர்
கொன்றை மென் சினை பனி தவழ்பவை போல்
பைம் காழ் அல்குல் நுண் துகில் நுடங்க
மால் வரை சிலம்பில் மகிழ் சிறந்து ஆலும் . . . .[330]

பீலி மஞ்ஞையின் இயலி கால
தமனிய பொன் சிலம்பு ஒலிப்ப உயர் நிலை
வான் தோய் மாடத்து வரி பந்து அசைஇ
கை புனை குறும் தொடி தத்த பைபய
முத்த வார் மணல் பொன் கழங்கு ஆடும் . . . .[335]

பட்டின மருங்கின் அசையின் முட்டு இல் . . . .[320 - 336]

 

கூழுடை நல்லிற் கொடும்பூண் மகளிர்
கொன்றை மென்சினைப் பனிதவழ்பவை போற்
பைங்கா ழல்கு னுண்டுகி னுடங்க
மால்வரைச் சிலம்பின் மகிழ்சிறந் தாலும் . . . .[330]

பீலி மஞ்ஞையி னியலிக் கால
தமனியப் பொற்சிலம் பொலிப்ப வுயர்நிலை
வான்றோய் மாடத்து வரிப்பந் தசைஇக்
கைபுனை குறுந்தொடி தத்தப் பைபய
முத்த வார்மணற் பொற்கழங் காடும் . . . .[335]

பட்டின மருங்கி னசையின் முட்டில்

பொருளுரை:

செல்வ வளம் கொழிக்கும் அங்குள்ள வானளாவிய, ஓங்கி உயர்ந்த மாடங்களில் மகளிர் வரிப்பந்து விளையாடுவர். அந்த மகளிர் இடுப்பில் மென்மையான ஆடைகளின் மேல் முத்தாரங்களைக் கோத்து அணிந்திருப்பர். கையிலே பூண் வளையலும், காலிலே தங்கச் சிலம்பும் கொண்ட அவர்கள் பொன்னணிகள் ஒலிப்ப அவர்கள் பந்தாடும்போது மலைக்காடுகளில் மகிழ்ச்சி பொங்க மயில்கள் ஆடுவது போல இருக்கும். கொன்றைப் பூக்கள் பனியில் தவழ்ந்து ஆடுவது போலவும் இருக்கும். மாடங்களில் ஓடியாடிக் கையால் தட்டி விளையாடுவது வரிப்பந்து. மணல் வெளியில் விளையாடுவது பொற்கழங்கு. முத்துக்கள் கிடக்கும் மணலில் பொன்னால் செய்த கழங்குகளைத் தூக்கிப் போட்டு விளையாடும்போது அவர்களது கைகளில் உள்ள வளையல்கள் தத்தித் தத்தி ஆடும். பந்து விளையாட்டில் சலிப்பு தோன்றும் போது கழங்கு விளையாடினர் போலும். பட்டினப் பகுதியில் ஆண்கள் கண்டு மகிழும் ஆட்டுச் சண்டை, கோழிச் சண்டை ஆகியவற்றையும், மகளிர் விளையாடும் பந்து, கழங்கு ஆட்டங்களையும் ஆசையோடு பார்த்து மகிழலாம். பசிக்கும்போது உணவை நாடிச் செல்லலாம்.

பட்டினத்து மக்களின் உபசரிப்பு (337-345)

பைம் கொடி நுடங்கும் பலர் புகு வாயில்
செம் பூ தூய செதுக்கு உடை முன்றில்
கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய
வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின் . . . .[340]

ஈர் சேறு ஆடிய இரும் பல் குட்டி
பல் மயிர் பிணவொடு பாயம் போகாது
நெல்மா வல்சி தீற்றி பல் நாள்
குழி நிறுத்து ஓம்பிய குறும் தாள் ஏற்றை
கொழு நிண தடியொடு கூர் நறா பெறுகுவிர் . . . .[337 - 345]

 

பைங்கொடி நுடங்கும் பலர்புகு வாயிற்
செம்பூத் தூய செதுக்குடை முன்றில்
கள்ளடு மகளிர் வள்ள நுடக்கிய
வார்ந்துகு சின்னீர் வழிந்த குழம்பி . . . .[340]

னீர்ஞ்சே றாடிய விரும்பல் குட்டிப்
பன்மயிர்ப் பிணவொடு பாயம் போகாது
நென்மா வல்சி தீற்றிப் பன்னாட்
குழிநிறுத் தோம்பிய குறுந்தா ளேற்றைக்
கொழுநிணத் தடியடு கூர்நறாப் பெறுகுவிர் . . . .[345]

பொருளுரை:

பரதர் அன்னக்கொடி கட்டி உணவு படைப்பார்கள். உணவு படைக்கும் இடம் பலர் புகு வாயிலைக் கொண்டது. அது செம்மண்ணால் மெழுகப் பட்டிருக்கும். (இக்காலத்தில் சிவப்புக் கம்பள வரவேற்பு தரப்படுவது போல) அன்று அங்கே சிவப்புப் பூக்களை முற்றத்தில் விரித்துப் பரப்பி விருந்தினரை வரவேற்பர். மகளிர் கள் காய்ச்சுவர் அதனை வள்ளத்தில் தருவார்கள். வழிய வழிய ஊற்றி அவர்கள் கள்ளைத் தருவர். அப்போது வழிந்து உகும் கள் நிலத்தைக் குழம்பாக்கிச் சேறாக்கும். அந்தச் சேற்றில் பன்றிக் குட்டிகள் தம் தாயோடு புரளும். பாயம் என்பது பன்றிகளுக்கு அதனை வளர்ப்போர் வார்க்கும் கஞ்சி. இங்குக் கள்ளுச் சேற்றில் புரளும் பன்றிகள் தமக்கு வார்க்கும் கஞ்சியை நாடிச் செல்வதில்லை அன்னக்கொடி கட்டி உணவளிக்கும் இடத்தில் பாயும் கஞ்சியைப் பருகிவிட்டுப் பல நாள் அந்தக் குழிகளிலேயே ஆண்-பன்றியையும் பெண்-பன்றியும் சேர்த்துகொண்டு தங்கி விடும். அங்குச் சென்றால் பன்றிக் கறியுடன் நறாக் கள்ளும் பெறலாம்.

ஓடும் கலங்களை அழைக்கும் கடற்கரைத் துறை (346-351)

வானம் ஊன்றிய மதலை போல
ஏணி சாத்திய ஏற்ற அரும் சென்னி
விண் பொர நிவந்த வேயா மாடத்து
இரவில் மாட்டிய இலங்கு சுடர் ஞெகிழி
உரவு நீர் அழுவத்து ஓடு கலம் கரையும் . . . .[350]

துறை பிறக்கு ஒழிய போகி கறை அடி . . . .[346 - 351]

 

வான மூன்றிய மதலை போல
வேணி சாத்திய வேற்றருஞ் சென்னி
விண்பொர நிவந்த வேயா மாடத்
திரவின் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி
யுரவுநீ ரழுவத் தோடுகலங் கரையுந் . . . .[350]

துறைபிறக் கொழியப் போகிக் கறையடிக்

பொருளுரை:

விண்ணைத் தொடுவது போல உயர்ந்தோங்கிய மாடத்தின் மேலுள்ள திறந்த வெளியில், வானளாவ ஊன்றிய தூண் போல, ஏணி சாத்தி ஏறமுடியாத உயரத்தில், நடப்பட்டிருக்கும் கம்பத்தில் சுடர் விட்டு எரியும் ஞெகிழியைக் (பந்தத்தைக்) கட்டியிருப்பர். அது கடலில் செல்லும் பெரிய கப்பல்களை (கலம்) இட அடையாளம் காட்டி அழைக்கும்.

தோப்புக் குடிகளில் நிகழும் உபசாரம் (352-362)

குன்று உறழ் யானை மருங்குல் ஏய்க்கும்
வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த
மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பை
தண்டலை உழவர் தனி மனை சேப்பின் . . . .[355]

குன்றுறழ் யானை மருங்கு லேய்க்கும்
வண்டோட்டுத் தெங்கின் வாடுமடல் வேய்ந்த
மஞ்சண் முன்றின் மணநாறு படப்பைத்
தண்டலை யுழவர் தனிமனைச் சேப்பிற் . . . .[355]

பொருளுரை:

கலங்கரை விளக்குப் பகுதியைத் தாண்டிச் சென்றால் மஞ்சள் விளையும் படப்பைப் பகுதியில் தண்டலை உழவர்களின் தனி மனைகளை அடையலாம். அந்தத் தனிமனை குன்றுபோல் உயர்ந்திருக்கும். யானைக்கால் போல் நான்கு கால் நட்டு அதன் பரண்மீது கட்டப்பட்டிருக்கும். அது தென்னங் கீற்றுகளால் வேயப்பட்டிருக்கும். அங்கு சென்றால் விருந்துணவு பெறலாம்.

தாழ் கோள் பலவின் சூழ் சுளை பெரும் பழம்
வீழ் இல் தாழை குழவி தீம் நீர்
கவை முலை இரும் பிடி கவுள் மருப்பு ஏய்க்கும்
குலை முதிர் வாழை கூனி வெண் பழம்
திரள் அரை பெண்ணை நுங்கொடு பிறவும் . . . .[360]

தீம் பல் தாரம் முனையின் சேம்பின்
முளை புற முதிர் கிழங்கு ஆர்குவிர் பகல் பெயல் . . . .[352 - 362]

 

றாழ்கோட் பலவின் சூழ்சுளைப் பெரும்பழம்
வீழி றாழைக் குழவித் தீம்நீர்க்
கவைமுலை யிரும்பிடிக் கவுண்மருப் பேய்க்குங்
குலைமுதிர் வாழைக் கூனி வெண்பழந்
திரளரைப் பெண்ணை நுங்கொடு பிறவுந் . . . .[360]

தீம்ப· றார முனையிற் சேம்பின்
முளைப்புற முதிர்கிழங் கார்குவிர் பகற்பெயன்

பொருளுரை:

தண்டலை உழவர் விருந்தில் பலாச்சுளை, பதநீர், இளநீர், மரத்திலேயே பழுத்த வாழைப்பழம், பனை நுங்கு, முதிர்ந்த சேப்பங் கிழங்கு அவியல் முதலானவை படைக்கப் படும். பலாப்பழம் தாழ்ந்த வேரில் பழுத்தது. விழுதில்லாத தாழை என்பது தென்னை மரத்தையும், பனை மரத்தையும் குறிக்கும். இந்தத் தாழையின் இளங் குருத்துகளைச் சீவிப் பெற்ற வடிநீர் பருகலாம். குலையிலேயே முதிர்ந்து கனிந்து தொங்கும் வாழைப்பழம் தரப்படும். உரித்தால் வெள்ளையாக இருப்பதால் வாழைப்பழத்தை வெண்பழம் என்று பாடல் குறிப்பிடுகிறது. இது இரண்டு முலைக்காம்புகள் கொண்ட பெண்யானையின் தந்தம் போல் இருக்கும். அடி பருத்து ஓங்கியுள்ள பனைமரத்தின் நுங்கும் வெண்பழம் போன்றது. இவற்றை உண்டு சலிக்கும் போது நல்லுணவு (நெல்லஞ்சோறு) பெறலாம். அந்தச் சோற்றுக்குச் சேப்பங் கிழங்குக் குழம்பு. இப்படி வயிறார உண்பீர்கள்.

ஒதுக்குப் புற நாடுகளின் வளம் (363-371)

மழை வீழ்ந்து அன்ன மா தாள் கமுகின்
புடை சூழ் தெங்கின் மு புடை திரள் காய்
ஆறு செல் வம்பலர் காய் பசி தீர . . . .[365]

சோறு அடு குழிசி இளக விழூஉம்
வீயா யாணர் வளம் கெழு பாக்கத்து

மூலப் பாடலுக்கு இங்கு சொடுக்கவும்

ஓசை ஒழுங்குடன் மூலப்படல்

×

மழைவீழ்ந் தன்ன மாத்தாட் கமுகின்
புடைசூழ் தெங்கின் முப்புடைத் திரள்கா
யாறுசெல் வம்பலர் காய்பசி தீரச் . . . .[365]

சோறடு குழிசி யிளக விழூஉம்
வீயா யாணர் வளங்கெழு பாக்கத்துப்

பொருளுரை:

அடுத்துப் பாக்குத் தோட்டமும், தென்னந் தோப்பும் சூழ்ந்த பாக்கத்தை அடையலாம். பாக்கு மரங்கள் அடியில் பருத்திருக்கும். மழை மேகங்கள் போல ஓங்கி உயர்ந்திருக்கும். அந்தத் தோப்புகளைச் சூழ்ந்து தென்னந் தோப்பு. அதன் தேங்காயில் மூன்று கண். அக்காய் சோறாக்கும் பானைக்குப் பக்கத்தில் விழும். தேங்காய் போட்டுச் சமைத்தால் சோறு இளகி வருமாம். அந்த வழியாகச் செல்லும் புதியவர்கள் தேங்காயும் தின்னலாம் தேங்காய்ச் சோறும் பெறலாம். பருவ காலம் என்று இல்லாமல் ஆண்டு முழுவதும் பெறப்படுவதால் தென்னையை வீயா யாணர் (அழியாத வருவாய்) என்பர்.

பல் மரம் நீள் இடை போகி நல் நகர்
விண் தோய் மாடத்து விளங்கு சுவர் உடுத்த
வாடா வள்ளியின் வளம் பல தரூஉம் . . . .[370]

நாடு பல கழிந்த பின்றை நீடு குலை . . . .[363 - 371]

பன்மர நீளிடைப் போகி நன்னகர்
விண்டோய் மாடத்து விளங்குசுவ ருடுத்த
வாடா வள்ளியின் வளம்பல தரூஉம் . . . .[370]

நாடுபல கழிந்த பின்றை நீடுகுலைக்

பொருளுரை:

வள்ளிக் கொடி வாடக் கூடியது. வாடா வள்ளி என்பது கற்பகக் கொடி. கற்பக மரம் போல் கற்பகக் கொடியும் கற்பனை. பொன்னால் செய்யப்பட்ட கற்பகப் பூவை மகளிர் தலையில் அணிந்து கொள்வது வழக்கம். அறுகம்புல்லை வாடாவள்ளி என்றனரோ எனவும் எண்ணத் தூண்டுகிறது. இந்த வாடா வள்ளி போல் வளம் தரும் பல நாடுகளைத் தாண்டிச் செல்ல வேண்டும்.

திருவெஃகாவின் சிறப்பும் திருமால் வழிபாடும் (372-392)

காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்து ஆங்கு
பாம்பு அணை பள்ளி அமர்ந்தோன் ஆங்கண்
வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர்

×

காந்தளஞ் சிலம்பிற் களிறுபடிந் தாங்குப்
பாம்பணைப் பள்ளி யமர்ந்தோ னாங்கண்
வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர்க்

பொருளுரை:

அடுத்து பொதும்பர் என்னும் அடர்காடுகள் வழியாகச் செல்ல வேண்டும். குயின் என்பது மேகம். குயின் நுழைந்து செல்ல வேண்டிய அளவுக்கு அந்த அடர்காட்டுப் பொதும்பரில் மரங்கள் ஓங்கி உயர்ந்திருக்கும். வெயில்கூட நுழைய முடியாது. பொதும்பர் மலைப்பகுதியில் இருந்தால் அதனைச் சிலம்பு என்பர். காரணம் மலை எதிரொலிக்கும். காந்தள் பூத்திருக்கும் சிலம்பில் களிறு படிந்திருப்பது போல் பாம்பணையில் திருமால் பள்ளி கொண்டிருப்பான். அவனைத் தொழுது கொண்டே மேலும் செல்லலாம். (இப்போதுள்ள சின்ன காஞ்சி வரதராசப் பெருமாள்) காந்தள் மலர் படம் விரித்திருக்கும் நாகத்துக்கும், களிறு கரியநிறத் திருமாலுக்கும் உவமை.

குறும் கால் காஞ்சி சுற்றிய நெடும் கொடி . . . .[375]

பாசிலை குருகின் புன் புற வரி பூ
கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த
இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல்
நிழல் தாழ் வார் மணல் நீர் முகத்து உறைப்ப
புனல் கால்கழீஇய பொழில்தொறும் திரள் கால் . . . .[380]

சோலை கமுகின் சூல் வயிற்று அன்ன
நீல பை குடம் தொலைச்சி நாளும்
பெரு மகிழ் இருக்கை மரீஇ சிறு கோட்டு

×

குறுங்காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப் . . . .[375]

பாசிலைக் குருகின் புன்புற வரிப்பூக்
காரகற் கூவியர் பாகொடு பிடித்த
விழைசூழ் வட்டம் பால்கலந் தவைபோ
னிழறாழ் வார்மண னீர்முகத் துறைப்பப்
புனல்கால் கழீஇய பொழிறொறுந் திரள்காற் . . . .[380]

சோலைக் கமுகின் சூல்வயிற் றன்ன
நீலப் பைங்குடந் தொலைச்சி நாளும்
பெருமகி ழிருக்கை மரீஇச் சிறுகோட்டுக்

பொருளுரை:

பருத்த அடிமரத்தைக் கொண்டது காஞ்சிமரம். பச்சையான இலைகளையுடைய குருகுக் கொடி அம்மரத்தைச் சுற்றிக்கொண்டு படரும். பூத்திருக்கும் அப்பூவிதழின் அடிப்பகுதியில் வரிகள் காணப்படும். (மாதவிக் கொடியொடு குருகுக்கொடி ஒப்புமை உடையது) (குருகுக்கொடி காஞ்சி மரத்தைச் சுற்றிக் கொண்டிருப்பது போல் கையைச் சுற்றிக் கொண்டிருக்கும் வளையலும் குருகு எனப்பட்டது) குருகு சுற்றிய காஞ்சியின் நிழலானது மணலில் தேங்கியிருக்கும் நீரில் விழும். அந்த நிழலினைப் போலக் கூவியர் சுடும் வட்டம் (அப்பம்) இருக்கும். சுட்ட வட்ட-அப்பத்தை அவர்கள் பாலில் கலந்து தருவார்கள். காரகல் என்னும் கருமையான வடையைச் சட்டியில் திரியிழையாகச் சுற்றி வட்டம் சுடுவார்கள். (இக்காலத்து ஜாங்கிரி போன்றது அக்காலத்து வட்டம் என்னும் பண்ணியம்.) காஞ்சி மகிழ்ச்சிப் பூங்காவில் இப்பண்ணியம் (பலகாரம்) பெறலாம். பொழில்களில் புனல் பாய்ந்து மரத்தின் கால்களைக் கழுவிச் செல்லும். பொழிலில் வைத்திருக்கும் நீலப் பைங்குடங்கள் பாக்கு மரத்தின் பாளை கருவுற்றிருப்பது போல் இருக்கும். நீலம் என்னும் கள் வகையைக் கொண்டிருப்பது நீலப் பைங்குடம். இந்தக் குடத்தைத் தொலைச்சலாம், அதாவது முற்றிலுமாகப் பருகலாம். இந்தப் பகுதியைப் பெருமகிழ் இருக்கை என்பர். (பெருமகழ்ச்சி தரும் இருப்பிடம்) இந்த இருப்பிடங்களை மருவிக்கொண்டு (பயன்படுத்திக் கொண்டு) செல்லலாம்.

குழவி திங்கள் கோள் நேர்ந்து ஆங்கு
சுறவு வாய் அமைத்த சுரும்பு சூழ் சுடர் நுதல் . . . .[385]

நறவு பெயர்த்து அமர்த்த நல் எழில் மழை கண்
மடவரல் மகளிரொடு பகல் விளையாடி

மூலப் பாடலுக்கு இங்கு சொடுக்கவும்

ஓசை ஒழுங்குடன் மூலப்படல்

×

குழவித் திங்கட் கோணேர்ந் தாங்குச்
சுறவுவா யமைத்த சுரும்புசூழ் சுடர்நுத . . . .[385]

னறவுபெயர்த் தமர்த்த நல்லெழின் மழைக்கண்
மடவரன் மகளிரொடு பகல்விளை யாடிப்

பொருளுரை:

மடவரல் என்போர் மடப்பத் தன்மை கொண்ட பருவம் எய்தாத இளம்பெண்கள். அவர்கள் இளநிலாவின் கோண் வளைவைப் போன்ற நெற்றியைக் கொண்டவர்கள். சுறவு என்னும் கரும்பாம்பின் வாயிலிருந்து வெளிவருவது போல் கூந்தலில் வண்டு மொய்க்க மலரும் நெற்றியைக் கொண்டவர்கள். நாவுக்கு இன்பம் தரும் நறவு என்னும் தேனைப் பிழிந்து வைத்தாற் போன்று கண்ணுக்கு இன்பம் தரும் கட்டழகு எழிலாக வாய்க்கப் பெற்றவர்கள். மழை போன்ற அவர்களது ஈரக் கண்களில் மடப்பத் தன்மை காணப்படும். பகலெல்லாம் இவர்களோடு விளையாடிக் கொண்டே செல்லலாம்.

பெறற்கு அரும் தொல் சீர் துறக்கம் ஏய்க்கும்
பொய்யா மரபின் பூ மலி பெரும் துறை
செவ்வி கொள்பவரோடு அசைஇ வயின் . . . .[390]

அரும் திறல் கடவுள் வாழ்த்தி சிறிது நும்
கரும் கோட்டு இன் இயம் இயக்கினிர் கழிமின் . . . .[372 - 392]

மூலப் பாடலுக்கு இங்கு சொடுக்கவும்

ஓசை ஒழுங்குடன் மூலப்படல்

×

பெறற்கருந் தொல்சீர்த் துறக்க மேய்க்கும்
பொய்யா மரபிற் பூமலி பெருந்துறைச்
செவ்விகொள் பவரோ டசைஇ யவ்வயி . . . .[390]

னருந்திறற் கடவுள் வாழ்த்திச் சிறிதுநுங்
கருங்கோட் டின்னிய மியக்கினிர் கழிமின்

பொருளுரை:

வேனில் விழாதான் பூமலி பெருந்துறைச் செவ்வி என்று போற்றப்படுகிறது. (சிலப்பதிகாரம் போற்றும் இந்திர விழா போன்றது காஞ்சியில் நடைபெற்ற திருமாலின் திருவிழா) துறக்கம் என்னும் சுவர்க்கம் பழமைச் சிறப்பினை உடையது. அதனைப் பெறுவதென்பது இயலாத ஒன்று. துறக்கம் என்பது பொய்மை. (காஞ்சி வேனில் விழா பெற்று மகிழக்கூடிய துறக்கம்.) உண்மையில் பொய்யாத மரபினைக் கொண்டு மண்ணுலகில் இருக்கும் துறக்கந்தான் வேனில் காலமும் அதில் கொண்டாடப்படும் விழாவும். காஞ்சியில் இந்த விழா நடைபெறும். இந்த விழாவைக் கொண்டாடுபவர்களோடு சேர்ந்து நீங்களும் கொண்டாடிக்கொண்டு அங்குச் சிலநாள் தங்குங்கள். அக்காலத்தில் கடவுளை (இந்திரன், காமன்) வாழ்த்திப் பாடுங்கள். \உங்களிடம் உள்ள கருங்கோட்டு இனிய யாழை மீட்டிக் கொண்டே பாடுங்கள். இனிய இசைக் கருவிகளையம் சேர்த்து இசைத்துக்கொண்டே பாடுங்கள். பின் உங்களின் குறியிடம் நோக்கி வழிமேற் செல்லுங்கள்.

கச்சி மூதூரின் சிறப்பு (393-411)

காழோர் இகழ் பதம் நோக்கி கீழ
நெடும் கை யானை நெய் மிதி கவளம்
கடும் சூல் மந்தி கவரும் காவில் . . . .[395]

களிறு கதன் அடக்கிய வெளிறு இல் கந்தின்

மூலப் பாடலுக்கு இங்கு சொடுக்கவும்

ஓசை ஒழுங்குடன் மூலப்படல்

×

காழோ ரிகழ்பதம் நோக்கிக் கீழ
நெடுங்கை யானை நெய்ம்மிதி கவளங்
கடுஞ்சூன் மந்தி கவருங் காவிற் . . . .[395]

களிறுகத னடக்கிய வெளிறில் கந்திற்

பொருளுரை:

இளந்திரையன் ஊர் கச்சி. அம் மாநகரத் தெருக்களில் யானைகள் கட்டப்பட்டிருக்கும். காடுகளில் யானைகளைக் குழியில் விழச்செய்து பழக்கிக்கொண்டிருப்பர். காழோர் என்போர் யானைப் பாகர். அவர்கள் சோற்றில் நெய் ஊற்றிப் பிணைந்து கவளமாக்கிப் பழக்கி வைத்திருக்கும் யானைக்கு ஊட்டுவர். இவர்கள் சோர்ந்திருக்கும் காலம் பாரத்து கருவுற்றிருக்கும் மந்தி நெய்ம்மிதி கவளத்தைக் கவர்ந்து சென்று உண்ணும். வெளிறு என்பது யானை கட்டிவைக்கும் இடம். கந்து என்பது பற்றுக்கோடு இங்கு யானையைக் கட்டி வைக்கும் தூண். வெளிறு இல்லாத கந்து என்பது, வைரம் பாயாத இளங் குச்சிகளால் மூடி, யானையை விழச் செய்யாத பற்றுக்கோடு உள்ள இடம். வேறு சில காழோர் வெளிறு இல்லாத கந்தினைப் பயன்படுத்திக் காட்டிலுள்ள யானையைக் குழியில் விழச்செய்து அதன் சினத்தை அடக்கிக் கொண்டிருப்பார்கள்.

திண் தேர் குழித்த குண்டு நெடும் தெருவில்
படை தொலைபு அறியா மைந்து மலி பெரும் புகழ்
கடை கால்யாத்த பல் குடி கெழீஇ
கொடையும் கோளும் வழங்குநர் தடுத்த . . . .[400]

அடையா வாயில் மிளை சூழ் படப்பை

மூலப் பாடலுக்கு இங்கு சொடுக்கவும்

ஓசை ஒழுங்குடன் மூலப்படல்

×

றிண்டேர் குழித்த குண்டுநெடுந் தெருவிற்
படைதொலை பறியா மைந்துமலி பெரும்புகழ்க்
கடைகால் யாத்த பல்குடி கெழீஇக்
கொடையுங் கோளும் வழங்குநர்த் தடுத்த . . . .[400]

வடையா வாயின் மிளைசூழ் படப்பை

பொருளுரை:

கொடுக்கலும் வாங்கலுமாகப் பரபரப்பாக உள்ள தெருக்களில் நடந்து செல்வதுகூட எளிதாக இருக்காது. திண்மையான தேர் சென்றதால் நீண்ட தெருக்கள் குண்டும் குழியுமாக இருக்கும். அத்தெருக்களில் படை வீரர்களின் குடும்பங்கள் வாழும். அக்குடியினர் வலிமையால் புகழ் பெற்றவர்கள். வெளியிடங்களில் படைக்கருவிகளும் கையுமாகத் திரிவர். அவர்கள் அந்த வீரப் புகழைக் கடைக்காலிலே கட்டித் தூக்கி எறிந்து விட்டு வழியில் செல்வோரைத் தடுத்து பிடித்து வந்து கொடை வழங்குவதில் ஆர்வம் காட்டுவர். (கடைக்கால் = தண்ணீர் பாயும் கடைமடை) திரையன் அரண்மனையின் வாயில் கதவம் எப்போதும் அடைக்கப் படாமல் திறந்தே இருக்கும். · காவல் புரிவோரும் தம் வீரத்தை வெளிப்படுத்தாமல் வழிப் போக்கர்களைத் தடுத்து அரசனிடம் கொடை பெறச் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பர்.

நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக ஒருவர் பயந்த பல் இதழ்
தாமரை பொகுட்டின் காண்வர தோன்றி

மூலப் பாடலுக்கு இங்கு சொடுக்கவும்

ஓசை ஒழுங்குடன் மூலப்படல்

×

நீனிற வுருவி னெடியோன் கொப்பூழ்
நான்முக வொருவற் பயந்த பல்லிதழ்த்
தாமரைப் பொகுட்டிற் காண்வரத் தோன்றிச்

பொருளுரை:

காஞ்சிமா நகரமானது நீலநிற உருவம் கொண்ட திருமால் படுத்திருப்பது போலவும், திரையனின் அரண்மனையானது திருமாலின் கொப்பூழில் தோன்றிய நான்முகன் அமர்ந்திருக்கும் தாமரையின் பொகுட்டு போலவும் அமைந்திருக்கும். காஞ்சிமா நகரம் தாமரை என்றால் அரசன் திரையனின் அரண்மனை அதன் பொகுட்டு. தாமரைப் பூவில் உள்ள நடுமேடு (அரசன் பிரமன் போன்றவன்)

சுடுமண் ஓங்கிய நெடு நகர் வரைப்பின் . . . .[405]

இழுமென் புள்ளின் ஈண்டு கிளை தொழுதி
கொழு மென் சினைய கோளியுள்ளும்
பழம் மீக்கூறும் பலாஅ போல
புலவு கடல் உடுத்த வானம் சூடிய
மலர் தலை உலகத்துள்ளும் பலர் தொழ . . . .[410]

விழவு மேம்பட்ட பழ விறல் மூதூர் . . . .[393 - 411]

மூலப் பாடலுக்கு இங்கு சொடுக்கவும்

ஓசை ஒழுங்குடன் மூலப்படல்

×

சுடும ணோங்கிய நெடுநகர் வரைப்பி . . . .[405]

னிழுமென் புள்ளி னீண்டுகிளைத் தொழுதிக்
கொழுமென் சினைய கோளி யுள்ளும்
பழமீக் கூறும் பலாஅப் போலப்
புலவுக் கடலுடுத்த வானஞ் சூடிய
மலர்தலை யுலகத் துள்ளும் பலர்தொழ . . . .[410]

விழவுமேம் பட்ட பழவிறன் மூதூ

பொருளுரை:

காஞ்சிமாநகரம் எப்போதும் விழாக் கொலமாக இருக்கும். காஞ்சிமா நகரத்தின் வீடுகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டிருந்தன. கிளையில் பழுக்கும் பழங்கள் பலவற்றுள்ளும் பலா சிறந்தது. அதில் மொய்க்கும். இழுமென் புள் என்பது . உலகம் புலவு நாற்றம் அடிக்கும் கடலை ஆடையாக உடுத்திக் கொண்டுள்ளது. வானத்தை முடியாகச் சூடிக்கொண்டுள்ளது. பலாப்பழத்தின் சுளைகளில் பழம் தின்னும் கொசு-ஈக்கள் மொய்ப்பது போல உலகின் பல்வேறு திசைகளிலுள்ள மக்கள் விழாக் காலத்தில் காஞ்சிமா நகருக்கு வந்து தொழுவர். விழாக் கொண்டாடுவதில் பழம் பெருமை கொண்டது காஞ்சிமாநகரம்.

இளந்திரையனின் போர் வெற்றி (412-420)

அம் வாய் வளர் பிறை சூடி செ வாய்
அந்தி வானத்து ஆடு மழை கடுப்ப
வெண் கோட்டு இரும் பிணம் குருதி ஈர்ப்ப
ஈரைம்பதின்மரும் பொருது களத்து அவிய . . . .[415]

பேர் அமர் கடந்த கொடுஞ்சி நெடும் தேர்
ஆரா செருவின் ஐவர் போல
அடங்கா தானையோடு உடன்று மேல்வந்த
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்து
கச்சியோனே கை வண் தோன்றல் . . . .[412 - 420]

மூலப் பாடலுக்கு இங்கு சொடுக்கவும்

ஓசை ஒழுங்குடன் மூலப்படல்

×

ரவ்வாய் வளர்பிறைச் சூடிச் செவ்வா
யந்தி வானத் தாடுமழை கடுப்ப
வெண்கோட் டிரும்பிணங் குருதி யீர்ப்ப
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தவியப் . . . .[415]

பேரமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந்தே
ராராச் செருவி னைவர் போல
வடங்காத் தானையோ டுடன்றுமேல் வந்த
வொன்னாத் தெவ்வ ருலைவிடத் தார்த்துக்
கச்சி யோனே கைவண் டோன்ற . . . .[420]

பொருளுரை:

காஞ்சி அரசன் இளந்திரையன் கொடையையே கைக்கு வளமாகப் பெற்றுத் தோன்றியவன். நூற்றுவரை வென்ற ஐவர் போல பல போர்களில் வெற்றி கண்டவன். (பிறவிக் கொடையாளி) (வலிமையா, வளமா?) கையின் வலிமையை விடக் கையின் வளமே (கொடையே) மேலானது. போர்களத்தில், வெட்டப்பட்ட யானையின் வெண்ணிறத் தந்தத்தைச் சிவந்த குருதி-வெள்ளம் ஈர்த்துச் செல்லும் காட்சியானது வெயில் மறையும் மாலைக் காலத்தில் மழைமேகம் வெண்ணிறப் பிறை நிலாவைச் சூடிச் சிவந்து காணப்படுவது போல் இருக்கும். பிறை சூடிய சிவபெருமான் போல - நினைவோட்டம் தன் பகைவர்களைப் போர்க்களத்தில் மாயச் செய்த இளந்திரையன், நூற்றுவரைப் போர்க்களத்தில் மாயச் செய்த ஐவர் போரிடத் தேரில் சென்றது போலச் சென்று, வெற்றி ஆரவாரத்தோடு, தேரில் திரும்பி வந்த வள்ளல் ஆவான்.

அரசனது முற்றச் சிறப்பு (421-435)

நச்சி சென்றோர்க்கு ஏமம் ஆகிய
அளியும் தெறலும் எளிய ஆகலின்
மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ்பட
நயந்தோர் தேஎம் நன் பொன் பூப்ப
நட்பு கொளல் வேண்டி நயந்திசினோரும் . . . .[425]

துப்பு கொளல் வேண்டிய துணையிலோரும்
கல் வீழ் அருவி கடல் படர்ந்து ஆங்கு
பல் வேறு வகையின் பணிந்த மன்னர்

மூலப் பாடலுக்கு இங்கு சொடுக்கவும்

ஓசை ஒழுங்குடன் மூலப்படல்

×

னச்சிச் சென்றோர்க் கேம மாகிய
வளியுந் தெறலு மெளிய வாகலின்
மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ்பட
நயந்தோர் தேஎம் நன்பொன் பூப்ப
நட்புக்கொளல் வேண்டி நயந்திசி னோருந் . . . .[425]

துப்புக்கொளல் வேண்டிய துணையி லோருங்
கல்வீ ழருவி கடற்படர்ந் தாங்குப்
பல்வேறு வகையிற் பணிந்த மன்ன

பொருளுரை:

திரையனை விரும்பி அவனிடம் செல்பவர்களுக்கு அவன் பாதுகாவலாக விளங்குவான். நண்பர்கள் விரும்பியதை அவன் மழைபோல் அள்ளித் தருவான். பகைவர்களை அவன் தீயைப்போல் சுட்டெரிப்பான். அவனை எதிர்த்துப் போரிட்டவர்களின் நிலம் பாழாகும். அவனை நயந்து வாழ்வோரின் நிலம் பொன் கொழித்துப் பூக்கும். மலையிலிருந்து இறங்கும் அருவி கடலை நோக்கிச் செல்வது போல், அரசர்களும் மக்களும் அவனது நட்பைப் பெறுவதற்காக அவனைச் சூழ்ந்து வந்து கொண்டேயிருப்பர். துணை இல்லாதவர்கள் அவனது துணை-வலிமையைப் பெறுவதற்காக அவனைச் சூழ்ந்து வந்து கொண்டேயிருப்பர். அவனைச் சுற்றிப் படர்ந்து கொண்டேயிருப்பர். பணிந்து கொண்டேயிருப்பர்.

இமையவர் உறையும் சிமைய செ வரை
வெண் திரை கிழித்த விளங்கு சுடர் நெடும் கோட்டு . . . .[430]

பொன் கொழித்து இழிதரும் போக்கு அரும் கங்கை
பெரு நீர் போகும் இரியல் மாக்கள்
ஒரு மர பாணியில் தூங்கி ஆங்கு
தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇ
செவ்வி பார்க்கும் செழு நகர் முற்றத்து . . . .[421 - 435]

மூலப் பாடலுக்கு இங்கு சொடுக்கவும்

ஓசை ஒழுங்குடன் மூலப்படல்

×

ரிமையவ ருறையுஞ் சிமையச் செவ்வரை
வெண்டிரை கிழித்த விளங்குசுடர் நெடுங்கோட்டுப் . . . .[430]

பொன்கொழித் திழிதரும் போக்கருங் கங்கைப்
பெருநீர் போகு மிரியன் மாக்க
ளருமரப் பாணியிற் தூங்கி யாங்குத்
தொய்யா வெறுக்கையடு துவன்றுபு குழீஇச்
செவ்வி பார்க்குஞ் செழுநகர் முற்றத்துப் . . . .[435]

பொருளுரை:

இமையோர் உறையும் சிமையம் ஆகையால் இமையம். (ஹிமம் = பனிவடமொழி), இமயமலை = பனிமலை, அந்தச் சிறந்த இமையமலையின் வெள்ளைத் திரையைக் கிழித்துக் கொண்டு கங்கையாறு இறங்கிக் கொண்டிருக்கும். அது அந்த மலையில் விளங்கும் சுடர் போல் கங்கை இறங்கும். தன் பொலிவைக் காட்டிக் கொண்டு இறங்கும். கங்கையைச் படகின் துணை இல்லாமல் கடந்து செல்ல இயலாதாகையால் அது போக்கருங் கங்கை. கங்கையாற்றில் படகில் செல்வதற்குப் படகுக்காகக் கரையில் காத்திருக்கும் மக்களைப் போல இளந்திரையனின் முகப்பார்வை கிட்டாதா என்று அவனைப் பணியும் மன்னர்கள் காத்துக் கிடப்பார்கள். மதிப்பில் தொய்வு இல்லாத பெருஞ் செல்வத்துடன் வந்து நெருங்கி நின்று காத்துக் கிடப்பர்.

இளந்திரையன் மந்திரச் சுற்றத்தொடு அரசு வீற்றிருக்கும் காட்சி (436-447)

பெரும் கை யானை கொடும் தொடி படுக்கும்
கரும் கை கொல்லன் இரும்பு விசைத்து எறிந்த
கூட திண் இசை வெரீஇ மாடத்து
இறை உறை புறவின் செம் கால் சேவல்
இன் துயில் இரியும் பொன் துஞ்சு வியல் நகர் . . . .[440]

மூலப் பாடலுக்கு இங்கு சொடுக்கவும்

ஓசை ஒழுங்குடன் மூலப்படல்

×

பெருங்கை யானைக் கொடுந்தொடி படுக்குங்
கருங்கைக் கொல்ல னிரும்புவிசைத் தெறிந்த
கூடத் திண்ணிசை வெரீஇ மாடத்
திறையுறை புறவின் செங்காற் சேவ
லின்றுயி லிரியும் பொன்றுஞ்சு வியனகர்க் . . . .[440]

பொருளுரை:

அரசன் இளந்திரையனின் அரண்மனை ஓங்கி உயர்ந்த மாடங்களைக் கொண்டது. அதில் புறாக்கள் வாழும். அவற்றில் ஆண்-புறாக்களின் கால்கள் சிவப்புநிறம் கொண்டவை. கொல்லர் போர்-யானைகளின் தந்தங்களுக்கு காப்பு வளையல்கள் செய்வார்கள். அதற்காக அவர்கள் உலைக்கூடத்தில் இரும்பைத் தட்டும் ஓசையைக் கேட்டு அஞ்சி வெருவி அங்குள்ள மாடப் புறாக்களின் சேவல்கள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கும். அரண்மனையில் செல்வம் பயன்படுத்த முடியாமல் தூங்கும்.

குண கடல் வரைப்பின் முந்நீர் நாப்பண்
பகல் செய் மண்டிலம் பாரித்து ஆங்கு
முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டுநர்க்கும்
வேண்டுபவேண்டுப வேண்டினர்க்கு அருளி
இடை தெரிந்து உணரும் இருள் தீர் காட்சி . . . .[445]

கொடை கடன் இறுத்த கூம்பா உள்ளத்து
உரும்பு இல் சுற்றமோடு இருந்தோன் குறுகி . . . .[436 - 447]

மூலப் பாடலுக்கு இங்கு சொடுக்கவும்

ஓசை ஒழுங்குடன் மூலப்படல்

×

குணகடல் வரைப்பின் முந்நீர் நாப்பட்
பகல்செய் மண்டிலம் பாரித் தாங்கு
முறைவேண்டு நர்க்குங் குறைவேண்டு நர்க்கும்
வேண்டுப வேண்டுப வேண்டினர்க் கருளி
யிடைத்தெரிந் துணரு மிருடீர் காட்சிக் . . . .[445]

கொடைக்கட னிறுத்த கூம்பா வுள்ளத்
துரும்பில் சுற்றமோ டிருந்தோற் குறுகிப்

பொருளுரை:

உரும்பில் சுற்றம் என்பது அரசனின் உரிமைச் சுற்றம். ஆட்சி உரிமை பெற்ற அலுவலர்களும் இதனுள் அடங்குவர். அவனைப் போலவே அவனது இந்த உரும்பில் சுற்றத்தாரும் கூம்பாமல் மலர்ந்திருக்கும் உள்ளம் படைத்தவர். கொடை வழங்குதலையும் தமது அன்றாடக் கடமையாகக் கொண்டு செயல்படுபவர்கள். அரசன் இளந்திரையன் முறை (நீதி) வேண்டுபவர்களுக்கு முறை வழங்குவான். கீழைக் கடலில் தோன்றி வெளிச்சம் தரும் பகலவன் போல நீதி வழங்குவான். தனக்கு இன்ன குறை உள்ளது, அதனைத் தீர்த்து வைக்க வேண்டும் என்று வேண்டி வந்தவர்களுக்கு அவர்களின் குறையைத் தீர்த்து வைப்பான். மற்றும், யார் எதை வேண்டுகிறார்களோ அவர்களுக்கு அதனை அருளி உதவுவான். உரும்பில் சுற்றத்தோடு காட்சி தரும் அவனிடம் நீங்கள் செல்ல வேண்டும்.

பாணன் அரசனைப் போற்றிய வகை (448-464)

பொறி வரி புகர்முகம் தாக்கிய வயமான்
கொடுவரி குருளை கொள வேட்டு ஆங்கு
புலவர் பூண் கடன் ஆற்றி பகைவர் . . . .[450]

கடி மதில் எறிந்து குடுமி கொள்ளும்
வென்றி அல்லது வினை உடம்படினும்
ஒன்றல் செல்லா உரவு வாள் தட கை
கொண்டி உண்டி தொண்டையோர் மருக
மள்ளர் மள்ள மறவர் மறவ . . . .[455]

செல்வர் செல்வ செரு மேம்படுந
வெண் திரை பரப்பின் கடும் சூர் கொன்ற
பைம் பூண் சேஎய் பயந்த மா மோட்டு
துணங்கை அம் செல்விக்கு அணங்கு நொடித்து ஆங்கு
தண்டா ஈகை நின் பெரும் பெயர் ஏத்தி . . . .[460]

வந்தேன் பெரும வாழிய நெடிது என
இடன் உடை பேரியாழ் முறையுளி கழிப்பி
கடன் அறி மரபின் கைதொழூஉ பழிச்சி
நின் நிலை தெரியா அளவை நிலை . . . .[448 - 464]

மூலப் பாடலுக்கு இங்கு சொடுக்கவும்

ஓசை ஒழுங்குடன் மூலப்படல்

×

பொறிவரிப் புகர்முகந் தாக்கிய வயமான்
கொடுவரிக் குருளை கொளவேட் டாங்குப்
புலவர் பூண்கட னாற்றிப் பகைவர் . . . .[450]

கடிமதி லெறிந்து குடுமி கொள்ளும்
வென்றி யல்லது வினையுடம் படினு
மொன்றல் செல்லா வுரவுவாட் டடக்கைக்
கொண்டி யுண்டித் தொண்டையோர் மருக
மள்ளர் மள்ள மறவர் மறவ . . . .[455]

செல்வர் செல்வ செருமேம் படுந
வெண்டிரைப் பரப்பிற் கடுஞ்சூர்க் கொன்ற
பைம்பூட் சேஎய் பயந்தமா மோட்டுத்
துணங்கையஞ் செல்விக் கணங்குநொடித் தாங்குத்
தண்டா வீகைநின் பெரும்பெய ரேத்தி . . . .[460]

வந்தேன் பெரும வாழிய நெடிதென
விடனுடைப் பேரியாழ் முறையுளிக் கழிப்பிக்
கடனறி மரபிற் கைதொழூஉப் பழிச்சி
நின்னிலை தெரியா வளவை யந்நிலை

பொருளுரை:

உரும்பில் சுற்றத்தோடு காட்சி தரும் அவனிடம் நீங்கள் சென்று அவனை வாழ்த்த வேண்டும். இப்படி யெல்லாம் சொல்லி அவனை வாழ்த்தலாம். பொறிவரிப் புகர்முகம் = புள்ளிகளையும் கோடுகளையும் முகத்தில் கொண்ட யானை, வயமான் = சிங்கம். கொடுவரிக் குறளை = வளைந்த கோடுகளையுடைய புலியின் குட்டி. யானை சிங்கத்தைத் தாக்கியது. தாக்கப்பட்ட சிங்கம் புலிக்குட்டிகளைத் தாக்க விரும்பி எழுந்தது போல இளந்திரையன் பகைவர்மேல் போருக்கெழுந்தான். மக்கள்யானை, திரையன்- சிங்கம், பகையரசர்புலி. முறையும், குறையும், வேண்டுவனவும் வழங்கும்படி வேண்டிய வண்ணம் இளந்திரையனாகிய சிங்கத்தை மக்களாகிய யானைக்கூட்டம் தாக்கியது. இளந்திரையன் புலவர்களுக்கும் மக்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளையெல்லாம் செய்துவிட்டுச் சிங்கம் புலிக்குட்டியின் மீது பாய்வது போல் பகைவர்கள் மீது பாய்ந்தான். இவ்வாறு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும். பகைவர்களின் காவல் மதில்கள் அவனுக்கு ஒரு பொருட்டு அன்று. பகைவர்களின் தலை முடிகளைப் (கிரீடங்களைப்) பறித்து வந்தான். அவன் கையிலிருந்த அவனது வாள் கண்டது வெற்றியைத் தவிர வேறொன்றும் இல்லை. எனவே அவனது வினையுடம்பைச் சுட்டாலும் அவனது வாள் அவனுடன் ஒன்றாக வைத்துச் சுடப்படும். பகைநாட்டை வென்று பெற்ற கொண்டிப் பண்டங்களே தொண்டைநாட்டுப் படைவீரர்களின் உணவு. இப்படிப்பட்ட தொண்டையர்களின் மரபுவழித் தோன்றலே! – 1 மள்ளர் = உடல் திற வீரர். மறவர் = படைத்திற வீரர். மள்ளருக்கும் மள்ளனே! – 2, மறவருக்கும் மறவனே! – 3, செல்வர்களுக்கும் செல்வனே! – 4, போரில் மேம்பட்டவனே! – 5, துணங்கையஞ் செல்வி = பார்வதி = அம்மை = மாயவள். இவள் மாமோடாகிய ஆகாயத்தில் நடனமாடினாள். அணங்கு = மருளாட்டம். கடலிலே சூரபன்மாவைக் கொன்றவன் முருகன். அவனை உண்டாக்கித் தந்தவள் பார்வதி. (இவள் மாயவள் உருவம் கொண்டு மரக்கால் ஆட்டம் ஆடினாள். இதனைக்காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள். மாயவள் ஆடிய மரக்கால் ஆடல்என்று மாதவி ஆடிய பதினோர் ஆடல்களில் ஒன்றாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. – கடலாடு காதை) அருட்தெய்வமாகிய அம்மை அணங்காட்டம் ஆடிய போது அள்ளித் தரும் கொடையால் அவளை ஆற்றுவிப்பது போல வந்தவர்க் கெல்லாம் வரையறை இல்லாமல் வாரி வழங்கும் கொடையால் திரையன் என்று பெயர் பெற்றவனே (திரை = கடல் அலை) – 6 … பெரும இப்படிப்பட்ட நின் பெரும்புகழைப் பாடிக்கொண்டு வந்துள்ளேன். நெடிது வாழிய! … என்று சொல்லிக்கொண்டே உங்களிடமுள்ள பேரியாழை முறையாக மீட்டுங்கள். (பேரியாழ் மீட்டியதால் இவன் பெரும்பாணன். இவனை ஆற்றுப் படுத்தியதால் இந்நூல் பெரும்பாணாற்றுப் படை.) உங்கள் கடமைகளை உங்களுக்குத் தெரிந்த அளவில் செய்து அவனைக் கைகூப்பித் தொழுங்கள். உங்களது வறுமை நிலையை நீங்கள் சொல்ல வேண்டியதில்லை. அவனே தெரிந்து கொண்டு செயல்படுவான்.

பாணர்க்கு விருப்புடன் உணவளித்தல் (465-480)

நாவல் அம் தண் பொழில் வீவு இன்று விளங்க . . . .[465]

நில்லா உலகத்து நிலைமை தூக்கி
நிலை அணுகல் வேண்டி நின் அரை
பாசி அன்ன சிதர்வை நீக்கி
ஆவி அன்ன அவிர் நூல் கலிங்கம்
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் உடீஇ . . . .[470]

கொடு வாள் கதுவிய வடு ஆழ் நோன் கை
வல்லோன் அட்ட பல் ஊன் கொழும் குறை
அரி செத்து உணங்கிய பெரும் செந்நெல்லின்
தெரி கொள் அரிசி திரள் நெடும் புழுக்கல்
அரும் கடி தீம் சுவை அமுதொடு பிறவும் . . . .[475]

விருப்பு உடை மரபின் கரப்பு உடை அடிசில்
மீன் பூத்து அன்ன வான் கலம் பரப்பி
மகமுறை மகமுறை நோக்கி முகன் அமர்ந்து
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி
மங்குல் வானத்து திங்கள் ஏய்க்கும் . . . .[465 - 480]

மூலப் பாடலுக்கு இங்கு சொடுக்கவும்

ஓசை ஒழுங்குடன் மூலப்படல்

×

நாவலந் தண்பொழில் வீவின்று விளங்க . . . .[465]

நில்லா வுலகத்து நிலைமை தூக்கி
யந்நிலை யணுகல் வேண்டி நின்னரைப்
பாசி யன்ன சிதர்வை நீக்கி
யாவி யன்ன அவிர்நூற் கலிங்க
மிரும்பே ரொக்கலொ டொருங்குட னுடீஇக் . . . .[470]

கொடுவாள் கதுவிய வடுவாழ் நோன்கை
வல்லோ னட்ட பல்லூன் கொழுங்குறை
யரிசெத் துணங்கிய பெருஞ்செந் நெல்லின்
தெரிகொ ளரிசித் திரணெடும் புழுக்க
லருங்கடித் தீஞ்சுவை யமுதொடு பிறவும் . . . .[475]

விருப்புடை மரபிற் கரப்புடை யடிசின்
மீன்பூத் தன்ன வான்கலம் பரப்பி
மகமுறை மகமுறை நோக்கி முகனமர்ந்
தானா விருப்பிற் றானின் றூட்டி
மங்குல் வானத்துத் திங்க ளேய்க்கு . . . .[480]

பொருளுரை:

இளந்திரையன் உணவு, உடை, பரிசில் தந்து பேணும் பாங்கு இப்பகுதியில் கூறப்படுகிறது. தன்னைத் தானே சீர்தூக்கிப் பார்த்துக்கொண்டான். உலகம் ஒரு நிலையில் நிற்பதில்லை. பொருள்களும் எண்ணங்களும் மாறி மாறி உருண்டோடிக் கொண்டே இருக்கும். உலகில் நிலையானது என்பது ஒருவனது செயலால் பிறருக்கு விளைவதை எண்ணிப் பார்க்கும் புகழோ, இகழோதான். இளந்திரையன் தனக்கு நற்பெயர் உலகில் அழிவு இல்லாமல் நிற்க வேண்டும் என்று விரும்பினான். அதற்காகத் தன் செயல்களைத் தானே சீர்தூக்கிப் பார்த்துக் கொண்டான். புத்தாடை - கிணற்றுப் பாசி போல் அழுக்குப் படிந்து கிழிந்துள்ள உங்களது ஆடைகளை நீக்கிவிட்டு, நீராவி போல் மென்மையும் தூய்மையும் கொண்ட புத்தாடைகளை உடுத்திக் கொள்ளச் செய்வான். சென்ற நீங்கள் மட்டுமல்லாமல் ஊரில் வாழும் உங்களது சுற்றத்தாரும் உடுத்திக் கொள்ளுமாறு தந்து உதவுவான். புழுக்கல் (பிரியாணி) - பலவகையான புலவுகளைச் சேர்த்துப் புழுங்கச் செய்த உணவை அவனே உங்கள்முன் நின்று கொண்டு ஊட்டுவான். எவ்வளவுதான் உண்டாலும் எப்படித்தான் சுவைத்துச் சாப்பிட்டாலும் இன்னும் இன்னும் என்று சொல்லிப், பின்னும் உண்ணச் செய்ய வேண்டும் என்று எண்ணும் நிறைவுறாத ஆசையோடு ஊட்டுவான். கொடிய வாளைப் பிடித்துப் பிடித்து அதன் அழுத்தத்தால் காப்புக் காய்த்துப்போன தன் வலிமை மிக்க கைகளால் ஊட்டுவான். சமையல் தொழிலில் வல்லவன் செந்நெல் அரிசியொடு பலவகையான புலால் துண்டுகளைச் சேர்த்துச் சமைத்த புழுக்கலை ஊட்டுவான். அறுத்துப் போட்ட அரியிலேயே நன்றாக முற்றி விளைந்து தெரித்திருக்கும் நெல்லிலிருந்து உண்டாக்கிய அரிசியில் சமைத்த புழுக்கல் அது. விளையாத காரரிசிப் புழுக்கல் அன்று. அமுது என்பது குழம்பு. நல்ல மணமும், இனிய சுவையும் கொண்டது அந்த அமுது. உண்டவர் மீண்டும் மீண்டும் உண்ண விரும்பும் வகையில் வழி வழியாகச் சமைத்துப் பழகிய கைப்பக்குவத்தை உள்ளடக்கிப் புழுக்கிய உணவு அது. வானத்தில் மீன்கள் பூத்துக் கிடப்பது போல் பரந்த இடத்தில் உண்கல வட்டில்களைப் பரப்பிப் புழுக்கல் இட்டு ஊட்டுவான்.

பரிசு வழங்குதல் (480-493)

ஆடு வண்டு இமிரா அழல் அவிர் தாமரை
நீடு இரும் பித்தை பொலிய சூட்டி
உரவு கடல் முகந்த பருவ வானத்து
பகல் பெயல் துளியின் மின்னு நிமிர்ந்து ஆங்கு
புனை இரும் கதுப்பகம் பொலிய பொன்னின் . . . .[485]

தொடை அமை மாலை விறலியர் மலைய
நூலோர் புகழ்ந்த மாட்சிய மால் கடல்
வளை கண்டு அன்ன வால் உளை புரவி
துணை புணர் தொழில நால்கு உடன் பூட்டி
அரி தேர் நல்கியும் அமையான் செரு தொலைத்து . . . .[490]

ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஒழித்த
விசும்பு செல் இவுளியொடு பசும் படை தரீஇ
அன்றே விடுக்கும் அவன் பரிசில் இன் சீர் . . . .[480 - 493]

மாடுவண் டிமிரா வழல்தவிர் தாமரை
நீடிரும் பித்தை பொலியச் சூட்டி
யுரவுக்கடல் முகந்த பருவ வானத்துப்
பகற்பெயற் றுளியின் மின்னுநிமிர்ந் தாங்குப்
புனையிருங் கதுப்பகம் பொலியப் பொன்னின் . . . .[485]

றொடையமை மாலை விறலியர் மலைய
நூலோர் புகழ்ந்த மாட்சிய மால்கடல்
வளைகண் டன்ன வாலுளைப் புரவி
துணைபுணர் தொழில நால்குடன் பூட்டி
யரித்தேர் நல்கியு மமையான் செருத்தொலைத் . . . .[490]

தொன்னாத் தெவ்வ ருலைவிடத் தொழித்த
விசும்புசெ லிவுளியடு பசும்படை தரீஇ
யன்றே விடுக்குமவன் பரிசி லின்சீர்க்

பொருளுரை:

அணிகலன் – (தாமரை) - மேகம் மேயும் வானத்தில் நிலா ஒளிர்வது போல், கரிய கூந்தலில் போடப்பட்ட பித்தைக் கொண்டையின் மேல் தாமரை ஒளிரும். வண்டுகள் மொய்க்காத பொன்னால் செய்யப்பட்ட தாமரைப் பூவை அழகு தோன்றும் வகையில் தானே தன் கைகளால் சூட்டி விடுவான். ஊட்டுவான்- பெற்ற மக்களுக்கு உணவு ஊட்டுவது போல ஊட்டுவான். அணிகலன்மாட்டல் - கொண்டைமாலை பொன்னின் தொடையமை கொண்டை மாலை என்பது மாட்டல் கடலில் நீர் முகந்து சென்ற பருவ வானம் பகலில் பெய்துகொண்டு மின்னுவது போல் ஒளி வீசும் கொண்டை-மாலையை விறலியரின் கதுப்பில் சூட்டி வீடுவான். கதுப்பு என்பது காதுப் பக்கம் உள்ள மயிர். ஊர்திநாலு குதிரை பூட்டிய தேர் கடலின் சிறப்பை நூல்கள் புகழ்ந்து பாடுகின்றன. ஆசை கொள்ள வைக்கும் அந்தக் கடலிலுள்ள சங்குகள் போல் வெள்ளை நிறமுள்ள நான்கு குதிரைகள் பூட்டிய முத்துத் தேரைப் பரிசாக நல்குவான். ஊர்திசவாரிக் குதிரைகள் தன் கொடையில் அத்துடன் நிறைவடையாமல் படைக் குதிரைகளையும் பரிசாக நல்குவான். போர்க்களத்தில் பகைவர்களைத் தொலைத்து வெற்றி கண்ட போது அவர்கள் விட்டுச் சென்ற குதிரைகள் அவை. வானத்தில் பறப்பது போல் தாவிச் செல்லும் நடையோட்டம் கற்றவை அவை. இப்படி உடை, உணவு, அணிமணி, ஊர்திகள் முதலானவற்றை அவனிடம் பெறக் காத்திருக்க வேண்டுவதில்லை. அவனைப் பார்த்த அன்றே பெற்றுத் திரும்பலாம். பெற்ற வளங்களைத் தம் வரவுக்காகக் காத்திருக்கும் மற்றவர்களுக்கு விரைந்து உதவி மகிழலாமல்லவா!

இளந்திரையனது மலையின் பெருமை (494-500)

கின்னரம் முரலும் அணங்கு உடை சாரல்
மஞ்ஞை ஆலும் மரம் பயில் இறும்பின் . . . .[495]

கலை பாய்ந்து உதிர்த்த மலர் வீழ் புறவின்
மந்தி சீக்கும் மா துஞ்சு முன்றில்
செம் தீ பேணிய முனிவர் வெண் கோட்டு
களிறு தரு விறகின் வேட்கும்
ஒளிறு இலங்கு அருவிய மலை கிழவோனே . . . .[494 - 500]

கின்னர முரலு மணங்குடைச் சாரல்
மஞ்ஞை யாலு மரம்பயி லுறும்பிற் . . . .[495]

கலைபாய்ந் துதிர்த்த மலர்வீழ் புறவின்
மந்தி சீக்கு மாதுஞ்சு முன்றிற்
செந்தீப் பேணிய முனிவர் வெண்கோட்டுக்
களிறுதரு விறகின் வேட்கு
மொளிறிலங் கருவிய மலைகிழ வோனே. . . .[500]

பொருளுரை:

கின்னரம் என்னும் சில்லு வண்டுகள் ஒலித்துக் கொண்டேயிருக்கும் அச்சம் தரும் மலைச்சாரலில் மயில்கள் மகிழ்ந்து விளையாடும். அந்த மரமடர்ந்த காடுகளில் ஆண் குரங்குகள் பாய்ந்து விளையாடும். அப்போது மண்ணில் வீழ்ந்த மலர்களைப் பெண்குரங்குகள் சீய்த்து விளையாடும். அங்கே விலங்குகள் துஞ்சும். புறவு என்பது முல்லைநிலம். அங்குள்ள குடில் முற்றங்களில் முனிவர்கள் தீ வளர்ப்பர். களிறுகள் கொண்டு வந்து தந்த விறகுகளைக் கொண்டு தீ வளர்த்து வேள்வி செய்வர். அருகில் தெளிந்த ஓளியுடன் பளிச்சிடும் அருவிகள் பல வீழ்ந்தோடும். இப்படிப்பட்ட மலைநாட்டை ஆளும் உரிமை பெற்ற அரசன் தான் தொண்டைமான் இளந்திரையன். ஏற்காடு அல்லது சேர்வராயன் மலைப்பகுதி தொண்டைமானின் ஆட்சிக்கு அக்காலத்தில் உட்பட்டிருந்தது போலும் சவ்வாது மலைப்பகுதி என்பது டாகடர் மா, இராசமாணிக்கனார் கருத்து.

முற்றிற்று

தனிப் பாடல்

கங்குலும் நண் பகலும் துஞ்சா இயல்பிற்றாய்,
மங்குல் சூழ் மாக் கடல் ஆர்ப்பதூஉம் - வெஞ் சின வேல்
கான் பயந்த கண்ணிக் கடு மான் திரையனை
யான் பயந்தேன்' என்னும் செருக்கு.

பொருளுரை:

இளந்திரையன் தொண்டையரின் வழித்தோன்றல்- மங்கித் தோன்றும் மழைமேகங்கள் முகந்து செல்லும்படி நீர் வழங்கும் கடல் இரவும் பகலும் தூங்காமல் ஆரவாரம் செய்துகொண்டிருப்பதற்குக் காரணம், வெஞ்சின வேலைக் கையில் ஏந்திக் கொண்டும், காட்டில் பூத்த பூவின் கண்ணி மாலையைத் தலையில் சூடிக்கொண்டும், பாயும் குதிரைமேல் செல்லும் திரையனைப் பெற்றுத் தந்த செருக்குத்தான். கான் பயந்த கண்ணி என்பது தொண்டைக் கொடியின் கண்ணிமாலை. தொண்டை = ஆதொண்டை = பல்லவம். ஆடி அம்மாவாசை நோன்பிற்கு உகந்ததாகப் போற்றப்படுவது ஆதொண்டங்காய். ஆதொண்டங் கொடியை அக்காலத்தில் மிகுதியாகக் கொண்டிருந்த நாடு தொண்டைநாடு. பிற்காலத்தில் காஞ்சியில் இருந்து கொண்டு ஆட்சி புரிந்த பல்லவரும் திரையன் மரபில் வந்தவர் என்பதை வெளிப்படுத்தும் சான்று இந்த வெண்பா.

 

 

 

 


No comments:

Post a Comment

II BA 4th sem major papers

  இளங்கலை இரண்டாமாண்டு - நான்காம் பருவம்             முதன்மைப் பாடம் - தாள் ;.7 -- இலக்கணம் - 4                      தண்டியலங்காரம்...