Followers

Sunday, October 9, 2022

I BA 1 st SEM 2021 -2022 பொதுத்தமிழ்

 

அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி) சேலம் -7

தமிழ்த்துறை – 2021 -2022 பொதுத்தமிழ்

 

சுப்ரமணிய பாரதியார் - கண்ணம்மா என் காதலி   பாடல் 5


 சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு  எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: டிசம்பர் 11, 1882  பிறப்பிடம்: எட்டயபுரம், தமிழ்நாடு (இந்தியா)

பணி: கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர் இறப்பு: செப்டம்பர் 11, 1921

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

சுப்ரமணிய பாரதியார் அவர்கள்,  சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார்.  அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். அவருடைய 5 வயதில் அவருடைய தாயார் காலமானார். இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்றுத் திகழ்ந்தார்.

இளமைப் பருவம்- சிறு வயதிலேயே பாரதியாருக்கு தமிழ் மொழி மீது சிறந்த பற்றும், புலமையும் இருந்தது. ஏழு வயதில் பள்ளியில் படித்துவரும்பொழுது கவிதைகள் எழுதத் தொடங்கினார். தன்னுடைய பதினொரு வயதில் கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார், இவருடைய கவிப்புலமையை பாராட்டிய எட்டயபுர மன்னர், இவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கினார். அன்று முதல் இவர் “சுப்பிரமணிய பாரதியார்” என அழைக்கப்பெற்றார்.    .

பாரதியாரின் திருமண வாழ்க்கை

பாரதியார் அவர்கள், பள்ளியில் படித்துகொண்டிருக்கும் பொழுதே 1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு பாரதியார் வறுமை நிலையினை அடைந்தார். சிறிது காலம் காசிக்கு சென்று தங்கியிருந்தார். பிறகு எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார்.

பாரதியாரின் இலக்கிய பணி

‘மீசை கவிஞன்’ என்றும் ‘முண்டாசு கவிஞன்’ என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார்,  தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்தார். இவர் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமைப்பெற்று விளங்கினார். 1912 ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். ‘கண்ணன்பாட்டு’, ‘குயில்பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’,’ புதிய ஆத்திச்சூடி’ போன்ற புகழ் பெற்ற காவியங்கள் பாரதியரால் எழுதப் பெற்றன.

 

 

கண்ணம்மா என் காதலி   பாடல் 5

 கண்ணம்மா - என் காதலி  (குறிப்பிடம் தவறியது)


தீர்த்தக் கரையினிலே - தெற்கு மூலையில்

செண்பகத் தோட்டத்திலே,
பார்த்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவிலே
பாங்கியோ டென்று சொன்னாய்.
வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா!
மார்பு துடிக்கு தடீ!
பார்த்த விடத்திலெல்லாம் - உன்னைப்போலவே
பாவை தெரியு தடீ! ... 1

மேனி கொதிக்கு தடீ! - தலை சுற்றியே
வேதனை செய்கு தடீ!
வானி லிடத்தை யெல்லாம் - இந்த வெண்ணிலா
வந்து தழுவுது பார்!
மோனத் திருக்கு தடீ! இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே,
நானொருவன் மட்டிலும் - பிரி வென்பதோர்
நகரத் துழலுவதோ? ... 2

கடுமை யுடைய தடீ! - எந்த நேரமும்
காவலுன் மாளிகையில்;
அடிமை புகுந்த பின்னும் - எண்ணும்போது நான்
அங்கு வருவதற் கில்லை;
கொடுமை பொறுக்க வில்லை - கட்டுங் காவலும்
கூடிக் கிடக்கு தங்கே;
நடுமை யரசி யவள் - எதற்காகவோ
நாணிக் குலைந்திடுவாள். ... 3

கூடிப் பிரியாமலே - ஓரி ரவெலாம்
கொஞ்சிக் குலவி யங்கே,
ஆடி விளை யாடியே, - உன்றன் மேனியை
ஆயிரங்கோடி முறை
நாடித் தழுவி மனக் - குறை தீர்ந்து நான்
நல்ல களி யெய்தியே,
பாடிப் பரவசமாய் - நிற்கவே தவம்
பண்ணிய தில்லை யடி! ... 4

 

2. பாவேந்தர் பாரதிதாசன் - ஆல மர‌ம் - ஆல் – அழகின் சிரிப்பு – பாவேந்தர் பாரதிதாசன்

 

 தென்னிந்தியாவின் புதுவையில் “கனகசுப்புரத்தினமாக” பிறந்து தமிழ் இலக்கிய, இலக்கணங்களை கற்று தேர்ந்து, பின் பாரதியார் மீது கொண்ட பற்றால் “பாரதி தாசனாகிய” கனகசுப்புரத்தினம் பற்றி இந்த பதிப்பில் விரிவாக பார்க்கலாம் Bharathidasan Tamil.

பிறப்பு மற்றும் கல்வி :

பாவேந்தர் பாரதிதாசன் தமிழகத்தை அடுத்துள்ள புதுச்சேரியில் 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதி கனகசபை முதலியாருக்கு – இலக்குமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் “சுப்புரத்தினம்”. அவரது தந்தை பெயரின் முதல் பாதியை சேர்த்து “கனகசுப்புரத்தினம்” என்று அழைக்கப்பட்டார்.

சிறுவயது முதலே தமிழ் மொழி மீது பற்றுடையவராக இருந்த பாரதிதாசன் , அப்போதய புதுவை பிரெஞ்சுக்காரர்களின் பிடியில் இருந்ததால் ஒரு பிரஞ்சு பள்ளியில் சேர்ந்து படித்தாகவேண்டிய கட்டாயம் உருவானது. தொடக்க கல்வியை திருப்புளிசாமி ஐய்யாவிடம் கற்ற அவர் சில தமிழ் அறிஞர்களின் உதவியால் தமிழ் பள்ளியில் சேர்ந்தார். அங்கு தமிழ் இலக்கிய இலக்கணங்களை கற்ற அவர் சைவ சித்தாந்த வேத நூல்களையும் கற்று தேர்ந்தார்.

சிறு வயது முதலே அழகான பாடல்கள் எழுதும் திறன் பெற்றிருந்த பாரதிதாசன், தன் பதினாறாவது வயதில் புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்து உயர் கல்வி கற்றார். அங்கு சீரிய முறையில் தன் தமிழறிவை விரிவுபடுத்தியவர் மூன்றாண்டுகள் பயிலக்கூடிய இளங்கலை பட்டத்தை இரண்டே ஆண்டுகளில் கற்று தேர்ந்தார். கல்லூரி படிப்பு முடித்த உடன் 1919-இல் காரைக்காலில் உள்ள அரசினர் கல்லூரியில் தமிழாசிரியராக பணியில் சேர்ந்தார்.

திருமண வழக்கை :பாரதிதாசன் அவர்கள் பழநி அம்மையார் என்பவரை 1920-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு மன்னர்மன்னன் என்ற ஒரு மகனும் சரஸ்வதி, வசந்தா மற்றும் ரமணி என்ற மூன்று மகள்களும் பிறந்தனர்.

கனகசுப்புரத்தினம் “பாரதிதாசன்” ஆன கதை :ஒரு துறையில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் அதே துறையில் சிறந்து விளங்குபவர்கள் மீது பற்று கொள்வது இயல்பு. அதே போல்தான் தமிழ் மீது அதீத பற்று கொண்ட கனகசுப்புரத்தினமும் மூத்த கவி பாரதியரால் ஈர்க்கப்பட்டார்.

பாரதியாரை சந்தித்து தமிழ் மீதான தன் ஆர்வத்தை வெளிப்படுத்தியதோடு அவரின் பாராட்டையும், அன்பையும் பெற்றார். அன்று முதல் தன் பெற்றோர் வைத்த பெயரான “கனகசுப்புரத்தினம்” என்பதை பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் என பெயரை மாற்றிக்கொண்ட பிறகு அந்த பெயரிலேயே தன் படைப்புகளை வெளியிட தொடங்கினார். திராவிட இயக்கத்தின் பால் ஈர்க்கப்பட்ட இவர் , தந்தை பெரியார் போன்ற அரசியல் தலைவர்களுடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட தொடங்கினர். அதற்காக பலமுறை சிறையும் சென்றார்.

அவரது தமிழ் இலக்கிய நடை கண்டு வியந்த சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் பலரும் அவருக்கு கதை வசனம் எழுத வாய்ப்புகள் வழங்கினர். பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி. ராமச்சந்திரன் ஆகியோருடன் ஏற்பட்ட நட்பால் 1954-இல் நடைபெற்ற புதுச்சேரி சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டு, சட்டமன்ற உறுப்பினரானார். ஆனால் 1960-இல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

பாரதிதாசன் படைப்புகள்:கடவுள் மறுப்பு , சாதி ஒழிப்பு கொள்கைகளில் நம்பிக்கை கொண்ட இவர் அது சார்ந்து பல படைப்புகளை உருவாக்கியுள்ளார். “எதிர்பாராத முத்தம்”, “குடும்ப விளக்கு”, “இசையமுது”, “தமிழ் இயக்கம்”, “அழகின் சிரிப்பு”, “தமிழச்சியின் கத்தி”, “பாண்டியன் பரிசு”, “பெண்கள் விடுதலை” போன்றவை இவரது படைப்புகளில் மிக சிறந்ததாக கருதப்படுகின்றன.

விருதுகள் மற்றும் பாராட்டுகள்:பாரதிதாசனுக்கு அறிஞர் அண்ணா “புரட்சிக்கவி” என்ற பட்டத்தையும் பெரியார் “புரட்சி கவிஞர்” என்ற பட்டத்தையும் வழங்கினார். தமிழக அரசாங்கம் அவர் பெயரில் “பாரதிதாசன் பல்கலைக்கழகம்” என்ற மாநில பல்கலைக்கழகம் ஒன்றை திருச்சியில் நிறுவியுள்ளது. மேலும் அவரது நினைவை போற்றும் வகையில்  ஆண்டு தோறும் தமிழில் சிறந்து விளங்குபவர் ஒருவருக்கு பாரதிதாசன் விருதினை வழங்கி வருகிறது.1970-ஆம் ஆண்டு அவரது மரணத்திற்கு பின் அவரது படைப்பான பிசிராந்தையார்’ நாடகத்திற்காக ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது. 2001-இல் சென்னை தபால் துறையின் சார்பாக பாரதிதாசன் நினைவு அஞ்சல் தலை ஒன்றும் வெளியிடப்பட்டது Bharathidasan Tamil.

இறப்பு :தன் படைப்பாற்றல் மூலம் தமிழுக்கு பல வழிகளில் தொண்டாற்றிய பாரதிதாசன் 1964-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி இயற்கை எய்தினார்.

 

ஆல மர‌ம் ஆல் – அழகின் சிரிப்பு – பாவேந்தர் பாரதிதாசன்

ஆல் (ஆல மர‌ம்) பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படியுங்கள் ஆல் போல வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.

                      ஆல்  அடி-கிளை, காய், இலை, நிழல்

 

ஆயிரம் கிளைகள் கொண்ட
அடிமரம் பெரிய யானை!
போயின மிலார்கள் வானில்!
பொலிந்தன பவளக் காய்கள்!
காயினை நிழலாற் காக்கும்
இலையெலாம், உள்ளங் கைகள்!
ஆயஊர் அடங்கும் நீழல்,
ஆலிடைக் காண லாகும்!

 விழுதும் வேரும்

தூலம்போல் வளர்கி ளைக்கு
விழுதுகள் தூண்கள்! தூண்கள்
ஆலினைச் சுற்றி நிற்கும்
அருந்திறல் மறவர்! வேரோ
வாலினைத் தரையில் வீழ்த்தி
மண்டிய பாம்பின் கூட்டம்!
நீலவான் மறைக்கும் ஆல்தான்
ஒற்றைக்கால் நெடிய பந்தல்!

 பச்சிலை, இளவிழுது

மேற்கினை யின்வீழ் தெல்லாம்
மின்னிடும் பொன்னி ழைகள்!
வேற்கோல்போல் சிலவீழ் துண்டாம்!
அருவியின் வீழ்ச்சி போலத்
தோற்றஞ்செய் வனவும் உண்டு!
சுடர்வான்கீழ்ப் பச்சிலை வான்
ஏற்பட்ட தென்றால், வீழ்தோ
எழுந்தங்கக் கதிர்கள் என்பேன்.

 அடிமரச் சார்பு

அடிமரப் பதிவி லெல்லாம்
அடங்கிடும் காட்டுப் பூனை!
இடையிடை ஏற்பட் டுள்ள
பெருங்கிளைப் பொந்தி லெல்லாம்
படைப்பாம்பின பெருமூச் சுக்கள்!
பளிங்குக்கண் ஆந்தைச் சீறல்!
தடதடப் பறவைக் கூட்டம்!
தரையெலாம் சருகின் மெத்தை!

 வெளவால், பழக்குலை, கோது, குரங்கு, பருந்து

தொலைவுள்ள கிளையில் வெளவால்
தொங்கிடும்; வாய்க்குள் கொண்டு
குலைப்பழம், கிளை கொ டுக்கும்;
கோதுகள் மழையாய்ச் சிந்தும்!
தலைக்கொழுப் புக்கு ரங்கு
சாட்டைக்கோல் ஒடிக்கும்; பின்னால்
இலைச்சந்தில் குரங்கின் வாலை
எலியென்று பருந்திழுக்கும்!

 கிளிகள்

கொத்தான பழக்கு லைக்குக்
குறுங்கிளை தனில்ஆண் கிள்ளை
தொத்துங்கால் தவறி, அங்கே
துடிக்குந்தன் பெட்டை யண்டைப்
பொத்தென்று வீழும்;அன்பிற்
பிணைத்திடும்; அருகில் உள்ள
தித்திக்கும் பழங்கள் அக்கால்
ஆணுக்குச் கசப்பைச் செய்யும்!

 சிட்டுகள்

வானத்துக் குமிழ்ப றந்து
வையத்தில் வீழ்வ தைப்போல்
தானம்பா டும்சிட் டுக்கள்
தழைகிளை மீது வீழ்ந்து,
பூனைக்கண் போல்ஒ ளிக்கும்;
புழுக்களைத் தின்று தின்று
தேனிறை முல்லைக் காம்பின்
சிற்றடி தத்திப் பாடும்.

 குரங்கின் அச்சம்

கிளையினிற் பாம்பு தொங்க,
விழுதென்று, குரங்கு தொட்டு
“விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கெனக் குதித்த தைப்போல்”
கிளைதோறும் குதித்துத் தாவிக்
கீழுள்ள விழுதை யெல்லாம்
ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி
உச்சிபோய்த் தன்வால் பார்க்கும்.

 பறவையூஞ்சல்

ஆலினைக் காற்று மோதும்!
அசைவேனா எனச்சி ரித்துக்
கோலாத்துக் கிளைகு லுங்க
அடிமரக் குன்று நிற்கும்!
தாலாட்ட ஆளில் லாமல்
தவித்திட்ட கிளைப்புள் ளெல்லாம்
கால்வைத்த கிளைகள் ஆடக்
காற்றுக்கு நன்றி கூறும்!

 குயில் விருந்து

மழைமுகில் மின்னுக் கஞ்சி
மாங்குயில் பறந்து வந்து
“வழங்குக குடிசை” என்று
வாய்விட்டு வண்ணம் பாடக்
கொழுங்கிளைத் தோள் உயர்த்திக்
குளிரிலைக் கைய மர்த்pப்
பழந்தந்து களிப்பாக் கும்பின்
பசுந்துளிர் வழங்கும் ஆலே.

--------------------------------------------------------------------------

3. கவிமணி தேசிகவிநாயகம்

கவிமணியின் பிறப்பும் வாழ்க்கையும்

Description: http://www.tamilvu.org/courses/degree/p103/p1031/images/p1031140.jpgகவிமணி 1876ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் நாள் பிறந்தார். தந்தை பெயர் தேரூர் சிவதாணு; தாய் ஆதிலெட்சுமி. முதலில் படித்தது மலையாளம். தேரூர் வாணந்திட்டு திருவாவடுதுறை ஆதீனம் சாந்தலிங்கத் தம்பிரானிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றார். திருவனந்தபுரம் மகளிர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். திருவனந்தபுரம் மகாராசா பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர், திருவனந்தபுரம் மகாராசா பெண்கள் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

3. கவிமணி

கவிமணியின் படைப்புகள் இளமையிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார். 1885இல் முதல் கவிதை நூல் அழகம்மை ஆசிரிய விருத்தம் எழுதப் பட்டது. மற்றைய நூல்கள்

 

 

1. வண்டி அற்புதப் பொருளாம் - வண்டி

மாடும் அற்புதப் பொருளாம்;

வண்டி பூட்டும் கயிறும் என்றன்

மனத்துக் கற்புதப் பொருளாம்!

கவிமணியின் படைப்புகள்

1. மலரும் மாலையும் (1938)
2. ஆசிய ஜோதி (1941)
3. உமர்கய்யாம் பாடல்கள் (1945)
4. நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம் (1918)
5. தே.வி.யின் கீர்த்தனங்கள் (1953)
6. கவிமணியின் உரைமணிகள்
7. ஆராய்ச்சிக் கட்டுரைகள் (’கேரளா சொசைட்டிப் பேப்பர்சு’- இல் வெளியானவை, பிற இதழ்களில் வெளியானவை.

2. வண்டல் கிண்டி உழுவோன் - கையில்

வரிவில் ஏந்தி நின்ற

பண்டை விஜயன் போல - இந்தப்

பாரில் அற்புதப் பொருளாம்!

3. பறக்கும் குருவி யோடென் - உள்ளம்

பறந்து பறந்து திரியும்;

கறக்கும் பசுவைச் சுற்றி - அதன்

கன்று போலத் துள்ளும்.

4. ஈயும் எனக்குத் தோழன் - ஊரும்

எறும்பும் எனக்கு நேசன்;

நாயும் எனக்குத் தோழன் - குள்ள

நரியும் எனக்கு நண்பன்!

5. கல்லின் கதைகள் எல்லாம் - இரு

காது குளிரக் கேட்பேன்;

புல்லின் பேச்சும் அறிவேன்! - அதைப்

புராண மாக விரிப்பேன்.

6. அலகில் சோதி யான - ஈசன்

அருளி னாலே அமையும்;

உலகில் எந்தப் பொருளும் - கவிக்கு

உரிய பொருளாம், ஐயா!

7. உள்ளத்துள்ளது கவிதை - இன்பம்

உருவெ டுப்பது கவிதை;
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
தெரிந்து ரைப்பது கவிதை!

 

 

                Description: தாயார் கொடுத்த தனம் | நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை4. கவிஞர் நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை

தமிழன் இதயம்

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை

தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர். தேசியப் போராட்டங்களில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். மகாகவி பாரதியால் பாராட்டப் பெற்றவர். ராஜாஜியின் மனதுக்குகந்த தோழர். உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தின் வழிநடைப் பாடலாக ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ எனும் பாடலை எழுதிப் புகழ் பெற்றவர், இந்தப் பெருமைகளுக்கெல்லாம் உரியவர் நாமக்கல் கவிஞர் எனப்படும் ராமலிங்கம் பிள்ளை அவர்கள்.

இவர் 1888ஆம் வருஷம் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி கரூருக்கும் ஈரோட்டுக்கும் இடையே அமைந்துள்ள மோகனூர் எனும் ஊரில் அவ்வூர் ஹெட் கான்ஸ்டபிளாக இருந்த வெங்கட்டராம பிள்ளை அம்மணி அம்மாள் தம்பதியினருக்கு ஏழு பெண் குழந்தைகளுக்குப் பிறகு வாராது வந்த மாமணி போல் வந்து பிறந்த எட்டாவது ஆண் குழந்தை ராமலிங்கம். ராமேஸ்வரம் சென்று ஆண் குழந்தை வேண்டிப் பிறந்ததால் ராமலிங்கம் என்று பெயர் வைக்கப்பட்டது. கவிஞரின் தாயார் அம்மணி அம்மாள் இதிகாச புராணங்களை யெல்லாம் சொல்லி தன் மகனை வளர்த்தார். பொய் பேசுவதும், பொல்லாதவன் என்று பெயரெடுப்பதும் கூடாது என்று திரும்பத் திரும்பச் சொல்லி மகனைச் சான்றோனாக வளர்த்தார்.

இவர் நாமக்கல்லில் இருந்த நம்மாழ்வார் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். பின்னர் தந்தை கோவைக்கு மாற்றலாகிச் சென்றபோது கோயம்புத்தூரில் உயர்நிலைக் கல்வி பயின்றார். திருச்சியில் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்த இவருக்குத் தனது அத்தை மகளை 1909இல் திருமணம் செய்து கொண்டார். இவர் ஆசிரியர் தொழில் உட்பட பல தொழில்களைல் சேர்ந்தாலும் ஒன்றிலும் நிலைக்கவில்லை. இவருக்கு இயற்கையிலேயே ஓவியம் வரையும் ஆற்றல் இருந்தது. இவரது ஆசிரியராக இருந்த ஒரு ஆங்கிலேயர், எல்லியட் என்று பெயர், அவர் இவரது ஆற்றலை வளர்க்க உதவினார். இவர் ஓவியங்கள் நல்ல விலை போயின. அப்படி இவர் வரைந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் ஓவியமொன்றை டெல்லியில் நடந்த அவரது முடிசூட்டு விழாவில் பரிசளிப்பதற்காக 1912இல் டெல்லிக்குப் பயணமானார். ஓவியத்தைப் பார்த்து மன்னர் குடும்பம் இவருக்கு ஒரு தங்கப் பதக்கத்தை அளித்தது.

ஓவியம் தவிர இவருக்கு கவிதை புனையும் ஆற்றலும் இருந்தது. 1924ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைவர் எஸ்.சீனிவாச ஐயங்கார் அறிவித்த ஒரு போட்டியில் தேசபக்திப் பாடல்களை எழுதித் தங்கப் பதக்கம் பரிசு பெற்றார். அதுமுதல் இவர் பல கவிதைகளைப் புனைந்து தள்ளினார். குடத்திற்குள் இட்ட விளக்காக விளங்கிய இவரது கவிதைத்திறன் 1930இல் உப்பு சத்தியாக்கிரகத்துக்காக எழுதிய “கத்தியின்றி” பாடல் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். இவரது பாடல்களை சங்கு கணேசன் தனது “சுதந்திரச் சங்கு” பத்திரிகையில் வெளியிட்டு வந்தார்.

இவரது அத்தை மகள் முத்தம்மாளை மணந்து கொண்டாரல்லவா, அவர் 1924இல் காலமானார். அதைத் தொடர்ந்து அவரது இளைய சகோதரியை இரண்டாம் தாரமாக மணந்து கொண்டார். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. இவருக்கு 1906ஆம் ஆண்டு முதலே நாட்டுச் சுதந்திரத்தைல் வேட்கை பிறந்தது. இவர் கரூரில் தனது சகோதரி வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். 1914இல் திருச்சி மாவட்ட காங்கிரசின் செயலாளராக இருந்தார். கரூர் வட்டக் காங்கிரஸ் தலைவராகவும் பணிபுரிந்தார். 1921 முதல் 1930 வரை நாமக்கல் காங்கிரசின் தலைவராக இருந்தார். கரூர் அமராவதி நதிக்கரையில் இவர் அடிக்கடி கூட்டங்கள் நடத்தினார்.

தேவகோட்டை சின்ன அண்ணாமலை தமிழ்ப்பண்ணை எனும் புத்தக வெளியீட்டு நிறுவனத்தை நடத்தினார். அதன் மூலம் நாமக்கல்லாரின் நூல்கள் பிரசுரம் செய்யப்பட்டன. சின்ன அண்ணாமலை சிறந்த பேச்சாளர். அவரது நகைச்சுவை மிகவும் பிரபலம். சங்கப்பலகை எனும் ஒரு பத்திரிகையையும் அவர் நடத்தினார். ம.பொ.சி. தலைவராக இருந்த தமிழரசுக் கழகத்தின் தூண்களில் அவரும் ஒருவர். இவர் மகாகவி பாரதியாரைச் சந்தித்திருக்கிறார். அவரால் பாராட்டப் பெற்றிருக்கிறார்.

சுதந்திரப் போராட்டத்தில் முதன் முதலாக 1932இல் இவருக்கு ஓராண்டு சிறை தண்டனை கிடைத்தது. சுதந்திரம் நெருங்கி வந்த சமயத்தில் இவரது கவிதைகள் பெரும் புகழ்பெற்று தமிழ் மாநிலமெங்கும் இவருக்குப் பாராட்டும் புகழும் ஈட்டித் தந்தன. 1945இல் இவரைப் பாராட்டி சென்னையில் நடந்த விழாவில் காமராஜ், திரு.வி.க., பி.ராமமூர்த்தி, கல்கி போன்றவர்கள் கலந்து கொண்டு இவரைப் பாராட்டினார்கள். இவர் எழுதிய “மலைக்கள்ளன்” எனும் நெடுங்கதை கோவை பக்ஷிராஜா ஸ்டுடியோவினரால் திரைப்படமாக்கப் பட்டது. எம்.ஜி.ரமச்சந்திரன் பானுமதி நடித்த இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு 1949இல் ஆகஸ்ட் 15 சுதந்திரத் திருநாளில் அப்போதைய சென்னை மாகாண கவர்னர் பவநகர் மகாராஜா தலைமையில் இவருக்கு ‘அரசவைக் கவிஞர்’ எனும் பதவி வழங்கப்பட்டது. 1956 ஆண்டிலும் பின்னர் 1962ஆம் ஆண்டிலும் தமிழக சட்ட மேலவை உறுப்பினராக இவர் செயல்பட்டார். 1971இல் இவருக்கு டெல்லியில் ‘பத்மபூஷன்’ விருது வழங்கப்பட்டது.

இவர் எழுதிய “காந்தி அஞ்சலி” எனும் கவிதைத் தொகுதி நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர் 1972ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி இரவு 2 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 

 

தமிழன் என்றோர் இனமுண்டு;
தனியே அவற்கொரு குணமுண்டு;
அமிழ்தம் அவனுடைய வழியாகும்;
அன்பே அவனுடை மொழியாகும்.

அறிவின் கடலைக் கடைந்தவனாம்;
அமிர்தத் திருக்குறள் அடைந்தவனாம்;
பொறியின் ஆசையைக் குறைத்திடவே
பொருந்திய நூல்கள் உரைத்திடுவான்.

கவிதைச் சுவைகளை வடித்தெடுத்தான்;
கம்பன் பாட்டெனப் பெயர்கொடுத்தான்;
புவியில் இன்பம் பகர்ந்தவெலாம்
புண்ணிய முறையில் நுகர்ந்திடுவான்.

‘பத்தினி சாபம் பலித்துவிடும்’
பாரில் இம்மொழி ஒலித்திடவே
சித்திரச் சிலப்பதி காரமதைச்
செய்தவன் துறவுடை ஓரரசன்.

சிந்தா மணி,மணி மேகலையும்,
பத்துப் பாட்டெனும் சேகரமும்,
நந்தா விளக்கெனத் தமிழ்நாட்டின்
நாகரி கத்தினை மிகக் காட்டும்.

தேவா ரம்திரு வாசகமும்
திகழும் சேக்கி ழார்புகழும்
ஓவாப் பெருங்கதை ஆழ்வார்கள்
உரைகளும் தமிழன் வாழ்வாகும்.

தாயும் ஆனவர் சொன்னவெலாம்
தமிழன் ஞானம் இன்னதெனும்;
பாயும் துறவுகொள் பட்டினத்தார்
பாடலும் தமிழன் பெட்பெனலாம்.

நேரெதும் நில்லா ஊக்கமுடன்
நிமிர்ந்திட அச்சம் போக்கிவிடும்
பாரதி என்னும் பெரும்புலவன்
பாடலும் தமிழன் தரும்புகழாம்.

கலைகள் யாவினும் வல்லவனாம்
கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்
நிலைகொள் பற்பல அடையாளம்
நின்றன இன்னும் உடையோனாம்.

சிற்பம் சித்திரம் சங்கீதம்
சிறந்தவர் அவனினும் எங்கேசொல்?
வெற்பின் கருங்கல் களிமண்போல்
வேலைத் திறத்தால் ஒளிபண்ணும்.

உழவும் தொழிலும் இசைபாடும்;
உண்மை; சரித்திரம் அசைபோடும்;
இழவில் அழுதிடும் பெண்கூட
இசையோ டழுவது கண்கூடு.

யாழும் குழலும் நாதசுரம்
யாவுள் தண்ணுமை பேதமெலாம்
வாழும் கருவிகள் வகைபலவும்
வகுத்தது தமிழெனல் மிகையலவாம்.

‘கொல்லா விரதம் பொய்யாமை
கூடிய அறமே மெய்யாகும் ;
எல்லாப் புகழும் இவைநல்கும்’
என்றே தமிழன் புவிசொல்லும்.

மானம் பெரிதென உயிர்விடுவான்;
மற்றவர்க் காகத் துயர்படுவான்;
தானம் வாங்கிடக் கூசிடுவான்;
‘தருவது மேல்’ எனப் பேசிடுவான்.

ஜாதிகள் தொழிலால் உண்டெனினும்
சமரசம் நாட்டினில் கண்டவனாம்;
நீதியும் உரிமையும் அன்னியர்க்கும்
நிறைகுறை யாமல் செய்தவனாம்.

உத்தமன் காந்தியின் அருமைகளை
உணர்ந்தவன் தமிழன்; பெருமையுடன்
சத்தியப் போரில் கடனறிந்தான்;
சாந்தம் தவறா துடனிருந்தான்!

 

நாமக்கல் கவிஞர் தமிழன் இதயம் என்ற கவிதையில் தமிழர்களின் தனித்தன்மை குறித்தும், அவர்தம் மாண்பு குறித்தும், தமிழிலக்கியங்களின் சிறப்பு குறித்தும் விளக்குகின்றார்.

தமிழனின் தனித்தன்மை- தரணியில் தன்னிகர் இல்லாத இனமாகத் தமிழினம் விளங்குகின்றது. தமிழர்கள் யாவரும் பிறருடன் ஒப்பிட முடியாத தனித்தன்மை கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். வாழ்க்கைக்கு இனிமை பயக்கும் அறச்செயல்களைச் செய்வதே தமிழனின் வழி என்றும், அன்பும் இரக்கம் கொண்ட சொற்களே அவனின் மொழி என்றும் சிறப்பிக்கின்றார்.

தமிழனின் இலக்கியங்கள்- அறிவாகிய கடலைக் கடைந்து திருக்குறள் என்ற அமிர்தத்தை அடைந்தவன். ஐம்புலன்களால் உண்டாகும் நிலையற்ற ஆசைகளை விட்டொழித்து பேரின்ப பெருவாழ்வைத் தரும் அறநூல்களை உலகுக்கு அளித்தவன்.எதுகை, மோனை சந்தநயம், சொல்லின்பம், பொருளின்பம், தனித்தமிழ்ச் சொற்றொடர்கள் எனக் கவிதைக்குரிய அனைத்துப் பண்புகளையும் ஒருங்கமைத்து கம்பராமாயணத்தைப் படைத்துள்ளார் கம்பர். இந்த உலகில் இன்பம் தரும் வழிமுறைகளை இலக்கியங்களாகப் படைத்தளித்த பெருமைக்குரியவன் தமிழன்.துறவு வாழ்வை விரும்பி ஏற்ற இளங்கோவடிகள், “பத்தினி சாபம் நிச்சயம் பலிக்கும்” என்ற வாய்மொழியினை இந்த உலகுக்கு உணர்த்திடவே சிலப்பதிகாரம் என்ற மாபெரும் காப்பியத்தை இயற்றித் தந்தார்.சீவகசிந்தாமணி, மணிமேகலை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் ஆகியன யாவும் தமிழ்நாட்டின் நாகரிகத்தினை எடுத்துக் காட்டும் ஆவணங்கள் ஆகும்.தேவாரம், திருவாசகம், சேக்கிழாரின் பெரியபுராணம், பன்னிரு ஆழ்வார்களின் உரைகள் தமிழர் வாழ்க்கையினைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.தமிழனின் ஞானத்தை, அவன் அறிவின் திறமையைத் தாயுமானவரின் பாடல்களால் அறியலாம்.   பட்டினத்தார் உள்ளிட்ட சித்தர்களின் பாடல்கள் தமிழர்களின் தனிப் பெருஞ் சொத்தாக மிளிர்கின்றன.அச்சத்தை விடுத்து எதிர்த்து வரும் சோதனைகளை ஊக்கமுடன் எதிர்கொண்டு வாழ, பாரதியின் பாடல்கள் துணை புரிகின்றன. இவையாவும் தமிழரின் புகழைப் பறைசாற்றுகின்றன என வியந்து போற்றுகின்றார் நாமக்கல் கவிஞர்.

தமிழனின் திறமைகள் –Nஅறுபத்து நான்கு கலைகளிலும் வல்லவனாகத் திகழ்ந்தவன் தமிழன். கல்வி கற்கும் யாவருக்கும் நல்லவனாக விளங்கியவன்.  அவனுடைய சிறப்புகளை எடுத்தோதுகின்ற அடையாளச் சின்னங்கள் இன்றும் காலங்கள் பல கடந்து நிலை பெற்று நிற்கின்றன.

   சிற்பங்கள் வடிப்பதிலும், சித்திரங்கள் தீட்டுவதிலும், சங்கீதம் இசைப்பதிலும் அவனுக்கு நிகர் வேறு யாருமில்லை. கருங்கல்லும், களிமண்ணும்கூட அவனுடைய திறமையால் ஒளிவீசும்.

          யாழ், குழல், நாதஸ்வரம் உள்ளிட்ட எண்ணற்ற இசைக்கருவிகளைக் கண்டறிந்து, அவற்றை வகைப்படுத்தி, அவை தரும் பண்களை வகுத்து  இசை என்றொரு மாபெரும் கலையை உலகிற்கு அளித்தவன் தமிழன் என்றால் அது மிகையில்லை.

தமிழனின் மாண்புகள -  கொல்லாமை, கள்ளாமை, பொய்யாமை முதலியவற்றைக் கடைபிடித்து வாழும் வாழ்க்கையே அறம் நிரம்பிய வாழ்க்கையாகும். அவ்வாழ்க்கையே அழிவில்லாத புகழைத் தரும் என்று வாழ்ந்து காட்டியவன் தமிழன். இதை இந்த உலகம் நன்கு அறியும

    ஒழுக்கம் நிரம்பிய மானத்துடன் வாழ வேண்டும் என்பதே தமிழனின் கொள்கை. அந்த ஒழுக்கத்திற்கும் மானத்திற்கும் ஏதேனும் தீங்கு நேர்ந்தால் தன் உயிரை விட்டுத் துணிந்து விடுவான்.

         பிறரிடம் தானம் பெற்று வாழ்வதை விரும்பாதவன். தன்னிடம் பொருள் இ்லையென்றாலும் அடுத்தவருக்கு உதவி செய்வதே அறம் என்பதை உணர்ந்தவன்.

   ஜாதிகளை முன்னிலைப்படுத்தித் தொழில்கள் பல செய்பவனாக இருப்பினும், வேற்றுமை பாராது ஒற்றுமை கண்டவன். நீதியும் உரிமையும் அனைவருக்கும் பொது என்பதை அந்நியருக்கும் எடுத்துக் காட்டியவன்.

      எல்லாவற்றுக்கும் மேலாக காந்தியின் அருமையை உணர்ந்து அவர் காட்டிய வழியில் நடந்து, சத்தியப் போரில் பங்கெடுத்து, அமைதியை விரும்பி வெற்றி கண்டவன் என மிகப் பெருமையுடன் தமிழர்தம் சிறப்புகளை வெளிப்படுத்துகின்றார் கவிஞர்.

 

5. தமிழ் தேசிய தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவு தினம்: ஜுன் 11, 1995

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1933 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10-ஆம் நாள் சேலம் மாவட்டம் சமுத்திரம் என்ற ஊரில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் இராசமாணிக்கம். இவருடைய பெற்றோர் துரைச்சாமியார்-குஞ்சம்மாள் ஆவர்.

Description: தமிழ் தேசிய தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவு தினம்: ஜுன் 11, 1995பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1933 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10-ஆம் நாள் சேலம் மாவட்டம் சமுத்திரம் என்ற ஊரில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் இராசமாணிக்கம். இவருடைய பெற்றோர் துரைச்சாமியார்-குஞ்சம்மாள் ஆவர்.பாவலரேறு பெருஞ்சித்திரனார் (மார்ச் 10, 1933 – சூன் 11, 1995) இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழகத்தில் முதன்முறையாக வந்த காலத்தில் அவரையும் அவரது தோழர்களையும் அரணாகக் காத்து அவர்களை வளர்தெடுத்தவரும் இவர்தான். 20 முறை சிறை சென்றும், இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல் தமிழீழப் போராட்டம் வரை இவரது செயல்பாடுகள் தமிழர்கள் நடுவில் வியந்து போற்றப்படுகின்றன.பெருஞ்சித்திரனார் கொள்கைகள்-பெருஞ்சித்திரனார் மொழித்தளத்தில் தனித்தமிழ்க்கொள்கையையும் அரசியல் தளத்தில் தனித்தமிழ்நாடு கொள்கையையும் கொண்டவர் ஆவார். 1950களில் முதன்முதலில் வெளிவந்த இவரது தென்மொழி இதழ் தொடர்ச்சியாக இவ்விரு கொள்கைகளையும் தொடர்ந்து பரப்புரை செய்துவந்தார். தமிழர்கள் குல மத வேறுபாடுகளிலிருந்து வெளியேறித் தம்மைத்தமிழர்கள் என உணர்ந்து தமிழ்நாட்டினை தனிநாடாக ஆக்கிக்கொள்ளவேண்டும் என்பது இவரது கருதுகோள் ஆகும். தமிழக விடுதலை போலவே தமிழீழ விடுதலையையும் தொடர்ந்து ஆதரித்தும் பரப்புரை செய்தும் பெருஞ்சித்திரனார் செயற்பட்டார்.

 

‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது:
தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது! !
தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்டும்
கொக்கரிப்புப் பேச்சாலும் தமிழ் வாழாது !
ஆர்த்தெழும் உள் உணர்வெலாம் குளி ருமாறே
இமிழ் கடல்சூழ் உலகமெலாம் விழாக்கொண் டாடி
ஏற்றமிகச் செய்வதிலும் தமிழ்வா ழாதே !
பட்டிமன்றம் வைப்பதினும் தமிழ்வா ழாது:
பாட்டரங்கம் கேட்பதிலும் தமிழ்வா ழாது:”
எட்டி நின்றே இலக்கியத்தில் இரண்டோர் பாட்டை
எடுத்துரைத்துச் சுவைபடவே முழக்கி நாலும்,
தட்டி, சுவர் ,தொடர்வண்டி, உந்துவண்டி
தம்மிலெல்லாம் “தமிழ் தமிழ்’ என்றெழுதி வைத்தே
முட்டிநின்று, தலையுடைத்து முழங்கி னாலும்
மூடர்களே, தமிழ்வாழப் போவதில்லை !
செந்தமிழ்செய் அறிஞர்களைப் புரத்தல் வேண்டும்
செப்பமொடு தூய தமிழ் வழங்கல் வேண்டும்:
முந்தைவர லாறறிந்து தெளிதல் வேண்டும்:
முக்கழக உண்மையினைத் தேர்தல் வேண்டும்;
வந்தவர்செய் தீங்குகளால் தமிழர்க் குற்ற
வரலாற்று வீழ்ச்சிகளை எடுத்துக் கூறி,,
நொந்தவுளஞ் செழித்ததுபோல் புதிய வையம்
நோக்கிநடை யிடல்வேண்டும் ! தமிழ்தான் வாழும் !
தண்டமிழில் பிறமொழியைக் கலந்து பேசுந்
தரங்குறைந்த தமிழ் வழக்கை நீக்கல் வேண்டும் !
தொண்டரெலாந் தெருக்களிலே கடைகள் தோறும்
தொங்கு கின்ற பலகைகள மாற்றச் சொல்லிக்
கண்டு நிகர் தமிழ்ப் பெயர்ப்பால் புதுக்கல் வேண்டும் !
கற்கின்ற சுவடிகளில், செய்தித் தாளில்,
விண்டுரைக்கா அறிவியலில், கலையில் எல்லாம்
விதைத்திடுதல் வேண்டும் தமிழ்: வாழும் அன்றே ! -பாவலரேறு -1970

 

தனித்தமிழ் இயக்க வரலாறு

தனித்தமிழ் இயக்கம் என்பது நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டதாகும். இவ்வியக்கம் மறைமலை யடிகள், தேவநேயப்பாவாணர், பரிதிமாற்கலைஞர்,  திரு.வி.கலியாணசுந்தரனார், உமா மகேஸ்வரனார், சோமசுந்தர பாரதி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், நீலாம்பிகை அம்மையார் போன்ற பல்வேறு ஆளுமை களைக் கொண்டதாகும். 1916இல்  மறைமலையடிகள் தலைமையில் இவ்வியக்கம் உருவாகியுள்ளது.  இதற்கு முதன்மைக் காரணமாக இருந்தவர் நீலாம்பிகை அம்மையார் (மறைமலையடிகளின் மகள்)  ஆவார். இது வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மையாகும். இவ் வியக்கம் சார்ந்தோர் அதன் கொள்கை, கோட்பாடு களைத் தீவிரமாகக் கடைபிடித்துள்ளனர். தமிழ்

மக்களின் அறியாமை, மூடநம்பிக்கைகள் போன்றவற்றை விமர்சித்து, அவை, தவறான செயல்பாடுகள் எனச் சுட்டிக்காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தி யுள்ளனர்.  ஒவ்வொரு தமிழனும் இனம், மொழி, நாடு என்ற உணர்வுடனும் பற்றுடனும் இயங்க வேண்டு மென்று விரும்பியவர்களாகத் தனித்தமிழ் இயக்கத் தினரை இனங்காண முடிகிறது.

உலக மொழிகளுள் தமிழின் நிலை தனித்துக் காணப்படுகிறது. தமிழ்மொழியின் பிறப்பு, அதன் வளமான இலக்கண, இலக்கியங்கள் மொழியமைப்பு போன்றவற்றை மையப்படுத்தியே தமது கவிதைகளைப் படைத்துள்ளார். தமிழின் பெருமைகளையும் சிறப்பு களையும் பல்வேறு தலைப்புகளின்கீழ் கவிதைகளாகப் புனைந்துள்ளார். அவற்றுள் சில  “தமிழ்த்தாய் அறுபது, முத்தமிழ் முப்பது, தமிழில் கற்க முன்வருக, தமிழ் உழவு செய்க, தமிழ் படித்தால் அறம் பெருகும்,  தூயதமிழ் எழுதாத இதழ்களைப் பொசுக்குங்கள், பைந்தமிழில் படிப்பதுதானே முறை” (கனிச்சாறு தொகுதிகள்) என்பனவாகும்.

மொழி என்பது மனித இனத்தின்  அடையாளம். மொழி அழிகிறது என்றால் அம்மொழி பேசும் மக்களும் அவர்களின் பண்பாடு, நாகரிகம், பழக்கவழக்கங்கள் அழிகின்றன என்றே பொருளாகும். இதனைப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் தாய்மொழியினைச் சரியான முறையில் பயன்படுத்துதல் வேண்டும். அதுபோல், மற்ற மொழிகளைப் பழித்தல் கூடாது என்றும் கூறுகிறார். தம் தாய்மொழியினை இழிவு செய்தவர்களையும் கவிதைகளின் வழியாக கடுமையாகச் சாடி வந்துள்ளார்.  

 

 

 

 

 

 

myF -2

ந. பிச்சமூர்த்தி 

  ந. பிச்சமூர்த்தி  கிளிக்குஞ்சு

வாழ்க்கைக்குறிப்பு:

·              இயற்பெயர் = ந. வேங்கட மகாலிங்கம்

·              புனைபெயர் = ந. பிச்சமூர்த்தி

·              ஊர்  = தஞ்சாவூர்மாவட்டம்கும்பகோணம்

·              தொழில் = 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிருவாக     அலுவலர்.

·              எழுத்துப்பணி = கதைகள்மரபுக்கவிதைகள்புதுக்கவிதைகள்ஓரங்க நாடகங்கள்.

·              காலம் = 15.08.1900 – 04.12.1976

·              புதுக்கவிதையின்இரட்டையர்கள் = பிச்சமூர்த்திகு.ப.இராசகோபாலன்(கூறுயவர் = வல்லிக்கண்ணன்)

சிறப்பு பெயர்கள்:

·              சிறுகதையின் சாதனை

·              புதுக்கவிதையின் முன்னோடி

·              தமிழ் புதுக்கவிதை இயக்கத்தின் தோற்றுநர்

·              புதுக்கவிதையின் முதல்வர்

·              புதுக்கவிதை இயக்கத்தின் விடிவெள்ளி

புனைப் பெயர்:

·              ரேவதி

·              பிச்சு

·              ந.பி

சிறுகதைகள்:

·              பதினெட்டாம் பெருக்கு

·              நல்ல வீடு

·              அவனும் அவளும்

·              ஜம்பரும் வேட்டியும்

·              மாயமான்

·              ஈஸ்வர லீலை

புதுக்கவிதை:

  • கிளிக்குஞ்சு
  • பூக்காரி
  • வழித்துணை
  • கிளிக்கூண்டு
  • காட்டுவாத்து
  • புதுக்குரல்கள்(தமிழின் முதல் புதுக்கவிதை தொகுதி)
  • காதல்(இவரின் முதல் கவிதை)

கிளிக்கூண்டு கவிதையில் இயற்கையை அனுபவிக்கிறார்.

 “இருளின் மடல்கள் குவிந்தன,
வானத்து ஜவந்திகள் மின்னின.
காவிரி நாணல்கள் காற்றில் மயங்கின,
மேற்கே சுடலையின் ஓயாத மூச்சு,
காலன் செய் ஹோமத்தில் உடல் நெய்யாகும் காட்சி,
கிழக்கே பெண்களின் மட்டற்ற பேச்சு,
கட்டற்ற சிரிப்பு
காவிரி மணலில் குழந்தைகள் கொம்மாளம்

குழந்தைகள் சொல்லினர்

பொழுது சாய்ந்தது பெற்றோரும் சீறுவர்

 ஜலத்தைத் ்தெளித்து மணலைக் குவி

கூண்டைக்கட்டி வாயிலைத்திற

கிளி வந்து அடையும்.

கோவைப்பழ மூக்கும் பாசிமணிக் ்கண்ணும்

சிவப்புக் கோட்டுக் கழுத்தும் வேப்பிலை வாலும்,

ஆ காலையில் கூண்டுக்குள் எப்படி விழிக்கும்

காலையில் வருவோம் கிளியைப் பிடிப்போம்.

“வாழ்க்கையும் காவிரி

 அதிலெங்கும் கிளிக் கூண்டு

நானொன்று கட்டினேன்

வார்த்தையே மணல் ஓசையே ஜலம்

          என் தீராத வேட்கையே குவிக்கும் விரல்கள்;

        பாட்டென்னும் கூண்டொன் றமைத்தேன்

        அழகென்னும் கிளியை அழைத்தேன்.

காலையில் கதவுகள் கிழக்கில் திறக்கவும்

ஒளியாற்றில் செம்மேக  மாதுகள் குறிக்கவும்

மரங்களின் ஓசை மதுரமாய் மிதக்கவும்

கண்காணாக் கரீந்நான்கள்

களியேறிப் பாடின

குழந்தைகள் வந்தனர் கூண்டையும் கண்டனர்

கிளியினைக் காணார்

இரு குழந்தைகள் வருந்தினர்

இரவில் கிளி வந்து இறகை ஒடுக்கியும்

இடமில்லையென்றே பறந்து போய்விட்டது.

சுவட்டினைப் பாராய்

பல குழந்தைகள் பல் பாட்டி இளித்தனர்

கிளியேது சுவடேது மூடரே

மாலையில் எழுதிய பாட்டை

காலையில் எழுந்து நான் படித்தேன்

அலைபடு நிழலில் பிம்பம் தெரியுமா?

மணல் கூண்டில் கிளி வந்து நுழையுமா?

உள்ளத்தின் வேட்கை வார்த்தையில் தோணுமா?

ஆ! ஆசை அழைத்தால் போதுமா?

அழகென்ன மீனா?

ஓசையின் துண்டிலில் நிக்குமா?

சில பெரியோர்கள் இரங்கினர்.

நன்னூல் தெரியாத நண்பா!

அதென்ன பைத்தியம்!

வயிற்றையும் வாழ்க்கையும் விட்டுக்

காசையும் காலமும் போக்கிச்

சொல்லே்ாடு மன்றாடும் அடிமுட்டாள்,

பிழைக்கத் தெரியாத பெரும்பித்து!

அதென்ன பைத்தியம்!

பல சிறியோர்கள் புகழ்ந்தனர்.

அட பித்தே!

தொட்ட வார்த்தையில் தங்கத்தைத் தேக்கினாய்
தொடாத தந்தியில் ஒலியை எழுப்பினாய்
எண்ணாத உள்ளத்தில் எழிலினை ஊற்றினாய்
அழகின் அம்பை வார்த்தையில் பூட்டினாய்
அழகுப் பித்தே வாழ்க

 

சிறியோர்கள் வார்த்தையைப் போற்றினேன்
பெரியோர்கள் இரங்கலைத் தள்ளினேன்
ஆறுஎங்கும் கிளிக்கூண்டு கட்டுவேன்
அழகினை அழைப்பேன்
எந்நாளும் -

 

காவிரி ஆற்றுக் கரையில் பிறந்து வளர்ந்தவர் பிச்சமூர்த்தி. ஊரின் சிறு குழந்தைகள் ஆற்று மணலைக் குவித்து, நீர் தெளித்துக் குச்சிகளைக் கம்பிபோல் வரிசையாய் அடுக்கிக் கூண்டுபோல் செய்து விளையாடுவார்கள். இதைக் கிளிக்கூண்டு விளையாட்டு என்பார்கள். கூண்டு இருக்கிறது, கிளி எங்கே? கூண்டை அப்படியே விட்டுவிட்டுப் போனால் இரவில் கிளி தானாக வந்து அதற்குள் அடையும்; நாளை வந்து பார்க்கலாம் என்று நம்புவார்கள். குழந்தைகளின் இந்த ஆசையும் கற்பனையும் அழகானவை.

கவிஞரும் ஒரு கிளிக்கூண்டு செய்கிறார்; அதில் வார்த்தைதான் மணல்; ஓசையே நீர்; தீராத தாகமே விரல்; ‘பாட்டு’ என்னும் கூண்டைக் கவிஞரும் அமைக்கிறார். ‘அழகு’ என்னும் கிளி வந்து அடையும் என்று நம்புகிறார்.

மணலில் கூண்டு செய்த குழந்தைகள் அடுத்த நாள் காலை வந்தனர். கூண்டைக் கண்டனர்; கிளியைக் காணவில்லை. இரு குழந்தைகள் வருந்தினர். ‘இரவில் கிளி வந்திருக்கிறது. சிறகை ஒடுக்கிப் பார்த்து இடம் இல்லை என்று பறந்து போய்விட்டது, சுவடுகள் இதோ’ என்றனர். பல குழந்தைகள் ‘கிளியாவது, சுவடாவது! முட்டாள்தனம்,’ என்று பரிகாசம் செய்தனர்.

கவிஞரும் தம் பாட்டு என்னும் கிளிக்கூண்டில் ‘அழகு’ என்னும் கிளி வந்து அடைந்ததா? என்று தேடுகிறார். மணல் கூண்டில் கிளி வந்து அடையுமா? உள்ளத்தின் வேட்கை வார்த்தையில் தோணுமா?.... அழகென்ன மீனா? ஓசையின் தூண்டிலில் சிக்குமா? என்று ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறார்.

சில பெரியோர்கள் சொல்கின்றனர்: ‘நன்னூல் தெரியாத நண்பா!.... சொல்லோடு மன்றாடும் அடிமுட்டாள்’ என்று! வயிற்றையும் வாழ்க்கையையும் விட்டுக் காலத்தையும் காசையும் இழக்கின்ற பைத்தியமா என்று அவரைக் கேட்கின்றனர். அவர் மேல் இரக்கம் கொள்கின்றனர். பல சிறியோர்கள் அவரைப் புகழ்கின்றனர்: இதில் வரும் ‘பெரியோர்கள்’ - கற்றறிந்த பண்டிதர்கள். ‘சிறியோர்கள்’ - இயல்பான படைப்பு ஆற்றல் - கற்பனை ஆற்றல் உடையவர்கள்; புதிய தலைமுறையினர்; இலக்கணம் அறியாதவர்கள். நன்னூல் - தமிழ் இலக்கண நூல். இதைப்பற்றிய குறிப்புத்தான் நமக்கு இந்த இரு பிரிவினரைப் பிரித்து அடையாளம் காட்டுகிறது.

சிறியோர்களோ, ‘உன் சொற்களில் தங்கம் தேங்குகிறது. தந்தியை மீட்டாமலேயே வீணை இசை எழுகிறது. அறிவின் எண்ணம் தோன்றாத உள்ளத்தில் உணர்வாக அழகை நீ ஊற்றுகிறாய். வார்த்தை வில்லாக வளைகிறது, அதில் அம்பாக அழகு பாய்கிறது. உன் முயற்சி வீண் இல்லை’ என்று பாராட்டுகின்றனர்.

கவிஞர் தேடும் அழகு என்ற கிளி அவரது உணர்வின் போக்கில் அமைக்கும் வார்த்தை மணல் கூண்டில் தானாகவே வந்து அடைகிறது. அதைத்தான் அந்தச் சிறியோர்கள் பார்த்திருக்கின்றனர். பிச்சமூர்த்தியோ நிறைவு அற்றவர்; தம் சொல்லில் கவிதை வந்துவிட்டது என்பதை நம்ப மறுப்பவர். இந்தத் திருப்தியின்மையே அவரை மேன்மேலும் வளர்த்தது. தொடர்ந்து வாழ்க்கை என்னும் ஆற்றங்கரையில் கிளிக்கூண்டுகளைக் கட்டிக் கொண்டே இருப்பதும் அழகென்னும் கிளியை அழைப்பதும்தான் தம் வாழ்க்கை என்று அவர் உணர்கிறார்.

 

2.அப்துல்ரகுமான் பாருக்குள்ளே நல்ல நாடு

கவிதை : பாருக்குள்ளே நல்ல நாடு - கவிக்கோ அப்துல் ரகுமான் கவிக்கோ என்றால் கவிதைகளின் அரசன் என்று பொருள். அந்த அடைமொழிக்கு ஏற்றவாறு தமிழ் கவிதை உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தார் கவிக்கோ அப்துல் ரகுமான்.

வைகை ஆற்றின் தென்கரையில் 1937 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 9 ஆம் நாள், உருதுக் கவிஞர் சையத் அஹமத் - ஜைனத் பேகம் இணையருக்கு மகனாகப் பிறந்தார், அப்துல் ரகுமான். தனது தொடக்கக் கல்வி, உயர்கல்வியை மதுரையில் உள்ள பள்ளிகளிலும், இளங்கலை, முதுகலைப் பட்டப் படிப்பை மதுரை தியாகராஜர் கல்லூரியிலும் கற்றுத் தேர்ந்தார். அங்கு முனைவர் மா.ராஜமாணிக்கனார், அவ்வை துரைசாமி, அ.கி.பரந்தாமனார், அவ்வை நடராசன், அ.மு.பரமசிவானந்தம் ஆகிய தமிழறிஞர்களிடம் பயின்றார். சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அதன் இயக்குநராகப் பணியாற்றிய ச.வே.சுப்பிரமணியத்தை வழிகாட்டியாகக் கொண்டு புதுக்கவிதையில் ‘குறியீடு’ என்னும் தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 1961 ஆம் ஆண்டு வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் விரிவுரையாளராக பணியில் சேர்ந்து, 20 ஆண்டுகள் பேராசிரியராகவும், தமிழ்த்துறையின் தலைவராகவும் இருந்து 1991 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார்.

கவிக்கோ அப்துல் ரகுமான் ‘வானம்பாடி’ இயக்கக் கவிஞர்களோடு இணைந்து இயங்கினார். அவரை புதுக்கவிதைகளின் சிற்பி என்றால் அது மிகையாகாது. அவர் பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் சோதனை முயற்சியை மேற்கொண்டார். அத்தொகுதியில் அவர் கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழியாக தந்தார். தமிழில் கவிதைக் குறியீடுகளை குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றார். தமிழில் ஹைக்கூ, கசல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை பரப்பியதிலும் இவருக்கு பெரும்பங்கு உண்டு. சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பாணி. அறிவுமதி உள்ளிட்ட இளம்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார். தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக 2009 மே முதல் 2011 வரை பணியாற்றி வந்தார்.1999 ஆம் ஆண்டு தனது ஆலாபனை கவிதைக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றார். மேலும் இவர் கவியரசர் பாரிவிழா விருது, தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி, கம்பர் விருது, உமறுப்புலவர் விருது உள்ளிட்ட 14 விருதுகளை பல்வேறு அமைப்புகளால் வென்றிருக்கிறார். தமிழ், ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி ஆகிய பல மொழிகளிலும் புலமை பெற்றிருந்த இவர், சமஸ்கிருதமும் பயின்றவர்.கவிக்கோ அப்துல் ரகுமானின் பவளவிழாவில் கவிஞர் வைரமுத்து, “எங்கள் எல்லோரையும் விடச் சிறந்தவர் கவிக்கோ அப்துல் ரகுமான். காரணம் அவர் கருவில் இருக்கும் குழந்தையைப் போல இடம்பெயராமல் கவிதைக்குள்ளேயே வாழ்ந்து வருகிறார். கவியரங்கம் என்ற கலைவடித்தில் தன்னை தனித்துவமாக வெளிப்படுத்திக் கொண்ட ஓர் அற்புதக் குரல் அப்துல் ரகுமானுடையது. ஒருமுறை நதியை ‘இது தண்ணீர் வாக்கியம்’ என்றார் அப்துல் ரகுமான். துளித்துளியான வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட தண்ணீர் வாக்கியம்தான் நதி என்றார். மூன்று காண்டங்களில் இளங்கோவடிகள் வடித்த சிலப்பதிகாரத்தை நான்கு வரிகளில் இப்படிச் சொல்கிறார், ‘பால் நகையாள், வெண்முத்த பல்நகையாள், கண்ணகியாள், கால் நகையால், வாய் நகை போய், கழுத்து நகை இழந்த கதை’ என்கிறார் அப்துல் ரகுமான்” என்று சிலாகித்துப் பேசினார்.

திமுக தலைவர் கருணாநிதி மீது மிகுந்த அன்பும், பற்றும் கொண்டவர் கவிக்கோ அப்துல் ரகுமான். அவர் கருணாநிதியை வாரத்தின் ஏழு கிழமைகளோடும் ஒப்பிட்டு ஒரு கவிதை எழுதினார். “ ஞாயிறு.. இரவிலும் விழித்திருக்கும் ஞாயிறு நீ; திங்கள்.. அமாவாசையிலும் ஒளிரும் திங்கள் நீ; புதன்..செந்தமிழ் பேசிப் பேசி சிவந்தவாய் நீ; புதன்.. வீழ்த்தும் தோல்விகளை வெற்றியாக்கும் அற்’புதன் நீ; வியாழன்... ஆழ்ந்த கல்வியாழம் கண்டவன் நீ; வெள்ளி... விடுதலை வானின் விடிவெள்ளி நீ; சனி... உன்னை சபிக்கும் பகைவர்க்கு சனி நீ” என்பது அந்தக் கவிதை. 

 

கவிதை : பாருக்குள்ளே நல்ல நாடு - கவிக்கோ அப்துல் ரகுமான்

Description: PDF

Description: அச்சிடுக

Description: மின்னஞ்சல்

 

வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2002 20:29

அவர்களைச் சிறையில் சந்தித்தேன்.
"என்ன குற்றம் செய்தீர்கள்? "
என்று கேட்டேன்
ஒவ்வொருவராகச் சொன்னார்கள் :

"எங்கள் வீட்டில் திருடிக் கொண்டு
ஒருவன் ஓடினான். "திருடன், திருடன்"
என்று கத்தினேன். அமைதிக்குப்
பங்கம் விளைவித்ததாக என்னைக்
கைது செய்துவிட்டார்கள்."
"என் வயலுக்கு வரப்பெடுத்துக் கொண்டிருந்தேன்.
பிரிவினைவாதி என்று பிடித்துக்கொண்டு வந்து
விட்டார்கள். "
"அதிகாரி லஞ்சம் வாங்கினான், தடுத்தேன்.
அரசுப் பணியாளரை அவருடைய கடமையைச்
செய்யவிடாமல் தடுத்ததாகத் தண்டித்துவிட்டார்கள். "
"அலிபாபாவும் நாற்பது திருடர்களும்ீ படச்
சுவரொட்டியை ஒட்டிக்கொண்டிருந்தேன்.
சட்டமன்ற உறுப்பினர்களை அவதூறு
செய்ததாக அழைத்துக்கொண்டு வந்து
விட்டார்கள். "
"சுதந்திர தின விழாவில் 'ஜன கண மண' பாடிக்
கொண்டிருந்தார்கள். நான் பசியால் சுருண்டு
படுத்துக்கொண்டிருந்தேன். எழுந்து நிற்க
முடியவில்லை. தேசிய கீதத்தை அவமதித்ததாகச்
சிறையில் அடைத்து விட்டார்கள். "

“அக்கிரமத்தை எதிர்த்து ஆயுதம் ஏந்தச்
சொன்னான் கண்ணன்” என்று யாரோ
கதாகாலட்சேபத்தில் சொல்லியிருக்கிறார்கள்
என்பெயர் கண்ணன். “பயங்கரவாதி” என்று
என்னைப் பிடித்துக் கொண்டு வந்து விட்டார்கள்.

நான் வெளியே வந்தேன்.
சட்டம் ஒழுங்குப் பிரச்சினை எதுவும்
இல்லாமல் நாடு
அமைதியாக இருந்தது..
                                




 

3.‘நா.காமராசன்’- காகிதப் பூக்கள்

 நா. காமராசன் (1942 - மே 24, 2017) தமிழ் புதுக்கவிதை இயக்க முன்னோடியும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். தொடக்கத்தில் மரபுக்கவிதைகள் எழுதி வந்த இவர் காலப்போக்கில் வசனக்கவிதை, புதுக்கவிதை ஆகிய துறைகளுக்கு மாறி அவற்றிலே தன் சிறப்பை வெளிப்படுத்தினார். கிராமியச் சந்தங்களுடன் புதுப்பார்வை திகழப் படிமக் கவிதைகள் பலவற்றை எழுதியுள்ளார். இவர் ஒரு உருவகக் கவிஞர் ஆவார். அழகான கவிதைகளால் பொருத்தமற்ற கொள்கைகளைச் சாடும் காமராசன், "கவியரசு, சோசலிசக்கவிஞர், புதுக்கவிதையின் முன்னோடி, புதுக்கவிதை ஆசான்" என்றும் அழைக்கப்பட்டவர்,கருணாநிதியால் அரசியலுக்கும்,எம்.ஜி.இராமச்சந்திரனால் திரைத்துறைக்கும் வந்தவர்.

"தன் கால்களில் இரத்தம் கசியக்கசிய பழைய முட்பாதைகளில் முன்னேறி முதலில் புதுக்கவிதை உலகுக்கு ஒரு புதுப்பாதை அமைத்தவன் நா. காமராசன் தான் என்பதை மூர்ச்சை அடைந்தவன் கூட மறந்து விடக் கூடாது" என்று கவிஞர் வைரமுத்துவால் புகழப்பட்டவர். 1942-ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில் போ. மீனாட்சிபுரத்தில் நாச்சிமுத்து, இலட்சுமி அம்பாள் தம்பதியினருக்குப் பிறந்தார். இவர் தேனி மாவட்டம், உ. அம்மாபட்டியில் வசிக்கும் தா. பொம்மையன் மகள் லோகமணியை வாழ்க்கை துணைவியாக ஏற்றுக்கொண்டவர், இவருக்குத் தைப்பாவை என்ற மகளும், தீலீபன் என்ற மகனும் உள்ளனர்.

இவர் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு ஏற்ப பள்ளி பருவத்திலே பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெற்றுப் போடிநாயக்கனூர் ஊர் மக்களால் யானை மீது இவரை அமரவைத்து ஊரைச் சுற்றி வந்து பெருமைபடுத்தியது இவரது கவிதை எழுதும் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது,1964-ஆம் ஆண்டில் மதுரை தியாகராசர் கலைக் கல்லூரியில் மாணவராக இருந்த பொழுது நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துக்கொண்டு போலிசாரால் கைது செய்யப்பட்டு காலில் விலங்கு பூட்டப்பட்டுப் சிறையில் அடைக்கப்பட்டவர். முதுகலைப் பட்டம் பெற்ற இவர் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்புத் துறையில் அதிகாரியாகவும் பணியாற்றியவர்.புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் திரைத்துறையில் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப்பட்டவர். அவரது ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் கதர் வாரிய துணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இவர் அ.தி.மு.க வில் பல்வேறு பதவியில் இருந்துள்ளார். 1990-இல் மாநில மாணவர் அணி மற்றும் மாநில இலக்கிய அணி செயலாளர் பதவியில் இருந்துள்ளார், கலைஞர் மு.கருணாநிதி கையில் பல விருதுகள் பெற்றுள்ளார், 1991-இல் தமிழ் நாட்டு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினராகச் செல்வி ஜெ.ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்.இவரது கவிதை தொகுப்புகள் சில தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைகழகத்தில் இளங்கலை முதலாம் ஆண்டு தமிழ் புத்தகத்தில் பாடமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது கறுப்புமலர் புத்தகத்தில் திருநங்கைகள் பற்றி இவர் எழுதிய கவிதை பலரால் பாரட்டப்பெற்றது. இலக்கியத்துறை, திரைப்படத்துறை, அரசியல்துறை ஆகியவற்றில் கால்பதித்து முத்திரை பதித்தவர். இவர் சிறந்த பேச்சாளர். நா. காமராசன் உடல்நலக் குறைவால் 2017 மே 24 அன்று சென்னையில் காலமானார். திருநங்கைகள்-காகிதப் பூக்கள்

காலமழைத் தூறலிலே
களையாய்ப் பிறப்பெடுத்தோம்
தாய்ப்பாலின் சரித்திரத்தில்
சதுராடும் புதிரானோம்

விதைவளர்த்த முள்ளானோம்
விளக்கின் இருளானோம்
சதைவளர்க்கும் பிணம்நாங்கள்
சாவின் சிரிப்புகள்

மூங்கையொரு பாட்டிசைக்க
முடவனதை எழுதிவைக்க
முடவன் கை எழுதியதை
முழுக்குருடர் படித்ததுண்டோ?

மூங்கையின் பாட்டானோம்
முடவன்கை எழுத்தானோம்
முழுக்குருடர் படிக்கின்றார்

சந்திப்பிழை போன்ற
சந்ததிப்பிழை நாங்கள்
காலத்தின் பேரேட்டைக்
கடவுள் திருத்தட்டும்

தலைமீது பூவைப்போம்
தாரணியோர் கல்லறையில்
பூவைத்தல் முறைதானே?
பூத்தஉயிர்க் கல்லறைகள் நாங்கள்

தாய்ப்பெண்ணோ முல்லைப்பூ
தனிமலடி தாழம்பூ
வாய்ப்பந்தல் போடுகின்ற நாங்கள்
காகிதப் பூக்கள்.

காகிதப் பூக்கள் என்னும் இக்கவிதை திருநங்கைகளின் பிறப்பு, அவர்கள் இந்த சமூகத்தில் படும் துன்பங்கள் ஆகியவற்றை எடுத்துரைப்பதாக அமைகின்றது.

சதுராடும் புதிர்கள்

காலம் என்கிற மழைத்தூறலிலே நாங்கள் நெல்லின் இடையே வளரும் களை களாகப் பிறப்பெடுத்துள்ளோம். தாய்ப்பாலின் வரலாற்றிலே ஆணாகவும் இல்லாமல் பெண்ணாகவும் இல்லாமல் சதுரங்க ஆட்டத்திலே உள்ள புதிராக மாறிப்போனோம் என்று அவர்களது பிறப்பின் வேதனையைக் கவிஞர் கூறுகின்றார்.

சாவின் சிரிப்புகள்

விதைவளர்த்த முள்ளாகவும் விளக்கின் இருளாகவும், சதை வளர்க்கும் பிணங் களாகவும், சாவின் சிரிப்புகளாகவும் நாங்கள் உள்ளோம். இப்படி எல்லா நிலையிலும் எங்கள் வாழ்க்கை முரண்பட்டதாகவே காணப்படுகின்றது என்று கூறுவது போன்று கவிஞர் கூறுகின்றார்.

சந்ததிப் பிழை நாங்கள்

        வாய்பேச இயலாதவர் பாட்டிசைக்க கையில்லாதவர் அதை எழுதிவைக்க கண்பார்வையற்றவர் அதைப் படித்ததை எங்கேனும் பார்த்ததுண்டா? ஆனால் நாங்கள் வாய்பேச இயலாதவரின் பாட்டானோம்; கையில்லாதவர் எழுதிய எழுத்தா னோம்; கண்பார்வையற்றோர் அதைப் படிக்கின்றனர். உலகில் இவையெல்லாம் நடக்காத விஷயங்கள் என்றால் எங்கள் பிறப்பு இவற்றை யெல்லாம் நடந்த விஷயங் களாக மாற்றுகின்றது.

எழுத்துக்களில் வரக்கூடிய சந்திப்பிழை போன்று நாங்கள் எங்களின் பரம்பரையில் சந்ததிப் பிழைகளாக மாறிவிட்டோம். இதை மாற்றக்கூடிய சக்தி எங்களிடம் இல்லை. காலத்தின் பேரேட்டைக் கடவுள் திருத்தட்டும் என்று கூறுகின்றனர்.

பூவைத்தல் முறைதானோ?

நாங்கள் தலைமீது பூ வைப்போம், உலகத்தில் கல்லறை மீது பூ வைப்பது என்பது முறைதானே? எனவே நாங்கள் பூத்த உயிர் கல்லறைகளாகவே இருக்கின் றோம்.

நாங்கள் காகிதப் பூக்கள்

குழந்தையைப் பெற்றெடுக்கக்கூடிய பெண்கள் அழகும் வாசமும் நிறைந்த தலையில் சூடக்கூடிய முல்லைப்பூவாகக் கருதப்படுகின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாத மலடி என்று அழைக்கப்படும் பெண்கள் வாசம் உடைய ஆனால் தலையில் சூட இயலாத தாழம்பூவாகக் கருதப்படுகின்றனர்.

ஆனால் ஆணாக இருந்து பெண்ணாக மாறிய நாங்கள் என்னதான் பெண் பெண் என்று கூறினாலும், பார்ப்பதற்கு பூ போன்று இருந்தும் பூக்குரிய எந்தத் தகுதியும் இல்லாத காகிதப் பூக்களாகவே கருதப்படுகின்றோம்.

 

கவிஞர் : தாமரை- ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் பாலும்

தாமரைதமிழ்ப் பெண் கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார்.

கோவையில் பிறந்த தாமரை, இயந்திரப் பொறியியல் பட்டதாரி. இவரின் தந்தை, கவிஞராகவும் நாடகாசிரியராகவும் விளங்கியுள்ளார். "ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்" என்ற கவிதைத் தொகுப்பை அளித்துள்ள தாமரை, சிறுகதைகளும் எழுதக் கூடியவர். "சந்திரக் கற்கள்", "என் நாட்குறிப்பின் நடுவிலிருந்து சில பக்கங்கள்" ஆகிய சிறுகதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். இலக்கியப் படைப்புகளுக்காகத் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, சிற்பி விருது ஆகிய விருதுகளையும் பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளார்.

"வசீகரா, அழகிய அசுரா, தவமின்றிக் கிடைத்த வரமே, இஞ்சேருங்கோ...” எனப் புகழ்மிக்க பாடல்கள் உட்பட நூற்றுக்கும் மேலான பாடல்களை இயற்றியுள்ளார். இலங்கைசிங்கப்பூர் நாடுகளுக்குப் பயணித்துள்ளார். இவர், ஆங்கிலச் சொற்களைக் கலந்து பாடல்கள் எழுதுவதில்லை என உறுதி கொண்டுள்ளார்[1]. திரையிசைத்துறையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ், இயக்குநர் கௌதம் மேனன் ஆகியோர் படங்களில் தாமரை அதிக பாடல்களை எழுதியுள்ளார். இம்மூவர் கூட்டணி வெற்றிப் பாடல்களை தந்துள்ளது.

எழுதிய பாடல்கள்

·         வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்[12]

·         ஒன்றா இரண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா..அன்பே இரவை கேட்கலாம் விடியல் தாண்டியும் இரவே நீளுமா..

·         தவமின்றி கிடைத்த வரமே..இனி வாழ்வில் எல்லாம் சுகமே..

எழுதியுள்ள புத்தகங்கள்

 

 

 

 

 

ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும் - கவிதைத் தொகுப்பு


தாமரைதமிழ்ப் பெண் கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார்.

கோவையில் பிறந்த தாமரை, இயந்திரப் பொறியியல் பட்டதாரி. இவரின் தந்தை, கவிஞராகவும் நாடகாசிரியராகவும் விளங்கியுள்ளார். "ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்" என்ற கவிதைத் தொகுப்பை அளித்துள்ள தாமரை, சிறுகதைகளும் எழுதக் கூடியவர். "சந்திரக் கற்கள்", "என் நாட்குறிப்பின் நடுவிலிருந்து சில பக்கங்கள்" ஆகிய சிறுகதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். இலக்கியப் படைப்புகளுக்காகத் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, சிற்பி விருது ஆகிய விருதுகளையும் பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளார்.

"வசீகரா, அழகிய அசுரா, தவமின்றிக் கிடைத்த வரமே, இஞ்சேருங்கோ...” எனப் புகழ்மிக்க பாடல்கள் உட்பட நூற்றுக்கும் மேலான பாடல்களை இயற்றியுள்ளார். இலங்கைசிங்கப்பூர் நாடுகளுக்குப் பயணித்துள்ளார். இவர், ஆங்கிலச் சொற்களைக் கலந்து பாடல்கள் எழுதுவதில்லை என உறுதி கொண்டுள்ளார்[1]. திரையிசைத்துறையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ், இயக்குநர் கௌதம் மேனன் ஆகியோர் படங்களில் தாமரை அதிக பாடல்களை எழுதியுள்ளார். இம்மூவர் கூட்டணி வெற்றிப் பாடல்களை தந்துள்ளது.

ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் பாலும்

வலி

ஏய் பல்லக்கு தூக்கி!
கொஞ்சம் நிறுத்து…
உட்கார்ந்து உட்கார்ந்து
கால் வலிக்கிறது..
எதிர்வினை
‘கொலையும் செய்வாள் பத்தினி…
‘கொஞ்சம் இரு
முன்னதாக நீ என்ன செய்தாய்?வீடுநண்பன் சொன்னான்
வீட்டுக்குள்ளிருந்தே
விண்மீன்கள் பார்த்தானாம்…-
கூரையில் ஓட்டைகள்!
ப்பூ! இதென்ன பிரமாதம்?
என் வீட்டுக்குள்ளிருந்து
வானத்தையே பார்க்கலாம்!

மழைக்குறிப்பு என்று ஒரு கவிதையில், மழை வரும்போது ஏற்படும் மண்வாசத்தை அனுபவிப்பது பற்றி, மகிழ்ச்சியடையும் மயில்கள். உழவர்கள், குழந்தைகளின் பற்றி எல்லாம் சொல்லி விட்டு, இறுதியில் இப்படி முடிக்கிறார்…

எல்லாம் சரி…
தண்டாயுதபாணி கோயிலுக்குப்
போகும் நடைபாதையில்
பழைய சாக்கு விரித்து
அன்றாடம் வேண்டியிருக்கும்
அரைவயிற்றிக் கஞ்சிக்காக
சுருங்கிய கைகளோடு
சூடம் விற்கும்
தாயம்மா கிழவியை
நினைத்தால்தான்..

ஒட்டடை என்று ஒரு கவிதையில் வேலைக்கும் சென்று வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு வாழும் ஒரு பெண்ணை புரிந்து கொள்ளாமல், வீட்டில் ஒட்டடை அடிக்க பிந்தி விட்டதற்காக, கணவன், மாமனார், மாமியார் எப்படி எல்லாம் வார்த்தைகளால் புண்படுத்துகிறார்கள் என்பது பற்றிச் சொல்லி விட்டு இப்படி சொல்கிறார்….

யார் அடிப்பது மனசின் ஒட்டடை?

நியாயத்திற்கான போராட்டத்திற்கு அழைக்கும் என்னையும் அழைத்துப் போ என்ற கவிதையில் சில வரிகள்…

கனவுகள் கண்டு
கொண்டுநான் நின்றுவிட்டேன்
குனிந்த தலையோடு
கனவுகளை விழுங்கிவிட்டு
நீ நடந்தாய்
நிமிர்ந்த நெஞ்சோடு…
இனியும் மிதிபட முடியாது
என்னையும் அழைத்துப் போ…
நீந்தத் தெரியாவிட்டால் என்ன
வெள்ளம் சொல்லித் தரும் வா
என்று சொல்..

அந்தப் பதினொரு நாட்கள் என்று ஒரு கவிதையில் சில வரிகள்…

முதுகெலும்பின் நீளம்
என்ன என்ற கேள்விக்கு
ஆரம் அரையடி என்றே
பதில் எழுதிக்கொண்டிருந்தோம்…
அவர்கள் நகைக்குமுன்பு
நீ அளந்து காட்டிய
நீளத்தால் மூர்ச்சையானவர்கள்
இன்னும் எழவில்லை…
எங்கள் உயிரின் இருப்பை
நாங்கள் தேடிக் கொண்டிருந்தபோது
உன் உயிரின்
ஒவ்வொரு துளியையும்
நீ வாழ்ந்தாய்திலீபா..!
உயிருக்கு நீ தந்தமரியாதையை
உலகத்தின் வரலாற்றில்
வேறெவனும் தந்ததில்லை…
சாவையும் வாழ்ந்தவன்
நீ மட்டுமே!

புத்தர் சிரித்தார் என்ற கவிதையில் சில வரிகள்…

ஆக்சிஜன் மேலிருந்த
அன்பு குறைந்துபோய்
இப்போதெல்லாம்
ஹைட்ரஜனோடு
ஐக்கியமாகி விட்டோம்
புத்தர் சிரித்தார் என்று
நாமும் சிரித்து வைத்தோம்
அணுக்குண்டுகளைக்
கக்கத்தில் இடுக்கிக் கொண்டு
மனித நேயத்தை
ஏவு கணையில்
ஏற்றி அனுப்பி விட்டார்களே
என்ற உதைப்பின் ஊடாக..

ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும் என்ற கவிதையில் அம்மா அப்பாவை விட்டு பிரிந்து வேறொரு இடத்தில் விடுதியில் தங்கியிருந்து படிக்கையில் அதை வெறுத்தது பற்றி கவிதையின் முன் பகுதியில் சொல்லி,இறுதியில் இப்படிச் சொல்கிறார்….

குறைந்தது நூறு முறை
என் கடிதம்
சுமந்து போனது
கண்ணீரையும்,
கடந்தகாலத்தையும்,
வந்துஅழைத்துப் போங்களையும்…
திடீரென்று எனக்குள் ஒரு கதவு
அறைந்து திறந்தது
என் அறைக்கதவு
திறந்தது போலவே…
அறை தோழியாய்
வந்தவள்
என்னைவிடச் சின்னவள்
அகதிகள் ஒதுக்கீட்டில்
இடம் கிடைத்திருக்கிறது
யாழ்ப்பாணத்துக்காரியாம்!
இறுக்கி மூடிய உதட்டுக்குள்ளிருந்து
கள்ளிப்பால் போல் ஒவ்வொன்றாய்
சொட்டிய கதைகள்…
என் நேற்றைய கடிதம் கண்டு
அம்மா வியந்திருக்க வேண்டும்
“அம்மா நான் மிக நலம்
அடிக்கடி வர வேண்டாம்
அழுவதை நான் நிறுத்தி விட்டேன்
அடுத்த முறை அங்கே
வரும்போது
ஒரு சினேகிதியை
அழைத்து வருவேன்…
முடிந்தால் அவளையும்
மகளே என்று விளி…”

 

புத்தம் சரணம் கச்சாமி

 -   அ. வெண்ணிலா. அ. வெண்ணிலா (A. Vennila, பிறப்பு: 10 ஆகத்து 1971) தமிழக எழுத்தாளரும், கவிஞரும் ஆவார்.[1] கவிஞர்சிறுகதை ஆசிரியர்கட்டுரையாளர்நாவலாசிரியர்ஆசிரியர், சிறு பத்திரிகை ஆசிரியர் என பன்முக ஈடுபாடுகளுடன் தமிழ் உலகில் இயங்கிவருகிறார்.[2] பெண்ணியம் சார்ந்த கருத்துகளை முன்னெடுத்து இலக்கியம் படைத்து வருவது வெண்ணிலாவின் தனித்துவமாகும். அன்றாட வாழ்வின் இன்னல்களை புனைவுகள் ஏதுமின்றி படைப்பாக்குவது இவரது ஆற்றலாகும். இவர் எழுதிய படைப்புகள் ஆங்கிலம்மலையாளம்இந்தி என பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நூல்கள் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி அளவிலான பாடத்திட்டங்களில் பாடமாகவும் இடம்பெற்றுள்ளன. 2009-2010 ஆம் ஆண்டு காலத்தில் தமிழகத்தின் சமச்சீர் கல்வி பாடத்திட்டக் குழுவில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி புதிய பாடப்புத்தக உருவாக்கத்தில் பங்களிப்பு வழங்கியுள்ளார்.[1]பதினைந்து ஆண்டுகளாக இலக்கியத்தில் தீவிரமாக இயங்கி வருகிறார். கவிதை, சிறுகதை, கட்டுரை போன்றவைகளில் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். பெண்ணியம் சார்ந்த கருத்தியல்களை முன்னெடுத்து வருகிறார். ஆனந்த விகடன் இவரின் ‘பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும்’ என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறது. வரலாறு தொடர்பான நூல்களை அகநி வெளியீட்டின் மூலம் வெளியிட்டு வருகிறார். இலக்கியம், வரலாறு தொடர்பாக ஆறு தொகுப்பு நூல்களை வெளியிட்டிருக்கிறார். ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பை, செம்பதிப்பாக ஏப்ரல் மாதம் வெளியிட இருக்கிறார். கணித ஆசிரியராகப் பணி.

 “பயணம் செல்லும் வெளியூர்களிலெல்லாம்

புத்தர் சிலைகளை வாங்குவது வழக்கம்

ஒன்று நானாகத் தேடிப் போவேன்

அல்லது புத்தரே கண்ணில் பட்டு

அமைதி தவழும் தன் முகத்தைக் காட்டி

என்னை வாங்க வைத்து விடுவார்.

 

எல்லா சிற்பிக்கும் வாகானவர் புத்தர்

பளபளப்பான கருங்கல்

வெள்ளை மாவுக்கல்

கூழாங்கல்

காகிதக்கூழ்

எதில் வடிக்கப்பட்டாலும்

வசீகரித்துவிடுபவர்  புத்தர்.

 

நீண்ட அவரின் காதுகள்

எதையும் அவரிடம் சொல்லிவிடலாம் என்ற

நம்பிக்கையைத் தந்து வாங்கச் செய்துவிடும்

இதழ்க்கடையோரம் விரியும் புன்னகை

குளிர் தருவை நினைவூட்டும்

ஆசையைக் கடக்கவே முடியாமல்

எல்லா பயணங்கள் முடிந்தும்

அழுக்குத் துணி மூட்டைகளுக்கு மத்தியில்

புத்தரோடுதான் வீடு திரும்புவேன்.

 

வீடு முழுக்க சேர்ந்துவிட்ட புத்தர் சிலைகளுக்கு

மத்தியில் புது புத்தருக்கு இடம் தேடவே

ஒன்றிரண்டு மாதங்களாகிவிடும்

பொருத்தமான இடம் கொடுத்து

புத்தரை அமரச்செய்த பிறகு

புத்தர் வீட்டுப் பொருட்களில் ஒன்றாக

அடையாளம் இழந்துபோவார்.

 

மேசையில் புத்தருக்கு எதிரிலேயே அமர்ந்து

எழுதிப் படித்தாலும்

மகான் ஒருவரை எதிர் வைத்திருக்கிற

உள்ளுணர்வு எழுவதில்லை

தேடும் பொருட்கள் அகப்படாத கோபத்தில்

புத்தர்களை வேகமாக இங்குமங்கும்

இடம் மாற்றுவேன்

உடையாத புத்தரை  ஒன்றிரண்டு முறை

தூக்கிக்கூடப் போட்டிருக்கிறேன்.

 

வீட்டின் வரவேற்பறை

கணினி அறை

என கண்ணில் படும் இடங்களில் எல்லாம்

புத்தரை நிரப்பிவைத்திருந்தாலும்

என் மனதில் புத்தர் இல்லை.

 

எழுதும் போது

பறக்கும் தாள்களுக்கு

சிறு புத்தனை

தாள் அடக்கியாகக்கூட

பயன்படுத்திருக்கிறேன்.

 

தூசி படிந்தும்

உருண்டும் புரண்டும்

குழந்தையின் கைபொம்மை போல்

உருவற்று இருக்கும்

புத்தருக்குக் கோபமே வந்ததில்லை.

 

அகதி நண்பனொருவன்

வீடு வந்த நள்ளிரவொன்றில்

மொத்த புத்தரும் வெளியேறினார்கள்

வீட்டைவிட்டு..!”

 

 

 

இளம்பிறை (கவிஞர்)

இளம்பிறை இவரது சொந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சாட்டியக்குடி ஆகும். இவருடைய இயற்பெயர் க. பஞ்சவர்ணம். அரசுப் பள்ளி ஆசிரியையாக அண்மையில் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய எழுத்துப்பணி 1988 களில் தொடங்கியது. இளவேனில் பாடல்கள் (1988), மவுனக்கூடு (1993), நிசப்தம் (1998), நீ எழுத மறுக்கும் எனதழகு (2007) ஆகிய கவிதைத் தொகுப்புகளை இவர் வெளியிட்டுள்ளார். முதல் மனுஷி (2002) என்னும் சிறுகதைத் தொகுப்பையும் பதிப்பித்துள்ளார். மேலும், நாட்டுப்புறப் பாடல்கள் பல பாடியுள்ளார்.

 கவிஞர் இளம்பிறை
இவரது இயற்பெயர் க.பஞ்சவர்ணம் என்பதாகும். சொந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சாட்டியக்குடி ஆகும். இப்பொழுது இவர் சென்னையில் அரசுப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இவரது எழுத்துப் பணி 1988-களில் தொடங்கியிருக்கிறது. இளவேனில் பாடல்கள் (1988), மவுனக்கூடு (1993), நிசப்தம் (1998), முதல் மனுசி(2002), நீ எழுத மறுக்கும் எனதழகு(2007) என்ற கவிதைத் தொகுப்புகளைப் படைத்தவர். யாளி அறக்கட்டளை விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, கவிஞர் கரிகாலனின் களம் இலக்கிய விருது, கவிஞர் வைரமுத்துவின் “ கவிஞர் தின விருது “ போன்ற பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். இளம்பிறை என்னும் புனைப்பெயரில் எழுதி வருபவர். கிராமம் மற்றும் அனுபவம் சார்ந்த படைப்புகளால் அதிகமாக அறியப்பட்டவர். நகரத்திலிருந்த புதுக்கவிதையை கிராமத்திற்கு நகர்த்தி வந்தவர் கவிஞர் இளம்பிறை.

 

இளம்பிறையின் கவிதைகளை மதிப்பீடு செய்த கவிஞர் ராஜ மார்த்தாண்டன் இவரது கவிதைகளில் மூன்று அம்சங்கள் குறிப்பிடத்தக்கனவாக உள்ளதாகக் குறிப்பிடுகிறார். 1. பாசாங்கற்ற உண்மையின் குரல் 2. மண் சார்ந்த மனதின் வெளிப்பாடு 3. கவிதையமைப்பு, வார்த்தைகளை விரயம் செய்யாத எளிமையான – இயல்பான மொழிநடை என்ற மூன்று முக்கியமான தன்மைகளைக் குறிப்பிடுகிறார். “ இளம்பிறை கவிதைகளில் பாசாங்கு இல்லை. அகம் சார்ந்த கவிதைகளாயினும் சரி, புறம் சார்ந்த கவிதைகளாயினும் சரி இவர் தான் நம்பகின்றவற்றையே வெளிப்படுத்தியிருக்கிறார். சமூக அங்கீகாரங்களுக்காக இவர் தன் இயல்பான மனவுணர்வுகளை மறைத்து , தன் பிம்பத்தைப் பிரகாசிக்க வைக்க முயலவில்லை. இதனால் இவர் கவிதைகள் நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் இடையேயான ஊசலாட்டமாக முரண்பட்ட மனவுணர்வுகளின் வெளிப்பாடாக, தன் சூழலிலிருந்து அன்னியப்பட்ட தனிமை கொண்டதாகவும், விடுபடும் மார்க்கமற்ற சோகம் ததும்பியதாகவும் நம்முள் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன “ என்று மிகச் சரியாகக் கணிக்கிறார் கவிஞர் ராஜ மார்த்தாண்டன்.

 

No comments:

Post a Comment

II BA 4th sem major papers

  இளங்கலை இரண்டாமாண்டு - நான்காம் பருவம்             முதன்மைப் பாடம் - தாள் ;.7 -- இலக்கணம் - 4                      தண்டியலங்காரம்...