Followers

Saturday, October 8, 2022

II BA/B.SC 3RD SEM PART I TAMIL - தாள் - 3 காப்பியங்களும் புதினமும் -இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்

MATERIAL;பொதுத்தமிழ்  இரண்டாம் ஆண்டு - மூன்றாம்  பருவம்

 தாள் - 3 காப்பியங்களும் புதினமும்

21FTL03

 அலகு - 1 ஐம்பெரும் காப்பியங்கள்

              சிலப்பதிகாரம் - இந்திர விழவு ஊர் எடுத்த காதை

மணிமேகலை  - பாத்திரம் பெற்ற காதை

சீவக சிந்தாமணி -குணமாலையார் இலம்பகம் (பாடல் 878 முதல் 895 வரை)

 அலகு 2   இடைக்கால பிற்கால காப்பியங்கள்

பெரியபுராணம்  - கண்ணப்ப நாயனார் புராணம்

கம்பராமாயணம் - சுந்தரகாண்டம் திருவடி தொழுத படலம்

சீறாப்புராணம்   - உடும்பு பேசிய படலம்

இயேசுகாவியம்  - அன்புக் கட்டளை பிரியாவிடை

 

அலகு 3   புதினம்

                                பிச்சிப்பூ - பொன்னீலன்

 

அலகு 4   இலக்கிய வரலாறு

 

ஐம்பெரும் காப்பியங்கள்

ஐஞ்சிறு காப்பியங்கள்

கம்பராமாயணம்

இஸ்லாமியர்களின் தமிழ்த்தொண்டு

கிறிஸ்துவர்களின் தமிழ்த்தொண்டு

அலகு 5   மொழித்திறன்

 லக்கணம் 

யாப்பு உறுப்புகள்

 அணி இலக்கணம்

உவமை அணி

உருவக அணி

வேற்றுமையணி

பின்வருநிலையணி

தற்குறிப்பேற்ற அணி

 

சிலப்பதிகாரமஇந்திர விழவு ஊர் எடுத்த காதை


கதிரவன் தோன்றுதல்

கண்ணகன்ற பரப்பினை உடைய மண்ணகம் என்னும் மடந்தைக்கு.
கடல் ஆடை
மலை முலை
ஆறு மாலை
மழை கூந்தல்
இவள் புதைந்திருக்கும் இருள் என்னும் போர்வைக்குள் புதைந்து கிடந்தாள்.
அந்தப் போர்வையை விலக்கிக்கொண்டு மலை முகட்டில் கதிரவன் தோன்றினான்உலகம் தொழும்படித் தோன்றினான்.

மருவூர்ப் பாக்கம்

புகார் நகரத்தில் மக்கள் மருவி வாழ்ந்த கடல்-சார்-ஊர்ப் பகுதி

திறந்தவெளி மாளிகைகள்
பொருள்களைப் பாதுகாக்கும் அகன்ற இருப்பிடங்கள்
மான் கண்ணை விழித்துப் பார்ப்பது போன்ற காற்று வரும் சன்னல்கள்
இப்படிப்பட்ட மாளிகை இடங்கள் இருந்தன.

கடலிலிருந்து நிலத்துக்கு நுழையும் கயவாய்ப் பகுதியில் யவனர் இருப்பிடங்கள் இருந்தன.
அங்குப் பயன்டுத்த முடியாத அளவுக்குப் பண்டங்கள் நிரம்பிக் கிடந்தன.
கப்பலில் சென்று பொருள் ஈட்டி வந்த உள்நாட்டு வணிகர்களும் யவனர்களும் அங்கு ஒன்று கலந்து இனிதாக வாழ்ந்தனர்.

மேனியில் பூசும் வண்ணப் பொடிகள்மணப் பொடிகள்சந்தனம்பூஅகில் போன்ற புகையும் பொருள்கள்மணத் தூவிகள் (செண்டுமுதலானவற்றை விற்றுக்கொண்டு நகர-வீதியில் நடமாடும் வணிகர்கள் திரிந்தனர்.

பட்டுமயிர்பருத்தி முதலானவற்றில் நூல்களை  நூற்று ஆடையாக நெய்யும் காருகர் (நெசவாளிகள்வாழும் இருப்பிடங்கள் இருந்தன.

ஆடைகள்பவளங்கள்பூ-மாலைகள், (புகைத்துக் கூந்தலுக்கு மணம் ஊட்டும்அகில் கட்டைகள்முத்துக்கள்மணிக்கற்கள்பொன்னணிகள் - இப்படிப் பல செலவங்கள் அளவிட  முடியாதபடி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தெருக்கள் இருந்தன.
அளந்து தரும் பண்டங்கள்பல வகையான உணவு தானியங்கள் விற்பனைக்காகக் குவித்து வைக்கப்பட்டிருந்த தெருக்கள் இருந்தன.

பிட்டு விற்கும் காழியர்
அப்பம் விற்கும் கூவியர்
கள் விற்கும் பெண்டிர்
மீன் விற்கும் பரதவர்
உப்பு விற்பவர்
வெற்றிலை விற்கும் பாசவர்
(
சூடம்சாம்பிராணி போன்ற ) மணப்பொருள்களை விற்பவர்
பலவகையான புலால் கறிகளை விற்கும் ஓசுநர்
ஆகியோரின் இருப்பிடங்கள் இருந்தன.

வெண்கலப் பொருள்கள் செய்வோர்
செம்புப் பொருள்கள் செய்வோர்
மரப் பொருகள் செய்யும் தச்சர்
இரும்புக் கருவிகள் செய்யும் கொல்லர்
சிற்பங்கள் செய்யும் கண்ணுள்-வினைஞர்
மண்ணில் பாண்டங்களும் பொம்மைகளும் செய்யும் மண்ணீட்டாளர்
பொற்கொல்லர்
பொன்னணிகள் விற்போர்
துணி தைப்போர்
தோல்-அணி தைப்போர்
கிழிந்த துணியில் பொம்மை செயெய்வோர்
வெண்டுகளில் பொம்மை செய்வோர்
இப்படிப் பலவகைப்பட்ட தொழிலாளர்கள் பகுதி பகுதியாக வாழ்ந்தனர்.

குழலிலும்யாழிலும் குரல் முதலாகத் தொடங்கும் ஏழு பண்களையும் குற்றமின்றி இசைத்துப் பண்ணின் திறத்தைக் காட்டும் பெரும்பாணர் வாழும் இருப்பிடங்கள் இருந்தன.

சிறியகுறுமையான கைவினைப் பொருள்களைச் செய்பவரோடு பெரிய கைவினைப் பொருள்கள் செய்பவர்களும் எத்தகைய குறைபாடும் இல்லாமல் ஒருவரோடு ஒருவர் மருவி இணக்கமாக வாழ்ந்த இடம் மருவூர்ப் பாக்கம்.

பட்டினப் பாக்கம்

அரசு சார் பெருங்குடி மக்கள் வாழும் இடம்

அரசன் நடமாடும் அரண்மனைத் தெரு
அரசனின் கொடி கட்டிய தேர் செல்லும் தெரு
அரங்க மேடைகள் இருக்கும் தெரு
பெருங்குடி வணிகர் வாழும் மாடமாளிகைகள் இருக்கும் தெரு
மறை ஓதுவோர் வாழும் தெரு
எல்லாரும் விரும்பும் உழவர் வாழும் தெரு
ஆயுளுக்கு வேது தரும் மருத்துவர்கள் வாழும் தெரு
காலத்தைக் கணக்கிடுவோர் வாழும் தெரு
இப்படிப் பாகுபட்ட தெருக்கள் பட்டினப் பாக்கத்தில் இருந்தன.

மணிகளுக்குப் பட்டை தீட்டித் துளையிடும் குயிலுநர் வாழும் தெரு
சங்குகளில் வளையல் அறுக்கும் அகன்ற தெரு

நின்றுகொண்டு அரசனை வாழ்த்தும் சூதர்
அமர்ந்துகொண்டு அரசனை வாழ்த்தும் மாகதர்
செல்லும்போது அரசனை வாழ்த்தும் வேதாளிகர்
நல்ல நேரம் பார்த்துச் சொல்லும் நாழிகைக்கணக்கர்
ஆடி மகிழ்விக்கும் மகளிர்
பூ விற்கும் பெண்கள்
குற்றேவல் செய்யும் மகளிர்
அரச குடும்பம் பயிலும் தொழில்களைக் கற்பிக்கும் கலைஞர்கள்
பல்வகை கருவிகளைடன் நின்று இவர்களைப் பாதுகாப்போர்
சிரிப்பு மூட்டி அரசனை மகிழ்விக்கும் நகை-வேழம்பர்
இப்படிப்பட்ட பெருமக்கள் வகைவகையாக வாழும் இருப்பிடங்கள் இருந்தன.

குதிரைப் படை மறவர்
யானைப்படை மறவர்
தேரோட்டும் மறவர்
நடந்து போரிடும் கடுங்கண் மறவர்
ஆகியோர் அரசனைச் சூழ்ந்திருந்து அவனுக்குப் பாய் போல் உதவுவோர்
பெருமை மிக்க சிறப்பு பெற்றவர்கள்
ஆகியோர் மலிந்து வாழ்ந்த இடம் பட்டினப் பாக்கம்.

நாள்-அங்காடிப் பூதத்தை மறக் குடி மகளிர் வழிபடுதல்
நாள்-அங்காடி

இரண்டு பெருவேந்தர்கள் போரிடும் களம் போலமரத்தடியில் கொடுப்போர் ஓசையும் வாங்குவோர் ஓசையும் பெருகிமருவூர்ப் பாக்கத்துக்ககும்பட்டினப் பாக்கத்துக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியில் அச்சமின்றி ஆரவாரம் மிக்கதாய் விளங்கியது நாளங்காடி.

காவல் பூதம்
புகாரை ஆளும் மன்னனுக்கு உற்ற துன்பத்தைச் சித்திரை மாதத்தில் சித்திரை விண்மீன் (மேழம் - மேஷம்சிறப்புற்றிருக்கும் நாளில் போக்குவதற்கென்று தேவர் கோமானாகிய இந்திரனின் ஏவலால் புகார் நகரத்துக்கு வந்து காவல் புரிவது - காவல் பூதம்.

வேகவைத்த பயறு - புழுக்கல்
எள் உருண்டை - நோலை
புலவுச் சோறு - விழுக்குடை மடை
பூதம் சூடும் பூ
மணக்கும் புகை
பொங்கல்
ஆகியவற்றைப் படையல் செய்தனர்.

தோள்களைப் புடைத்துக்கொண்டு ஆடும் துணங்கை
கைகளைக் கோத்துக்கொண்டு ஆடும் குரவை
தெய்வம் ஏறிய ஆட்டம்
ஆகியவற்றை ஆடினர்.

பெரு நிலத்தை ஆளும் மன்னனின் நிலப் பரப்பு முழுவதும் பசிபிணிபகை ஏதும் இல்லாமல் நீங்கிமழையும்வளமும் சுரக்கும்படிச் செய்ய வேண்டும் - என்று வேண்டி நாளங்காடிப் பூதத்தை முதுகுடிப் பெண்கள் குலவை ஒலி செய்தனர்.

பூதத்திற்கு வீரர்கள் உயிர்ப் பலி கொடுத்தல்

மருவூர்ப் பகுதியில் வாழும் மறம் கொண்ட வீரர்களும்
பட்டினப் பகுதியில் வாழும் படைவீரர்களும்
நான் முந்தி நீ முந்தி என்று போட்டிப் போட்டுக்கொண்டு சென்று நாளங்காடிப் பூதத்துக்குப் பலி கொடுப்பார்கள்.

விரும்பத் தகும் திறமை கொண்ட மன்னற்கு உற்ற துன்பம் நீங்க வேண்டும் என வேண்டிக்கொண்டு பலி கொடுப்பர்.
பலிக்கொடை புரிந்தவர்களின் வலிமைக்கு வரம்பாக வேறு சிலர் கல்லைக் கவணில் வைத்து எறிந்து பயிற்சி பெறுவர்.
சிலர் தோலாலான கவசம் அணிந்துகொண்டு மற்றவர் மீது வேல் வீசும் போரில் பயிற்சி பெறுவர்.
சிலர் ஒருவரை ஒருவர் கையால் குத்தித் தாக்கிப் பயிற்சி பெறுவ,ர்.
அப்போது ஆரவாரம் செய்வர்.
இது களப்போர் புரியும் பயிற்சியாளர்களின் ஆரவாரம்.
சிலர் அச்சம் தரும் வகையில் சிவந்து சுடும் கண் கொண்ட தன் கருந்தலையை பலி பீடிகையில் வைத்து, "வெற்றி வேந்தன் மேலும் பல வெற்றிகளைக் குவிக்க வேண்டும்என்று சொல்லிக்கொண்டு தன்னைத் தானே பலியிட்டுக்கொள்ளும் முழக்கத்தைச் செய்வர்.
அப்போது அங்கு உள்ள மயிர்த்தோல் போர்த்திய முரசம் முழக்கப்படும்.
இதற்கு "வான்பலிஎன்று பெயர்.

மண்டபங்களில் விழாக் கால்கோள்

வச்சிர நாட்டு வேந்தன் கொடுத்த கொற்றப் பந்தர்

பெரிய நிலப்பரப்பில் தன்னை எதிர்த்துப் போரிடுவோர் யாரும் இல்லாததால்திருமாவளவன் போர் வேட்கையோடு புறப்பட்டுநல்ல நாளில் தன் வாள்குடைமயிர்கண் முரசம் ஆகியவற்றை போருக்குப் புறப்பட ஏவினான்.
என் தோள் வலிமையைப் பகைவர்கள் எதிர்கொண்டு பெறுவார்களாக  என முழங்கினான்.
புண்ணிய திசை எனக் கூறப்படும் வடதிசை நோக்கிப் புறப்பட்டான்.
அந்த நாளில்,

அவனது ஆசை நிறைவேறவில்லை.
காரணம் இமயமலை அவனது பகையை விலக்கியது.
அதனால் சினம் கொண்ட திருமாவளவன் தேவர்கள் வாழ்விடமாகக் கொண்ட அந்த இமயமலையின் பிடரியில் தன் புலிச் சின்னத்தை (கொடுவரிபொறித்தான்.
பின் திரும்பி வரும்போது வச்சிர நாட்டு அரசன் திருமாவளவனைப் போற்றிப் புகார் நகருக்கு வந்து திருமாவளவனின் வெற்றியை விளக்கும் அடையாளமாக கொற்றப் பந்தல் அமைத்துக் கொடுத்தான்.
அந்தக் கொற்றப் பந்தலிலும் பொங்கலிடும் அரும்பலி நடைபெற்றது.

வாள் போரில் வல்ல மகத நாட்டு வேந்தன் தன் பகைமையை விட்டொழித்துபுகார் நகருக்கு வந்து பட்டி மண்டபம் கட்டித் தந்தான்.

அவ்வாறேஅவந்தி நாட்டு வேந்தன் புகார் நகரத்தின் நுழைவாயிலில் தோரண வாயில் ஒன்றை அமைத்துத் தந்தான்.

இந்த மண்டபங்கள் பொன்னும் மணியும் புனைந்து அமைக்கப்பட்டவை.
நுண்வினைக் கம்மியர் (கலைஞர்இயற்றியவை என்று காணா வகையில் தேவ தச்சன் மயன் செய்து தந்தது போன்ற மரபினவாகக் காணப்பட்டன.
மண்ணுலகக் கம்மியர் இயற்றியதோவிண்ணுலக மயன் விதித்ததோ - என்று உயர்ந்தோர் பலரும் பாராட்டும் பாங்கினைக் கொண்டவை,
இங்கெல்லாம் விழாவுக்குக் காப்புக் கட்டப்பட்டது (கால்கோள் நிகழ்ந்தது)

ஐவகை மன்றங்களில் அரும்பலி

வெள்ளிடை மன்றம்

புதிதாக ஊருக்குள் வருபவர் தன் பெயரை ஒவ்வொரு எழுத்தாகப் பதிவு செய்யும் கண்ணெழுத்துப் பதிவுகள் எண்ணிக்கையில் பலவாக இருக்கும் கடைமுக வாயில்
தாழிட்டு அரக்கு முத்திரை இடப்பட்ட கருந்தாழ் வாயில்
இங்கெல்லாம் காவல் காப்போரின் காப்பினை மீறித் திருடுபவர் உள்ளார் எனின்,
அவர்களின் தலையில் கடுமையான சுமையினை ஏற்றிச் சுற்றி அலையவிட்டு அல்லாமல் களவாடிய பொருளை அவர்கள் எடுத்துச் செல்ல விடாததிருட நினைப்போரை நடுங்க வைக்கும் வெள்ளிடை மன்றம்,

இலஞ்சி மன்றம்

கூன்குருடுஊமைசெவிடுஅழுகும் குட்டம் முதலான உடல் குறைபாடு உள்ளவர்கள் குளத்தில் மூழ்கிநல்ல உடம்பும்நல்ல நிறமும் பெற்று அந்தக் குளத்தைச் சுற்றி வந்து வணங்கிச் செல்லும் இலஞ்சி மன்றம்

நெடுங்கல் நின்ற மன்றம்

பிறரால் வஞ்சிக்கப்பட்டுப் பித்துப் பிடித்தவர்
தெரிந்தோதெரியாமலோ நச்சுப் பொருளைத் தின்றுவிட்டுத் துன்புறுபவர்
நஞ்சு கக்கும் நாகத்தின் பல் பட்டவர்
கனலும் கண்கொண்ட பேயால் தாக்கப்பட்டவர்
முதலானோர் சுற்றி வந்தால் துயரத்தைத் தீர்த்து வைக்கும் நிழலை அவர்கள் மேல் பாய்ச்சும் (ray treatment) நெடுங்கல் நிற்கும் மன்றம்.

பூதச் சதுக்கம்

தவ வேடம் பூண்டு அதில் தான் மறைந்துகொண்டு வாழும் நல்ல தன்மை இல்லாதவர்
அவம் செய்து மறைந்துகொண்டு பிறர் பொருளை ஏமாற்றிப் பறிக்கும் அலவல் பெண்டிர்
மாற்றரசனிடம் தன் அரசனைக் காட்டிக்கொடுக்கும் அறைபோகும் செயலைச் செய்யும் அமைச்சர்
அடுத்தவன் வீட்டுக்காரியை அடைய விரும்புபவன்
பொய் சாட்சி சொல்லுவோர்
கோள் மூட்டுபவர்
ஆகியோர் என் கைக்குள் படுவார்களாக என்று பாசக் கயிற்றை வீசிக்கொண்டு நாலாப் பக்கமும் காத தூரம் கேட்கும்படி முழக்கம் செய்யும் பூதம் நிற்கும் சதுக்கம்.

பாவை மன்றம்

அரசு கொடுங்காலாக மாறினாலும்
அறம் கூறும் அவையில் நீதி தவறி ஒருதலைப் பக்கமாகத் தீர்ப்பு சொன்னாலும்
நாவால் எதுவும் பேசாமல் துன்பக் கண்ணீர் விட்டுக்கொண்டு நிற்கும் பாவை நிற்கும் மன்றம்

உண்மை உணர்ந்து விழுமிய பெரியோர் போற்றும் இப்படிப்பட்ட ஐந்து மன்றங்கள்
ஆகிய இடங்களில் அரும்பலிப் பொங்கல்  படையல் தரப்பட்டது.

கால்கோள் விழா

முரசு அறைதல்

இந்திரனின் வச்சிரப்படை இருக்கும் கோயில் வச்சிரக் கோட்டம்அதில் இருக்கும் முரசம் கச்ச ஒப்பனை செய்யப்பட்ட அக் கோயில் யானையின் பிடரியில் ஏற்றி முரசு அறைந்து விழா பற்றி அறிவிப்பு செய்யப்பட்டது.
வெள்ளை யானை அரசன் இந்திரன்அவனுக்கு விழாஅவனுக்கு விழா தொடங்கும் நாள் இதுவிழா முடியும் நாள் இன்ன நாள் - என்று சொல்லி முழசு அறையப்பட்டது

கொடி ஏற்றம்

தரும் தகைமை கொண்ட கற்பக மரம் காவல் மரமாக நின்றிருக்கும் இந்திரன் கோயிலில் மங்கலக் கொடி வானளாவப் பறக்க விடப்பட்டது.

வீதியின் மங்கலத் தோற்றம்

மரகத மணிவயிரம்பவளம் முதலானவை பதிக்கப்பட்ட வேலைப்பாட்டுடன் கூடிய தூண்கள் இருக்கும் திண்ணைகளைக் கொண்ட மாளிகை வீடுகளின் வாயிலில் ஒப்பனைகள் செய்யப்பட்டிருந்தன.
ஆடி ஒலி எழுப்பும் கிம்புரிப் பகுவாய்
ஒளி வீசும் முத்து மாலைகள்
மங்கலச் சின்னம் பொறித்து மீன் வாய் போலத் தோன்றும் மகரவாசிகைத் தோரணம்
அங்கெல்லாம் நீர் நிறைந்த பொற்குடங்கள்
முளைப் பாலிகை
பாவை விளக்கு
பசும்பொன்னால் ஆன கொடி (பட்டுத்துணிக் கொடி)
மயிரால் செய்யப்பட்ட கவரி-விசிறி
மணக்கத் தூவும் அழகிய சுண்ணப் பொடிகள்
முதலானவை வீட்டுக்கு வெளியில் தெருவில் வைக்கப்பட்டன.

இந்திரனை நீராட்டுதல்

ஐம்பெருங்குழு
எண்பேராயம்
அரச குமரர்
கடல் வாணிகப் பரதகுமரர்
குதிரை வீரர்
யானை வீரர்
தேர் வீரர்
ஆகிய அனைவரும் ஒன்று திரண்டனர்.

அரசன் உள்ளப் பாங்கில் மேம்பட வேண்டும்
புகழ் மிக்க மன்னன் வெற்றிகள் பல பெறவேண்டும்
என்று சொல்லிக்கொண்டு இந்திரன் சிலையை நீராட்டினர்.

உலகிலுள்ள உயிர்கள் அனைத்தையும் காக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு
1008 
பேர் தலையில் காவிரியாற்றுப் புண்ணிய நீரைச் சுமந்து வந்து
மண்ணுலகம் வியக்கும்படியும்
வானுலகம் மருளும்படியும்
விண்ணவர் தலைவனாகிய இந்திரன் சிலையை நீராட்டினர்.

விழா நிகழ்வு

கோயில்களில் வேள்வி

பிறவா யாக்கைப் பெரியோனாகிய சிவன் கோயில்
ஆறு முகம் கொண்ட செவ்வேள் முருகன் கோயில்
வெள்ளை மேனி கொண்ட பலராமன் கோயில்
நீல நிற மேனி கொண்ட திருமால் கோயில்
மாரை அணிந்த வெண்கொற்றக் குடையை உடைய அரசன் கோயில்
ஆகிய இடங்களிலெல்லாம் பிரமனின் வழிவந்து அவனது நெறியை வழுவாமல் காக்கும் நான்மறையாளர் தீ வளர்த்து யாகம் செய்தனர்.
இது ஒரு பக்கம் நிகழ்ந்தது.

கடவுளர் திருவிழா

நான்கு வகையான தேவர்
18 
வகையான தேவ கணங்கள்
குடிகொண்டுள்ள கோயில்களிலெல்லாம் விழா நடைபெற்றது.

அறவுரை பகர்தல்

அறம் புரியும் சமணர் கோயில்
பிறர் அறம் செய்யும் இடங்கள்
கோயில் புறநிலையாக உள்ள மண்டபங்கள்
ஆகிய இடங்களிலெல்லாம் திறனாளரின் சொற்பொழிவுகள் நடைபெற்றன.

சிறைவீடு செய்தல்

வேந்தன் பகை மன்னர்களைச் சிறைபிடித்து வைத்திருந்தான்இந்திர விழா தொடங்கிய நாளில் அவர்களுக்கு விடுதலை வழங்கப்பட்டதுஇது பக்கம் நடைபெற்றது.

இசை முழக்கம்

கண்ணுக்கு விருந்தளிக்கும் கூத்தாடுவோர்
கருவி இசையுடன் பாட்டுப் பாடுவோர்
யாழில் இசை பாடும் புலவர்
நாட்டுப்பாடல் பாடும் பாணர்
இவர்களின் எண்ணுதற்கு அரிய இசைப் பாட்டுகள் ஒருபுறம் நிகழ்ந்தன.

விழா மகிழ்ச்சி

ஊரின் மூலை முடுக்குகள்தெருக்கள்அகன்ற வெளியிடங்கள் போன்ற இடங்களில் கண்ணுறக்கம் இல்லாமல் விழா முழவின் ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது.

இளவேனில் - தென்றல் - தெரு

காதல் கொழுநனைப் பிரிந்து அலர் தூற்றப்படாத மாதவி போல,
ஆசை மூட்டும் காதணி குழை அணிந்த மாதவிநுடன்
ஆசை மூட்டும் தழைகளுடன் கூடிய மாதவிக் கொடியுடன்
இல்லத்தில் வளர்க்கப்படும் முல்லைமல்லிகைமயிலை ஆகிய பூக்களும்,
தாழியில் நிற்கும் நீரில் பூத்திருக்கும் குவளைசெங்கழுநீர் ஆகிய பூக்களும்
மாலையாகக் கட்டப்பட்டுப் பொலிவுற்றிருந்தன.
காமத்தின் களிப்பை மூட்டின.
இப்படி மணக்கும் பூக்கள் நிறைந்த மணம் மிக்க பூஞ்சோலையில் அமர்ந்து மக்கள் களித்தனர்.

மேலும் நறுமணப் புகைசந்தனம் ஆகியனவும் சிறப்புற்று மணம் கமழ்ந்தன.
கோவலன் சிரித்து மகிழும் நகரத்துப் பரத்த நண்பர்களுடனுடனும் குழலூதும் பாணனுடனும் திரிவது போல வண்டுகள் பூக்களைத் தேடித் திரிந்தன.
தெருவில் பொதியமலைத் தென்றல் வீசியது.

வீதியில் உலவும் பரத்தையரை ஆடவர் புகழ்தல்

கருங்கூந்தல் என்னும் மேகத்தைச் சுமந்துகொண்டு
நிலாவில் இருக்கும் குட்டி முயல் நிழலை நீக்கிவிட்டு
மூக்கு என்னும் குமிழம்பூவை எழுதிக்கொண்டு
வானத்தில் இருந்தால் ராகு-கேது நிழல் பாம்புகள் விழுங்கும் என்று ஆஞ்சி
மண்ணுக்கு வந்து திங்கள் இங்குத் திரிகின்றதோ?

ஆண் மீனைக் பொடியாபக் கொண்டவன் காமன்அவன் ஒரு பெண்ணை வளர்த்தான்அந்தப் பெண் வானத்தில் தோன்றும் மின்னல்-கொடிஅது நீருக்குள்ளே தோன்றும் நிலவாக இருந்து அங்குள்ள நீர்த் திவலைகளைப் பருகிஈரத்தோடு வந்து நிற்கும் மின்னலாக மண்ணுலகுக்கு வருவது உண்டு போலும்.

என் அழகைப் பார்என்று சொலிக்கொண்டு திருமகள் இந்த ஊரில் புகுந்துகொண்டாள் போலஇங்குள்ள பெண்கள் தோன்றுகிறார்களே!

தீ நிறத்து இலவம் பூ - வாய்
முல்லைப் பூ - பல்
கருங்குவளைப் பூ - கண்
குமிழம் பூ - மூக்கு
பூத்து
உள்ளே வரிந்த ஒப்பனைக் கோலம் செய்துகொண்டு
தனக்கு உரிய துணையைத் தேடிக்கொண்டு
தேன் இருக்கும் தாமரை தெருவில் திருகின்றதோ?

ஆளும் மன்னவனின் செங்கோல் ஆணையை மறுப்பதற்கு அஞ்சிபல உயிர்களைப் பருகும் கூற்றுவன்தன் ஆண் உருவத்தை மாற்றிக்கொண்டுஉயிரைக் கொல்லும் தொழிலிலிருந்து மட்டும் மாறாமல் நாணம் கொண்ட பெண் உருவத்தில் புன்னகை பூக்கும் தன் முகத்தைக் காட்டிக்கொண்டுயாழ் போல் பண்ணிசைக்கும் மொழியைப் பேசிக்கொண்டு பெண்மைக் கோலத்தில் இங்குத் திரிதலும் உண்டு போலும்.

என்றெல்லாம் சொல்லும்படிக்கு உருவம் இல்லாத காமனின் படையாகிய மகளிர்போரிடும் பெண்ணாக எதிரில் நின்றுஎன்னை மேலும் செல்ல விடாமல் தடுத்து நிறுத்திதன் ஒப்பனைக் கோலத்தால் தனது முழு உடம்பையும் காட்டிக்கொண்டுகாம விருந்தோடு மகளிர் கணவனோடு கூடி மகிழ்ந்திருந்தனர்.

மனை புகுந்த ஆடவர் - மனைவியர் ஊடல்

தெருவில் கண்ட அழகியரை வியந்து பேசிவிட்டு வீட்டுக்குள்ளே ஆடவர் நுழைந்தனர்.வீட்டில் இருந்த மகளிர் வடமீன் போன்ற கற்புடையவர்ஆசையை மூட்டும் ஒளி மிக்க முகம் கொண்டவர்நீல மணி நிறத்தில் பூத்திருக்கும் குவளை மலரின் மொட்டு போன்ற கண்களை உடையவர்கள்அவர்களின் கடைக்கண்கள் சிவக்கும்படி ஊடல் கொண்டனர்விருந்தோடு வந்தாலும் தீராத அளவுக்கு ஊடல் கொண்டிருந்தனர்அவர்களின் ஊடலை எவ்வாறு போக்குவது தெரியாமல் ஆண்கள் நடுங்கினர்.

கண்ணகிக்கும் மாதவிக்கும் கண் துடித்தல்

கண்ணகிமாதவி இருவருக்கும் கழுநீர் பூ போன்ற கண்கள்.
அவர்கள் உள்ளத்தில் நிறையுடைமை.
அது வெளியில் புலப்படவில்லை.
இருவர் கண்களிலும் கண்ணீர்.
கண்ணகியின் கண்கள் கருமை நிறத்தில் இருந்தன. (கோவலனின் கூடலைப் பெறாத நிலை)
மாதவியின் கண்கள் சிவந்திருந்தன. (கோவலனோடு கூடித் திளைத்த சிவப்பு)
கண்ணகிக்கு இடக்கண் துடித்தது, (கோவலன்  வரப்போகும் நன்னிமித்தம்)
மாதவிக்கு வலக்கண் துடித்தது (கோவலனை நிலையாகப் பிரியப்போகும் தீ நிமித்தம்)
இது இந்திரனுக்கு விழா நடக்கப்போகும் முதல் நாள்.

மணிமேகலை

பாத்திரம் பெற்ற காதை

 

 பாத்திரம் பெற்ற காதை சுட்டும் அறக்கருத்துகள்

. முன்னுரை 

  மணிமேகலை கதைச் சுருக்கம்

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை, சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாகவே கருதப்பட்டு வருகின்றது. இக்காப்பியத்தில் கதாநாயகியாக வலம் வரும் மணிமேகலை கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகளாவாள்மணிமேகலை, இள வயதிலேயே துறவறம் பூண்டு அமுதசுரபி மூலம் மக்களின் பசியைப் போக்கும் மேன்மைச் செயலை மேற்கொள்ளும் பாத்திரமாகவே இக்காப்பியத்தில் வலம் வருகிறாள். இக்காப்பியம் உலக மக்களுக்குப் புத்த மதக் கோட்பாட்டினைத் தெரிவிக்கும் வண்ணம் அமைந்திருந்தாலும், இதில் பல அறக்கருத்துகள் நம் வாழ்வுக்குத் துணை புரியும் வகையில் இடம்பெற்றுள்ளன.

 

 பாத்திரம் பெற்ற காதை

மணிமேகலையில் காதைகளில்  வது காதையாகப்பாத்திரம் பெற்ற காதைஇடம்பெற்றுள்ளது இக்காதையில்தான், மணிமேகலை அள்ள அள்ள குறையாத அமுதசுரபியைப் பெற்ற நிகழ்வு இடம்பெறுகிறது. மணிமேகலை தன் தோழி சுதமதியுடன் நந்தவனத்தில் மலர் கொய்யும் போது, அங்கு அவளைத் துரத்தி வந்த உதயகுமாரன் எனும் இளவரசனிடமிருந்து தப்பும் பொருட்டு ஒரு பளிங்கு அறையில் புகுந்தாள். அங்கிருந்து அவள் மணிமேகலா தெய்வத்தால் மணிபல்லவத் தீவிற்குக் கொண்டுச் செல்லப்பட்டாள். அத்தீவில் இருந்த புத்த பீடிகையை வணங்கி பழம் பிறப்பை அறிகிறாள். பின்பு அங்குத் தோன்றிய தீவதிலகையிடம் தன்னைப் பற்றி கூறி, முன்னொரு காலத்தில் ஆபுத்திரனால் கைவிடப்பட்ட அமுதசுரபியைப் பெறுகிறாள். அதன் பின் தீவதிலகை அவளுக்கு அறங்கள் சிலவற்றை உரைக்கிறாள்.

 

.  பாத்திரம் பெற்ற காதை சுட்டும் இன்றைய வாழ்வோடு தொடர்புடைய அறக்கருத்துகள் :

 

.அன்னமிடுதலின் மேன்மை

தானங்களில் சிறந்த உயரிய தானமாகக் கருதப்படுவது அன்னதானம்3 என்று கூறினால் மறுப்பாரில்லை. உணவைப் பசியுற்றோருக்கு உவந்து வழங்குவதே அன்னதானத்தின் சிறப்பம்சமாகும். இது, சிறந்த மனிதப் பண்புகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.  இவ்வாறு அன்னமிடுதலின் மேன்மையைப் பற்றி மணிமேகலையில், பாத்திரம் பெற்ற காதையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே 5

 

என்ற வரிகளின் வழி, பசித்தோருக்கு உணவிடுதல், உயிரையே கொடையாக அளித்ததற்குச் சமமாகக் கருதப்படும் என்று கூறப்படுகின்றது.6 இறைவனுக்கடுத்து உலகில் உயிர்கள் பசித்திருக்கும் வேளையிலும் தக்க தருணத்தில் உணவளிப்போரே நமக்கு உயிர் கொடுத்தவர்களாகின்றனர் என்பது இவ்வரிகளின் வழி தெளிவாக அறிய முடிகின்றது.7

பசி என்பது ஒரு நோயாகவே கருதப்படுகின்றது. இப்பசியானது ஒருவரது சிறப்பை அழிக்கவல்லது. இதைத்தான் மணிமேகலையில்,

குடிப்பிறப் பழிக்கும் விழுப்பங் கொல்லும்

பிடித்த கல்வி பெரும்புனை விடூஉம்

நாணணி களையும் மாணெழில் சிதைக்கும்

பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும் 8

 

என்று சீத்தலை சாத்தனார் எடுத்தியம்பியுள்ளார். அதாவது பசி மனிதன் ஒருவனை ஆட்கொள்ளும் போது, அம்மனிதன் தன்னை மறக்கிறான்; தன் சுற்றுப்புறத்தை மறக்கிறான். அவன் கற்ற கல்வி அந்நேரத்தில் பயன்படாமல் மனிதனுக்குரிய நாணப் பண்புகளைக் கைவிட்டு பிச்சை எடுக்கவும் தயங்க மாட்டான்.9 அவ்வாறான கொடுமைகளை இன்றும் நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். நகர்ப்புறங்களில், கைகளில் குழந்தையுடனும், வயோதிகர்களும் பசிக்கொடுமயினால் பொது இடங்களில் பிச்சை எடுத்த வண்ணமாகத் தான் உள்ளனர். நிலைமை இவ்வாறு இருக்க வெறும் கோயில்களிலும் விழாக்களிலும் வழங்கப்படும் அன்னதானமானது இந்நிலை சீர் அடைய பெரிதும் உதவாது என்றே கூறலாம்.

அதே வேளையில், மக்களது பசிப்பிணியைப் போக்குபவர்களை வெறும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது என்று தீவதிலகை,

பசிப்பிணி யென்னும் பாவியது தீர்த்தோர்

இசைச்சொல் அளவைக் கொன்நா நிமிராது 

 

 

என்ற வரிகளின் வழி இக்காதையில் மணிமேகலையிடம் கூறுகிறாள்.

இவ்வாறு சோற்றுக்கொடையின் சிறப்பும் அக்கொடையாளியரின் உலகப் புகழும் இந்நூலால் பறைசாற்றப்படுகின்றன.

எனினும், பசிப்பிணியைப் போக்கும் ஆற்றல் இல்லாதவர்களுக்கு அன்னமிடுதலே அறச்செயலாகக் கருதப்படுகின்றது. ஏனையவர்களுக்கு உணவிடுதல் அந்த அறச்செயலையே விலை கூறுவது போல் கருதப்படும்

 

இதையே, சாத்தனார் பெருமான்,

ஆற்றுநர்க் களிப்போர் அறவிலை பகர்வோர்

ஆற்றா மாக்க ளரும்பசி களைவோர்

மேற்றே யுலகின் மெய்நெறி வாழ்க்கை

 

என்று எடுத்தியம்பியுள்ளார். அதையே திருவள்ளுவரும்,

வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்

குறியெதிர்ப்பை நீ துடைத்து 

 

 

அதாவது, இல்லாதவர்களுக்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.5 எனவே, பசியால் வாடும் மக்களுக்கு உதவி செய்து நல்லலறத்தை மேற்கொள்ளும் கடமை நாம் அனைவருக்கும் உண்டு. இவ்வாறு செய்யப்படும் அறமானது, இப்பூவுலகில் நிலைத்து நிற்கும் தன்மையுடையது.

 

  அன்பின் மேன்மை

 

. உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல்

அன்பு என்பது நெருக்கமான உள்ளப் பிணைப்பு தொடர்பான ஒர் உணர்வும் அனுபவமும் ஆகும்.6

ஈன்ற குழவி முகங்கண் டிரங்கித்

தீம்பால் சுரப்போள் தன்முலை போன்றே

நெஞ்சு வழிப்படூ  7

 

என்ற வரிகளின் வழி, ஈன்ற குழந்தையின் முகம் கண்டு, பெற்ற தாய்க்குப் பால் சுரப்பதைப் போல், பசியால் வாடி, அயர்ந்து, சோர்ந்திருக்கும் வரியோர்களைக் கண்டவுடன் அன்பால் கிரங்கி இப்பாத்திரம் அமுதத்தைச் சுரக்கும் என மணிமேகலை தீவதிலகையிடம் கூறுகிறாள். இங்கு உயிர்கள் பால் மணிமேகலை கொண்டிருக்கும் அன்பு மிகவும் தெளிவாக வெளிப்படுகிறது. உயிர்களிடத்தில் செலுத்தப்படும் அன்பானது தெய்வத்திற்குச் சமம் என்பதைஅன்பு என்பது தெய்வமானதுஎன்ற முன்னோர்களின் கூற்று புலப்படுத்துகிறது. மனிதர்கள் சக மனிதர்களிடம் அன்பு செலுத்துதல் புனிதமான செயலாகும்.

 

 தாய் மகள் மீது கொண்ட அன்பு

வழுவறு தெய்வம் வாய்மையின் உரைத்த

எழுநாள் வந்த தென்மகள் வாராள்

வழுவாய் உண்டென மயங்கி 8

 

என்ற வரிகளின் வழி மாதவியின் கலக்கத்தைச் சாத்தனார் பெருமான் படம் பிடித்து காட்டுகின்றார். தெய்வம் கெடு கொடுத்த ஏழு நாட்கள் முடிவடைந்த பின்னும் தன் மகள் இன்னும் இல்லம் திரும்பவில்லையே என்று  மணிமேகலையின் தாய் மாதவியும் செவிலித் தாய் சுதமதியும் கலங்கி வருந்தி காத்திருப்பதாக இப்பாடல் வரிகள் அமையப் பெற்றுள்ளன.9 இது மகள் மீது தாய் கொண்டிருக்கும் அன்பையும் பாசத்தையும் காட்டுகின்றது.

இன்றைய பரபரப்பு மிகுந்த வாழ்க்கைச் சூழலில், மக்கள் அன்பிற்குக் கொடுத்து வரும் முக்கியத்துவம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. ஆடம்பர வாழ்க்கை வாழ விரும்பி எந்நேரமும் பொருளீட்டுவதிலேயே குறிக்கோளாக இருக்கும் மக்கள் வாழ்வில், அன்பு இன்று வெறும் சொல்லாகவே இருந்து வருகிறது. குடும்ப அமைப்பில் இந்த அன்பு சரியான முறையில் வெளிகாட்டப்படாததால், குடும்பங்களில் அமைதி காணப்படுவதில்லை.

உலக அரங்கிலோ, அன்பின்மை காரணமாக, வன்முறைச் செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. உலக அரங்கில் போர்கள் பல நடந்த வண்ணமாகவே உள்ளன. சமயங்கள் அனைத்தும் உயிர்களிடத்தில் அன்புடைமையை வலியுறுத்தினாலும், உலகில் வன்முறைச் சம்பவங்கள் அதிமாகவே காணப்படுகின்றன. இதிலிருந்து, உயிர்களிடத்து அன்பு செலுத்தும் பண்பு மக்களிடையே குறைந்து வருகிறது என்று தெள்ள தெளிவாகப் புரிகிறது.

 

.3 மூத்தோரை மதித்தல்

 

.3. பெற்றோரை மதித்தல்

இக்காதையில் மணிமேகலை ஏழு நாட்கள் கழித்துதீவதிலகையிடம் இருந்து விடைபெற்று தன் தாயையும் செவிலித் தாயையும் சந்தித்து அவர்களது பழம்பிறப்பை விளக்கி கூறி பின் அவர்களது காலில் விழுந்து வணங்குமாறு பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன.

இரவி வன்மன் ஒருபெரு மகளே

துர்கத் தானைத் துச்சயன் தேவி

அமுத பதிவயிற் றரிதில் தோன்றித்

தவ்வைய ராகிய தாரையும் வீரையும்

அவ்வைய ராயினீர் நும்மடி தொழுதேன்  

பெரியோரின் ஆசி பெறுதல் இன்னும் சமூகத்தில் ஒர் வழக்கமாகவே இருந்து வருகிறது. விழாக்களிலும் பண்டிகைகளிலும் நம்மவர்கள் இன்னும் வீட்டின் உள்ள பெரியோர்களின் காலில் விழுந்து ஆசி பெறுவதைக் கண்கூடாகக் காண இயலும்.

 

.3 குருவைப் போற்றுதல்

மாபெரும் பாத்திரம் நீயிரும் தொழுமெனத்

தொழுதனர் ஏத்திய தூமொழி யாரொடும்

பழுதறு மாதவன் பாதம் படர்கேம்

எழுகென வெழுந்தனர் இளங்கொடி தானென் 

 

மணிமேகலையின் கையில் இருந்த அமுத சுரபியை மாதவியும் சுதமதியும் வணங்கிய பின், குற்றமற்ற பெருந்தவம் உடைய அறவண அடிகளது பாதங்களை வணங்கச் செல்வோம் வாரீர் என மணிமேகலை மாதவியையும் சுதமதியையும் அழைத்துக் கொண்டுச் செல்கிறாள் இங்கு இம்மூவரும் தங்களுக்குக் குருவாகச் செயல்பட்டு வந்த அறவண அடிகளைப் பெரிதும் மதித்து வந்தனர் என்பது நன்கு புலப்படுகிறது.

இந்த பிறப்பை அர்த்தமுள்ளதாகச் செய்பவர்கள் நம் ஆசிரியர்களேகுருவருளால் தான் திருவருள்அதாவது இறைவனின் அருள் கிடைத்து நிம்மதியாக வாழ முடியும். இக்காதையில் அறவண அடிகள் மணிமேகலை, மாதவி, சுதமதி ஆகியோருக்குக்  குருவாக வலம் வருகிறார். அவரே இவர்களுக்குப் பௌத்த சமயத்தைப் போதித்து அற நெறியில் நிற்க வகை செய்கிறார். இவர் மணிமேகலை, மாதவி, சுதமதி ஆகிய மூவரும் இறைவனிடம் நெருங்க உற்ற துணையாக இருந்துள்ளார்.

இதிலிருந்து, நாம் வாழ்வில் ஒன்றைக் கற்றுக் கொள்ளவும், இறைவனை நெருங்கவும் குருவருள் மிகவும் அவசியமாகும். இன்றும் நம் வாழ்வில் குருவைப் போற்றும் பண்பு இருந்து கொண்டு தான் வருகின்றது. ஆங்காங்கே, பல குருமார்களின் ஆசிரமங்கள் வழிபாட்டுக்கு உரியவையாக இருந்து வருகின்றன.

எனினும், இந்நிலை போலி குருக்கள் உருவாவதற்கும் காரணியாக அமைந்து விட்டது. இப்பொழுது எங்கும் நேற்று பெய்த மழையில் பூத்த காளான்களைப் போல் பலர் சரியான தகுதிப்பாடு இல்லை எனினும் தங்களைக் குரு என்று அடையாளப்படுத்தி கொள்கின்றனர். இவர்களில் பலர் பணம் தேடும் நோக்கத்திற்காகவே இவ்வாறு செயல்படுகின்றனர். உண்மையை அறியாத மக்களும் இது போன்றகுருக்களைநம்பி வழிபட்டு பணத்தையும் பொருளையும் இழந்த கதைகள் பல உண்டு. இன்றும் தமிழகத்தில் பல போலி குருக்கள் காவல் துறையினரினால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்ஆகவே, இது போன்ற விஷயங்களில் நம்மவர் இன்னும் விழிப்பாகச் செயல்படுவது மிகவும் அவசியம்.

 

. மனித வாழ்வில் இறை நம்பிக்கை

மணிமேகலை முழுக்க முழுக்க பௌத்த சமய காப்பியமாகும். இக்காப்பியத்தில் புத்தர் பெருமான் தெய்வமாகக் கருதி வணங்கப்பட்டுள்ளார். இக்காப்பியத்தில் எங்கு திரும்பினாலும் பௌத்த சமய மேன்மையே மேலோங்கி நிற்பதைக் காண முடிகின்றது.

போதி நீழற் பொருந்தித் தோன்றும்

நாதன் பாதம் நவைகெட ஏத்தித்

தீவ திலகை சேயிழைக் குரைக்கும்

 

போதி மரத்தின் கீழ் வீற்றிருக்கும் குற்றமற்ற புத்தர் பெருமானை வணங்கி, குற்றங்கள் நீங்குமாறு போற்றி தீவதிலகை மணிமேகலைக்கு அறங்கள் உரைக்கத் தொடங்குவதாக இவ்வரிகள் இடம்பெற்றுள்ளனஇங்கு புத்தர் தெய்வமாக வணங்கப்படுகின்றார். அறங்கள் கூறுமுன் இறைவனை வழிப்பட்டது, மணிமேகலையிடம் உள்ள இறை நம்பிக்கையைப் படம் பிடித்து காட்டுகின்றது.

இறைநம்பிக்கை, ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் வழி தவறாமல் சரியான பாதையில் நடக்க உற்ற துணை புரிகிறது. மனித வாழ்விற்கு இறைநம்பிக்கை ஒரு தண்டவாளத்தைப் போன்றது என்றால் மறுப்பாரில்லைஉண்மையான இறைநம்பிக்கை நற்செயல்களைச் செய்ய நம்மைத் தூண்டுகிறது.

நம் நாட்டில் இறைநம்பிக்கை மக்களிடையே மிகவும் ஆழமாகப் பதிய நம் நாட்டின்இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்என்ற முதல் தேசிய கோட்பாடே வழிவகுக்கின்றது. அதாவது, எந்தச் சமயமாக இருந்தாலும் அந்தந்த சமய வழிபாட்டிற்கு ஏற்ப தங்கள் இறைவன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்பது நாட்டின் கோட்பாடாக அமைந்திருப்பது இறைநம்பிக்கையின் அவசியத்தை நமக்கு உணர்த்துகின்றது.

இக்காதையில் வேறொரு சூழ்நிலையிலும் இறைவன் மீது கொண்ட பக்தி வெளிப்படுகிறது.

 

தீவ திலகை தன்னடி வணங்கி

மாபெரும் பாத்திரம் மலர்க்கையில் ஏந்திக்

கோமகன் பீடிகை தொழுது வலங்கொண்டு 

 

இங்கு, மணிமேகலை தீவதிலகையிடமிருந்து விடைபெற்று தன் ஊருக்குச் செல்லும் முன், தீவதிலகையை வணங்கி புத்த பெருமானது பீடிகையை வலம் வந்து தொழுத பின்னே மீண்டும் வான் வழியே தன் ஊருக்குப் புறப்படுகிறாள்5 இங்கு மீண்டும் புத்தரை வழிபடுவது போல் இந்த காட்சி அமைகின்றது. இது, மணிமேகலை புத்தர் மீது கொண்டிருக்கும் இறைநம்பிக்கையை நமக்குப் படம் பிடித்து காட்டுகின்றது.

 

.5 வினைக் கோட்பாடு

இக்காதையில் மனித வாழ்வில் வினைக் கோட்பாட்டின் செயல்பாடு குறித்து கூறப்பட்டுள்ளதுஇந்தியச் சமயங்கள்  யாவும் வினைக்கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டவை. பௌத்த சமயமும் இதற்கு விதிவிலக்கன்று.

நாவலொடு பெயரிய மாபெருந் தீவத்து

வித்தி நல்லறம் விளைந்த வதன்பயன்

துய்ப்போர் தம்மனைத் துணிச்சித ருடுத்து 6

 

இந்த வரிகளில்நாவலந்தீவு எனும் பெரிய தீவில் நல்லறத்தை மேற்கொண்டதால், அதன் விளைவாக செல்வத்தை அனுபவிப்பவர்கள் வீடுகளில் மக்கள் பிச்சை எடுக்கின்றனர்7 என்று சீத்தலை சாத்தனார் கூறியுள்ளார். அதாவது, நல்ல வினைகளைச் செய்தவர்களுக்கு வசதியான வாழ்க்கை கிட்டியுள்ளதை நாம் இங்கு காண இயலுகிறது.

வினைகள் இருவகைப்படும். அவை நல்வினைதீவினை என்பனவாகும். உயிர்கள் நல்வினைதீவினை என்னும் இருவினைப் பயனால் தத்தமக்குரிய பிறவி எடுத்துதம் வினைகள் பயனைத் தரும் காலத்தில் தாம் செய்த வினைக்கு ஏற்ப இன்பமும் துன்பமும் அடைகின்றன. அதாவது, பழம் பிறப்பில் நல்லறம் செய்தவர்கள் அதற்கு அடுத்த பிறவிகளிலும் அதன் பயனைத் தொடர்ந்து அனுபவிப்பர் எனவும், நாம் செய்த தீவினைகளும் நம்மை அடுத்தடுத்த பிறப்புகளில் துரத்தும் எனவும் இவ்வரிகளின் வழி அறிய முடிகிறது. நம் முன்னோர்கள் கூறிச் சென்றவினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்என்ற பழமொழி இக்காதையில் கூறப்பட்டுள்ள வினைக் கோட்பாட்டிற்கு நன்கு பொருந்தும்ஒருவன் எதை விதைக்கிறானோ அதுவே விளையும். அதே போல நாம் நல்லது செய்தால் நமக்கு நல்லதும் தீயது செய்தால் தீயதும் விளையும்.

ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை நிச்சயம் உண்டு. அது நாம் செய்த வினையைப்பொறுத்தே அமையும். சுவற்றில் எறிந்த பந்து அதே போல் திரும்பி வந்தே தீரும். அதே போல்ஓவ்வொரு மனிதனும் இப்பூதவுடல் எய்தி உடன் கொண்டு போவது அவனவன் செய்த வினைப் பயன்கள் மட்டுமே.

 

.6மறுபிறப்புத் தத்துவம்

தாம் செய்த வினைகளுக்கு ஏற்ப உயிர்களுக்கு மறுபிறவி உண்டு8 என்ற கோட்பாட்டில் பௌத்த சமயத்திற்கு ஆழமான நம்பிக்கையுண்டு. அதாவது, நாம் நிச்சயமாக, முற்பிறப்பின் பலாபலன்களை அடுத்தடுத்த பிறப்புகளில் அடைவோம்  என்ற செய்தி இக்காதையில் இடம்பெற்றுள்ளது.

விட்ட பிறப்பில்யான் விரும்பிய காதலன்

திட்டி விடமுணச் செல்லுயிர் போவுழி

உயிரோடு வேவே னுணர்வொழி காலத்து

வெயில்விளங் கமையத்து விளங்கித் தோன்றிய

சாது சக்கரன் றனையா னூட்டிய

காலம் போல்வதோர் கனாமயக் குற்றேன்

ஆங்கதன் பயனே ஆருயிர் மருந்தாய்

ஈங்கிப் பாத்திரம் என்கைப் புகுந்தது 9

 

மணிமேகலை முற்பிறப்பில் தன் கணவன் ராகுலன் அரவம் தீண்டி மாண்டு போக, அவனுடன் சேர்ந்து தானும் தீயில் குதித்து மாண்டாள். அத்தீயில் தம் உணர்வு அடங்கும் வேளையில் அவள் முன்னொரு சமயத்தில் சாதுசக்கரன் என்ற முனிவருக்கு உணவளித்தது அவளுக்குக் கனவு போல் தோன்றியது. அந்த நினைவுடனேயே மணிமேகலை மாண்டாள்.3

அதன் விளைவாகவேஇப்பிறப்பில் அமுதசுரபி எனும் பாத்திரம் அவள் கைக்கு வந்ததாக மணிமேகலை தீவதிலகையிடம் கூறுவது போல் இவ்வரிகள் இடம்பெற்றுள்ளன.3 அதே வேளையில், முற்பிறப்பில் செய்த தீவினையால் இப்பிறப்பில் துன்பப்படுவோரையும் இக்காதையில் சாத்தனார் பெருமான் குறிப்பிட்டுள்ளார்.

துய்ப்போர் தம்மனைத் துணிச்சித ருடுத்து

வயிறுகாய் பெரும்பசி யலைத்தற் கிரங்கி

வெயெலென முனியாது புயலென மடியாது

புறங்கடை நின்று புன்கண் கூர்ந்துமுன்

அறங்கடை நில்லா தயர்வோர் பலரால்

 

இந்த வரிகளின் வழி, முற்பிறப்பில் செய்த தீவினையின் பயனாக, மக்கள் கிழிந்த கந்தல் ஆடைகளை அணிந்து, கடும் பசியால் அதிக துன்பப்பட்டு, வெயில் என்று வெறுப்படையாமலும், மழை என்று ஓரிடத்தில் தங்காமலும் செல்வந்தர்கள் வீட்டு வாயிலில் பிச்சை எடுக்கும் இழிநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பது அறிய வருகிறது.33

 

.7 வீடுபேறு அடைதலே நிலையான இன்பம்

உலக வாழ்வு நிலையற்றது.3 தெய்வ நிலைக்கு முன்னேறிய மனிதன்எந்த ஒரு மூலப் பொருளிடமிருந்து வந்தானோஅந்தப் பரம்பொருளிடம் மீண்டும் சென்று ஒடுங்குவதே முக்திஅதுவே மோட்சம்அதுவே வீடுபேறுஅதுவே ஆன்ம விடுதலைகர்ம கொள்கைப்படிஒருவன் செயலுக்கு ஏற்ப ஒரு  பலன் உண்டு. கர்மாவின் பலனை அது நல்லதோகெட்டதோ அழித்தால் தான் உயிர்வீடு பேற்றினை அடைய முடியும். முற்பிறப்பினை உணர்ந்தவர்களுக்குத்  தருமபதம் உரியது என்பது புத்த சமயக் கொள்கையாகும். இதனை இக்காப்பியம்,

தரும தலைவன் தலைமையின் உரைத்த

பெருமை சால் நல்லறம் பிறழா நேன்பினர்

கண்டு கைதொழுவோர் கண்ட தற்பின்னர்

பண்டைப் பிறவியர் ஆகுவர் பைந்தொடி

உரிய துலகத் தொரு தலையாக5

 

என எடுத்துரைக்கின்றது. இவ்வகையில் புத்தசமயத்தின் தலையாய கொள்கையினை விளக்கம் செய்யவும் இம்முற்பிறப்புச் செய்தியினை ஆசிரியர் உத்தியாகக் கொள்கின்றார்.36

வாய்வ தாக மானிட யாக்கையில்

தீவினை அறுக்கும் செய்தவம்7

 

என்ற வரிகளின் வழி, ’மனித உடலால் செய்யப்படும் பாவங்களைப் போக்குவதற்காகக் கிடைக்கப்பெறும் தவம் கிட்டஎன்று மணிமேகலை தன் தாயிடமும் செவிலித் தாயிடமும் கூறுகிறாள். இவ்வரிகளில், மனிதவுடலால் செய்யப்படும் பாவங்கள் முக்திக்குத் தடையாக அமையும் என்ற கருத்து புதைந்துள்ளது. அதாவது ஆன்மா இறைவனடி சேர உடலால் செய்யப்பட்ட பாவங்களை நீக்குவது அவசியமாகும். இவ்வாறு குற்றம் குறைகள் நீங்கிய மாசற்ற உடலின் ஆன்மா உலக வாழ்க்கையிலிருந்து விடுபட்டு எல்லையில்லா இன்பமான வீடு பேற்றை அடைகின்றது.

இதுவே பகவத் கீதையில்,

எதை நீ கொண்டுவந்தாய்அதை நீ இழப்பதற்கு?

எதை நீ படைத்திருந்தாய்வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக்கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ அதை இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோநாளை அது மற்றவருடையது ஆகிறது
மற்றொரு நாள் அது வேறொருவர் ஆகிறது.

 

என்று கூறப்படுகின்றது. இவ்வுலகில் நமக்குச் சொந்தமானதென்று எதுவுமில்லை என்பதை இக்கீதைச் சாரங்கள் நமக்கு உணர்த்துகின்றன. இதிலிருந்து, ஓர் ஆன்மாவின் நிலையான இன்பம் அந்த ஆன்மா முக்தி அடைவதில் தான் உண்டு என்ற உண்மை புரிகிறது.

 

 3. முடிவுரை :

சுருங்கக்கூறின், உலகிலேயே மிகவும் கொடுமையான ஒன்று பசிப்பிணி என்று கூறினால் அதை மறுப்பாரில்லை. மானிட வாழ்வின் மிகப் பெரிய நோய் பசி. இன்று வரை தீர்க்க இயலாத நோயும் இதுதான். ஔவையார் பசிப்பிணியின் கொடுமையை இப்படிச் சொல்கிறார்.

மானம் குலம் கல்வி வன்மை அறிவுடைமை

தானம் தவம் உயர்ச்சி தாளான்மை - தேனின்

கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்

பசிவந்திட பறந்து போகும்8 

                                                 

மணிமேகலைக் காப்பியத்தில் இடம்பெற்றுள்ள பாத்திரம் பெற்ற காதையில், பசிப்பிணியின் கொடுமைகள் தெளிவாக விளக்கப்பட்டதோடு, அப்பிணியைப் போக்கும் செயல் மேன்மையானது என்றும் வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது. அதே வேளையில், இக்காதையில்  பல அறக்கருத்துகள் இன்றைய வாழ்க்கை முறையோடு நெருங்கிய தொடர்பு உள்ளதைக் காண இயலுகிறது. மணிமேகலை வெறும் காலத்தால் அழியாத காப்பியமாகத் திகழாமல், இக்காப்பியத்தில் போதிக்கப்பட்டுள்ள அறக்கருத்துகள் இன்றும் நாம் அனைவராலும் பின்பற்றக் கூடியதாகவே உள்ளன

 

சீவக சிந்தாமணி அறிமுகம்

 சீவக சிந்தாமணி

      சோழர்களுடைய ஆட்சிக் காலத்தில் இயற்றப்பெற்ற காப்பியம் சீவக சிந்தாமணி. இது கி.பி. ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டில் தோன்றியது என்பர். சீவக சிந்தாமணிக்கு முன்னர் எழுந்த பெரிய நூல்கள் எல்லாம் வெண்பாவாலும் அகவலாலும் இயற்றப்பட்டன. ஆனால் முதன்முறையாக ~விருத்தம்என்ற ஒரு புதுச்செய்யுள் வகையில் எழுதப்பட்டது சீவக சிந்தாமணி. ~இது வரையிலும் பெரிய நூல்கள் எல்லாம் வெண்பாவாலும் அகவலாலும் இயற்றப்பட்டு வந்த தமிழிலக்கிய வரலாற்றில்கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில்ஒரு புதுமையைப் புகுத்தியவர் திருத்தக்கதேவர் என்னும் சைன முனிவர். அவர் சீவகன் என்ற அரசனுடைய வரலாற்றை ஒரு காப்பியமாகப் பாடியபோதுவிருத்தம் என்ற புதுச் செய்யுள் வகையைப் பயன்படுத்தினார்.      மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பாட்டுகள் கொண்ட ஒரு பெருங்காப்பியத்தை அந்தப் புதிய செய்யுள் வகையிலேயே முழுதும் பாடி முடித்தார்எனப் பேரா. மு. வரதராசனார் திருத்தக்க தேவரின் சிறப்பினை எடுத்துரைக்கின்றார். விருத்தம் என்பது நான்கு அடிகள் உடையது. முதல் அடியில் எத்தனை சீர்கள் வருமோ அத்தனை சீர்களே பிற மூன்று அடிகளிலும் வரும். முதல் அடியில் அமைந்த சீர்களின் அமைப்பே அடுத்த அடிகளிலும் அதே முறையில் வரும். அதனால் முதலடியின் ஓசையே பிற மூன்று அடிகளிலும் திரும்பத் திரும்ப ஒலிக்கும். ஓர் அடிக்கு இத்தனை சீர்கள் வரவேண்டும்இன்ன அளவான சீர்கள் வரவேண்டும் என்ற வரையறை இல்லாமையால்விருத்தம் பலவகையாக விரிவு அடைந்தது. ஒரு விருத்தத்தின் அடிகள் நீண்டு வரலாம்மற்றொரு விருத்தத்தின் அடிகள் குறுகி வரலாம். சிறு சிறு சீர்கள் கொண்ட ஒரு விருத்தம் பரபரப்பாகவோதுடிதுடிப்பாகவோ ஒலிக்கலாம். நீண்ட சீர்கள் கொண்ட மற்றொரு விருத்தம் ஆழமுடையதாகவோஅமைதியுடையதாகவோஉணர்ச்சி நீண்டதாகவோஒலிக்கலாம். ஆகவேவிருத்தம் என்ற பெயர் கொண்ட இதுஒரு செய்யுள் வகையாக இருந்தாலும் நூற்றுக்கணக்கான ஓசைவேறுபாடுகளைப் படைத்துக்காட்ட இடம் தந்தது. தமிழ்க்கவிதையில் ஏற்பட்ட இந்தப் புரட்சியால் உணர்ச்சிக்கு ஏற்றவாறு கவிதையின்நடையை மாற்றியமைக்கும் வடிவச் சிறப்பு மேலும் வளர்ந்து பெருகத் தொடங்கியது. பிற்காலத்தில் கம்பர் இதில் பெரும் வெற்றிபெற்றார். சேக்கிழார்கச்சியப்பர் ஆகியோரும் இந்த யாப்பைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர்.      வடமொழியிலுள்ள ஷத்திர சூடாமணிகத்திய சிந்தாமணிஸ்ரீபுராணம் ஆகிய நூல்களில் உள்ள கதையைத் தழுவிச் சீவக சிந்தாமணி எழுதப்பட்டது. சீவகசிந்தாமணி கூறும் சீவக மன்னனது வரலாறுவடநாட்டுச் சார்பு உடையது. எனினும் தமிழகத்துச் சமூகத்தைப்பின்னணியாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது. இந்த நூல் பிற்கால இலக்கிய வளர்ச்சிக்கு வழிகாட்டியாக அமைந்தது என்பர். கம்பர்இக்காப்பியத்திலிருந்து, ~ஓர் அகப்பையைமுகந்து கொண்டார்என்று கூறும் மரபு உண்டு. நாடு நகரம் முதலியவற்றை வருணிக்கும் முறையிலும்ஐந்திணையாகப் பகுக்கப்படும்நிலங்களின் இயற்கை அழகுகளை விளக்கும் முறையிலும்இசை முதலிய கலைகளை விளக்கும் முறையிலும்சீவக சிந்தாமணிகாப்பிய அமைப்பின் முன்னோடியாகச் சிறப்புற்றுத் திகழ்கிறது. காதல் சுவை மிகுந்திருந்தாலும்எண்வகைச் சுவையும்இக்காப்பியத்தில் பெருமளவில் இடம் பெற்றுள்ளன. இந்நூலுக்கு நச்சினார்க்கினியர் சிறந்த உரை ஒன்று எழுதியுள்ளார்.

 பெயர்க் காரணம்

     ~சிந்தாமணிஎன்பது தேவர் உலகத்து மணிகளுள் ஒன்று. வேண்டியோர்க்கு வேண்டியதை வழங்கும் தன்மையுடையது. சிந்தாமணிக் காப்பியமும் கற்போர்க்கு வேண்டியதை வழங்கும் சிறப்புடையது. சீவகனின் தாயார் முதன் முதலில் தன் மகன் சீவகனுக்கு இட்டபெயர் சிந்தாமணி. ~சீவஎன்பது பின்னர் ~அசரீரி|யாக ஒலித்ததால் சீவகசிந்தாமணி என்று பெயர் பெற்றது என்பர்.

 நூலின் அமைப்பு

      இந்நூல் 13 இலம்பகங்களையும் (இலம்பகம் - காண்டம் என்பது போன்ற பகுப்பு), 3145 செய்யுட்களையும் உடையது. நாமகள்இலம்பகம் (379), கோவிந்தையார் இலம்பகம் (84), காந்தருவ தத்தையார் இலம்பகம் (358), குணமாலையார் இலம்பகம் (315), பதுமையார் இலம்பகம் (246), கேமசரியார் இலம்பகம் (145) , கனகமாலையார் இலம்பகம் (339) , விமலையார் இலம்பகம் (106), சுரமஞ்சரியார் இலம்பகம் (107), மண்மகள் இலம்பகம் (225), பூமகள் இலம்பகம் (51), இலக்கணையார் இலம்பகம் (221) , முக்திஇலம்பகம் (547) என்பன 13 இலம்பகங்கள். சீவகசிந்தாமணியை இயற்றியவர் திருத்தக்க தேவர். இவர் சோழர் குலத்தில் பிறந்தவர் என்று நச்சினார்க்கினியர் உரை குறிப்பிடுகின்றது. இவர்தமிழிலும் வடமொழியிலும் புலமை உடையவர். இளமையிலேயே சமண சமயத்தைத் தழுவித் துறவுபூண்டவர்.

 திருத்தக்க தேவர் சான்றோர்களுடன் தொடர்புகொள்ளக் கருதிமதுரைக்குச் சென்றுஅங்கு சங்கப் புலவர்களோடு கூடி அளவளாவிஇருந்தபோது அங்கிருந்த தமிழ்ப் புலவர்களில் சிலர்ஆருகத சமயத்தைச் சார்ந்தவர்கள் துறவு முதலியவற்றையே பாடுவார்களே யன்றிக்காமச் சுவைபடக் காப்பியம் பாட இயலாதவர் என்று கூறினர் என்றும் இதைக் கேட்ட திருத்தக்க தேவர்காமச் சுவையுடன்சிந்தாமணியை இயற்றினார் என்றும் ஒரு கதை நிலவுகிறது. காப்பியம் செய்யக் கருதிய திருத்தக்க தேவர்தம் கருத்தினைத் தம் ஆசிரியருக்குக் கூறஅதற்கு அவர்திருத்தக்க தேவரின் புலமையைஅறியஅப்பொழுது அங்கே ஓடிய ஒரு நரியைச் சுட்டிக் காட்டி, ~நீங்கள் காவியம் பாடுமுன்னர்இந்த நரியைப் பொருளாக வைத்துஒரு நூல்இயற்றிக் காட்டுகஎன்று கட்டளை இட்டார் என்றும்உடனே தேவரும் ஒரு சிறு நூல் பாடி அதற்கு ~நரிவிருத்தம்என்றுபெயரிட்டுத் தம் ஆசிரியருக்குக் காட்டினார் என்றும் குறிப்பிடுவர். அது நரியின் செயலைக் கொண்டு நீதியை வற்புறுத்தும் நூல். நூலின்சிறப்பினை அறிந்த ஆசிரியர், ~இனி நீயிர் நினைத்தபடியே பெருங்காப்பியம் செய்கஎன்று பணிக்க அப்பணியைத் தலைமேற்கொண்டு அக்காப்பியத்திற்குக் கடவுள் வாழ்த்துப் பாடி வழங்குமாறு வேண்டினார் என்றும்ஆசிரியரும் ~செம்பொன் வரைமேற்பசும்பொன்என்று தொடங்கும் பாட்டைப் பாடிக் கொடுத்தார் என்றும்பின்னர்த் திருத்தக்க தேவர், ~மூவர் முதலா உலகம்என்னும்கடவுள் வாழ்த்தைப் பாடிக் காப்பியத்தைத் தொடங்கினார் என்றும் குறிப்பிடுவர்

04. குணமாலையார் இலம்பகம்

878 சுண்ணம் தோற்றனம் தீம் புனல் ஆடலம்
எண் இல் கோடி பொன் ஈதும் வென்றாற்கு என
வண்ண வார் குழல் ஏழையர் தம்முளே
கண் அற்றார் கமழ் சுண்ணத்தின் என்பவே

879 மல்லிகை மாலை மணம் கமழ் வார் குழல்
கொல் இயல் வேல் நெடும் கண்ணியர் கூடி
சொல் இசை மேம்படு சுண்ண உறழ்ச்சியுள்
வெல்வது சூது என வேண்டி விடுத்தார்

880 இட்டிடையார் இரு மங்கையர் ஏந்து பொன்
தட்டு-இடை அம் துகில் மூடி அதன் பினர்
நெட்டு-இடை நீந்துபு சென்றனர் தாமரை
மொட்டு அன மெல் முலை மொய் குழலாரே

881 சீர் தங்கு செம்பொன் கொடி மல்லிகை மாலை சேர்ந்து
வார் தங்கு பைம்பொன் கழல் மைந்தர் கை காட்ட மைந்தர்
ஏர் தங்கு சுண்ணம் இவற்றின் நலம் வேண்டின் வெம் போர்
கார் தங்கு வண் கை கழல் சீவகன் காண்-மின் என்றார்

882வாள் மின்னு வண் கை வடி நூல் கடல் கேள்வி மைந்தர்
தாள் மின்னு வீங்கு கழலான்-தனை சூழ மற்ற
பூண் மின்னு மார்பன் பொலிந்து ஆங்கு இருந்தான் விசும்பில்
கோள் மின்னும் மீன் சூழ் குளிர் மா மதி தோற்றம் ஒத்தே

883காளை சீவகன் கட்டியங்காரனை
தோளை ஈர்ந்திடவே துணிவுற்ற நல்
வாளை வவ்விய கண்ணியர் வார் கழல்
தாளை ஏத்துபு தம் குறை செப்பினார்

884சுண்ணம் நல்லன சூழ்ந்து அறிந்து எங்களுக்கு
அண்ணல் கூறு அடியேம் குறை என்றலும்
கண்ணில் கண்டு இவை நல்ல கரும் குழல்
வண்ண மாலையினீர் என கூறினான்

885மற்று  மாநகர் மாந்தர்கள் யாவரும்
உற்று நாறியும் கண்டும் உணர்ந்து இவை
பொற்ற சுண்ணம் என புகழ்ந்தார் நம்பி
கற்றதும் அவர் தங்களொடே-கொலோ

886ஐயனே அறியும் என வந்தனம்
பொய் அது அன்றி புலமை நுணுக்கி நீ
நொய்தில் தேர்ந்து உரை நூல் கடல் என்று தம்
கையினால் தொழுதார் கமழ் கோதையார்

887நல்ல சுண்ணம் இவை இவற்றில் சிறிது
அல்ல சுண்ணம் அதற்கு என்னை என்றிரேல்
புல்லு கோடைய பொற்பு உடை பூம் சுண்ணம்
அல்ல சீதம் செய் காலத்தின் ஆயவே

888வாரம் பட்டுழி தீயவும் நல்ல ஆம்
தீர காய்ந்துழி நல்லவும் தீய ஆம்
ஓரும் வையத்து இயற்கை அன்றோ எனா
வீர வேல் நெடுங்கண்ணி விளம்பினாள்

889உள்ளம் கொள்ள உணர்த்திய பின் அலால்
வள்ளல் நீங்க பெறாய் வளைத்தேன் என
கள் செய் கோதையினாய் கரி போக்கினால்
தெள்ளி நெஞ்சில் தெளிக என செப்பினான்

890கண்ணின் மாந்தரும் கண் இமையார்களும்
எண்ணின் நின் சொல் இகந்து அறிவார் இலை
நண்ணு தீம் சொல் நவின்ற புள் ஆதியா
அண்ணல் நீக்கின் அஃது ஒட்டுவல் யான் என்றாள்

891காவில் வாழ்பவர் நால்வர் உளர் கரி
போவர் பொன் அனையாய் என கைதொழுது
ஏவல் எம் பெருமான் சொன்னவாறு என்றாள்
கோவை நித்திலம் மென் முலை கொம்பு அனாள்

892மங்கை நல்லவர் கண்ணும் மனமும் போன்று
எங்கும் ஓடி இடறும் சுரும்புகாள்
வண்டுகாள் மகிழ் தேன் இனங்காள் மது
உண்டு தேக்கிடும் ஒண் மிஞிற்று ஈட்டங்காள்

893சோலை மஞ்ஞை சுரமை தன் சுண்ணமும்
மாலை என்னும் மட மயில் சுண்ணமும்
சால நல்லன தம்முளும் மிக்கன
கோலம் ஆக கொண்டு உண்-மின் என சொன்னான்

894வண்ண வார் சிலை வள்ளல் கொண்டு ஆயிடை
விண்ணில் தூவி இட்டான் வந்து வீழ்ந்தன
சுண்ண மங்கை சுரமைய மாலைய
வண்ணம் வண்டொடு தேன் கவர்ந்து உண்டவே

895தத்தும் நீர் பவளத்து உறை நித்திலம்
வைத்த போல் முறுவல் துவர் வாயினீர்
ஒத்ததோ என நோக்கி நும் நங்கைமார்க்கு
உய்த்து உரை-மின் இவ்வண்ணம் என சொன்னான்

 

சீவகசிந்தாமணியின் ஆசிpயார் யார்? 2. சீவகசிந்தாமணி எந்த சமயத்தைச் சாரந்தது? 3. சீவகசிந்தாமணி எத்தனை இலம்பகங்களைக் கொண்டது? 4. சீவகசிந்தாமணியில் எத்தனை செய்யுட்கள் இடம் பெற்றுள்ளன? 5. சீவகசிந்தாமணியின் தலைமைக்கதாபத்திரம் யார்? 6. சீவகனின் தாய் பெயார் என்ன? 7. சீவகனின் தந்தை பெயார் என்ன? 8. சீவகசிந்தாமணியில் குறிப்பிடப்படும் நாடு எது? 9. சீவகசிந்தாமணியில் சீவகன் மணந்த எட்டு மகளிரின் பெயர்களை எழுதுக. 10. சீவகனின் நண்பர்கள் பெயர் களை எழுதுக. 11. சீவகனின் வளார்ப்பு தாய் தந்தையின் பெயார்களை எழுதுக. 12. சீவகனை மணப்பதற்காகத் தவம் புரிந்தவள் யார்? 13. சீவகன் பிறந்த இடம் எது? 14. அரசி விசயை எதன் மூலம் அரண்மனை விட்டு வெளியேறினாள்? 15. குணமாலையின் பெற்றோர் பெயர் என்ன?

குறுவினாக்கள்

1. சீவகசிந்தாமணி நூற்குறிப்பு எழுதுக. 2.

சீவகசிந்தாமணியில் குணமாலையார் இலம்பகத்தின் கதைச்சுருக்கத்தினை எழுதுக.

3. சீவகனின் நண்பா;கள் குறித்து எழுதுக.

4. சீவகன் மீது கட்டியங்காரன் மேற்கொண்ட செயல்களை எழுதுக.

5. சீவகன் பிறப்பின் ரகசியத்தை திருத்தக்கத்தேவாஎவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்?

 நெடுவினா

 1. குணமாலையார் இலம்பகத்தில் திருத்தக்கத்தேவாகூறியுள்ள கதை நிகழ்வுகளை எழுதுக.

2. குணமாலையார் இலம்பகத்தில் உவமைச்சிறப்புகளை எழுதுக.

3. ஏமாங்கத நாட்டின் இயற்கை வளங்கள் குறித்து திருத்தக்கத்தேவாகூறியுள்ளவற்றைஎழுதுக.

 

UNIT 2  அலகு – 2

பெரிய புராணம்

செயற்கு அரிய செய்வர் பெரியர் என்னும் குறள் வரிக்கேற்ப அறுபத்து மூன்று நாயன்மார்கள் புரிந்த இறைப் பக்தியையும்தொண்டு நெறியையும் வரலாற்று முறையில் கூறும் நூலே பெரிய புராணம் (பெரியர் புராணம்ஆகும்இந்நூல் பல்வேறு நாடுஊர்சாதிதொழில் கொண்ட நாயன்மார்களுடைய வாழ்க்கையை விவரிக்கிறதுஅக்காலச் சமுதாய வரலாற்றையும் எளியஇனிய நடையில் எடுத்து சொல்கிறதுதில்லை அம்பலத்தே ஆடும் சிவபெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்கச் சேக்கிழார்பக்தி வளமும்இறையருட் திறமும் குறைவிலாது சிறக்குமாறு இலக்கியப் பெருங்களஞ்சியமாகபெரிய புராணத்தை இயற்றி அருளினார்.

காப்பிய அமைப்பு

பெரிய புராணம் என்னும் பெருங்காப்பியம் தமிழகச் சூழலையும், 63 அடியார் பெருமக்களையும் மையமாகக் கொண்டு திகழ்கின்றதுஇந்நூல் பெரும் பிரிவாக இரண்டு காண்டங்களையும்உட்பிரிவாக 13 சருக்கங்களையும் உடையது. 4286 விருத்தப் பாக்களையுடைய ஒரு பெரு நூலாகும்சுந்தரரின் சிறப்புஅடியார்களின் சிறப்புசிவபெருமானின் அருட்திறம்குரு (ஆசிரியன்), இலிங்கம் (இறைவன் திருமேனி), சங்கமம் (அடியார்ஆகிய முறைகளில் சிவனை வழிபட்ட நிலைகள்தொண்டின் திறம்சாதிமதஇன வேறுபாடில்லாமல் அடியார் நோக்கில் கண்டு வழிபட்டு முத்தி பெற்ற தன்மைகள்சிவன் அடியார்களை ஆட்கொண்ட விதம் முதலான பல செய்திகளைக் கொண்டதாக இந்நூல் விளங்குகின்றதுஅடியார்களின் வரலாறும்அவர்கள் கடைப்பிடித்த தொண்டு நெறியும்இறைவன் அவர்களை ஆட்கொண்ட விதமும் இந்நூல் முழுதும் எடுத்துக் கூறப்படுவதால் சேக்கிழார்திருத்தொண்டர் மாக்கதை என்று பெயரிட்டார்செயற்கரிய செயல் புரிந்த அடியார்களின் (பெரியார்களின்சிறப்பினை உரைப்பதால் இதனைச் சான்றோர்கள் பெரியர் புராணம் என்று கூற காலப் போக்கில் பெரிய புராணம் என்று வழங்கப்பட்டது.

காப்பிய நோக்கம்

கி.பி.11, 12-ஆம் நூற்றாண்டில் சோழநாட்டை ஆட்சி செய்த மன்னன் இரண்டாம் குலோத்துங்க சோழனாவான் (அநபாய சோழன்). அம்மன்னனின் அவையில் முதல் அமைச்சராகப் பணி புரிந்தவர் சேக்கிழார்சோழ மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கசிவனடியார்களின் உயர்ந்த வாழ்க்கையைக் கதைப் பின்னலாகக் கொண்டு பெரிய புராணத்தைப் பாடினார் சேக்கிழார்சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகவும்நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியை வழிநூலாகவும் கொண்டு பெரிய புராணத்தைச் சார்பு நூலாகப் படைத்தார் சேக்கிழார்சிவனை முதன்மைப்படுத்தி வழிபடும் சமயமாகிய சைவத்தையும்அடியார்களது வரலாறுதொண்டு நிறைந்த வாழ்வுமுத்தி பெற்ற நிலை ஆகியவற்றையும் விரிவாகவும் தெளிவாகவும் புலப்படுத்துவதே பெரிய புராணத்தின் நோக்கம் ஆகும்.

காப்பியச் சிறப்பு

அறுபத்து மூன்று நாயன்மார்களின் புகழ் மிக்க வரலாற்றினை உலகறியபக்திச் சுவையோடு விரிவாக எழுதிய பெருமைக்கு உரியவர் சேக்கிழார் ஆவார்அவர் சோழ நாட்டு அமைச்சராக இருந்தமையால் நாட்டின் பல பகுதிகளுக்கும்நாயன்மார்கள் வாழ்ந்த ஊர்களுக்கும் நேரில் சென்றுஅவ்விடத்தில் செவிவழி மரபாக வழங்கும் வரலாற்றுச் செய்திகளையும் தொகுத்து இந்நூலை அமைத்தார் என்பர்பிற மொழிக் கதைகளைத் தழுவாமல்தமிழ் மக்களையும்தமிழகச் சூழலையும் மையமாகக் கொண்டு இயற்றப்பட்ட சிலப்பதிகாரம்மணிமேகலை ஆகிய காப்பியங்களைப் போலவே பெரியபுராணம் என்னும் நூல் சிறப்புற்றுத் திகழ்கின்றதுஆண் பெண் வேறுபாடின்றிப் பல இனங்களையும்தொழில் பிரிவுகளையும் சார்ந்த சிவனடியார்களைப் பற்றிய நூலாக அமைந்துள்ளதால் இந்நூலைத் தேசிய இலக்கியம் என்று சான்றோர்கள் பாராட்டுவர்.

நூலாசிரியர்

சென்னைக்கு அருகிலுள்ள குன்றத்தூர் என்னும் ஊரில் வேளாளர் மரபில் பிறந்தவர் அருண்மொழித் தேவர்இப்பெயரே அவருக்குப் பெற்றோர் இட்டு வழங்கியதாகும்சேக்கிழார் என்பது இவரது குடிப்பெயராகும்இவர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியதால்இரண்டாம் குலோத்துங்க சோழன் அவையில் முதலமைச்சராகப் பணிபுரிந்தார்அம்மன்னனின் வேண்டுகோளை ஏற்றுஅடியார்களின் பெருமையை வரலாறாக எழுதினார்இந்நூலின் பெருமையை உணர்ந்த மன்னன்அவரைப் பட்டத்து யானையின் மீதேற்றி நகர்வலம் செய்து உத்தம சோழப் பல்லவராயன் என்னும் பட்டம் தந்து சிறப்பித்தான்இவருடைய காலம் கி.பி. 12 -ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும்சிவத் தொண்டர்களின் வரலாற்றைச் சிறப்பித்த காரணத்தால் இவருக்குத் தொண்டர் சீர் பரவுவார் என்னும் சிறப்புப் பெயரும் உண்டுகல்வெட்டுகள் இவரை மாதேவடிகள் என்றும்இராமதேவர் என்றும் சிறப்பிக்கின்றனமகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளைபக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ என்று இவரைப் பாராட்டுகின்றார்.

கண்ணப்ப நாயனார் புராணம்

பெரிய புராணம் என்னும் காப்பியத்துள் 63 நாயன்மார்கள் வரலாற்றில் கண்ணப்பநாயனார் வரலாறு இலைமலிந்த சருக்கத்தில் 10-ஆவது புராணமாக (காதையாகஇடம் பெற்றுள்ளதுஇந்நாயனார் வரலாற்றைச் சேக்கிழார், 186 விருத்தப் பாக்களினால் பாடியுள்ளார்திண்ணனார் சிவலிங்கத் திருவுருவத்தின் கண்ணிலிருந்து இரத்தம் கசிந்ததைக் கண்டுதன் கண்ணைத் தோண்டி அப்ப இறைவனால் கண்ணப்பன் என்று அழைக்கப்பட்ட செய்தியினை இக்கதை விளக்குகின்றதுஇக்கதை நிகழ்ந்த இடம் இன்று காளத்தி என வழங்கும் திருக்காளத்தி மலையாகும் (பொத்தப்பி நாடு).

சுந்தரமூர்த்தி சுவாமிகளால் கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர் என்றும்பட்டினத்தாரால் நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன் என்றும்திருநாவுக்கரசரால் திண்ணன்கண்ணப்பன்வேடன் என்றும் பலவாறாகச் சான்றோர்கள் பலரால் கண்ணப்பர் பாராட்டப்படுகிறார்.

கதைச் சுருக்கம்

பொத்தப்பி என்னும் நாட்டில் உடுப்பூர் என்னும் ஊரில் நாகன் என்பவன் வேடர்குலத் தலைவனாக இருந்து மக்களைக் காத்து வருபவன்தத்தைஅவன் மனைவியாவாள்நீண்ட காலமாகப் பிள்ளைப் பேறில்லாமல் இருக்கவேமுருகனை வேண்டி விழா எடுத்தனர்அவர்களின் வேண்டுதலை ஏற்றுக் கொண்ட முருகன் அருள் புரிந்தான்அவர்களுக்கு அழகான வலிமை மிக்க ஆண்குழந்தை பிறந்ததுநாகன் அக்குழந்தையைத் தன் கைகளால் தூக்கும்போது திண் என்று இருந்தமையால் திண்ணன் என்று பெயரிட்டான்திண்ணன் வளர்ந்து குல மரபிற்கேற்ப வில்அம்புஈட்டிவாள் முதலான போர்ப் பயிற்சிகளைக் கற்றுச் சிறப்படைந்தான்நாகன் முதுமை காரணமாகத் தன் பதவியினைத் தன் மகனாகிய திண்ணனிடம் தந்து நாடாளும்படி பட்டம் சூட்டினான்இதனைக் கண்டுதேவராட்டியும் வந்துநலம் சிறக்க என வாழ்த்திச் சென்றாள்ஒரு நாள் திண்ணன் நாணன்காடன் ஆகிய நண்பர்களோடு வேட்டையாடச் சென்றார்.

வேட்டைக்காக விரித்த வலைகளை அறுத்துக்கொண்டு ஒரு பன்றி மட்டும் ஓடியதுவிடாது துரத்திச் சென்றுபுதருள் மறைந்த அந்தப்பன்றியைத் திண்ணன் தம் குறுவாளால் வெட்டி வீழ்த்தினார்இதனைக் கண்ட நண்பர்கள் வியந்துதிண்ணனின் வலிமையைப் பாராட்டினார்கள்அருகே ஓடும் பொன்முகலி ஆற்றையும் வானாளாவ நிற்கும் காளத்தி மலையையும் கண்டு வியந்தார் திண்ணன்இதனைக் கண்ணுற்ற நாணன்இம் மலையின் மீது குடுமித் தேவர் இருக்கிறார்அவரைக் கும்பிடலாம் வா என்றான்மலை ஏறும்போது திண்ணனுக்கு மட்டும் புதுவிதமான இன்பமும் உணர்வும் ஏற்பட்டன.

குடுமித் தேவருக்குசிவ கோசரியார் என்பவர் ஆகம விதிமுறைப்படி பூசை செய்வதனை நாணன் மூலம் அறிந்தார்மலையேறிய திண்ணன்குடுமித் தேவரைக் கண்டவுடன் அவரை வணங்கியும்கட்டித் தழுவியும் ஆடினார்பாடினார்நண்பன் காடன் ஆற்றங்கரையில் தீயில் இட்டுப் பக்குவப்படுத்திய இறைச்சியைத் தன்னுடைய ஒரு கையில் எடுத்துக் கொண்டார்மறு கையில் வில் இருந்ததால் வாய் நிறைய ஆற்று நீரையும்அருகில் இருந்த மரத்தின் மலர்களைத் தலையில் செருகியும் கொண்டு வந்தார்குடுமித் தேவருக்குத் திருமஞ்சனமாகத் தன் வாய் நீரையும்அமுதமாகப் பன்றி இறைச்சியினையும் தலையில் சூடிய மலரை வழிபாட்டு மலராகவும் இட்டு மகிழ்ந்தார் திண்ணனார்பின் இரவு முழுவதும் வில்லேந்திக் காவல் புரிந்தார்காலையில் குடுமித் தேவருக்குத் திருவமுது தேடி வரப் புறப்பட்டார்.

வழக்கம் போலபூசை புரிய வந்த சிவ கோசரியார் இறைவன் மீதிருந்த இறைச்சி முதலானவற்றைக் கண்டு வருந்தினார்புலம்பினார்பின் அவற்றை நீக்கித் தூய்மை செய்து பூசனை புரிந்து சென்றார்அடுத்துதிண்ணனாரும் வந்து இறைச்சி முதலானவற்றை வைத்து வழிபட்டார்மறுநாளும் இறைச்சி முதலானவை இருப்பது கண்டு வருந்திச் சிவ கோசரியார் இறைவனிடம் முறையிட்டு வீட்டிற்குச் சென்று உறங்கினார்அவரது கனவில் சிவபிரான் தோன்றித் திண்ணனாரின் அன்பு வழிபாட்டை நாளை மரத்தின் மறைவில் நின்று பார்ப்பாயாக என்று கூறி மறைந்தருளினார்ஆறாம் நாள் திருக்காளத்தி நாதர் திண்ணனாரின் அன்பின் பெருமையைக் காட்டவலக் கண்ணில் இருந்து உதிரம் பெருகும்படிச் செய்தார்அதனைக் கண்ட திண்ணனார்செய்வதறியாமல் திகைத்தார்பின் தம் கைகளால் துடைத்தாலும் பச்சிலை இட்டாலும் நிற்கவில்லையே என வருந்தி நின்றபோது ஊனுக்கு ஊன் என்ற பழமொழி அவரது நினைவுக்கு வந்தது.

உடனே தம் வலக்கண்ணை அம்பினால் அகழ்ந்து எடுத்து அப்பினார்உதிரம் நின்றுவிட்டதுஇதைக் கண்டு மகிழ்ந்து ஆடினார்சிவபிரான் இடக்கண்ணிலும் உதிரம் பெருகும்படிச் செய்தார்தம் இடக்கண்ணையும் பெயர்த்து எடுத்து அப்பினால் உதிரம் நின்றுவிடும் என்று உணர்ந்தார்தம் மறு கண்ணையும் பெயர்த்துவிட்டால் இறைவனின் இடக்கண்ணைச் சரியாகக் கண்டறிய முடியாது என்பதால்அடையாளத்துக்காகத் தம் காலின் பெருவிரலை இறைவனின் உதிரம் பெருக்கும் கண் மீது ஊன்றிக் கொண்டார்அம்பினால் தம் இடக்கண்ணைப் பெயர்க்கத் தொடங்கினார்உடனே காளத்தி நாதர் நில்லு கண்ணப்ப என்று மூன்று முறை கூறித் திண்ணனாரைத் தடுத்தருளினார்இதனைக் கண்ட சிவ கோசரியார் தம்மை மறந்து சிவன் அருளில் மூழ்கித் திளைத்தார்அன்று முதல் இறைவனுக்கே தம் கண்ணைப் பிடுங்கி அப்பியதால் திண்ணனார் கண்ணப்பர் என்று அழைக்கப்பட்டார்.

குறிப்பு :

பொத்தப்பி நாடு : ஆந்திர மாநிலத்தின் இப்போதைய கடப்பை மாவட்டத்தில் புல்லம் பேட்டை வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும்.

உடுப்பூர் : இவ்வூர் குண்டக்கல் -அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள இராசம்பேட்டைக்கு அருகில் உள்ளதுஉடுக்கூர் என இன்று வழங்கப்படுகிறது.

• கதைமாந்தர்

கண்ணப்ப நாயனார் வரலாற்றில் இடம்பெறும் கதை மாந்தர்கள்நாகன்தத்தைதிண்ணன்நாணன்காடன்வேடுவர்கள்தேவராட்டிகுடுமித் தேவர்சிவ கோசரியார்.

இடம் பெறும் நிகழ்ச்சிகள்

நாயனாரின் வாழ்க்கையையும் அதில் ஏற்பட்ட மாற்றத்தையும் விரிவாகக் காணலாம்.

திண்ணனார்

பொத்தப்பி எனும் மலைநாட்டில் உள்ள உடுப்பூர் என்னும் ஊரினை வேடர் குலத் தலைவன் நாகன் என்பான் ஆட்சி செய்து வந்தான்அவன் மனைவி தத்தையாவாள்அவர்களுக்கு நீண்ட காலமாகப் பிள்ளைப் பேறு இல்லாமல் இருக்கவேமுருகனுக்கு விழா எடுத்தனர்அம்முருகனின் அருளால் பிறந்தவனே திண்ணன்திண் என்று இருந்த காரணத்தால் தன் மகனுக்குத் தந்தையாகிய நாகன் திண்ணன் என்று பெயரிட்டான்வேடுவர் குல மரபிற்கு ஏற்ப வில்வேல்ஈட்டிமுதலான ஆயுதங்களைக் கற்றுத் தேர்ந்து கையில் ஏந்தியவன்திண்ணன்அவன் கரிய நிறமுடையவன்உரத்த குரலுடையவன்தலை மயிரைத் தூக்கிக் கட்டியவன்தலையிலே மயிற்பீலி அணிந்தவன்சங்கு மணிகளும்பன்றிக் கொம்புகளும் கோத்த மாலையும்புலித் தோலினால் செய்யப்பட்ட தட்டை வடிவமான வெற்றி மாலையினையும் மார்பிலே அணிந்தவன்இடையிலே புலித் தோல் ஆடையணிந்தவன்குறுவாளையும் வைத்திருப்பவன்கால்களில் வீரக் கழல் பூண்டுதோல் செருப்பு அணிந்தவன்வேட்டையாடுவதற்கு நாயினைத் துணையாகக் கொண்டவன்.

குடுமித் தேவரைக் காணல்

தந்தை நாகனுக்கு வயது முதிர்ந்ததுஅதனால் நாட்டுக்கு இடையூறு விளைவிக்கும் விலங்குகளை வேட்டையாட வேண்டிதன் மகனை வேடர் தலைவனாக்கினான் நாகன்இதனைக் கண்ட தேவராட்டியும் நலம் சிறக்க எனக் கூறித் திண்ணனாரைப் பாராட்டி வாழ்த்திச் சென்றாள்ஒருநாள் நாணன்காடன் என்னும் இரு நண்பர்களோடு வேட்டைக்குச் சென்றார் திண்ணனார்காட்டில் திரிந்த வலிய பன்றியைத் தம் குறுவாளால் வீழ்த்தினார்அருகில் ஓடும் பொன்முகலி ஆற்றினையும் வானளாவி நிற்கும் காளத்தி மலையையும் கண்டு வியந்தார்நண்பர்கள், "இம்மலையில்குடுமித் தேவர் இருக்கிறார்அவரைக் கும்பிடலாம் வா” என்றார்கள்திண்ணனாருக்கு மலையேறும் போதே புதுவிதமான இன்பமும்உணர்வும் உண்டாயின.

வழிபடல்

மலையேறிய திண்ணனார் பேருவகை கொண்டு ஓடிச் சென்றுகாளத்தி நாதரைக் கட்டித் தழுவினார்ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார்மேலும் கன்றை ஈன்ற பசுவைப் போலப் பிரிய மனமின்றிச் சுழன்று சுழன்று இறைவனிடமே நின்றார்பின்பு பொன் முகலியாற்றங் கரையினருகில் காடன்தீயில் இட்டு பக்குவப்படுத்திய பன்றி இறைச்சியினைத் தம் வாயினால்சுவையும் பதமும் பார்த்துப் பின் ஒருகையில் அதனை எடுத்துக்கொண்டுமற்றொரு கையில் வில்லம்பு ஏந்தினார்இறைவனது திருமஞ்சனத்திற்காகப் பொன்முகலியாற்று நீரை வாயில் நிறைத்துக்கொண்டுபூசனைக்காகப் பூங்கொத்துகளைத் தம் தலையில் செருகிக் கொண்டுமலையுச்சிக்கு வந்தார்குடுமித் தேவரின் மேல் இருந்த சருகுகளைச் செருப்பணிந்த தம் பாதங்களால் விருப்பமுடன் தள்ளினார்தம் வாயிலிருந்த நீரால் திருமஞ்சனம் செய்தார்தம் தலையில் இருந்த மலர்களைத் திருமுடி மீது சார்த்திபன்றி இறைச்சியினைத் திருவமுதாகப் படைத்து மகிழ்ந்தார்குடுமித் தேவருக்கு இரவில் துணை யாருமில்லை என்று எண்ணிஇரவு முழுவதும் அவரே கையில் வில்லேந்திக் காவல் புரிந்தார்காலை புலர்ந்ததுதிண்ணனார்காளத்தி நாதருக்குத் திருவமுது தேடிவரப் புறப்பட்டார்.

சிவபிரானின் அருள் வாக்குப் பெறல்

திண்ணனார் சென்றவுடன் வழக்கம் போல் சிவ கோசரியார் பூசை செய்ய வந்தார்மேலுள்ள இறைச்சி முதலானவற்றை நீக்கி ஆகம முறைப்படி பூசை செய்துவிட்டுச் சென்றார்திண்ணனார் முன் போலவே வேட்டையாடி விலங்குகளைத் தீயில் சுட்டு அமுதாக்கிப் படைத்திட வந்தார்தொடர்ந்துசிவ கோசரியார் வழிபட்டுச் சென்றவுடன்திண்ணனார் வந்து அவற்றை நீக்கி வழிபடுவதும் தொடர்ந்ததுதினமும் சிவன் திருமேனி மீது இறைச்சி இருப்பது கண்டு சிவ கோசரியார் வருந்தினார்மனம் கசிந்து இறைவனிடம் முறையிட்டு வீட்டிற்குச் சென்று உறங்கினார்அவரது கனவில் சிவபிரான்நீ கூறும் மறைமொழிகள் அவன் அன்பு மொழிகளுக்கு ஈடாகாதுநீ வேள்வியில் தரும் அவியுணவைக் காட்டிலும் அவன் தரும் ஊனமுது இனியது என்றும் இந்நிகழ்ச்சியினை மரத்தின் மறைவில் நின்று பார்ப்பாயாக என்றும் கூறினார்.

அவனுடைய வடிவுஎல்லாம் நம்பக்கல் அன்புஎன்றும் அவனுடைய அறிவுஎல்லாம் நமை அறியும் அறிவு என்றும் அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனிய வாம் என்றும் அவனுடைய நிலை இவ்வாறு அறிநீஎன்று அருள்செய்தார்.

(பெரி.பு.:157)

என்றும் திண்ணனாரின் பக்திச் சிறப்பைச் சிவபிரான் கூறினார்.

கண்ணப்பன் ஆதல்

ஆறாம் நாள்திருக்காளத்திப் பெருமான் திண்ணனார் தம் மீது கொண்டுள்ள அன்பின் பெருமையைக் காட்டதமது வலக்கண்ணில் இருந்து உதிரம் பெருகச் செய்தார்இதனைக் கண்ட திண்ணனார் தாம் செய்வதறியாமல் திகைத்தார்பூசைக்காகக் கொண்டு வந்த பொருள்கள் சிதறினதம் கையால் இரத்தம் கசிவதைத் துடைத்தாலும் நிற்கவில்லைஉடனே பச்சிலைகளைத் தேடிக் கொண்டுவந்து தடுத்துப் பார்த்தார்நிற்கவில்லைஇந்த நிலையில் திண்ணனார் அடைந்த துயரத்தையும்தவிப்புகளையும் சேக்கிழார் உணர்ச்சி மிக்க கவிதையாய் வடித்திருக்கிறார்.

பாவியேன் கண்ட வண்ணம்
பரமனார்க்கு அடுத்தது என்னோ
ஆவியின் இனிய எங்கள்
அத்தனார்க்கு அடுத்தது என்னோ
மேவினார் பிரிய மாட்டா
விமலனார்க்கு அடுத்தது என்னோ
ஆவது ஒன்று அறிகி லேன்யான்
என்செய்வேன் என்று பின்னும்...

(.புராணம் :174)

(பரமனார்அத்தனார்விமலனார் = சிவபிரானின் சிறப்புப் பெயர்கள்மேவினார் பிரிய மாட்டாசேர்ந்தவர்கள் பிரிய இயலாத பேரன்பு கொண்ட)

இனி என்ன செய்வது என்று சிந்தித்து நின்றார்அப்பொழுது ஊனுக்கு ஊன் என்ற பழமொழி அவரது நினைவுக்கு வந்ததுஉடனே அம்பினால் தமது வலக்கண்ணை அகழ்ந்தெடுத்துஐயன் திருக்கண்ணில் அப்பினார்இரத்தம் நின்றுவிட்டதுஇதைக் கண்டு மகிழ்ந்து ஆடினார்அடுத்துசிவபிரான் தமது இடக்கண்ணிலும் உதிரம் பெருகச் செய்தார்அதைக் கண்ட திண்ணனார், 'இதற்கு யான் அஞ்சேன்முன்பே மருந்து கண்டுபிடித்துள்ளேன்அதனை இப்பொழுதும் பயன்படுத்துவேன்எனது இன்னொரு கண்ணையும் அகழ்ந்தெடுத்து அப்பி ஐயன் நோயைத் தீர்ப்பேன்என்று எண்ணினார்அடையாளத்தின் பொருட்டுகாளத்தி நாதர் திருக்கண்ணில் தமது இடக்காலை ஊன்றிக் கொண்டுமனம் நிறைந்த விருப்புடன் தமது இடது கண்ணைத் தோண்டுவதற்கென அம்பை ஊன்றினார்குடுமித் தேவர் நில்லு கண்ணப்பஎன்று மூன்று முறை கூறித் திண்ணனாரைத் தடுத்தருளினார்மேலும்என்றும் என் வலப்பக்கம் இருக்கக் கடவாய் என்று பேரருள் புரிந்தார்இதனைக் கண்ட சிவ கோசரியார் தம்மை மறந்து சிவனருளில் மூழ்கித் திளைத்தார்இறைவனுக்கே தம் கண்ணைப் பிடுங்கி அப்பியதால் அன்று முதல் திண்ணனார் கண்ணப்பர் என்று அழைக்கப்பட்டார்.

 

திருச்சிற்றம்பலம்

 1. சைவத் திருமுறைகளில் பெரிய புராணத்தின் இடம் யாது?

விடை : சைவத் திருமுறைகளில் பெரிய புராணம் பன்னிரண்டாம் திருமுறையாகப் போற்றப்படுகின்றது.

2. பெரிய புராணம் பிறமொழி தழுவிய காப்பியமா?

விடை : பெரியபுராணம்தமிழ் மக்களையும்தமிழகச் சூழலையும் மையமாகக் கொண்டு பாடப்பட்ட தமிழ்க் காப்பியமாகும்.

3. பெரிய புராணம் உணர்த்தும் செய்தி யாது?

விடை : எளிய நிலையில் மனம் தளராமல் இறைச் சிந்தனையோடுதொண்டு புரிந்தால் இறையருள் பெறலாம்என்னும் செய்தியை 63 நாயன்மார்களின் வரலாற்றைத் கொண்டு உணர்த்தும் நூலே பெரியபுராணம் ஆகும்.

4. சேக்கிழாரை ஆதரித்த மன்னன் யார்?

விடை : சேக்கிழாரை ஆதரித்த மன்னன் இரண்டாம் குலோத்துங்க சோழன் (அநபாய சோழன்ஆவான்.

5. பெரிய புராணம் இயற்றக் காரணமான நூல்கள் எவை?

விடை : சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையும்நம்பியாண்டார் நம்பி இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதியும் பெரிய புராணம் பாடுவதற்குக் காரணமாக அமைந்த நூல்கள் ஆகும்.

6. பெரிய புராணக் காப்பியத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?

விடை : பெரியபுராணக் காப்பியத்தின் பாட்டுடைத் தலைவன் சுந்தரர் ஆவார்.

7. திண்ணனாரின் பெற்றோர் யாவர்?

விடை : திண்ணனாரின் தந்தைநாகன்தாய்தத்தை ஆவர்.

8. குடுமித் தேவர் எங்கு வீற்றிருக்கின்றார்?

விடை : பொன்முகலி ஆற்றங்கரையின் அருகில் இருக்கும் திருக்காளத்தி மலையில் குடுமித் தேவர் வீற்றிருக்கின்றார்.

9. சிவ கோசரியாருக்கும்திண்ணனாருக்கும் உள்ள வழிபாட்டு நிலை வேறுபாடு யாது?

விடை : சிவ கோசரியாரின் வழிபாடு ஆகம முறைப்படி செய்வதாகிய அறிவு வழிப்பட்டது-சடங்கு வழியான வைதிக நெறிஆனால் திண்ணனாரின் வழிபாடு அன்பு செலுத்துதல் ஆகிய உணர்வு வழிப்பட்டது-பக்தி நெறிஇறைவனுக்கு விருப்பமானது.

10. திண்ணனாருக்கு எத்தனை நாட்களில் இறைவன் காட்சி தந்தார்?

விடை : ஆறே நாட்களில் இறைவன் திண்ணனாருக்குக் காட்சி தந்தார்.

11. திண்ணனாரின் தோற்றச் சிறப்புப் பற்றிக் குறிப்பிடுக.

விடை : வேட்டுவர் குலத் தோன்றல் திண் என்னும் உடலைப் பெற்றதால் திண்ணன் எனப் பெயர் பெற்றார்தலைமயிரைத் தூக்கிக் கட்டியவர்தலையிலே மலர்களைச் சூடியவர்கழுத்திலே சங்கு மணிகளும்பன்றிக் கொம்புகளும் கோத்த மாலையையும்புலித் தோலினால் செய்யப்பட்ட தட்டை வடிவமான வெற்றி மாலையினையும் அணிந்தவர்இடையிலே ஆடையாகப் புலித் தோலையும்குறுவாளையும் வைத்திருப்பவர்கால்களில் வீரக் கழல் பூண்டு செருப்பு அணிந்தவர்தலையிலே மயிற்பீலி சூடியவர்வில்வேல்அம்புவாள்ஈட்டி முதலானவற்றைக் கையிலே ஏந்தியவர்வேட்டையாடுவதற்கு நாயினைத் துணையாகக் கொண்டவர்.

12. திண்ணனாருக்குகண்ணப்பர் எனப் பெயர் வரக் காரணம் என்ன?

விடை : சிவ கோசரியாருக்குஇறைவன் திண்ணனாரின் அன்பின் பெருமையைக் காட்டதமது வலக்கண்ணில் இருந்து உதிரம் பெருகச் செய்தார்இதனைக் கண்ட திண்ணனார் தாம் செய்வது அறியாமல் திகைத்தார்பின்னர் துடைத்தாலும்பச்சிலையிட்டாலும் நிற்காதது கண்டு வருந்தி நின்றார்அப்போது ஊனுக்கு ஊன் என்ற பழமொழி நினைவுக்கு வரதன் கண்ணையே அம்பினால் அகழ்ந்தெடுத்து அப்பினார்.

உதிரம் நின்றதுஅது கண்டு மகிழ்ந்தாடினார்உடனேசிவபிரான் இடக்கண்ணிலும் உதிரம் பெருகச் செய்தார்உடனே அஞ்சாமல் இடது கண்ணையும் அப்பகாளத்தி நாதரின் திருக்கண்ணில் தமது இடக்கால் விரலை ஊன்றிஅம்பினால் இடக்கண்ணைத் தோண்ட முனைந்தார்குடுமித் தேவர் நில்லு கண்ணப்ப என்று மூன்று முறை கூறித் தடுத்தருளினார்இதனைக் கண்ட சிவ கோசரியார் தம்மை மறந்து சிவனருளில் மூழ்கித் திளைத்தார்அன்று முதல் இறைவனுக்கே தன் கண்ணைப் பிடுங்கி அப்பியதால் திண்ணனார்கண்ணப்பர் என்று அழைக்கப்பட்டார்.

 

 

கம்ப இராமாயணம் - 14. திருவடி தொழுத படலம்

 

 அனுமன் இலங்கையைக் கடந்துசென்று தன் நண்பர்களைப் பழைய இடத்தில் சந்தித்தபோது நிகழ்ந்தவை குறித்து அறிந்துகொள்வோம்.

இலங்கையை எரியூட்டியபின்பு சீதையை மீண்டும் சந்தித்து அவள் பத்திரமாக இருக்கின்றாள் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அங்கிருந்து புறப்பட்ட அனுமன்இலங்கையின் அருகிலிருந்த அரிஷ்டம் என்ற குன்றிலேறி வான்வழியே விரைந்துசென்று மகேந்திர மலையில் தனக்காகக் காத்திருந்த தோழர்களைச் சந்தித்தான்.

அனுமன் கடல்தாவி இலங்கை சென்றதை மிக விரிவாய்ப் பாடிய கவிச்சக்கரவர்த்திஅவன் மீண்டும் தன் பழைய இடத்திற்குத் திரும்பிவந்த நிகழ்வை வளர்த்தாமல் இரண்டே பாடல்களில் சொல்லி முடித்துவிடுகின்றார்.

எவற்றை விரிவாய்ச் சொல்லவேண்டும்எவற்றைச் சுருங்கச் சொல்லவேண்டும் எனும் கதையமைப்புத் திறனில் அவருக்கிருக்கும் புலமையை இது புலப்படுத்துகின்றது.

இலங்கை சென்ற அனுமனின் நிலையென்னவோ எனும் கலக்கத்தோடும் அச்சத்தோடும் மகேந்திர மலையில் காத்திருந்த வானரர்கள்அவன் வரவைக் கண்டதும் கூட்டிலிருந்த பறவைக் குஞ்சுகள் வெளியில் சென்ற தம் தாயின் வரவைக் கண்டதுபோல் உவகையுற்றனர்.

பாய்வரு நீளத்து ஆங்கண் இருந்தன பறவைப் பார்ப்புத்
தாய் வரக்கண்டதன்ன உவகையின் தளிர்த்தார் அம்மா. (கம்பதிருவடி தொழுத படலம்  6009)

அங்கதன்சாம்பவான் முதலியோரையும் ஏனைய வானரர்களையும் அவரவர்க்கு ஏற்றவகையில் வணங்கிய அனுமன்சீதை அவர்கள் அனைவருக்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவிக்கச் சொன்னதைத் தெரிவித்தான்.

வானரர்கள் அனைவரும் இலங்கையில் நிகழ்ந்தவற்றை உரைக்கச் சொல்லி அனுமனிடம் கேட்கவேஅங்கே தான் சந்தித்த சீதாப் பிராட்டியின் கற்பொழுக்கத்தின் சிறப்பையும்அவள் இராமனிடம் அடையாளமாய்க் காட்டச்சொல்லிக் கொடுத்த சூடாமணியைப் பற்றியும் குறிப்பிட்ட அனுமன்தான் அங்கு அரக்கர்களோடு போர்புரிந்து பெற்ற வென்றிகள் குறித்தோஇலங்கையை எரியூட்டிய தன் திறன் குறித்தோ ஏதும் சொல்லாது விடுத்தான் தற்புகழ்ச்சிக்கு நாணி!

ஆண்தகை தேவி உள்ளத்து அருந்தவம் அமையச் சொல்லி
பூண்டபேர் அடையாளம் கைக்கொண்டதும் புகன்று போரில்
நீண்டவாள் அரக்கரோடு நிகழ்ந்ததும் நெருப்புச் சிந்தி
மீண்டதும் விளம்பான் தான்தன் வென்றியை உரைப்ப வெள்கி. (கம்பதிருவடி தொழுத படலம்  6015)

தற்புகழ்ச்சியில் திளைப்பது அற்பர்கள் குணம்நற்குணமும் நல்லறிவும் பெற்ற சான்றோர் அதனை விரும்புவதில்லை என்பதற்கு அனுமனின் அடக்கம் சான்றாய் அமைகின்றது.

அனுமன் தன்னுடைய பெருமையைத் தானுரைக்க விழையாவிடினும் அவன் உடலில் காணப்பட்ட புண்களும்இலங்கை நகரிலிருந்து எழுந்த புகையும் அங்கு நிகழ்ந்தவற்றை வானரர்களுக்குத் தெளிவாய் உணர்த்திவிட்டன.

இலங்கை நிகழ்வுகளை இராமனிடம் விரைவில் உரைக்கவேண்டும் எனும் எண்ணத்தோடு வானரர்கள் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு கிட்கிந்தை வந்தனர்அங்குள்ள மதுவனம் எனும் சோலையை அடைந்தவர்கள்அலுப்புத்தீர தேனுண்டு களித்தனர்களிப்பு மிகுதியில் அச்சோலைக்குச் சேதம் விளைவிக்கவும் தொடங்கினர்அதனையறிந்த அவ்வனத்தின் காவலன் ததிமுகன் என்பவன் தன் சேவகர்களோடு அங்குவந்து அங்கதன் உள்ளிட்ட வானரர்களோடு சண்டையிட்டான்அங்கதனும் அவனுடைய சேனையும் ததிமுகனையும் அவனுடைய சேவகர்களையும் கடுமையாய்த் தாக்கி விரட்டிவிட்டு அங்கேயே இளைப்பாறிக் கொண்டிருந்தது.

வானரர்கள் சோலையில் இளைப்பாறிக் கொண்டிருக்கட்டும்நாம் இராம இலக்குவரின் தற்போதைய நிலையென்ன என்பதை அறிந்துவருவோம் புறப்படுங்கள்!

சீதையின் பிரிவால் வாடிக்கொண்டிருந்த இராமனைக் கதிர் மைந்தனாகிய சுக்கிரீவன் நம்பிக்கை மொழிகள் சொல்லித் தேற்றிக்கொண்டிருக்கின்றான்அம்மொழிகளால் இராமனும் சிறிது மனம்தேறியவனாய்க் காணப்பட்டான்வடக்கு கிழக்கு மேற்கு திசைகளில் சீதையைத் தேடிச்சென்ற வானரர்கள் சீதையைக் காணாது திரும்பிவிட்டமை வருத்தத்தைத் தந்தாலும்தென்திசை சென்ற திறலுடை அனுமனிடமிருந்து நல்ல செய்தி வரும் என்ற எதிர்பார்ப்பே அவன் உயிரைப் பிடித்து வைத்திருந்தது.

எனினும்குறித்த கெடு தாண்டியும் தென்திசைச் சென்றோர் திரும்பாமை இராமனுக்குக் கவலையையும் அளிக்கவேஅவர்களுக்கு என்னவாயிருக்கக் கூடும் என்பது குறித்த தன் ஐயங்களைச் சுக்கிரீவனிடம் வெளிப்படுத்திக்கொண்டிருந்தான்அப்போது குருதிவழியும் முகத்தோடு அங்கு வந்த ததிமுகன்அங்கதனும் அவனுடைய சேனையும் மதுவனத்தில் நுழைந்து அட்டகாசம் செய்ததையும் தட்டிக்கேட்கச் சென்ற தன்னையும் தன் சேவகர்களையும் தாக்கியதையும் சுக்கிரீவனிடம் வருத்தத்தோடு தெரிவித்தான்.

அதுகேட்ட சுக்கிரீவன்தென்திசைச் சென்றவர்கள் சீதையைக் கண்டு திரும்பியிருக்க வேண்டும்அந்த மகிழ்ச்சித் திளைப்பில்தான் மதுவனத்தில் அவர்கள் இவைபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கவேண்டும் எனும் தன் ஊகத்தை இராமனிடம் வெளிப்படுத்திவிட்டுத் ததிமுகனை நோக்கிமகிழ்ச்சியில் அவர்கள் செய்த இச்செயல்களைப் பெரிதுபடுத்த வேண்டாஅத்தோடுவாலி சேயான அங்கதனின் அரசல்லவா இதுஎனவேஅவனைத் தண்டித்தல் முறையாகாஅவனிடம் நீ சரணடைதலே சரியானது! என்றுகூறித் ததிமுகனைத் திருப்பியனுப்பினான்.

திரும்பிவந்த ததிமுகன் அங்கதனைத் தொழுது வணங்கவேஅவர்களுக்குள் பிணக்கம் தீர்ந்துஇணக்கம் பிறந்ததுஇனியும் தாமதித்தல் சரியில்லை என்றுணர்ந்த வானரர்கள் அனுமனை இராமனிருக்கும் இடத்திற்கு முதலில் அனுப்பினர்.

கீழ்த்திசைச் சூரியன் தெற்கிலிருந்து வருவதுபோன்ற ஒளியோடு தென் திசையிலிருந்து இராமனை நோக்கி வந்தான் வன்திறல் அனுமன்வந்தவன்இராமனைத் தொழுதானா என்றால் இல்லைதாமரை மலரினின்று நீங்கிய தையலான சீதாப் பிராட்டியை அவளிருக்கும் தென்திசை நோக்கிய தலையையும் கைகளையும் உடையவனாய்த் திரும்பிநிலத்தில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்கி அவளை வாழ்த்தினான் என்கிறார் காப்பியக் கவிஞர் கம்பர்.

எய்தினன் அனுமனும் எய்தி ஏந்தல்தன்
மொய்கழல் தொழுகிலன் முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன் கையினன்
வையகம் தழீஇநெடிது இறைஞ்சி வாழ்த்தினான். (கம்பதிருவடி தொழுத படலம்  6028)

சீதைகற்புத் திண்மையுடன் இலங்கையில் இருக்கிறாள் என்பதை உணர்த்தவே அறிவிற் சிறந்த அனுமன்இராமனைக் கண்டவுடன் அவனைத் தொழாது சீதையிருந்த திக்கில் வீழ்ந்து வணங்கினான் என்பதே அவன் செய்கை உணர்த்தும் உட்பொருள்.

எனவேதிருவடி தொழுத படலம்’ எனும் தலைப்பு அனுமன் சீதையின் திருவடியைத் தொழுதமையையே குறிக்கின்றது என்று நாம் பொருள்கொள்ளவே கம்பரின் இப்பாடல் இடமளிக்கின்றது.

அனுமனின் செய்கையால்அனுமன் சீதையைக் கண்டிருக்கின்றான்அவள் கற்புத்திறனும் சிறப்பாகவே இருக்கின்றது என்பதை உய்த்துணர்ந்து உவகைகொண்டான் இராமன்.

வந்தவுடன் வளவளவென்று பேசாமல் குறிப்பிலேயே தான் கொண்டுவந்திருக்கும் நற்செய்தியை உணர்த்தியது அனுமனின் மதிநுட்பம்அந்தக் குறிப்பை உடனே உணர்ந்துகொண்டது இராமனின் நுண்ணறிவு.

இராமனின் மனம் கொந்தளிப்பு நீங்கி அமைதிகொண்ட நிலையில்அவனிடம் இலங்கையில் நிகழ்ந்தவற்றை உரைக்கத் தொடங்குகின்றான் அனுமன்.

தேவர்களுக்குத் தலைவனேகற்பினுக்கு ஓர் அணிகலனாய்த் திகழ்கின்ற பிராட்டியைத் திரைகடல்சூழ் இலங்கை நகரில் என் கண்களால் கண்டேன்இனிபிராட்டியின் நிலைகுறித்த ஐயத்தையும் இதுவரை நீ கொண்டிருந்த துயரத்தையும் துறப்பாய்! என்றான் அனுமன்.

கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்
தெண்திரை அலைகடல் இலங்கைத் தென்நகர்
அண்டர் நாயகஇனி துறத்தி ஐயமும்
பண்டுள துயரும் என்று அனுமன் பன்னுவான். (கம்பதிருவடி தொழுத படலம்: 6031)

இப்பாடலில் பயின்று வந்துள்ள கண்டனென் என்ற சொல் த்ருஷ்டா ஸீதா என்ற வான்மீகத்தின் தொடரைத் தழுவியதுஎனினும்அதனை அடுத்துள்ள கற்பினுக்கு அணியை என்ற கம்பரின் சொல்லாடல்ஸீதா எனும் மூலநூலின் சொல்லைவிட ஆழ்ந்த நுணுக்கமான பொருளை உணர்த்துவதாய் அமைந்துள்ளது.

ஐயதவம் என்பது செய்த தவத்தின் வடிவமாய்த் திகழும் தையலான சீதைகடலிடையுள்ள இலங்கை எனும் பெரிய நகரின் ஒருபுறத்தில் விண்ணை அளாவி நிற்பதும் காலை மாலை எனும் வேறுபாடின்றி ஒரேவிதமாய் விளங்குகின்ற பொன்மயமான கற்பகத் தருவை உடையதுமான ஒரு பூஞ்சோலையினுள்ளே உன் தம்பி இலக்குவன் புற்களைக் கொண்டு வேய்ந்து அமைத்த தூய்மையான அதே பன்னசாலையில் தங்கியிருந்தாள் என்றுரைத்தான் அஞ்சனையின் அரும்புதல்வன்.

வேலையுள் இலங்கை என்னும் விரிநகர் ஒருசார் விண்தோய்
காலையும் மாலைதானும் இல்லதுஓர் கனகக் கற்பச்
சோலை அங்குஅதனில் உம்பி புல்லினால் தொடுத்த தூய
சாலையில் இருந்தாள்ஐய தவம் செய்த தவம்ஆம் தையல். (கம்பதிருவடி தொழுத படலம்  6037)  

வான்மீகத்தில் இராவணன் சீதையைத் தொட்டுத் தூக்கிச் செல்வதாய்க் கதை அமைந்திருக்கும்ஆனால்கம்பநாடர் தம் காப்பியத்தில் அவ்வாறு அமைக்காதுபன்னசாலையுடனேயே இராவணன் சீதையைத் தூக்கிச் செல்வதாய்த் தமிழ்மரபுக்கு ஏற்றவகையில் காப்பியத்தை மாற்றியமைத்திருந்தமையை முன்னரே கண்டோம்அந்தப் பன்னசாலையிலேயே சீதையை இராவணன்அசோகவனத்தில்சிறை வைத்திருந்தான் எனும் வகையில் காப்பியத்தைத் தொடரும் கம்பர்அச்செய்தியை அனுமனின் சொற்கள் வாயிலாக இராமனுக்கு மட்டுமல்லாது காப்பியத்தைக் கற்கின்ற ஏனையோர்க்கும் ஈண்டு அறியத் தருகின்றார்.

தொடர்ந்து பேசிய அனுமன்கற்பிற் சிறந்த பெண்ணொருத்தி தன் கண்களில் உயரிய காதலைத் திரட்டி வைத்துக்கொண்டுஉன் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற செல்வத்தைப் பெற்ற நீயே உலகில் ஆடவர் பெறவேண்டிய செல்வத்தை முழுதாய்ப் பெற்றவன் ஆனாய்! என்று இராமனைப் பாராட்டுகின்றான்.

மாண்பிறந்து அமைந்த கற்பின் வாணுதல் நின்பால் வைத்த
சேண்பிறந்து அமைந்த காதல் கண்களின் தெவிட்டி தீராக்
காண்பிறந் தமையால் நீயே கண்அகன் ஞாலம் தன்னுள்
ஆண்பிறந்து அமைந்த செல்வம் உண்டனை யாதி அன்றே. (கம்பதிருவடி தொழுத படலம்  6043)

மணமான ஆடவனொருவன் தன் மனையாட்டியின் காதலை முழுமையாய்ப் பெறுவதே அவன் பெறும் பேறுகளில் பெரிய பேறு எனும் அரிய கருத்தை மாணியான அனுமன் வாயினால் இங்குச் சொல்லவைத்த கம்பரின் சிந்தனை நம்மைச் சிலிர்க்கவைக்கின்றது.

நான் தங்களின் கணையாழியை அடையாளமாய்ச் சீதையிடம் கொடுத்தபோது அதுகண்டு நெகிழ்ந்தவள்அதனை மார்புறத் தழுவிக்கொண்டாள் என்ற அனுமன்இன்னும் ஒரு மாதம்வரை நான் பிழைத்திருப்பேன்அதன்பின்னரும் என்னை மீட்க இராமன் திருவுளம் இரங்கவில்லையாயின் உயிர்துறப்பேன் என்று சீதை சொல்லச் சொன்னதையும் மறவாது இராமனிடம் செப்பினான். 

இவ்வாறு இருபத்தொரு பாடல்களில் தான் இலங்கையில் சீதையைத் தேடிக் கண்டடைந்தமைசிறையிருந்த சீதையின் கற்புத்திறம்அவளுரைத்த செய்திகள் ஆகியவற்றை இராமன் மனங்கொள்ளும் வகையில் விளங்கவுரைத்த சொல்லின் செல்வனான அனுமன்பின்பு தன் ஆடையில் முடிந்து வைத்திருந்த ஒளி உமிழும் சூடாமணியை எடுத்துசீதை தந்த அடையாளமாய்இராமனிடம் காட்டினான்.

அந்தச் சூடாமணியைத் தன் அங்கையில் வாங்கியபோது மணநிகழ்வின்போது நங்கை சீதையின் கையைப் பற்றிய உணர்ச்சியை அடைந்தான் இராமன்அவன் உரோமங்கள் சிலிர்த்தனகண்கள் நீரைப் பொழிந்தனமார்பும் தோள்களும் பூரித்தன.

அப்போது அங்கதன் முதலிய இதர வானரர்களும் இராமனிடம் வந்துசேர்ந்தனர்.

சீதையை மீட்கும் பணிக்கு எழுக! என்று தன் படைகளுக்கு ஆணையிட்டான் சுக்கிரீவன்வெள்ளத்தனைய மிகுபடை கிட்கிந்தையிலிருந்து புறப்பட்டதுஅனுமனின் வேண்டுகோளின்படி அவன் தோளில் இராமனும்அங்கதன் விருப்பப்படி அவன் தோளில் இலக்குவனும் ஏறிக்கொள்ளவானர சேனை அணிவகுத்துத் தென்திசை நோக்கிப் பயணித்துக் கடலைச் சென்றடைந்தது.

 

 

சீறாப்புராணம் -உடும்பு பேசிய படலம்

       

.  முகமது நபியின் வருகை

முகமது நபி அவர்களுடன் உமறு கத்தாப் என்ற வள்ளலும் தீன் என்ற இஸ்லாம் மார்க்கத்திற்கு உடையவர்கள் ஆனபின்இஸ்லாமியர்கள் யாவரும் தைரியமுடையவர்களாய்மகிழ்ச்சி அடைந்தனர்முகமது நபியை இஸ்லாமியர்கள் அனைவரும் தங்களின்  ஜீவனைப் போல் விரும்பினர்முகமது நபிஉமறு கத்தாப்அபுபக்கர் ஆகியோர்கள் மக்கா நகரத்திற்கு வெளியே சென்று ஒரு சோலையின்கண் தங்கியிருந்தார்கள்.

நபிகளை இயற்கை வணங்குதல்

அப்போது முகமது நபியின் சரீர அழகைப் பார்த்து அங்குள்ள கற்களும்மரங்களும் காடுகளும்பறவைகளும்விலங்கினங்களும் காட்டில் பாய்ந்துத் திரியும் உயிரினங்களும் முகமது நபியைப் போற்றி சலாம் சொல்லி நின்றனமுகமது நபி அவர்கள் அன்று தங்கள் கூட்டத்தை விட்டு நீங்கி மறுநாள் வேலை கையில் ஏந்திய இஸ்லாமியர்கள் சூழ்ந்து வர தன்னுடலிலிருந்து ஒளி பிரகாசிக்க வேறு ஓர் இடத்தில் சென்று தங்கினார்கள்.

வேடன் உடும்பைப் பிடித்தல்

அப்போது வில்லையும் வலையையும் உடையவனான வேறு ஒரு வேடன் தனது கையில் தடியுடன் காட்டில் சென்றான்வேடன் காட்டில் அலைந்து திரிந்தும்கற்களைத் தள்ளியும் மான் கூட்டங்கள் தடைபடும் வண்ணம் வலைகளைக் கட்டியும் மலைகளின் குகைகளிலும் தேடிப் பார்த்தும் எதுவும் கிடைக்கவில்லைஅதனால் அவன் சோலைகளில் தேடிய போது ஒரு பொந்தில் ஒரு உடும்பானது புகுவதைப் பார்த்து அவ்வுடும்பை வலையிடத்தில் பிடித்துகல் உடையும் வண்ணம் அடித்து தனது மார்போடு பிடித்தான்.

வேடன் நபிகளைக் கண்டு வியத்தல்

              அவ்வாறு பிடித்த இவ்வுடும்பை அவ்வேடன் வலையில் கட்டி மனம் மகிழ்ச்சியோடு முட்கள் தங்கிய காடுகளையும் பாறைகளையும் தள்ளி நடந்து வந்தபோது இஸ்லாமியர்கள் நடுவில் நாயகம் முகமது நபி அவர்களைக் கண்களால் பார்த்தான்அவன்அறிவையுடையவர்களான இஸ்லாமியர்களின் நடுவில் வருவது என்ன காரணம்மேலும் இவருக்குத் தொழில் யாது என்று நினைத்து அவ்வேடன்தங்கியிருந்த இஸ்லாமியர்களிடம் கேட்க அதற்கு அவர்கள் இவர் யாவற்றிற்கும் முதன்மையான நன்மை பொருந்திய முகமது நபி என்று கூறினர்.

முகமது நபி – வேடன் உரையாடல்

              அதைக் கேட்ட வேடன்முகமது நபியின் முன்னர் வந்து நின்று ‘நீங்கள் எந்த வேதத்திற்கு உரித்தானவர்நீங்கள் அழகாய் நடத்துவது எந்த மார்க்கம்அவற்றை எனக்குத் தெளிவாகக் கூறுங்கள்’ என்று கேட்டான்முகமது நபி வேடனைப் பார்த்து “அழகான வேடனேநான் இந்த உலகத்திற்குக் கடைசியாக வந்த நபிஎனக்குப் பிறகு இனிமேல் இந்த பூமியில் நபிமார்கள் யாரும் இல்லர்எனது வார்த்தையைப் பின்பற்றி தீன் என்ற இஸ்லாமிய மார்க்கத்தில் நின்றவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள்இந்த வார்த்தைகளைக் குற்றமென்று சொல்பவர்கள் அக்கினி குழிகளையுடைய நரகத்தில் விழுந்து மயங்குவார்கள் என்றார்ஆதலால் இதனை நன்மை என்று உனது மனதில் நினைத்து என் நாவினில் சொல்லும் கலிமாவை ஓதிதுரோகத்தை இல்லாமல் செய்து நல்ல பதவியை அடைவாய்” என்று முகமது நபி கூறினார்.

வேடன் முனகது நபியைப் பார்த்து ‘நான் உங்களின் வார்த்தைகளை மறுக்கவில்லைஎனக்கு நீங்கள் தான் நபி என்று சொல்லும்படியாக மெய்யான சாட்சி வேண்டும்’ என்று கேட்டான்

அதைக் கேட்ட முகமது நபி அவர்கள் ‘இந்த பூலோகத்தில் உள்ள படைப்புகளில் குறைபாடற்ற சாட்சியாக நீ கேட்பது யாது?” என்று கேட்டார்கள்அவ்வாறு கேட்ட முகமது நபியைப் பார்த்து வேடன் “காட்டில் அகப்பட்ட ஒரு உடும்பு என்னிடம் உள்ளதுஅந்த உடும்பு கூர்மையான பற்களைக் கொண்ட தன் வாயைத் திறந்து உங்களுடன் பேசினால் அதன் பின் நான் மறுத்து சொல்ல மாட்டேன்” என்று கூறினான்.

முகமது நபி அவர்கள் நல்லதென்று சிரித்துமலைகளில் திரிந்து நிற்கும் அந்த உடும்பைக் கூட்டமுள்ள இந்தச் சபையில் விடுவாயாக என்று கூறினார்வேடன்தேன் வழிகின்ற மலர் மாலையை உடையவர்களேநான் இந்த உடும்பைப் பிடிப்பற்குக் காட்டின் கண் திரிந்து மிகவும் இளைத்து இரண்டு கால்களும் தளர்ச்சியடைந்தேன்இதை அவிழ்த்து விட்டால் எளிதில் நம்மிடத்தில் வராதுஅதனால் அதை என் மடியில் இருக்கும்படி செய்தேன்” என்று கூறினான்.

நபிகள் நாயகம் “உனது உடும்பைத் தூக்கி எனது இடத்தின் முன்பு விட்டால்அவ்வுடும்பானது அவ்விடத்தை விட்டு நீங்கிச் செல்லாது” என்று கூறினார்உடனே அந்த வேடன் தன் மடியில் நிற்கும் அவ்வுடும்பைக் கீழே விட்டான்அவ்வாறு விட்டவுடன் அவ்வுடும்பானது நெடிய தனது தலையைத் தூக்கி வாலை நிமிரும்படி செய்து முள்ளைப் போன்ற தன்னுடைய நகங்களை பூமியில் பதித்து ஊன்றிஎள்ளிடும் அளவுள்ள இடமாக இருப்பினும் நீங்கிச் செல்லாது முகமது நபியை மனத்தால் பார்த்து தெளிந்தது.

நபிகள் நாயகம் – உடும்பு உரையாடல்

அவ்வாறு பார்த்த உடும்பை நோக்கி முகமது நபி அவர்கள்அமிழ்தம் போன்ற வார்த்தைகளையுடைய அருமையான தங்களின் வாயைத் திறந்து உடும்பை அழைத்தார்அவ்வுடும்பானது கண்களைத் திறந்து நபியைப் பார்த்து பிளவுடைய தன் நாக்கைத் தூக்கி பதில் பேசிற்று.

இம்மைமறுமை என்று சொல்லும் இரண்டும் வருவதற்கு முன்னரும்பல யுகங்களும் தோன்றும் முன்னர் தோன்றிய நபிமார்களுக்கெல்லாம் பின்னர் இவ்வுலகத்தின் கண் அவதரித்து மூன்று உலகங்களையும் துதிக்கும் வண்ணம் தகுதியான நீதியை உடையவர்களே!

தேவர்கள் வணங்கும் தங்களின் பாதங்களை தினமும் வணங்கி இரண்டு கண்களிலும் தலையின் மீதும் பொருந்திய வண்ணம் பற்றினேன்சிறிய அடியேனான நான் ஈடேறும்படி தங்களின் வாயைத் திறந்து என்னை அழைத்ததற்கான காரணத்தைக் கூறுங்கள்” என்றது.

உடும்பைப் பார்த்து முகமது நபி “நீ யாரை மாறாது வணங்குகின்றாய்என்பதை வேறுபாடு இல்லாமல் சொல்” என்று கேட்டார்உடனே அவ்வுடும்பானது, “வள்ளலேநான் வணங்குகின்ற நாயகன் ஏகன்அவனுடைய அழகிய மேலான சிம்மாசனமானது வானுலகத்தில் இருக்கும்அவனது ஆட்சி பூமியிலும் இருக்கும்ஒப்பில்லாத பெரியவனான அல்லாவைத் துதித்து நான் வணங்கியது சத்தியம்” என்று சொல்லிற்று.

முகமது நபி உடும்பு பேசியதைக் கேட்டு ‘நீ தருமத்துடன் சொன்னாய்ஆனால்என்னை யார் என்று மதித்தாய்?’ என்று கேட்டார்உடனே உடும்பு தனது இரட்டை நாக்குகளைத் தூக்கி பின்வருமாறு சொன்னது.

கடல்ஆகாயம்பூலோகம்மலைகள்சூரியன் மற்றும் யாவையும் தங்கள் ஒளியில் உள்ளனசத்தியமாய் யாவற்றுக்கும் முதன்மையாய் விளங்குகின்ற அல்லாவின் அழகிய தூதர்களில் இந்த பூமியில் வந்த நபிமார்களில் பிரகாசித்து நிற்கும் மேன்மை உடையவர் நீர்.

கடைசியில் வந்த நபியானவர் நீங்கள்இப்பூமியில் தங்களுடைய வாக்கினால் சொல்லிய மார்க்கமே மார்க்கம்அதனைக் குற்றமறத் தெரிந்தவர்கள் சொர்க்கலோகத்தை அடைவார்கள்குற்றம் என்று கூறுபவர்கள் நரகலோகத்தில் விழுவார்கள்.

என்னுடைய காட்டிலுள்ள சாதிகள் எல்லாம் தங்களின் திருநாமத்தை உடைய கலிமாவைத் துதிக்கின்றனமிகுந்த புகழ் பெற்ற உண்மையான நன்மை பெற்ற நபிகள் நீங்களேஇவ்வுலகத்தில் வேறு நபிமார்கள் இல்லை” என்று உடும்பு சொல்லிற்று.

வேடனின் மனமாற்றம்

உடும்பு பேசியதைக் கேட்ட வேடன்மனதில் விருப்பம் அடைந்து தனது துன்பங்களை ஒழித்து நபிகளைப் பார்த்து “நானும் எனது குடும்பமும் குபிர் மார்க்கத்தினால் நாள்தோறும் செய்த பாவத்தை ஒழியுங்கள்” என்று சொல்லி நபிகளின் பாதங்களைப் பிடித்தான்நபிகள் நாயகம் தன் பாதங்களில் பற்றி நின்ற அவன் கையை எடுத்து கண்களில் பதியும்படி செய்து முத்தமிட்டு மகிழ்ச்சி அடைந்து அனைவரும் துதிக்க மனம் நெகிழ கலிமாவைத் தமது வாயினால் ஓதினார்.

வேடனும் முகமது நபிகள் கூறிய கலிமாவை ஓதி முறைப்படி நடந்து தொழுகையும் விரும்பி அறிவில் முதியவர் என்று சொல்லும்படி இஸ்லாமியர் ஆனான்.  பின்னர் பனை மரத்தைப் போன்ற பெரிய துதிக்கையைக் கொண்ட யானையைப் போன்றன தகுதி உடைய வேடன் அந்த உடும்பைப் பார்த்து நான் உன்னை நெருக்கி பிடித்தேன்உனது செய்கையினால் என்னைப் பிடித்து நெருங்கிய பாவங்களை இன்று போக்கினேன்உனது வீடாகிய பெரிய வலையின் கண் போவாயாக என்று சொல்லி ஆசிர்வதித்தான்.

அப்போது அந்த உடும்பானது அங்குள்ள அனைவரையும் பார்த்து மகிழ்ந்து பின்னர் தாமரை மலர் போன்ற முகம் கொண்ட முகமது நபிகளின் முகத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து நின்றது.

உடும்பு அவ்விதம் நிற்பதைப் பார்த்த முகமது நபிகள்இனிமையான தன் வாயைத் திறந்து நீ உனது இருப்பிடத்திற்குச் செல்வாய் என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார்.  அதை உடும்பு தன் காதுகளால் கேட்டு மனம் மகிழ்ந்து விருப்பத்தோடு  சென்றது.

 Unit 2

4. இயேசு காவியம்

              இயேசு காவியம் என்பது கவிஞர் கண்ணதாசன் எழுதிய ஒரு தற்காலத் தமிழ்க் காப்பியமாகும்இயேசு கிறிஸ்துவின் வரலாற்றைக் கவிதை வடிவில் கூறும் இந்த நூல் சுமார் 400 பக்கங்களைக் கொண்டதுஇந்நூல் கண்ணதாசன் இறந்து அடுத்த ஆண்டுஅதாவது 1982 இல் வெளியிடப்பட்டதுதிருச்சி “கலைக்காவிரி” என்ற அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க கவிஞர் கண்ணதாசன் இக்காவியத்தைப் படைத்தார்குற்றாலத்திலும்திருச்சியிலும் பல நாட்கள் அவர் தங்கியிருந்துகிறிஸ்தவ இறையியலறிஞர்கள் பலர் உடனிருந்து துணை செய்யஇக்காவியத்தை இயற்றினார்பின்னர் அறிஞர் குழு திருச்சியில் மும்முறை கூடிஎட்டு நாட்கள் காவியத்தை ஆராய்ந்து திருத்தங்கள் கூறகவிஞர் தேவைப்பட்ட திருத்தங்களைச் செய்து தந்தபின் இக்காவியம் பதிப்பிக்கப்பெற்றதுகண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும்கவிஞரும் ஆவார்நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள்ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள்கட்டுரைகள் பல எழுதியவர்சண்டமாருதம்திருமகள்திரை ஒலிதென்றல்தென்றல்திரைமுல்லைகண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்தமிழக அரசின் "அரசவைக் கவிஞராகஇருந்தவர்இவர் சாகித்ய அகாதமி விருது (1980) பெற்றவர்.

  121. பிரியா விடை : அன்புக் கட்டளை

"அன்புடைய குழந்தைகளே உங்க ளோடும்
    
அதிகநாள் நானிருக்க மாட்டேன் பின்பு
பொன்பொழியும் என்தந்தை இடத்துச் செல்வேன்!
    
போனபின்னர் நீங்களெலாம் என்னைப் போல
அன்புடமை மிக்கோராய் வாழ்தல் வேண்டும்
    
ஆனபுதுக் கட்டளையை ஏற்றல் வேண்டும்
மன்பதைகள் அதிலிருந்து நீவீர் எந்தன்
    
மகத்தான சீடரென அறிதல் வேண்டும்!

"கலக்கமுற வேண்டாம்நீர் எந்தன் மீதும்
    
கடவுளிட மும்விசுவா சம்வை யுங்கள்!
இலக்குமிகும் என்தந்தை இல்லத் தின்கண்
    
ஏராள உறைவிடங்கள் அங்கே உங்கள்
துலக்கமிகு வாழ்க்கைக்கு இடத்தைப் பார்க்கத்
    
தூதுவனாய் முன்னாலே செல்கின் றேன்யான்
விளக்கமுடன் இடம்ஒன்றைப் பார்த்த பின்பு
    
விரைந்துவந்து நானும்மை அழைத்துச் செல்வேன்!

"நான்போகும் இடத்திற்கு வழியை நீங்கள்
    
நன்றாக அறிவீர்கள்என்றார் இயேசு!
வான்பார்த்த தோமையர் "ஐயா நீவிர்
    
வடிவாகப் போகுமிடம் அறிய மாட்டோம்
ஆனால்நீர் போகும்வழி அறிவ தெங்கே?
    
அறியோம்யாம்என்றவுடன் இயேசு சொன்னார்,
"
நானேதான் வழிஉண்மை உயிரும் ஆவேன்
    
நம்வழிதான் தந்தையின்பால் செல்ல வொண்ணும்!

"தந்தையைநான் கேட்கின்றேன் மற்று மேஓர்
    
சரியான துணையாளர் உமக்க ளிப்பார்!
எந்நாளும் உம்மோடே அவரி ருப்பார்
    
இணையில்லாப் பரிசுத்த ஆவி யாவார்!
இந்தவையம் அவரைஎன்றும் அறிவ தில்லை
    
எந்நாளும் நீங்கள்தான் அறிகின் றீர்கள்!
சந்ததமும் அவர்உம்மோ டிருந்து உம்முள்
    
தங்குகிறார்என்றுரைத்தார் இயேசு நாதர்!

"செய்கின்ற பாவமெலாம் உலகைச் சாரும்
    
சீராக எனைவிசுவ சிக்கா தாலே!
பொய்கலவா நீதியெந்தன் பக்கம் உண்டு
    
பொருள்தந்த இடத்தினில்நான் செல்லு கின்றேன்
மெய்த்தந்தை தீர்ப்புநிலை தாம்காண் பிப்பார்
    
மேதகுதீர்ப் பினைஉலகத் தலைவன் பெற்றான்
வையத்துள் ஆவியினர் உண்மை நோக்கி
    
வழிநடத்தி எனைமகிமைப் படுத்து வாரே!

"ஒருவன்என் னிடத்தினிலே அன்பு செய்தால்
    
உயர்வான என்மொழியை நாளும் கேட்பான்!
உருவான தந்தைஅவன் மீது அன்பை
    
ஒளிமயமாய்ச் சொரிந்திடுவார் அவரும் நானும்
திருவளரும் அவனோடு குடியி ருப்போம்!
    
தினமன்பு செய்யாதான் மொழியைக் கேளார்!
பொருளோடு நீர்கேட்கும் வார்த்தை எல்லாம்
    
புகழ்த்தந்தை அனுப்பியதேஎன்றார் இயேசு!

"அமைதியையே உங்களுக்கு விட்டுச் செல்வேன்
    
அதிலும்என் அமைதியையே உமக்க ளிப்பேன்!
அமைதியென நான்தருவ தெந்த நாளும்
    
அவனிதரும் ஒன்றல்ல இறைவன் தந்த
அமைதியிது என்பதைநீர் அறிய வேண்டும்!
    
அலையான மனக்கலக்கம் வேண்டாம் நீங்கள்
அமைவுடனே மகிழுங்கள் தந்தை நோக்கி
    
அடியெடுத்துச் செல்கின்றேன்என்றார் இயேசு!

"நானேதான் பெருந்திராட்சைக் கொடியாய் நின்றேன்
    
நம்தந்தை பயிரிடுவோர் எம்கி ளைக்குள்
ஈனாத கிளையைஅவர் வட்டிச் சாய்ப்பார்
    
எழிற்கனிகள் தரும்கிளையை வளர்த்து வைப்பார்
தானாடும் கிளைஅந்தக் கொடியி லேயே
    
சார்ந்திருந்தால் கனிகொடுக்கும் தனித்து நின்றால்
ஈனாது நீங்களென்பால் நிலைத்தால் மட்டும்
    
எப்போதும் கனிதருவீர்என்றார் இயேசு!

"உங்களுக்குள் சகஅன்பு வேண்டும் என்றேன்
    
உயிர்கொடுக்கும் அளவுக்கும் அன்பு வேண்டும்!
தங்கம்நிகர் நண்பனுக்கு உயிர்கொ டுத்தல்
    
தரமான செயலாகும் நானும் உம்மைப்
பங்கமிலா நண்பரெனக் கருது கின்றேன்
    
பணிபுரியும் சேவகராய் எண்ண மாட்டேன்
மங்கலமாய் நானும்மைத் தேர்ந்தேன் நீங்கள்
    
வலியவந்து சேரவில்லைஎன்றார் இயேசு!

உங்களைநான் தேர்ந்தெடுத்த கார ணத்தால்
    
உலகம்உம்மை எனைவெறுத்தாற் போல்வெ றுக்கும்
அங்கங்கே எனைப்பாடு செய்த தேபோல்
    
அநியாயப் பாடுகளும் செய்யும் நாளை
தங்களது செபக்கூடம் விட்டுத் தள்ளிச்
    
சதிசெய்து கொலைசெய்து கடவு ளுக்குப்
பொங்கிவரும் பலிசெலுத்தி விட்ட தேபோல்
    
பூரிக்கும்என்றுரைத்தார் இயேசு நாதர்!

"எனக்கான நேரமிது நெருங்கக் கண்டீர்
    
எள்ளளவும் ஐயமில்லை அந்த நேரம்
நினைக்காத அளவினிலே நீங்க ளெல்லாம்
    
நிலைகெட்டே சிதறுண்டு ஓடிப் போவீர்!
தனித்தேநான் நின்றிருப்பேன் ஆனால் என்ன
    
தந்தைஎந்தன் உடன்இருப்பார் உங்க ளுக்கு
மனக்குமுறல் வேதனைகள் மெத்த உண்டு
    
மனங்காக்க நானுலகை வென்று விட்டேன்"

 

 

 

 

Unit -3

 

பிச்சிப்பூ

 

பிச்சிப்பூ என்னும் பெண் பாத்திரத்தை மையமாகக் கொண்ட நாவல்பாதிக்குப் பின் தான் தோன்றுகிறாள் பிச்சிப்பூஅதுவரை அவளது கணவன் மூர்த்தியார் பற்றியும்மீட் பாதிரியார் பற்றியும்சாதி முறைகள் பற்றியும் தான் விலா வாரியாக எடுத்துரைக்கிறதுகிறிஸ்துவர்களுக்கும்உயர் சாதிகளுக்கும் ஒதுக்கப்பட்ட வேலை ஹிந்துக்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும்தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இல்லாமல் இருந்த உண்மையை எடுத்துரைத்துள்ளார்.

குமாரகோவிலில் நாடார் சமுதாயத்தினர் நடத்திய கோவில் நுழைவு போராட்டத்தையும்அதில் பிச்சிப் பூ காட்டிய வீர தீரத்தையும் காட்சிப்படுத்தி நிறைவு செய்துள்ளார்நுாறு ஆண்டுகளுக்கு முன் இருந்த கன்னியாகுமரி மாவட்ட பேச்சு வழக்கிலேயே கதையை நகர்த்திச் செல்கிறார்.

அரைமணி நேரத்தில் படித்து முடிக்கக் கூடியதுவிறுவிறுப்பு அதிகம்நுாறு ஆண்டுகளுக்கு முந்தைய சமூகத்தில் நிலவிய கொடுமைகளைத் தோல் உரித்துக் காட்டும் நுால்.

ஐம்பெருங் காப்பியங்கள்

  • சிலப்பதிகாரம் (Silappadhikaram)
  • மணிமேகலை (Manimekalai)
  • சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
  • வளையாபதி (Valaiyapathi)
  • குண்டலகேசி (Kundalakesi)

ஆகிய ஐந்தினையும் தமிழில் தோன்றிய ஐம்பெருங் காப்பியங்கள் என்பர்.

இவ் ஐந்தனுள் சிறப்புத் தகுதி வாய்ந்தவை சிலப்பதிகாரமும்மணிமேகலையும் ஆகும்இவை இரண்டையும் இரட்டைக் காப்பியங்கள் என்று குறிப்பிடுவார்கள்இவ்விரண்டும் கதை நிகழ்ச்சியில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவைமேலும் சமகாலத்தில் தோன்றியவைஏனையவை சோழர் காலத்தில் தோன்றியவையாகும்.

1 ) . சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றுஇது சேரன் செங்குட்டுவன் சகோதரர் இளங்கோஅடிகள் இயற்றிய காப்பியமாகும்அரச பதவியை உதறிவிட்டு துறவறம் பூண்டு வாழ்ந்தவர் இளங்கோ அடிகள் கோவலன்கண்ணகி,மாதவி இக் கதையில் முக்கிய பாத்திரங்கள்.கண்ணகி கற்பு நெறி தவறாமல் வாழும் பத்தினி .மாதவி பேரழகிஆடற்கலையின் ஆழமுணர்ந்தவள்கணிகையர் குலத்தோன்றலெனினும் கற்புநெறி வழுவாமல் கோவலனுக்கென்றே வாழ்ந்தவள்மணிமேகலையின் தாய்கோவலன் தனது செல்வம் அனைத்தையும் முறை இல்லாமல் செலவழித்து கடைசியில் மிஞ்சிய தனது மனைவியின் காற்சிலம்பை விற்க மதுரைக்கு வருகிறான்கடைவீதியில் அதை விற்க முயலும் போது அரண்மனைக் காவலர்களால் அரசியின் சிலம்பை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு மன்னர் முன் விசாரணை கைதியாக நிற்க வைக்கப்படுகிறான்மன்னன் கோவலன் விற்க முயன்ற சிலம்பு அரசியின் சிலம்பு என குற்றம் சாட்ட,கோவலன் அது தனது மனைவி கண்ணகி யின் காற்சிலம்பு என மறுக்கிறான்ஆனால் மன்னனின் தவறான தீர்ப்பால் கொலை செய்யப்படுகிறான்.கணவன் கொலையுண்ட செய்தி கேட்டு கண்ணகி கோபாவவேசமாக அரசனின் அரச சபைக்கு வருகிறாள்.

  • மன்னனின் தீர்ப்பு தவறு என நீதி கேட்கிறாள்.மன்னன் தனது மனைவியின் காற்சிலம்பில் உள்ளது முத்து என கூற தனது சிலம்பில் உள்ளது மாணிக்க பரல்கள் என சிலம்பை வீசி உடைத்து நிருபிக்கிறாள்.
  • நீதி தவறிய மன்னன் அக்கணமே உயிர் விடுகிறான்.அரசியும் உடன் உயிர் விடுகிறாள்.கண்ணகி மதுரை நகரமே முதியவர்,குழந்தைகள்,பெண்கள் தவிர மற்ற அனைத்தும் (மதுரை நகரமேதீக்கிரையாக சபிக்கிறாள்.

2 ) மணிமேகலை

மணிமேகலை ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றுமணிமேகலையின் கதைக்களன்கதை மாந்தர்கதை நடக்கும் காலம் ஆகியவை சிலப்பதிகாரத்தை ஒத்து இருப்பதால் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றனஇக்காப்பியத்தின் நாயகி மணிமேகலைசிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகளாவாள்கோவலன் மற்றும் கண்ணகியின் சோக மறைவிற்கு பிறகுமாதவி பொது வாழ்விலிருந்தும் கலைப் பணியிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டாள்தான் கடந்த காலத்தில் வாழ்ந்த முறையையும் நினைவுகளையும் மாற்ற நினைத்த மாதவிஅவற்றின் சுவடுகளும் உலக சுகங்களும் இன்றி மணிமேகலையை வளர்க்க எண்ணி புத்த சமய மடம் ஒன்றில் அவளைச் சேர்த்து வளர்த்தாள்.

  • அவள் வாழ்ந்து வந்த நாட்டு இளவரசன் மணிமேகலையின் மேல் காதல் கொள்ளவேஅவனிடமிருந்து விடுபட்டு மணிபல்லவத் தீவுக்குச் சென்று புத்த சமயத் துறவியானாள்அங்கு அவளுக்கு பசிப்பிணி போக்கும் ‘அட்சய பாத்திரம்’ கிடைத்ததுஅன்று முதல் மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலைஅவள் மறைவிற்கு பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள்.

3 ) சீவக சிந்தாமணி

சீவக சிந்தாமணிசிலப்பதிகாரம்மணிமேகலைவளையாபதிகுண்டலகேசி என்னும் ஐம்பெருங்காப்பியங்களுள் சீவக சிந்தாமணி காலத்தால் முதன்மையானதாகும்வடமொழியில் உள்ள சீவகன் கதைகள் பலவற்றைப் பின்பற்றித் தமிழில் பாடப்பட்டது இந்நூல்இதற்கு முதல் நூல் க்ஷத்திர சூடாமணி என்பர்இக்காப்பியத் தலைவன் பெயர் சீவகன் ஆகும்சிந்தாமணி என்பது தேவலோகத்தில் உள்ள ஒரு மணியாகும்அது கற்பகத்தரு மற்றும் காமதேனு போன்று கேட்டதைத் தரும் இயல்புடையதாகும்அதனால்தான் சீவகனுடைய கதையைக் கூறும் சிந்தாமணி போன்ற காப்பியம் என்ற பொருளில் இதற்குச் சீவக சிந்தாமணி எனப் பெயரிட்டார் இக்காப்பியத்தின் ஆசிரியர் திருத்தக்கதேவர்சீவக சிந்தாமணி மொத்தம் 3145 பாடல்களைக் கொண்டதுபதின்மூன்று இலம்பகங்களையுடையதுஇலம்பகம் என்பதற்கு மாலை என்பது பொருளாகும்அத்தியாயம் என்றும் சொல்லலாம்அதாவது உட்பிரிவுக்குத் திருத்தக்கத்தேவர் வைத்த பெயர் இலம்பகம் ஆகும்முத்தி இலம்பகம் தவிர ஏனையவை மகளிர் பெயரையே பெற்றுள்ளனபெரும்பாலான இலம்பகங்களில் மணநிகழ்ச்சி கூறப்பட்டுள்ளதுசீவகன் எட்டு பெண்களை மணக்கின்ற நிகழ்ச்சி எட்டு இலம்பகங்களில் கூறப்பட்டுள்ளதுஎனவே தான் இக்காப்பியத்திற்கு மணநூல் என்ற பெயரும் உண்டுபதிகத்தில் காப்பியத்தின் கதைச் சுருக்கம் கூறப்பட்டுள்ளது.

  • இக்காப்பியத்தை இயற்றிய திருத்தக்கதேவர் சமண முனிவராவார்இவர் திருத்தகு முனிவர் என்றும்திருத்தகு மகா முனிவர் என்று அழைக்கப் பெறுவார்இவர் சைன ஆசாரியர் சங்கங்களில் ஒன்றாகிய திரமிள சங்கத்து அருங்கலான்வயத்தைச் சேர்ந்தவர் என்பர்இவர் வாழ்ந்த காலமும் இடமும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும்இவர் கி.பி. 2ஆம் நூற்றாண்டிற்கும் 7ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்திருத்தக்கதேவர் சோழர் குடியில் பிறந்தவர்இளமையிலேயே கல்வி கேள்விகளில் சிறந்த விளங்கியவர்வடமொழிப் பயிற்சி மிக்கவர்காமம்பொய்கொலைகள்சூதாடல் என்ற ஐவகைத் தீமையும் அகற்றியவர்சமணத் துறவியாக வாழ்ந்தவர்விருத்தமெனும் பாடல்களைக் கொண்டு பெருங்காப்பியம் பாடியவர்களில் இவர் முதன்மையானவர்.
  • ஒரு சமயம் திருத்தக்கதேவர் மதுரை சென்றிருந்தபோதுஅங்கிருந்த புலவர்கள்சமண சமயத்தவர் துறவறம் பற்றிப் பாட இயலுமே ஒழிய அகப்பொருட் சுவை மிக்க இன்பத்துறைப் பாடல்களைப் பாட இயலாது என்று இகழ்ந்துரைத்தனர்இதனால் மனவருத்தமுற்றை இவர் தம் ஆசிரியரிடம் இதுபற்றி கூறினார்இவரின் திறமையை உலகுக்கு உணர்த்த விரும்பிய ஆசிரியர்அப்பொழுது குறுக்கே ஓடிய நரி ஒன்றைப் பற்றி ஒரு நூல் இயற்றுமாறு கூறினார்அப்போதே ஆசிரியர் போற்றும் வண்ணம்செல்வ நிலையாமையாக்கை நிலையாமை பற்றிக் கூறும் ‘நரி விருத்தம்’ என்னும் அற்புதமான ஒரு சிறு நூலை இயற்றினார்திருத்தக்கதேவரின் கற்பனைத் திறனைக் கண்டு வியந்த ஆசிரியர் சீவகன் வரலாற்றை அகப்பொருள் சுவை மிளிர பெருங்காப்பியமாக பாடுமாறு கட்டளையிட்டார்அதோடு ‘செம்பொன்வரைமேல்’ என்ற ஒரு பாடலை எழுதி அவரிடம் கொடுத்துஅதனையே கடவுள் வாழ்த்தாகக் கொண்டு நூலைத் தொடங்குமாறு கூறினார்ஆசிரியர் பாடிய அப்பாடலோடு திருத்தக்கதேவரும், ‘மூவா முதலா’ எனத் தொடங்கும் சித்தரைத் துதிக்கும் பாடல் ஒன்றைப் பாடினார்ஆசிரியர் தாம் பாடிய பாடலைவிட தம் மாணவர் பாடிய பாடல் சிறப்பாக இருப்பது கண்டுதிருத்தக்கதேவரின் பாடலை முதலாகவும்தம் பாடலை இரண்டாவதாகவும் வைக்கும்படி கூறினார்அதனால் தான் இக்காப்பியத்தில் சித்தர் வணக்கம் முதலாவதாகவும்அருகர் வணக்கம் இரண்டாவதாகவும் உள்ளதுதிருத்தக்க தேவர் இக்காப்பியத்தை எட்டே நாட்களில் பாடி அருளியதாகக் கூறுவர்.
  • பாண்டியன் அவையிலே திருத்தக்கதேவர் தமது நூலை அரங்கேற்றினார்காப்பியத்தின் நடைஅழகுஅமைப்புஒன்பது சுவைகள் ஆகியவற்றைக் கண்டு புலவர்கள் பலர் வியந்து பாராட்டினர்ஆனால் சில அழுக்காறு கொண்ட புலவர்கள்இன்ப சுவை கொண்ட பாடல்களைப் பாட வேண்டுமாயின் இவருக்கு நல்ல முன் அனுபவம் இருந்திருக்க வேண்டும் என்று கூறினார்கள்இது கேட்ட திருத்தக்கதேவர் கையிலே நெருப்பை ஏந்தி தமது அகத் தூய்மையை அனைவரும் அறியச் செய்தார்.
  • பின்வந்த கம்பர் போன்ற பெரும் புலவர்களுக்குச் சீவக சிந்தாமணி கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தது என்றால் மிகையாகாது

 

4 ) வளையாபதி

வளையாபதியின் ஆசிரியர் பெயர்இயற்றப் பட்ட காலம்அக்காவியத் தலைவன் பெயர்காவியத்தின் கதை போன்றவை தெரியவில்லைஇக்காவியத்தின் 72 பாடல்கள் தான் கிடைத்துள்ளனஅவற்றில் 66 பாடல்கள் 14-ஆம் நூற்றாண்டில் தோன்றிய புறத்திரட்டிலும், 3 பாடல்கள் சிலம்பின் அடியார்க்கு நல்லார் உரையில் மேற்கோளாகவும், 2 பாடல்கள் யாப்பருங்கலக்காரிகை என்னும் இலக்கண நூலின் பெயர்தெரியாத ஓர் அறிஞரால் இயற்றப்பட்ட விருத்தியுரையில் மேற்கோளாகவும்இளம்பூரணரின் தொல்காப்பிய உரையில் மேற்கோளாக் காணப்படுவதும் கடவுள் வாழ்த்துப் பாடலென்று கருதப்படுவதுமாகிய எஞ்சிய 1 பாடல் நச்சினார்க்கினியர் உரையில் மேற்கோளாகவும் கிடைத்துள்ளனஇது ஒரு சமண சமய நூல்.

  • புகார் நகரில் நவகோடி நாராயணன் என்னும் செல்வச் செழிப்புமிக்க வணிகன் இருந்தான்அவன் சைவ சமயத்தவன்அவனுக்கு இரண்டு மனைவியர்முதல் மனைவி அவன் குலத்தைச் சார்ந்தவள்இரண்டாம் மனைவி வேறு குலத்தைச் சார்ந்தவள்அவன் வேற்றுச் சாதிப் பெண்ணை மணந்ததை எதிர்த்து அவன் குலத்தவர்கள் அவனைச் சாதியைவிட்டு ஒதுக்கி வைப்பதாக அச்சுறுத்தவே அவன் தன் இரண்டாம் மனைவியை விட்டுப் பிரிந்தான்அவன் பிறிந்த சமயத்தில் அப் பெண் கருவுற்றிருந்தாள்பின்னர் அவன் கடற்பயணத்தை மேற்கொண்டு பெரும்பொருள் ஈட்டித் திரும்பித் தன் முதல் மனைவியுடன் இன்பமாக வாழ்ந்து வந்தான்இரண்டாம் மனைவி தன் துன்பம் தீர காளி தேவியை வழிபட்டு வந்தாள்சில மாதம் கழித்து அவள் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்அவனை நன் முறையில் வளர்த்து வந்தாள்அச்சிறுவனுடைய விளையாட்டு தோழர்கள் அவனைத் தகப்பன் பெயர் தெரியாதவனென்று எள்ளித் துன்புறுத்தவேஅச்சிறுவன் அதுபற்றி தன் தாயிடம் முறையிட்டான்அவள் ஒருவழியாக அவன் தந்தையின் பெயரை அவனுக்குத் தெரிவித்தாள்அது கேட்ட அவன் தன் தந்தையைத் தேடிச் சென்று தன்னை மகனாக ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினான்ஆயினும் ஊர்க் கட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு நவகோடி நாராயணன் அவனை ஏற்றுக் கொள்ள மறுத்துவிடுகிறான்பின்னர் அவன் தாய் காளியின் உதவியால் செட்டிச்சாதிப் பெரியவர்களிடம் தன் கற்பின் உண்மையை நிலைநாட்டுகிறாள்நாராயணனும் அவனைத் தன் மகனாக ஏற்று அவனுக்கு வீரவாணிபன் எனப் பெயரிட்டுஅவர்களுடன் இனிது வாழ்ந்தான்.
  • இவ்வாறு இக் காப்பியத்தின் கதை கூறப்பட்டாலும்இந்நூல் சமண சமயக் கருத்துக்களையும் கூறுவதால்சமண நூலில் காளியைப் பற்றிய செய்திகள் இடம் பெற வாய்ப்புகள் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறதுஇந்நூலின் செய்யுட்கள் முழுமையாக கிடைக்கப் பெறாததால் இதுபற்றி அறுதியிட்டுக் கூற இயலவில்லை.

5 ) குண்டலகேசி

இந் நூலின் நாயகி குண்டலகேசி செல்வச் செழிப்புமிக்க வணிகர் குலத்தில் பிறந்தவள்அவள் பெற்றோர் இட்ட பெயர் பத்தா தீசாஅவள் பருவமடைந்து இனிது இருந்த சமயத்தில் அவ்வூரில் சத்துவான் என்பவன் வழிப்பறிக் கொள்ளை அடித்துஅரசனால் கொலைகளத்துக்கு அனுப்பப்பட்டான்அப்போது அவனைச் சாளரத்தின் வழியே கண்டுஅவள் அவன் மீது காதல் கொண்டாள்அது அறிந்த அவள் தந்தை அரசனுக்கு பொருள் தந்து அக்கள்வனை மீட்டு அவளுக்கு மணமுடித்து வைத்தார்இருவரும் சிலகாலம் இனிது வாழ்ந்த பின்னர்அவனுக்கு மனைவியின் நகைகளை கொள்ளை அடிக்கும் எண்ணம் வரவேஅவளைத் தனியே அருகில் இருந்த சேரர் மலை உச்சிக்கு அழைத்துச் சென்றான்அவன் நடத்தையில் சந்தேகம் கொண்ட பத்தா அது பற்றி கேட்கஅவன் நகைகளைப் பறித்துக் கொண்டு அவளை மலையுச்சியிலிருந்து தள்ளிவிட இருப்பதைக் கூறினான்அது கேட்ட அவள் சாவதற்கு முன் கடைசியாக அவனை ஒருமுறை சுற்றி வந்து வணங்கவிரும்புவதாகக் கூறி அவனை அம் மலை உச்சியிலிருந்து தள்ளி விட்டாள்பின்னர் அவள் சமண மதத்தை தழுவினாள்அவள் தலைக் கூந்தல் பனங்கருக்கு மட்டையால் மழிக்கப்பட்டதுபின்னர் வளர்ந்த அவள் முடி வளைந்து குண்டலம் போக் காட்சி யளித்ததால் குண்டலகேசி என வழங்கப்பட்டாள்அவள் பல இடங்களில் வாதம் புரிந்துகடைசியில் புத்தரிடம் ஞானத் தெளிவு பெற்று பௌத்தத் துறவியானாள்.

  • இக் காப்பியத்தில் தற்சமயம் 19 பாடல்களே கிடைக்கப் பெற்றுள்ளனஇந் நூல் பௌத்த சமயத்தைச் சார்ந்ததுஇந்நூலாசிரியர் நாதகுத்தனார் ஆவர்இந்நூலின் காலம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு ஆகும்இந்நூலுக்கு குண்டலகேசி விருத்தம் என்கிற பெயரும் உண்டு.


ஐஞ்சிறு காப்பியங்கள்

பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள்ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டுஅறம்பொருள்இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன.

உதயண குமார காவியம்நாககுமார காவியம்யசோதர காவியம்சூளாமணிநீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.

உதயணகுமார காவியம்

வத்தவ நாட்டரசன் சதானிகனுக்கும் அவன் மனைவி மிருகாவதிக்கும் பிறந்த உதயணனின் கதையை விளம்புவது இக்காவியம். 6 காண்டங்களில், 369 விருத்தப்பாக்களால் ஆனது இந்நூல்கந்தியார் (சமணப் பெண்துறவிஒருவரால் இயற்றப்பட்டது.

இந்நூலில் உதயணன் நான்கு மனைவியரை மணந்து இறுதியில் துறவு நிலையை மேற்கொண்டதை அறிய முடிகிறதுகதையமைப்பு சிக்கலானதாகவும்இரு கதைத் தலைவர்களைக் கொண்டும் உள்ளதுபெயர் தான் காவியமே தவிர காவிய இயல்போ ஏற்றமோ நடை நலமோ சிறிதும் இல்லாததுபெருங்கதை என்கிற நூலின் சுருக்கம் என்று கூட இதனைச் சொல்லலாம்இதன் காலம் கி.பி.15 ஆம் நூற்றாண்டு.

நாககுமார காவியம்

இதன் ஆசிரியரும் ஒரு சமணப் பெண்துறவியேபெயர் அறியக் கிடைக்கவில்லை. 5 சருக்கங்களில் 170 விருத்தப்பாக்களில் நாகபஞ்சமியின் கதையை உரைக்கும் சிறுகாப்பியமாகும் இதுமுழுக்க முழுக்க மணத்தையும் போகத்தையும் மட்டுமே பேசுகிறது. 519 பெண்களைக் கதையின் நாயகன் மணக்கிறான்காவிய நயமோ அமைதியோ சிறிதும் இல்லாத நூல் இதுகாலம் கி.பி.16-ஆம் நூற்றாண்டு.

அழிந்து போன நூல் என்று கருதப்பட்ட இதனை சமண அறிஞர் ஜீவபந்து ஸ்ரீபால் அவர்களின் உதவியால் மு.சண்முகம் பிள்ளை பதிப்பித்துள்ளார்.

யசோதர காவியம்

சருக்கங்களில் 320 விருத்தப்பாக்களால் ஆன இதன் ஆசிரியர் பெயரும் தெரியவில்லைஇராசமாபுரத்து அரசன் மாரிதத்தன் உயிர்களைப் பலியிட்டு வந்தான்அவனுக்கு உயிர்க்கொலை தீது என்று உணர்த்துவதற்காக எழுதப்பட்ட காப்பியம் இதுமறுபிறவிகள்சிற்றின்பத்தின் சிறுமைபேரின்பத்தின் பெருமைஒழுக்கத்தின் உயர்வு போன்றவற்றை விவரிப்பது இந்நூல்இது ஒரு வடமொழி நூலின் தழுவல்எளிய நடையும் நயமான பாக்களும் உடைய நூல் இதுகாலம் 13-ஆம் நூற்றாண்டுஇசை காமத்தைத் தூண்டும் என்பதையும்கர்மத்தின் விளைவுகளையும் எடுத்தியம்பும் இக்கதை உத்தரபுராணத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் புட்பந்தர் கதையின் தமிழ் வடிவம் என்றும் இதன் ஆசிரியர் வெண்ணாவலுடையார் வேள் என்றும் கூறுவோர் உண்டு.

நூலின் எளிமைக்கு உதாரணமாக ஒரு பாடல்:

ஆக்குவ தேதெனில் அறத்தை ஆக்குக
போக்குவ தேதெனில் வெகுளி போக்குக
நோக்குவ தேதெனில் ஞானம் நோக்குக
காக்குவ தேதெனில் விரதம் காக்கவே

சூளாமணி

இதன் ஆசிரியர் வர்த்தமான தேவர் எனப்படும்தோலாமொழித் தேவர் 12 சருக்கங்களில் 2131 விருத்தப்பாக்களால் இயற்றப்பட்டது இந்நூல்ஆருகத மகாபுராணத்தைத் தழுவியதுபாகவதத்தில் வரும் பலராமன்கண்னன் போன்று இக்காப்பியத்திலும் திவிட்டன் விசயன் என்னும் இரு வடநாட்டு வேந்தர்களின் வரலாறாக இந்நூல் உள்ளதுபாகவதமும் சூளாமணியும் கதை நிகழ்ச்சிகளில் ஓரளவு ஒத்து உள்ளனசிரவணபெல்கோலா கல்வெட்டில் இந்நூல் பற்றிய குறிப்பு உள்ளது.

இந்நூலின் பாயிரம் தரும் குறிப்பின்படிகி.பி.ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த அவனி சூளாமணி மாறவர்மன் என்னும் பாண்டியன் அவைக்களத்தில் அரங்கேறியது என்று தெரிகிறதுஇது சிறுகாப்பிய வகையில் இருந்தாலும் பெருங்காப்பியப் பண்புகள் மிகுந்த நூலாகக் கருதப்படுகிறது.

நீலகேசி

நீலகேசித் தெருட்டு என்றும் வழங்கப்படும் நீலகேசி காவியம்குண்டலகேசி என்னும் பௌத்த காவியத்துக்கு எதிரான சமண காப்பியமாகும்ஆசிரியர் பெயர் அறியக் கிடைக்கவில்லை. 10 சருக்கங்களில் 894 பாக்களால் ஆனதுகி.பி.பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததுகாப்பியத் தலைவி நீலிபழையனூரில் பேயுருவில் இருந்து முனிச்சந்திரர் என்கிற சமண முனிவரால் பேய்மை நீங்கி அவருக்கே மாணவியாகவும் சமணத் துறவியாகவும் ஆகி பௌத்தர்களை வாதில் வென்ற கதையே இக்காப்பியம்.

கம்பராமாயணம்  தமிழ் இலக்கியத்தில் மிகச் சிறப்பாகப் போற்றப்படும் காப்பிய நூல்களுள் ஒன்று இராமாயணம்இந்நூலின் ஆசிரியர் கம்பர்சமயக் காப்பியங்களுள் இது வைணவ சமயத்தைச் சார்ந்ததுஇந்தக் காப்பியம் தோன்றிய காலம் இரண்டாம் குலோத்துங்க சோழன் ஆண்டகி.பி. 12-ஆம் நூற்றாண்டாகும்சிலர் ஒன்பதாம் நூற்றாண்டு என்றும் கூறுவர்சோழ நாட்டில் திருவழுந்தூரில் உவச்சர் மரபில் தோன்றிய கம்பரை ஆதரித்தவர் திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த சடையப்ப வள்ளல் ஆவார்வான்மீகி முனிவர் வடமொழியில் இராமாயணத்தை இயற்றினார்அதனைதமிழ்ப் பண்பாட்டிற்கு ஏற்ப ஈடும் இணையும் இல்லாமல் கம்பர் தமிழில் தந்த காவியமே இராமாயணமாகும்கம்பர்தம் நூலுக்கு இராமாவதாரம் என்று பெயரிட்டார்.

காப்பிய அமைப்பு

இக்காப்பியம் பால காண்டம்அயோத்தியா காண்டம்ஆரணிய காண்டம்கிட்கிந்தா காண்டம்சுந்தர காண்டம்யுத்த காண்டம் என்னும் ஆறு காண்டங்களைக் கொண்டதுஇந்த ஆறு காண்டங்களின் சிறு பிரிவுகளாக 113 படலங்கள் உள்ளனமொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 10,500 ஆகும்.

(காண்டம் - பெரும்பிரிவுபடலம் - சிறுபிரிவு.)

பெயர்க் காரணம்

இக்காப்பியத்தின் கதை இராமனின் வரலாற்றைப் பற்றித் தெரிவிப்பதால் இராமாயணம் எனப்பட்டதுகம்பர் எழுதியதால் கம்ப இராமாயணம் எனப்பட்டதுஇராம + அயணம் என்ற வடமொழிச் சொற்கள் இணைந்து இராமாயணம் என்றாயிற்று.

காப்பிய நோக்கம்

அடிப்படையில் அறமும்சமயமும் காப்பியத்தின் பொருளாக அமைகின்றனமனிதர் யாவருக்கும் பயன் தரும் ஒழுக்க முறைகளையும் பண்பாட்டினையும் குறிக்கோளினையும் ஆட்சிச் சிறப்பினையும் விளக்கும் அருமையான இலக்கியமாகத் திகழும் சிறப்புடையது கம்பராமாயணமாகும்.

காப்பியச் சிறப்பு

இந்நூல் நடையில் நின்றுயர் நாயகனாக விளங்கும் இராமன்தெய்வநிலையில் இருந்து இறங்கி மானுட நிலையில் மனிதனாக வாழ்ந்து காட்டிய தன்மைகளையும்சிறப்புகளையும் விளக்கும் ஓர் ஒப்பற்ற நூலாகும்இந்நூலில் கம்பர் வலியுறுத்தும் நீதியும் அறனும் மக்கட் சமுதாயம் அனைத்திற்கும் பொதுவானவை ஆகும்.

காப்பியத் தலைவன்

இலக்கணப்படிகாப்பியம் தன்னேரில்லாத தலைவனைக் கொண்டிருத்தல் வேண்டும்அவ்வகையில் கம்பராமாயணத்தில் இராமனே தன்னிகரில்லாத் தலைவனாகப் போற்றப்படுகின்றான்.

வைணவக் காப்பியம்

திருமாலின் மானுட அவதாரமே இராமாவதாரமாகும்இந்நூலில் வைணவ சமயக் கருத்துகள் விரவிக் கிடக்கின்றனமேலும் உயர்ந்த இலட்சியங்களை முன்னிறுத்தி இராமனை மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு உயர்த்திக் காட்டும் இலக்கியமே கம்பராமாயணமாகும்பல உயர்ந்த குறிக்கோள்களைக் கொண்டு பாடப்பட்ட சமய நூலாக இந்நூல் விளங்குகிறது எனலாம்.

நீதி உணர்த்தும் காப்பியம்

இலக்கியச் சிறப்பு

காப்பியத்தில் கதைப் பாத்திரங்களின் இயல்புக்கு ஏற்றவாறும் சூழலுக்கு இசைந்தவாறும் தமிழ்ப் பண்பாட்டிற்கு ஏற்றவாறும் உரிய சந்தங்களோடு (சந்தம் - ஓசை நயம்அமைத்துக் கம்பர் பாடியிருப்பதால் கற்போர் உள்ளத்தில் நன்கு பதிந்து விடுகின்றது.

கற்பார் இராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ என்னும் கருத்திற்கு ஏற்பகம்பராமாயணம் உயர் கருத்துகளைத் தெரிவிப்பதாக விளங்குகின்றதுமேலும் வான்மீகி இராமாயணத்தையே விஞ்சும் சுவையுடைய காப்பியமாகக் கம்பர் படைத்துள்ளார் என்று .வே.சுஐயர் போற்றியுள்ளார்.

கல்வியில் பெரியர் கம்பர் என்றும் கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும் என்றும் வழங்கும் மொழிகள் அவரது கவித்திறனைப் பறை சாற்றும்பாரதியார் தம் பாடலில் புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு என்று போற்றியுள்ளார்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லைஉண்மை வெறும் புகழ்ச்சியில்லை” என்றும் பாராட்டியுள்ளார் பாரதியார்.

கதைப் பாத்திரங்களை மனிதப் பாங்கின் அடித் தளத்திலிருந்து பேச வைத்துஉணர்ச்சியை வெள்ளம் போலப் பெருகி ஓட விட்டுப் பாத்திரங்களைப் படைத்துக் காட்டுகின்ற தன்மையால் கம்பர் உலகப் பெருங்கவிஞர்களுள் ஒருவராகத் திகழ்கின்றார்உலக மகாகவிகவிச்சக்கரவர்த்தி என்றும் தமிழறிஞர்களால் சிறப்பிக்கப்படுகின்றார்.

கிறிஸ்துவ இலக்கியம்

தமிழகம் சங்க காலத்திற்கும் முற்பட்ட காலத்திலிருந்தே யவனர் என்னும் ஐரோப்பபிபய நாட்டவருடன் வாணிக உறவு கொண்டு விளங்கியதைச் சங்க இலக்கிகயங்கள் கூறுகின்றனயவனரைத் தொடர்ந்து இஸ்லாமியர் அரபு நாடுகளிளலிருந்து வாணபம் மசெய்தனர்பிறகு போர்ச்சுகல்டச்சுஆங்கிலேயர்டேனிஷ் பிரான்னசு போன்ற பிற ஐரோப்பியய நாபட்டவரும் தமிழகத்திற்கு வந்தனர்வணகத் தொடர்போடு நில்லாமல் சமயயத்தையும் பரப்ப முற்பட்டனர்சமய பிரசாரத்திற்காகக் கிறிஸ்துவ பபாதிரிமமார்களையும்ம உடன் னஅழைத்து வந்தனர்பதிரிமார்கள் கிறிஸ்துவத்தைப் பரப்பும் தொண்டினைச் செய்தனர்.

சங்க காலத்தில் சிறந்திருந்த சைவ வைணவ சமயங்கள் சங்கம் மரவிய காலத்தில் களப்பிரர் வருகையால் சிறப்புக் குன்றிப் போக சமண பௌத்த சமயங்கள் செல்வாக்குப் பெற்றனமீண்டும் பக்தி இயக்கத்தால் பல்லவர் காலேம்ம முதல் நாயக்கர் காலம் வரை சைவ வைணவ சமயங்களின் செல்வாக்கு மிகுந்திருந்ததுஇஸ்லாமியர் ஆட்சியால் இஸ்லாமியம் பரவியதுஅடுத்து ஐரோப்பியர் ஆட்சியால் அவர்களின் கிறிஸ்துவம் பரவியதுமதம் மற்றும் ஆட்சி காரணத்தால் நம் மொழியைக் கற்கத் தொடங்கினர்தமிழின் இனிமையில் தம்மை மறந்து தமிழுக்குத் தொண்டாற்றினர்தம்மை அறியாமல் தமிழுக்குத் தொண்டாற்றினர்ஆனனால் மதமாற்றம் செய்யப் பெற்ற கிறிஸ்தவர்கள் அறிந்தே தொண்டு செய்தனர்இவர்களுள் ஜி.யு.போப்ராபர்ட்-டி-நொபிலிவீரமாமுனிவர்சீகன் பால்கு ஐயர்எல்லீஸ் துரைகால்டுவெல் போன்ற மேல்நாட்டு கிறிஸ்துவர்களும் வேதநாயகம் பிள்ளைவேதநாயக சாஸ்திரிசாமுவேல்பிள்ளைகிருட்டிணப்பிள்ளை போன்ற தமிழ்க் கிறிஸ்துவர்களும் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

 டாக்டர் ஜி.யு.போப்

தமிழை முறையாகக் கற்ற போப் அவர்கள், 60 ஆண்டுகட்கும் மேலாகத் தமிழ்த்தொண்டு புரிந்தார்தனது கல்லறைமேல் நான் ஒரு தமிழ் மாணவன் என்று பொறிக்கப்பட வேண்டும் என விழைந்தவர்ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து தமிழை உலகறியச் செய்தவர்மேல்நாட்டு அறிவுத் துறைகளான உளநூல்தத்துவ நூல்கணிதம்அளவை நூல் (Logic) என்பவற்றை முதன் முதலில் தமிழில் கற்பித்தவர் இவரேதிருக்குறள்திருவாசகம்நாலடியார் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்புறநானூறுபுறப்பொருள் வெண்பா மாலை என்ற நூல்களின் சில பாடல்களையும்சிவஞான போதத்தையும் மொழி பெயர்த்தார்பல ஏடுகளில் தமிழ் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினார்தோடர் மொழிதுளுமொழி கற்று அவற்றின் இலக்கணத்தை வெளியிட்டார்தமிழ் இலக்கணத்தை Elementary Tamil Grammar என 3 பாகமாக எழுதினார்தமிழ்ப் புலவர்களையும்தமிழ்த் துறவிகளையும் பற்றி ஆங்கிலத்தில் நூல்கள் எழுதினார்.

 ராபர்ட் -டி-நொபிலி

இத்தாலி நாட்டில் பிறந்து, 1606இல் தமிழ்நாடு வந்து தமிழும் வடமொழியும் கற்றார் நொபிலிகாவியும் பூணூலும் அணிந்து மரக்கறி உணவுண்டுதத்துவ போதகர் என்று தம் பெயரை மாற்றிதம்மை இத்தாலியப் பிராமணர் என்று கூறிக் கொண்டார்நூற்றுக்கணக்கான உயர் சாதி இந்துக்களைக் கிறித்தவராக்கினார்திருமலை நாயக்கரின் நண்பரான பின்சில ஆண்டுகள் கழித்து இலங்கையும் சென்று வந்தார். 1647இல் மயிலாப்பூரில் மறைந்தார்.

முதல் உரைநடை நூலைத் தமிழில் எழுதிய பெருமை இவரையே சாரும்சமயச் சார்புடையவடசொல் கலந்த மேனாட்டு மொழி கலந்த ஒரு கொச்சை மொழியில் பல நூல்கள் எழுதினார்அச்சேறாத காரணத்தால் அவை அழிந்தனபிற மதங்களைக் கண்டிப்பது இவர் காலத்தில் நிலவியதை அறிகிறோம்ஞானோபதேச காண்டம்மந்திர மாலைஆத்தும நிர்ணயம்தூஷணதிக்காரம்சத்திய வேத இலட்சணம்சகுண நிவாரணம்பரமசூட்சும அபிப்ராயம்கடவுள் நிர்ணயம்புனர்ஜென்ம ஆட்சேபம்நித்ய ஜீவன சல்லாபம்தத்துவக் கண்ணாடிஏசுநாதர் சரித்திரம்தவசுச் சதகம்ஞானதீபிகைநீதிச்சொல்அநித்திய நித்திய வித்யாசம்பிரபஞ்ச விரோத வித்யாசம் முதலிய 17 நூல்களை இயற்றியுள்ளார்.

வீரமாமுனிவர்

இவரின் இயற்பெயர் - கான்ஸ்டான்டின் ஜோசப் பெஸ்கி constantine Joseph Beschi). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார்கிறித்தவ மதத்தைப் பரப்பும் க்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபைப் குருவானபின், 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார்இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும்முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன்இயேசுக் கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணிஎன்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.

சீகன் பால்கு

1682-ம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் பிறந்தவர் பார்த்தலோமியோஸ் சீகன்பால்குஇவர் டென்மார்க் நாட்டில் உள்ள திருச்சபை சார்பில்கிறிஸ்தவ மத பிரசாரம் செய்து வந்தார் பொதுமக்கள் உதவியுடன் தமிழ் மொழியை 11 நாளில் கற்றுக் கொண்டார்பின்பு அவர் 17 ஆயிரம் சொற்களை கொண்ட தமிழ் அகராதியை விரைவில் உருவாக்கினார்பிறகு பைபிளின் புதிய ஏற்பாட்டை தமிழில் மொழி பெயர்த்தார்.

 

1710-ம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து தமிழ் அச்சு இயந்திரம் கொண்டு வர ஏற்பாடு செய்தார்பொறையாறு அருகே ஓர் இடத்தில் காகித பட்டறை நிறுவிமரக்கூழ் மூலம் காகிதம் செய்யும் தொழிற்சாலையை தொடங்கினார்இன்றும் இந்தப் பகுதி "கடுதாசிப் பட்டறைஎன்றே அழைக்கப்படுகிறது.

 

1715-ம் ஆண்டு தமிழ் மொழியில் புதிய ஏற்பாட்டை வெளியிட்டார்சீகன் பால்கு முயற்சியால் இந்தியாவில் முதன் முதலில் தமிழ் அச்சுகள் உருவானதுசிறப்பு அம்சமாகும்.

எல்லீஸ் துரை

தமிழ்வடமொழி இரண்டையும் முறையாகக் கற்ற இவர் எல்லீசர் என்றும் அழைக்கப் பெறுகிறார்சென்னையில் வருவாய் வாரியச் செயலராக இருந்துகாணியாட்சி முறையும் வேளாண் சீர்திருத்தமும் கண்டவர்முத்துச்சாமி பிள்ளை என்பவரைக் கொண்டு வீரமாமுனிவரின் நூல்களை எல்லாம் தேடச் செய்தார்வீரமாமுனிவர் வரலாற்றைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார்திருக்குறளின் முதல் 13 அதிகாரங்கட்கு முதன்முதலில் உரையெழுதினார்கால்டுவெல்லுக்கு முன்பேதிராவிட மொழிகளைக் கற்றுத் திராவிட மொழிகள் வடமொழியினின்றும் வேறானவைகிளை மொழிகள் அல்லதனித்து இயங்குவன என்ற உண்மைக் கருத்துகளை வெளியிட்டார்.

தமிழ்க் கிறித்தவர்கள்

மேலை நாட்டுக் கிறித்தவர்கள் குறிப்பாக ஐரோப்பியர்கள் ஆற்றிய தமிழ்த் தொண்டைப் போல்தமிழ்நாட்டுக் கிறித்தவர்களும் தம் படைப்பால் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தினர்.

• வேதநாயகம் பிள்ளை

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ் கற்று மாயூரத்தில் முனிசீப்பாகப் பணியாற்றினார்நீதிச் சட்டங்களை முதன்முதலில் தமிழில் எழுதியவர் இவரேபிரதாப முதலியார் சரித்திரம் என்ற முதல் தமிழ் நாவலையும் எழுதியவர் இவரேபின் சுகுண சுந்தரி சரித்திரம் என்ற நாவலும் எழுதினார்கடிதம் எழுவதுபோல் சில தனிப்பாடல்கள் எழுதியுள்ளார்நலுங்குப்பாடல் வகையிலும் அங்கத இலக்கிய வகையிலும் பாடல் புனைந்துள்ளார்சாதிவேறுபாட்டை வெறுத்த இவர்பெண்கள் முன்னேற்றம்பெண்கல்வி என்பதிலும் செய்யுள்உரைநடை என்பதிலும் மகாகவி பாரதிக்கு முன்னோடியாகத் திகழ்கிறார்தாயுமானவரைப் போன்றே சமரசத்தை விரும்பிசர்வசமயச் சமரசக் கீர்த்தனை பாடினார்நீதி நூல்பெண்மதி மாலைதேவமாதா அந்தாதிதிருவருள் அந்தாதிதிருவருள் மாலைபெரியநாயகி அம்மாள் பதிகம்சத்திய வேதக் கீர்த்தனை என்ற நூல்களைப் பாடினார்அக்காலத்தில்வழக்குகளில் அறத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நேர்மையான எண்ணம் கொண்டவர்இலஞ்சம் வாங்கிப் பிழைப்பவர்களை, ‘ஏதுக்கோ வாங்குகிறீர் இலஞ்சம் ....’ என்ற பாட்டில் கடுமையாகச் சாடுகிறார்இவர் தம் பாடல்களில் வடமொழிச் சொற்கள் பல சர்வ சாதாரணமாய்க் கலந்து விளங்குகின்றன.

போதக யூரோப்பு மாதர்களைக்கண்டு 
பொங்கிப் பொறாமை கொண்டோமே என்றும் 
பேதம் இல்லா இந்தியா தனில்நாங்கள் 
பிறந்தென்ன லாபம் கண்டோமா 
நாதக் கல்விக்கு நகை எந்தமூலையே 
நாங்கள் விரும்போம் நவரத்ன மாலையே 
வேதநாயகன்செய் பெண்மதி மாலையே 
வேண்டினோம் தாரும் விடோம் உங்கள் காலையே

(சர்வசமயச் சமரசக் கீர்த்தனைகள் - வேதநாயகம் பிள்ளை -கேளும் பூமான்களே என்ற 5 - ஆம் பாடல்)

என்று கல்வி வேண்டி ஒரு பெண் பாடுவதாக வேதநாயகம் பிள்ளை பாடியுள்ளார்.

• H.A கிருஷ்ணப் பிள்ளை

வைணவ வேளாளர் மரபில் தோன்றிக் கிறித்துவராக மாறிகிறித்தவக் கம்பன் என்று புகழப் பெறுபவர்ஜான்பன்யன் என்பவர் எழுதிய Pilgrims Progress என்ற நூலை இரட்சண்ய யாத்திரீகம் எனத் தமிழ்ப்படுத்தினார்இவர் பாடல்கள் ஆழ்வார்நாயன்மார் பாடல்கள் போல் உருக்கமாக அமைந்துள்ளனகிறித்தவர்களின் தேவாரம்என்றழைக்கப் பெறும் இரட்சண்ய மனோகரம் என்ற நூலையும்இரட்சண்ய சமய நிர்ணயம்இரட்சண்யக் குறள்போற்றித் திருஅகவல் என்ற நூலையும் பாடினார்இலக்கணச் சூடாமணிகிறித்தவரான வரலாறு என்ற உரைநடை நூல்களையும் காவிய தர்ம சங்கிரகம் என்ற தொகுப்பு நூலையும் எழுதினார்கால்டுவெல்லின்பரதகண்ட புராதனம் என்ற நூலையும் வேதமாணிக்க நாடாரின் வேதப் பொருள் அம்மானை என்ற நூலையும் பதிப்பித்தார்பெர்சிவல் பாதிரியாருக்குத் தமிழ் கற்பித்தார்தினவர்த்த மானியின் துணை ஆசிரியராகவும் திகழ்ந்தார்.

• வேதநாயகம் சாத்திரியார்

சரபோசி மன்னரின் ஆஸ்தான வித்துவானாகஅரசவைப் புலவராகத் திகழ்ந்த சாத்திரியார் கிறித்தவப் பாக்கள் பல்லாயிரம் இயற்றிஆஸ்தான வித்துவான் பட்டம் பெற்றவர்கிறித்தவப் பாடல்களைத் தமிழிசையுடன் இயைத்து இயற்றி முதன் முதலில் வழிகோலியவர் இவரேவின்சுலோவுடன் இணைந்து குருட்டுவழி என்ற நூலையும்அக்காலத்திலே 100 வராகன் பரிசு பெற்ற நோவாவின் கப்பல் என்ற நூலையும் பாடினார்சரபோசி மன்னர் வேண்டியும் ‘கிறித்துவைத் தவிரப் பாடேன்!’ என்று கூறியவர்பெத்லகேம் குறவஞ்சிசென்னைப் பட்டணப் பிரவேசம்ஞான ஏற்றப்பாட்டுஞானத்தச்சன் நாடகம்ஞானக் கும்மிஆதியானந்தம்பராபரன்மாலைஞானஉலாஞான அந்தாதி முதலான 52 நூல்களைப் பாடியுள்ளார்தமிழகப் பக்தி நெறிப்படி கர்த்தரை வழிபட வழிகாட்டியவர்.

இசுலாமிய இலக்கியம்

இசுலாமியத் தமிழிலக்கியம்

தமிழகத்தில் 17, 18ஆம் நூற்றாண்டில் நவாபு ஆட்சி நிலவியதுஅரசு மொழியாகப் பாரசீகமும் உருதும் அமைந்தனகுர்ஆன் போன்ற மத நூல்களைத் தெய்வ மொழியாகிய அரபியிலேயே படிக்க வேண்டும் என்ற நம்பிக்கையும் இருந்ததுஎனவேவேதத்தைப் படிப்பதற்கு அரபு மொழியையும் அரசியலை நடத்த உருது-பாரசீக மொழிகளையும் முஸ்லீம் மக்கள் பயின்றார்கள்” என்கிறார் மது.விமலானந்தம்மதச் சார்பான நூல்களில் மிகுதியான அரபுச் சொற்கள் இதனால் கலந்தனதமிழிலும் உருதுஅரபிச் சொற்கள் கலந்தனஅரேபியபாரசீக மொழிகளைக் கற்ற இசுலாமியத் தமிழ்ப் புலவர்கள் அம்மொழி இலக்கிய வகைகளைக் கற்றுத் தமிழில் அவ்வாறே படைத்தனர்இதனால் இசுலாமியத் தமிழிலக்கியம் புது வடிவம் பெற்றது.

• அரபி மொழியிலிருந்து பெற்ற வடிவங்கள்

படைப்போர்முனஜாத்துகிஸ்ஸாமசலாநாமா என்ற இலக்கிய வகைகளைத் தமிழில் முதன்முதலில் இசுலாமியப் புலவர்கள் அறிமுகம் செய்தனர்.

பரணி இலக்கியம் போன்று இஸ்லாமியருக்கும் ஏனையோருக்கும் நடந்த போரைப் பற்றிப் பாடும் இலக்கிய வகை ’படைப்போர்’ ஆகும்ஐந்து படைப்போர்செய்தத்துப் படைப்போர்உசைன் படைப்போர் என்பன அவற்றுள் சில.

அல்லாவின் அருள் நாடி விண்ணப்பிப்பது ‘முன ஜாத்து’ ஆகும்செய்யது முகமது ஆலிம் இயற்றியது ’முனஜாத்து மாலை’ ஆகும்.

கதை கூறுதல் என்ற பொருளில் அமைந்த கிஸ்ஸா வகையில் மதார்சாகிபு புலவர் ’யூசுபுநபி கிஸ்ஸாவையும்அப்துல்காதர் சாகிபு ’செய்த்தூன் கிஸ்ஸா’ வையும் பாடியுள்ளனர்.

மசலா என்பது கேள்விகள் அல்லது பிரச்சினை என்று பொருள்படும்.

மசலா இலக்கியத்தைபரிமளப் புலவர் ஆயிரம் மசலா என்ற நூலாகவும் செய்து அப்துல் காதிறு லெப்பை வெள்ளாட்டி மசலா என்ற நூலையும் பாடியுள்ளனர்நூறு மசலாவின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

கதைநூல்வரலாறு எனப் பொருள்படும் நாமா என்ற இலக்கியத்தை மிஃராஜ் நாமா என்ற நூலாக மதாறு சாகிபு புலவரும்நூறு நாமாவை செய்யதகம்மது மரைக்காயரும் பாடியுள்ளனர்நாமா என்பது பாரசீக இலக்கிய வகையாகும்.

• தமிழ் நாட்டுப்புறப் பாடல் வடிவங்கள்

பாமரரும் படித்து இன்புறும் வகையில் இனிய எளிய சொற்களைக் கொண்டுதமிழரிடையே காலம் காலமாக வழங்கி வருகின்ற நாட்டுப்புறப் பாடல் மரபையும் கொண்டு இசுலாமியப் புலவர்கள் இலக்கியம் இயற்றியுள்ளனர்ஏசல்சிந்துகும்மிதாலாட்டுகீர்த்தனைதெம்மாங்குஊஞ்சல் பாட்டுதோழிப் பெண்பாட்டு எனப் பலவகைகளில் அவர்கள் இலக்கியம் படைத்தனர்.

காதல் பற்றியும் சமயம் பற்றியும் பள்ளு இலக்கியத்தில் ஏசல் என்ற சிறுபகுதி அமையும்அதைப் பின்பற்றிச் சமயக் கோட்பாடுகளை விளக்குவனவாய் நபிகள் நாயகம் பேரில் ஏசல் கண்ணிகள்முகியத்தீன் ஆண்டவர் பேரில் தாய்-மகள் ஏசல் என்பன இயற்றப் பெற்றன.

காவடிச் சிந்து மெட்டமைப்பில் நவநீத ரத்னாலங்காரச் சிந்துபூவடிச் சிந்து என்பன பாடப் பெற்றன.

மாப்பிள்ளை லெப்பை ஆலிம் சீவிய சரித்திரக் கும்மிசெய்கு முஸ்தபா ஒலியுல்லா கும்மிதிருக்காரண சிங்காரக் கும்மி என்பன கும்மி அமைப்பில் பாடப் பெற்றன.

அசலானிப் புலவர்ஞானத் தாலாட்டுசுகானந்தத் தாலாட்டுமணிமந்திரத் தாலாட்டுமீறான் தாலாட்டுபாலகர் தாலாட்டு என்பனவற்றை இயற்றியுள்ளார்.

சீறாக் கீர்த்தனைஆதி நூதன அலங்காரக் கீர்த்தனை என்ற இரண்டு கீர்த்தனை நூல்களும் மென்னான ஆனந்தக் களிப்பு என்ற நூலும் இந்த நூற்றாண்டில் இயற்றப் பெற்றன.

• ஒழுக்க நூல்

மனிதர்களின் ஒழுக்கம்பின்பற்ற வேண்டியவைசெய்ய வேண்டிய கடமைகள்சான்றோரால் விலக்கப் பெற்றவை முதலியவற்றை விளக்கும் நூல்களே ஒழுக்க நூல்களாகும்அவ்வகையில ஆசாரக் கோவை என்ற நூலை அப்துல் மஜூதும் திருநெறி நீதம் என்ற நூலை பீர்முகம்மது சாகிபுவும் பாடியுள்ளனர்.

 

யாப்பு இலக்கணமும் அதன் உறுப்புகளும்

செய்யுளுக்குரிய உறுப்புகளைக் கொண்டு செய்யுள் அமைக்கும் இலக்கணத்தை விளக்குவதால் இது யாப்பிலக்கணம் எனப்படும்.

யாப்பின் உறுப்புகள் ஆறு வகைப்படும்

1.எழுத்து

2.அசை

3.சீர்

4.தளை

5.அடி

6.தொடை

1.எழுத்து

தமிழ் எழுத்துகளை யாப்பிலக்கண முறையில் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1.குறில் ()

2.நெடில் (கா)

3.ஒற்று (க்என்பனவாம்.

தொல்காப்பியர் எழுத்துகளை குற்றியலுகரம்குற்றியலிகரம்ஆய்தம் என்று மூன்றாகப் பிரிப்பார்நன்னூல் ஆசிரியர் சார்பெழுத்துக்கள் எனப் பத்து வகைகளாகச் சுட்டுகின்றார்.

2.அசை

குறில்நெடில்ஒற்று என்னும் மூவகை எழுத்துகளால் அசைக்கப்படுவது அசை எனப்படும்எழுத்துகள் ஒன்று சேர்ந்து வருவது அசை (சொல்ஆகும்அசை இரண்டு வகைப்படும்.

1.நேர் அசை

2. நிரை அசை

நேரசை

1.குறில் தனித்து வருதல் – 

2.குறிலும் ஒற்றும் இணைந்து வருதல் – கல்

3.நெடில் தனித்து வருதல் – பா

4.நெடிலும் ஒற்றும் இணைந்து வருதல் – பால்

நிரையசை

1.இரண்டு குறில்கள் இணைந்து வருதல் – பல

2.இரண்டு குறில்கலோடு ஒற்றும் இணைந்து வருதல் – பலர்

3.குறிலும் நெடிலும் இணைந்து வருதல் – படா

4.குறிலும் நெடிலும் ஒற்றும் இணைந்து வருதல் -படாம்

குறிப்பு

§  * முதல் எழுத்து நெடில் வந்தால் தனித்துதான் வரும்.

§  * ஓற்றுகள் அசையாகாது. ஓன்றுக்கும் மேற்பட்ட ஒற்றுகள் சேர்ந்து வரினும் அவை ஒரு ஒற்றாகவே கருதப்படும். (உம்-ங்ங்ங்ங்)

§  * இரண்டு நெடில் எழுத்துக்கள் சேர்ந்து வராது. அப்படி வந்தால் பிரிக்க வேண்டும்.

§  * நெடில் எழுத்தை அடுத்து குறில் சேர்ந்து ஓர் அசையாக வராது.

3.சீர்

செய்யுளில் ஓர் அசை தனியாகவோபல அசைகள் சேர்ந்தோ அமைந்து வருவது சீர் எனப்படும்அசைகள் ஒன்று சேர்ந்து வரவது சீர் ஆகும். (சீர்ஒழுங்கு). சீர் நான்கு வகைப்படும்அவை,

1.ஓரசைச்சீர்

2.ஈரசைச்சீர்

3.மூவசைச்சீர்

4.நாலசைச்சீர்

1.ஓரசைச்சீர்

அசைச்சீர் என்ற மற்றொரு பெயரும் உண்டுவெண்பாவின் ஈற்றில் நேரசை அல்லது நிரையசையென தனித்து நின்று சீராய் அமையும்இவை நாள்மலர்காசுபிறப்பு என்ற வாய்ப்பாட்டைக் கொண்டு முடியும்.

நேர் – நாள்

நிரை – மலர்

நேர் + நேர் =  நேர்பு – காசு

நிரை + நேர் = நிரைபு – பிறப்பு

2.ஈரசைச்சீர்

இயற்சீர்ஆசிரிய உரிச்சீர் என வேறுபெயர்கள் உண்டுநேர்,நிரை என்னும் அசைகள் இரண்டிரண்டாக இணைந்து வரும் சீர்கள் ஈரசைச்சீர்கள் எனப்படும்வெண்பாஆசிரியப்பாவில் வரும்இவை

மாச்சீர் (தேமா,புளிமா),

விளச்சீர் (கூவிளம்,கருவிளம்என இரண்டு வகைப்படும்.

அசையின் அமைப்பு வாய்ப்பாடு

நேர் +நேர் = தேமா

நிரைநேர்  = புளிமா

நேர் + நிரை = கூவிளம்

நிரை + நிரை = கருவிளம்

3.மூவசைச்சீர்

ஈரசைச்சீர்கள் ஒவ்வொன்றின் இறுதியிலும் நேர் என்னும் அசையைத் சேர்த்தால் காய்ச்சீர் நான்கு இடம்பெறும்இதனை வெண்சீர்,வெண்பா உரிச்சீர் என அழைக்கப்படும்.

நேர் +நேர் + நேர் – தேமாங்காய்

நிரை +நேர் +நேர் – புளிமாங்காய்

நேர்நிரை +நேர் – கூவிளங்காய்

நிரை +நிரைநேர் – கருவிளங்காய்

மேற்கூறிய நான்கும் நேரீற்று மூவசைச்சீர் என்று அழைக்கப்படுகிறது.

ஈரசைச்சீர்கள் ஒவ்வொன்றின் இறுதியிலும் நிரை என்னும் அசையைத் சேர்த்தால் கனிச்சீர் நான்கு இடம்பெறும்இதனை வஞ்சிச்சீர்வஞ்சி உரிச்சீர் என அழைக்கப்படும்.

நேர் +நேர் + நிரை – தேமாங்கனி

நிரைநேர்நிரை – புளிமாங்கனி

நேர்நிரை +நிரை – கூவிளங்கனி

நிரை +நிரை +நிரை – கருவிளங்கனி

மேற்கூறிய நான்கும் நிரையீற்று மூவசைச்சீர் என்று அழைக்கப்படுகிறதுமூவசைச்சீர்களாகிய காய்ச்சீர்கள் நான்கும்கனிச்சீர்கள் நான்கும் சேர்த்து மொத்தம் எட்டு வகைப்படும்.

4.நாலசைச்சீர்

பொதுச்சீர் என்ற வேறுபெயரும் உண்டுமூவசைச்சீர் எட்டுடன் நேரசையைச் சேர்க்க வேண்டும்அவை தண்பூநறும்பூ எனக் கொண்டு முடியும்இவை எட்டும் பூச்சீர் என்றும்நேரீற்றுப் பொதுச்சீர் எனவும் வழங்கப்பெறும்.

பூச்சீர் எட்டின் அமைப்பு வாய்ப்பாடு

நேர் +நேர் +நேர் +நேர் – தேமாந்தண்பூ

நிரை +நேர் +நிரை +நேர் -புளிமாந்தண்பூ

நேர் +நிரை +நிரைநேர் -கூவிளந்தண்பூ

நிரை +நிரை +நிரை +நேர் -கருவிளந்தண்பூ

நேர் +நேர் +நேர் +நேர் -தேமாநறும்பூ

நிரை +நேர் +நிரைநேர் -புளிமாநறும்பூ

நேர் +நிரை +நிரை +நேர் -கூவிள நறும்பூ

நிரை +நிரை +நிரை +நேர் -கருவிள நறும்பூ

மூவசைச்சீர் எட்டுடன் நிரையசையைச் சேர்க்க வேண்டும்அவை தண்ணிழல்நறுநிழல் எனக் கொண்டு முடியும்இவை எட்டும் நிழற்சீர்நிரையீற்றுப் பொதுச்சீர் என வழங்கப்பெறும்.

நிழற்சீர் எட்டின் அமைப்பு வாய்ப்பாடு

நேர் +நேர் +நேர் +நிரை -தேமாந்தண்ணிழல்

நிரை +நேர் +நிரைநிரை -புளிமாந்தண்ணிழல்

நேர் +நிரை +நிரை +நிரைகூவிளந்தண்ணிழல்

நிரை +நிரை +நிரை +நிரை -கருவிளந்தண்ணிழல்

நேர்நேர் +நேர் +நிரை -தேமாநறுநிழல்

நிரை +நேர் +நிரைநிரை -புளிமாநறுநிழல்

நேர் +நிரை +நிரைநிரை -கூவிளநறுநிழல்

நிரை +நிரை +நிரை +நிரை -கருவிளநறுநிழல்

இவ் பூச்சீர் எட்டும்நிழற்சீர் எட்டும் ஆகிய பதினாறும் நாலசைச்சீர்களாக கருதப்படும்.

4.தளை

சீர்கள் ஒன்றோடொன்று கட்டுப்பட்டு நிற்கும் நிலை தளை எனப்படும்சீர்கள் ஒன்றி வருவது தளை ஆகும். (தளை – கட்டு). நின்ற சீரின் ஈற்றசையும்வருஞ்சீரின் முதலசையும் ஒன்றியும் ஒன்றாமலும் வருவது தளை எனப்படும்தளை கூறும்போது முதல்சீர் இறுதி அசையின் வாய்ப்பாட்டோடு அடுத்த சீரின் முதல் அசையைச் சேர்த்துக் கூற வேண்டும்தளை ஏழு வகைப்படும்அவை,

1.நேரொன்றாசிரியத்தளை

2.நிரையொன்றாசிரியத் தளை

3.இயற்சீர் வெண்டளை

4.வெண்சீர் வெண்டளை

5.கலித்தளை

6.ஒன்றிய வஞ்சித்தளை

7.ஒன்றா வஞ்சித்தளை

1.நேரொன்றாசிரியத்தளை: ( மா முன் நேர் )

நிலைமொழியின் ஈற்றசை ‘மா’ என முடிந்து வரும்மொழியின் முதலசை ‘நேர்’ என வருமாயின் அது நேரொன்றாசிரியத்தளை எனப்படும்.

(உம்பரிசில் வென்றான்

பரிசில் = நிரை நேர் = புளிமா , வென்றான் =நேர் நேர் = தேமா

2.நிரையொன்றாசிரியத்தளை: ( விள முன் நிரை )

நிலைமொழியின் ஈற்றசை ‘விளம்’ என முடிந்து வரும்மொழியின் முதலசை ‘நிரை’ என வருமாயின் அது நிரையொன்றாசிரியத்தளை எனப்படும்.

(உம்மாம்பழம் விழுந்தது

மாம்பழம் – நேர் நிரை – கூவிளம்விழுந்தது – நிரை நிரை – கருவிளம்

3.இயற்சீர் வெண்டளை: (மா முன் நிரைவிள முன் நேர்)

நிலைமொழியின் ஈற்றசை ‘மா’ என முடிந்து வரும்மொழியின் முதலசை ‘நிரை’ என வந்தாலும்நிலைமொழியின் ஈற்றசை ‘விளம்’ என முடிந்து வரும்மொழியின் முதலசை ‘நேர்’ என வந்தாலும் அது இயற்சீர் வெண்டளை எனப்படும்.

(உம்கன்று குதித்தது – மா முன் நிரை

பணிவுடன் சென்றான் – விள முன் நேர்

4.வெண்சீர் வெண்டளை : (மா முன் நேர்)

நிலைமொழியின் ஈற்றசை ‘காய்’ என முடிந்து வரும்மொழியின் முதலசை ‘நேர்’ என வருமாயின் அது வெண்சீர் வெண்டளை எனப்படும்.

(உம்கல்விக்கு கம்பன் – மா முன் நேர்

5.கலித்தளை: (மா முன் நிரை)

நிலைமொழியின் ஈற்றசை ‘காய்’ என முடிந்து வரும்மொழியின் முதலசை ‘நிரை’ என வருமாயின் அது கலித்தளை எனப்படும்.

(உம்வள்ளுவரின் திருக்குறள் – மா முன் நிரை

6.ஒன்றிய வஞ்சித்தளை : ( கனி முன் நிரை)

நிலைமொழியின் ஈற்றசை ‘கனி’ என முடிந்து வரும்மொழியின் முதலசை ‘நிரை’ என வருமாயின் அது ஒன்றிய வஞ்சித்தளை எனப்படும்.

(உம்செந்தாமரை முகத்துடையாள்

7.ஒன்றா வஞ்சித்தளை : (கனி முன் நேர் )

நிலைமொழியின் ஈற்றசை ‘கனி’ என முடிந்து வரும்மொழியின் முதலசை ‘நேர்’ என வருமாயின் அது ஒன்றா வஞ்சித்தளை எனப்படும்.

(உம்மாமுனிவரே அகத்தியர்

5.அடி

சீர்கள் பல தொடர்ந்து வந்து ஓர் அடியாக அமைந்து செய்யுளுக்கு உறுப்பாவது அடி எனப்படும்ஓர் அடியில் சீர்கள் தொடர்ந்து வருவது சீர் அடிகள் ஆகும்அடிகள் ஐந்து வகைப்படும்அவை,

1.குறளடி

2.சிந்தடி

3.அளவடி

4.நெடிலடி

5.கழிநெடிலடி

1.குறலடி :

இரண்டு சீர்களால் ஆன அடிபல சீர்களால் ஆன இரண்டு அடிகள் ஆனது குறளடிகள் எனப்படும்இவ்வடிகள் வெண்பாவில் பயின்று வரும்.

(உம்) “இனிய உளவாக இன்னாது கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று” – இரண்டு அடிகளால் ஆன குறலடி.

காயும் கனியும்” – சீர்களால் ஆன குறலடி.

2.சிந்தடி :

மூன்று சீர்களால் ஆன அடிபல சீர்களால் ஆன மூன்று அடிகள் ஆனது சிந்தடிகள் எனப்படும்வெண்பாவின் ஈற்றடிகள் சிந்தடிகளாக இருக்கும்இவ்வடிகள் ஆசிரியப்பாவஞ்சிப்பாவிலும் பயின்று வரும்.

(உம்) “அகவன் மகளேஅகவன் மகளே!

மனவுக் கோப்பு அன்ன நல்நெடுங் கூந்தல்

அகவன் மகளேபாடுக பாட்டே”  – மூன்று அடிகளால் ஆன சிந்தடி.

ஞானத்தின் மாணப் பெரிது” – சீர்களால் ஆன சிந்தடி.

3.அளவடி :

நான்கு சீர்களால் ஆன அடிபல சீர்களால் ஆன நான்கு அடிகள் ஆனது அளவடிகள் எனப்படும்நேரடி என்றும் அழைக்கப்பெறும்வெண்பாஆசிரியப்பாகலிப்பாமருட்பாவிலும் இடம்பெறும்.

(உம்அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தன்மை – நான்கு சீர்களால் ஆன அளவடி

தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி

பன்றியருவா வதன்வடக்கு – நன்றாய

சீதமலாடு புனனாடு செந்தமிழ்சேர்

ஏதமில் பன்னிரு நாட் டெண்” – நான்கு அடிகளால் ஆன அளவடி.

4.நெடிலடி:

ஐந்து சீர்களால் ஆன அடிபல சீர்களால் ஆன ஐந்து அடிகள் ஆனது நெடிலடிகள் எனப்படும்.

(உம்மங்குவென் உயிரோடென்றுன் மலரடி சென்னி வைத்தாள் – ஐந்து சீர்களால் ஆன நெடிலடி.

கல்லாக் கோவலர் கோலின் தோண்டிய

ஆன் நீhப் பந்தல் யானை வெளவும்

கல்லதர்க் கவலை செல்லின்மெல் இயல்

புயல் நெடும் கூந்தல் புலம்பும்

வயமான் தோன்றல்வுல்லாதீமே. (ஐங்.304)- ஐந்து அடிகளால் ஆன நெடிலடி

5.கழிநெடிலடி :

ஐந்துக்கும் மேற்பட்ட சீர்களால் ஆன அடிபல சீர்களால் ஆனதும் ஐந்துக்கும் மேற்பட்ட பல அடிகள் கொண்டது நெடிலடிகள் எனப்படும்.

(உம்) “மூலையில் கிடக்கும் வாலிபனே – தினம்

முதுகிலா வேலையைத் தேடுகிறாய்!

பாலை வனம்தான் வாழ்க்கையென – வெறும்

பல்லவி எதற்குப் பாடுகிறாய்?

வெறுங்கை என்பது மூடத்தனம் – உன்

விரல்கள் பத்தும் மூலதனம்!

கருங்கல் பாறையும் நொறுங்கி விழும் -உன்

கைகளில் பூமி சுழன்று வரும்!” – ஐந்துக்கும் மேற்பட்ட சீர்களால் ஆன அறுசீர் கழிநெடிலடி.

6. தொடை :

தொடை – தொடுக்கப்படுவதுஒரு செய்யுளில் எழுத்துக்களை அசைகளாக்கிஅசைகளைச் சீர்களாக்கிசீர்களையெல்லாம் அடிகளாகக் கொண்டது மட்டுமல்லாமல் ஓசையின் இன்பமும்செய்யுளில் தோன்றும் பொருட்பயனும் முழுமையாக தொடுக்கப்படுவது தொடை எனப்படும்தொடை எட்டு வகைப்படும்அவை,

1. மோனைத் தொடை

 2. எதுகைத் தொடை

3. முரண் தொடை

4.இயைபுத்தொடை

5. அளபெடைத் தொடை

6.அந்தாதித் தொடை

7.இரட்டைத்தொடை

8. செந்தொடை என்பதாகும்.

1.மோனைத்தொடை :

செய்யுளின் முதலெழுத்து ஒன்றி வருவது மோனை எனப்படும்இவ்வகைகளில் முதலெழுத்துகளின்றி அதற்குரிய இனவெழுத்துகளும் ஒன்றி வரும்இதனை இணை மோனைகிளை மோனை என்றும் கூறுவர். (மோனை – முதன்மை). மோனைத் தொடை இரு வகைப்படும்அவை,

1.அடி மோனை

2. சீர் மோனை என்பன.

1.அடி மோனை:

அடிகள் தோறும் முதலெழுத்து ஒன்றி வருவது அடி மோனை எனப்படும்.

(உம்) “சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்

இங்குமுதலடியின் முதலெழுத்தும் (சொஇரண்டாமடியின் முதலெழுத்தும் (சொஒன்றி வந்துள்ளன;வ்வாறு அடிகளில் முதலெழுத்து ஒன்றி வருவது அடி மோனை எனப்படும்.

2. சீர் மோனை :

சீர்கள் தோறும் முதலெழுத்து ஒன்றி வருவது சீர் மோனை எனப்படும்.

(உம்) “கற்க கசடற கற்றவை கற்றபின்

இங்குநான்கு சீர்களிலும் முதலெழுத்தாக (வந்துள்ளதுஇதுபோல் ஓர் அடியில் சீர்கள் தொறும் முதலெழுத்து ஒன்றி வருவது சீர் மோனை எனப்படும்.

2.எதுகைத் தொடை:

செய்யுளின் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகைத் தொடை எனப்படும்எதுகைத் தொடை இரு வகைப்படும்அவை,

1.அடி எதுகை

2. சீர் எதுகை

1.அடி எதுகை:

அடிகள் தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது அடி எதுகை எனப்படும்.

(உம்) “காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது

இங்குமுதலடியின் இரண்டாம் எழுத்தும் (இரண்டாமடியின் இரண்டாம் எழுத்தும் (ஒன்றி வந்துள்ளன;வ்வாறு அடிகளில் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது அடி எதுகை எனப்படும்.

2.சீர் எதுகை :

சீர்கள் தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது சீர் எதுகை எனப்படும்.

(உம்) “நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல

இங்குமூன்று சீர்களிலும் இரண்டாம் எழுத்தாக (ன்வந்துள்ளதுஇதுபோல் ஓர் அடியில் சீர்கள் தொறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது சீர் எதுகை எனப்படும்.

3.முரண் தொடை :

செய்யுள் அடிகளில் உள்ள முதற்சீர்களோ அல்லது ஓர் அடியில் உள்ள சீர்களோ சொல்லாலும்பொருளாலும் முரண்பட்டு (எதிர்மாறாகநிற்பது முரண்தொடை எனப்படும்இவையும் அடி முரண்சீர் முரண் என இரண்டு வகைப்படும்.

§  ஒரு செய்யுளில் அடிகளில் முரண்படுவது அடிமுரண் ஆகும்.

§  ஓர் அடியில் உள்ள சீர்களில் முரண்படுவது சீர் முரண் எனப்படும்.

(உம்) “துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி

இன்பம் பயக்கும் வினை

இக்குறட்பாவில் துன்பம் – இன்பம் என அடிகளில் முரண்பட்டு நிற்பதைக் காண்கிறோம்இவை அடிமுரண் ஆகும்.

(உம்) “இனிய உளவாக இன்னாது கூறல்

இவ்வடியில் இனிய – இன்னாத என சீர்கள் முரண்படுவதால் இவை சீர்முரண் எனப்படும்.

4.இயைபுத் தொடை :

ஒரு செய்யுளின் அடிகளிலும்சீர்களிலும் இறுதி எழுத்தோஅசையோசீரோஒன்றி வருவது இயைபுத்தொடை எனப்படும்.

§  ஒரு செய்யுள் அடிகளில் இயைபு அமைவது அடிஇயைபு ஆகும்.

§  ஓர் அடியில் உள்ள சீர்களில் இயைபு அமைவது சீர் இயைபு எனப்படும்

(உம்) “திங்கள்முடி சூடுமலை தென்றல்விளை யாடுமலை

தங்குபுயல் சூழுமலை தமிழ்முனிவன் வாழுமலை

இங்கு மலை என இரண்டு அடிகளிலும் இயைந்து வந்ததால் இவை அடி இயைபு எனப்படும்.

(உம்) “பழமணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின்

இவ்வடியில் உள்ள சீர்களில் மின் என இயைந்து வந்துள்ளதால் இவை சீர் இயைபு எனப்படும்.

5.அளபெடைத்தொடை :

ஒரு செய்யுளின் அடிகளிலும்சீர்களிலும் அசைகள் அளபெடுத்து வருவது அளபெடைத்தொடை எனப்படும்.

§  ஒரு செய்யுள் அடிகளில் அளபெடை அமைவது அடிஅளபெடை ஆகும்.

§  ஓர் அடியில் உள்ள சீர்களில் அளபெடை அமைவது சீர் அளபெடை எனப்படும்.

(உம்) “கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை

இங்கு கெடுப்பதூஉங் – எடுப்பதூஉம் என இரண்டு அடிகளிலும் அளபெடுத்து வந்துள்ளதால் இவை அடி அளபெடை எனப்படும்.

(உம்) “அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்

இவ்வடியில் உள்ள சீர்களில் அழிவதூஉம் – ஆவதூஉம் என அளபெடுத்து வந்துள்ளதால் இவை சீர் அளபெடை எனப்படும்.

6.அந்தாதித்தொடை :

செய்யுளில் ஓர் அடியின் இறுதிச்சீரின் இறுதி எழுத்தோ அல்லது அசையோ அல்லது சீரோ அடுத்த அடியின் தொடக்கமாக வருவது அந்தாதித் தொடை எனப்படும்.

(உம்) “செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை

7.இரட்டைத்தொடை:

செய்யுளில் ஓர் அடி முழுவதும் ஒரே சொல்லை தொடர்ச்சியாக வருமாறு அமைத்துப் பாடுவது இரட்டைத் தொடை எனப்படும்.

(உம்) “வாழி வாழி வாழி வாழி

அம்ம கோவே வாழி

8.செந்தொடை :

மோனைத் தொடை முதல் இரட்டைத் தொடை வரையிலான ஏழு தொடைகளுக்கும் சொல்லப்பட்ட இலக்கணங்கள் எதற்குள்ளும் பொருந்தாமல் தனித்து நிற்கும் தொடை செந்தொடை எனப்படும்.

(உம்) “தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு

தொடையின் வகைகள் அமையும் முறை

மோனை  – முதல் எழுத்து ஒன்றுபடல்

எதுகை – இரண்டாம் எழுத்து ஒன்றுபடல்

இயைபு – இறுதி எழுத்து ஒன்றுதல்

முரண் – முரண்பட்டு நிற்றல்

அளபெடை – அளபெடுத்து வருதல்

அந்தாதி இறுதி – முதலாக வருதல்

இரட்டைத் தொடை – ஒரே சொல்லே அடிமுதல் வருதல்

செந்தொடை – இவற்றில் பொருந்தாமல் தனித்து

தொடை விகற்பத்தின் வகைகள்

விகற்பங்கள் தொடைகளுடன் சேரும் முறை

விகற்பங்கள்

1.இணை                              = 1, 2 சீர்கள்                                         

2.பொழிப்பு                         =  1, 3  சீர்கள்                          

3.ஒருஉ                                 =  1, 4   சீர்கள்  

4.கூழை                                =  1, 2, 3  சீர்கள்                  

5.மேற்கதுவாய்                =  1, 3, 4  சீர்கள்      

6.கீழ்க்கதுவாய்                =   1, 2, 4  சீர்கள்  

7.முற்று                                =   1, 2, 3, 4 சீர்கள்  

உதாரணம் :

ஐந்து தொடைகளுடன் ஏழு விகற்பங்களும் ஒன்றாய்ச் சேரும்.

01.இணை மோனைத் தொடை

02.பொழிப்பு மோனைத் தொடை

03.ஒருஉ மோனைத் தொடை

04.கூழை மோனைத் தொடை

05.மேற்கதுவாய் மோனைத் தொடை

06.கீழ்க்கதுவாய் மோனைத் தொடை

07.முற்று மோனைத் தொடை

இது போன்று ஒவ்வொரு விகற்பமும்  தொடையுடன் சேர்ந்து வரும்.

குறிப்பு :

§  அந்தாதித் தொடை,  இரட்டைத் தொடைசெந்தொடை ஆகிய மூன்றுக்கும் தொடை விகற்பங்கள் இல்லை.

§  இதன் அடிப்படையில் தொடை விகற்பங்கள் மொத்தம் (7x 5=35) 35 ஆகும்.

உவமையணி

by admin | Posted on 05/31/2021

தமிழிலக்கணத்தில்உவமையணி என்பது கூறக் கருதிய பொருளை நன்கு தெரிந்த ஒன்றைக் காட்டி விளக்குவதுஒரு பொருளை இன்னொரு பொருளுடன் ஒப்பிட்டு அழகு படுத்திக் கூறுவதுதெரியாத பொருளைக் காட்ட தெரிந்த பொருளைச் சொல்லி விளக்குவது.
சொல்ல எடுத்துக் கொண்ட பொருளை வேறு ஒரு பொருளுடனோ அல்லது பல பொருளுடனோ அப்பொருளின் பண்பு,தொழில்பயன் என்பவற்றைக் காரணமாகக் கொண்டு இயைபு படுத்தி இரு பொருள்களுக்கும் இடையே உள்ள ஒப்புமைப் புலப்படும்படி பாடுவது உவமை அணியாகும்.

12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தண்டியலங்காரம் என்னும் இலக்கண நூல் உவமை அணியைக் கீழ்வருமாறு விளக்குகிறது:

பண்பும் தொழிலும் பயனும் என்றிவற்றின்
ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்த்து
ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை

திருக்குறள் உள்ள ஒரு குறளும் உவமை அணியை எடுத்து காட்டுவனஇத்தொடரில் வரும் உவமை உருபு அற்றே.

இழுக்கல் உடையுழி ஊற்றுகோல் அற்றே ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்

பண்பு உவமையணி

உதாரணம்முத்துப்பல்பவளவாய்கயல்விழி
பவளம் போல் சிறப்பு பவளத்தின் பண்பு.

தொழில் உவமையணி

உதாரணம்புலிமறவன்குரங்குமனம்
செயலை விளக்குவது
புலியின் வீரம்தாவும் மனம்.

பயன் உவமையணி

உதாரணம்மழைக்கை
மழை போல பொழியும்(கொடுக்கும்கை

உவமையணியில் உவமானம் ,உவமேயம்உவமை உருபுகள் ஆகிய மூன்றும் வெளிப்படையாக வரும்இவைகளோடு பொதுத்தன்மையும் இருக்கும்.

உவமானம்

ஒப்பிடக் கொண்டு வந்த பொருள்

உவமேயம்

ஒப்பிட எம்மிடமுள்ள பொருள்

உவம உருபுகள்

ஒப்புவமைப்படுத்துவதற்காக போன்ற என்று பொருள் தரும் சொற்கள் உவம உருபுகள் எனப்படும்உதாரணம்போன்றபோலநிகர்த்தஉடையஒப்பஅன்னஅனையஅற்றே

(.கா.) உவம உருபு – தொடர்

போல – கிளி போலப் பேசினாள்.
புரைய – வேய்புரை தோள்.
ஒப்ப – தாயொப்ப பேசும் மகள்.
உறழ – முறவு உறழ் தடக்கை.
அன்ன – மல்ரன்ன சேவடி.
போலப் புரைய ஒப்ப உறழ
மானக் கடுப்ப இயைய ஏய்ப்ப
நேர நிகர அன்ன இன்ன
என்பவும் பிறவும் உவமத் துருபே.

பொதுத்தன்மை

இரண்டுக்கும் உள்ள தன்மை(சந்திரன் போல முகம்இங்கு சந்திரன் உவமானம்முகம் உவமேயம்இதில் சந்திரனின் வடிவம்அழகுவட்டம்குளிர்மை போன்றவை பொதுத்தன்மை)

சான்றுஅகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை

இங்கு,

உவமானம்அகழ்வாரைத் தாங்கும் நிலம்
உவமேயம்தம்மை இகழ்வார்ப் பொறுத்தல்
உவமை உருபுபோல

உவமைத்தொகை

வெளிப்படையாகத் தெரியாத உவமைஉருபுகள் உவமைத்தொகை எனப்படும்அதாவது உவமை தொக்கி நிற்பது.

உதாரணம்கயல்விழி – கயல் போல் விழி
இங்கு உவமை உருபு (போல்மறைந்து நிற்கிறது.

இதே போல இன்னொரு உதாரணம்:
மதிமுகம் – மதி போன்ற முகம்
உவமை உருபு (போன்றமறைந்து நிற்கிறது.

உவமையணியை இன்னொரு விதத்தில் இன்னும் இரண்டாகப் பிரிக்கலாம்.
அவையாவன:
1- எடுத்துக்காட்டு உவமையணி
2- இல்பொருள் உவமையணி

எடுத்துக்காட்டு உவமையணி

இது நேர்ப்பொருளில் வெளிப்படையாகச் சொல்வது
இதில் உவைமை உருபுகள் வெளிப்ப்ட வருவதில்லை.உவமை,உவமேயம் தனித்தனித் தொடர்களக வருகின்றனஉதாரணம்:
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி
மாந்தர்க்கு கற்றெனத் தூறும் அறிவு
மணற்கேணியானது எவ்வளவு ஆழமாகக் கிண்டுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நீர் சுரக்கும்அதே போல மனிதர் எவ்வளவுகெவ்வளவு கற்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்களது அறிவு பெருகும்.

இல்பொருள் உவமையணி

இல்பொருள் உவமையணி மறைபொருளில் வரும்அதாவது இல்லாத ஒன்றை இருப்பது போல கற்பனை செய்து அதனை உவமையாகக் காட்டுவது.

உதாரணம்:
அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம் தளிர்த்தற்று

அதாவது வலிமையான ஒரு பாலைவனத்திலே பட்டமரம் தளிர்த்ததைப் போன்று அன்பில்லா உயிர்வாழ்க்கை தளிர்க்காதுஅதாவது வலிமையான பாலைவனத்திலே பட்டமரம் தளிர்க்கவே தளிர்க்காதுஅதே போலத்தான் அன்பில்லா வாழ்க்கையும்.

நாட்டார் பாடலில் உவமை

நாட்டார் பாடல்களிலும் உவமைகள் பொருத்தமுறஅழகாகஇயல்பாகக் கையாளப்பட்டுள்ளனஇவை ஏட்டுக் கவிதைகளில் புலவர்களால் பொதுவாகக் கையாளப்படும் உவமைகளிலும் பார்க்கச் சுவையுடைத்தாய் உள்ளனஓரிரு உதாரணங்கள் வருமாறு

ஈச்சம் குருத்துப்போல இருந்துமுகம் வாடலாமா? (மாவிலங்க மரத்தின் பட்டையையும் மானிறைச்சியையும் ஈச்சம் குருத்தையும் நாட்டு மக்கள் வெயிலிலே காயவைத்து வெவ்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவது வழக்கம்இந்த இயற்கையான நிகழ்ச்சியையே நாட்டுப்புறக் கவிஞன் உவமையாகக் காட்டுகின்றான்)

உருவக அணி என்றால் என்ன?

உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது உருவக அணியாகும்

·         இதில் உவமிக்கப்படும் பொருள் முன்னும் உவமை பின்னுமாக அமையும்

கவிஞன்தான் ஒரு பொருளைச் சிறப்பிக்க எண்ணிஅதற்கு உவமையாகும் வேறொரு பொருளோடு ஒன்றுபடுத்திக் கூறுவான்உவமையின் தன்மையைப் பொருள்மேல் ஏற்றிக்கூறும் இத்தன்மையே 'உருவகம்எனக் கூறப்படும்உவமைஉவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது உருவக அணி ஆகும்.

·         'தண்டிஎன்பவர்உருவகத்தைப் பற்றி 'உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்என்று எழுதியிருக்கிறார்

·         'முகநிலவில் வியர்வை முத்துகள் துளிர்த்தனஎன்று உருவகமாக எழுதுகிறார்கள்.

உருவக அணி எடுத்துக்காட்டு

'தேன் போன்ற தமிழ்என்று கூறுவது உவமை அணி   

·          வெள்ளம் போன்ற இன்பம்

·          கடல் போன்ற துன்பம்

·         மதிபோன்ற முகம் - மதிமுகம்


 '
தமிழ்த்தேன்என்று கூறுவது உருவகம்

·         இன்ப வெள்ளம்

·         துன்பக்கடல்

·         முகம் ஆகிய மதி - முகமதி

எடுத்துக்காட்டு 1

  வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய



 

  சுடர்ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை

இடர்ஆழி நீங்குகவே

என்று இப்பாடலில்

·         பூமி அகல்விளக்காகவும்

·         கடல் நெய்யாகவும்

·         கதிரவன் சுடராகவும் 

உருவகப்படுத்தப்பட்டு உள்ளனஎனவேஇப்பாடல் உருவக அணி அமைந்ததாகும்

எடுத்துக்காட்டு 2

  இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக

வன்சொல களைகட்டு வாய்மை எருவட்டி

 

அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனவோர்

பைங்கூழ சிறுகாலைச் செய்.

இப்பாடலில்

·         இன்சொல் - விளைநிலம்

·         ஈதல் - விதை

·         வன்சொல் - களை

·         வாய்மை - உரம் (எரு); 

·         அன்பு - நீர்

·         அறம் - கதிர் 

என உருவகிக்கப் பெற்றுள்ளதனால்இப்பாடல் உருவக அணியாகும்.

இவ்வாறு உவமானம் வேறுஉவமேயம் வேறு எனத் தோன்றாத வகையில்உவமானத்தின் இயல்புகளை உவமேயத்தின்மேல் ஏற்றிக் கூறுவது உருவக அணி யாகும்.  



ஏகதேச உருவக அணி விளக்கம்

கவிஞர்தாம் எடுத்துக்கொண்ட பல பொருள்களை உருவகப்படுத்திக் கூறும்போது ஒன்றனை மட்டும் உருவகப்படுத்திஅதனோடு தொடர்புடைய மற்றொன்றனை உருவகப்படுத்தாமல் விடுவதுஏகதேச உருவக அணி எனப்படும்.

இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்திமற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணி ஆகும்.

·         ஏகதேசம் - ஒரு பகுதி

ஏகதேச உருவக அணி எடுத்துக்காட்டு

எடுத்துக்காட்டு 1

அறிவு என்னும் விளக்கைக் கொண்டு அறியாமையை நீக்க வேண்டும்

·         இத்தொடரில் அறிவு விளக்காக உருவகப்படுத்தப்பட்டு உள்ளது

·         அறியாமை இருளாக உருவகப்படுத்தப்படவில்லை

இவ்வாறு கூறப்படும் இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்திமற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணி ஆகும்.  

எடுத்துக்காட்டு 2

  பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமம கட்டளைக் கல் - திருக்குறள் 

வள்ளுவர் மக்களின் செயல்களைப் பொன்னின் தரத்தை அறிய உதவும் உரைகல்லாக உருவகம் செய்துவிட்டுமக்களது உயர்வையும் தாழ்வையும் பொன்னாக உருவகம் செய்யவில்லைஎனவே இக்குறளில் இடம்பெற்றிருப்பது ஏகதேச உருவக அணியாகும்

எடுத்துக்காட்டு 3

  பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன அடிசேரா தார் - திருக்குறள் 

இக்குறட்பாவில் பிறவியைக் கடலாக உருவகப்படுத்திவிட்டுஅதனைக் கடக்க உதவும் இறைவனடியைத் தெப்பமாக உருவகப்படுத்தாமையால்இஃது ஏகதேச உருவக அணி ஆயிற்று

முற்றுருவகம் 

உவமானம் உவமேயம் இரண்டும் தனித்தனியாக நின்று பொருள் தருவது உவமை அணி என்றால்உவமானம் வேறு உவமேயம் வேறு என்னும் நிலை இல்லாமல் இரண்டும் ஒன்று எனக் காட்டுவது உருவகம் ஆகும்

இதில் ஒரு பகுதியை உருவகப்படுத்துவதும் உண்டுஒரு பகுதி எனப்பொருள்படும் வடமொழிச் சொல்லான ஏகதேசம் என்னும் சொல்லால் அதனை ஏகதேச உருவக அணி என்பர்

அவ்வாறு இல்லாமல் ஒரு பொருளின் அனைத்துப் பகுதிகளையும் உருவகப்படுத்திக் கூறுவது முற்றுருவகம் ஆகும்

  "நற்குணமு நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சா



 

  ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா - வேற்படையும்



 

  வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்



 

  ஆளுமே பெண்மை அரசு" - நளவெண்பாச் செய்யுள்

என்னும் நளவெண்பாச் செய்யுள் ஒரு நாட்டின் படை முதலிய உறுப்புகளைத் தமயந்தியின் உறுப்புகளோடு முழுமையாக உருவகப்படுத்தியுள்ளமையால் இது முற்றுருவகம் ஆகிறது.

நினைவுகூர்க:

உவமை அணிஉருவக அணி வேறுபாடு

உவமை அணி

உருவக அணி

ஒரு பொருளை விளக்க மற்றொரு பொருளை உவமையாகக் கூறுவது உவமை அணி என முன்னர் கற்றோம்

உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது உருவக அணியாகும்.  

'தேன் போன்ற தமிழ்என்று கூறுவது உவமை அணி 

'தமிழ்த்தேன்என்று கூறுவது உருவகம் 

·         வெள்ளம் போன்ற இன்பம்

·         கடல் போன்ற துன்பம்

·         மதிபோன்ற முகம் - மதிமுகம் 

·         இன்ப வெள்ளம்

·         துன்பக்கடல்

·         முகம் ஆகிய மதி - முகமதி 

வேற்றுமை அணி

தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான அணி இலக்கணத்தில் அணி என்றால் அழகு என்பது பொருள்புலவர்கள்பொருளழகும் சொல்லழகும் தோன்றக் கவிதைகளை இயற்றிக் கற்போரை மனங்குளிரச் செய்வார்கள்இதனை விளக்கும் இலக்கணமே அணியிலக்கணம்

·         தண்டியலங்காரம்மாறனலங்காரம் என்பன அணியிலக்கணம் குறித்த தமிழ் நூல்கள்

வேற்றுமை அணி பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ள அணியிலக்கணம் பற்றிய பதிவுகளை நினைவுகூர்க.

அணி இலக்கணம்

பாடத்தலைப்புகள் 

வேற்றுமை அணி 

இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறிபிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமையணி எனப்படும்

புலவர் ஒரு செய்யுளில் இரண்டு பொருள்களைக் கூறி முதலில் அவற்றிற்கு இடையே உள்ள ஒற்றுமையையும்பின்னர் ஒரு காரணம் பற்றி அவ்விரண்டிற்கும் இடையே உள்ள வேற்றுமையையும் சுட்டிக்காட்டிப் பாடுவது வேற்றுமை அணி

"கூற்றினும் குறிப்பினும் ஒப்புடை இருபொருள் வேற்றுமைப் படவரின் வேற்றுமை யதுவே"  - தண்டி -நூ. 46

வேற்றுமை அணி எடுத்துக்காட்டு

தேனும் வெள்ளைச்சர்க்கரையும் இனிப்புச்சுவை உடையவை

அவற்றுள்

·         தேன் உடலுக்கு நன்மை செய்யும்

·         வெள்ளைச் சர்க்கரை உடலுக்குத் தீங்கு செய்யும்

இப்பகுதியைக் கவனியுங்கள்

வெள்ளைச்சர்க்கரைக்கும் தேனுக்கும் இடையே ஒற்றுமையும் உண்டுவேற்றுமையும் உண்டு

·         இரண்டும் இனிப்புச்சுவை உடையவை என்பது ஒற்றுமை

·         ஒன்று உடலுக்கு நன்மை செய்யும்இன்னொன்று தீங்கு செய்யும் என்பது வேற்றுமை

இவ்வாறு இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறிபிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமையணி எனப்படும்.

எடுத்துக்காட்டு 1

தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு

இத்திருக்குறளில் முதலில் நெருப்புகொடுஞ்சொல் ஆகிய இரண்டும் சுடும்தன்மை உடையவை என்று கூறப்படுகிறதுபின்னர்நெருப்பினால் சுட்ட காயம் ஆறிவிடும்உள்ளத்தில் ஏற்பட்ட வடு ஆறாது என்று இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு கூறப்படுகிறதுஎனவே இது வேற்றுமை அணி ஆகும்.

திருவள்ளுவர் நெருப்புநாக்கு என்னும் இருபொருள்களை இப்பாடலில் குறிப்பிடுகிறார்.

ஒற்றுமை

·         நெருப்பு வெம்மையால் சுடுகிறது

·         நாக்குக் கடுஞ்சொற்களால் சுடுகிறது என இரண்டிற்கும் உள்ள ஒற்றுமையை முதலில் குறிப்பிட்டார்.

வேற்றுமை

பின்னர்த் தீயால் சுட்டது ஆறும் என்றும் நாவால் சுட்டது ஆறாது என்றும் அவற்றிற்கு இடையே உள்ள வேற்றுமையையும் சுட்டிக் காட்டியுள்ளார்

இவ்வாறு அமையப் பாடுவது வேற்றுமை அணி எனப்படும்

பின்வருநிலை அணி என்றால் என்ன?

ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ மீண்டும் பல இடங்களிலும் வருதலே பின்வருநிலை அணியாகும்

·         செய்யுளில் முன்னர் வந்த சொல்லோபொருளோசொல்லும் பொருளோ மீண்டும் மீண்டும் வந்து அழகு சேர்க்கும்.

பின்வருநிலை அணி எத்தனை வகைபடும்?

பின்வருநிலை அணியின் வகைகள் - இது மூன்று வகைப்படும்

1.        சொல் பின்வருநிலையணி 

2.        பொருள் பின்வருநிலையணி 

3.        சொற்பொருள் பின்வருநிலையணி

Description: Description: பின்வருநிலை அணிகள் - பின்வருநிலை அணி வகைகள்



சொல் பின்வருநிலையணி விளக்கம்

ஒரு செய்யுளில் வந்த சொல்லே பல முறை திரும்பத் திரும்ப வந்து வெவ்வேறு பொருள் தருமாயின் சொல் பின்வருநிலை அணி எனப்படும்.

சொல் பின்வருநிலையணி என்றால் என்ன?

முன் வந்த சொல்லே பின்னும் பலவிடத்தும் வந்து வேறு பொருள் உணர்த்துவது சொல் பின்வருநிலை அணியாகும்

·         செய்யுளில் முன்னர் வந்த சொல்மீண்டும் மீண்டும் வந்து வெவ்வேறு பொருளைத் தருவது

சொல் பின்வருநிலையணி எடுத்துக்காட்டு 1

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

இக்குறளில் 'துப்புஎன்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து வேறு வேறு பொருள்களைத் தருகிறது

·         துப்பார்க்கு - உண்பவர்க்கு

·         துப்பு - நல்லநன்மை

·         துப்பு - உணவு 

என்று பல பொருள்களில் வருவதைக் காணலாம்

எடுத்துக்காட்டு 2

"பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்" - குறள் 751

என்னும் திருக்குறளில் பொருள் என்னும் சொல் நான்கு முறை வந்துள்ளது

·         முதல் இரண்டு இடங்களில் தகுதி அல்லது மதிப்பு என்னும் கருத்திலும்

·         பின் இரண்டு இடங்களில் செல்வம் என்னும் கருத்திலும் 

அச்சொல் இடம் பெற்றுள்ளதுசொல் மட்டும் பலமுறை வந்து அச்சொல்லிற்கான பொருள் வெவ்வேறாக இருப்பதால் இச்செய்யுளின் அணி சொல்பின் வருநிலையணி ஆயிற்று.  

பொருள் பின்வருநிலையணி விளக்கம்

ஒரு பொருள் குறித்த பல சொற்கள் ஒரு செய்யுளில் இடம் பெறுவது பொருள் பின்வருநிலைஅணி ஆகும்.

பொருள் பின்வருநிலையணி என்றால் என்ன?

செய்யுளில் முன்வந்த ஒரு சொல்லின் பொருளே பின்னரும் பல இடங்களில் வருவது பொருள் பின் வருநிலையணி ஆகும்.  

·         செய்யுளில் ஒரே பொருள்தரும் பல சொற்கள் வருவது

பொருள் பின்வருநிலையணி எடுத்துக்காட்டு 1

அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன காயா
நெகிழ்ந்தன நேர்முகை முல்லை - மகிழ்ந்திதழ்
விண்டன கொன்றை விரிந்த கருவிளை
கொண்டன காந்தள் குலை

இச்செய்யுளில் 

·         அவிழ்ந்தன

·         அலர்ந்தன

·         நெகிழ்ந்தன

·         விண்டன

·         விரிந்தன

·         கொண்டன 

ஆகிய சொற்கள் மலர்ந்தன என்ற ஒரு பொருளையே தந்தன

எடுத்துக்காட்டு 2

"ஆறுபாய் அரவம், மள்ள ராலைபாய் அமலை, ஆலைச்
சாறுபாய் ஓசை, வேலைச் சங்குவாய் பொங்கும் ஓதை
ஏறுபாய் தமரம், நீரிலெருமைபாய் துழனி, இன்ன
மாறுமா றாகித் தம்மின் மயங்குமா மருத வேலி" - கம்பராமாயணம்

என்னும் கம்பராமாயணப் பாடலில்

ஒலி என்னும் பொருள்படும் சொற்களான

·         அரவம்

·         அமலை

·         ஓசை

·         ஓதை

·         தமரம்

·         துழனி 

ஆகியன இடம் பெற்றுள்ளனஇதனால் இச்செய்யுளில் இடம்பெற்றுள்ள அணி 'பொருள் பின்வருநிலை அணிஆகும்.  

எடுத்துக்காட்டு 3

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை

இக்குறட்பாவில் செல்வம்மாடு ஆகிய இரு சொற்களுமே செல்வத்தையே குறிக்கின்றன

சொற்பொருள் பின்வருநிலையணி விளக்கம்

அணி செய்யுளில் இடம் பெறும் ஒரு சொல் அதே பொருளில் பலமுறை பயின்று வருதல் சொற்பொருள் நிலை அணி எனப்படும்

சொற்பொருள் பின்வருநிலையணி என்றால் என்ன?

முன்னர் வந்த சொல்லும் பொருளும் பின்னர்ப் பல இடங்களிலும் வருவது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.  

·         செய்யுளில் முன்னர் வந்த சொல்மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளைத் தருவது

சொற்பொருள் பின்வருநிலையணி எடுத்துக்காட்டு 1

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு

இக்குறட்பாவில் 'விளக்குஎன்னும் சொல் ஒரே பொருளில் பலமுறை வந்துள்ளதால் இது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்

எடுத்துக்காட்டு 2

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்

இப்பாடலில், தீய என்னும் சொல் தீமை என்னும் ஒரே பொருளில் பலமுறை வந்துள்ளது

எனவேஇது சொற்பொருள் பின்வருநிலையணி.

எடுத்துக்காட்டு 3

"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச்செயல்" - குறள் 12 

என்னும் திருக்குறளில் நாடி என்னும் சொல் அறிந்து என்னும் பொருளில் மூன்றுமுறை வந்துள்ளதுஇதனால் இக்குறளில் இடம் பெற்றுள்ள அணி சொற்பொருள் பின்வருநிலை ஆகும்.

தற்குறிப்பேற்ற அணி 

 தற்குறிப்பேற்ற அணி என்பது இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றுவதாகும்.

.கா.1:

போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட
                                சிலப்பதிகாரம்

விளக்கம்:

கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகரத்திற்குள் நுழைய முற்படும்போது இயல்பாகக் காற்றிலாடும் தோரண வாயிற் கொடிகளைக் கவிஞர் தம் கற்பனையினால் கோவலன் மதுரையில் கொல்லப்படுவான் என்று முன்னமே அறிந்து வர வேண்டாம் என அக்கொடிகள் எச்சரிப்பதாகக் குறிப்பேற்றிக் கூறுவார்.

.கா.2:

தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால்
கையால் வயிறலைத்து காரிருள் வெய்யோனை
வாவு பரித் தேரேறி வாவென்றழைப்பது போல்
கூவினவே கோழிக் குலம்.
                                நளவெண்பா

விளக்கம்:

நளன்தமயந்தியை நீங்கிகாட்டில் விட்டுச் சென்றான்அதிகாலையும் புலரகோழிகளும் இயல்பாகக் கூவுகின்றனஇதைக் கண்ட புகழேந்திதமயந்தியின் தாங்கொணாத் துயர் கண்டேகோழிகள் சூரியனை விரைவாக வரக் கதறுவதாகக் கூறுகிறார்.

.கா.3:

காரிருளில் கானகத்தே காதலியைகீ கைவிட்ட
பாதகனைப் பார்க்கப் படாதேன்றோ - நாதம்
அழிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவன் ஓடி
ஒழிக்கின்ற தென்னோ உரை.
                                நளவெண்பா

விளக்கம்:

நளன் கடலோரமாகச் செல்கின்றான்நண்டுகள்("அலவன்") தம் வளையில் இருந்து வெளிப்பட்டு கடல் நாடிச் செல்கின்றனஇதைக் கண்ட புலவர்மனைவியைக் காட்டில் விட்டுச் சென்ற பாதகனைப் பார்க்கக் கூடாது என்றே நண்டுகள் வெளியேறிச் செல்கின்றன என்கிறார்



 

 

 


No comments:

Post a Comment

II BA 4th sem major papers

  இளங்கலை இரண்டாமாண்டு - நான்காம் பருவம்             முதன்மைப் பாடம் - தாள் ;.7 -- இலக்கணம் - 4                      தண்டியலங்காரம்...