Followers

Wednesday, July 13, 2022

Question bank சித்தமருத்துவம்

சித்தமருத்துவம்                                   

ANSWER ANY FIVE QUESTIONS ONLY –(5×20=100)

1. (i) சித்தாவின் வரலாறு பற்றி ஒரு கட்டுரை வரைக.

   (ii) திருக்குறளில் உள்ள மருத்துவப் பாடல்கள் பற்றி விளக்குக

2(i) சங்ககால மருத்துவம் குறித்து விளக்குக.

 (ii) சித்த மருத்துவ பழமொழிகள் 5 பற்றி விளக்குக?

3(i) நாடி, வாயு, தாதுஇவற்றுக்குள்ள தொடர்புயாது?

(ii) ஆறாதாரம் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுபவை எவை?

4(i) சிறுபஞ்சமூலத்தில் உள்ள பொருட்கள் யாவை?

 (ii) .பகைவன் வீட்டிற்குச் சென்றாலும் பத்து மிளகொடு போ' என்று குறிப்பிடப்படுவதன் நோக்கம் என்ன?

5(i) திரிபலா வின் மருத்துவப் பயன்களை எழுதுக.

 (ii) ஆவாரையின் மருத்துவக் குணங்கள் யாவை?

6(i) குழந்தைப்பேறு  தரக்கூடிய மூலிகைகள் யாவை?

 (ii) கருவேல் மூலிகையின் எப்பகுதி மருத்துவப் பயனுடையது?

7(i) மஞ்சளின் மருத்துவ பலன்கள் யாவை?

 (ii) வீட்டில் இருக்க வேண்டிய மூலிகைகள் யாவை?

8(i) ஜீரண சக்தி அதிகரித்து, பசியும் அதிகரிக்கும் மூலிகை யாது?

 (ii) தூதுவளை பழத்தை வத்தலாக காயவைத்து, வதக்கி சாப்பிட்டால் எக் குறைபாடுகள் நீங்கும்?

9(i) இயற்கை மருத்துவ முறைகளில் அமிர்தமாகக் கொண்டாடப்படுவது திரிபலா சூரணம். ஏன் காரணம் யாது?

(ii) இளகம் (இலேகியம்) என்றால் என்ன? ஐந்து இலேகியப் பயன்களைப் பற்றி குறிப்பிடுக.

10(i) சுக்கு கல்பம்   செய்யத் தேவைப்படும் பொருட்கள் யாவை?

  (ii) செம்பருத்திப் பயன் தரும் பூ எது? அதன் மருத்துவப் பயன்களைப் பட்டியலிடுக.

 Answer

1. (i) மிகப்பழைமையான மருத்துவ முறையாகும். சித்தா என்பது - சித்தர்கள் முயன்று, ஆராய்ந்து செயல்படுத்தி வெற்றி பெற்றதால் சித்தாஎனப்பெயர் பெற்றது. பதினெட்டு சித்தர்கள் இந்த சித்தமருத்துவத்தின் வளர்ச்சிக்காக பெரிதும் உழைத்தார்கள். சித்த இலக்கியம், அதிகமாக தமிழ்பேசும் இடங்களான இந்திய நாட்டிலும், வெளிநாடுகளிலும், நடைமுறையில் உள்ளது. சித்த முறையானது இயற்கையான மருத்துவ முறையை சார்ந்தது.

   (ii) தமிழ் மறையெனப் போற்றப் பெறும் திருக்குறளில் அமைந்துள்ள மருந்து என்னும் அதிகாரம்'- மூன்று என்னும் எண்ணால் உரைக்கப்படுகின்றவை வளி, அழல், ஐயம் என்னும் மூன்று கூறுகளாகும். இம்மூன்றும் தத்தமக்குரிய அளவின்படி அமையாமல் குறைந்தாலோ' கூடினாலோ உடம்பில் பலவகை நோய்களை உண்டாக்கும். இம்மூன்றும் உடலுக்குக் கேட்டைத் தரும்.

" மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று'

2(i) விழுப்புண்ணைத் தைக்கும் முறையைப் பதிற்றுப் பத்து குறிப்பிகிறது.

மீன்தேர் கொட்பின் பனிக்கய மூழ்கிச்

சிரல் பெயர்ந் தன்ன நெடுவெள்ளூசி

நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின் ''10

நீரிலுள்ள மீனைக் கொத்துவதற்காக நீரில் பாய்ந்து, அடுத்த நொடியில் நீரைவிட்டு மேலே பறந்து செல்லும் சிரல் பறவையைப் போல, நெடிய வெள்ளூசி புண்ணுக்குள் நுழைந்து வெளியே வருகிறது என்கிறது.

 (ii) .ஆயிரம் பேரைக்கொன்றால் அரை வைத்தியன்2.ஆலமரத்தினை சுற்றி அடி வயிற்றினை தொட்டு பார்- 3.பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டில் கூட விருந்து உண்ணலாம்4.ஆற்றையும் அடக்குமாம் அதிவிடயம்- 5.அழுத பிள்ளை சிரித்த்தாம்,கழுதை பாலை குடித்ததாம்-

3(i) நாடிகள் பத்துள் இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்றும் சிறப்புடையன. வாயுக்களை மேற்கண்ட மூன்று நாடிகளின் மூலம் அறிந்து கொள்ளலாம்.இடகலை வாத நாடியாகவும், பிங்கலை பித்த நாடியாகவும், சுழுமுனை ஐய நாடியாகவும் குறிப்பிடப்படும். வாயுக்கள் பத்து நாடிகளுடன் இணைந்திருக்கும். அதேபோல, தாதுகள் ஏழின் குணங்களையும் நலன்களையும் அறிய வேண்டுமானால், வாத பித்த ஐய நாடிகள் எவ்வாறு இயல்பாகவும் இயல்புக்கு மாறாகவும் இயங்குகின்றன என்பதைக் கொண்டே அறிந்திட இயலும்.

 (ii) நாடிகள் உதிக்கின்ற மூலமாக விளங்குகின்ற மூலாதாரம் தொடங்கி சுவாதிட்டாணம்' மணிபூரகம், அநாகதம்' விசுத்தி, ஆக்கினை என்னும் ஆறாகும்.

4(i)சிறுபஞ்சமூலம்' என்பது கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி' பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகைகளின் வேர்களைக் கொண்ட கூட்டுப் பெயராகும். இந்நூலின் செய்யுள்கள் ஐந்து கருத்துகளைக் கூறி ஒரு நீதியை உரைப்பதாக அமையும்.

 (ii) மிளகு மிளகு-அது தமிழ் நிலத்தின் மருந்து எனல் பொருந்தும். கடல் கடந்து சென்றும் தமிழ் நிலத்துப் பெருமையைக் கிரேக்க நாட்டிலும் நிலை நிறுத்திய பெருமை மிளகுக்கு உண்டு.பகைவன் வீட்டிற்குச் சென்றாலும் பத்து மிளகொடு போ' என்பது பழமொழி. பகைவன் வீட்டில் நஞ்சு தரப்பட்டாலும் அது' கொண்டு செல்லும் பத்து மிளகினாலேயே குணமாகிவிடும் என்பதை உணர்த்தும். அவ்வாறான மிளகு, மருத்துவத்தின் மூலப்பொருளாக அமைவதோடு உணவாகவும் அமையும்.

5(i) திரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேத மருத்துவத் தயாரிப்பு. உலகம் முழுவதும் ஆயுர்வேத மருத்துவர்களால், பெரும்பாலான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா.

 (ii) ஆவாரை சதை, நரம்பு, ஆகியவற்றை சுருக்கும் தன்மையுடையது. விதை காமம் பெருக்கியாகச் செயல் படும். சர்கறை நோய்க்கு நல்ல மருந்து. உடம்பின் சரும துர் வாடையைப் போக்குவதுடன் நிறமூட்டும்.

6(i) இஞ்சி, சுக்கு, கடுக்காயில் செய்யப்பட்ட மருந்துகள் ஆண், பெண் உறவுகளை பலப்படுத்தி, குழந்தைப்பேறு தரக்கூடியவை.

 (ii)  கருவேல் மூலிகையின் கருவேலம் பட்டை சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். பிசின் சளியகற்றி தாதுக்களின் எரிச்சசல் தணிக்கும், காச்சல், வாந்தி, இருதயநோய், நமச்சல், மூலம், வயிற்றுக்கடுப்பு, நுரையீரல் நோய், கிட்னி சம்பந்தமான நோய்கள் குணமடையும். காமம் பெருக்கும், கொழுந்து தாதுக்களின் எரிச்சல் தணித்து அவற்றைத துவளச்செய்யும், சளியகற்றும்.

7(i) மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். புற்றுநோய் செல்களை தடுக்கும். கீமோதெரப்பியால் உண்டாகும் பக்க விளைவுகளையும் குறைக்கும்.

 (ii) துளசி, தூதுவளை,சோற்றுக்கற்றாழை, மஞ்சள் கரிசாலங்கண்ணி, பொன்னாங்கண்ணி, நேத்திரப்பூண்டு, நிலவேம்பு, பூலாங்கிழங்கு, ஓமவள்ளி, அருகம்புல், பூனை மீசை, ஆடாதொடை, நொச்சி, தழுதாழை, கழற்ச்சி

8(i) துளசி இலையை சாதரணமாக மென்றுத் தின்றால் ஜீரண சக்தி அதிகரிப்பதோடு, பசியும் அதிகரிக்கும்.

 (ii) தூதுவளை பழத்தை வத்தலாக காயவைத்து, வதக்கி சாப்பிட்டால் கண் குறைபாடுகள் நீங்கும்.  

9(i) திரிபலா சூரணம் தினமும் சாப்பிட்டுவர, வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும். அஜீரணக் கோளாறு நீங்கும். ரத்தம் சுத்திகரிக்கப்படும். ரத்த ஓட்டம் சீராகும். கல்லீரல், நுரையீரலில் புண்கள் வராமல் பாதுகாக்கும். ஆஸ்துமா, மஞ்சள் காமாலை இருப்பவர்களுக்கு ஏற்றது.

 (ii) இலேகியம். ராஜமார்த்தாண்ட லேகியம்.கூழ்பாண்ட லேகியம். ராஜ சிந்தாதி லேகியம்.தூதுளை லேகியம்.அமிர்த சஞ்சீவி லேகியம். தஸ்ணா மூர்த்தி லேகியம்

10(i)  1/4 கிலோ – சுக்கு25 கிராம் சுண்ணாம்பு 1 லிட்டர் தண்ணீர்

  (ii) செம்பருத்திப்பூ சாப்பிட்டால், தங்க பஸ்பம் சாப்பிடுவதை  போல. அனைத்து வகையான இதய நோய்க்கும் சிறந்தது. ஏனென்றால் செம்பருத்திப் பூவில் தங்கச்சத்து இருக்கிறது. வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, வயிற்று உப்புசம்  பிரச்னைகளுக்கு, செம்பருத்திப்பூ கஷாயம் நல்ல மருந்து.

 -------------------------------------------

  சித்தமருத்துவம்       QUESTION -2

1. (i) சித்தர்கள் பற்றி ஒரு கட்டுரை வரைக.

   (ii) வளிமுதலா எண்ணிய மூன்று' எவை? அவை பற்றி விளக்குக

2(i) சங்ககாலத்தில் அறுவை மருத்துவம் இருந்ததா- விளக்குக.

 (ii) மருத்துவம் கூறும் மூன்று கூறுகள் யாவை?

3(i) உடம்பில் ஓடிக் கொண்டிருக்கின்ற வாயுக்கள் பத்து என்பன யாவை?

 (ii) மூலாதாரம் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுவது  எது?

4(i) கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி' பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகைகளின் வேர்களைக் கொண்ட கூட்டுப் பொருட்களின் மருத்தின் பெயர் யாது?

 (ii) மிளகின் மருத்துவப் பயன்கள் யாவை?

5(i) அறுகம்புல்லின் மருத்துவப் பயன்களை எழுதுக.

 (ii) ஏலக்காய் மருத்துவ பயன்கள் யாவை?

6(i) இஞ்சி, சுக்கு, கடுக்காயில் செய்யப்பட்ட மருந்துகளின் பயன்கள்யாவை?

 (ii) கருவேல் மூலிகையின் எப்பகுதி மருத்துவப் பயனுடையது?

7(i) மஞ்சளின் மருத்துவ பலன்கள் யாவை?

 (ii) காக்க வேண்டிய மூலிகைகள் யாவை?

8(i) ஜீரண சக்தி அதிகரித்து, பசியும் அதிகரிக்கும் மூலிகை யாது?

 (ii) தூதுவளை பழத்தை வத்தலாக காயவைத்து, வதக்கி சாப்பிட்டால் எக் குறைபாடுகள் நீங்கும்?

9(i) சூரணம் பற்றி நீ அறிந்தவற்றை எழுதுக.

 (ii) தைலம் என்றால் என்ன? ஐந்து தைலத்தின் பயன்களைப் பற்றி குறிப்பிடுக.

10(i) செம்முள்ளித் தைலம் தயாரிக்கும் முறை
செய்யத் தேவைப்படும் பொருட்கள் யாவை?

  (ii) சித்த மருத்துவ வடிவங்களைப் பட்டியலிடுக.

 Ans

1. (i) இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறைஆற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்களே சித்தர்கள்.

   (ii) தமிழ் மறையெனப் போற்றப் பெறும் திருக்குறளில் அமைந்துள்ள மருந்து என்னும் அதிகாரம்'- மூன்று என்னும் எண்ணால் உரைக்கப்படுகின்றவை வளி, அழல், ஐயம் என்னும் மூன்று கூறுகளாகும். இம்மூன்றும் தத்தமக்குரிய அளவின்படி அமையாமல் குறைந்தாலோ' கூடினாலோ உடம்பில் பலவகை நோய்களை உண்டாக்கும். இம்மூன்றும் உடலுக்குக் கேட்டைத் தரும்.

" மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று'

2(i) விழுப்புண்ணைத் தைக்கும் முறையைப் பதிற்றுப் பத்து குறிப்பிகிறது.

மீன்தேர் கொட்பின் பனிக்கய மூழ்கிச்

சிரல் பெயர்ந் தன்ன நெடுவெள்ளூசி

நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின் ''10

நீரிலுள்ள மீனைக் கொத்துவதற்காக நீரில் பாய்ந்து, அடுத்த நொடியில் நீரைவிட்டு மேலே பறந்து செல்லும் சிரல் பறவையைப் போல, நெடிய வெள்ளூசி புண்ணுக்குள் நுழைந்து வெளியே வருகிறது என்கிறது.

 (ii) மூன்று என்னும் எண்ணால் உரைக்கப்படுகின்றவை வளி, அழல், ஐயம் என்னும் மூன்று கூறுகளாகும். இம்மூன்றும் தத்தமக்குரிய அளவின்படி அமையாமல் குறைந்தாலோ' கூடினாலோ உடம்பில் பலவகை நோய்களை உண்டாக்கும். இம்மூன்றும் உடலுக்குக் கேட்டைத் தரும்.

3(i) உடம்பில் ஓடுகின்ற உதிரத்தைப் போல, வாயுக்களும் உடம்பில் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவ்வாயுக்கள் பத்து என்பர். அவை; பிராணன், அபானன்' உதானன், வியானன்' சமானன், நாகன்' கூர்மன், கிருகரன்' தேவதத்தன், தனஞ்சயன் என்பனவாயுக்களாகும்.

 (ii) நாடிகள் உதிக்கின்ற மூலமாக விளங்குகின்ற மூலாதாரம் தொடங்கி சுவாதிட்டாணம்' மணிபூரகம், அநாகதம்' விசுத்தி, ஆக்கினை என்னும் ஆறாகும்.

4(i)சிறுபஞ்சமூலம்' என்பது கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி' பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகைகளின் வேர்களைக் கொண்ட கூட்டுப் பெயராகும். இந்நூலின் செய்யுள்கள் ஐந்து கருத்துகளைக் கூறி ஒரு நீதியை உரைப்பதாக அமையும்.

 (ii) மிளகு மிளகு-அது தமிழ் நிலத்தின் மருந்து எனல் பொருந்தும். கடல் கடந்து சென்றும் தமிழ் நிலத்துப் பெருமையைக் கிரேக்க நாட்டிலும் நிலை நிறுத்திய பெருமை மிளகுக்கு உண்டு.பகைவன் வீட்டிற்குச் சென்றாலும் பத்து மிளகொடு போ' என்பது பழமொழி. பகைவன் வீட்டில் நஞ்சு தரப்பட்டாலும் அது' கொண்டு செல்லும் பத்து மிளகினாலேயே குணமாகிவிடும் என்பதை உணர்த்தும். அவ்வாறான மிளகு, மருத்துவத்தின் மூலப்பொருளாக அமைவதோடு உணவாகவும் அமையும்.

5(i) அறுகம்புல் தோலின் மேல் ஏற்படும் வெண்புள்ளிகளை குணப்படுத்த வல்லது.

 (ii) ஏலக்காய், சீரகம், சுக்கு, கிராம்பு சம அளவாகப் பொடித்து, 2 கிராம் தேனில் தினமும் 3 வேளைகள் சாப்பிட்டு வர வயிற்று வலி குணமாகும்.

6(i) இஞ்சி, சுக்கு, கடுக்காயில் செய்யப்பட்ட மருந்துகள் ஆண், பெண் உறவுகளை பலப்படுத்தி, குழந்தைப்பேறு தரக்கூடியவை.

 (ii)  கருவேல் மூலிகையின் கருவேலம் பட்டை சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். பிசின் சளியகற்றி தாதுக்களின் எரிச்சசல் தணிக்கும், காச்சல், வாந்தி, இருதயநோய், நமச்சல், மூலம், வயிற்றுக்கடுப்பு, நுரையீரல் நோய், கிட்னி சம்பந்தமான நோய்கள் குணமடையும். காமம் பெருக்கும், கொழுந்து தாதுக்களின் எரிச்சல் தணித்து அவற்றைத துவளச்செய்யும், சளியகற்றும்.

7(i) மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். புற்றுநோய் செல்களை தடுக்கும். கீமோதெரப்பியால் உண்டாகும் பக்க விளைவுகளையும் குறைக்கும்.

 (ii) துளசி, தூதுவளை,சோற்றுக்கற்றாழை, மஞ்சள் கரிசாலங்கண்ணி, பொன்னாங்கண்ணி, நேத்திரப்பூண்டு, நிலவேம்பு, பூலாங்கிழங்கு, ஓமவள்ளி, அருகம்புல், பூனை மீசை, ஆடாதொடை, நொச்சி, தழுதாழை, கழற்ச்சி

8(i) துளசி இலையை சாதரணமாக மென்றுத் தின்றால் ஜீரண சக்தி அதிகரிப்பதோடு, பசியும் அதிகரிக்கும்.

 (ii) தூதுவளை பழத்தை வத்தலாக காயவைத்து, வதக்கி சாப்பிட்டால் கண் குறைபாடுகள் நீங்கும்.  

9(i) சித்தர்கள் நமக்களித்த மூலிகைப் பொடிகளின் மற்றொரு பெயர் சூரணம்.இவை சாப்பிட்டுவர, வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும். அஜீரணக் கோளாறு நீங்கும். ரத்தம் சுத்திகரிக்கப்படும். ரத்த ஓட்டம் சீராகும். கல்லீரல், நுரையீரலில் புண்கள் வராமல் பாதுகாக்கும். ஆஸ்துமா, மஞ்சள் காமாலை இருப்பவர்களுக்கு ஏற்றது.

 (ii) தைலம் மேற் பூச்சாகவும் உள் பூச்சாகவும் பயன்படுவது.சங்கம் சேர் தைலம், சந்தனாதித் தைலம் உள்ளிட்டவை.

10(i)    செம்முள்ளிச் சமூலம் சாறு+ நல்லெண்ணெய்
,
தாழை விழுது, ஏலம், கருஞ்சீரகம், கார்கோலரிசி, வகைக்கு பலம் - 1 அரைத்து சேர்த்துக் காய்ச்சி முழுகி வர காசம், கண்ணீர்ப் பாய்ச்சல், அரையாப்பு, சயம், ஈளை, மந்தாரகாசம், அண்டவாதம், வீக்கம், விசவாதம் தீரும்.

  (ii) சூரணம்-இலேகியம் -செந்தூரம் –செந்தூரம்-பற்பம்- சாறு -கற்பம் -கற்பம்
குடிநீர்

No comments:

Post a Comment

II BA 4th sem major papers

  இளங்கலை இரண்டாமாண்டு - நான்காம் பருவம்             முதன்மைப் பாடம் - தாள் ;.7 -- இலக்கணம் - 4                      தண்டியலங்காரம்...