எழுத்திலக்கணம்
இளங்கலைத் தமிழ்இலக்கியம்
நன்னூல் -எழுத்ததிகாரம்
மொத்த மதிப்பெண்கள் : 75 நேரம் : 3 மணிகள்
பகுதி - ஐ 10× 1 ±10
அனைத்து வினாக்களுக்கும் விடையளி
1. நூல் எத்தனை வகைப்படும்?
அ) 3 ஆ) 4 இ) 6 ஈ) 8
2. உலக ஒழுக்கத்தை அறியும் அறிவுடையவன் யார; ?
அ) அரசன் ஆ) ஆசிரியன் இ) புலவன் ஈ) இறைவன்
3. சிறப்புப் பாயிரம் செய்தற்கு உரியவர;களுள் ஒருவர;
அ) காவலன் ஆ) படைத்தலைவன் இ) நூலாசிரியர; ஈ) தன்னுடைய ஆசிரியன்;
4. முதலெழுத்துகள் எத்தனை?
அ) 30 ஆ) 12 இ) 18 ஈ) 214
5. மார;பை இடமாகக் கொண்டு பிறக்கும் எழுத்துகள்
அ) இடையினம் ஆ) மெல்லினம் இ) ஆய்தம் ஈ) வல்லினம்
6. ஓரெழுத்தொரு மொழிகள் எத்தனை?
அ) 32 ஆ) 42 இ) 60 ஈ) 12
7. நிகழ்கால இடைநிலைகளில் ஒன்று
அ) ஆல் ஆ) ஐ இ) இன் ஈ) கின்று
8. பு++ கொடி ஸ்ரீ பு+ங்கொடி இதில் வரும் ங் என்ற விகாரம்
அ) தோன்றல் ஆ) வலித்தல்; இ) மெலித்தல் ஈ) உருபு
9. தெங்கு+ காய் எவ்வாறு புணரும்?
அ) பனங்காய் ஆ) தென்னங்காய் இ) தேங்காய் ஈ) மாங்காய்
10. பெயருக்குப்பின் தம் பொருளைத் தர வல்லது……………
அ) வேற்றுமையுருபு ஆ) நிலைமொழி இ) வினைச்சொல் ஈ) பெயரெச்சம்
பகுதி - ஐஐ 5×2 ± 10
அனைத்து வினாக்களுக்கும் குறுகிய அளவில் விடையளி
11. நூலால் அடையும் பயன் யாது?
12. சார;பெழுத்துகள் யாவை?
13. தொடரெழுத்தொருமொழியின் இரு வகைகள் யாவை?
14. வேற்றுமைப் புணர;ச்சி வரையறு.
15. இயல்பு புணர;ச்சி என்றால் என்ன?
பகுதி - ஐஐஐ 5×5 ± 25
ஒரு பக்க அளவில் விடை தருக.
16. அ) மூவகை நூல்களின் இலக்கணம் கூறி விளக்குக. (அல்லது) ஆ) பாடங்கேட்கும் முறையினை விவரி.
17. அ) பெயர;சொல்லின் இலக்கணம் கூறி விளக்குக. (அல்லது) ஆ) சந்திய கரம் குறித்து எழுதுக.
18. அ) பண்புப் பகுதிகளுக்கான சிறப்புவிதியினை விளக்குக.(அல்லது)ஆ) காலங்காட்டும் விகுதிகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
19. அ) விகாரப்புணர;ச்சியினை விவரி. (அல்லது)
ஆ) உயிரீற்றுச் சிறப்புப் புணர;ச்சியினை விளக்குக.
20. அ) லகர,ளகர ஈறு புணரும் விதத்தினை விளக்குக. (அல்லது) ஆ) பொதுச் சாரியை குறித்து எழுதுக.
பகுதி - ஐஏ 3× 10 ±30
கட்டுரை வடிவில் விடை தருக. (எவையேனும் மூன்றினுக்கு மட்டும்)
21. சூத்திரத்தின் இலக்கணம் கூறி வகைகளை விளக்குக.
22. பிறப்பின் பொது இலக்கணம் கூறி முதலெழுத்துகளின் பிறப்பு குறித்து ஆராய்க..
23. பகுபத உறுப்புகளை நன்னூலார; வழி விளக்குக.
24. செய்யுள் விகாரம் புணரும் விதம் குறித்து விளக்குக.
25. உருபு புணர;ச்சிக்குரிய சிறப்பு விதியினை விவரிக்க.
பகுதி – அ (15×1±15 மதிப்பெண்கள
அனைத்து வினாக்களுக்கும் விடையளி
1. போரில் ஏற்படும் புண்களை ஆபரணங்களாகக் கொண்டவன் யார்?
(அ) அதியன் (ஆ) காpகாலன் (இ)திருமுடிக்காரி (ஈ) சீயகங்கன்
2. தந்திரவுத்தி என்பதில் உள்ள தந்திரம் என்பதின் பொருள் என்ன?
(அ) மந்திரம் (ஆ) தன்திறமை (இ) நூல் (ஈ) தந்துரை
3. இல்லிக்குடம் யாருக்கு ஒப்பாகச் சொல்லப்படுகிறது?
(அ) முதல் மாணாக்கர் (ஆ) இடைமாணாக்கர் (இ) கடை மாணாக்கர் (ஈ) நல்லாசிhpயர்
4. தனிநிலை என்று அழைக்கப்படுவது எது?
(அ) உயிரெழுத்து (ஆ) மெய்யெழுத்து (இ)ஆய்தஎழுத்து (ஈ)உயிர்மெய்யெழுத்து
5. பெயர்ச்சொல்லின் வகையறிக: சிலம்பு
(அ) காரணப்பொதுப்பெயர் (ஆ) காரணச்சிறப்புப்பெயர் (இ) இடுகுறிப்பொதுப்பெயர் (ஈ)இடுகுறிச்சிறப்புப்பெயர்
6. அங்காப்பு என்பதின் பொருள் என்ன?
(அ) வாயைத்திறத்தல் (ஆ) வாயைப்பிளத்தல் (இ)வாயை மூடுதல் (ஈ)வாயைக்கிழித்தல்
7. ஓரெழுத்தொருமொழிகள் எத்தனை?
(அ) 35 (ஆ) 52 (இ)42; (ஈ) 41
8. பகுதி என்பது என்ன பதம்?
(அ) பகுபதம் (ஆ) பகாபதம் (இ) பெயர்பகுபதம் (ஈ) வினைபகுபதம்
9. நிகழ்கால வினை இடைநிலைகள் எத்தனை?
(அ) 3 (ஆ) 2 (இ) 4 (ஈ) 5
10. ஒன்பது என்ற எண்ணுடன் வரும் நூறு என்னவாகத் திhpயும்?
(அ) பத்து (ஆ) நூறு (இ) ஆயிரம் (ஈ) இரண்டாயிரம்
11. உடம்படு மெய்கள் எவை?
(அ) ய்,ல் (ஆ) ய்,வ் (இ) ய்,ழ் (ஈ) ல்,வ்
12. மேல்காற்று எவ்வாறு பிhpயும்?
(அ) மே+காற்று (ஆ) மேற்கு+காற்று (இ)மேல்+காற்று (ஈ)மெல்லியூகாற்று
13. தனிக்குறில் முன் ஒற்று எதுவாpன் இரட்டும்?
(அ) உயிர் (ஆ) உடல் (இ) மெய் (ஈ) உயிர்மெய்
14. சோணாடு - இலக்கணக் குறிப்பு தருக
(அ) மங்கலம் (ஆ) இடக்கரடக்கல் (இ) குழூஉக்குறி (ஈ) மரூஉ
15. நீர் என்னும் சொல் உருபுகளோடு புணரும்போது என்னவாக மாறும்?
(அ) எம் (ஆ) நும் (இ) என் (ஈ) நின்
பகுதி - ஆ(3×5ஸ்ரீ15 மதிப்பெண்கள்)
எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளி
16. நூலைப் பயிலும் முறையை நன்னூல் வழி நிறுவுக
17. ஐகார,ஔகாரக் குறுக்கங்களை எழுதுக.
18. பகுபத உறுப்புகளைச் சான்றுகளுடன் தெளிவுபடுத்துக.
19. உகர ஈற்றுப் புணர்ச்சி குறித்து எழுதுக
20. எகின்,குயின் என்பவை எவ்வாறு புணரும்?
பகுதி - இ
அனைத்து வினாக்களுக்கும் விடையளி
21. (அ) நூலின் பத்துக்குற்றம், பத்து அழகு ஆகியவற்றை விவாpக்க
(அல்லது)
(ஆ) முப்பத்திரண்டு வகை உத்திகள் குறித்து நன்னூலார் கூறுவதை விளக்குக
22. (அ) சார்பெழுத்துக்கள் மொத்தம் எத்தனை? அவற்றை விளக்குக
(அல்லது)
(ஆ) மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் குறித்து எழுதுக
23. (அ) தெரிநிலை வினைமுற்று விகுதிகள் குறித்து நன்னூலார் கூறுவன யாவை? விளக்குக
(அல்லது)
(ஆ) வடமொழியாக்கம் பற்றி எழுதுக
24. (அ) வேற்றுமைப்புணர்;ச்சி, அல்வழிப்புணர்;ச்சி வகைகளை விளக்குக
(அல்லது)
(ஆ) ‘இகர’ ஈற்றுப் புணர்;ச்சி குறித்துக் கூறுக
25. (அ) சாhpயைப் புணர்ச்சி பற்றிய செய்திகளைக் கூறுக.
(அல்லது)
(ஆ) நால்வகைப் புணர்ச்சிகளுக்குhpய புறநடையை எடுத்தெழுதுக.
நன்னூல் -எழுத்ததிகாரம் வினாவிடையில் 1
1. பாயிரத்தின் பெயர்களைக் கூறுக?
1)
முகவுரை 2) பதிகம் 3) அணிந்துரை 4) நூல் முகம் 5) புறவுரை 6) தந்துரை 7) புனைந்துரை ஆகிய ஏழும் பாயிரத்தின் பெயர்கள் ஆகும்.
2. நூன் முகம், புனைந்துரை பெயர்க்காரணம் தருக?
நூன் முகம்-நூலுக்கு முகம் போல அமைவதால் நூன்முகம் எனப்பட்டது.புனைந்துரை- இது ஒரு நூலில் உள்ள சிறப்பானச் செய்திகளை எடுத்துரைப்பது
புனைந்துரை ஆகும்.
3. பாயிரம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
பாயிரம்- பாயிரம் என்பது ஒரு நூலின் வரலாறு ஆகும்.
வகை- பாயிரம் இரண்டு வகைப்படும்
அவை1)
பொதுப் பாயிரம் 2)
சிறப்புப் பாயிரம்
4. பொது பாயிரத்தின் ஐந்து வகை இலக்கணம் யாது?
1)
நூலினது வரலாறு
2)
நூலைக்
கற்பிக்கும் ஆசிரியனது வரலாறு
3)
அவ்வாசிரியன்
மாணவனுக்கு நூலை பாடம் சொல்லும் வரலாறு
4)
மாணவனது வரலாறு
5)
மாணவன் பாடம்
கேட்டலின் வரலாறு
5. நூல்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
நூல்கள் மூன்று
வகைப்படும். அவை,
1) முதல் நூல் 2) வழி நூல்3) சார்பு நூல்
6. முதல் நூலின் இலக்கணம் யாது?
தெய்வத்தால்
எழுதப்படுகின்ற நூலையே முதல் நூல் என்க. ஆனால் இறைவனுடைய அருளைப் பெற்றவர்கள் எழுதப்படுகின்ற நூல்கள் அனைத்துமே முதல் நூல் ஆகும்.
(உ.ம்) அகத்தியம்
7. வழி நூலின் இலக்கணம் யாது?
கடவுள் அல்லது
அவனுடைய அருளைப் பெற்றவர்கள் எழுதிய நூல்களில் பொருளை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு
அன்னுhல் இருக்கவே தன் காலத்திற்கு ஏற்ற சில
சில வேறுவாடுகளை உலகிலுள்ளோர் ஏற்றுக் கொள்ளப்படுவது ஆகும். இன்நூல் அழியா தன்மை
பெற்று விளங்கும்.
(உ.ம்) தொல்காப்பியம்.
8. பின்னோர் வேண்டும் விகற்பம் கூறல் என்றால் என்ன?
இறந்தது விலக்கல்-- பழைய இலக்கணங்களாகி சில பிற்காலத்தில்
வழங்கப்படாமல் (அ) ஏற்றுக் கொள்ளப்படாமல் இருந்தால் பழையவற்றை இறந்தது விலக்கல்
என்ற உத்தியினால் விளக்குவர்.
எதிரது போற்றல்- இக்காலத்தில் விளங்குகின்றவற்றிற்கு புதிய இலக்கணங்களை
உருவாக்கி எதிரது போற்றல் என்னும் உத்தியினால் ஏற்றுக் கொண்டும் கூறுவது ஆகும்.
இவ்விரண்டையும் வழிநூல் இலக்கணம் என்றும் கூறலாம்.
9. சார்பு நூலின் இலக்கணம் யாது?
முதல் நூல்
மற்றும் வழி நூல் முதலானவை இருவகை நூல்களுக்கும் பொருள் முடிவால் ஓரளவு ஒத்தும்
பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்படாமல் இயற்றப்படுவதம் சார்பு நூல் ஆகும்.(உ.ம்) நன்னுhல்
10. பொன்னைப் போல் போற்றுவோம் எதனை?
தனக்கு முன்னால்
இருந்த ஆசிரியர்கள் இயற்றிய நூலின் பொருளை மட்டுமின்றி அவர்கள் இலக்கணத்தில்
பயன்படுத்திய சூத்திரங்களின் சில வரிகளையும் பொன்னைப்போல காப்பாற்றுவோம் என்பதற்கு
அடையாளமாக தமது நூலில் ஆங்காங்கே பயன்படுத்தி செல்வது வழிநூல், சார்பு நூலுக்குரிய அடையாளங்கள் ஆகும்.
11. நூற்பயன் யாவை?
ஒரு நூல்
படிக்கப்படுபவரின் நலனுக்காகவும் சமுதாயத்தில் நல்விளைவுகளை ஏற்படுத்துவதற்காகவும்
எழுதப்பட வேண்டும். ஒரு நூலானது நான்கு வகை பயன்களைக் கொண்டிருக்கும். அவை,1)
அறம் 2) பொருள் 3) இன்பம் 4) வீடு ஆகியவை.
12. எழுவகை மதம் யாது?
1) பிறர்
மதத்திற்குத் தான் உடன்படுதல் 2) பிறர் மதத்தை மறுத்தல் 3) பிறர் மதத்திற்கு உடன்பட்டு பின்பு மறுத்தல் 4) தானே ஒரு பொருளை எடுத்துக் கூறி அதனை வருமிடந்தோறும் நிலைநிறுத்துதல் 5) இருவரால் ஒன்றுக்கு ஒன்று முரணாக கொள்ளப்பட்ட இரண்டு பொருள்களுள் ஒரு பொருளில்
துணிவு கொள்ளுதல் 6) பிறர் நூலில் உள்ள குற்றத்தை எடுத்துக் காட்டுதல் 7) பிறர் மதத்திற்கு உடன்படாமல் தன் மதத்தையே தான் கொள்ளுதல்
13. வெற்றெனத் தொடுத்தல், மற்றொன்று விரித்தல் யாது?
வெற்றெனத் தொடுத்தல்- பொருள் வெளிப்படையாகத் தோன்றச் சொற்களைச்
சேர்த்துக் கொள்ளுதல்
மற்றொன்று விரித்தல்- சொல்லத் தொடங்கிய பொருளைச் சுருக்கி
இடையிலே மற்றொரு பொருளை விரித்துச் சொல்லுதல்.
14. மதத்தினுள் வந்தன, உத்தியில் வந்தன 2 உதாரணம் தருக?
1) ஒருதலை துணிதல்- இரு மாறுபட்ட கொள்கைகளில் ஒன்றைத் துணிந்து எடுத்துக்
கொள்ளுதல்
2) பிற நூன் முடிந்தது தானுடன் படுதல்- பிற நூலிலே முடிந்த முடிவை தான் ஏற்றுக் கொள்ளுதல்
3) தன்குறி வழக்கம் மிகவெடுத் துரைத்தல்- தான் புதிதாகக் குறித்து வழங்குவதைப் பல
இடங்களில் எடுத்துச் சொல்லுதல்
15) முறையின் வைப்பே, உலக மலையாமே-பொருள் தருக?
முறையின் வைப்பே - படலம், ஓத்து முதலியவற்றை ஏற்ற முறைப்படி வைத்தல்
உலகமலை யாமே= உயர்ந்தோர் கருத்து மாறுபடாமல் இருக்க
வேண்டும்.
16) அழகியலும் வந்தன, உத்தியிலும் 2 உதாரணம் தருக?
1) சொற்பொருள் விரித்தல் 2) தொடர்சொற்புணர்தல்
அ) ஒரு பொருளை வெளிப்படையாக விளங்கும்படி சொல்லுதல்
ஆ) ஒன்றுக்கொன்று தொடர்புடைய சொற்களை சேர்த்து வைத்தல்
(உ.ம்) மலர், கொடி
2) ஓத்து முறை வைப்பே- இயல்களை காரண, காரிய முறைப்படி வைத்தல்
3) எடுத்துக்காட்டல்- தான் சொல்லும் இலக்கணத்திற்கு தானே
இலக்கியத்தை எடுத்துக் காட்டல்
17) இரட்டுற மொழிதல், ஏதுவின் முடித்தல் பெயர்க்காரணம் தருக?
இரட்டுற மொழிதல்-
ஒரு வாக்கியத்தை
இரண்டு பொருள்படக் கூறுதல் இரட்டுற மொழிதல் ஆகும்.
ஏதுவின் முடித்தல்-
முன்பு காரணம்
விளங்காமல் கூறப்பட்ட ஒன்றை பின் காரணம் காட்டி முடிவு செய்தல்
18) உத்தி என்றால் என்ன?
i) ஒரு நூலால்
உணர்த்தப்படும் பொருளை, நூல் வழக்கோடும் உலக வழக்கோடும்
பொருந்துமாறு காண்பித்து ஏற்குமிடத்தை அறிந்து இவ்விடத்தில் இவ்வாறு சொல்லுதல்
பொருந்தும் என நினைத்து தக்க படியாகச் செலுத்துதல் தந்திரவுத்தி ஆகும்.
ii) நூற் பொருத்தத்தை கூறுவது உத்தி எனப்படும்.
19) ஒத்து என்றால் என்ன?
i) ஒரு சாதியாயுள்ள
மணிகளை வரிசையாகப் பதித்து வைத்தாற் போல, ஓரினமாயுள்ள பொருள்களை ஒரு வழிப்படச் சொல்லுவது ஒத்து எனப்படும்.
ii) ஒத்து என்றால் இயல் என்றும் பொருள் உண்டு.
20) படலம் என்றால் என்ன?
ஒரு வழிப்படாமல்
பல்வேறுபட்ட பொருள்களினால் பொது வகையாகக் கூறினால், அது படலம் என்னும் உறுப்பு ஆகும்.
21) சூத்திரத்தின் இலக்கணம் யாது?
i)
சில வகை
எழுத்துக்களால் ஆகிய வாக்கியத்தில் பலவகைப்பட்ட விரிந்த பொருள்களை செவ்வையாக
அடக்கி அப்பொருளை விளங்கச் செய்வது சூத்திரம் ஆகும்.
ii)
குற்றமில்லாமையும், சொல்வலிமையும் பொருள் வலிமையும் ஆழமுடைமையால் பொருள்
நுணுக்கங்களும் சிறந்து வருவன சூத்திரம் ஆகும்.
22) அரிமா நோக்கம், ஆற்றொழுக்கு – விளக்குக?
அரிமா நோக்கம்- முன்னும், பின்னும் பார்க்கின்ற சிங்கத்தின் பார்வையைப் போன்றது சூத்திர நிலை.
i) ஆற்றொழுக்கு- சூத்திரங்கள் ஒன்றோடு ஒன்று பொருளால் தொடர்ந்து நிற்கும்
நிலைகள், இடையறாது ஒருமுகமாக ஓடுகிற் ஆற்று
நீரோட்டத்தையும் போன்றது சூத்திரநிலை.
23) விரிவு அதிகாரம் என்றால் என்ன?
i) விரிவு- சொல்லில் மறைந்து நின்றவற்றை எடுத்துக் கூறுவது
ii) அதிகாரம்- ஒரு அதிகாரத்தில் எடுத்துக் கொண்டப் பொருளை மற்றொரு
இடத்திலும் பொருத்திக் காட்டுதல்.
24) முக்காண்டிகையுரை என்றால் என்ன?
கருத்துரை, பதவுரை, எடுத்துக்காட்டு
ஆகிய மூன்றையும் கொண்டிருந்தால் அதற்கு முக்காண்டிகையுரை எனப்படும்.
25) ஐங்காண்டிகையுரை என்றால் என்ன?
கருத்துரை, பதவுரை, எடுத்துக்காட்டு
ஆகிய மூன்றுடன் வினா, விடை ஆகியவற்றையும் சேர்த்துக் கூறுவது
ஐங்காண்டிகையுரை எனப்படும்.
26) பத்துக் குற்றத்தில் மூன்று கூறுக?
i) குறித்த பொருளை
விளக்குவதற்கு வேண்டிய சொற்களில் குறைவுபடக் கூறுதல்.
ii) குறித்த பொருளை
விளக்குவதற்கு வேண்டிய சொற்களைக் காட்டிலும் மிகுதியாகக் கூறல்.
iii) முன்ன சொன்ன
பொருளையே பின்னும் கூறுதல்.
27) நிலம், மலை யாருக்கு உவமை?
நிலம், மலை நல்லாசிரியருக்கு உவமையாகும்.
நிலம் i) பிறரால் அறியப்படாத உருவரப்பரப்பின் பெருமையும் தன்மேல்
பொருந்திய சுமைகளால் கலங்காத வலிமையும், தன்னைச் சார்ந்த மக்கள் தோண்டுதல் முதலிய குற்றங்களை செய்தாலும் பொறுக்கின்ற
பொறுமையும் பருவ காலத்தில் உழவர் செய்யும் முயற்சியின் அளவுக்கு ஏற்ப அவர்களுக்கு
பயனை தருவது நல்ல நிலத்தின் சிறந்த குணங்கள் ஆகும்.
மலை
i) அளவிடாத கல்விப்
பெருமையுடையவன் ஆசிரியன். நெடுந்தொலைவில் உள்ளவராலும் காணப்படும் உயர்ச்சியும் ஆசிரியருக்கே
உரியது.
ii) மழை பெய்யாமல்
வறண்ட காலத்திலும் தன்னைச் சேர்ந்த உயிர்களுக்கு நீர்வளம் கொடுக்கும் கொடையும்
மலைக்குள்ள குணம் ஆகும்.
iii) இவ்வாறு ‘நிலம், மலை’ ஆகிய இரண்டும் நல்லாசிரியனுக்கு உவமையாகும்.
28) கழற்குடம், பருத்தி குண்டிகை யாருக்கு உவமை?
கழற்குடம், பருத்தி குண்டிகை ஆகியவை இரண்டும் ஆசிரியர் ஆகாதவருக்கு உவமை ஆகும்.
29) நெய்யறி, எருமை யாருக்கு உவமை?
நெய்யறி, எருமை ஆகியவை ‘கடை’ மாணாக்கருக்கு உவமை ஆகும்.
30) சிறப்புப் பாயிரம் செய்வதற்கு உரியவர் யார்?
i) தன்னுடைய ஆசிரியன்
ii) தன்னுடன் பாடங்
கேட்டவன்
iii) தன்னுடைய
மாணாக்கன்
iஎ) தன் நூலுக்கு
தகுதியான உரையை செய்தவன் ஆகியோர், இந்நால்வரில்
ஒருவர் சிறப்பு பாயிரம் செய்வதற்கு உரியவர் ஆவர்கள்.
1.பகாப்பதம் எத்தனை வகைப்படும்? - பெயர் பகாபதம்,
வினை, இடை, உரி என நான்கு வகைப்படும்.
2. பகுபதம் என்றால் என்ன? - பகுதி, விகுதி, இடைநிலை எனப் பிரிக்கப்படும் பதம் பகுபதம் எனப்படும்.
3. பகுபதம் எத்தனை
வகைப்படும்? அவை யாவை? - இரண்டு வகைப்படும். 1. பெயர்ப் பகுபதம் 2. வினைப் பகுபதம் ஆகும்.
4. பெயர் பகுபதம் எதன்
அடிப்படையில் தோன்றும்? - பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் எனும் ஆறின் அடிப்படையில் தோன்றும்.
5. பகுபத உறுப்புகள்
யாவை? - பகுதி,
விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்.

6. பகுபதத்தில் குறைந்த
அளவு இருக்க வேண்டிய உறுப்புகள் யாவை?
- பகுதி, விகுதி
7. ஏவல் வினையாக அமைவது
எந்த பகுபதம்? - வினைப் பகுபதம்
8. ′இல்′
என்னும் எதிர்மறை
இடைநிலை அமைந்துள்ள வினைச்சொல் எது?
- கண்டிலன்
9. செய்தான் - இச்சொல்லில் அமைந்துள்ள இடைநிலை எது? - ′த்′
10. மலை என்ற சொல்லின்
வேறுபெயர்கள் யாவை? - வெற்பு, சிலம்பு, பொருப்பு
|
பதம் என்பதன் பொருள்
வரையறை கூறுக. |
|||||
|
ஓர்
எழுத்துத் தனித்து
வந்தோ அல்லது பல எழுத்துகள்
தொடர்ந்து வந்தோ பொருள் தருமானால்
அது ‘பதம்’ எனப்படும்.
-------------------------------------------------- |
||||
1.
ஓரெழுத்து ஒரு மொழி பற்றி ஒரு கட்டுரை வரைக.
ஓர் எழுத்து தனியே
நின்று பொருள் தருவது ஓரெழுத்து ஒரு மொழியாகும்.
ஓரெழுத்து ஒரு மொழியும்
அதன் பொருள்களும்
கீழ்க்கண்ட ஓரெழுத்து
ஒரு மொழியில் நடைமுறையில் நாம் பயன்படுத்தும் கை, தீ, தை, நீ, வா, மை, வை, பூ, பை, போ போன்ற சில சொற்களைத் தவிர்த்து பெரும்பாலானவை பாக்களில்
பயன்படுத்தக்கூடியவை.
அ – எட்டு, அழகு சிவன்
ஆ – பசு, ஆன்மா, எருது
இ – ½-யின் தமிழ் வடிவம்
ஈ –
ஈதல், கொடுத்தல், பறக்கும் பூச்சி
உ – சிவன், ஆச்சர்யம், இரண்டு
ஊ – ஊன், இறைச்சி, உணவு
எ – வினா எழுத்து,
ஏழு
ஏ – அம்பு, வினாப் பெருக்கம், இறுமாப்பு
ஐ – தலைவன், அரசன், வியப்பு, ஆசான்
ஓ – மகிழ்ச்சி, வியப்பு, மதகுப்பலகை
ஒள – உலகம், ஆனந்தம்
க – கடவுள், பிரம்மன், அக்னி, ஒன்று
கா – சோலை, காத்தல், காவல்
கி – இறைச்சல் ஒலி
கு – பூமி, உலகம், குற்றம்
கூ – பூமி, உலகம், கூகை
கை – உறுப்பு, ஒழுக்கம், சிறகு, ஒப்பனை
கோ – அரசன், தலைவன், பசு, இறைவன்
கெள – கொள்ளு, தீங்கு, பற்று
சா – சாதல், இறத்தல், சோர்தல்
சி/சீ – இகழ்ச்சி, இலக்குமி, வெறுப்பு
சு – விரட்டுதல், சுகம், மங்களம்
சே – எருது, சிகப்பு, மரம்
சை – கைப்பொருள், அருவெருப்பு, ஒலி
தா – தருதல், கொடுத்தல், கேடு
தீ – நெருப்பு, சினம், தீமை, நரகம்
து – உண், அசைதல், உணவு
தூ – வெண்மை, தூய்மை, பகைமை
தே – தெய்வம், கடவுள், அருள்
தை – மாதம், தைத்தல், அலங்காரம்
நா – நாக்கு, நடு, அயலர்
நீ – முன்னிலை
நே - அன்பு, அருள், நேயம்
நை - நைதல், வருந்துதல்
நொ/நோ - துன்பம், நோய்
ப – நூறு
பா - பாட்டு, அழகு, பாதுகாப்பு
பி - அழகு, பிறவினை விகுதி
பீ - பெருமரம், மலம்
பூ - மலர், பூமி, பிறப்பு
பே - நுரை, மேகம், அச்சம்
பை - பசுமை, கைப்பை, இளமை (பையன்)
போ - போதல், செல்லுதல்
ம - சந்திரன், சிவன்
மா - பெரிய, விலங்கு, மேன்மை, மாமரம்
மீ - மேலே, உச்சி, ஆகாயம்
மூ - மூப்பு, முதுமை, மூன்று
மே - அன்பு, மேன்மை, மாதம், மேலே
மை - அஞ்சனம், கண்மை, இருள், மலடு
மோ - மோத்தல், முகர்தல்
ய - தமிழ் எழுத்து என்பதன் வடிவம்
யா - யாத்தல், யாக்கை, ஒரு வகை மரம்
வ - கால் பாகம்
வா - வருதல், தாவுதல், உண்டாக்குதல்
வி - அறிவு, நிச்சயம், ஆகாயம்
வீ - மலர், விரும்புதல், பறவை
வை - கூர்மை, வைத்தல், வைக்கோல்
வௌ -கைப்பற்று, ஒலிக்குறிப்பு, திருகு
------------------------------------------------------------------
2.பகுபதம்
பற்றி ஒரு கட்டுரை
வரைக.
பகுதி, விகுதி எனப் பிரிக்கக்
கூடியதாகவும் பிரித்தால் பொருள் தருவதாகவும் அமையும் சொல் பகுபதம் எனப்படும்.
இப்பகுபதம்
இரண்டெழுத்து முதல் ஒன்பது எழுத்துகள் வரை அமையும்.
கூனி - கூன்+இ - 2 எழுத்துப் பகுபதம்
கூனன் - கூன்+அன் - 3 எழுத்துப் பகுபதம்
தமிழன் - தமிழ்+அன் - 4 எழுத்துப் பகுபதம்
கருப்பன் - கருப்பு+அன் - 5 எழுத்துப் பகுபதம்
படித்தவர் - படி+த்+த்+அ+அர் - 6 எழுத்துப் பகுபதம்
அரங்கத்தான் - அரங்கம்+அத்து+ஆன் - 7 எழுத்துப் பகுபதம்
உத்திராடத்தான் - உத்திராடம்+அத்து+ஆன் - 8 எழுத்துப் பகுபதம்
உத்திரட்டாதியான் - உத்திரட்டாதி+ஆன் - 9 எழுத்துப் பகுபதம்
என்பன
போன்ற சொற்கள் இரண்டெழுத்து முதல் ஒன்பது எழுத்துவரை பயின்று வந்த பகுபதத்திற்கான
சான்றுகளாகும்.
பகுபத
வகைகள்
பகுபதம், பெயர்ப் பகுபதம், வினைப் பகுபதம் என இரண்டு
வகைப்படும்.
பகுபத
உறுப்புகள்
பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி விகாரம் என்ற ஆறும்
பகுபதத்தின் உறுப்புகளாகும்.
இந்த
ஆறு உறுப்புகளும் பகுபதத்தில் கட்டாயம் இருக்க வேண்டிய உறுப்புகள் பகுதி, விகுதி என்பனவாகும்.
பிற
உறுப்புகள் வரலாம், வராமலும்
போகலாம்.
பகுதி
பகுபதத்தின்
முதல் உறுப்பு பகுதி.
இப்பகுதி, பகாபதமாகவும் கட்டளைப் பொருளிலும்
வரும்.
மேலும், பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு சொற்களிலும்
இப்பகுதி அமையும்
எ.கா.,
பொன்னன் - பொன்+அன் - பொன் என்பது
பெயர்ப்பகுதி
அறிஞன் - அறி+ஞ்+அன் - அறி என்பது
வினைப்பகுதி
மற்றவன் - மற்று+அ+அன் - மற்று என்பது
இடைப்பகுதி
கடியவை - கடி+அ+வை - கடி என்பது
உரிப்பகுதி
விகுதி
பகுபதத்தின்
இறுதி உறுப்பு விகுதி ஆகும்.
இவ்விகுதி, திணை, பால், எண், இடம் காட்டுவதாய் அமையும்.
எ.கா.,
செய்தான் - செய்+த்+ஆன்
இச்சொல்லின் உள்ள ஆன்
என்ற விகுதியால் செயலைச் செய்தவன் உயர்திணை என்பதையும், அவன் ஆண்பால் என்பதையும் ஒருவன்
என்பதையும் அவன் படர்க்கை என்ற இடத்தில் உள்ளான் என்பதையும் குறிப்பதைக் காணலாம்.
இடைநிலை
பகுதிக்கும்
விகுதிக்கும் இடையில் வருவதால் இதனை இடைநிலை என்பர்.
இந்த
இடைநிலை, பெயர்
இடைநிலை, வினை இடைநிலை
என இரண்டு வகைப்படும். பெயர் இடைநிலை காலம் காட்டாது. வினை இடைநிலை
காலம் காட்டும்.
பெயர்
இடைநிலை
பெயர்ச்சொல்லில்
வரும் இடைநிலை பெயர் இடைநிலை எனப்படும்.
ஞ், ச், வ், த், ஆத், அ என்பன பெயர் இடைநிலைகளாக வருவன.
அறிஞன் - அறி+ஞ்+அன் - ஞ்
தங்கச்சி - தங்கை+ச்+ச்+இ - ச்
புலவன் - புலம்+வ்+அன் - வ்
பார்ப்பாத்தி - பார்ப்பு+ஆத்+இ - ஆத்
மன்னவன் - மன்+அ+அன் - அ
என்ற
இச்சொல்களில் பயின்று வந்த ஞ், ச், வ், ஆத், அ இடைநிலைகள் காலம் காட்டவில்லை.
காலம்
காட்டும் பெயர் இடைநிலைகள்
பெயர்
இடைநிலைகள் காலம் காட்டாது எனினும் வினையாலனையும் பெயரில் வரும் இடைநிலைகள் காலம்
காட்டும்.
பார்த்தவன்
- பார்+த்+த்+அ+அன் - த்
இச்சொல்லில் பயின்று வந்த
த் என்ற இடைநிலை இறந்த காலம் காட்டுகிறது. இவ்வாறு வினையாலனையும் பெயரில் வரும்
இடைநிலைகள் காலம் காட்டும். ஏனெனில் வினையாலனையும் பெயர்கள்
அடிப்படையில் ஒரு வினைசொற்கள்.
வினை
இடைநிலைகள்
வினைமுற்றின்
இடையில் வரும் இடைநிலைகள், வினை இடைநிலைகள் எனப்படும்.
வினை
இடைநிலைகள் காலம் காட்டும்.
காலம்
காட்டும் நிடைநிலைகள்
த், ட், ற், இன் - இறந்த கால இடைநிலைகள்
கிறு, கின்று, ஆநின்று - நிகழ்கால இடைநிலைகள்
ப், வ் - எதிர்கால இடைநிலைகள்
எ.கா.,
செய்தான் - செய்+த்+ஆன் - த் இறந்தகால
இடைநிலை
உண்டான் - உண்+ட்+ஆன் - ட் இறந்தகால
இடைநிலை
கற்றான் - கல்+ற்+ஆன் - ற் இறந்தகால
இடைநிலை
போயினான் - போ+இன்+ஆன் - இன் இறந்தகால
இடைநிலை
நடக்கிறான் - நட+கிறு+ ஆன் - கிறு நிகழ்கால
இடைநிலை
பார்க்கின்றேன் - பார்+கின்று+ஆன் - கின்று நிகழ்கால
இடைநிலை
செல்லாநின்றான் - செல்+ஆநின்று+ஆன் - ஆநின்று
நிகழ்கால இடைநிலை
காண்பான் - காண்+ப்+ஆன் - ப் எதிர்கால
இடைநிலை
செல்வான் - செல்+வ்+ஆன் - வ் எதிர்கால
இடைநிலை
சாரியை
பகுபத
உறுப்புகளான பகுதியையும் விகுதியையும் அல்லது இடைநிலையையும் விகுதியையும்
இணைப்பதற்குப் பயன்படும் பகுபத உறுப்பு சாரியை எனப்படும்.
பகுதி, விகுதி, இடைநிலை ஆகியவற்றுக்குப் பொருள்
உண்டு.
ஆனால், சாரியைக்குப் பொருள் இல்லை.
இரண்டு
பகுபத உறுப்புகளுக்கு இடையில் வந்து அவற்றை இணைப்பதே சாரியையின் செயற்பாடாகும்.
அன், அம், அத்து, அற்று, இன் முதலியன சாரியைகள் ஆகும்.
எ.கா.,
நடந்தனன் - நட + ந்த் + அன் + அன் = அன் சாரியை
புளியங்காய் - புளி + அம் + காய் = அம் சாரியை
மரத்தை - மரம் + அத்து + ஐ = அத்து சாரியை
சிலவற்றை - சில + அற்று + ஐ = அற்று சாரியை
வீட்டிற்கு
- வீடு+இன்+கு = இன் சாரியை
சந்தி
தனக்கென
ஓரு பொருள் இன்றி, பகுதி, விகுதி அல்லது பகுதி, இடைநிலை ஆகிய பகுபத உறுப்புகள்
இணைப்பது(சந்திக்க வைப்பது) சந்தி
எனப்படும்.
எ.கா.,
கிளி + ஐ கிளி + ய் + ஐ = கிளியை
இச்சொல்லில்
ய் என்பது சந்தியாகும்.
விகாரம்
பகுதி, விகுதி, இடைநிலை ஆகிய உறுப்புகள்
இணையும்போது அவற்றின் வடிவத்தில் ஏற்படும் மாற்றமே விகாரமாகும்.
பகுதி, சந்தி ஆகியன விகாரங்களாக வரும்.
எ.கா., வந்தனன் - வா(வ)+த்(ந்)+த்+அன்+அன்
இச்சொல்லில்
உள்ள வ, ந் என்பன
விகாரங்களாகும்.
---------------------------------------------------------------
வடமொழியாக்கம் பற்றி கட்டுரை வரைக.
வடமொழி என்று குறிப்பிடப்படும் சமசுகிருத மொழியிலிருந்து
தமிழ்மொழியில் கலந்து வரும் சொற்கள் வடசொற்கள் ஆகும்.
இவை இரண்டு
வகைப்படும்.
1) தற்சமம்
2) தற்பவம்
தற்சமம்
*********
வடமொழிச்
சொற்கள் தமிழ்மொழியில்
தமிழ்ச்
சொற்கள் போன்றே மாற்ற மின்றி வருவது
தற்சமம்
எனப்படும்.
(எ.கா)
கமலம்
காரணம் மேரு
இச்சொற்களில்
வடமொழிக்குரிய சிறப்பு எழுத்து எதுவும் இல்லை. இவற்றில் தமிழ் எழுத்துகளே இடம்
பெற்றுள்ளன.
எனவே இச்சொற்கள்
தற்சமம் என்று அழைக்கப்படுகின்றன.
தற்பவம்
*********
வட
மொழிக்குரிய சிறப்பு எழுத்துகள் தமிழ்த் தன்மைக்கு ஏற்ப
மாறி
வருவது தற்பவம் எனப்படும்.
(எ.கா)
பங்கஜம்-பிரதி
உறுப்பு
ரிஷபம்-இடபம்
ஹரி-கறுப்பு
பக்ஷி-பறவை
சரஸ்வதி-கலைமகள்
வருஷம்-ஆண்டு
இவற்றில்
வடமொழிக்கே உரிய ஒலிப்புகளைக் கொண்ட எழுத்துகள்
தமிழ் மொழிக்கு
ஏற்ப மாறி வந்துள்ளன.
எனவே தற்பவம் என்று அழைக்கப்படுகின்றன.
தமிழில்
தேவையில்லாத இடங்களில் திசைச்சொற்களையும் வடசொற்களையும் பயன்படுத்துவதைத் தவிர்க்க
வேண்டும்.
“பொது எழுத்தானும்
சிறப்பு எழுத்தானும்
ஈர் எழுத்தானும்
இயைவன வடசொல்”
(நன்னூல் : 274)
வடமொழிக்கும்
தமிழ்மொழிக்கும் பொதுவாக உள்ள எழுத்துகளாலும்
வடமொழிக்குச் சிறப்பாக
உள்ள எழுத்துகளாலும்
வடமொழியிலிருந்து
தமிழ் மொழியில் வந்து வழங்கும் சொற்கள்
வடசொற்கள் ஆகும்
எனலாம்.
இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கும் மேலாக
தமிழில் வட மொழிச்
சொற்கள் புழக்கத்தில் இருக்கின்றன.
நம் முன்னோர்களின்
மொழிப்பற்றாலும்
தமிழறிஞர்களின்
அளப்பரிய தொண்டுகளாலும்
வடமொழிச்
சொற்களால் தமிழில்
பெரிய பாதிப்பை
உருவாக்க முடியவில்லை.
ஒவ்வொரு
காலகட்டத்திலும்
பல வடமொழிச்
சொற்கள் கைவிடப்பட்டு
எளிய தமிழ்ச்
சொற்கள் மீண்டும் பழக்கத்திற்கு வந்துள்ளன.
இன்றைய கல்விச்
சூழலாலும் ஊடகங்களாலும்
நம்மில் பலருக்கு வடமொழிச்
சொற்களுக்கும்
தமிழ்
சொற்களுக்கும் வேறுபாடே காண முடியாத நிலை
உருவாகியுள்ளது.
ஆரம்பம்
கல்யாணம்
அவசரம்
அன்னியம்
ஞாபகம்
சந்தோசம்
கர்வம்
துரோகம்
பரம்பரை
யோக்யதை
மேலே குறிப்பிட்ட
சொற்கள் எல்லாமே வடமொழிச் சொற்களே.
பல வடமொழிச்
சொற்களை எழுதுவதற்காக
பின்வரும்
எழுதுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
(ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ)
இது போன்ற
எழுத்துருக்களைக் கொண்ட சொற்களை
வடமொழிச் சொற்கள்
என்று மிகஎளிதாகக் கண்டறிந்துவிடலாம்.
(எ.கா)
நஷ்டம், ஆக்ஷேபம் போன்ற சொற்கள்.
ஆனால் பல வடமொழிச்
சொற்கள் தமிழுக்கும் வடமொழிக்கும்
பொதுவான
எழுத்துக்களை மட்டுமே கொண்டிருக்கின்றன.
(எ.கா)
ஆரம்பம், கல்யாணம் போன்ற சொற்கள்.
இவற்றை நாம்
பெரும்பாலும்
தமிழ்ச் சொற்கள்
என்றே எண்ணுகின்றோம்.
நாம் அன்றாடம்
அடிக்கடி பயன்படுத்தப்படும்
வடமொழிச்
சொற்களையும் அதற்கு இணையான
தமிழ்ச்
சொற்களையும் கீழே காண்க.
வடமொழிச் சொல் தமிழ்ச் சொல்
******************
இருதயம் **************
உள்ளம்
ஆச்சர்யம்- வியப்பு
ஆரம்பம் -தொடக்கம்
அக்ஷேபம்- மறுப்பு
சங்கீதம் -இன்னிசை
கோஷ்டி -குழு
அபிவிருத்தி- செழிப்பு
அபூர்வம் -அருமை
அர்த்தம் -பொருள்
அவசரம் -விரைவு
அவசியம் -தேவை
அனாவசியம் -தேவையற்றது
அற்புதம் -புதுமை
அன்னியம் -அயல்
அனுபவி- நுகர்
ஆசீர்வாதம் -வாழ்த்து
சந்தோசம்- மகிழ்வு
கர்வம் -செருக்கு
சகஜம் -இயல்பு
சகோதரன் -உடன்பிறந்தவன்
கல்யாணம் -திருமணம்
சந்ததி -மரபு
சீக்கிரம் -சுருக்க
சுதந்திரம் -உரிமை
சேட்டை -குறும்பு
ஞாபகம் -நினைப்பு
தருமம் -அறம்
துரோகம்- இரண்டகம்
நஷ்டம்- இழப்பு
நிஜம்- மெய்
பக்தன்- அன்பன்
பரம்பரை- தலைமுறை
பிரகாசம்- ஒளி
பாபம் -தீவினை
யோக்யதை -தகுதி
ஜன்மம்- பிறவி
ஸ்ரீ- திரு
மீண்டும்
சொல்லுகிறேன்...
முடிந்தவரை நாம்
அனைவரும் வடமொழிச் சொற்களைத் தவிர்த்து
தமிழ்ச் சொற்களையே
பயன்படுத்த வேண்டும்.
அவ்வாறு தவிர்க்க
இயலாமல்
வடமொழிச்
சொற்களைப் பயன்படுத்தினால்
அதற்கான விதி
முறைகளுக்கேற்ப பயன்படுத்த வேண்டும்.
வடமொழி எழுத்துகளை
தமிழில் பயன்படுத்த
உதவும் சில
விதிகள்:
வட எழுத்து தமிழில் எழுதும் முறை உதாரணம்
ஜ ‘ச’ அல்லது ‘ய’ ஜயம் – சயம்
பங்கஜம் – பங்கயம்
ஷ ‘ச’ அல்லது ‘ட’ ஷண்முகம் – சண்முகம்
விஷம் – விடம்
ஸ ‘ச’ அல்லது ‘ய’ ஸபா – சபை
நேசம் – நேயம்
ஹ ‘அ’ அல்லது ‘க’ ஹரி – அரி
க்ஷ ‘க்க’ அல்லது ‘ட்ச’ பக்ஷி – பட்சி
பக்ஷம் – பக்கம்
சொல்லிறுதியில்
வரும் ‘ஆ’ ‘ஐ’ மாலா – மாலை
கலா – கலை
‘ர’ ‘அ’ அல்லது ‘இ’ உடன் வரும் ரங்கம் – அரங்கம்
ராமன் – இராமன்
‘ல’ ‘இ’ அல்லது ‘உ’ லாபம் – இலாபம்
லோகம் – உலோகம்
‘ய’ ‘இ’ அல்லது ‘உ’ யமன் – இயமன்
யுத்தம் – உயுத்தம்-
அரசு கலைக் கல்லூரி (த) சேலம் -7
நன்னூல் - எழுத்ததிகாரம்
மாதிரித்தேர்வு 2022
இளங்கலை - முதலாமாண்டு
நேரம்: 3 மணி நேரம் மதிப்பெண்: 75
பகுதி - அ (15 × 1 = 15)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்: -
1. நன்னூல் குறிப்பிடும் சார்பெழுத்துக்கள்
அ) 3 ஆ) 5 இ) 6 ஈ) 10
2. நன்னூல் குறிப்பிடும் வினா எழுத்துக்கள்
அ) 3 ஆ) 5 இ) 6 ஈ) 10
3. ஓ – என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்கு ஆகாத பொருள்
அ) மகிழ்ச்சி, ஆ) வியப்பு, இ) மதகுப்பலகை ஈ) தலைவன்
4. ஈ – என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்கு ஆகாத பொருள்
அ) வியப்பு ஆ) ஈதல், இ) கொடுத்தல் ஈ) பறக்கும் பூச்சி
5. எழுத்து பிறக்குமிடங்களாக நன்னூல் காட்டும் இடங்கள்
அ) 3 ஆ) 6 இ) 4 ஈ)
6. ககார, ஞகார ----- அன்னம்
அ) முதல் நா ஆ) இடை நா இ) கடை நா ஈ) நுனிநா
7. நன்னூல் குறிப்பிடும் சாரியைகள்
அ) 9 ஆ) 8 இ) 17 ஈ) 32
8. நன்னூல் குறிப்பிடும் மொழிமுதல் எழுத்துகள்
அ) 20 ஆ) 22 இ) 24 ஈ) 12
9. ணன வென் புள்ளி முன் - எனத் தோன்றும்
அ) டண ஆ) லள இ) தந ஈ) றன
10. ஓகார இறுதிக்கு. . . . . . . . . . . சாரியை
அ) ஒன் ஆ) இன் இ) வற்று ஈ) அற்று
11. வேற்றுமைப் புணா;ச்சியில் பனை எனும் மரப்பெயருக்கு முன்னா;, கொடி என்பது
புணருமிடத்துக்------------ மிகும்
அ) ககரம் ஆ) அகரம் இ) மகரம் ஈ) உகரம்
12. சுவையை உணர்த்தும் புளி என்னும் சொல்------ மிகும்
அ) மெல்லெழுத்து ஆ) வல்லெழுத்து இ) இன எழுத்து ஈ) இடையினம்
13. வேற்றுமைப் புணா;ச்சியில் சாதிப் பெயா;களின் இறுதியிலுள்ள னகரம் இயல்பாகவும்------------சாரியைப் பெற்றும ; புணரும்.
அ) ககரம் ஆ) அகரம் இ) மகரம் ஈ) உகரம்
14. ஞநமவ இடையினம் ----------- நிலையும்
அ) உகரம் ஆ) அகரம் இ) மெல்லினம் ஈ) வல்லினம்
15. ஏழுடன் சேரும் பத்து----- ஆகும்.
அ) எழுபது ஆ) எழுபஃது இ) ஏழுபத்து ஈ) எழ்பத்து
பகுதி - ஆ (2 × 5 = 10)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்கவும்: -
1. சிறப்புப் பாயிரம் செய்வதற்கு உரியவர் யார்?
2. எழுவகை மதம் யாது?
3. இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சியின் இயல்புகளைக் கூறுக.
4. பனங்காய், பனாஅட்டு, பனைக்கொடி என்பனவற்றை பிரித்து புணர்ச்சி விதி தருக.
5. நூறு என்ற எண்ணுப் பெயரோடு அளவு, நிறைப் பெயர்கள் எவ்வாறு புணரும்?
பகுதி - இ ( 5 × 10 = 50)
அல்லது முறையில் ஐந்து வினாக்களுக்கு விடையளிக்கவும்: -
1. அ. முதலெழுத்துக்கள், சார்பெழுத்துக்கள் குறித்து நன்னூல் கூறுவது?
(அல்லது)
ஆ. நன்னூல் கூறும் மொழியிறுதி மொழி முதல் எழுத்துக்கள் பற்றி கட்டுரை வரைக.
2. அ. பகுபதம் பற்றி ஒரு கட்டுரை வரைக.
(அல்லது)
ஆ. வடமொழியாக்கம் பற்றி கட்டுரை வரைக.
3. அ. உயிரீறு, பொதுப்புணர்ச்சியை விவரி
(அல்லது)
ஆ. அகரவீற்றுச் சொற்கள் உருபுகளோடு புணரும்போது பெறும் சாரியைகள் குறித்து எழுதுக.
4. அ. மகர ஈற்றுச் சொற்கள் அல்வழியில் புணருமாற்றைத் தொகுத்துரைக்க
(அல்லது)
ஆ.‘லகர’ ஈற்றில் முடியும் சொற்களுக்கான புணர்ச்சி விதிகளைக் கூறுக.
5. அ. சாரியைகள் பற்றி விளக்கு
(அல்லது)
ஆ. உருபு புணரியல் பற்றிக்கட்டுரை வரைக.
***************
இலக்கணம் -1
நன்னூல் எழுத்ததிகாரம்
-
காலம்:
மூன்றுமணிநேரம் மதிப்பெண்: 75
பகுதி – அ
தெரிவுசார்வினாக்கள் (15×1=20)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.நன்னூல், ------ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கணம்
அ) 11 ஆ) 12 இ) 13 ஈ) 14
2.நன்னூல் ------ அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.
அ) 4 ஆ) 2 இ) 3 ஈ)
3.ஏ என்ற ஓரெழுத்து
ஒரு மொழியும் அதன் பொருளும்
அ) அம்பு ஆ) பசு, இ) ஆன்மா, ஈ) எருது
4.கோ என்ற ஓரெழுத்து
ஒரு மொழியும் அதன் பொருளும்
அ) தலைவன் ஆ) பசு, இ) அரசன் ஈ) எருது
5. 4 எழுத்துப் பகுபதம்
அ) தலைவன் ஆ) பசு, இ) அரசன் ஈ) கூனன்
6. 9 எழுத்துப் பகுபதம்
அ) தலைவன் ஆ) உத்திரட்டாதியான் இ) அரங்கத்தான் ஈ) கூனன்
7. பகுபதம்
----வகைப்படும்
அ) 2 ஆ) 5 இ) 3 ஈ) 8
8. ------------இறந்த
கால இடைநிலைகள்
அ) த், ட், ற், இன் ஆ) கிறு, கின்று இ) ஆநின்று ஈ) இன்
9. உயிர் முன் உயிர் புணர்தல்............
அ) உடம்படுமெய்
ஆ) அல்வழி இ) பொதுவிதி ஈ) விகாரம்
10.மெய் மயக்கம் ---வகைப்படும்
அ) 2 ஆ) 5 இ) 3 ஈ) 8
11. மெய் எழுத்துக்கள்
தம்மோடு தாம் மயங்குவன
அ)வேற்றுமை மயக்கம் ஆ)மெய்ம்மயக்கம் இ) இடைநிலைமயக்கம் ஈ)
இடைமயக்கம்
12. வேற்றுமைப் புணர்ச்சியில் உயிரிற்று மரப்பெயர்கள்
வந்தால் அவற்றுக்கு முன்வரும் வல்லின எழுத்துக்களுக்கு இனமான-----
எழுத்துக்கள் மிகுந்து வரும்.
அ) மெல்லின ஆ) வல்லின இ) இடையின ஈ) உயிரீற்று
13.நாழி அளவைப்
பெயருடன் உரி அளவைப் பெயர் சேரும் பொழுது ------தோன்றும்.
அ) டகர மெய் ஆ) பகர மெய் இ) நகர மெய் ஈ) அகர மெய்
14. ஒற்று மிகுந்த
நிலையில் நெடிற்றொடர்க் குற்றியலுகரமும் உயிர்த்தொடர்க்
குற்றியலுகரமும் ---------தொடர் குற்றியலுகரமாக மாறும்.
அ) வன் ஆ) மென் இ) இடைத் ஈ) ஆய்தத்
15. உயிரும் இடையினமும், வருமிடத்து நான்கு என்பது நால்
என்றும், வல்லெழுத்து வருமிடத்து ----- என்றும் திரிவதைக்
காணலாம்.
அ) நான் ஆ) னகர இ) நகர மெய் ஈ) நா
குறுவினா பகுதி ஆ
பின்வருவனவற்றிற்கு
ஒரு பக்க அளவில் விடைதருக. (2×5=25)
1. பாயிரத்தின்
பெயர்களைக் கூறுக?
1) முகவுரை 2) பதிகம் 3) அணிந்துரை 4) நூல் முகம் 5) புறவுரை 6) தந்துரை 7) புனைந்துரை
2. பொது
பாயிரத்தின் ஐந்து வகை இலக்கணம் யாது?
இரட்டுற
மொழிதல்- ஒரு வாக்கியத்தை இரண்டு பொருள்படக் கூறுதல் இரட்டுற மொழிதல்
ஆகும்.
ஏதுவின்
முடித்தல்- முன்பு காரணம் விளங்காமல் கூறப்பட்ட ஒன்றை பின் காரணம்
காட்டி முடிவு செய்தல்
9. திசைப்பெயர் பற்றியும் அவை புணரும்
முறை பற்றியும் விவரி.
10. தற்சமம் என்றால் என்ன?உதாரணம்
தருக.அல்லது
தற்பவம் என்றால்
என்ன?உதாரணம் தருக
பகுதி இ
அல்லது முறையில் கட்டுரை
வடிவில் விடையளிக்க. (5×10=50)
11. அ.சிறப்புப்
பாயிரத்திலக்கணம்
குறித்து எழுதுக.
அல்லது
ஆ.முப்பத்திரண்டு உத்திகள் யாவை?
பட்டியலிடுக
12. பெயர் விகுதிகள், வினை விகுதிகள் பற்றி ஒரு கட்டுரை வரைக. அல்லது
ஆ.வினா எழுத்துகள் பற்றி கட்டுரை வரைக.
13.வடமொழியாக்கம் பற்றி ஒரு கட்டுரை
வரைக. அல்லது
ஆ. அளபெடைகள் பற்றி நீ அறிவன யாவை?
14.அ.போலி பற்றி தகுந்த உதாரணங்களுடன்
விளக்குக அல்லது
ஆ.எண்ணுப் பெயர்கள் பற்றி
உதாரணங்களுடன் விவரி
15.சாரியைகள் பற்றி நன்னூலார் கூறுவன
யாவை? அல்லது
ஆ. னகர ஈறுகள் பற்றி உதாரணங்களுடன் ஒரு
கட்டுரை வரைக.
இலக்கணம் -1
நன்னூல் எழுத்ததிகாரம்
-
காலம்: மூன்றுமணிநேரம் மதிப்பெண்: 75
பகுதி – அ
தெரிவுசார்வினாக்கள் (15×1=20)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.நன்னூல், ------ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கணம்
அ) 11 ஆ) 12 இ) 13 ஈ) 14
2.நன்னூல் ------ அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.
அ) 4 ஆ) 2 இ) 3 ஈ)
3.ஏ என்ற ஓரெழுத்து ஒரு மொழியும் அதன் பொருளும்
அ) அம்பு ஆ) பசு, இ) ஆன்மா, ஈ) எருது
4.கோ என்ற ஓரெழுத்து ஒரு மொழியும் அதன் பொருளும்
அ) தலைவன் ஆ) பசு, இ) அரசன் ஈ) எருது
5. 4 எழுத்துப் பகுபதம்
அ) தலைவன் ஆ) பசு, இ) அரசன் ஈ) கூனன்
6. 9 எழுத்துப் பகுபதம்
அ) தலைவன் ஆ) உத்திரட்டாதியான் இ) அரங்கத்தான் ஈ) கூனன்
7. பகுபதம் ----வகைப்படும்
அ) 2 ஆ) 5 இ) 3 ஈ) 8
8. ------------இறந்த கால இடைநிலைகள்
அ) த், ட், ற், இன் ஆ) கிறு, கின்று இ) ஆநின்று ஈ) இன்
9. உயிர் முன் உயிர் புணர்தல்............
அ) உடம்படுமெய் ஆ) அல்வழி இ) பொதுவிதி ஈ) விகாரம்
10.மெய் மயக்கம் ---வகைப்படும்
அ) 2 ஆ) 5 இ) 3 ஈ) 8
11. மெய் எழுத்துக்கள் தம்மோடு தாம் மயங்குவன
அ)வேற்றுமை மயக்கம் ஆ)மெய்ம்மயக்கம் இ) இடைநிலைமயக்கம் ஈ) இடைமயக்கம்
12. வேற்றுமைப் புணர்ச்சியில் உயிரிற்று மரப்பெயர்கள் வந்தால் அவற்றுக்கு முன்வரும் வல்லின எழுத்துக்களுக்கு இனமான----- எழுத்துக்கள் மிகுந்து வரும்.
அ) மெல்லின ஆ) வல்லின இ) இடையின ஈ) உயிரீற்று
13.நாழி அளவைப் பெயருடன் உரி அளவைப் பெயர் சேரும் பொழுது ------தோன்றும்.
அ) டகர மெய் ஆ) பகர மெய் இ) நகர மெய் ஈ) அகர மெய்
14. ஒற்று மிகுந்த நிலையில் நெடிற்றொடர்க் குற்றியலுகரமும் உயிர்த்தொடர்க்
குற்றியலுகரமும் ---------தொடர் குற்றியலுகரமாக மாறும்.
அ) வன் ஆ) மென் இ) இடைத் ஈ) ஆய்தத்
15. உயிரும் இடையினமும், வருமிடத்து நான்கு என்பது நால் என்றும், வல்லெழுத்து வருமிடத்து ----- என்றும் திரிவதைக் காணலாம்.
அ) நான் ஆ) னகர இ) நகர மெய் ஈ) நா
குறுவினா பகுதி ஆ
பின்வருவனவற்றிற்கு ஒரு பக்க அளவில் விடைதருக. (2×5=25)
1. பாயிரத்தின் பெயர்களைக் கூறுக?
1) முகவுரை 2) பதிகம் 3) அணிந்துரை 4) நூல் முகம் 5) புறவுரை 6) தந்துரை 7) புனைந்துரை
2. பொது பாயிரத்தின் ஐந்து வகை இலக்கணம் யாது?
இரட்டுற மொழிதல்- ஒரு வாக்கியத்தை இரண்டு பொருள்படக் கூறுதல் இரட்டுற மொழிதல் ஆகும்.
ஏதுவின் முடித்தல்- முன்பு காரணம் விளங்காமல் கூறப்பட்ட ஒன்றை பின் காரணம் காட்டி முடிவு செய்தல்
9. திசைப்பெயர் பற்றியும் அவை புணரும் முறை பற்றியும் விவரி.
10. தற்சமம் என்றால் என்ன?உதாரணம் தருக.அல்லது தற்பவம் என்றால் என்ன?உதாரணம் தருக
பகுதி இ
அல்லது முறையில் கட்டுரை வடிவில் விடையளிக்க. (5×10=50)
11. அ.சிறப்புப் பாயிரத்திலக்கணம் குறித்து எழுதுக. அல்லது
ஆ.முப்பத்திரண்டு உத்திகள் யாவை? பட்டியலிடுக
12. பெயர் விகுதிகள், வினை விகுதிகள் பற்றி ஒரு கட்டுரை வரைக. அல்லது
ஆ.வினா எழுத்துகள் பற்றி கட்டுரை வரைக.
13.வடமொழியாக்கம் பற்றி ஒரு கட்டுரை வரைக. அல்லது
ஆ. அளபெடைகள் பற்றி நீ அறிவன யாவை?
14.அ.போலி பற்றி தகுந்த உதாரணங்களுடன் விளக்குக அல்லது
ஆ.எண்ணுப் பெயர்கள் பற்றி உதாரணங்களுடன் விவரி
15.சாரியைகள் பற்றி நன்னூலார் கூறுவன யாவை? அல்லது
ஆ. னகர ஈறுகள் பற்றி உதாரணங்களுடன் ஒரு கட்டுரை வரைக.
விடை
அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம-7 17UTLOI
தமிழ்த்துறை -2021 முதற்பருவம் முதலாண்டு
இலக்கணம் -1
நன்னூல் எழுத்ததிகாரம்
-
காலம்: மூன்றுமணிநேரம் மதிப்பெண்: 75
பகுதி – அ
தெரிவுசார்வினாக்கள் (15×1=20)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.இ) 13
2. ஆ) 2
3.அ) அம்பு
4. இ) அரசன்
5. 4 எழுத்துப் பகுபதம் அ) தலைவன்
6. 9 எழுத்துப் பகுபதம் உத்திரட்டாதியான்
7. அ) 2
8. அ) த், ட், ற், இன்
9. அ) உடம்படுமெய்
10. அ) 2
11. ஆ)மெய்ம்மயக்கம்
12. அ) மெல்லின
13. அ) டகர மெய்
14. அ) வன்
15. அ) நான்
குறுவினா பகுதி ஆ
பின்வருவனவற்றிற்கு ஒரு பக்க அளவில் விடைதருக. (2×5=25)
1. முகவுரை 2) பதிகம் 3) அணிந்துரை 4) நூல் முகம் 5) புறவுரை 6) தந்துரை 7) புனைந்துரை
4.. தற்சமம். வடமொழிச் சொற்கள் தமிழ்மொழியில் தமிழ்ச் சொற்கள் போன்றே மாற்றமின்றி வருவது தற்சமம் எனப்படும்.
5.. திசைப்பெயர்களின் புணர்ச்சி பற்றியும் ... வடக்கு, குணக்கு, குடக்கு ஆகிய திசைப்பெயர்கள் ப
பகுதி இ
அல்லது முறையில் கட்டுரை வடிவில் விடையளிக்க. (5×10=50)
11. அ.சிறப்புப் பாயிரத்திலக்கணம் ஆக்கியோன் பெயர் ஏ வழி ஏ எல்லை
நூல் பெயர் யாப்பு. அல்லது
ஆ. முப்பத்திரண்டு உத்திகள் நூலில் இருத்தல் வேண்டும் என நன்னூல் சிலவகை உத்திகளைப் பட்டியலிட்டுள்ளது.
12. விகுதிகளின் எண்ணிக்கையை 40 என்று நன்னூல் தொகுத்துத் தந்துள்ள போதிலும் அவற்றை முதல்நிலையில் இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.. அல்லது
ஆ. எ', 'யா', 'ஆ', 'ஓ', 'ஏ' ஆகிய ஐந்து எழுத்துகளும் வினாப் பொருள் தரும் எழுத்துகளாகும். ... இவற்றுள், 'எ', 'யா' ஆகிய இரண்டும் சொல்லின் முதலில் நின்று வினாப் பொருள் தரும்.
13.தற்சம்ம், தற்பவம் பறிறிய விளக்கம் அல்லது
ஆ. உயிரளபெடைகள் ஒற்றளபெடை
14.அ.சொல் மாறி வருவது... விளக்குக அல்லது
ஆ.எண்ணுப் பெயர்கள் ஒன்று முதல் பத்து வரை
15. தமிழில் பொதுவாக சாரியையாகப் பயன்படும் சொற்கள்:அக்கு, அத்து, அம், அன், ஆன், இக்கு, இன், ஒன் என்பனவும் பிறவும் ஆம். இவற்றைச் சொற்களுக்கு இடையே வரும் சொற்சாரியை என்பர். அல்லது
ஆ. ணகர, னகர ஈறுகள் இயல்பாதலும் திரிதலும் ... இச்சொற்களை எவரும் மெய் ஈறாக ஒலிப்பதில்லை.
.jpg)

No comments:
Post a Comment