Followers

Wednesday, July 13, 2022

I year second semester 2020 - 2021 second unit

 பராபரக்கண்ணி -குணங்குடி மஸ்தான் பாடல்கள் (15 கண்ணிகள்)




பராபரக்கண்ணி -குணங்குடி மஸ்தான் பாடல்கள் (15 கண்ணிகள்)

குணங்குடி மஸ்தான் சாகிபு (1792 - 1838: சென்னைஒரு இசுலாமிய தமிழ் அறிஞர்இவர் பல இசை உணர்வு மிக்க பாடல்களை எழுதியுள்ளார்இவர் தமிழ் சித்த மரபினரில் ஒருவராகவும் கருதப்படுகிறார்

குணங்குடி மஸ்தான் சாகிபு இராமநாதபுரம் தொண்டிக்கு வடமேற்கில் பத்து மைல் தொலைவிலுள்ள குணங்குடி என்னும் சிற்றூரில் 1792 ஆம் ஆண்டு பிறந்தார்இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் 'சுல்தான் அப்துல் காதிர்என்பதாகும்இளமையிலேயே குர்ஆன் மற்றும் இசுலாமிய சமய சாத்திரங்களைக் கற்றுணர்ந்து 'ஆலிம்' (சமயக் கல்வி அறிஞர்என்னும் பட்டம் பெற்றார்.

பற்றறுத்த உள்ளத்துடனும்தந்தையின் ஆசியுடனும் தம்முடைய பதினேழாவது வயதில் ஞானபூமியாகத் திகழ்ந்த கீழக்கரை சென்று அங்கு 'தைக்காசாஹிபுஎன்று அழைக்கப்பட்ட ஷைகு அப்துல் காதிரிலெப்பை ஆலிம் ஞானியிடம் மாணாக்கராக இருந்து சமய ஞானத்தையும்தவ வழிமுறைகளையும் கற்றுத் தெளிந்தார். 1813 ஆம் ஆண்டில் அவர் திரிசிரபுரம் சென்று அங்கே மௌலவி ஷாம் சாஹிப் என்பவரிடம் தீட்சை பெற்று ஞானயோக நெறியில் ஆழ்ந்தார்பின்னர் சிக்கந்தர் மலையென அழைக்கப்படும் திருப்பரங்குன்றம் சென்று அங்கே நாற்பது நாட்கள் 'கல்வத்எனப்படும் யோக நிட்டையில் ஆழ்ந்தார்பின்னர் அறந்தாங்கிக்கு அருகிலுள்ள கலகம் என்ற ஊரில் ஆறு மாதங்களும்தொண்டியில் அவருடைய தாய்மாமனாரின் ஊரான வாழைத்தோப்பில் நான்கு மாதங்களும் தங்கி நிட்டை புரிந்தார்இவ்வாறே சதுரகிரிபுறாமலைநாகமலைஆனைமலை போன்ற மலைகளிலும்காடுகளிலும்நதிக்கரைகளிலும் தங்கித் தவம் புரிந்தார்.

இறைகாதலால் முற்றும் கவரப்பட்டவராகவும்தெய்வீகக் காதல் போதையில் வெறியேறியவராகவும் அவர் இருந்ததால் உலகநடை நீங்கி பித்தநடை கொண்டார்குப்பைமேடுகள் கூட அவர் குடியிருக்கும் இடங்களாகினஅவருடைய பித்தநடையையும் அற்புத சித்துகளையும் கண்ட மக்கள் அவரை 'மஸ்தான்என அழைக்கலாயினர்அப்பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது. (மஸ்த் என்ற பாரசீகச் சொல்லுக்கு போதைவெறி என்று பொருள்இறைகாதல் போதையில் வெறி பிடித்த ஞானியரை 'மஸ்தான்என அழைப்பது மரபு)

ஏழு ஆண்டுகள் இவ்வாறிருந்துபின்னர் வடநாடு சென்று பலருக்கு ஞானோபதேசம் செய்தார்இறுதியில் சென்னையை அடைந்து இராயபுரத்தில் பாவாலெப்பை என்பவருக்கு உரிமையானமுட்புதர்களும் மூங்கிற் காடும் சப்பாத்திக்கள்ளியும் மண்டிக் கிடந்த இடத்தில் தங்கலாயினார்பாவாலெப்பை குணங்குடியாரின் மகிமை உணர்ந்து அவ்விடத்திலேயே அவருக்கு ஆச்சிரமம் அமைத்துக் கொடுத்தார்இங்கே வாழ்ந்தபோது யார் கண்ணிலும் படாமல் மறைந்திருந்து யோகநிட்டையில் ஆழ்ந்திருந்தார்சில வேளைகளில் தாம் இயற்றிய கீர்த்தனங்களைப் பாடிக்கொண்டு ஊர்வலமாகச் செல்வதுமுண்டாம்அப்படிச் செல்லும்போது ஒருமுறை அங்கப்பநாயக்கன் தெருவிலுள்ள 'மஸ்ஜிதே மஃமூர்என்ற பள்ளிவாசலுக்கும் வந்து சென்றதாகக் கூறுவர்.

குணங்குடியாரின் துறவு நிலையில் ஐயுற்ற சிலர் அவரது அரிய சித்துக்களைக் கண்ட பின்னர் அவரை மதித்துப் போற்றினர்அவரிடம் தீட்சை பெற்று பக்குவமடைந்தனர்அவ்வாறு தீட்சை பெற்றவர்களுள் அக்காலத்தில் சென்னையிலிருந்த ஆற்காடு நவாபும் ஒருவர்அவருடைய சீடர்களாக இசுலாமியர் மட்டுமன்றி இந்துக்களும் இருந்தனர்அவர்களில் மகாவித்துவான் சரவணப்பெருமாள் ஐயர்கோவளம் சபாபதி முதலியார் ஆகியோர் மிகப் பிரதானமானவர்களாக இருந்தனர்.

மஸ்தான் சாகிபு 1838 ஆம் ஆண்டு (ஹிஜ்ரி 1254, ஜமாதுல் அவ்வல் 14ம் நாள் 

திங்கட்கிழமை வைகறை நேரம்இவ்வுலக வாழ்வைத் துறந்தபோது அவருக்கு வயது நாற்பத்து ஏழுஅவர் தங்கியிருந்த இடத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்அவரை மக்கள் தொண்டியார் என்று அழைத்து வந்ததால் அவரிருந்த இடம் தொண்டியார்பேட்டை ஆயிற்று.

படைப்புகள்

நிராமயக்கண்ணி (100 பாடல்கள்)

மனோன்மணிக்கண்ணி (100 பாடல்கள்)

அகத்தீசர் சதகம் (100 பாடல்கள்)

நந்தீசர் சதகம் (51 பாடல்கள்]

ஆனந்தக் களிப்பு (38 பாடல்கள்)

நன்றிவிக்கிபீடியா


சிவவாக்கியர்


சிவவாக்கியர் என்னும் சித்தர், பதினெண் சித்தர்களில் ஒருவராக எண்ணப்படுகிறார். அவர் எந்நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்கு ஆதாரங்கள் அறியக் கிடைக்கவில்லை.

அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்னும் கருத்து பரவலாக உள்ளது. அவர் சித்தர் பாடல்கள் திரட்டில் இதுவரை 526 பாடல்கள் கிட்டியுள்ளன. இவருடைய பாடல்களே மிக அதிகம் என்போரும் உண்டு. இவரைப் பற்றிய குறிப்புகள் அபிதான சிந்தாமணியிலும் தி.வி. சாம்பசிவம் பிள்ளை அவர்கள் எழுதிய தமிழ்-ஆங்கில மருத்துவ அகராதியிலும் உள்ளன. ஆனால் இவை இரண்டும் முற்றிலும் வேறுபடுகின்றன என்பதாலும் இக்கதைகளுக்குத் தக்க ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பதாலும், இவர் இயற்றிய பாடல்களை மட்டும் போற்றுகின்றனர்.

அவர் வாழ்ந்த காலமும் தெளிவாய்த் தெரியவில்லை. அவரது காலம், கி.பி.9ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் எனவும், அவரின் செய்யுள் நடை பலவிடங்களில் திருமூலரை ஒத்துள்ளது எனவும் திரு.டி.எஸ்.கந்தசாமி முதலியார் கூறியுள்ளார். "இல்லையில்லை; அவர், கி.பி.10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவரின் செய்யுள் நடை பலவிடங்களில் திருமழிசை ஆழ்வாரை ஒத்துள்ளது; ஆகவே, அவரும் திருமழிசை ஆழ்வாரும் ஒன்றே" என விவாதிப்பவரும் உண்டு. அவர் காலம் என்ன? அவர் சமயம் என்ன? இவ்வினாக்களுக்கு விடை தேடுவது காலவிரயம்.

சமணம், பௌத்தம், சைவம், மாலியம்(வைணவம்) ஆகிய சமயங்களை ஆழ அகழ்ந்தறிந்து தம் பாக்களில் பிழிந்து தந்துள்ளார். இவருடைய பாக்களில் ஒரு வித துள்ளல் ஓசையும், ஞானக் கருத்துக்களும், கேள்விகளும்(வினாக்களும்) இருப்பது சிறப்பு. 

நன்றிவிக்கிபீடியா

கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்
கலைகள் நூல்கள் ஞானமுங் கருத்தில்வந்து உதிக்கவே
பெரியபேர்கள் சிறிய பேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
பேயனாகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே.


ஆனஅஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனஅஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனஅஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனஅஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே.



ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே.


உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
கருத்தினால் இருத்தியே கபாலமேற்ற வல்லிரேல்
விருத்தரும் பாலராவர் மேனியுஞ் சிவந்திடும்
அருள் தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே.



வடிவுகண்டு கொண்டபெண்ணை மற்றொருவன் நத்தினால்
விடுவனோ அவனை முன்னர் வெட்டவேணும் என்பனே
நடுவன்வந்து அழைத்தபோது நாறுமிந்த நல்லுடல்
சுடலைமட்டும் கொண்டுபோய்த் தோட்டி கைக் கொடுப்பரே.

தேம்பாவணி வளன் சனித்த படலம் 

அலை புறம் காண் அயிர்ப்பு அகத்தோன் ஐ எனக் கண் விழித்து,
                         ஒளி சூழ் அன்றி மற்று ஓர்
நிலை புறம் காண்கிலன், களியும் வெருவும் உறீஇக் கடிது
                         எழுந்தான்; நிறைநூல் தந்த
கலை புறம் காண் அறிவு ஓங்கி, கணிக்க அரிய தன்மையின், தூய்
                         கன்னி மாறா,
விலை புறம் காண் மணி எனத் தன் மனை மகன் ஆம் எந்தை
                         தொழ விரும்பி வீழ்ந்தான்.

     கடல் அலையையும் வெல்லத் தக்க ஐயம் கொண்ட மனத்தோனாகிய
சூசை விரைவாகக் கண் விழித்து, சூழ்ந்து கண்ட ஒளியேயன்றி, களவிற்
கண்ட வேறு எந்நிலையும் வெளிப்படக் காணாதவனாய், மகிழ்ச்சியும்
அச்சமும் ஒருங்கே கொண்டு விரைந்து எழுந்தான்; நிறைவான நூல்கள்
தந்த கலைகளையெல்லாம் வெல்லத் தக்க அறிவு ஓங்கப் பெற்று, கணிக்க
இயலாத விதமாகவும், தாயின் தூய கன்னிமை பழுதுறா வகையிலும்,
எவ்விலையையும் வெல்லக் கூடிய மாணிக்கம் போல் தன் இல்லத்தில்
மகனாய் அவதரித்துள்ள கடவுளைத் தொழ விரும்பித் தரையில் வீழ்ந்தான்.

சால் அரும்புச் சூல் அணிந்த சண்பகத் தண் சினைகள் தொறும்,
                                    தவறும் தென்றற்
கால் அரும்ப, தாது அரும்பிக் கடி மலர் தேனோடு அரும்பும்
                                    கந்தம் என்னா,
வால் அரும்பு வாய் அரும்ப அரும்பு அரும் பூ வாகையினான்,
                                    மகிழ வானோர்,
நூல் அரும்ப வாய் அரும்பி, சுருதி மதுப் பொழியும் உரை நுதலிச்
                                    சொல்வான்:

     நிறைந்த அரும்புகளைக் கருப்பமாக அணிந்து நின்ற சண்பக மரத்தின்
குளிர்ந்த கிளை தோறும், காலம் தவறி வீசும் தென்றற் காற்று வந்து வீசுவே,
அவ்வரும்புகளெல்லாம் மகரந்தம் பிடித்துப் புது மலர்களாய்த் தேனோடு
விரிந்து பரப்பும் மணம் போல வெண்ணிற அரும்புகளின் வாய் விரிந்து
மலரும் அரிய மலர்க் கொடியை உடையவனாகிய சூசை, வானவர்களும்
மகிழுமாறு, கற்ற நூல் அறிவு புலப்படத் தன் வாய் திறந்து, வேத
அறிவென்னும் தேனைப் பொழியும் சொற்களை ஆராய்ந்து பின் வருவாறு
சொல்வான்:

     தவறும் தென்றல் - தனக்கு உரிய இளவேனிற் காலந் தவறி வீசும்
தென்றல். இங்கு, அக்காலத்திற்கு முந்திக்கொண்ட தென்றல். தக்க காலத்தில்
ஆண்டவன் தனக்கு அருள் செய்வானென்ற நம்பிக்கை தளராத சூசை,
இவ்வளவு விரைவில் அவன் அருளிய தன்மையைக் காலத்திற்கு முந்திக்
கொண்டு வீசிய தென்றலோடு ஒப்பிட்டு இன்பம் காண்கின்றான்.

"எல்லோடும் ஒளி பெருகாது, இரவொடு இருள் படாது, எங்கும்
                               இலங்கும் சோதி!
சொல்லோடும் உணர்வு இன்றி, சூழ்ந்த எலாக் கலை வல்லோய்!
                               தொழும் தொழும்பன்
புல்லோடும் புன்மை அறியாது, என்னோ இத்திறத்தில் பொலியச்
                               செய்தாய்!
செல் ஓடும் வான் வியப்ப, சிறுமை எடுத்து அடல் காட்டும்
                               திறலின் மிக்கோய்!"

     "பிற ஒளிகளால் தன் ஒளி பெருகாமலும், இரவால் தான் இருள்
அடையாமலும், இவ்விடம் என்றில்லாது எவ்விடத்தும் தன்னியல்பாகவே
விளங்கித் தோன்றும் பேரொளியே! பிறர் சொல்வதனால் உணர்தலென்று
இல்லாமல், பிறரெல்லாம் ஆராய்ந்து காணக் கூடிய எல்லாக் கலைகளிலும்
தன்னியல்பாகவே வல்லவனே! மேகங்கள் தவழும் வானுலகத்தவரும்
வியக்குமாறு, அற்பமானதை எடுத்துக் கொண்டு அதன் மூலம் உன்
வல்லமையைக் காட்டும் திறமை மிக்கவனே! உன்னைத் தொழும்
அடியவனாகிய எனது, புல்லைக் காட்டிலும் அற்பமான கீழ்மையைக்
கருதாமல், இத்தகைய மேன்மையோடு என்னை விளங்கச் செய்தது
எத்தகைய கருணை என்பதோ!"

     சூசை தன்னை அற்பத்திலும் அற்பமாக மதிப்பதனால், தனக்கு
வாய்ந்த மேன்மையைக் கண்டு வியக்கிறான். 'இத்திறம்' என்றது,
கன்னித்தாய்க்குத் தான் இல்லறத் துணைவனாகவும், அவளிடமாய்
அவதரிக்கும் கடவுளுக்கு வளர்ப்புத் தந்தையாகவும் அமைந்த
மேன்மையைக் கருதியது.

பார் ஆழி உரை கொண்டே படைத்தாய்; ஓர் குறுஞ் சூரல் பயனைக்
                                   கொண்டே
நீர் ஆழி வழி வகுத்தாய்; நெடும் படையோன் பணிக் கொண்டே,
                                   நில்லா வான் மீது
ஊர் ஆழி நிறுத்தினையே: ஒத்த திறத்து, இன்று உலகம் உய்தற்கு
                                   அன்பின்
பேர் ஆழி கடக்கவும் நீ தொழும்பன் எனைத் துணைக் கொண்டாய்,
                                   பெயராச் செல்வோய்!

     "நீங்காத செல்வம் படைத்த ஆண்டவனே, உலகத்தையும் கடலையும்
உன் உரை கொண்டே படைத்தாய்; ஒரு குறுகிய பிரம்பின் பயனைக்
கொண்டே நீர் நிறைந்த கடலினிடையே வழி ஏற்படுத்தினாய்; நெடிய
படையைக் கொண்டுள்ள சோசுவனின் கட்டளைக்கு இணங்க, நில்லாமல்
வானத்தில் ஊர்ந்து செல்லும் பகலவனின் சக்கரத்தை நிறுத்தினாய்;
இவற்றிற்கு ஒத்த தன்மையாய், இன்று இவ்வுலகம் மீட்பு அடையும்
பொருட்டு அன்பு என்னும் பெருங்கடலைக் கடக்கவும் உன்
அடியவனாகிய என்னை நீ துணையாகக் கொண்டாய்.

     உலகத்தை உரையாற் படைத்தது: ப, ஏ., ஆதியாகமம், 1 : 1 - 25
காண்க. பிரம்பைக் கொண்டு கடலில் வழி வகுத்தது: எசித்து நாட்டினின்று
வெளியேறிய இசுரவேலர் எசித்தியர் கையில் சிக்காதவாறு செங்கடலைக்
கடந்து செல்ல மோயிசன் கையில் இருந்த பிரம்பால் வழி வகுத்துக்
கொடுத்தது: ப. ஏ. யாத்திராகமம், 14 : 5 - 31; தேம்பாவணி, 14 : 21 - 71
காண்க. பகலவனை நிறுத்தியது: எருசலேம் மன்னனும் அவனுக்குத் துணை
நின்ற நால்வரும் இசுரவேலரொடு செய்த போரை ஒரே நாளில் முடிக்குமாறு
பகல் நீடிக்க வேண்டிச் சோசுவன் கட்டளையிட்டுக் கதிரவனை நிறுத்தியது.

"என்பு என்போடு அடிபடக் கின்னரத்து ஓதை அடிபட, சேர்
                                இனத்து இனங்கள்
அன்பு அன்போடு இசைபட, நேர் நரம்பு ஓடி, வளர் தசை மீது
                                அதளும் போர்த்த
பின்பு, இன்போடு உயிர் படவே, பெயர்ந்து எழ முன் இசேக்கியல்
                                கான் பெற்றி என்னா,
முன்பு என்போடு ஒன்று படக் கிடந்தனன் நான் உயிர்பட இம்
                                முயல் கொண்டாயோ?

     "எலும்புகள் எலும்புகளோடு தாமாகவே மோதுதலினால் கின்னரத்தின்
ஓசை தோன்றவும், அவ்வெலும்புகள் இசைவாகச் சேரக் கூடிய இனத்து
எலும்புகளோடு இனம் இனமாகத் தமக்குள் அன்பு கொண்டாற் போல்
சேர்ந்து கூடவும், அவ் வெலும்புக் கூட்டின்மீது நேராக நரம்புகள் ஓடி,
மேலே வளர்ந்த தசையின் மீது தோலும் பொருந்தி மூடிய பின்பு,
அவ்வுடலில் இன்பத்தோடு உயிர் வந்து பொருந்தவே, உயிர் பெற்ற
உடல்கள் எழுந்து நடக்கவும் முன் இசக்கியேல் என்ற இறைவாக்குநர்
கண்ட தன்மை போல, முன்பு ஐயத்தால் எலும்புக்கு ஒப்பாகக்
கிடந்தவனாகிய நான் உயிர் பெற்று எழுமாறு இம்முயற்சியை
மேற்கொண்டாயோ?

     இசேக்கியல் கண்ட காட்சி: எலும்புகள் கிடந்த பள்ளத்தில் கடவுள்
இசேக்கியலைக் கொண்டு போய், அவை ஒன்றுகூடி உடலும் உயிரும் பெற்று
எழச் செய்து, அதன்மூலம் இசுரவேலர் பெறும் நல்வாழ்வைக் குறிப்பாகக்
காட்டிய காட்சி. இதன் விரிவு ப. ஏ., எசேக்கியேல், 37 : 1-14 காண்க.

தெவ்வின் அகத்து ஊன் உண்டு, தீ உமிழ் மால் கரியினும் உள்
                                    திறன் சுதீத்தை,
நவ்வி அகத்து உரன் விஞ்ச, நால் கடல் அம் படைத் தலைவன்
                                    நவிர்ச் சிரத்தை
வவ்வி, அகத் துணிவு எய்தி வாளால் இற்றது கேட்டு, உன் வலி
                                    புகழ்ந்தேன்.
குவ்வின் அகத்து எனை உயர்த்த குணம் கண்டே இனி யாது
                                    கூறுகிற்பேன்?

     "பகைவர் மார்பின் ஊனை உண்ட தன்மையாய்க் கொம்பாற் கோதிக்
கிழித்து, சினத்தால் கண்ணினின்று தீயை உமிழும் மத மயக்கம் கொண்ட
யானையைக் காட்டிலும் மன வலிமை படைத்த சுதீத்தை என்பவள், தன்
அழகும் மன வலிமையும் ஒன்றையொன்று விஞ்சிய தன்மையாய், கடல்
போன்ற அழகிய நால்வகைப் படைகட்குத் தலைவனாகிய ஒலுபேரினன்
என்பானது குடுமித் தலையைப் பற்றிப் பிடித்து, மனத் துணிவு கொண்டு
வாளால் அறுத்த செய்தியைக் கேட்டறிந்து, உன் வலிமையைப் புகழ்ந்தேன்.
இப்பொழுது, இவ்வுலகில் என்னை இவ்வாறு உயர்த்தியுள்ள உன் குணத்தைக்
கண்ட பின், இனி யாது கூற வல்லேன்?

     'இற்றது' என்ற தன்வினை 'இறுத்தது' என்ற பிறவினைப் பொருளில்
நின்றது. சுதீத்தை படைத் தலைவன் தலையை வாளால் அறுத்தது: அசீரிய
மன்னனையும் அவன் தெய்வங்களையும் வணங்குமாறு இசுரவேலரைப்
பணிவிக்கப் பெத்தூலிய நகர் மீது படை கொண்டு வந்த ஒலுபேரினன் என்ற
தலைவனைச் சுதீத்தை தன் அழகால் மயக்கி, மதுவுண்டு மயங்கிய நிலையில்
அவன் தலையைக் கொய்து கொணர்ந்த நிகழ்ச்சி. விவரம் ப. ஏ., யூதித்,

வள்ளலார் - தெய்வமணிமாலை

 

திருவோங்கு புண்ணியச் செயலோங்கி யன்பருள்
திறலோங்கு செல்வ மோங்கச்
செறிவோங்க வறிவோங்கி நிறைவான வின்பந்
திகழ்ந் தோங்க அருள் கொடுத்து
மருவோங்கு செங்கமல மலரோங்கு வணமோங்க
வளர்கருணை மயமோங்கி யோர்
வரமோங்கு தெள்ளமுத வயமோங்கி யானந்த
வடிவாகி யோங்கி ஞான
உருவோங்கு முணர்வினிறை யொளியோங்கி யோங்குமயில்
ஊர்ந்தோங்கி யெவ்வுயிர்க்கும்
உறவோங்கு நின்பதமென் னுளமோங்கி வளமோங்க
உய்கின்ற நாளெந்த நாள்
தருவோங்கு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
வள்ளல் பெருமான் தெய்வமணிமாலை என்று சென்னை கந்தக்
கோட்டத்தில் அருள் வழங்கும் சண்முக தெய்வத்தை போற்றி
பிராத்தித்து வேண்டிய பாடல்கள்.புறத்தில் சென்னையில் கந்தகோட்ட முருகனை பாடியது. இதன்
அகப்பொருள் நம் சென்னியில் அமைந்துள்ள கோட்டம் கண்
என்பதாகும். கோட்டம் என்றால் கோயில். தெய்வம் இருப்பது கோயிலிலே
தானே! தெய்வம் சண்முகம்  அதாவது ஆறுமுகம். இருகண்கள் தான் ஆறுமுகம்.1 கண் 3 வட்டம் 3 முகம் 2 கண்ணும் சேர்ந்து 6 முகம். ஆறுமுகமான
பொருள் – மெய்ப்பொருள் தெய்வமணி – தெய்வம் இருக்கும் மணி கண்மணியே, நீர் கண்ணில் இருப்பதால் தண்முகம். கண்மணியில் உள் ஒளி இருப்பதால் உண்முகம் -உள்முகம் துய்யமணி – கண்மணி தூய்மையானது. திருவாகிய தெய்வம் – ஒளி  முகத்துக்கு முகமாக கண்மணியில் உள்ளே ஒளியாக இருக்கிறது. ஒளி ஓங்கி வருமல்லவா? அதைத்தான் வள்ளலார் ஓங்கி ஓங்கி ஓங்க என்று பலவாறாக பாடியுள்ளார்.”கண்மணியுள் உள்ள ஒளி ஓங்கி வளர அருள்புரி  இறைவா! “ஒளி ஓங்கி
வளர வளர எல்லாம் கிடைக்கும்!‘ஓங்கு மயில் ஊர்ந் தோங்கி மயில்’  என்றால் ஒளி.பலவர்ண ஒளி, அது
ஊர்ந்து ஊர்ந்து கண்மணி  ஒளியை உள்ளே கொஞ்சங் கொஞ்சமாக கொண்டு சென்று – அக்னிகலையுடன் சேரும். தியான அனுபவ நிலையை கூறுகிறார் வள்ளலார். 9 வயதில் பாடிய பாடல் இது! பிறவி ஞானி வள்ளலார் என்பதற்க்கு இப்பாடல் ஒன்றே சாட்சி.

‘செங்கமல மலரோங்கு’ நம் கண்மணி தவத்தால் சிவமாக்கும் தாமரை மலர் – கமலம். மலர் என்றால் கண்மலர் சிவந்த கண்ணே செங்கமலமலர்!

கண்ணில் மணியில் உள்ளில் இருக்கும் ஒளியான கந்தனை – சண்முகனை – இரு கண்மணி ஒளியை தியானிக்க அவ்வொளி உள்ளே ஊர்ந்து சென்று அக்னியை 3வது கண்ணை அடையும் இதுவே தியான அனுபவம்.

‘துரிசறு சுயஞ்சோதியே ‘ பாடல் 5

துரிசு என்றால் நம் பாவ புண்ணியமான கர்மவினை. அது நாம்
இறைவனை அடைய தடையாக இருக்கிறது. நாம்  தியானம் செய்து
நம் கண்மணியிலுள்ள சுயம் ஜோதியை ஓங்கி வளர செய்தால் நம்
துரிசு அற்றுப்போகும். வினை இல்லாது போனாலே முக்தி.

‘அலையிலா சிவ ஞான வாரியே  – பாடல் 7

வாரி என்றால் கடல். கடலில்  அலை உண்டு அலையில்லா
கடல் சிவம் விளங்கும் ஒளி பொருந்திய  நமது கண்ணே. ஒளி
மிகுந்தால் ஞானமே

‘திருமலரடி ‘ பாடல்   8

திருவாகிய இறைவன் – ஒளி மலராகிய கண்மலரில் உள்ள அதுவே
அடி – திருவடி – இறைவன் திருவடி எனப்படும்.

‘உத்தமர் ‘ பாடல்  8

உள்+ தமர்  – உத்தமர், கண்மணியின் மத்தியில் உள் உள்ள துவாரம்
தமர் என்றால் ஓட்டை – துவரம். கண்மணியின் மத்தியில் உள்ள
சிறு துவாரம் அடைபட்டு ள்ளது. உள்ளே ஒளி – சிவம் இருக்கிறது.
உள் – தாமரை உள்துவாரத்தை அறிந்தவரே உத்தமர்.

நாம் பிரமம்  – பாடல் 11
நாம் கடவுள் பிரமமே நம்முள்ளும் நம் கண்மணியுள்ளும் ஒளியாக
திகழ்கிறது. பிரம்மத்தின் ஒரு அணு அ ளவு  – பேரொளியின் ஒரு
சிறு ஒளி நம்மில் நம் உயிராக உள்ளது.

பந்தமற நினையெணா – பாடல் 18
நமது  பந்தம் அறவேண்டுமாயின் இறைவனை எண்ண வேண்டும்.
எட்டும் இரண்டும் என்ன வேண்டும். நினைக்க வேண்டும்.நினைந்து
எண்ணி தவம் புரிந்தால் நம் பந்தமாகிய கர்மவினை இல்லாது
போகும்.

‘நின்னடிச்சீர் மகிழ்கல்வி  – பாடல் 22
நின்னடி – இறைவன் திருவடி – நம் இரு கண்கள் – சீர் – இறைவன் நமக்கு
கொடுத்த சீர் ஒளி . கண்களில் ஒளி இருப்பதை அறிவது அதை ஒங்க செய்வதாகிய கல்வி – சாகா கல்வியை கற்க வேண்டும் . இதுவே மகிழ்ச்சியை – பேரின்பத்தைதரும் சாகாகலையாகும் .

நம் மனமானது பொன்னாசை , மண்ணாசை , பெண்ணாசை கொண்டு அலைகிறது . அது எப்படி இருக்கிறது என்றால் பேய்பிடித்து கல்குடித்து தடியால் அடிபட்டு பைத்தியம் பிடித்த  குரங்கு போல் என்கிறார் பாடல் 23-ல்

பிரணவா கார சின்மய விமல சொரூபம் – பாடல் 24

பிரணவம் – ஓம் – அ . உ . ம . ஆகும் . அ – வலது கண் உ – இடது கண் . இரண்டு கண்ணும் உள் முகமாக சேரும் இடம் அக்னி  ம . ஆகும் . மூன்றும் சேர்ந்தால் ஓங்கார நாதம் கேட்கும் . சின்மயம் – சின் முத்திரை வைத்தால் அறியலாம் . சின்முத்திரை வைப்பதே கண்ணை குறிப்பால் உணர்த்தத்தான் . ஆள்காட்டிவிரலால் கட்டைவிரலின் மத்தியில் உள்ள கோடை தொட்டு இருப்பதே சின்முத்திரை . கட்டைவிரல் நுனியிலிருந்து
முதல் வரி வரை உள்ள அளவே நம் கண் அளவு . இரு விரலும் தொட்டிருக்கும்போது பார்த்தால் தெரியும் வட்டம் கண்போன்றிருக்கும் . எல்லாமே சூட்சமம் விமலம் என்றால் மலம் இல்லாதது சுத்தம் ஒளி ஒன்றுதான் .

பிரம்மன் இனி என்னை பிறப்பிக்க வல்லனோ – பாடல்  27

நாம் நம் கண்மணி ஒளியை தவம் செய்து ஒங்கச் செய்தால் நம் வினைகள் இல்லாது போகும் . வினைகள் தானே பிறப்புக்கு ஆதாரம் !  வினைகள் இல்லையெனில் பிரம்மன் இனி எப்படி படைக்க முடியும் ?

நின் பதத்தியான முண்டாயில்  பாடல்  28
இறைவா உன் பதம் – பாதம் – திருவடி தியானம் இருக்குமானால் எல்லா செல்வமும் பெற்று இவ்வுலகிலும் வாழ்வாங்கு வாழலாம் .

முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான மூர்த்தியே முடிவிலாத முருகனே -பாடல் 30
நாம் முக்தி பெற வேண்டி இரு கண் ஒளியை தியானம் செய்யும்போது முதலில் வருவது முதல்காட்சி  சண்முகம் இரு கண்கள் . நம் இரு கண்களையும் நம்முன் காணலாம் .முருகன்தான் முதலில் காட்சி தருவான் ! முருகு என்றால் அழகு – இளமை அது நம்கண்தானே ! கண்தானே அழகு ! கண் தானே என்றும் இளமையானது !

வள்ளலே என்னிருகண்மணியே ஏன் இன்பமே – பாடல் 31

வள்ளலே – இறைவனே என் இரு கண்மணியே – ஏன் இரு கண்மணியில் ஒளியாக துலங்கும் இறைவனே எனக்கு பேரின்பம் தருபவன் . நம் இரு கண்மணியில் உள்ள ஒளியை ஒங்கச் செய்தாலே பேரின்பம் கிட்டும் .



No comments:

Post a Comment

II BA 4th sem major papers

  இளங்கலை இரண்டாமாண்டு - நான்காம் பருவம்             முதன்மைப் பாடம் - தாள் ;.7 -- இலக்கணம் - 4                      தண்டியலங்காரம்...