அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம-7
தமிழ்த்துறை
மாதிரி வினாத்தாள் -2021
தொல்காப்பியம் எழுத்ததிகாரம்
-
காலம்:
மூன்றுமணிநேரம் மதிப்பெண்: 75
பகுதி – அ
தெரிவுசார்வினாக்கள் (20*1=20)
சரியான
விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.
தொல்காப்பியத்திற்கு சிறப்புப்பாயிரம்
பாடியவர்
அ)அகத்தியர் ஆ) அதங்கோட்டாசான் இ)
தொல்காப்பியர் ஈ) பனம்பாரனார்
2.மேலே புள்ளி வைத்து
எழுதப்படும் மெய்யெழுத்துகளைப் போல் புள்ளி பெறும் உயிர்எழுத்துக்கள் ............
அ) ப,ம ஆ) எ,ஒ இ) அ,ஒ ஈ) எ,ஒள
3.தொல்காப்பியர் குறிப்பிடும் வினா
எழுத்துக்கள் எத்தனை..................
அ) 4 ஆ) 5 இ) 3 ஈ) 2
4.சகரமெய் எந்தெந்த உயிருடன் சோ;ந்து மொழிமுதலாகாது............
அ) அ,ஐ.ஔ ஆ) ஔ,அ,ஆ இ) ஈ,ஆ,ஓ ஈ) அ,ம்,ப்
5.பின்வருவனவற்றுள்
தொல்காப்பியம் குறிப்பிடும் மொழி
முதல்
குற்றியலுகரம் ......
அ) குரங்கு
ஆ) நுந்தை இ) தந்தை ஈ) முரசு
6. நுனிநா அண்ணம் ஒற்ற பிறக்கும்
எழுத்துக்கள் ...............
அ) ர,ழ ஆ) ல,ன இ) ற,ன ஈ) ய,வ
7.பல் இதழ் இயைந்து பிறக்கும்
எழுத்து
அ) ய் ஆ)
ப் இ) வ் ஈ) ல்
8.வேற்றுமை உருபுகளை ஏற்கும்
சொல்...........
அ)
பெயா; ஆ)
வினை இ) இடை ஈ) உரி
9.கரம், காரம், கான் எனும் மூன்று சாரியைகளையும் பெறும் எழுத்துக்கள்
...............
அ) ஐ,ஔ ஆ) நெட்டெழுத்து இ) குற்றெழுத்து ஈ)
மெய்யெழுத்து
10.பனைஎன் அளவும் காஎன்
நிறையும்நினையுங் காலை .......... உடன்சிவனும்
அ)
அத்து ஆ) இன் இ) அம் ஈ) அற்று
11.உயா;திணையில் பலரை
வினவி அறியும் „யாவா;‟என்னும் பெயாpனிடையே கெடும் எழுத்து
அ)
வ ஆ) ஆ இ) ர்ஈ) உ
12.பெயர்களோடு வேற்றுமை உருபுகள்
புணரும் முறையைக் கூறும் தொல்காப்பிய இயல்
அ)
வேற்றுமையியல் ஆ) உருபியல் இ) பொருளியல் ஈ) மரபியல்
13.சுட்டெழுத்தை முதலாகக் கொண்ட „ஐ‟கார
ஈற்றுச்சொல் எந்த சாரியைப் பெறும்.........
அ)அற்று
ஆ) அத்து இ) வற்று ஈ) அன்
14.அ என்னும் சுட்டெழுத்தின் முன்
ய,வ வருமொழியாக வந்தால்
இடையில் தோன்றும் ஒற்று.........
அ) ஞ்
ஆ) ந் இ) ம் ஈ) வ்
15.மக என்னும் பெயர்ச்சொல்
வேற்றுமையில் பெறும் சாரியை
............
அ) இன்
ஆ) அத்து இ) வற்று ஈ) அன்
16.தாய் எனும் சொல்லினை அடுத்து
வருமொழியில் வல்லினம் வந்தால் தொல்காப்பிய
விதிப்படி ஒற்று......
அ)
மிகும் ஆ) மிகாது இ) கருத்து கூறவில்லை ஈ) ஆம் -இல்லை
17.„தமிழ்‟எனும்
சொல் நிலைமொழியிலிருக்க வருமொழியில் வல்லினம் வந்தால் ஒற்று.
அ)
மிகும் ஆ) மிகாது இ) விதிஇல்லை ஈ) வந்தாலும் வரலாம்
18.குற்றியலுகரம் எழுத்தின்
அடிப்படையில் எத்தனை வகைப்படும்..........
அ)
மூன்று ஆ) நான்கு இ) ஆறு ஈ) ஏழு
19.„பெண்டு‟எனும்
குற்றியலுகரச் சொல் எந்தச் சாரியைப் பெறும்
அ)
அத்து ஆ)அன் இ) அன்,இன் ஈ)
வற்று
20.இரண்டு திசைகள் தம்மோடு
புணரும்போது இடையில் எந்தச் சாரியை வரும்?
அ) அன்
ஆ) அம் இ) ஒ ஈ) ஏ
பகுதி –ஆ
பகுப்பாய்வு வினாக்கள்
(3*5=15)
எவையேனும்
மூன்றனுக்கு விடையளிக்க
21.மரபு என இயல்களுக்குத்
தலைப்பிட்டதன் சிறப்பை ஆராய்ந்தெழுதுக.
22.தொல்காப்பியர் தொன்னூற் பயிற்சி மிக்கவர் என்பதனைச் சான்றுகளுடன் தந்து விளக்குக.
23.இயற்றமிழேயல்லாது
இசைத்தமிழுக்கும் தொல்காப்பியர் இலக்கணம் கூறியுள்ளார் என்பதனை ஆராய்க.
24.எல்லாம் என்னும் விரைவுப்பெயர்
எவ்வாறு தோன்றும்?;.
25.மகரம் குறுகுதல் பற்றிய
தொல்காப்பிய விதிகளைக் குறிப்பிடுக.
பகுதி –இ கட்டுரை
வடிவில் விடைதருக (5*8=40)
26.உடனிலை, வேற்றுநிலை மெய்மயக்கம்
என்றால் என்ன? விளக்குக.
11(அல்லது)தொல்காப்பியர் குறிப்பிடும் மூவகை மொழியினைச்
சான்றுடன் விளக்குக.
27.சார்பெழுத்துகளின் பிறப்பிடம்
குறித்துத் தொல்காப்பியர் குறிப்பிடும் கருத்துக்களை எழுதுக.
(அல்லது) புணாச்சியில்
இடம்பெறும் வேற்றுமை உருபுகளை விளக்குக.
28.தொல்காப்பிய உருபியல் புறனடை
கூறும் கருத்துக்களைத் தொகுத்துரைக்க.
(அல்லது)இயல்பாக முடியும் அகர
ஈற்றுச் சொற்புணாச்சி குறித்து எழுதுக.
29.ஆயிரம் எனும் எண்ணுப்பெயரின் சொற்புணாச்சியினைத் தொகுத்துரைக்க.
(அல்லது)குற்றியலுகரம் என்றால்
என்ன? அதன்
வகைகளை விளக்குக.
30.வேற்றுமையில் மகர ஈற்றின்
புணாச்சி குறித்து விளக்குக.(அல்லது)
தொல்காப்பியர்
சார்பெழுத்துக் கொள்கைகளை விவரி
--------------------------------------------------------------
1.தமிழ்மொழிக்கு அடிப்படையாக இருப்பது எது ? எழுத்து
2.எழுத்துக்களின் பல்வகை இலக்கணங்களையும் எடுத்துரைப்பது எது ? நூல் மரபு
3.நூல் மரபு – என்பதில் நூல் என்பது எதனை இருக்கும்? எழுத்துக்களை
4.நூல் மரபு என்பதை வேறுபெயரால் எவ்வாறு குறிக்கலாம் ? எழுத்து மரபு
5. எழுத்துக்களின் வகைகள் எத்தனை ? இரண்டு – முதலெழுத்து, சார்பெழுத்து
6 சார்பெழுத்து எத்தனை வகைப்படும் ? மூன்று
7.முதல் எழுத்துக்களை ஒத்த தன்மை உடைய எழுத்துக்கள் யாவை? சார்பெழுத்துக்கள்
8.உயிர் குறிலுக்கு மாத்திரை அளவு யாது? ஒன்று
9. உயிர் நெடில் எழுத்துக்கள் யாவை ? ஏழு (ஆ, ஈ, ஊ, ஏ,ஐ, ஓ,ஒள )
10.ஒர் எழுத்து ஒரு மொழியாக வரும் உயிர் எழுத்துக்கள் யாவை ? நெடில் (உயிர்) 7
11.தனித்து நின்று மூன்று மாத்திரையாய் ஒலிக்கும் தமிழ் எழுத்துக்கள் யாவை ?
தனித்து நின்று மூன்று மாத்திரையாய் ஒளிப்பது இல்லை.
18. நெட்டெடுத்துக்களின் பின் குற்றெழுத்துகளை சேர்ந்து எழுத வேண்டிய தருணம் எது?
அளபெடை
13.கண் இமைக்கும் கை நொடிக்கும் கால அளவு எவ்வாறு குறிப்பிடப்படுகிறது? மாத்திரை அளவு
14.18 மெய்யெழுத்துகளையும் இயக்கும் தன்மை கொண்டவை யாவை ?
உயிர் எழுத்துக்கள்
15. உயிரெழுத்துகளின் வேறுபெயர் யாது? உயிர்க்கணம்
16.மெய்யெழுத்தின் தொகை எத்தனை? – 18
17. மெய்யின் வேறு பெயர் என்ன? உடம்பு (அ) மெய்
18.உயிர் மெய்யாக மாறும்போது எவ்வகை மாற்றம் நிகழும் ? ஒலி வடிவம் வேறுபடும்.
19. குறிலின் மாத்திரை அளவு யாது ? 1 மாத்திரை
20. நெடிலுக்கான மாத்திரை அளவு யாது? 2 மாத்திரை
21. உயிர்மெய்க் குறிலுக்கான மாத்திரை அளவு யாது? 1 மாத்திரை
22. உயிர்மெய்க் நெடிலுக்கான மாத்திரை அளளவு யாது? 2 மாத்திரை
23. தனி மெய்யின் மாத்திரை அளவு யாது ? அரை மாத்திரை
24.சார்பெழுத்துக்களின் மாத்திரை அளவு யாது ? அரை மாத்திரை
25 மகரக்குறுக்கத்தின் மாத்திரை அளவு யாது? 1/4 மாத்தினர
26.மகரக்குறுக்கத்தின் வடிவம் என்ன? ம்
27.உட்பெறு புள்ளி என்று எதனை அழைப்பர் ? மகரக்குறுக்கம்
28.மெய்யெழுத்தைப் போன்று புள்ளிப் பெறும் உயிர்கள் யாவை? எகரம், ஒகரம்
29.முற்காலத்தில் எ, ஒ எனும் எழுத்துகளின் குறில் வடிவம் – எ, ஒ
30.முற்காலத்தில் எ, ஒ எனும் எழுத்துகளின் நெடில் வடிவம் – எ, ஒ
31.18 மெய்யெழுத்துக்களும் 12 உயிர் எழுத்துகளும் கூடி எவ்வாறாக மாறும்?
உயிர் மெய்யாக மாறும்
32.மெய்பெழுத்துகள் அகரத்தோடு சேரும் போது எதனை இழக்கும்?
புள்ளியை இழக்கும்.
33மெய்யெழுத்துக்கள் பிற உயிர்களோடு சேரும்போது எது மாறும் ?
வடிவம் மாறும்
34.உயிர்மெய் எழுத்துக்களை ஒலிக்கும்போது முன்னர் ஒலிக்கும் ஓசை
மெய்யின் ஓசை
35. உயிர்மெய் எழுத்துக்களை ஒலிக்கும்போது பின்னர் ஒலிக்கும் ஓசை
உயிரின் ஓசை
36.வல்லின எழுத்துக்கள் யாவை? – க,ச,ட,த,ப,ற
37. வல்லெழுத்தின் வேறு பெயர் என்ன? – வன்கணம்
38. வல்லெழுத்தின் பிறப்பிடம் யாது ? – தலை
39 மெல்லின எழுத்துக்கள் யாவை? ங, ஞ, ண, ந, ம, ன
40. மெல்லெழுத்தின் பிறப்பிடம் பாது ? – மூக்கு
41. மெல்லெழுத்தின் வேறு பெயர் ? மென்கணம்
42. இடை எழுத்துக்கள் யாவை? ய, ர, ல, வ,ழ, ள
43. இடையெழுத்துக்களின் பிறப்பிடம் யாது ? – மிடறு
44.இடையின எழுத்தின் வேறுபெயர் என்ன? இடைக்கணம்
45.மெய்மயக்க வகைகளைக் கூறுக
2 வகைகள் – வேற்றுநிலை மெய்ம்மயக்கம், உடனிலை மெய்ம்மயக்கம்
46 மொழிக்கு முதலில் வரும் உயிர்மெய்யெழுத்துக்கள் எத்தணை?
9- க, ச, த, ப, ஞ, ந, ம, ய, வ
47. உடனிலை மெய்மயக்கமாக வரும் எழுத்துக்கள் எத்தனை ? – 16
48. சுட்டெடுத்துக்கள் எத்தனை ? – 3 (அ, இ, உ) (சேய்மை) (அண்மை) (இடைமை)
49. வினா எழுத்துக்கள் எத்தனை ? -3 (ஆ,ஏ,ஓ)
50.உயிரெழுத்துக்களும், ஒற்றெழுத்துக்களும் தமக்குக்குரிய மாத்திரை அளவினைக் கடந்து எப்போது ஒலிக்கும் ? இசை
இப்படிப் பல்வேறு நுட்பமான மொழிபற்றிய அறிவைத் தொல்காப்பியம் நூன் மரபு இயல் வழி வழங்குகின்றது
-----
மெய்ம் மயக்கம் என்றால் என்ன?
மெய்ம் மயக்கம் அல்லது மெய் மயக்கம் அல்லது தமிழில் மெய்யொலிக் கூட்டம் என்பது தமிழ் இலக்கணத்தில் ஒரு சொல்லில் மெய்யெழுத்துகள் அடுத்தடுத்து வருவதைக் குறிக்கும். இரண்டு மெய்கள் இணைந்து வருவதே பெரும்பான்மை. அரிதாக மூன்று மெய்கள் இணைந்து வருவதும் உண்டு. இரு மெய்கள் இணைந்து வருவது 'மெய்ம் மயக்கம்' என்றும் மூன்று மெய்கள் இணைந்து வருவதை 'ஈரொற்று மயக்கம்' என்றும் கூறுவர்
வேற்றுநிலை மெய்ம்மயக்கம்
ஒரு மெய் எழுத்தை அடுத்து வேறு ஒரு மெய்எழுத்துச் சேர்ந்து வருவது வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எனப்படும்.
ஒரு சொல்லின் முதல் எழுத்தாக உயிர் மெய் எழுத்து இருந்தால் அதனை மெய்+உயிர் எனப் பிரித்துப் பார்க்க வேண்டும் என்பதை முந்தைய பாடத்தில் பார்த்தோம். எனவே ஒரு சொல்லில் ஒரு மெய் எழுத்தை அடுத்து ஓர் உயிர்மெய் எழுத்து வரும்போது இரண்டு மெய் எழுத்துகள் அடுத்தடுத்து வருகின்றன. அப்படி வரும்போது அவை இயல்பாக அமைகின்றனவா என்று பார்க்க வேண்டும். இயல்பாக இருந்தால் அது வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எனப்படும்.
எடுத்துக்காட்டாக, நான்கு என்னும் சொல்லில் ன் என்னும் மெய்எழுத்தும் க் என்னும் மெய் எழுத்தும் இயல்பாக இணைந்து ஒலிக்கின்றன. எனவே இது வேற்றுநிலை மெய்ம்மயக்கம் என்று அழைக்கப்படுகிறது.
மெய்எழுத்துகள் பதினெட்டில் க, ச, த, ப என்னும் நான்கு மெய் எழுத்துகள் தவிர்த்து, ஏனைய பதினான்கு மெய்எழுத்துகளும் வேற்றுநிலை மெய்ம்மயக்கத்தில் வரும்.
|
||||||
என்பன ஆகும்.
• ங் என்னும் மெய்எழுத்து
‘ங்’ என்னும் மெய்எழுத்துக்குப் பின், ‘க்’ என்னும் மெய்எழுத்து மட்டுமே வரும் பிற மெய் எழுத்துகள் வருவது இல்லை.
எடுத்துக்காட்டு:
தங்கம்
வங்காளம்
அங்கி (நெருப்பு, சட்டை)
அங்கு
அங்கூடம் (அழகிய கூடம்)
அங்கே
அங்கை (உள்ளங்கை)
எங்கோமான்
• ஞ் என்னும் மெய் எழுத்து
‘ஞ்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் ச், ய் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.
எடுத்துக்காட்டு:
கஞ்சம் (தாமரை)
அஞ்சாமை
அஞ்சி
அஞ்சீறடி (அழகிய சிறிய பாதம்)
கஞ்சுகம் (சட்டை)
உரிஞ்(தேய்) யாது
• ட் என்னும் மெய் எழுத்து
‘ட்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ப் ஆகிய மெய் எழுத்துகள் வரும்
எடுத்துக்காட்டு:
வெட்கம்
வெட்சி (ஒரு பூ)
மாட்சி (பெருமை)
நட்பு
நுட்பம்
• ண் என்னும் மெய் எழுத்து
‘ண்’ என்னும் மெய்எழுத்துக்குப் பின் க், ச், ஞ், ட், ப், ம், ய், வ் ஆகிய எட்டு மெய் எழுத்துகளும் வரும்.
எடுத்துக்காட்டு:
|
வெண்கலம் |
} |
க் |
|
வெண்சோறு |
} |
ச் |
|
வெண்ஞமலி |
} |
ஞ் |
|
மண்டலம் |
} |
ட் |
|
நண்பகல் |
} |
ப் |
|
வெண்மலர் |
} |
ம் |
|
மண்யாது |
- |
ய் |
|
மண்வலிது |
- |
வ் |
• ந் என்னும் மெய் எழுத்து
‘ந்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் த், ய் என்னும் மெய்எழுத்துகள் வரும்.
எடுத்துக்காட்டு:
|
வந்த |
} |
த் |
|
வெரிந்யாது |
- |
ய் |
• ம் என்னும் மெய்எழுத்து
‘ம்’ என்னும் மெய்எழுத்துக்குப் பின் ப், ய், வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.
எடுத்துக்காட்டு:
|
கம்பன் |
} |
ப் |
|
கலம்யாது |
} |
ய் |
|
கலம்வலிது |
} |
வ் |
• ய் என்னும் மெய் எழுத்து
‘ய்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ஞ், த், ந், ப்,ம், வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.
எடுத்துக்காட்டு:
|
பொய்கை (நீர்நிலை) |
} |
க் |
|
வேய்சிறிது |
} |
ச் |
|
வேய்ஞான்ற |
- |
ஞ் |
|
நெய்தல் |
} |
த் |
|
மெய்நீண்டது |
- |
ந் |
|
மெய்பெரிது |
- |
ப் |
|
பேய்மனம் |
- |
ம் |
|
பேய்வலிது |
- |
வ் |
• ர் என்னும் மெய் எழுத்து
‘ர்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ஞ், த், ந், ப், ம், வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.
எடுத்துக்காட்டு:
|
வேர்கள் |
- க் |
|
வேர்சிறியது |
- ச் |
|
வேர்ஞான்றது |
- ஞ் |
|
தேர்தல் |
- த் |
|
நீர்நிலம் |
- ந் |
|
மார்பு |
- ப் |
|
கூர்மை |
- ம் |
|
வியர்வை |
- வ் |
• ல் என்னும் மெய் எழுத்து
‘ல்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ப், ய், வ் என்னும் மெய் எழுத்துகள் வரும்.
எடுத்துக்காட்டு:
|
கால்கோள் (தொடக்கம்) |
- க் |
|
வல்சி (உணவு) |
- ச் |
|
கல்பாக்கம் |
- ப் |
|
நல்யாறு |
- ய் |
|
பல்வலி |
- வ் |
• வ் என்னும் மெய் எழுத்து
‘வ்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் ‘ய்‘ என்னும் மெய்எழுத்து மட்டும் வரும்.
எடுத்துக்காட்டு : தெவ்யாது (தெவ் - பகை)
• ழ் என்னும் மெய் எழுத்து
‘ழ்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ஞ், த், ந், ப், ம், வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.
எடுத்துக்காட்டு:
|
ழூழ்கினான் |
- க் |
|
பாழ்செய் (பாழ்படுத்து) |
- ச் |
|
வீழ்ஞான்ற (தொங்கிய விழுது) |
- ஞ் |
|
ஆழ்தல் |
- த் |
|
வாழ்நாள் |
- ந் |
|
வாழ்பவன் |
- ப் |
|
வாழ்மனை |
- ம் |
|
வாழ்வு |
- வ் |
• ள் என்னும் மெய் எழுத்து
‘ள்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ப், ய், வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.
எடுத்துக்காட்டு:
|
கொள்கலம் |
- க் |
|
வாள்சிறிது |
- ச் |
|
வாள் பெரிது |
- ப் |
|
வாள்யாது |
- ய் |
|
கள்வன் |
- வ் |
• ற் என்னும் மெய்எழுத்து
‘ற்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ப் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.
எடுத்துக்காட்டு:
|
கற்க |
- க் |
|
கற்சிலை |
- ச் |
|
கற்பவை |
- ப் |
• ன் என்னும் மெய் எழுத்து
‘ன்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ஞ், ப், ம், ய், வ், ற் என்னும் மெய் எழுத்துகள் வரும்.
எடுத்துக்காட்டு:
|
பொன்கலம் |
- க் |
|
புன்செய் |
- ச் |
|
புன்ஞமலி |
- ஞ் |
|
புன்பயிர் |
- ப் |
|
நன்மை |
- ம் |
|
பொன்யாது |
- ய் |
|
பொன்வலிது |
- வ் |
|
தென்றல் |
- ற் |
இதுவரை க், ச், த், ப் என்னும் நான்கு மெய் எழுத்துகள் தவிர, ஏனைய பதினான்கு மெய் எழுத்துகளும் பிற மெய் எழுத்துகளுடன் சேர்ந்து வரும் தன்மையைப் பார்த்தோம்.
--
மொழிமரபு
மொழிமரபு
இயலில் கூறப்படும் செய்திகள்
1. குற்றியலிகரம்,
2. குற்றியலுகரம்,
3. ஆய்தம் ஆகிய சார்பெழுத்துக்கள்.
4. அளபெடை
5 எழுத்துக்களின் இயக்கம் (மொழியாக்கம், சொல் வகை)
6. போலி
7. மொழிமுதல் எழுத்துக்கள்
8. மொழியிறுதி எழுத்துக்கள்
----------------------------------------------------------------------------
1. குற்றியலிகரம்
இருத்தல்
- இச்சொல்லில் உள்ள இகரம் முழுமையான, ஒரு மாத்திரையுடைய இகர உயிர் ஆகும். நாடு + யாது - நாடியாது என்பதில் உள்ள இகரத்தை ஒலித்துப் பாருங்கள். அத்துடன் கேள் + மியா - கேண்மியா, செல் + மியா - சென்மியா எனும் புணர்மொழிகளில்
வரும் இகரத்தையும் ஒலித்துப் பாருங்கள். இவற்றில் இகரம் குறைந்து ஒலிப்பதை உணரலாம். இதுவே குற்றியலிகரம் ஆகும். இது அரைமாத்திரை பெறுவது.
நிலைமொழி
ஈற்றில் உள்ள குற்றியலுகரத்தின் முன், வருமொழி முதலில் யகரம் வரும்போது குற்றியலுகரம் இகரமாய்த் திரிபடைகிறது. கேள், செல் எனும் சொற்களுடன் மியா எனும் அசைச்சொல் புணரும்போது அவ்வசைச் சொல்லில் உள்ள இகரமும் குறுகுகிறது
கேள் + மியா - கேண்மியா, செல் + மியா - சென்மியா
----------------------------------------------------------------------------
2. குற்றியலுகரம்
இதனை
1மொழி இறுதிக் குற்றியலுகரம்
2மொழி முதல் குற்றியலுகரம்
என
இரு வகைப்படுத்தி விளக்குகிறார் தொல்காப்பியர்.
1
மொழி இறுதிக் குற்றியலுகரம்
தனி நெட்டெழுத்தைத் தொடர்ந்தோ
- நாடு
உயிரெழுத்து - முரசு,
இடையின எழுத்து, -
மாரபு
ஆய்த
எழுத்து, - எஃகு,
வல்லின எழுத்து, - கொக்கு,
மெல்லின எழுத்து - பந்து
ஆகிய
ஐவகை எழுத்துகளைத் தொடர்ந்தோ வரும் ஒரு சொல்லின் இறுதியில் க், ச், ட், த், ப், ற் என்னும் ஆறு வல்லின மெய்களின் மேல் ஏறி வரும் உகரம் தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறுகி அரை மாத்திரையாய் ஒலிக்கும். இதுவே தொல்காப்பியர் குற்றியலுகரத்திற்குக் கூறும் இலக்கணம்.
(எ.டு) , ,
தனிக்குறிலை
அடுத்த வல்லின மெய்யின் மேல் ஏறிவரும் உகரம் குறுகவில்லை. எனவே அது முற்றியலுகரம் எனப்படும்.
(எ.டு) கடு, தபு.
2 மொழி முதல் குற்றியலுகரம்
|
நெட்டெழுத்து இம்பரும் தொடர்மொழி ஈற்றும் |
3 |
மொழிக்கு
முதலிலும் குற்றியலுகரம் வரும் என்று தொல்காப்பியர் கூறுகிறார். இது அவர் காலத் தமிழின் ஒலியமைப்பில் குறிப்பிடத்தக்க இயல்பாகும்.
மொழி முதலில் குற்றியலுகரம் வருவது நுந்தை (உன் தந்தை) என்ற ஒரு சொல்லில் மட்டுமே என்கிறார் தொல்காப்பியர். (தொல். எழுத்து.
67).
இச்சொல்லில்
மொழி முதலில் வரும் மெல்லின நகர மெய்யின் மேல் ஏறி வரும் உகரம், அடுத்து வரும் மற்றொரு நகர மெய்யின் ஒலிச் சார்பால் இசைமை குறைந்து குற்றியலுகரமாக ஒலிக்கிறது. பின் வந்த நன்னூலில் மொழிமுதல் குற்றியலுகரம் கூறப்படவில்லை.
----------------------------------------------------------------------------
தொல்காப்பியர்
கூறும் மூன்றாவது சார்பொலி ஆய்தம். இது
தற்காலத் தமிழ் நெடுங் கணக்கில் உயிர் எழுத்துகளின் வரிசைக்கும், மெய் எழுத்துகளின் வரிசைக்கும் நடுவில் உள்ளது. தொல்காப்பியர் காலத்தில் ஆய்தம் ஒரு நுண்ணிய ஒலியாக வழங்கியுள்ளது. ஆய் என்ற சொல்லுக்கு நுண்மை என்று பொருள் கூறுகிறார் தொல்காப்பியர். (தொல். உரியியல்) எனவே ஆய்தத்தை அவர் ஒரு நுண்ணிய ஒலியாகவே கருதியிருக்கிறார் என்று கூறலாம்.
தொல்காப்பியர் ஆய்தத்தைத் தனிமொழி, புணர்மொழி என்ற இருவகை
மொழிகளில் வைத்து விளக்குகிறார். (தனிமொழி - ஒருசொல்; புணர்மொழி - இருசொல்.)
தனிமொழி ஆய்தம்
ஆய்தம்
ஒரு தனிக்குறிலுக்கும் வல்லின உயிர்மெய்க்கும் நடுவே வரும்.
(எ.டு) எஃகு, கஃசு, பஃது, அஃகு
. புணர்மொழி ஆய்தம்
தொல்காப்பியர்
புணர்மொழி ஆய்தம் பற்றி இரு விதிகளைத் தந்துள்ளார்.
1) வகர
மெய்யில் முடியும் அவ், இவ், உவ் என்ற மூன்று சுட்டுச் சொற்களின் முன்னர் வல்லினம் வரும் பொழுது, வகரமெய் ஆய்தமாகத் திரியும். (தொல். எழுத்து. 379)
(எ.டு) அவ் + கடிய = அஃகடிய
2) தனிக்குறிலை
அடுத்து ல், ள் என்று முடியும் சொற்களுக்கு முன்னர் வல்லின மெய்களை முதலாகக் கொண்ட சொற்கள் வந்தால், ல் என்பது ற் என்றும், ள் என்பது ட் என்றும் திரியும்.
இவ்வாறு திரிவதோடன்றி, ல், ள் ஆகிய இரண்டும் ஆய்தமாகவும் திரியும் (தொல். எழுத்து. 369, 399)
|
(எ.டு) |
கல்
+ தீது |
= கற்றீது,
கஃறீது |
|
முள்
+ தீது |
= முட்டீது,
முஃடீது |
----------------------------------------------------------------------------
4.அளபெடை
உயிரளபெடை என்பது செய்யுளில் இசை குறையும் இடத்தில், நெடில் தன் ஓசையில் நீண்டு ஒலிப்பதாகும், “இசைகெடின் மொழி இடை, கடை நிலை நெடில் அளபெழும்” (நன். எ:36) என்று நன்னூலார் கூறும் கருத்து இதுவேயாகும்.
ஆஅ ,இ ஈ, உஊ எஏ ஐ,இ ஓஒ
ஓளஉ எனவரும;.
சொல்லில் உயிரளபெடை நிகழ்தலை அறிவதற்கு அவற்றின் பின்னர் அவ்வவ் நெடிலுக்கு இனமாகிய குறிலெழுத்துக்கள் வரிவடிவில் அறிகுறியாய் வரும். “அவற்றவற்றினக் குறில் குறியே” (நன். எ:36) என்பதிலிருந்து இது புலனாகின்றது.
தொல்காப்பியர் (எ:5) “மூவளபு இசைத்தல் ஓரெழுத்து இன்றே” எனக் குறிப்பிடுகின்றார். இதனால் மூன்று மாத்திரை அளவு ஒலித்தல் ஓரெழுத்தின் இயல்பு அன்று என்பது அவரது கருத்தாக அமைகின்றது. ஆயினும் அடுத்த நூற்பாவில்,
“நீட்டம் வேண்டின் அவ்வளபுடைய
கூட்டிஎழூஉதல்என்மனார்புலவர்” (தொல்:எ:6 எனத் தெரிவிக்கின்றார். இக்கருத்தினை வலியுறுத்தும் வகையில் நன்னூலார் “மூன்று உயிரளபு” (நன். எ:44) என உயிரளபெடையானது மூன்று மாத்திரை ஒலிக்கக்கூடிய எழுத்தாகக் கூட்டிக் காட்டுகின்றார்.
இக்கருத்திற்கும் மேலாகத் திருக்குறளில் “சேறாஅஅய்” (திருக்:1200) என உயிரளபெடை நான்கு மாத்திரை அளவாய் ஒலிப்பதையும் காண முடிகின்றது.
தொல்காப்பியர், நன்னூலார், திருவள்ளுவர் இவர்களிடமிருந்து பெறப்படும் கருத்துக்களின் வழி தமிழில் எந்த ஒரு எழுத்தும் தனித்து மூன்று மாத்திரை பெறுவதில்லை என்பதுவும் ஆனால் நெடில் தன் மாத்திரையிலிருந்து அளபெடுக்குமாயின் தன் இனக்குறிலுடன் சேர்ந்தே மூன்று மாத்திரையாகவோ, நான்கு மாத்திரையாகவோ ஒலிக்கக் கூடும் என்பதுவும் தெளிவாகின்றது.
----------------------------------------------------------------------------
5 எழுத்துக்களின் இயக்கம் (மொழியாக்கம், சொல் வகை)
அ. “நெட்டெழுத்து ஏழே ஓர் எழுத்து ஒருமொழி.“
இஃது ஓரெழுத்து ஒருமொழியினைக் கூறுகிறது.
நெட்டெழுத்துக்கள் ஏழும் ஓரெழுத்து ஒருமொழிகளாக வரும்.
எ-டு.: ஆ, உ, எ, ஏ, ஒ, ஓ, ஓள - உயிர்
கா, தீ, பூ, தே, தை, கோ, கௌ - உயிர்மெய்.
ஆ. குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைபு இலவே.
ஐந்து குற்றெழுத்துக்களும்
மொழியாய் நின்று பொருள்தருவதாய்
அமைவதுஇல்லை. குறில் எழுத்துக்கள்
ஐந்தும் தனியாக நின்று
பொருள்தருவது இல்லை.
இ. ஓர்எழுத்து ஒருமொழி ஈர்எழுதது;
ஒருமொழி
இரண்டு
இறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட
மூன்றே
மொழிநிலை தோன்றிய நெறியே. (நூ. 12)
இந்நூற்பா தமிழ்ச்சொற்களின் நிலையினையும், அவை தோன்றிய
நெறியினையும் விளக்குகிறது.
ஆ - ஓரெழுத்து ஒருமொழி
மணி - ஈரெழுத்து ஒருமொழி
மார்பு - மூவெழுத்து
ஒருமொழி
எழுத்து - நான்கெழுத்து ஒருமொழி
ஈ.மெய்யின்
இயக்கம் அகரமொடு சிவணும். (நூ. 13)
இந்நூற்பாத் தனிமெய் இயங்கும் நிலையினை உணர்த்துகிறது.
எ.டு.: க, ங, ச, ஞ
... என வரும்.
உ. ஈரொற்று உடனிலை
யரழ என்னும்
மூன்றனுள் ஒன்று முன் ஒற்றாய் நிற்க, கசதப ஙஞநம எனும்எட்டு
ஒற்றுகளுள் ஒன்றுவர, அவை இரண்டும் இணைந்து ஈரொற்றுடனிலையாய் நிற்கும்.
எ-டு.: வேய்க்குறை, (என்பதில்
ககர ஙகரங்கள் யகரத்தோடு மயங்கி
வேய்ங்குறை ஈறொற்றாய்
நின்றன)
வேர்க்குறை, (- என்பதில்
ககர ஙகரங்கள் ரகரத்தோடு மயங்கி
வேர்ங்குறை ஈறொற்றாய்
நின்றன).
வீழ்க்குறை, - (என்பதில்
ககர ஙகரங்கள் ழகரத்தோடு மயங்கி
வீழ்ங்குறை ஈறொற்றாய்
நின்றன).
----------------------------------------------------------------------------
6. போலி
எழுத்துக்கள் முறை வைப்பில் ஒரே ஒலிப்புமுறை பெற்று, அச்சொல்லுக்குரிய
பொருள் மாறுபடாது நிற்குமாயின் அது போலி எனப்படும். அகரத்தின் பின்னர்
இகரம் நிற்க ஒகாரம் எழுத்தாகும். அதாவது, அகரமும் இகரமும் கூட்டிச்
சொல்லும்போது ஒகாரம் போல் ஆகும் என்பதாம்.
எ-டு.: ஐயர்- அஇயர்; வைரம்-வயிரம் என வரும்.
எ-டு.: ஔவை-அஉவை, கௌந்தியடிகள் -கவுந்தியடிகள் என்று வரும்.
எ.டு.: ஐயர்-அய்யர், ஐவனம்-அய்வனம் ஔவை-அவ்வை எனவரும்.
இடையன் - இடயன்
மடையன் - மடயன்
பழைமை - பழமை என வரும்.
எ-டு.: நாய் - நாயி என்றும்
நாஇ - நாய் என்றும் வரும்.
----------------------------------------------------------------------------
7. மொழிமுதல் எழுத்துக்கள்
அ. மொழி
முதல் நிற்கும் உயிர் எழுத்துக்கள்
v
1.
பன்னிரண்டு உயிர்எழுத்துக்களும் (அ…ஓள
வரை) மொழிக்கு முதலில் வரும்.
எ-டு.:
அடை, ஆடை, இடை, ஈயம், உரல், ஊர்தி, எழு, ஏணி, ஐவனம், ஒளி, ஓவியம், ஓளடதம்
v
2. தனிமெய் மொழி முதல் ஆகாது.
v
உயிர்மெய் அல்லன மொழிமுதல் ஆகா. (நூ. 27)
இது தனிமெய், உயிர்மெய் எனும் இருவகை மெய்களுள் மொழி
முதலாகும்
மெய்
இஃதெனக் கூறுகிறது.
v
3. மொழிக்கு முதலில் வரும் உயிர்மெய்கள்
கதநபம என்னும் ஐந்தெழுத்தும்
பன்னிரண்டு உயிரெழுத்துகளோடும் மொழிக்கு முதலாக வரும்.
1.ககரம் - கலை,
காலை, கிளி, கீரி, குடு, கூடு, கெண்டை, கேழல், கைதை, கொண்டல்,
கோடை, கௌவை-எனபதில் ககரம் பன்னீருயிரொடும் மொழிக்கு முதலில் வந்தன.
2.தகரம் - தந்தை, தாய், தித்தி, தீமை, துணி, தூணி, தெற்றி,
தேன், தையல்,தொண்டை, தோடு, தௌவை-என்பதில் தகரம் பன்னீருயிரொடும் மொழிக்கு முதலில் வந்தன.
3. நகரம்
நந்து, நாரை, நிலம், ந Pர், நுதல், நூல்,
நெய், நேயம், நைவளம், நொச்சி,நோக்கு, நௌவி-என்பதில்
நகரம் பன்னீருயிரொடும் மொழிக்கு முதலில் வந்தன.
4. பகரம் - படை, பால், பிடி, பீடு, புகழ், பூமி,
பெடை, பேடை, பைதல், பொன், போது, பௌவம் - என்பதில் பகரம் பன்னீருயிரொடும் மொழிக்கு முதலில்
வந்தன.
5. மகரம் - மலை, மாலை, மிடறு, மீளி, முதலை, மூலை, மெல்லிலை,
மேனி, மையல், மொழி, மோத்தை, மௌவல்-என்பதில் மகரம் பன்ன Pருயிரொடும் மொழிக்கு
.
v
4. சகர மெய் வருதல்
சகரம்,
அ ஒ ஔ என்னும் மூவுயிர் தவிர ஏனைய ஒன்பது உயிர்களோடும்
மொழிக்கு
முதலாக வரும்.
சகரக்
கிளவியும் அவற்று ஓரற் றே
அ ஒ ஓள
எனும் மூன்றலங் கடையே. (நூ. 29)
இது சகரம் மொழி முதற்கண் ஆமாறு கூறுகிறது.
எ-டு.:
சாந்து, சினம், சுற்றம், சுரும்பு, சூரர;, செக்கு, சேவல், சொல், சோறு என்பன.
v
5. வகர மெய் வருதல்
உ
எ ஒ ஓ என்னும் நான்கு உயிர்களும் வகர மெய்யோடு மொழிக்கு
முதலாக
வரும்.
எ-டு.:
வளை, வாரி, விளரி, வீடு, வௌ்ளி, வேர், வையம், வௌவு என வரும்.
v
6. ஞகர மெய் வருதல்
ஆ
எ ஒ எனும் மூன்றுயிர்களும் ஞகார ஒற்றோடு மொழிக்கண் முதலாகும்.
எ-டு.:
ஞாலம், ஞெண்டு, ஞொள்கிற்று.
v
7. யகர மெய் வருதல்
ஆகாரத்தோடன்றிப்
பிற உயிர்களோடு யகரம் மொழிக்கு முதலாக வருதல்
இல்லை.
எ-டு.:
யானை, யாடு, யாண்டு.
v
8 .மொழிமுதலில் குற்றியலுகரம் வருதல்
எ-டு.:
நுந்தை என வரும்
நுந்தை
என்பது நும்தந்தை என்பதன் மரூஉ மொழியாயினும் அஃது
----------------------------------------------------------------------------
8 மொழியிறுதி எழுத்துக்கள்
v
1. மொழி இறுதி எழுத்துக்கள்
உயிர; எழுத்துக்களில் ஓளகாரம் ஒழிந்த உயிர்கள்
பதினொன்றும் மொழிக்குஈறாக வரும்.
எ-டு.:
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ - நெடில் தானே ஈறாயின
கா, ,
பூ, சே, சை, கோ - மெய்யுடன் நெடில் ஈறாயின
ஆஆ, ஈஇ,
ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஓ - குறில் அளபெடைக்கண் ஈறாயின.
விளா,
பலா, கிளி, குரீ, குவளை - ஏனைய மொழிக்கண் ஈறாயின.
v
2. ஓளகாரம் ஈறாதல் –சிறப்பு
விதி
ககர, வகர
மெய்களோடு பொருநத் pன் முன் விலக்கிய ஓளகாரமும்
மொழிக்கண்
ஈறாகும். கௌ, வௌ எனவரும்.
v
3. எகரம் ஈறாதல்
எகரம் அளபெடைக்கண் அன்றி மெய்யோடு கூடி ஈறாகாது.
v
4. ஒகரம் ஈறாதல்
ஒகரம்
நகர மெய்யுடன் மட்டுமே ஈறாக வரும்.
ஒவ்வும்
அற்றே ந அலங்கடையே. (நூ.
39)
இது ஒகரம் ஈறாதற்கு வரையறை கூறுகிறது.
மேற்குறித்தனவற்றுக்குச் சான்றுகள் இல்லை. வழக்கொழிந்துபோயின.
v
5.
மொழிஇறுதியில் வரும்
மெய்கள்
ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்று கூறப்பட்ட பதினொன்றும்
புள்ளிகளில் மொழிக்கு ஈறாக வரும்.
ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும்
அப் பதினொன்றே புள்ளி இறுதி. (நூ. 45)
இது தனிமெய்களில்
மொழிக்கு ஈறாகுவன கூறுகிறது.
எ-டு.: உரிஞ், மண், பொருந், திரும், பொன், வேய், வேர், வேல், தெவ், வ Pழ், வேள் பொருந,; வெரிந். உரிஞ் அவ,; இவ், உவ், தெவ் என வரும்.
---------------------------------------------------------------------------------------------------------------------
மொழிமரபு வினாக்கள்
1. மொழி என்றால் என்ன? ஒரு பொருளைக் குறிக்கும் பல சொற்கள்
2. மொழியின் வேறு பெயர்கள் யாவை? சொல், கிளவி, வார்த்தை, பதம்
3.மொழி மரபில் காணப்படும் நூற்பாக்களின் எண்ணிக்கை? 49
4.இகரம் 1 மாத்திரையாக ஒலிக்காமல் 1/2 மாத்திரை அளவினதாய் ஒலிப்பது என்ன? குற்றியலிகரம்
5. சொற்கள் ஒன்றோடு ஒன்று புணரும்போது அவ்விடத்தில் தோன்றும் இகரம் எவ்வாறு ஒலிக்கும்? இகரம் – குறுகி ஒலிக்கும்.
6.எத்தனை வகையானக் குற்றியலுகரங்கள்
நிலைமொழியாய் நிற்கும் ? – ஆறு வகை
7.ஆறு வகையானக் குற்றியலுகரங்கள்
யாவை ? கு, சு, டு, து, பு, று
8.இரண்டு மொழிகள் புணரும் நிலையில் தோன்றுவது? குற்றியலுகரம்
9.புள்ளி வடிவினை உடையது எவ்வகை எழுத்து? ஆயுத எழுத்து
10.ஆயுதம் எதற்கு இடையில் வரும்? குற்றெழுத்துக்கும் குற்றியலுகரத்திற்க்கும்
11.நிலைமொழி வருமொழியாய் புணருகின்ற இடத்தில் எவ்வகை ஒலி தோன்றும் ?
ஆயுத ஒலி
12.ஆயுதம் ஒற்றளபெடை போல இரட்டித்து எழுதப் பெறும் இடங்கள் எவை? உரு, இசை
13.கஃறு என்பது எவ்வகைக் குறிப்பு? – நிறக்குறிப்பு
14. சுஃறு என்பது எவ்வகைக் குறிப்பு ? – ஒலிக்குறிப்பு
15.நெட்டெழுத்துக்கள் எவ்வகை எழுத்துக்களைப் பெற்று அளபெடுத்து வரும்?
இனமொத்த குற்றெழுத்துக்கள்
16.தமக்கென நெட்டெழுத்துக்கள் எதன் இனமான எழுத்துக்களை பெற்று ஓசையை நிறைவு செய்யும்? – தம் இனமான உயிர்குறில்
எழுத்துக்கள்
17.தமக்கென இன எழுத்துக்களைப்
பெறாத நெட்டெழுத்துக்கள் யாவை? ஐ, ஔ
18. ஐகாரத்திற்கு இன எழுத்தாக நின்று ஓசையை நிறைவு செய்யும் எழுத்து எது? இகரம்
19. ஒளகாரத்திற்கு இன எழுத்தாக நின்று ஓசையை நிறைவு செய்யும் எழுத்து எது ? உகரம்
20.தனித்து நின்று பொருள் தருபவை எவை?
உயிர் நெட்டெழுத்துக்கள் – ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ
21.நெட்டெழுத்துக்கள் எவ்வகை மொழி? ஓர் ஒழுத்து ஓர்மொழி
22.ஆ – என்பதன் பொருள் யாது? – பசு
23.ஈ – என்பதன் பொயன் யாது? ஓர் உயிர்
24.ஊ -என்பதன் பொருள் யாது? – தசை
25.ஏ – என்பதன் பொருள் யாது ? அம்பு
26. ஐ – என்பதன் பொருள் மாது? – தலைவன்
27.ஓ – என்பதன் பொருள் யாது? – மதகுநீர் தாங்கம் பலகை
28.ஔ – என்பதன் பொருள் யாது? – பூமி
29.மொழி எத்தனை வகைப்படும்? மூவகை மொழிகள்
30. இரண்டுக்கு மேற்பட்ட பல எழுத்துக்களைக் கொண்டு அமைவது எவ்வகை மொழி?
தொடர் மொழி
31. ஈரொற்றாய் வரும் எழுத்துக்களின்
எண்ணிக்கை யாவை ? – க், ச்,த்,ப், ங், ஞ்,ந்,ம் (8)
32.மெய்யெடுத்துக்களுடன் இரண்டு ஒற்றுக்களாய் வருவத எது? ஈரொற்று உடனிலை
33. குற்றெழுத்தை அடுத்து ஒற்றாக வராத மெய்கள் யாவை? – ரகாரம், ழகாரம்
34.உயிரெழுத்திற்குக் குறில், நெடில் என்னும் இயல்புகள் எதன் அளவினால் கொள்ளப் படுகின்றன ? – மாத்திரை அளவு
35. போலும் என்னும் சொல்லை நச்சினார்க்கினியர் எதன் எவ்வாறுக் குறிப்பிடுகின்றார்?
செய்யுட்போலி
36.செய்யுட்போலி வகும் இடங்கள் யாவை? இடை, கடை
37.செய்யுட் போலியானது இடையில்வரின்
அதனை எவ்வாறு குறிப்பர்? பெயரெச்சம்
38. செய்யுட் போலியானது ஈற்றில்வரின்
அதனை எவ்வாறும் குறிப்பர் ? வினைமுற்று
39.போலும், போன்ம் எனும் சொல் செய்யுளின் எந்நிலையில்
வரும் ?
செய்யுளின் இறுதி (இளம்பூரணர்)
40.போலும், போன்ம் என்பன இடையிலும் ஈற்றிலும் வரும் எனக் கூறியவர் யார்?
நச்சினார்க்கினியர்
41. ணகரத்தின் முன்னர் மகரம் என்னவாகும்? – குறுகும்
42. ஐகாரப் போலி என்பது யாது ? – அகரம் + இகரம் = அஇயர்
43. ஔகாரப்போலி என்பது யாது? – அகரம்+உகரம் = அஉவை
44. அய், அவ் என்பன எதன்போலி? – ஐ, ஔ
45.ஐகாரம் மட்டும் மொழிகளில் குறுகும் என்று கூறியவர் யார்? இளம்பூரணர்
46 ஐகாரம், ஔகாரம் என்னும் இரண்டும் மொழிகளில் குறுகும் என்று கூறியவர் யார்?
நச்சினார்க்கினியர்
47.இகரப் போலி எது? – யகரம்
48.யகரம் போலி எது ? – இகரம்
49.மொழிக்கு முதலாகும் எழுத்துக்கள்
மொத்தம் எத்தனை? 22
50.மொழிக்கு முதலாகும் உயிர் எழுத்துக்கள் எத்தனை? – 12
51.மொழிக்கு முதலாகாத எழுத்துக்கள்
எவை? மெய்யெழுத்துக்கள்
52.எல்லா உயிரொடும் மொழி முதலாகும் மெய்கள் யாவை ? – க், ச், ந், ப், ம்
53.தனிமெய்கள் ஐந்தும், பண்ணிரண்டு உயிரெழுத்துக்களும் கூடி எவ்வாறு வரும்?
உயிர்மெய்யாக மொழிக்கு முதலில் வரும்.
54.சகரம் எதனுடன் கூடி மொழிக்கு முதலில் வரும் ? மெய் – ச்
55. ச, சை, சௌ என்பன மொழிக்கு முதலில் வரா எனக் கூறியவர் யார்? தொல்காப்பியர்
56. சகரத்தை முதலாகக் கொண்ட சொற்கள் இடம்பெறும் நூல்கள் யாவை?
திருக்குறள், சங்க இலக்கியங்கள்
57.ஞாலம் பொருள் தருக – உலகம்
58.ஞெகிழி பொருள் தருக – கொள்ளிக்கட்டை
59.யகர மெய் எதனுடன் மட்டும் கூடி மொழிக்கு முதலாகும்? ஆ எனும் உயிர்
60.மொழிக்கு முதலாகாத எழுத்துக்கள்
எவை? – ட, ங
61. ட,ங – எப்போது மொழிக்கு முதலாகும்? – தம்மைச் சுட்டுகின்ற போது,
62. நுந்தை எவ்வகைப் பெயர் ? – முன்னிலை முறைப்பெயர்.
63.நுந்தை எனும் குற்றியலுகரத்தை
முற்றியலுகரமாக ஒலித்தாலும்
எவை மாறுபடாது? பொருள் வேறுபடாது.
64. மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை ? – 24
65. இறுதியில் வரும் உயிரெழுத்துக்கள்
எத்தனை? – 11
66.எகரம் எவ்வாறு இறுதியில் வராது? – உயிர்மெய்யாக
67.ஔகாரம் உயிர் எழுத்தில் எவ்வாறு வராது? – இறுதி
68.ஒளகாரம் எவ்வாறு இறுதியில் வராது? – உயிராக
69.ஒளகாரம் எதனுடன் இணைந்து மொழிகளின் இறுதியில் வரும் ?
க், வ் என்னும் மெய்யோடு இணைந்து வரும்.
70. ஔ என்பதன் பொருள் யாது ? கவ்வுதல்
71.வெள என்பதன் பொருள் யாது ? பற்றுதல்
72. எ- என்னும் எழுத்து எவ்வாறு ஈறாகும் ? தனி உயிராக
73. எ-காரம் மெய்யோடு சேர்ந்து எவ்வாறு இறுதியில் வராது ? – உயிர்மெய்யாக
74.எகரத்தைப் போல ஆகரமும் எவ்வாறு மொழிக்கு ஈராக வராது? உயிர் மெய்யாக
75. அளைபெடையில் தனி உயிராய் எவ்வெழுத்து வரும்? எ, ஏ
76.ந-கர மெய்யொடு கூடி ஒகரம் எவ்வாறு வரும் ? ஓரெழுத்து ஒருமொழி
77. ஒ, ஓ அளபெடையில் எவ்வாறு மொழியிறுதியில் நின்றது? தனி உயிராய்
78.ஞகரம் எதனோடு இணைந்து மொழியின் இறுதியில் வராது? யகரம், உகரம்
79.நகார, வகார மெய்கள் எதனோடு இணைந்து மொழிக்கு ஈராக வருவதில்லை? உகாரம், ஔகாரம்
80. தொல்காப்பியர் கூற்றின்படி எவை நான்கும் மொழி இறுதியில் வருதில்லை?
நு, நூ, வு, வூ
81.சகரம் உகரத்தோடு கூடி எத்தனை சொற்களில் மட்டும் முற்றியலுகரமாக ஒலிக்கும் ? இரண்டு (உசு), (முசு)
82.பகரம், உகரத்தோடு கூடி (பு) முற்றியலுகரமாகி மொழியிறுதியில்
வந்து எவ்வகைப் பொருளைத் தரும்?
தன்வினை, பிறவினைப் பொருள்
83.உப்பகாரம் என்பது என்ன? முற்றியலுகரம்
84.மொழிக்கு ஈறாகாத எழுத்துக்கள்
எப்போது மொழிக்கு ஈறாக அமையும்?
தம்பெயர்ச் சுட்டின் போது
85.மொழிக்கு ஈறாகும் மெய்யெழுத்துகள்
எத்தனை? 11
86.மொழிக்கு ஈறாகும் மெய்யெழுத்துகள்
எவை? ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள்
87. மொழிக்கு இறுதியில் வராத எழுத்துக்கள் யாவை? க், ச், ட், த், ப், ற், ங்
88. மொழிக்கு இறுதியில் வராத எழுத்துக்கள் எத்தனை? ஏழு
89. நகர மெய் எத்தனை இடங்களில் மொழிக்கு ஈறாகப் பொருந்தி வரும்?
இரண்டு இடங்கள்
90. உச்சகார ஈற்றொடு வருவது எது? நகரம்
3.
பிறப்பியல் தொல்காப்பியம்
மிழ் எழுத்துக்களின் பிறப்பியல்:
தமிழ் எழுத்துக்களில் உயிர் பன்னிரெண்டும் மெய் பதினெட்டும் பிறக்கும் முறைகளைப் பற்றி விரிவாக விளக்கும் முன்னர், பிறப்பியலின் முதல் பாடலில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார் தொல்காப்பியர்.
உந்தி முதலா முந்து வளி தோன்றி
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண் முறை நிலையான்
உறுப்பு உற்று அமைய நெறிப்பட நாடி
எல்லா எழுத்தும் சொல்லும்காலை
பிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயல
திறப்பட தெரியும் காட்சியான - பா. எண் 1
பொருள்: உந்தியில் இருந்து தோன்றிய முதல் காற்றானது தலையிலும் மிடற்றிலும் நெஞ்சிலும் நிலைபெற்று பல், உதடு, நாக்கு, மூக்கு, அண்ணம் உட்பட எண்வகையான நிலைகளில் உள்ள உறுப்புக்களிலே பொருந்தி அமைய, அவற்றை முறைப்படி ஆராய்ந்து எல்லா எழுத்துக்களைப் பற்றியும் சொல்லுமிடத்து, அவ் எழுத்துக்களின் பிறப்புமுறையானது வேறுவேறு வகையினவாய் திறன்கொண்டு அறியப்படும் தன்மையுடையவாய் உள்ளன.
தமிழ் எழுத்துக்களின் பல்வகையான பிறப்புக்களைப் பற்றிக் கூறுமிடத்துக் கீழ்க்காண்பவற்றின் அடிப்படையில் பகுத்தும் தொகுத்தும் கூறுகிறார் தொல்காப்பியர்.
> எழுத்துக்கள் பிறக்கும் இடம். சான்று: அண்பல், அண்ணம்.
> எழுத்துக்கள் பிறக்கும் வினை. சான்று: ஒற்றுதல், வருடுதல், அணர்தல்.
> எழுத்துக்கள் பிறக்கும் நிலை. சான்று: அங்காத்தல், குவித்தல்.
> எழுத்துக்கள் பிறக்கும் உறுப்பு. சான்று: நாக்கு, உதடு, பல், மூக்கு, அண்ணம்
தமிழ் உயிரெழுத்துக்களின் பிறப்பியல்:
தமிழ் உயிர் எழுத்துக்களின் ஒலிகள் பிறக்கும் முறையினைக் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார் தொல்காப்பியர்.
அ ஆ ஆயிரண்டு அங்காந்து இயலும் - பா. எண் 3
அஆ எ, ஏ ஐ இஈ உ ஊ ஒ ஓ ஔ
அகாரமும் ஆகாரமும் வாயினைத் திறந்தநிலையில் பிறக்கக் கூடியவை. மிடற்றில் தோன்றும் ஓசையுடன் கூடிய காற்றானது எவ்விதத் தடையுமின்றி திறந்திருக்கும் வாயின் வழியாக வெளிப்படுகையில் இவ் ஒலிகள் தோன்றும். வாயைக் கொஞ்சமாகத் திறந்து குறைந்த நேரம் ஒலித்தால் அகாரமும் நன்றாக விரியத் திறந்து நீண்டநேரம் ஒலித்தால் ஆகாரமும் கேட்கும்.
இ ஈ எ ஏ ஐ என இசைக்கும்
அப்பால் ஐந்தும் அவற்று ஓரன்ன அவைதாம்
அண்பல் முதல்நா விளிம்பு உறல் உடைய - பா. எண் 4
இகாரம், ஈகாரம், எகாரம், ஏகாரம் மற்றும் ஐகார ஒலிகளும் அகார, ஆகார ஒலிகளைப் போலவே வாயைத் திறந்தநிலையில் பிறப்பனவே. ஆனால், இவ் ஒலிகளின் பிறப்பில் உரசல் இருப்பதால் ஒலிப்புமுறையில் இவை சற்று வேறுபடுபவை. மிடற்றில் தோன்றிய ஒலியுடன் கூடிய காற்றானது அண்பல்லின் விளிம்பில் உரசி வரும்போது இகார ஈகார ஒலிகள் தோன்றும். முதல்நாவின் விளிம்பில் உரசி வரும்போது எகாரமும் ஏகாரமும் ஐகாரமும் தோன்றும்.
உ ஊ ஒ ஓ ஔ என இசைக்கும்
அப்பால் ஐந்தும் இதழ் குவிந்து இயலும் - பா. எண் 5
உகரமும் ஊகாரமும் ஒகரமும் ஓகாரமும் ஔகாரமும் மேலுதடும் கீழுதடும் முன்னோக்கிக் குவிந்தநிலையில் பிறப்பவை என்று மேற்காணும் நூற்பாவில் கூறுகிறார் தொல்காப்பியர். இப்படி ஒரே நிலையில் பல ஒலிகள் பிறந்தாலும் அவ் ஒலிகள் தமக்குள் சிறிய அளவிலான வேறுபாடுகளைக் கொண்டவை என்று கீழ்க்காணும் பாடலில் கூறுகிறார்.
தம்தம் திரிபே சிறிய என்ப - பா. எண் 6
தமிழ் மெய்யெழுத்துக்களின் பிறப்பியல்:
மெய்யெழுத்துக்கள் பதினெட்டின் பிறப்பினைப் பற்றிக் கூறுமிடத்துக் கீழ்க்காணும் முறைகளைக் கையாள்கிறார்.
> பிறக்கும் இடத்தின் அடிப்படையில், ஒவ்வொரு வல்லின எழுத்தினையும் அதனுடன் ஒட்டி ஒரே இடத்தில் பிறக்கும் மெல்லின எழுத்துடன் சேர்த்து ஒரே நூற்பாவில் கூறுகிறார். சான்றாக, முதல்நாவால் அண்ணத்தில் பிறக்கின்ற ககார எழுத்தினை அதனுடன் ஒட்டி அதே இடத்தில் பிறக்கின்ற ஙகார எழுத்துடன் சேர்த்து ஒரே நூற்பாவினால் விளக்குகிறார். ஆயினும், மெல்லின எழுத்துக்கள் பிறக்கும் வகையினை விளக்கும்போது, அவை வல்லின எழுத்துக்கள் பிறக்கும் இடத்தில் தோன்றினாலும் அவை வாய்வழியே அன்றி மூக்கின் வழியாக வெளிப்பட்டு ஒலிப்பவை என்று கீழ்க்காணும் நூற்பாவில் கூறுகிறார்.
மெல்லெழுத்து ஆறும் பிறப்பின் ஆக்கம்
சொல்லிய பள்ளி நிலையின ஆயினும்
மூக்கின் வளி இசை யாப்புற தோன்றும் - பா. எண் 18
> ஒரே இடத்தில் வேறுவேறு வினையால் பிறக்கும் இடையின எழுத்துக்களை இணைத்து ஒரே நூற்பாவில் விளக்குகிறார். சான்றாக, நுனிநாவானது அண்பல்லைப் பொருந்துதலால் பிறக்கும் லகாரத்தினை அண்பல்லை வருடுதலால் பிறக்கும் ளகாரத்துடன் சேர்த்து ஒரே நூற்பாவில் விளக்குகிறார்.
> பிறக்கும் உறுப்புக்களின் அடிப்படையில் சில எழுத்துக்களைத் தனித்தனியே விளக்குகிறார். சான்றாக, வகாரம் உதடுகளில் பிறந்தாலும் பல்லினால் பிறப்பதால் அதனைப் பகார, மகாரங்களுடன் சேர்த்துக் கூறாமல் தனியே விளக்குகிறார்.
ககார ஙகாரம் முதல் நா அண்ணம் - பா.எண். 7
தமிழ் மெய்யெழுத்துக்களில் ககார ஒலியும் ஙகார ஒலியும் முதல் நா எனப்படுவதான நாவின் தடித்த அடிப்பகுதியானது அண்ணத்தைத் தொடும் நிலையில் உண்டாவதாக மேற்காணும் பாடலில் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். இந்நிலையில், மிடற்றிலிருந்து வரும் வளியானது வாய்க்குள் முழுவதுமாக அடைபடும்போது ககார ஒலியும் மூக்கின் வழியாக வெளியேறும்போது ஙகார ஒலியும் பிறக்கும்.
இவ் இரண்டு ஒலிகளும் பிறக்கின்ற நிலையானது அருகில் உள்ள படத்தில் வரைந்து காட்டப்பட்டுள்ளது. இப் படத்தில் நாக்கின் அடிப்பகுதியின் நிலையினைக் கவனித்துப் பார்த்தால், அது இயல்பான நிலையில் இல்லாமல் குவிந்து திரண்ட நிலையில் இருப்பதை அறியலாம்.
சகார ஞகாரம் இடை நா அண்ணம் - பா. எண்: 8
தமிழ் மெய்யெழுத்துக்களில் சகார ஒலியும் ஞகார ஒலியும் இடை நா எனப்படுவதான நாவின் மெலிந்த நடுப்பகுதியானது அண்ணத்தைத் தொடும் நிலையில் உண்டாவதாக மேற்காணும் பாடலில் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். இந்நிலையில், மிடற்றிலிருந்து வரும் வளியானது வாய்க்குள் முழுவதுமாக அடைபடும்போது சகார ஒலியும் மூக்கின் வழியாக வெளியேறும்போது ஞகார ஒலியும் பிறக்கும்.
இவ் இரண்டு ஒலிகளும் பிறக்கின்ற நிலையானது அருகில் உள்ள படத்தில் வரைந்து காட்டப்பட்டுள்ளது. இப் படத்தில் நாக்கின் நடுப்பகுதியின் நிலையினைக் கவனித்துப் பார்த்தால், அது இயல்பான நிலையில் இல்லாமல் மேல்நோக்கி உயர்ந்து மெலிந்து பரந்த நிலையில் இருப்பதை அறியலாம்.
டகார ணகார ஒலிபிறப்பியல்:
டகார ணகாரம் நுனி நா அண்ணம் - பா. எண்: 9
தமிழ் மெய்யெழுத்துக்களில் டகார ஒலியும் ணகார ஒலியும் நுனி நா எனப்படுவதான நாவின் கூர்மையான நுனிப்பகுதியானது அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடும் நிலையில் உண்டாவதாக மேற்காணும் பாடலில் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். இந்நிலையில், மிடற்றிலிருந்து வரும் வளியானது வாய்க்குள் முழுவதுமாக அடைபடும்போது டகார ஒலியும் மூக்கின் வழியாக வெளியேறும்போது ணகார ஒலியும் பிறக்கும்.
இவ் இரண்டு ஒலிகளும் பிறக்கின்ற நிலையானது அருகில் உள்ள படத்தில் வரைந்து காட்டப்பட்டுள்ளது. இப் படத்தில் நாக்கின் நுனிப்பகுதியின் நிலையினைக் கவனித்துப் பார்த்தால், அது இயல்பான நிலையில் இல்லாமல் வாயின் உட்புறம் நோக்கி வளைந்த நிலையில் இருப்பதை அறியலாம்.
அண்ணம் நண்ணிய பல் முதல் மருங்கில்
நா நுனி பரந்து மெய் உற ஒற்ற
தாம் இனிது பிறக்கும் தகார நகாரம் - பா. எண் 11
தமிழ் மெய்யெழுத்துக்களில் தகார ஒலியும் நகார ஒலியும் நுனி நா எனப்படுவதான நாவின் கூர்மையான நுனிப்பகுதியானது அண்ணமும் மேல்பல் வரிசையும் பொருந்துவதான இடத்தைத் (அண்பல்) தொட்டுப் பரந்த நிலையில் உண்டாவதாக மேற்காணும் பாடலில் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். இந்நிலையில், மிடற்றிலிருந்து வரும் வளியானது வாய்க்குள் முழுவதுமாக அடைபடும்போது தகார ஒலியும் மூக்கின் வழியாக வெளியேறும்போது நகார ஒலியும் பிறக்கும்.
இவ் இரண்டு ஒலிகளும் பிறக்கின்ற நிலையானது அருகில் உள்ள படத்தில் வரைந்து காட்டப்பட்டுள்ளது. இப் படத்தில் நாக்கின் நுனிப்பகுதியின் நிலையினைக் கவனித்துப் பார்த்தால், அது இயல்பான நிலையில் இல்லாமல் தனது கூர்முனை மழுங்கித் தடித்த நிலையில் இருப்பதை அறியலாம்.
இதழ் இயைந்து பிறக்கும் பகார மகாரம் - பா. எண் 15
பல் இதழ் இயைய வகாரம் பிறக்கும் - பா. எண் 16
தமிழ் மெய்யெழுத்துக்களில் பகார ஒலியும் மகார ஒலியும் மேலுதடும் கீழுதடும் பொருந்திய நிலையில் உண்டாவதாக மேற்காணும் முதல் பாடலில் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். இந்நிலையில், மிடற்றிலிருந்து வரும் வளியானது வாய்க்குள் முழுவதுமாக அடைபடும்போது பகார ஒலியும் மூக்கின் வழியாக வெளியேறும்போது மகார ஒலியும் பிறக்கும். வகார ஒலியானது மேற்பல் வரிசையும் கீழுதடும் பொருந்திய நிலையில் பிறப்பதாக மேற்காணும் இரண்டாம் பாடலில் குறிப்பிடுகிறார்.
இவ் ஒலிகள் பிறக்கின்ற நிலையானது அருகில் உள்ள படத்தில் வரைந்து காட்டப்பட்டுள்ளது. இப் படத்தில் நாக்கின் நிலையினைக் கவனித்துப் பார்த்தால், அது எந்தவொரு மாற்றமுமின்றி தனது இயல்பான சமநிலையில் இருப்பதை அறியலாம்.
றகார னகார ஒலிபிறப்பியல்:
அணரி நுனி நா அண்ணம் ஒற்ற
றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும் - பா. எண் 12
தமிழ் மெய்யெழுத்துக்களில் றகார ஒலியும் னகார ஒலியும் நாக்கு நுனியானது உட்குழிந்த நிலையில் அண்ணத்தைப் பொருந்தும்போது உண்டாவதாக மேற்காணும் பாடலில் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். அணர்தல் என்பது உட்குழிதல் ஆகும். (சான்று: அணர் செவிக் கழுதை = குழிந்த காதினையுடைய கழுதை.) இந்நிலையில், மிடற்றிலிருந்து வரும் வளியானது வாய்க்குள் முழுவதுமாக அடைபடும்போது றகார ஒலியும் மூக்கின் வழியாக வெளியேறும்போது னகார ஒலியும் பிறக்கும்.
ரகார ழகார ஒலிபிறப்பியல்:
நுனி நா அணரி அண்ணம் வருட
ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும் - பா. எண் 13
தமிழ் மெய்யெழுத்துக்களில் ரகார ஒலியும் ழகார ஒலியும் நாக்கு நுனியானது உட்குழிந்து அண்ணத்தைப் பொருந்தி வருடும்போது உண்டாவதாக மேற்காணும் பாடலில் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். நாக்கு நுனியானது மழுங்கிய நிலையில் உள்நோக்கி அண்ணத்தை வருடும்போது ழகரமும் குவிந்த நிலையில் வெளிநோக்கி அண்ணத்தை வருடும்போது ரகரமும் பிறக்கும்.
லகார ளகார ஒலிபிறப்பியல்:
நா விளிம்பு வீங்கி அண்பல் முதல் உற
ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்
லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும் - பா. எண் 14
தமிழ் மெய்யெழுத்துக்களில் லகார ஒலியும் ளகார ஒலியும் நாக்கு நுனியானது வீங்கி 'அண்பல்' எனப்படுவதான மேல்வரிசைப் பல்லும் அண்ணமும் பொருந்துகின்ற இடத்தினை முறையே பொருந்தவும் வருடவும் பிறப்பதாக மேற்காணும் பாடலில் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். அதாவது, அண்பல்லைப் பொருந்தும்போது லகாரமும் வருடும்போது ளகாரமும் பிறப்பதாகக் கூறுகிறார். நாக்கு நுனியானது வீங்கி அண்பல்லைப் பொருந்தும்போது உட்குழிந்தும் வருடும்போது உள்நோக்கி வளைந்தும் காணப்படும்.
அண்ணம் சேர்ந்த மிடற்று எழு வளி இசை
கண்ணுற்று அடைய யகாரம் பிறக்கும் - பா. எண் 17
தமிழ் மெய்யெழுத்துக்களில் சகார ஒலியும் ஞகார ஒலியும் இடை நாவானது அண்ணத்தைத் தொடும் நிலையில் உண்டாவதாக முன்னர் கண்டோம். பொதுவாக இவ் ஒலிகள் பிறக்கும்போது மிடற்றில் இருந்து வெளிவரும் காற்றானது அண்ணத்தைத் தொடும்போது இடைநாவின் உரசலால் முழுவதுமாக வாய்க்குள் அடைபட்டுப் போகும். அப்படி இடைநாவுக்கும் அண்ணத்துக்கும் இடையில் அடைபட்டு நிற்காமல் காற்றானது வெளிப்பகுதியினை அடையும்போது யகர ஒலி பிறக்கும். சகார, ஞகாரத்தைப் போன்றே, யகார ஒலி பிறக்கும்போதும் நடுநாவானது உயர்ந்து மெலிந்து பரந்த நிலையில் காணப்படும். அருகிலுள்ள படத்தில் நாக்கின் நிலையானது வரைந்து காட்டப்பட்டுள்ளது.
.jpg)
No comments:
Post a Comment